Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naan Sirithal Deepawali 10

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
இரவு விடியத்தான் வேண்டும்...
இன்னல்கள் தீரத்தானே வேண்டும்...

ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் குளியல். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடி வாஷ் செய்தே இரண்டு வாரங்களை ஓட்ட வேண்டிய நிலைமை அகல்யாவிற்கு... ஆகவே இன்று இதமான பதமானவெந்நீரில் உடல் குளிரக் குளிரக் குளியல்... குளித்து முடித்து நைட்டி அணிந்து காற்றாடிக்குக் கீழ் நாற்காலியில் அமர்ந்தாள் அகல்யா. லதா தலை துவட்டி சிக்கெடுத்து விட்டாள்.

“அக்கா சீப்போட முடியும் கொத்தா வருதுக்கா”

“பின்ன வராது மாத்திரை மருந்துல உடம்பு சூடாயிருக்கும்... தலை சீப்பைப் பார்த்தே பல நாளாச்சுல்ல... முடி கொட்டத்தான் செய்யும்...”

“தலைவலி முதுகுவலியெல்லாம் தேவலையாக்கா?”

“ம்... பெட்டரா இருக்கு... கொஞ்சம் தெம்பும் வந்திருக்கு”

“அக்கா... பெரியண்ணனை சும்மா சொல்லக் கூடாது. தவியா தவிச்சுப் போச்சு... நீங்க எந்திரிச்சு உக்கார்ந்ததும்தான் அண்ணன் மொகத்துல தெளிவே வந்திருக்கு” என்றாள் லதா.

ஆனால் அகல்யாவிடம் வழக்கமான மௌனம்.

“தலை நல்லா காயட்டும். பெனுக்கு கீழயே .உக்காந்திருந்க... நான் போயி சாப்பாடு எடுத்துட்டு வரே” லதா.

“லதா…. லதா…. ரசத்தைப் பார்த்தாலே வெறுப்பா இருக்கு. சுள்ளுன்னு வத்தக்குழம்பு அப்பளம் எடுத்துட்டு வா...” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு தொலைக்காட்சியை ஆன் செய்தாள். பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. தயா மேலேறி வந்தான்.

“குளிச்சிட்டியா?”

“தலையாட்டினாள் அகல்யா?”

“சாப்டு மறக்காம டானிக் குடிச்சிடு... நா வேலை விஷயமா திருநெல்வேலி போறேன்... நைட்டு தான் வருவேன்” என்று சொல்லிவிட்டு போனான்.

அகல்யாவின் கவனம் சினிமா பாடலில் இருந்து விலகி தயாவின் மீது சென்று நின்றது.

‘இது என்னவிதமான மனப்பாங்கு! நீ எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போ என்னுடைய பங்களிப்பில், அன்பில், அக்கறையில் குறை எதுவும் இருக்காது... அதாவது எனக்கு வெறுப்பை காட்டத் தெரியாது என்பது போல...’

எங்கேயோ போய்விட்ட சிந்தனைக் குதிரையை இழுத்துக்கட்ட வந்து சேர்ந்தது சூடான உணவு. சின்ன வெங்காயம் மிதக்க வற்றல் குழம்பு, பீன்ஸ் உசிலி, அப்பளம்... ஒரு பிடி பிடித்தாள். நாக்கு ருசி கண்டிருந்தது. உணவை முடித்தபின், ஒரு நல்ல தூக்கம் போட்டு எழுந்தாள். பிரெட் சாப்பிட்டு பால் குடித்தாள். லதா வந்து தலையைப் பின்னிவிட்டு வீட்டில் பூத்த ரோஜாவை சூட்டிவிட்டாள்.

வெகுநாட்களுக்குப் பின்னர் தனது கட்டுப்பாட்டில் வந்த உடம்புடன் ரேடியோவுடன் பால்கனியில் அமர்ந்தாள். அப்பா எத்தனை நாட்களாயிற்று உடம்பும், மனசும் லேசாகிப் பறந்தது. துன்பத்தை அடுத்து வருவது இன்பமேன்பதும் எவ்வளவு பெரிய உண்மை? கண் மூடி வானொலியில் லயித்தாள்..

“நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை”

டி.எம்.எஸ்ஸின் குரல் அகல்யாவை எங்கேயோ இழுத்துக் கொண்டு போனது.

முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து,
முத்துச் சரமென குறுநகை புரிந்து...
சின்னஞ்சிறுமலர் பனியில் விழுந்து,
என்னை கொஞ்சம் தழுவிட நினைந்து,
பொன்னில் அழகிய மனதினில் வரைந்து,
பொங்கும் தமிழென கவிதைகள் புனைந்து,
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

பாட்டுவரிகளும் இசையும் அகல்யாவைத் தழுவிக் கொண்டு போனது. அவள் அங்கேயே இல்லை... இசையின் மகத்துவம் தான் என்னே!

ஒருவர் மனதில் அலைவரிசையையே அதிரடியாக மாற்றி விடுகிறதே! இரவு இடியாப்பமும், தேங்காய்பாலும் திவ்யமாய் உண்டுவிட்டுப் படுத்தாள்.

வெகு நாளைக்குப் பின் அயர்ந்த தூக்கம்... கனவில்எம்.ஜி.ஆர் கதாநாயகியை இழுத்தவாறு பாடுகிறார். தூக்கத்திலேயே சிரித்தாள். திடீரெண்ட பெருஞ்சத்தம், பதறி எழுந்தமர்ந்து திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் சுற்றும் முற்றும் பார்த்தாள்...

ஓ! நடுநிசி ஆயிற்றா செல்போனில் மணி பார்த்தாள்... பன்னிரெண்டு அருகில் திரும்பிப் பார்த்தாள்.

வழக்கம்போல் முதுகு காட்டிப் படுத்திருந்தான் தயா. தயா வந்து படுத்தது கூடத் தெரியாமல் தூங்கியிருக்கிறேன். ஜன்னல் வழியே பெருமழை பெய்யும் சத்தமும், இடியும்... ஒளிக்கீற்றாய் மின்னலும்...

தயா அசைவின்றி அயன்ர்து தூங்கிக் கொண்டிருக்க, அகல்யாவிற்கு தூக்கம் விடை பெற்றுச் சென்றுவிட்டது. அரை வெளிச்சத்தில் தயாவின் ஏற்றி வாரிய தலை முடியும், தீர்க்கமான மூக்கும், பனியன் முதுகும் அவளை... என்னவோ செய்தன...

இவன் எனக்கு சொந்தமானவன்... ஆனால், தான் உரிமை கொண்டாடியதே இல்லை... என்னை இவனுக்கு சொந்தமாக்கிதுமில்ல... இதுவரை... கணவன்-மனைவி இருவருக்குமிடையே இருந்த கண்ணாடி சுவரை, தயாவின் அன்பும், அக்கறையும் பெருந்தன்மையும், கம்பீரமான ஆண்மையும், எதிர்ப்பார்ப்பற்ற காதலும் காலி செய்திருந்தன.

அகல்யா மெதுவே கை நீட்டினாள். சுவரில்லை... தடையில்லை... தயங்கவில்லை...

தயாவின் மென்மையான ஆனால் உறுதியான முதுகுப்பகுதி கைகளில் தட்டுப்பட்டது. தயாவின் மீது தொடுவது போல் வைத்த கையை அகல்யாவால் விலக்கிக்கொள்ள முடியவில்லை. மெதுவே படரவிட்டாள்...

‘நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்’ என்ற கேள்வியை அறிவு எழுப்புவதற்குள், ஒரு பெரும் இடி கிளம்பி சத்தத்தை எழுப்ப, சில வினாடிகள் டபடபவென நீடித்த நிலையில் இடி சத்தம் அடங்கியபோது...

அகல்யா தயாவின் கரங்களுக்குள் அடைக்கலாமாயிருந்தாள்... அவனது திமிர்ந்த தோள்களுக்குள், அகல்யாவின் பூப்போன்ற டேஹ்கம் தன்னை புதைத்துக் கொண்டது.

தயாவிற்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த பேரானந்தம்...

வெள்ளி பனிமலை அருவியில் விழுந்து
வெற்றித் திருமகன் மடியினில் கிடந்தது
இந்த உலகை ஒரு கணம் மறந்து...

கண் முன்னே கைக்கெட்டும் தூரத்தில் வைத்துப்பார்த்து பார்த்து ஓங்கியலட்டு, இன்று என் நாவினில் அமர்ந்து இனிக்கிறது. விடுவானா அவன்...?

ஏங்கிய ஆண்மையும், இளகிய பெண்மையும் கலக்க, அகல்யாவின் ஆழ் மனதில் பாடல் ஓடுகிறது...

பொன்னில் அழகிய மனதில் வரைந்து...
பொங்கும் தமிழென கவிதைகள் புனைந்து...

17

விடிந்தது... தயா. அகல்யாவின் பிரம்மசரிய விரதுமும் முடிந்தது. அவர்களின் அனுமதியில்லாமலே...

மலரும் நேரமும் உதிரும் நேரமும் உயிர்களுக்கு மட்டுமல்ல உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் கூட உண்டு...

கலப்பது தெரியாமல் கலப்பதே சிறப்பு... இனிமை... ஆனால் விடியலில் அகல்யா முகம் மலரவில்லையே... ஏதோ குற்றமிழைத்துவிட்டதைப் போலல்லவா உணர்ந்தாள்... ஓரிரவில் தான் மகாராணி அரியாசனத்தில் இருந்து, இறங்கி தரைமீது விழுந்து விட்டதை போல் கூசிக் குறுகிப் போனாள்.

‘என்னுடைய தன்மானத்தை உடல் சுகம் அழித்து விட்டதா...? சராசரிப் பெண்களை போல, முந்தானை விரித்து விட்டேனா...? என்னை நான் எப்போது எங்கே தொலைத்தேன்...?’ என்று அகல்யா கண்களை திறக்காமலே, படுக்கையில் புரள... இவளுக்கு நேரெதிர் மனநிலையில் தயா...

இல்லற வீட்டின் வாயிற்காவலாளியாய் நின்றிருந்தவன்... இன்று தான் கேட்பாஸ் கிடைத்து வீட்டிற்குள் நுழைந்ததைப் போல பெருமிதமாய் உணர்ந்தான்.

என்னுடைய ஆண்மைக்கும் அழகுண்டு... அர்த்தமும் உண்டு... கோடானுகோடி ஆண்களை போல, நீயும் ஒரு முழுமையான கணவன்...

தனது ஸ்வீட் ஸ்டாலின் மொத்த ஸ்வீட்டும் தொண்டையில் வந்து இறங்கியது பல,திகட்ட திகட்ட இனித்தது தயாவிற்கு... நடந்தது என்னவோ ரே சம்பவம் தான்... அதை பார்க்கும் பார்வைதான் வேறுபட்டு நிற்கிறது...

அகல்யா எழுந்தமர்ந்து தலைமுடியை அள்ளி முடிந்தாள்... குளித்து முடித்துகன்னாடி முன்பாக நின்று பவுடர் அடித்துக்கொண்டிருந்த தயாவைப் பார்க்கையில் பற்றிக்கொண்டு வந்தது.

தான் அவனிடம் தோற்றுப்போய் விட்டதைப்போல உணர்ந்தாள் அகல்யா... ஆத்திரம் வார்த்தைகளில் வெடித்தது...

“என்ன... பெர்சா என்னை ஜெயிச்சிட்டதா நினைபோ...” இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத தயா திகைத்து...

“என்ன அகல்யா?? என்ன சொல்றே??” என்றான்

“நடிக்காதீங்க... நான் எதை சொல்றேன்னு தெரியாது உங்களுக்கு...”

“ஓ... நேத்து ராத்திரி நடந்ததை...”

அவன் முடிக்கும் முன், அகல்யா மேசை மீதிருந்த தம்ளரை எடுத்து வீச, அது தயாவின் நெற்றியில் சிவப்பு கொடு போட்டது. ராத்திரியப்பத்தி பேசினீங்க... பொல்லாதவளாயிடுவேன். சொல்லிட்டேன்” என்று விரல் நீட்டினாள்...

“சரிம்மா... சரி... பேச...”

“சிறிது நேர மௌனம். தயா கண்ணாடியில் பார்த்து, நெற்றி ரத்தத்தை துணியால் துடைத்து, தேங்காயெண்ணையை தடவினான்.

‘பிடி கிடைத்துவிட்டது. முழுமையாக மனைவி தன்னிட வர அதிக காலம் பிடிக்காது’ என்று நினைத்துக் கொண்டான்... வேகமாய் கட்டிலை விட்டு இறங்கி வந்து, தயாவின் பனியனை பிடித்தாள் அகல்யா...

“நேத்து நடந்ததை வைச்சிட்டு, இனி தினமும் எங்கிட்ட உறவை கொண்டாடலாம்னு நினைக்காதீங்க...”

“பெரிசா கனவு காணாதீங்க... அது நடக்காது. வேற ஏதாவது விபரீதமாக நடந்துடும்... ஒகே...” என்றாள்...

“சரி... நானா வந்து உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்... நிம்மதியா இரு... முகம் கழுவி காபி குடி...”

“தெரியும் உங்க வேலையை பாருங்க...”

முதல் நாள் இரவு, இதே படுக்கை அறை தொட்ட இன்பத்தின் எல்லைக்கும், இன்றைய உரையாடலுக்கும் துளியும் தொடர்பில்லை மனத்திற்குள் பூதம் இருந்து ஆட்டுவிக்கிறது... மனிதர்கள் ஆடுகிறார்கள்... அறிவுக்கு இங்கே அதிக வேலையில்லை.

18

அங்குமில்லாமல்... இங்குமில்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய அவஸ்தை என்பதை, அகல்யாவை கேட்டால் அழகாகச் சொல்வாள்... கணவன் மீது முன்பு போல ஒரு வெறுப்பான நிலைப்பாட்டையும் கடைப்பிடிக்க முடியவில்லை... விரும்பி முழுமையாக அவனை ஏற்றுக்கொள்ளவும், ஈகோ வந்து இடிக்கிறது...

ஓரிரவில் உடல்களும் உயிர்களும் கலந்துவிட்ட பின்னர், ஒப்புக்கு முகத்தை காண்பிப்பது அவளுக்கே காமெடியாகத்தானிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கை வண்டியும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த குழப்பங்களெல்லாம் அகல்யாவிற்குத்தான்... தெளிந்த நீரோடையாய் தானுண்டு தன வேலையுண்டு என்றிருந்தான் தயா...
கோவிலுக்கு குடும்பத்தோடு வந்த இடத்திலாவது மனம் இருக்கிறதா என்றால்... இல்லை...

கை கூப்பி, கண்களை மூடி நின்று என்ன செய்ய...? மனம் ஓரிடத்திலா நிற்கிறது...

“அகல்யா... தாம்பாளத்தை தொட்டுக்கம்மா... அர்ச்சனைக்கு குடுப்போம்...” மாமியார்.

அனைவரது பெயருக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது... தீபாராதனை...

‘இன்னல் எல்லாம் தீர்ப்பதற்கு இச்சா சக்தி வருகிறாள். கீர்த்தியோடு புகழ் பாடிய கிரியா சக்தி வருகிறாள்... ஞான மழையை பொழிவதற்கு ஞான சக்தி வருகிறாள்...’ தரிசனம் முடிந்து, தேங்காய் பழத்தட்டு பிரசாதத்துடன் பிரகாரம் வந்தார்கள்.

“என்ன சொல்லுங்க... குலசை கோயில் மாதிரி வராது... என்னங்க...?” மணிமாலா.

“பாட்டி... ஐந்தே ஊரு பேரே குலசைதானா...?”

“இல்லடா தங்கம்... குலசேகரன்பட்டினம்”

ஓரிடத்தில் அமர்ந்தார்கள. கையேடு கொண்டு வந்திருந்த புளியோதரை, தயிர்சாதம், தேங்காய் துவையல் பசியாற உதவியது.

தயா உண்ட களைப்பில் சுவரில் சாய்ந்தமர்ந்தான். “கூட்டத்தை பாரேன்... வந்துடேயிருக்குபின்ன சும்மாவா ஒரு காலத்துல இது துறைமுகமாயில்ல இருந்திச்சி... இந்த கோயில் அம்மன் சிலைய நம்ம ஊருல தான் செஞ்சாங்க...”

“அதே மாதிரிதாங்க... ஒரு பண்ணையார் அவருக்கு உடம்பு சுகமாகணும்னு குறவன் வேஷம் போட்டுக்கிட்டு வந்து வேண்டினான்... உடம்பு குணமாயிருச்சாம்... அதனால தான் இப்பவும் பக்தர்கள் வேண்டுதலுக்காக வேடம் போட்டு கும்பிடறாங்களாம்...” என்று மணிமாலா தனக்கு தெரிந்த கதையைப் பகிர... பேசியவாறே, காரை நோக்கி நடக்க, மனிமாலாவிற்கு தான் கவலை...

அருமையாய் ஊர் கூடித்திருமணம் செய்து வைத்த பிள்ளைகள், இப்படி முகம் கொடுக்காமல் திசைக்கொருவராக இருக்கிறார்களே என்ற கவலை மனதை வாட்டியது.

குலசை தெய்வங்கள் ஞான மூர்த்தீஸ்வரனும், முத்தாரம்மனும் தான் வழிவிட வேண்டுமென நினைத்துக்கொண்டாள். ஊருக்கு திரும்பும் போதும், மற்றவர்கள் கதையடித்துக் கொண்டு வர தயா அகல்யா ஜோடி மௌனமாகவே வந்தது. ஏதோ சிந்தனையிலேயே இருந்தனர் இருவரும்...

மகப்பேறு மருத்துவமனையில், ப்ரக்னென்சி டெஸ்டில் பாசிடிவ் ரிசல்ட், வருகிறவர்களெல்லாம் பூரித்துப்போக, அகல்யா மட்டும் பயங்கர அதிர்ச்சிக்குள்ளானாள்.

மாதாந்திர பீரியட் தள்ளிப்போகவும், வயிற்றில் கட்டி ஏதேனும் இருக்குமோ என்ற பயத்தில், இங்கு வந்தால், வயிற்றில் சுட்டி இருக்கிறது.

மருத்துவரே வியந்தார்... “ஏம்மா உனக்கு கல்யாணமாயிருச்சுல்ல...”

“எஸ் மேம்...”

“பின்ன கர்ப்பம்னு தெரிஞ்சதும் ஏன் ஷாக் ஆயிட்ட...”

“இல்ல... இப்ப எதிர்பாக்கல”

“நல்ல பொண்ணும்மா நீ... நான் என்னவோ நினைச்சிட்டேன்...” பின்பும், குழப்பத்துடன் அமர்ந்திருந்த அகல்யாவிடம், “என்னம்மா... இனி டவுட்?” என்றார் மருத்துவர்.

“ம்...”

“டெலிவரியை நினைச்சி பயப்படறியா?” குழந்தையைப் பாத்துக்க ஆளில்லையா ?”

“அதெல்லாமில்ல...”

“வேறென்ன... சொன்னாத்தானே தெரியும்...”

“இல்ல... அபா... அபார்ஷன் பண்ணிக்க முடியுமான்னு...”

“வாட்... அபார்ஷ்னா கேட்ட?”

“எஸ் டாக்டர்...”

“மூளை இல்லையா உனக்கு... கல்யாணமாகிமுதல் கர்ப்பம்... அபார்ஷன் பண்ணனும்னு வாய் கூசாம கேக்கறே...”

லிஸன்... முதல்ல சட்டரீதியா அது தப்பு... மெடிக்கல் ரீசன்ஸ் இருந்தாதான்குழந்தையை அபார்ட் பண்ண முடியும்...”

இது வீட்டுத் தண்ணீர்குழாய் இல்ல, வேணுங்கறப்ப திறந்து பிடிச்சுக்கரதுக்கு... மெடிக்கல் சயின்ஸ் இவ்வளோ வளர்ந்திருக்கு... டெஸ்ட் டியூப் பேபி பொறந்து அந்த பேபி வளர்ந்து, குழந்தை பெத்தாச்சு... ஆனாலும் ஒவ்வொரு டெலிவரியும் இறைவனோட கருணைன்னு தான் நாங்க நினைக்கிறோம்.

“நீ என்னடான்னா...” என்று மூச்சு வாங்கி நிறுத்தினார் மருத்துவர்.

அகல்யா தலை குனிந்தாள்.

‘ஒரு நாள் சபலம்... என்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது...’

“கமான் ஸ்பீக் அவுட் அகல்யா... வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்”

“நத்திங்”

“தென்? இது உன்னோட குழந்தைம்மா... நம்ம வயித்துல ஒரு பிள்ளை பொறந்துடாதான்னு ஏக்கத்துலயே வாழறவங்க எத்தனை பேரு இருக்காங்க தெரியுமா...”

“இல்லாதவங்களுக்குத்தான் குழந்தையோட அருமை தெரியும்... லுக் அகல்யா... நீங்க வேற ஹாஸ்பிட்டல் போயி கூட அபார்ஷனுக்கு டிரை பண்ண நினைக்கலாம்... அது முடியாதுன்னு இல்ல... பட வேண்டாம்னு சொல்றேன்...”

“ஒரு டாக்டரா இது என்னோட அட்வைஸ்... தட்ஸ் ஆல்” என்று அகல்யாவிற்கு வேப்பிலை அடிக்காத குறையாக மந்திரித்து அனுப்பி வைத்தார் மருத்துவர்.

யோசனையுடன் அறையைவிட்டு வெளியே வந்து நடந்தாள். வயிற்ரை பிடித்தபடி கணவனின் தோளில் சாய்ந்து ஸ்கேன் ரிப்போர்ட்டை திரும்பி திரும்பிப் பார்த்தபடி... கனவுகளுடன் கர்ப்பிணி பெண்கள்...

தன் மீதே எரிச்சலாய் வந்தது அகல்யாவிற்கு... ‘உலகப்பொது சந்தோஷங்கள் கூட, எனக்கு நடக்கும் போது மட்டும், சோதனையாக மாறிவிடும் வேதனைதான்... என்ன...?’ மனம் வலித்தது... சோகத்துடன் வண்டியை கிளம்பினாள்.

குழப்பமும்
குழந்தையும்
சேர்ந்தே கருக்கொண்டது...
மறைக்கக் கூடியதா கர்ப்பம்...

அடுத்து வந்த நாட்களில், அகல்யாவின் சோர்வும், வாந்தியும், மயக்கமும் முக்கியமாக தலை காட்டாத அந்த மாதந்திர மூன்று நாட்களும் அகல்யாவின் கர்ப்பத்தை உறுதி செய்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அகல்யாவின் கர்ப்பம் வீட்டில் எவரையும் மகிழ்ச்சி கொள்ள செய்யவில்லை தயாவைத் தவிர...

அவன்தான் தனது இயல்பையும் மறந்து, சந்தோசத்தில் துள்ளிக்குதித்து விட்டான்... தனது கடையிலிருந்து வகைக் கொன்றாய் இனிப்புகள் எடுத்து வந்து அகல்யாவிற்கு தந்தான்.

“சாப்பிடு அகல்யா... எந்த ஸ்வீட் உனக்கு வாய்க்கு நல்லாயிருக்கோ அத சாப்பிடு...”

“எதுவும் நல்லாயில்ல...”

அவளது மனநிலை புரியவே, ஸ்வீட் பாக்ஸை தளி வைத்துவிட்டு மனைவியினருகில் அமர்ந்தான்.

“அகல்யா அன்னிக்கு நைட்டு...”

“ஹலோ... அதப்பத்திப் பேச வேண்டாம்னு சொல்லியிருக்கேன்ல...” அகல்யா குரலை உயர்த்த...

“இல்ல... இல்... அகல்யா! யோசிக்க வேண்டிய நேரம்... கொஞ்ச நேரம் அமைதியா கேளு... ப்ளீஸ் ஆரம்பத்துலேர்ந்தே... என்னோட அன்பை எப்படி நீ ஏத்துக்கவே இல்லியோ, அதே போல உன்னோட அலட்சியத்தையும், வெறுப்பையும் நான் ஒரு பொருட்டாவே நினைக்கல... அது டெம்ப்ரவரி... புதுசா ஸ்கூலுக்குப் போற குழந்தையோட ஆரம்ப காலப் பிடிவாதம்னு தோணுச்சு... நீ என்னைக்காவது ஒரு நாள்...”

மனசு மாறுவேன்னு நம்புவேன்... அந்த நம்பிக்கையை நான் கைவிடவேயில்ல... அதனாலதான் ஒரு நாள் நைட்டு நீயா என்னைத்தேடி வந்தப்ப , என்னால உடனே அக்செப்ட் பண்ண முடிஞ்சது... நீ மனது மாறி வர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துட்டேன்னு நினைச்சேன்... கணவன் மேல வந்த நியாயமான காதல்னு கற்பனை பண்ணிக்கிட்டேன்... ஆனா, அது காமத்தோட எழுச்சின்னு எனக்குத் தெரியல...”

“சாரி அகல்யா... இந்த கர்ப்பம் உனக்கு சுகமில்ல... சுமைதான்... ஒரு தண்டனைதான்... ஒத்துக்கறேன்.. ஏன்னா, நீஇன்னும் என்னையே ஏத்துக்கல... இதுல எம்புள்ளையைவேற சுமக்கணும்னா, அது கொடுமை தான்...”

“இல்லேங்கல... அதுக்காக வேற மாதிரி எதுவும் யோசிச்சிராத... இந்தக் குழந்தையை கலைச்சிடலாமான்னு மனசால கூட நினைச்சுடாதே ஏன் சொல்றேன்னா, உனக்கு புருஷன், பிள்ளை இதெல்லாம் பிடிக்காம இருக்கலாம்... ஆனா என் கதை அப்படியில்ல... எனக்கு குடும்பம் இருக்கு... அழகான மனைவி இருக்கா...”

“இதோ குழந்தையும் வரப்போகுது... உன்னோடகனவு நிறைவேறலங்கறதுக்காக, என்னோட கனவை கலைச்சிராத” என்று சொல்லி, பெருமூச்சு விட்டு எழுந்து போனான்...

வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும்... ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்... ஏறுகிறது... இப்பொழுது கணவன் பேசி மனைவி கேட்க வேண்டிய நேரம்... ஆனால், தயாவின் பேச்சில் நியாயமும், நேர்மையும் ஒளிந்திருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...

ஆனால், ஒப்புக்கொண்டதையெல்லாம், ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்ன? ஒப்புமை செய்வது அறிவு... ஆனால் ஏற்றுக்கொள்ள வேண்டியது மணமாயிற்றே!

உணர்ச்சியால் அறிவை வெல்வது இயல்பு...
அறிவால் உணர்ச்சியை வெல்வது சிறப்பு...
 
"ஒரே நாள் உனை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான்
ஊஞ்சலாடுது........."
 
அடிப்பாவி அகல்யா
குழந்தை வேண்டாமா
அபார்ஷன் பண்ணிக்கணும்னு சொல்லுறாளே
 
தாயுமானவன் ரொம்பவே
பாவம்ப்பா
அப்பாவாகப் போகும் சந்தோஷத்தில் அகல்யாவுக்கு ஸ்வீட்டாக கொண்டு
வந்து தள்ளுறான்
 
தயா சொல்வதும் நியாயம்தானே
இவளுக்கு பிடிக்குதோ இல்லையோ
வயிற்றில் வந்த குழந்தையை
வெறுக்காமல் அகல்யா சுமக்கத்தான் வேண்டும்
 
superb sis
 
தாயுமானவன் சரியாகத்தான் சொல்லுறான்
மனைவி குழந்தை குடும்பம்ங்கிற
அவனுடைய கனவை கலைக்க அகல்யாவுக்கு உரிமை இல்லை
 
Top