Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naan Sirithaal Deepawali - 7

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் - 7

“உங்களுக்கான நேரத்தை நீங்க தான் கிரியேட் பண்ணிக்கணும்...”

“ஆ...மா, ஒரு மணி நேரத்துக்கு மேல சேர்ந்து இருந்தா சண்டைதான்... அதுக்கு வேலையே பரவாயில்லைன்னு இருக்கு...”

சொல்லிவிட்டு சிரித்தாள் சமுத்ரா... ஆனால், கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவால் சிரிக்க முடியவில்லை...

‘வாழ்க்கை இத்தனை சிக்கலானதா?
வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொல்கிறார்களே... அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா?

மனதுக்குப் பிடித்த வாழ்க்கை யாருக்குத்தான் அமையும்? எப்படித்தான் அமையும்? மதிய நேரம் கை கணினியோடு வேளையில் ஈடுப்பட்டிருந்தாலு, மனம் அவளும் சமுத்ராவும் ஏறிக்கொண்ட விஷயங்களைச் சுற்றியே வந்தது...

மாலையில் கடைக்குப் போனால்... தயாவின் பின்னால் அமர்ந்து பயணம் செய்வதைத் தவரிக்கும் பொருட்டு, ஒரு டூவீலரை புக் செய்தாள்... ஒரு வாரம் கசித்தது டெலிவரி செய்வதாகச் சொன்னார்கள்... கையில் பணம்... கடையில் வண்டி... யாரைக் கேட்க வேண்டும் வாங்குவதற்கு!

ஆனால், ஒரு வாரம் கழித்து வண்டியை டெலிவரி எடுத்துப்போன அன்று, தயாவின் முகம் வாடியதை கவனிக்கவே செய்தாள் அகல்யா.

ஒஉர் விக்கெட்டை வீழ்த்தியது போல் மனசுக்குள் ஒரு மத்தாப்பூ... மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!

தனக்குப் பிடித்த ஒன்றை எங்கிருந்தாலும் கொத்திக்கொண்டு போவதிலாகட்டும், பிடிக்காத ஒன்றை தறியில் இழுத்துப் போடு குதருவதிலாகட்டும்... குரங்குக்கும் மனித மனத்துக்கும் போட்டி வைத்தால் டெபாஸிட் இழப்பது நிச்சயம்


ஞாயிற்றுக்கிழமைகளில் அகல்யா காலையில் கண் திறக்க் பத்து மணி ஆகிவிடும். உடல் அசதி, உள்ளஅசதி எல்லாம் சேர்ந்து அவளை அமுக்கும்... எழுந்து கொள்வதற்கான ஊக்கம் கிடைப்பதில்லை... அதே தனிமை... சுவாரசியமாய்ச் சொல்ல என்ன இருக்கிறது?? திடீரென்று கீழே...

“வாங்க... வாங்க...” என்று வரவேற்புக்குரல்.

‘யாராக இருக்கும்?’இறங்கி படியருகில் நின்று காத்து கொடுத்தாள்...

“இன்னிக்கு அகல்யாவும், மாப்பிள்ளையும் வீட்டுல இருப்பாங்கள்ல... தீபாவளி சீர் குட்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்...”

“ஓ... அப்பாவா? பாசத்தில் எழுந்த மகிழ்ச்சியை, கோபமும் ஈகோவும் அழுத்தி வைத்தது.

கட்டிலில் போய் அமர்ந்து, ஜன்னல் வழியே வெளியே வெறித்தாள். கழுவி விட்டாற்போலிருந்த மனதில், கவிதை ஒன்று உதித்தது... உடனடியாக டைரியில் அதைப் பதிவு செய்தாள்...

‘அனைவருக்கும்
அமுதமாய் இனிக்கும்
அன்னை வீடு
எனக்கு மட்டும் ஏன்
எட்டிக் காயாய்?
தாரை வார்த்த பின்
பாறை போல் மனதை
இறுக்கிக் கொண்ட
பெரியவர்,
எனக்கும்
என்னைப் பெற்றவருக்கும்
ஏணி வைத்தாலும் எட்டாத
இடைவெளி...
பாசம்
பழைய கதையாகி விட்டது!
இறந்த வீட்டிலிருந்து
வெளியேறி! புகுந்த
வீட்டிற்குள்
நுழையாமல்
அரை குறை
ஆவியாய் நான்?
பெற்றவரின் பாசத்தைத்
தொலைத்த
பாவியாய் நான்!

தான் எழுதிய கவிதைய, ஏற்ற இறக்கத்துடன் இருமுறை வாசித்துப் பார்த்து, சிரித்துக்கொண்டாள் அகல்யா! தன் முதுகில் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டாள்... தயா மாடியேறி வந்தான்...

“அகல்யா, மாமா வந்திருக்காரு...”

“தெரியும்...”

“கீழே வந்து பாரு... பேசு... உக்கார்ந்திட்டிருக்க...”

“வர்றேன்... நீங்க போங்க...”

பல் தேய்த்து, முகம் அலம்பி கீழே வந்தாள்.

கடைசி படியில் கால் வைக்கும் போதே அவளுக்கு காபி ரெடி... லதா கொண்டு வந்து டீபாயில் வைத்தாள்.

மரியாதை நிமித்தமாக நடேசனிடம் பேசிக் கொண்டிருந்த தயா குடும்பத்தினர், அகல்யாவின் தலையைக் கண்டதும், இடத்தைக் காலி செய்தனர். அப்பா – மகளுக்குள் உறவு சரியில்லையென எல்லோருக்கும் தெரியும்...

எதற்கு அவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவானேன் என்று நாகரீகமாக நகர்ந்து விட்டார்கள் போலும்!
காபியைக் குடித்துவிட்டு, நாற்காலியில் அமர்ந்தாள் அகல்யா.

பெற்ற தகப்பனுடன் என்ன பேசுவதென்று தெரியவில்லை.. என்ன கொடுமை சரவணா இது!

“தீபாவளிக்கு, ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு சேலை எடுத்துட்டு வந்திருக்கேன்... ஒரு சுடிதார் மெட்டீரியலும் இருக்கு... பிடிச்சிருக்கான்னு பாரும்மா...”

“எல்லாம் எனக்குப் பிடிச்சுதான் செஞ்சீங்களா? இந்த சேலையில தான் வந்து நிக்குதாக்கும்” என்றாள் பட்டென்று.

தலையைக் குனிந்துக் கொண்டார் நடேசன்.

தென்னையை பெற்றா இளநீரு... பிள்ளையைப் பெற்றா கண்ணீரு என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்...

“சரிம்மா! பழைய கதையைப் பேச நான் இங்க வரல... அதை இன்னிக்குப் பூரா பேசினாலும் தீரவும் செய்து... நான் சொல்றதைத்தான் நான் சொலுன்... நீ சொல்றதைத்தான் நீ சொல்லுவா... அதை விடு... நீயும், மாப்பிள்ளையும் தீபாவளியன்னிக்கு இங்க பூஜையை முடிச்சிட்டு, வீட்டுக்கு வாங்களேன்...”

“எதுக்கு?” என்றாள் புருவம் சுருக்கி.

“அது உன் வீடும்மா”

“நான் அங்க இருக்க வேண்டாம்னு தானே, கழுத்தைப் பிடிச்சி தள்ளிவிட்டீங்க... இப்ப என்ன புதுசா?”

“மாப்பிள்ளைகிட்ட சொன்னேன்... வர்றேன்னாரு...”

“அப்ப அவரைக் கூட்டிட்டு போங்க”

“நீயில்லாம எப்படிம்மா?”

“ஆச்சரியமாயிருக்கு... என்ன புதுசா எனக்கெல்லாம் மரியாதை!”

நடேசுக்கு அற்றுப்போய்விட்டது...

நிராயுதபாணியாய் மகளின் முன்பு பரிதாபமாய் நின்றார்...

‘ம்ஹும்... இவளிடம் பேசப்பேச விரோதம் வளரவே செய்யும்’ என்ற முடிவுக்கு வந்தவராய்,

“மாப்ள, நான் கிளம்பறேன்...” என்று சத்தமாய் குரல் கொடுத்தார்.

“என்ன... வந்ததும் வராததுமா கிளம்பிட்டீங்க...” என அகல்யாவைத் தவிர அனைவரும் அதிர்ச்சியடைய, அவள்சலனமேதுமின்றி அமர்ந்திருந்தாள்...

“இல்ல... தீபாவளி நேரம்... உங்களுக்கும் வேலையிருக்கும்... அங்க நானும் எனக்குத் தெரிந்த பட்சணங்களை செய்வேன்... பொம்பளை இல்லாத வீடுல்ல...” என்று தன்னிலை விளக்கம் அளித்துவிட்டு, எவருடைய பதிலுக்கும் காத்திராமல், நடேசன் பையைத் தூக்கியபடி வெளியேறினார்...

முதன் முதலாய் தயாவின் அப்பா தமிழரசன் வாய் திறந்தார்...

“அகல்யா... நீ படிச்ச பொண்ணு... உணகுத்த் தெரியாததில்ல...”

“இல்ல மாமா... எனகுத்த் தெரியாததும் நிறைய இருக்கு...”

“உண்மை தான்... அதனால தான், மனசு கேக்காம ஓடி ஓடி வர்ற தகப்பனை விரட்டியடிக்கிறே...” என்றார் கண்டிப்புடன்... வீட்டில் அகல்யா மதிக்கும் ஒரே நபர் இவர்.

“நான்போகச் சொல்லலையே மாமா”

“நீ அவரை இருக்கவும் சொல்லலையேம்மா. அகல்யா... உன்னைக் கழிச்சுட்டுப் பாத்தா அவருக்கு இந்த வீட்டுல என்ன இருக்கு?”

“நீ பிரியமா இருந்தாதானே அவரு இங்க தங்குவாறு”

மாமனாரின் மனிதாபிமானம் அகல்யாவின் மனதைத் தொட்டது... ஆயினும், அப்பா மீதுள்ள வெறுப்பு மனதைச் சுட்டது. அவளது தடுமாற்றத்தை புரிந்து கொண்டவர், “உனக்கும் உங்கப்பாவுக்கும் தற்காலிகமா ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கலாம்... அது காலப் போக்குலதான் சரியாகும்... அதுக்காக வீடு தேடி வந்த மனுசனை இப்படிக் கொதிக்க வைக்கிறது நல்லாவும் இல்ல... அது உனக்கு நல்லதுமில்ல...

அவரு பாவம் வர்ற நேரமெல்லாம் பச்சைத் தண்ணி பல்லுல படாம ஓடறாரு... சங்கடமாயிருக்கு” என்று அங்கலாய்த்தார்.

அகல்யா பதிலேதும் பேசவில்லை...
விரல்களால் நைட்டியை நிமிண்டிக் கொண்டிருந்தாள்...

அவளது மனதைப் படித்தவர் போல, இப்படிச் சொன்னார்...

“உனக்கும் உங்கப்பாவைக் கஷ்டப்படுத்தணும்னு வேண்டுதலா என்ன? ஏதோ ஒரு கோபத்துலதான் இப்படி செய்யறேன்னு தெரியுது... சரி பண்ணிக்கம்மா...” என்று தானே கேள்வியையும் கேட்டு, பதிலும் சொல்லி சமாதானம் செய்தவாறு நகர்ந்தவரை, நிமிர்ந்து பார்த்தாள் அகல்யா... பாவம்! பெரிய மனிதர்!

வயதையும், வசதியையும் மறந்து நம்மிடம் வந்து இறங்கிப் பேசுகிறார் என்றெண்ணியவாறு, அகல்யா பூஜையறையை கடந்து சென்றபோது, விளக்கின் முன்பாக வைக்கப்பட்டிருந்த தாம்பாளம் கண்ணில் பட்டது.அருகில் சென்று பார்த்தாள்.

தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்கு, பூ, புதுத்துணிகள், ஐநூற்றி ஒரு ரூபாய் பணம், இவற்றுடன் ஒரு சிறிய நகைப்பெட்டியும் இருந்தது... கையில் எடுத்துப் பார்த்தாள்...

“சிம்ப்பிளான தங்க நெக்லஸ்... அழகாய்த்தான் இருக்கிறது...

ஆனால் அத்திப்பட்டு அழகு பார்க்கிற மனநிலையில் நானில்லை... யோசனையுடன் மாடிக்கு வந்து துவைத்து குளித்தாள்... முன் மதியத்தில் லதா நேந்திரங்காய் வருவலும், ஆரஞ்சு ஜூஸும் எடுத்து வந்தாள்...

“உக்காரு லதா”

“ஏன்க்கா?”

“மின்னலா வர்றே... போறே... உன்கிட்ட பேசவே முடியறதில்ல”

“நீங்க வேலைக்குப் போயிடறீங்க இல்ல” என்றபடி ஸ்டூலில் அமர்ந்தாள்.

“நாளைக்கு வேணா லீவு போடட்டா... உக்காந்து பேசுவோமா...”

போங்கக்கா” என்று சிரித்தாள் லதா.

“நீ படிக்கலையா லதா”

“அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் படிச்சேங்க்கா... அதோட வீட்டுல போதும்னுட்டாங்க”

“வீட்டுல யாரெல்லாம் இருக்கீங்க?”

“அம்மா, அப்பாவுக்கும் கூலி வேலை... விடிய, சொஹ்து சட்டி கட்டிக்கிட்டு போனாங்கன்னா, சாயங்காலந்தான் வருவாக... ரெண்டு தம்பி இருக்கானுங்க...”

“அவங்களாவது படிக்கிறாங்களா...”

“ஆமாக்கா... ஸ்கூல் போறாங்க...”

“இங்க உனக்கு என்ன சம்பளம் தராங்க?”

“மாசம்ரெண்டாயிரம் ரூவா குடுக்கறாங்க, அது போக சாப்பாடும் துணிமணி, பண்டம், பலகாரம் ஒண்ணுத்துக்கும் குறையல்ல... வீட்டுப் பிள்ளையாட்டம் நல்லா பாத்துக்கிறாங்க...”

சிறிது நேர மௌனம்.

“அக்கா, நீங்களும், பெரியண்ணனும் சேர்ந்து வெளியில போறதில்லையே... ஏன்க்கா?”

“ம்... கேட்டுட்டியா... நீ ஒருத்தி தான் பாக்கி...”

“சும்மாதான் கேட்டேன்... சொல்ல வேண்டாம்னா விட்டுருங்கக்கா...”

“கேக்கக் கூடாத கேள்வியில்லைதான்... ஆனா என்கிட்டே பதிலில்லை லதா”

அதற்குள் கீழிருந்து அழைப்பு வர, காலி தம்ளரை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள் லதா.

ஆனால், அவள் கேட்ட கேள்வி மனதிலேயே தங்கிவிட்டது.

நார்மலான கணவன் – மனைவி போல நாங்கள் இல்லைதான்... ஆனால், அது முழுக்க முழுக்க என்னுடைய முடிவு. அதில் ஒரு அற்ப பெருமை அகல்யாவிற்கு...

பெரிய பெரிய விஷயங்களையும், அதனால் விளையும் பாதிப்புகளையும், இவ்வளவு குழந்தைத்தனமாக யோசிக்க பெண்களால் மட்டும் தான் முடியும்.

தீபாவளி பட்டாசு சத்தத்தில், வேறு வழியில்லாமல், ஆறு மணிக்கே எழுந்துவிட்டாள் அகல்யா.

பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தாள்...

மழை வாசனை அடித்தது... வரும் போல, எதிர்வீட்டுக் குழந்தைகள் குளித்து, புத்துடையில்ஒரு புஸ்வானத்தைப் பற்ற வைத்துவிட்டு, அதன் ஒளிச்சிதறல்களுடன் சேர்ந்து மகிழ்ந்தார்கள்...

‘இப்படித்தானே நானும் இருந்தே... அம்மா இருக்கும் வரை, தீபாவளி, பொங்கலுக்கு ப்ராக்குடன் பாவாடை சட்டையும் உண்டு அகல்யாவிற்கு...

ஆனால் அவளுக்கு அது பெரிய பாரமாகத் தெரியும்... இரண்டு கைகளிலும் பாவாடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே அலைவாள்...

“பாவாடையைக் கீழே போடுடி... அது என்ன பண்ணுது...”

“இல்லம்மா நடக்கும் போது தட்டுது”

“தட்டுது முட்டுதுன்னுட்டு... இதுக்கே இப்படி சொன்னா, பெரியாளானப்புறம் சேலை எப்படி கட்டுவே?”

“அது அப்பப் பார்த்துக்கலாம்மா”

“பாவாடை கட்டுனாத்தான் இடுப்பு ஒழுங்கும்... அம்சமா இருப்பே...”

சரிம்மா எனக்கு போண்டா குடு”

“பூஜை பண்ணினப்புறம் சாப்பிடலாம்டி செல்லம்”

“அம்மா, சாமி போண்டாவுக்குச் சட்னி தொட்டுப்பாரா?”

“மாட்டாரு... அவருக்கு அல்சர்” என்று தம்பி சீண்ட
“பாரும்மா, இவன் சாமியைக் கிண்டல் பண்றான்”

“சரி... எல்லாம் ரெடியாயிருச்சி... அப்பாவைக் கூப்பிடுங்க... சாமி கும்பிடலாம்”

சுகியன் மீதும் வடை, போண்டா மீதும் கண்கள் நிலைத்திருக்க, கைக்கூப்பி நிற்பார்கள் அகல்யா, மதி, தொடர்ந்து புத்தாடை, பலகாரங்கள், பட்டாசுக்கள் அக்கம்பக்க வீடுகளுக்கு விசிட் என தினசரி வாழ்க்கை முறைய்களை உடைத்து, அன்று பரபரப்புடன் இருப்பாள் அகல்யா...

இரவு நெருங்க நெருங்க... கைவிட்டு நழுவிக் கொண்டிருக்கும் தீபாவளி நிலாவுக்காக வருந்த வேறு செய்வாள்.

அடுத்த வருடமும் தீபாவளி வருமே என்ற ஆறுதல் சேர்ந்து கொள்ளும். அந்த இளம் பிராயத்து மென்மையான மகிழ்ச்சிகள் எல்லாம் எங்கே போயிற்று? ஏன் போயிற்று? வளர வளர சந்தோஷங்கள் தோலைந்து போகத்தான் வேண்டுமா? அப்படியானால் அறிவும், அக மகிழ்வும் எதிர் எதிரானவையா? ஒன்றும் புரியவில்லை...

சிந்தனையுடன் காலைக்கடன்கள், குளியல் முடித்து ஒரு நைட்டியை மாட்டினாள்.

தயா மாடிக்கு வந்தான்... குளித்து புது வேஷ்டி சட்டை அணிந்திருந்தான்...

“அகல்யா, நீ புது டிரஸ் போடலையா”

“இதோ போட்டிருக்கேன்ல”

“உங்கப்பா எடுத்துட்டு வந்தாங்களே புது ஸாரி, அதைக்கட்டலையான்னு கேட்டேன்...”

“ப்ச்... பிடிக்கலை”

“எது?”

“எல்லாமேதான்... நீங்க என்னைய இப்படி கேள்வி கேக்குறது கூடத்தான்...”

ஏதோ சொல்ல வாயெடுத்து, பின்பு சொல்லாமல் சரசரவென படியிறங்கிப் போனான் தயா...

அகல்யாவுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது... விரல்களால் தன் வாயில் தானே ஒன்று போட்டாள்...

“கொஞ்ச நேரம் சிம்மாயிருக்கியா” என்று தனக்குத் தானே கடிந்து கொண்டாள்.

அரை அடி நாக்கு அகிலத்தை ஆட்டிப் படைக்கிறது... தான் செய்வது தநேக்கே அதிகமாகத் தோன்ற, புது சுடி ஒன்றைப் போட்டுக் கொண்டு கீழிறங்கினாள் அகல்யா.

“அத்தை... ஹேப்பி தீபாவளி...” என்று நாத்தனார் மகன் சல்ல “ஹேப்பி தீபாவளிம்மா” என்றனர் மாமியாரும் மாமனாரும் கோரஸாக. ஒரு புன்னகையுடன் அங்கீகரித்தாள் அகல்யா!

ஹேப்பி இருக்கிறதோ இல்லையோ, தீபாவளி இருப்பது உண்மை தானே!

ஒரு கைப்பை பரிசளித்து, தயாவின் தம்பி மதி வாழ்த்து சொன்னான்... நாத்தனார் மித்ரா, அவள் கணவன் எல்லோரும் வாழ்த்த, லதா ஓடி வந்தாள்...

“அக்கா, எனக்குப் புடவை நல்லாயிருக்கா?”

“சூப்பர் போ”

மாமனார்பூஜைசெய்ய, அனைவரும்வணங்கினர், அகல்யாவிற்கு அப்பா மற்றும் தம்பியின் ஞாபகம் வர, கண்களில் நீர் திரண்டது...

பூஜை முடிந்து, எல்லோரும் பெரியவர்கள் காலில் விழ, அகல்யா நைஸாகக் கழண்டு கொண்டாள்...

கைகள் கட்டியவாறு வெளியில் வந்து நின்றவளை, தயா பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தான்...

தம்பதிகளாய் தகப்பனின் காலில் விழாவும் ஒரு கொடுப்பனை வேண்டும் போல, டிபன் முடிந்தது...

அகல்யாவிற்கு இனிதாகவோ, புதிதாகவே எதுவும் தெரியவில்லை.மனதிற்குத் தெரியாத ஒன்று, புலன்களுக்கு எப்படி தெரியும்? மதிய சமையல் இல்லை... டிபன் தான் என்று முடிவாயிற்று... ஆகவே, இரு குழுக்களாக ஒரு குடும்ப விளையாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முக்கியமாக அகல்யாவும் கலந்து கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையோடு...

“முதல் லேடீஸ்... ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க வயசுக்கேத்த விளையாட்டு”

“ஓகே”

“முதல்ல மித்ரா”

“அம்மாக்கு மாத்தி யோசி”

“அப்படின்னா”

“நாம கேக்கற கேள்விக்கு சம்பந்தமில்லாம பதில் சொல்லணும்”

“உங்கம்மா இந்த கேம்ல வின் பண்ணிடுவ... ஏன்னா, எப்பவும்அப்படித்தான் பேசுவா”

சிரிப்பு அள்ளிக் கொண்டு போனது... போட்டி ஆரம்பமாக, மித்ராவிடம் கேள்விகள்...

“தீபாவளிக்கு என்ன டிரஸ்?”

“ஸ்வீட் போளி பண்ணினேன்”

“அதை போணி பண்ணியா... நீயே சாப்டுட்டியா”

“மெஹந்தி போட்டுக்கிட்டேன்”

“யாரு போட்டுவிட்டா... அகல்யா அண்ணியா”

“ம்ம்... எனக்குத்தான் போடத் தெரியுமே”

பெண்களுக்கே இயல்பாக உரிய போட்டி மனப்பான்மையில் மித்ரா சரியான பதிலை, தப்பான இடத்தில் சொல்லி, விளையாட்டில் தோற்றுப் போக...

“மித்ராவுக்கு என்ன பனிஷ்மென்ட்”

“ஒரு பாட்டு பாடச் சொல்லுவோம்”

“வேணாம்... அது நமக்குப் பனிஷ்மென்ட்டாயிடும்... மித்ரா நீ வீட்டைச் சுத்தி மூணு தரம் நடந்து வா... உடம்பு இளைக்கும்...”

அவள் முறைத்தவாறு விலக... மணிமாலாவிற்கு விடுகதை... தமிழரசனுக்கு மனக் கணக்கு... மாமாவிற்கும் மருமகனுக்கும் மியூசிக்கல் சேர்... மிஞ்சியது தயா – அகல்யா ஜோடி...

காலையில் செய்த உப்புமா தட்டில் கொண்டு வரப்பட்டது. இருவரும் கண்களை மூடிய நிலையில் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு, ஒரு நிமிடத்தில் தட்டைக் காலி செய்ய வேண்டும்.

இது தான் போட்டி... தயாவிற்கு போட்டி இனிக்கவே செய்தது... முதலில் மறுத்த அகல்யா, பின்பு ஏதோ ஓர் உந்துதலில் ஒப்புக் கொண்டாள்.

தொடங்கியது போட்டி... சாதாரண உப்புமா தான்... ஆனால், அது தயாவிற்கு ருசி ருசியென ருசித்தது... காரணம் அதை ஊட்டுவது, அவனது அன்புக்குரிய மனவியாயிற்றே...

அதிலும், மணமானதிலிருந்து பத்தடி தள்ளியே இருந்த தர்ம பத்தினி இன்று அருகில் வந்து ஊட்டுகிறாள்... என்றால் சும்மாவா?

அகல்யா தான் வேண்டா வெறுப்பாய் விழுங்கிக் கொண்டே ஊட்டினாள்... அவளுக்கு உப்புமா அதை ஊட்டுபவன் இரண்டையுமே பிடிக்கவில்லை...

“ஹரி அப், ஹரி அப்...” என்று கை தட்டல்...

அவசரத்தில் தயாவின் கை விரல்கள், அகல்யாவின் தொண்டைப் பகுதியில் பட்டுவிட...

ஏற்கனவேஃபுல் ஆன வயிறு விரட்ட, வாமிட் எடுத்து விட்டாள் அகல்யா... அனைவரும் திகைக்க... “அம்மா உனக்கு பேத்தி வரப்போறா... எனக்கு மருமக வரப்போறா” என்று மித்ரா மகிழ்ச்சியில் கத்த,

“ஐயா... குட்டிப்பாப்பா வரப்போகுது...” என்று சசிகுமார் ஜாலியாக, அத்தை அகல்யாவைப் பிடித்து உலுக்க, ஏற்கனவே, அனைவரது முன்பும் வாமிட் எடுக்க வேண்டி வந்து விட்டதே என்ற வமான உணர்விலும், தொண்டை எரிச்சலிலும் இருந்த அகல்யா, கடுப்பாகி, மருமகன் சசிகுமார் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்...

அனைவரும், பண்டிகை மகிச்சியை தொலைத்து அப்படியே ஸ்தம்பித்து விட, தயா செய்வதறியாது கை பிசைந்து நின்றான்...
 
Top