Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 14

Advertisement

Admin

Admin
Member



பகுதி – 14

விஜய்க்கு ஜெனியோடு பேசும் ஆவல் அதிகம் இருந்த போதும்... நேரம்தான் இல்லை. அவன் ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஜெனி கல்லூரியில் இருப்பாள். அதனால் இருவரும் மாலைத்தான் பேசிக் கொள்வார்கள். விஜய்தான் எப்போதும் ஜெனியை அழைப்பான்.

ஜெனி அழைக்கக் கூடாது என்று எல்லாம் நினைக்கவில்லை.... இன்னும் உரிமையுடன் விஜய்யை அவள் பார்க்க ஆரம்பிக்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது... ஒரு நாள் கல்லூரியில் இருந்து ஜெனித் திரும்பி வந்தபோது... லீனா ஒரு ஆல்பத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன ஆல்பம் மா இது?”

“உங்க நிச்சயம் ஆல்பம்தான் ஜெனி. ரொம்ப நல்லா வந்திருக்கு. காபி குடிச்சிட்டு உட்கார்ந்து பாரு...” என்றபடி லீனா சமையல் அறைக்குச் செல்ல...

ஆர்வமில்லாமல் ஜெனி அதை எடுத்து புரட்ட... முதல் பக்கத்திலேயே விஜய்யும் ஜெனியும் சேர்த்து இருந்த புகைப்படம் இருந்தது. அது அவர்கள் இருவரும் நிச்சயத்தன்று கடைசியாக எடுத்த புகைப்படம்.

விஜய் அந்தப் புகைப்படத்தில் முகம் கொள்ளா புன்னகையுடன் நின்றிருந்தான். அவன் கன்னத்துக் குழி கூட அழகாக விழுந்திருந்தது. அவள் அறியாமலேயே ஜெனியின் விரல்கள் விஜய்யின் முகத்தை வருடியது.

அன்றிலிருந்து தினமும் காலை எழுந்ததும் ஒரு முறை... மீண்டும் இரவு படுப்பதற்கு முன் ஒரு முறை என்று அந்த ஆல்பத்தைப் பார்த்து விடுவாள். அதுவும் விஜய் இருக்கும் புகைப்படங்கள் வரை மட்டும்தான் பார்ப்பாள். அந்த அல்பம் அவள் மெத்தையில்தான் இருக்கும். அவள் அதை விஜய்யிடம் சொல்லவில்லை.

அதே போல் இப்போது எல்லாம் அவனின் அழைப்பை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து இருந்தாள். விஜய் எப்போதும் அழைக்கும் வழக்கமான நேரம் தாண்டி விட்டாள். ஏன் அவன் இன்னும் அழைக்கவில்லை? என்று மனம் தவிக்கத்தான் செய்தது. ஆனால் அதை விஜய் அழைக்கும் போது சொல்லமாட்டாள்.

அவளுக்கு மனதிற்குள் குழப்பம். ஏற்கனவே ஒருவரை விரும்பிவிட்டு இப்போது விஜய்யிடம் அப்படிப் பேசுவது சரியா தப்பா என்று புரியவில்லை. விஜய்யை பற்றிய தன் எண்ணங்களை மறைப்பதே ஒரு நாள் அவளுக்குப் பிரச்சனை ஆகப்போகிறது என்றும் அவளுக்குத் தெரியவில்லை.

வசந்தனும் திலோவும் ஒரு முக்கியமான விஷேத்திற்காக கன்யாகுமாரி செல்ல வேண்டியது இருந்தது. ரூபிணி அவர்களுடன் வர மறுத்ததால்.... வீட்டில் வேலை ஆட்கள் துணையோடு ராஜேஷையும் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வசந்தன் கிளம்பி சென்றார்.

வசந்தனின் கீழ் நிறையப் பேர் வேலை பார்த்த போதும், அவருக்கு ஏனோ ராஜேஷை மிகவும் பிடித்தது. ராஜேஷ் அவரிடம் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகப்போகிறது. இருந்தாலும் அவனின் நேர்மையே மற்றவர்ளை விட அவனிடம் அதிகமான நெருக்கத்தை வசந்தனுக்கு ஏற்படுத்தியது.

வசந்தன் நேர்மையானவாரா என்றால் இல்லை... அவரின் காரியம் சாதிக்க அவர் எந்த எல்லைக்கும் செல்வார். அது நியாயமான வழியாக இல்லாத போதும்... அவர் அதற்கு எல்லாம் வருந்துபவர் இல்லை.

B.B.A மட்டும் முடித்திருந்த ராஜேஷுக்கு வேலை ஒன்றும் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை... அப்படியே கிடைத்தாலும் எல்லாம் விற்பனை பிரதிநிதியாகத்தான் கிடைத்தது.

நிறைய இடத்தில் அவர்கள் சொன்ன நேரத்திற்குள் பொருட்களை விற்க முடியாமல் வேலையை விடும்படி ஆனது. ராஜேஷ்க்கு அவ்வளவு பேச்சுச் சாமர்த்தியம் இல்லை. அதோடு அவனுக்குச் சரளமாகப் பொய் பேசவும் வரவில்லை...

ஆறு மாத போராட்டத்திற்குப் பிறகு வசந்தனிடம் வேலைக்குச் சேர்ந்தான். மாதம் ஐந்தாயிரம் சம்பளம். அது தவிர வரும் வாடிக்கையாளரிடம் பேசி அவர்கள் இடம் வாங்கி விட்டால்... அதற்கு தனியாக ஐந்தாயிரம். எத்தனை வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறோமோ... அதற்கு ஏற்ற அளவு பணம் கிடைக்கும்.



மாதம் இவ்வளவுதான் சம்பளம் என்பதை விட... திறமை இருப்பவர்கள் கூடுதலாகச் சம்பாதிக்க முடியும் என்பதால்... ராஜேஷ்க்கு இந்த வேலை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் சேர்ந்த புதிதில் ஒரு இடத்தை விற்கவே அவனுக்குப் பெரும்பாடாக இருக்கும்.
அவனுக்கு வயதோ அனுபவமோ இல்லாததால் நிறையச் சிரமபட்டான். அவனுடன் வேலை பார்ப்பவர்கள் எளிதாக மாதம் நான்கு ஐந்து வாடிக்கையாளர்கள் பிடிக்க... ராஜேஷ்க்கு ஒருவர் கூடக் கிடைக்காமல் சோர்ந்து போனான்.

அப்பொழுது எல்லாம் தன் குடும்பத்தை நினைத்தே... மனதை தேற்றிக் கொள்வான். முதலில் சின்னப் பையன் மாதிரி இருந்த தன் தோற்றத்தை மாற்றினான். பிறகு மற்ற விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கவனித்தான். ஒரு சில மாதங்களில் வாடிக்கையாளர்களை எப்படிப் பேசி கவர வேண்டும் என்று தெரிந்து கொண்டான்.

அதன் பிறகு காலை அலுவலகம் திறக்கும் போதே வந்து விடுவான். வரும் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு இடம் பார்க்க செல்வான். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாகப் பதில் சொல்வான். அவர்கள் என்ன பத்திரம் கேட்டாலும் அலுவலகத்தில் சொல்லி வாங்கித் தருவான்.

சிலர் அதிகாலையில்தான் இடம் பார்க்க வர முடியும் என்பர், சிலர் இரவுதான் வர முடியும் என்பர். ராஜேஷ் அவர்கள் சொல்லும் நேரத்திற்குச் சரியாக வந்து அழைத்துச் செல்வான். இது அலுவலக நேரம் இல்லை என்று மறுக்க மாட்டான். அதனால் அவனால் கூடுதல் வாடிக்கையாளர்களைச் சந்திக்க முடிந்தது. அதில் நிறையப் பேர் இடமும் வாங்கினார்கள். ராஜேஷ்க்கு வருமானமும் ஏறியது.

சீக்கிரம் வீட்டின் கடனை அடைத்து விட்டால்... அவன் அப்பாவின் சம்பளம் நிறையவே மிச்சம் ஆகும் என்பதால்... வரும் வருமானத்தை அப்படியே வீட்டிற்கு வாங்கிய கடனை கட்டினான்.



ஆரம்பம் முதலே ராஜேஷை கவனித்து வந்தார் வசந்தன். முதலில் இவன் தேற மாட்டான் என்று அவர் நினைக்க... ராஜேஷின் இந்தப் புதிய எழுச்சி அவரின் கவனத்தை அவன் மேல் இன்னும் அதிகமாகத் திருப்பியது. எத்தனை வாடிக்கையாளர் வந்தாலும் அலுக்காமல் அவன் அவர்களிடம் பொறுமையாகப் பேசுவதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.

வசந்தன் அந்த அரசியல்வாதியிடம் இருந்து தன் கமிஷனை பணமாக வாங்க மாட்டார். வாங்கும் இடத்தில் அவர் பங்குக்குச் சில இடங்களை எடுத்துக் கொள்வார். பின்பு நன்றாக விலை ஏறும் போது... விற்று விடுவார். அதனால் அவருக்கு அதிக லாபம் கிடைக்கும்.
தொடர்ந்து ராஜேஷின் அயராத உழைப்பை பார்த்தவர், அவனை அழைத்து அவன் குடும்ப விவரம் கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு அவர் பங்கு இடங்களை ராஜேஷை மட்டுமே வாடிக்கையாளர்களைச் சந்தித்து விற்க செய்தார். அதில் அவனுக்கு ஒரு சதவீத கமிஷனும் கொடுத்தார். அதனால் ராஜேஷ்க்கு வருமானம் எகிறியது.

வீட்டை கடனில் இருந்து மீட்டான். வீட்டிற்குத் தேவையான பொருட்களைத் தரமானதாக வாங்கிப் போட்டு அழகு படுத்தினான். தன் அக்காவின் திருமணத்திற்கும் பணம் சேர்த்தான்.

ராஜேஷின் வளர்ச்சியைப் பார்த்துப் பெர்னாண்டஸ் மகிழ்ச்சி அடைந்தார். அதுவே அவரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. பத்தியும் பத்தாமல் சம்பாதிப்பதே அவரை மன அழுத்தத்தில் தள்ளி இருந்தது. ஆனால் இப்போது தன் பிள்ளைகள் இருவருமே சொந்த காலில் நிற்பது... அவரின் சுமைகளைக் குறைக்க.... சந்தோஷமாக வேலைக்குச் சென்று வந்தார். ராஜேஷின் குடும்பம் முன்னேறிக்கொண்டிருக்கிறது .

ரூபிணிக்கு ராஜேஷின் பொறுப்பில் அவளை விட்டுச் சென்றது பிடிக்கவில்லை... அவள் அவனை மதிக்கவும் இல்லை. அன்றும் அதே போல் இரவு அவள் தனியாக எங்கோ வெளியில் கிளம்ப....

“இங்க பாருங்க ரூபினி... நீங்க உங்க அப்பா அம்மா இருக்கும் போது ராத்திரி நேரத்தில தனியா வெளிய போனீங்க சரி.... ஆனா இப்ப நீங்க தனியா போறதை நான் அனுமதிக்க முடியாது.” ரூபிணியைப் பற்றித் தெரிந்ததால் ராஜேஷ் சற்று கடுமையாகவே பேசினான்.

அவனை எரித்து விடுவது போல் பார்த்த ரூபிணி “என் விஷயத்தில தலையிட நீ யாரு?” என்று எடுத்தெறிந்து பேச...
“உங்களை என் பொறுப்பில் உங்க அப்பா விட்டுட்டு போய் இருக்கார். உங்களுக்கு எதாவது ஒண்ணுன்னா அவர் என்னைத் தான் கேள்வி கேட்பார்.”

“உங்களோட நானும் ட்ரைவரும் வருவோம் அதுக்கு இஷ்ட்டமிருந்தா வெளிய போகலாம் இல்லை உள்ள போய்ப் படுங்க... தனியா போகக் கார் கொடுக்க முடியாது.” ராஜேஷ் உறுதியாக மறுக்க...... ரூபிணி கோபமாக அவள் அறைக்குச் சென்றாள். வழியில் இருந்த பொருட்களை எல்லாம் தட்டி விட்டபடி அவள் செல்ல... ராஜேஷ் அதைக் கண்டும் அசையவில்லை... அவன் ஹாலிலேயே படுத்துக் கொண்டான்.

காலை கண் விழித்த விஜய் அன்று மிகவும் உற்சாகமாக இருந்தான். ஏன்னென்றால் அன்று அவன் பிறந்த நாள். ஜெனி எப்படியும் முதல் ஆளாகத் தனக்கு வாழ்த்து சொல்வாள் என்று எதிர்பார்த்தான்.

தனக்குப் பிறந்த நாள் என்று விஜய் சொல்லவில்லை... ஜெனிக்கே தெரிந்திருக்கும் அதனால் அவளே அவனை அழைப்பாள் என்று நினைத்திருந்தான். அவன் அவளைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்து வைத்திருப்பது போல்.... ஜெனியும் தன்னை பற்றி தெரிந்து வைத்திருப்பாள் என்று நினைத்தான்.



நொடிக்கொரு தரம் செல்லை கையில் எடுத்து பார்த்தவன், எட்டு மணி ஆனதும் ஜெனி கல்லூரிக்கு சென்று விடுவாள் என்பதால்... அவனே அவளை அழைத்தான்.

“ஹாய் விஜய் அத்தான்... என்ன இன்னைக்குக் காலையிலேயே போன் பண்ணி இருக்கீங்க?” ஜெனிக்கு விஜய்யின் பிறந்தநாள் என்பது தெரியாது அதனால் அவள் சாதாரணமாகக் கேட்க....

“சும்மா தான்... காலேஜ் கிளம்பிட்டியா...”

“ம்ம்... கிளம்பிட்டேன் அத்தான். நீங்க இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கீங்க ஆச்சர்யமா இருக்கு... இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தான...”

ஜெனியின் பேச்சில் இருந்தே விஜய்க்கு அவளுக்கு இன்று தன் பிறந்தநாள் என்பது தெரியவில்லை என்று புரிந்து கொண்டவன், ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளாமல் “உன்னோட பேசணும் போல இருந்துச்சு... அதனாலதான் கூப்பிட்டேன். சரி நீ காலேஜ் போ... பிறகு பேசுவோம்.” என்று தொடர்பை துண்டிக்க....
என்ன ஆச்சு இவங்களுக்கு? போன் பண்ணிட்டு பேசாமலே வச்சுட்டாங்க என்று குழம்பியபடி ஜெனி கல்லூரிக்கு சென்றாள்.

ஜெனிக்கு தன் பிறந்தநாள் கூடத் தெரியவில்லை என்றதும் விஜய்யின் உற்சாகம் முழுவதும் வடிய... அவன் திரும்பப் படுத்துக் கொண்டான். தூங்கவில்லை.... படுத்து நேரத்தை கடத்தி விட்டு சிறிது நேரம் சென்று எழுந்து குளித்துக் கிளம்பி தன் அன்னை வாங்கிக் கொடுத்த உடை அணிந்து கீழே சென்றான்.

மகனை பார்த்ததும் முகத்தில் புன்னகையுடன் “ஹாப்பிப் பர்த்டே விஜய்... அடுத்தப் பிறந்தநாளுக்கு உன் மனைவியோட இருக்கணும். முடிஞ்சா உன் மகனோட...பிறந்தநாள் கொண்டாடனும்” செல்வராணி வாழ்த்த....

தாயின் வாழ்த்து மனதை குளிர செய்ய.... “பேரன் மட்டும் போதுமா... பேத்தி வேண்டாமா... கவலைப்படாதீங்க ரெண்டு பேருக்கும் ஏற்பாடு பண்ணிடலாம்.” விஜய் கண்சிமிட்டி சொல்ல....

“ஒரு வருஷத்தில ரெண்டு குழந்தையா.....” என்று வாயை பிளந்த ஆரோக்கியராஜ் செல்வராணி அவரை முறைப்பதை பார்த்து எதற்கு வம்பு என்று “உன்னால முடியும் டா மகனே....” என்றார் கையைத் தூக்கி ஆசிர்வத்திப்பது போல்.... விஜய் அவரைப் பார்த்துச் சிரித்தான்.

தாய் தந்தையோடு காலை உணவை உண்டவன், ஹோட்டல் கிளம்பும் முன் “ஜெனிகிட்ட பேசிட்டியா விஜய்...” செல்வராணி கேட்டதும், முகம் மாறாமல் இருக்க விஜய் மிகவும் பாடுபட்டான்.

“பேசிட்டேன் மா... கிளம்புறேன்.” என்றபடி விஜய் அங்கிருந்து வேகமாகச் செல்ல... என்ன இவன் சரியா பதில் சொல்லாம ஓடுறான்.... ஒரு வேலை ஜெனியை பார்க்க முடியலைன்னு பீல் பன்றான்னோ என்று யோசித்தபடி செல்வராணி இருந்தார்.



ஹோட்டலுக்கு வந்த விஜய்யை வரவேற்க அவனின் நண்பர்கள் அங்கே இருந்தார்கள். நண்பர்களைப் பார்ததும் உற்சாகமாக இருப்பதைப் போல் காட்டிக்கொண்டான். மதியம் அவர்களோடு தன் ஹோட்டலில் உணவு அருந்தினான்.

“டேய் இதெல்லாம் ஒரு ட்ரீட்ன்னு நாங்க ஒத்துக்க முடியாது.. நைட் எங்களை டிஸ்கோதேவுக்குக் கூடிட்டு போகணும். நீ இன்னும் உன்னோட மேரேஜ் பிக்ஸ் ஆனதுக்கு ட்ரீட் தரலை... இன்னைக்கு உன்னோட பிறந்த நாள் ரெண்டுத்துக்கும் சேர்த்து தா....” கெவின் கலாட்டா செய்ய...

விஜய்க்கு அங்கெல்லாம் போகவே பிடிக்காது. அதனால் அவன் மறுக்க... கெவின் விடவில்லை... அதோடு மைகேல்லும் வற்புறுத்த... மாலை ஜெனியை பார்க்க செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். இப்போது போக இஷ்ட்டம் இல்லை.... இவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்தவன், அவர்கள் கேட்டதுக்குச் சரி என்றான்.

மாலை வழக்கமாக அழைக்கும் நேரத்தில் விஜய் அழைக்கவில்லை என்றதும் ஜெனிக்கு ஒரு மாதிரி இருந்தது. காலையில வேற போன் பண்ணிட்டு சரியாவே பேசலை.... நாமே போன் பண்ணுவோமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.(நீ இப்படி யோசிச்சிட்டே இரு... அவன்கிட்ட நல்லா வாங்கப் போற...)



அப்போது அவளுக்கு செல்லில் அழைப்பு வர... ஆனந்தமாக அதை பார்த்தவளுக்கு செல்வராணியின் பெயரை பார்க்கவும் சிறிது ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஆனால் உடனேயே தன் தவறை உணர்ந்தவள் போல்... வேகமாக எடுத்து பேசினாள்.



“அத்தை எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா....” ஜெனி விசாரிக்க....



“நல்லா இருக்கேன் டா... பிறகு என்ன விசேஷம்?” விஜய்யின் பிறந்தநாள் பற்றி ஜெனி எதுவும் சொல்வாள் என்று நினைத்து செல்வராணி கேட்க....



“விசேஷமா ஒன்னும் இல்லை அத்தை.” என்று ஜெனி மென்று முழுங்கினாள். அவளுக்கு இது விஜய் அழைக்கும் நேரம் என்று செல்வராணியிடம் சொல்ல முடியாத தவிப்பு.



“அப்புறம் விஜய்க்கு போன் பண்ணி விஷ் பண்ணியா....” என்றதும், ஜெனிக்கு எதற்கு என்று சுத்தமாக புரியவில்லை... இன்னும் எதாவது கடை திறந்திருக்கான்னோ என்றுதான் முதலில் நினைத்தாள்.



“பிறந்தநாள் அதுவுமா எப்படி உன்னை பார்க்க வராம இருக்கான். நான் கூட உன்னை வீட்டுக்கு கூப்பிடலாம்ன்னு இருந்தேன். நீங்க எதாவது பிளான் பண்ணி இருப்பீங்கன்னு நினைச்சேன். விஜய் எதுவும் சொல்லலையா....” என்று செல்வராணி சொன்னதை கேட்ட ஜெனிக்கு ஐயோ ! என்று இருந்தது.



காலையில அதுக்கு தான் போன் பண்ணாங்களா.... ச்ச பர்த்டே கூட தெரியலை... விஷ் பண்ணலைன்னு ரொம்ப பீல் பண்ணி இருப்பாங்களோ.... நான் ஒரு சரியான லூஸு என்று தன்னையே திட்டிக் கொண்டாள். அவள் செல்வராணி பேசியதை எதையுமே கவனிக்கவில்லை....



“என்ன ஆச்சு ஜெனி? பதிலையே காணோம்.” செல்வராணி கேட்க... அவர் என்ன கேட்டார் என்று தெரிந்தால் தானே பதில் சொல்வாள். ஜெனி பதில் சொல்ல முடியாமல் தடுமாற....



“இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? ஓ... இது விஜய் போன் பண்ணும் நேரம் இல்லை.... சரி நான் வைக்கிறேன்.” செல்வராணி சொல்ல...



“பரவாயில்லை அத்தை பேசுங்க... சாரி தப்பா நினைக்காதீங்க.” ஜெனி தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்க....



“எனக்கு கோபம் இல்லை ஜெனி டென்ஷன் ஆகாத... நான் நாளைக்கு பேசுறேன். நீ விஜய்கிட்ட பேசு...” என்று செல்வராணி போன்னை வைக்க... ஜெனி உடனே விஜய்யை அழைத்தாள்.



ஜெனி இன்று தான் அவளாக விஜய்யை அழைக்கிறாள். ஆனால் விஜய் எடுக்கவில்லை. திரும்ப அழைத்து பார்த்தவள் அவன் எடுக்கவில்லை என்றதும், ஹாப்பி பர்த்டே அத்தான், சாரி... எனக்கு தெரியாது என்று மெசேஜ் அனுப்பினாள். விஜய் மெசேஜ் பார்த்தும் பதில் அனுப்பாமல் இருந்தான்.

நேரம் இரவு ஒன்பது மணி. ராஜேஷ் அப்போது தான் அலுவலகத்தில் இருந்து திரும்பி இருந்தான். ரூபிணி அவள் அறையில் இருந்து போன் பேசியபடி வெளியில் வந்தாள்.

“ஹாய் ரியா...”

“.....”

“நேத்துக் கொஞ்சம் உடம்பு முடியலை.... இன்னைக்குத் தான... கண்டிப்பா வரேன்.” ரூபிணி ராஜேஷை பார்த்தபடி சொல்ல... அவன் அவளைக் கண்டுகொள்ளாமல் சாப்பிட அமர்ந்தான்.

ரூபிணி அவனையே பார்த்தபடி இருந்தவள் “நான் வெளிய போகணும்.” என்றாள் விறைப்பாக...

“போகலாம். ஆனா... நான் நேத்துச் சொன்னதுதான் இன்னைக்கும்.” என்றான் ராஜேஷ் அவனும் விட்டுக் கொடுக்காமல்.

ரூபிணி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க... ராஜேஷ் சாப்பிட்டு விட்டு எழுந்து வெளியே செல்ல... ரூபிணி அவனுக்கு முன்பாக விரைந்து சென்று காரின் முன் இருக்கையின் பக்கம் நின்றாள்.

ராஜேஷ்க்கு அவளின் செயல் சிரிப்பை வரவழைக்க... சிரித்தால் அவ்வளவுதான் தொலைந்தோம் என்று நினைத்தவன், சிரிப்பை அடக்கியபடி வடிவேலுவை பார்க்க.. அவர் சென்று காரில் ஏற... ராஜேஷ் பின்னால் அமர்ந்து கொண்டான். ரூபிணி முன்னால் அமர்ந்து கொண்டாள்.

“எங்க மா போகணும்...” என்று வடிவேலு பவ்யமாகக் கேட்டார்... ஏன்னென்றால் அவருக்கு ரூபிணியின் கோபம் அத்துப்படி....


அவரின் கேள்விக்கு ECRல் இருக்கும் டிஸ்கோதேவுக்குச் செல்லும்படி சொன்னவள், காரில் வசதியாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். டிஸ்கோத்தேவுக்கா.... இந்தப் பிசாச நம்ம தலையில கட்டிட்டாங்க. நாம இன்னைக்குத் தூங்கின மாதிரிதான். ராஜேஷ் தன் விதியை நொந்தபடி வந்தான். அங்கே அவனுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி பற்றித் தெரியாமல்.
 
???

அச்சோ ஜெனிக்கு விஜய் bday பற்றி யாரும் சொல்லலையா???
விஜய் ஓவர் ஸீன் போடுறானே ஜெனிக்கிட்ட......

விஜய் andராஜேஷ் ஒரே discotheque க்கு போறங்களா???
 
Last edited:
Top