Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 15 2

Advertisement

Admin

Admin
Member

அதில் இருந்த ஆணி குத்தி விஜய்க்கு ரத்தம் வர... அவன் வலியில் துடிக்க... அதற்குள் மற்றவர்கள் சென்று காரில் ஏற... கார் சீறிப்பாய்ந்தது. எதிரில் வந்த காரை பார்த்த ராஜேஷ் பாதையில் இருந்து விலகி நின்றான்.

காரின் பின்னே வந்த விஜய் ராஜேஷை பார்த்ததும் “அந்தக் காரை விடாத பிடி.” என்று குரல் கொடுத்தான். விஜய் சொன்னதைக் கேட்ட வடிவேலு காரில் அவர்களைப் பின் தொடர... ராஜேஷ் விஜய்யிடம் சென்றான்.

விஜய் தன் வலதுபக்க கையைப் பிடித்துக் கொண்டு நின்றான். ராஜேஷ்க்கு விஜய்யை அங்கே பார்த்தது அதிர்ச்சிதான். ராஜேஷின் தோற்றம் இப்போது வேறுபட்டு இருந்ததால்... விஜய்க்கு அவனை அடையாளம் தெரியவில்லை...

விஜய்யை பார்த்த அதிர்ச்சியில் இருந்த ராஜேஷ் முனங்கள் சத்தம் வருவதைக் கேட்டு திரும்ப... “அங்க பார்க்காதே...” விஜய் எச்சரிப்பதற்குள் ராஜேஷ் பார்க்க கூடாததைப் பார்த்திருந்தான்.
விஜய் ரூபிணியாக ஆடையைச் சரி செய்துகொள்வாள் என்றுதான் காரின் கதவை மூடி இருந்தான். போதையில் இருந்த ரூபிணி அப்படியே மயக்கத்திற்குச் சென்றிருந்தாள்.

ரூபிணி இருந்த கோலத்தைப் பார்த்து ராஜேஷ் அரண்டு விட்டான். “ரூபிணி...” என்ற அவனின் அலறலே... அவனுக்குத் தெரிந்தவள் என்பது விஜய்க்குப் புரிந்தது.

ராஜேஷ்க்கு அவள் அருகில் செல்ல கால்கள் வரவில்லை.... ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் வடிவேலு வந்துவிடுவார். இன்னும் வேறு யாரும் கூட வரலாம் என்று உணர்ந்தவன் விஜய்யை பார்க்க... விஜய் இறுகி போய் நின்றிருந்தான். அவன் ரூபிணியின் பக்கம் பார்க்கவேயில்லை... ராஜேஷ் ரூபிணியின் அருகே சென்று அவள் ஆடைகளைச் சரி செய்தான்.

யாருக்குமே இந்த நிலை வரக்கூடாது. ரூபிணி மயக்கத்தில் இருந்ததால் அவளுக்கு நடந்தது தெரியாது. விஜய்க்கு அவளைப் பார்க்கவே பிடிக்கவில்லை. விட்டால் அவளை இரண்டு அறை அறைந்து விடும் ஆத்திரத்தில் இருந்தான். வேகமாக அவனுடைய காருக்கு சென்றவன், காரில் இருந்த நீரை எடுத்துப் பருகினான்.

ராஜேஷ் ரூபிணியைத் தூக்கிக்கொண்டு வர... அப்போது வடிவேலும் அங்கே வந்தார்.

“அவனுங்களைப் பிடிக்க முடியலை... ஆனா கார் நம்பர் நோட் பண்ணிட்டேன்.” என்றவர் “என்ன ஆச்சு? எதுவும் தப்பு நடந்திடலையே...” என்று கவலையாகக் கேட்க...

ராஜேஷ்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை... அவன் விஜய்யை பார்க்க... விஜய் இல்லை என்பது போல் தலையசைத்தான். அதன் பிறகுதான் ராஜேஷுக்கும், வடிவேலுவுக்கும் நிம்மதி ஆனது. விஜய் நடந்தை சுருக்கமாகச் சொன்னான்.
ராஜேஷ் ரூபிணியைக் காரில் படுக்கவைக்க... “இவங்க எங்க முதலாளியோட பொண்ணு... அவர் ஊரில் இல்லை... வெளிய போகாதன்னு சொன்னா கேட்கலை... நாங்களும் கூட வந்தோம். எங்களை ஏமாத்திட்டு அவங்களோட போய் இப்படி ஆகிடுச்சு.” வடிவேலு வருத்தமாகச் சொல்ல... விஜய் எந்த அக்கறையும் இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.



அவனுக்குத்தான் ரூபிணியை முன்பே தெரியுமே... அவள் விரும்பியே அவர்களுடன் சென்றதை அவனும் பார்த்துக்கொண்டு தானே இருந்தான். இது அவளாக இழுத்துக் கொண்டது என்பதால்... விஜய் அவளிடம் எந்த இரக்கமும் காட்டவில்லை.

விஜய் தன் செல்லை தேட... அது அவனின் பாக்கெட்டில் இல்லை. ராஜேஷ் புரியாமல் அவனைப் பார்க்க... “என்னோட செல் அங்க விழுந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.” சொன்னவன் திரும்பி நடக்க... ராஜேஷும் அவனுடன் சென்றான்.



இருவரும் ஆளுக்கொரு பக்கம் செல்லை தேட... செல் கிடைக்கவில்லை. ராஜேஷ் தன்னுடைய செல்லில் விஜயின் எண்னை அவனிடம் கேட்டு அழுத்த.... அவன் நின்ற இடத்துக்குச் சற்று தள்ளி ரிங்டோன் சத்தம் கேட்டது. ராஜேஷ் ஓடிச்சென்று செல்லை எடுக்க... திரையில் ஜெனி அழகாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நொடி தடுமாறியவன் அடுத்த நொடியே இயல்பாக மாறி... தனக்குப் பின்னால் வந்த விஜய்யிடம் “உங்களோடது...” என்று செல்லை நீட்ட..... “yes, என்னோடது. Thanks.” என்றபடி விஜய் அதைப் பெற்றுக்கொண்டான்.

இருவரும் திரும்பக் கார் இருக்குமிடம் சென்றனர். அப்போது தூரத்தில் ஒரு கார் வருவதைப் பார்த்த விஜய் “நீங்க இங்க இருந்து சீக்கிரம் கிளம்புங்க.” என்றான். அதற்கு மேல் ராஜேஷும் தாமதிக்கவில்லை.... விஜய்க்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து உடனே கிளம்பினான்.

ரூபிணி போதையில் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்ததால்... அவள் விஜய்யை பார்க்கவில்லை. வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் உதவியவனை அவள் தெரிந்துகொள்ளவில்லை. ராஜேஷ்க்கு அவள் தெரிந்துகொள்வதிலும் விருப்பம் இல்லை.

அவனுக்கு வசந்தனை பற்றித் தெரியும். உதவ வந்த விஜய் எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தான். அதனால் வடிவேலுவிடமும் சொல்லிவிட்டான்.

“அவரைப் பத்தி சொல்லாதீங்க. நாமலே பார்த்துக் கூடிட்டு வந்ததா இருக்கட்டும்.” என்றான்.

அவருக்கு விஜய்யின் பெயர் கூடத் தெரியாததால்... அதோடு ராஜேஷ் காரணமில்லாமல் எதுவும் சொல்லமாட்டன் என்பதால் சரி என்றார்.

ராஜேஷ் சென்றதும்தான் விஜய்க்கு அவனின் பெயரை கூடத் தெரிந்துக்கொள்ளவில்லை என்பது நினைவு வந்தது. விஜய் மருத்துவமனை சென்றவன், காயத்திற்கு மருந்திட்டு ஊசி போட்டுக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

தன்னை இந்த நிலையில் தன் அன்னை பார்த்தால் பயந்து விடுவார் என்று சத்தமில்லாமல் கதவை திறந்து தனது அறைக்குச் சென்று... ரத்தக்கறை இருந்த சட்டையைக் கழட்டி அவனே அலசி காயப் போட்டுவிட்டுப் போய்ப் படுத்துவிட்டான்.


ரூபிணியோடு வீட்டிற்கு வந்த ராஜேஷ் அவள் இன்னும் போதை தெளியாமல் இருப்பதைப் பார்த்து, இப்போது அவளிடம் பேசினாலும் பயன் இல்லை என்பதால்... அவளை வீட்டில் வேலை செய்யும் பெண்ணுடன் அவள் அறைக்கு அனுப்பிவிட்டு தானும் உறங்க சென்றான்.

படுத்துவிட்டானே தவிர விஜயால் உறங்க முடியவில்லை... கண் மூடினால் இன்று நடந்ததே நினைவுக்கு வந்தது. அவனும் குடித்து விட்டு ரகளைச் செய்யும் ஆண் பெண் நிறையப் பேரை இதுவரை பார்த்திருக்கிறான். அதனால்தான் அவன் உணவகத்தில் மது வகைகளை அவன் அனுமதிப்பதில்லை... ஆனால் இன்று நடந்தது உச்சகட்டம்.

அந்தப் பெண்ணுக்கு இனியாவது நல்ல புத்தி வந்தால் சரிதான். இன்று நடந்ததை ஒதுக்கிவிட்டு அவன் உறங்க முயல... விடியற்காலையில்தான் அவனால் உறங்க முடிந்தது.

காலையில் கண்விழித்த ரூபிணிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை... ஹோட்டலில் இருந்து தன் நண்பர்களுடன் கிளம்பியது நினைவு இருந்தது. ஆனால் வீடு வந்து சேர்ந்தது பற்றி எதுவும் நினைவு இல்லை...

நண்பர்கள் என்று கயவர்களை நம்பி வந்து பாதி வழியில் அவர்கள் அவளை நாசம் பண்ண பார்த்தது எதுவும் நினைவு இல்லை... போதையில் இருந்தாலும் அவள் பெண்மையைக் காப்பாற்ற அவள் போராடியது கூட ஞாபகம் இல்லை....

ரூபிணி காலை பத்து மணி போல்தான், அவள் அறையில் இருந்து வெளியில் வந்தாள். அதுவரை ராஜேஷும் அலுவலகம் செல்லாமல் அங்கேதான் இருந்தான். ரூபிணி காலை உணவை சாப்பிட்டுக் கொண்டே ராஜேஷை ஜாடையாகப் பார்க்க... அவன் முகம் இறுகி இருந்தது.

அவன் முகத்தில் இருந்து அவளால ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேத்து ரொம்ப நேரம் எனக்காக வெளியே காத்திருந்திருப்பானோ... அதுதான் கோபம் போல... அவன் கோபமா இருந்தா எனக்கு என்ன என்பது போல் அலட்சியமாகச் சாப்பிட்டாள்.

ரூபிணி சாப்பிட்டுவிட்டு அவள் அறைக்குச் செல்ல.... “ஒரு நிமிஷம் உன்னோட பேசணும்.” ராஜேஷ் அவளைத் தடுத்து நிறுத்த... ரூபிணி என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த... ராஜேஷ் அவனுக்கு எதிரில் இருந்த சோபாவை காட்டினான்.


அட்வைஸ் பண்ணப்போறனோ... ரூபிணி வேண்டாவெறுப்பாக ராஜேஷின் எதிரில் உட்கார...

அவளையே சிறிது நேரம் பார்த்த ராஜேஷ் “நேத்து கார்ல யார் கூட வந்த? அவங்க உனக்கு எப்படிப் பழக்கம்?” என்று விசாரிக்க.....
ரூபிணிக்கு எரிச்சலாக இருந்தது. இவன் என்ன என்னை விசாரணை கைதி மாதிரி விசாரிக்கிறான் என்று நினைத்தவள் “எதுக்கு?” என்றாள் அலட்சியமாக....

“போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கணும்.” ராஜேஷ் சாதாரணமாகச் சொல்ல... ரூபிணி திடுக்கிட்டு போய் அவனைப் பார்த்தாள்.

“எதுக்கு இந்த அதிர்ச்சி? பிறகு உன் நண்பர்களுக்கு என்ன விருந்தா வைக்க முடியும். உன்னை ரேப் பண்ணி இருக்காங்க. போலீஸ் கம்ப்ளைன்ட் தான் குடுக்கணும்.” ராஜேஷ் அசராமல் பொய் சொல்ல...

“இல்லை... அப்படியெல்லாம் நடந்திருக்காது.” ரூபிணியின் குரல் கதறலாக வந்தது.

“நேத்து நைட்டே கம்ப்ளைன்ட் குடுத்திருப்பேன். உங்க அப்பா வர்றதுக்காகத் தான் காத்திருக்கேன்.” ராஜேஷ் மேலும் ரூபிணியைக் கலங்கடிக்க... அவள் கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள்.

 
Top