Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் - 4

குருவிக்கூட்டில் குறையேதும் இல்லைதான்,,,
ஆனால்
நிறைவுமில்லையே எனக்கு.......

அன்று விடுமுறை நாள்.

அகல்யா படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே எட்டு மணி ஆயிற்று..கீழே மாமனார் மாமியார் மூஞ்சியைக் காண்பிப்பார்களோ என்ற தயக்கத்துடன் படியிறங்கியவளிடம் அனைவரும் இயல்பாகவே பேசினார்கள்.

‘’பல் தேய்ச்சி காபி குடிம்மா’’-மணிமாலா.

‘’அப்பா பேசினார்மா..லேன்ட்லைனுக்கு’’-மாமனார்.

இரண்டு பேருக்கும் சேர்த்து பொதுவாக ‘’ம்’’ என்றாள்..அகல்யா..

இவர்கள் நடந்துகொள்வதைப்பார்க்கும்போது தாயமானவன் தன்னைப் பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லையென்பது புரிந்த்து,,,அதற்ககாகவெல்லாம் அவரைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட முடியாது...காபி பேப்பர் சகிதம் முன் ஹாலில் அமர்ந்தவளிடம் ‘’அகல்யா இன்னிக்கு உனக்கு லீவுல்ல,,என்ன டிபன் வேனும் சொல்லு செஞ்ச்சிடலாம்’’-மணிமாலா கேட்டாள்.

‘’தந்தூரி ரொட்டி’’-மதி பதில் சொன்னான்,,

‘’உன்னைக் கேட்கல’’

‘’சரி மதி சொன்னாப்புல தந்தூரி ரொட்டி வேணும்னு அகல்யா சொல்றான்னு வச்சிக்கோ..உனக்கு செய்யத் தெரியுமா?’’மாமனார் மனைவியை வார..

‘’ம்ம்,,தெரியாது’’என்று மணிமாலா முறைக்க

‘’பின்ன பந்தாவா கேளவி கேட்கறே..உனக்கு எது நல்லா வருமோ அதை செஞ்ச்சிகுடு’’

‘’அப்பா ...அம்மா தோசை நல்லா வட்டமா சுடுவாங்கல்ல’ என்று மதி சிரிக்காமல் சொல்ல..

‘’யேஞ்ச்சொல்லமாட்டே..தினம் வாய்க்கு வக்கனையா செஞ்சிபோடறேன் பாரு,..என்னை சொல்லணும்’’ என்று மணிமாலா அருகிலிருந்த கேரட்டைத் தூக்கி வீச....அதை அவன் கரெக்ட்டாக காட்ச் பிடித்து வாயில் வைத்துக் கடிக்க ‘’டேய் கேரட் கழுவலடா’’ என்று அம்மா பதற.....

‘’நோ ப்ராப்ளம்மா..கேரட்டை சாப்ட்டுட்டு தண்ணீர் குடிச்சிட்டா தன்னாலே கழுவிக்கும்’’என்று மதி கண்ணடிக்க....அனைவரும் சிரித்தனர்-அகல்யாவைத் தவிர.....

‘’அகல்யா கடைசிவரைக்கும் என்ன டிபன் வேணும்னு சொல்லவேயில்லையேம்மா’’-மாமனார்.

‘’பசிக்கிற வயித்துக்கு எதையொ போட்டு நிரப்பனும்..,இதுல செலக்க்ஷன் என்ன வேண்டிக்கிடக்கு’’ என்று வெட்டினாற்போல பதி ல சொல்லிவிட்டு மாடிக்கு வந்துவிட்டாள் அகல்யா...தனது ஒரு வார உடைகளை துவைத்து காயப்போட்டவள் குளித்து முடித்து கீழே போனாள்....மாமியார் மணிமாலா தரையில் அமர்ந்து ஸ்ட்வ்வில் ஆப்பம் சுட்டுக்கொண்டிருக்க ஒவ்வொருவராய் போய்ப் போய் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்க அகல்யாவின் தலையைக் கண்டதும் மணிமாலா பரபரப்பானாள்..’

‘’உட்காரும்மா ..பசிக்கலையா? துணியைப் போட்டியின்னா லதா கூட துவைச்சித்தருவாயில்ல’’என்ரு ஆதங்க்கப்பட

‘’’எல்லாம் காஸ்ட்லியான காட்டன் சாரீஸ ..ஜென்டில் வாஷ் பண்ண்ணும்’’ என்றாள் கறாராக..

‘’அது சரிதான் அண்ணி’’லதாகிட்ட குடுத்தீங்க....சாரியை தாவணி சைஸூக்கு ஆக்கிடுவா’’என்று மதி வார

‘’போங்கண்ணா....எப்பவும் என்னைய கிண்டல் பண்றதே உங்களுக்கு வேலையாப்போச்சி’’என்று லதா சிணுங்க.....இந்தக் குடும்பத்தின் சந்தோஷமான சூழலை என்னுடைய முரண்டு பிடிக்கும் குணத்தாலும் மனத்தாலும் கெடுக்கத்தான் வேண்டுமா? என்றஎண்ணம் ஒடியது அகல்யாவிற்குள்...’’அதற்காக என்னை நான் எனது நிலையிலிருந்து இறக்கிக்கொள்ள முடியாது..அது அவர்கள் தலையெழுத்து’’என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டாள்....

ஆப்பம் தேங்காய்ப்பால் கொண்டைக்கடலை குருமா வாய்க்கு ருசியாக வயிற்றூக்கு இதமாக இருந்தது..மணிமாலா சுட்டுப்போட லதா பரிமாற அகல்யா சுடச்சுட சிலபல ஆப்பங்களை உள்ளே தள்ளீனாள்..உண்டு முடித்து மாடிக்கு வந்தவள் ஒரு உறக்கத்தைப் போட்டாள்..கண் விழ்த்தபோது மணி ஒன்று காயப்போட்டிருந்த தனது உடைகளை எடுத்து மடித்து வைத்தாள்..அதற்குள் மதியசாப்பாட்டுக்கான அழைப்பு வந்த்து...

திவ்யமாய் போய் சாப்பிட்டு வந்து மீண்டும் ஒய்வு,,,இப்படியே இரண்டு நாட்கள் ஒடியது....மருமகள் வீட்டு வேலைகளில் பங்கெடுக்கவோ வீட்டாரிடம் முகம் கொடுத்துப்பேசவோ இல்லயே என்றூ வீட்டுப்பெரியவர்கள் கவலைப்படவும் இல்லை..புகுந்த வீட்டை போர்டிங்க் அண்ட் லாட்ஜிங்க் போலப் பயன்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு அகல்யாவிற்கும் இருப்பதாகத் தெரியவில்லை..

மூன்றாம்நாள் மாலை மணிமாலா மருமகளை அழைத்து ‘’நல்ல பட்டு சேலையைக் கட்டி நகை போட்டுக்கம்மா..தம்பி வேளிய போயிருக்கான்..வந்ததும் ரெண்டு பெரும் ஜொடியா கோவிலுக்குப்போயிட்டு அப்பிடியெ நைட்டு எதாவது ஹொட்டல்ல சாப்பிட்டுவாங்க..வீட்டுக்குள்ளேதானெ அடைஞ்சிகிடக்குறே’’ என்றாள்..மணிமாலாவின் வார்த்தைகளைக் கேட்டதும் ஆத்திரம் மளமளவெனப் பொங்கியது அகல்யாவிற்குள்...

’’கோயிலாம்..சாமியாம்..ஹோ ட்டலாம்..இவர்கள் எல்லோரும் என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்?தனது அலட்சியமும் ஆத்திரமும் வீட்டினரால் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதுடன் அகல்யா முள்ளை வைக்குமிடங்க்களில் எல்லாம் அவர்கள் அதற்கு மாற்றாக பூவை வைப்பதும் எரிச்சல் படுத்தவே செய்தது அகல்யாவை...இதற்கு முடிவு கட்டவேண்டுமென்றால் இவர்களுக்கு என் சுயரூபத்தை உடைந்த மனதை எந்தவித பாசாங்குகளும் இன்றீ அப்படியெ திறந்து காட்டுவதுதான் ஒரெ வழி என்ற முடிவுக்கு வந்தவள் மாமியாரை முறைத்தபடியெ படியிறங்கினாள்..

’’ஏன்..உங்களுக்கெல்லாம் என்னயப்பார்த்தா எப்பிடி தெரியுது? நாங்க எங்கடா போய் சாப்பிடலாம்னு அலைஞ்சிகிட்டா உக்காந்திருக்கோம்..?’’

அகல்யாவின் இத்தகைய திடீர்த் தாக்குதலை சற்றும் எதிர்பாராத மணீமாலா அதிர்ந்து பதில் பேசத்தெரியாமல் விழிக்க மாமனார்தான் வாய்திறந்தார்..’’அப்படி யெல்லாம் அர்த்தப்படுத்திப்பார்க்க கூடாது...அத்தை எதுக்கு சொல்றான்னா...உனக்கும் புருஷன் கூட வெளியெ போகணூம் கொள்ளணும்னு ஆசை இருக்கும்ல..’’

இடை மறீத்தாள் அகல்யா.. ‘’எனக்கு இல்ல ... ஆசையெ இல்ல..உங்க மகன் கூட ஊர் சுத்தணூம்ங்கற எண்ணமே எனக்கு கிடையாது..போதுமா?’’ என்று இரைந்தாள்..வீடு மொத்தமும் ஹாலில் கூடிவிட்டது.அகல்யாவின் ஆக்ரோஷத்தைப்பார்த்து அனைவரும் நிலைகுலைந்துபோயினர். அப்பொழுதுதான் உள் நுழைந்த தயா உள்பட...மணிமாலாதான் முதலில் சுதாரித்தாள்..அருகில் வந்து மருமகளின் கரங்களைப் பற்றினாள்..’’அம்மாடி..அப்ப..உன்னைய கட்டாயப்படுத்திதான் எங்க புள்ளைக்கு கட்டி வச்சிட்டாங்களா?’’ என்று வாய் பிளக்க..

’’ஆமா கிட்டத்தட்ட அப்பிடித்தான்’’என்று மாமியாரின் கைகளை உதறீயவள்’’ இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க.....நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன்...யாரும் என்னை எதுக்காகவும் கட்டாயப்படுத்தக்கூடாது....இல்ல..அப்பிடியெல்லாம் இருக்கமுடியாது...நாங்க அனுமதிக்கமாட்டோம்னா இப்பவே சொல்லிடுங்க...நான் லேடிஸ ஹாஸ்ட்டல்ல தங்கிக்கறேன்..’’ என்ற அகல்யா வின் அதிரடியில் குடும்பமே பதறியது..

‘’இல்லம்மா அப்பிடியெல்லாம் இல்ல..வாழவந்த பொண்ணு நீ..அப்பிடியெல்லாம் போய்த்தங்கக்கூடாது....அது உனக்கும் நல்லதில்ல இந்தவீட்டுக்கும் நல்லதில்ல..நீ உன் மனம் போல இரு.. யாரும் எதுவும் சொல்லமாட்டோம்’’என்று மணிமாலா ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க...மதம் கொண்ட யானை வெறியடங்கியதுபோல மூச்சிரைக்க ஏறி தன் அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தாள் அகல்யா...இந்த வீட்டில் தனது இருப்பு எப்படி இருக்குமோ என்ற மனதை அரித்த குழப்பத்திலிருந்து ஒரு தெளிவுக்கு அகல்யா வந்தாள்..ஆனால் வீட்டிற்கு மூத்தமருமகள் வந்துவிட்டாள் என்ற பெருமிதத்தில் இருந்த வீட்டுப் பெரியவர்கள் தீராமனக்கவலைக்குள் விழுந்தார்கள்....

என்னத் துரத்திகொண்டு நான்......

படுக்கை அறை ஒரு மர்மதேசம்...மோதலோ காதலோ எதையும் உயரத்திற்கு கொண்டுபோய் உச்சத்தை தொடவைப்பதே அதற்குப் பழக்கம்...

அன்றைய தினம் தயா-அகல்யா படுக்கை அறையில் மீண்டும் மோதல்..ஆனால் அகல்யா நினைத்த்து போல் அல்லாமல் பதவிசாய்த்தான் பேசினான் தயா..

‘’நீ இனிமே எதுன்னாலும் எங்கிட்டயே சொல்லு..நான் வீட்டுல எப்பிடி சொல்லனுமோ அப்பிடி சொல்லிக்கிறேன்’’ என்றான்..

‘’எனக்குப் புரியல’’

‘’என்ன புரியல’’

‘’இப்படியே எத்தனை நாள் கடத்தமுடியும்னு நினைக்கிறிங்க?’’

‘’அதயேதான் நானும் உங்கிட்ட கேட்கறேன்...கோபம் ஆத்திரம் இதெல்லாம் கணநேரம் வர்றது போறது..அதைப் பிடிச்சிகிட்டு வாழ்க்கை பூரா பயணம் பண்ணமுடியுமா?’’அகல்யா திகைக்க தயா தொடர்ந்தான்..’’உன்னோட கோபத்தை நிரந்தரம்னு நம்பறே பாரு..அதுதான் வேடிக்கையா இருக்கு எனக்கு’’-லேசாகச்சிரித்தான்...

‘’உங்க வேடிக்கை வினோதமெல்லாம் இருக்கட்டும்..என்னொட கோபம் தற்காலிகமானதுன்னு எதை வச்சி சொல்றிங்க’’என்று அகல்யா திருப்ப..

‘’உலக அனுபவம்னு ஒன்னு இருக்கில்ல..அத வச்சித்தான்..நம்மோட எந்த உணர்வுகளுமே lமாறக்கூடியதுதான்..மாற்றம் ஒன்னு தாம்மா உலகத்துல நிரந்தரம்’’

‘’சரி..நீங்க சொல்றபடியே எடுத்துக்கிட்டாலும் இப்ப உள்ள என்னோட உன்ர்வுகளுக்கு நான் நியாயஞ்செய்துதானெ ஆகனும்?’’

‘’தாராளமா செய்மா..ஆனா..என்னோட மட்டும் நிறுத்திக்கோ...எதுக்கும் தயாரான ஒரு மனநி லைக்கு என்னை நான் மாத்திகிட்டேன்..ஆனா எங்க வீட்டுல உள்ளவங்களையும் சேர்த்து குறி வைக்காதே..அது தேவையில்லாத ஒன்னு’’ என்றான் குரலில் சிறிது கடுமை சேர்த்து..

தயாவின் பேச்சிலுல்ல நேர்மையும் நியாமும் புரிந்தது..பிடித்துமிருந்தது அகல்யாவிறகு..’’ஒகே டீல் ..கோட்டைத்தாண்டி நானும் போகமாட்டேன் அவங்களும் வரக்கூடாது...பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’’

ஒற்றுமையுடன் எப்படி வாழாமல் இருப்பது என்ற விஷயத்தில் இருவரும் ஒருமித்த மனசுடன் ஒரு முடிவை எட்டியபின் ஒரெ படுக்கையில் முதுகு காட்டி படுத்துறங்கினர்...இருவருக்கும் இடையே தாம்பத்யம் அனாதையாய் கிடந்தது..மணமாலையால் உடல்களைத்தானே இணைக்கமுடியும்..உள்ளங்களைப் பிணைக்கமுடியாதே...தனித்திருந்த மனங்களின் காரணமாகவே உடல்கள் சேரவில்லை..உடல்கள் சேராததால் உள்ளங்கள் சேர்ந்திருக்கவேண்டிய கட்டாயமும் இல்லை என்றாகிவிட்டது..
 
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
Top