Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa 'We' Talks 6 - Weekend with Writers 2

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Heyyyyyyyyyyyyy Friendsssssss...

I
t was an awesome and lovely experience reading this...hope you all enjoyyy..with our Favorite நீலா மணி @Neela mani

@Neela mani thankssssssssss muchhhhh ma

Letsssss Starttt..!!

1.நீங்கள் ஒரு பேராசியர் by profession... எப்போ எழுதனும்னு தோணிச்சு?



அந்த மாதிரி தப்பான முடிவுக்கு நான் வர காரணம்(LOL) என் பையன் தான். அவன் டென்த் எக்ஸாம் படிக்கும் போது பக்கத்துலயே உக்காந்துக்கணும். அப்போ சும்மா உக்காறாம நான் கதை படிச்சா நீ மட்டும் ஜாலியா இருக்கேன்னு சண்டை போடுவான்.
சோ என்ன பண்றதுன்னு யோசிச்சு கதை எழுத ஆரம்பிச்சேன். அவன் எக்ஸாம் முடிக்கும் போது கதையில கால் வாசி தான் முடிஞ்சது. அதோட அந்த கதைய அப்படியே வெச்சிட்டேன்.
திருப்பி அவன் twelth எக்ஸாம் எழுதும் போது அவனே சொன்னான்.
“அம்மா! இந்த தடவையும் நீ என் பக்கத்துல உக்காந்து கதை எழுது.”
சும்மா உக்காந்து இருக்கிறதுக்கு கதை எழுதறது பெட்டர்ன்னு கதைய கண்டின்யூ பண்ணேன். அப்படி ரெண்டு வருஷம் வெச்சு வெச்சு எழுதின கதை தான் “காதலெனும் தேர்வெழுதி”.

உண்மையில தேர்வெழுதி தான்...இப்படி ஒரு flashback கண்டிப்பா யாருக்கும் இருக்காதுன்னு நினைக்கிறேன்மா..
but very cute to know


2.உங்க மாணவர்களுக்கு நீங்கள் எழுத்தாளர்னு தெரியுமா?

மாணவர்களுக்கு மட்டும் இல்ல என் பிரெண்ட்ஸ்க்கு கூட தெரியாது. என் கூட வேலை செய்யறவங்க யாரும் என் அளவுக்கு கதை படிக்கிறவங்க இல்ல.இது என் பர்சனல் னு வெச்சிட்டேன். நான் கதை எழுதறது என் குடும்பத்தை தவிர அதாவது என் ஹஸ்பண்ட், பையன், அம்மா அப்பா அண்ணா தங்கை தவிர ரிலேடிவேஸ்க்கு கூட தெரியாது. தேவையில்லாத விமர்சனங்கள் எனக்கு பிடிக்கல. சோ...

3.உங்க எழுத்து பயணம்...I mean your first book..to .இதுவரை..

என்னோட பயணம்... அப்படி சொல்லிக்க நான் நிறைய எழுதல. இப்போ எழுதறது 9வது கதை. ஆனா ஒண்ணும் தெரியாம வந்து இங்க நிறைய நல்லதும் கெட்டதும் தெரிஞ்சுகிட்டேன். நிறைய அனுபவங்கள்.

4.எனக்கு ரொம்ப பிடிச்சது ஆஷிக் கத....உங்களுக்கு என்ன பிடிக்கும் உங்கள் கதையில்?

எனக்கு நான் அப்போ எது எழுதறேனோ அது ரொம்ப பிடிக்கும். இல்லனா எனக்கே போர் அடிச்சிரும்.

Same pinchhhh;)

5.உங்களால இதுவரை மறக்கவே முடியாத ஆசிரியர் மற்றும் மாணாக்கர் யார்..? ஏன்?

இரண்டிலும் நிறைய பேர் இருக்காங்க.. எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவங்க என்பதை விட டிசிப்ளின மண்டைல அடிச்சு பதிய வெச்ச அந்த ஆசிரியர்களைநான் எப்பவும் மறக்க மாட்டேன். I am grateful for that forever.
அதே மாதிரி எள்ளுனா எண்ணையா இருக்கிற மாணவர்கள். ஏழ்மையான குடும்பத்துல பிறந்து கஷ்டப்பட்டு வெறியோட உழைச்சு மேல வந்த பசங்க நிறைய இருக்காங்க. அவங்களும் கூட எனக்கு ரோல் மாடல் தான். இந்த சின்ன வயசுலேயே எவ்வளவு மனப்பக்குவம்.

6.கண்டிப்பா ஒரு மாணவிக்கும் ஒரு ஆசிரியைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ....நம்ம டீச்சர்ஸ்கு செஞ்சதால இதை அனுபவிக்கிறோம்னு நினைக்கிற ஜாலி மொமன்ட்...

படிக்கும் போது நான் படிப்பை சீரியசா எடுத்துக்கிட்டதே இல்ல. 7௦% வந்தா போதும்னு கடைசி நேரத்துல படிக்கிறதோட சரி. அப்ப டீச்சர்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. இன்னும் கொஞ்சம் உழைச்சா ஸ்டேட் ரேங்க் கூட வாங்குவேன்னு. அதெல்லாம் கேட்டதே இல்ல. இப்ப ஆசிரியரா ஆன பிறகு ஆர்வம் அதிகமாகி இருக்கு. ஆனா என் பசங்க என்னை மாதிரியே இருக்காங்க. என்ன பண்றது?

;)???? Remembering the poem
Where do all the teachers go

When it’s four o’clock?

Do they live in houses

And do they wash their socks?

Do they wear pyjamas

And do they watch TV?

And do they pick their noses


The same as you and me?

School விட்ட அப்புறம் டீச்சர்ஸ்ஸ்லாம் என்ன செய்வாங்கன்னு ஒரு குட்டி பையனோட கற்பனையா குறும்பா விரியும்..இன்னிக்கு தான் படிச்சேன்....இதுக்கு ரொம்ப பொருந்திடுச்சு..SO sharing few lines...


7.வீட்ல அம்மா...வெளியே டீச்சர்...இங்க ரைட்டர்...பொதுவா நீலாம்மா யார்?


இதெல்லாம் என்னோட ரோல்ஸ்.இது எல்லாத்துலயும் டாப் ப்ரயொரிட்டி அம்மா ரோல் தான். என் பையனுக்கு தான் எப்பவும்முதல் கவனம். டீச்சர் ரோல்ல நான் வேற மாதிரி. படிக்கலைன்னா ரொம்ப கண்டிப்பா இருப்பேன். கெஞ்சியோ ஏமாத்தியோ என் கிட்ட இன்டெர்னல் வாங்க முடியாதுன்னு என் பசங்களுக்கு நல்லா தெரியும். அதனால் மத்த ஆசிரியர்கள் கிட்ட OB அடிக்கிற பசங்க கூட என் கிட்ட ஒழுங்கா வொர்க் பண்ணுவாங்க.
நீலா மனதளவில்அலிஸ்இன் வோண்டேர்லன்ட். சின்ன வயசுல கதை உலகத்துல மூழ்கி ஹாப்பியா இருந்த சின்ன வயசு கீதா. இங்க நான் ரொம்ப ஹாப்பியா, ஜாலியாஇருக்கேன். எனக்கு பிடிச்ச கதை படிக்கிற குரூப்கூட இருக்கிறதுல ரொம்ப சந்தோசம்.
ஆக எனக்குள்ளயும் ஒரு அம்பி, அந்நியன், ரெமோ இருக்கான். அதுல நீலா தான் ரெமோ (J).

:love:

8.உங்களுக்குப் பிடிச்ச ஒரு பிரபலம் கூட ஒரு நாள் இருக்கலாம்னா யார்?...அவங்க இப்ப இல்லனாலும் சொல்லுங்க


வைகை புயல் வடிவேலு. தமிழ்நாட்டின் சிரிப்புக்கு இன்னிக்கி அவர் தான் முக்கிய காரணம்.அவர் இருக்கணும்னு இல்ல. காமெடி பாத்தாலே போதும்.

214

Its meeeeeee SNakeeeeeeeeeeee Babuuuuuuuuuuu

9.உங்க ஊர் பத்தி சொல்லுங்க


புதுச்சேரிஅரோபிந்தோ, மதர், பாரதியார் இப்படி பல ஞானிகள் வாழ்ந்த ஊர். அமைதியான ஊர். நினைச்ச இடத்துக்கு டக்குனு போய்டலாம்.

10.உங்க முழு பெயரே நீலாவா?எனக்கு இது உங்க pen name மாதிரி ஞாபகம்..அப்படி இருந்தால் பெண் பெயர் ப்ளீஸ்.

கீதா நீலாயதாட்சி தான் என் முழு பெயர். நாகப்பட்டினம் தான் எங்க பாட்டியோட ஊர். அதே எனக்கும் வெச்சாங்க. பாட்டி பேர் கூப்பிட முடியாதுன்னு கீதா. Official name கீதா தான்.

wowwwwwww..company ragasiyam கசிஞ்சிடுச்சே...;)

11.எங்களுக்காக சின்னதா ஒரு motivation story or few lines which you got inspired

இதை போஸ்ட் போடணும்னு நினைச்சேன். இந்த சான்ஸ பயன்படுதிக்கறேன். நிஜமான மக்கள் இருக்கும் போது மோடிவேட் பண்ண கதை எதுக்கு?

பெண்கள்தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் சாதிக்கவும் எத்தனையோ தடைகள் இருந்துட்டே இருக்கு. எவ்வளவோசமூக மாற்றங்கள் வந்தும் இன்னும் இந்த விஷயத்தில் மக்களின் மனப்போக்கில் பெரிய முன்னேற்றம் இல்லை.

fbல தான் இவங்கள தெரியும்.அவங்க பேர் பிரதீஷா மணி.வயல்ல வேலை செஞ்சுட்டு மொபைல்ல டைப் பண்ணி கதை போடுறாங்க. எங்கேயோ ஒரு கிராமத்துல பிறந்து சுய சிந்தனையோட ஒரு பொண்ணு பேசறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.ஹமீதா, மல்லிகா இவங்க எல்லாம் என்பிரெண்ட்ஸ். ஹமீதாரொம்ப கன்சர்வேடிவ் குடும்பத்துல பிறந்து கதை எழுதி, பிரசூரம் பண்ற வரைக்கும் வரது அவ்வளவு ஈசி இல்ல. மல்லிகா வீடு, வேலை, சைட் னு மூணு குதிரைல சவாரி பண்ணிட்டு இருக்காங்க. ரெண்டே ரொம்ப கஷ்டம். மூணு என்னும்போது அவங்க எவ்வளவு உழைப்பு போடணும்?இதோடPh.D வேற பண்றாங்க. இதெல்லாம் கூட தன் திறமைய எப்படியாவது வெளிப்படுத்தணும் என்ற வேகம் தான்.
நானும் உங்களை எல்லாம் மாதிரி நிறைய கதைய பாதில விட்டுட்டாங்கன்னு செம கோபத்துல இருக்கேன்.(சந்தடி சாக்குல சொல்லிருவோம் J ஆனா அவங்க கஷ்டம் புரிஞ்சதால வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.)
@Admin ?


இந்த மாதிரி எத்தனையோ சகோதரிகள் இங்க இருக்காங்க. அவங்க எல்லாம் தான் எனக்கு மோடிவேஷன்.
HATS OFF TO YOU ALL HARDWORKING LOVELY LADIES!!!
(என் கதைய அப்புறமா சொல்றேன் வேற எங்கயாவது.)

Reallyyyy appreciable ????
 
11.ரொம்ப பிடிச்ச ஒரு fictional character யாரோடதா கூட. இருக்கலாம்

கார்ட்டூன் கேரக்டர்ஸ். பாபாய். டாம்&ஜெரி. கதையெல்லாம் கொஞ்ச நேரம் நினைவு இருக்கும். அப்புறம் மறந்துடுவேன்.

12.எங்களுக்கு படிக்க பரிந்துரைக்க ஒரு ஐந்து புத்தகம் சொல்லுங்க...

நான் தான் படிப்புல புலின்னு நினைச்சேன் (ஹாஹா கதை படிக்கிறதுல தான். +2 எக்ஸாம் போதே கதை படிச்ச ஆளு நான்).இங்க எல்லோரும் யப்பான்னு பாக்கற அளவு விவரம் தெரிஞ்சு வெச்சிருக்காங்க. நீங்க சொல்லுங்க பா ஒரு அஞ்சு புக்.

அஞ்சு புக் சொல்லிட்டேன் ஓகேவாம்மா... ;) ?

என்னோட recommendations
1.வேடிக்கைப் பார்ப்பவன் - நா. முத்துக்குமார்
2.ஒரு சிறு இசை - வண்ணதாசன்
3.ஜிப்ஸீ - ராஜூமுருகன்
4.வேலையற்றவனின் டயரி - ஜீ.ஆர்.சுரேந்திர நாத்


13.எழுத ஆரம்பிக்கறதை விட அதை தொடருவது கஷ்டம்....என்ன ஊக்கம்‌ கொடுத்து எழுத வைச்சது...இல்ல...யார்?.ஏன்னா ஒரே ஒரு கதை மட்டுமே எழுதியவர்களும் உண்டு...அதனால் கேட்கிறேன்.

கதை எழுதறது மன அழுத்தத்துக்கு நல்ல டைவெர்ஷன். நம்ம வாழ்க்கைய தான் நாம நினைக்கிறபடி நடத்த முடியல. நம்மகேரக்டர்ஸ் லைப்ப நம்ம இஷ்டத்துக்கு டிசைட் பண்ணலாம். அவங்களுக்கு நாம தான் கடவுள். எப்புடி?அரிய வாய்ப்பை நழுவ விடலாமா?

படைப்பதனால் என் பெயர் இறைவன்...- கண்ணதாசன் பாட்டு தான் நினைவில் வருது....செம...பதில்ல்ல்ல்ல்ல்ல்

14.இந்த ஊருக்கு கண்டிப்பா எல்லாரும் போகனும்....எதை சொல்லுவீங்க?பிடிச்ச இடம் உங்க ஊர் தவிர

ரெண்டு இடங்கள்: கேரளால எங்க வேணா. இன்னொன்னு மதுரை. ரெண்டு இடமும் உயிரோட்டமான ஊர் மாதிரிதோணும். ரொம்ப பிடிக்கும்.

15. நீங்கள் காலேஜ்ல செய்த ‌கலாட்டா மற்றும் உங்க ஸ்டுடன்டஸ் உங்களுக்கு செய்த கலாட்டா

காலேஜ்ல படிக்கும் போது நான் ரொம்ப சமத்து பொண்ணு. அதிக பட்சம் கிளாஸ் கட் அடிச்சு அடுத்த ஹவர் டெஸ்ட்க்கு படிச்சது தான் என் தைரியத்தின் உச்சம். ஒரு தடவை காலேஜுக்கு தெரியாம கிளாசே டூருக்கு போய் ப்ரின்சி கிட்ட செம திட்டு வாங்கிருக்கோம்.
என் பசங்களுக்கு எல்லாம் என்கிட்ட ரொம்ப பயம். படிக்கிறவரை அவங்களை மாணவர்களா மட்டுமே நடத்துவேன். படிச்ச பிறகு அவங்க எல்லாம் பிரெண்ட்சா ஆயிடுவாங்க. நான் செய்தது அவங்க நன்மைக்கு என்று புரிஞ்சிட்டாங்க.

அய்யோ.....இதை கூட நான் செஞ்சதில்லை...எங்க போய் சொல்வேன்ன்ன்...
:censored::(

16.இங்க சிலர் உங்களை‌ நீல்ஸ் சொல்லுவாங்க....வேற செல்லப்பெயர் உண்டா?

அப்பா அம்மா மவளேன்னு கூப்பிடுவாங்க. அண்ணா வந்து கீத்து புள்ளன்னு கூப்பிடுவார்.நீல்ஸ், நீல்ஸ்மா, நீலாம்மா,நீல்ஸ்கா,எல்லாமே அன்பின் வெளிப்பாடு தான்.

எனக்கு கீத்துப்புள்ள ரொம்ப பிடிச்சிருக்கே...கீத்து புள்ள........So cute

17.உங்க students nickname வைச்சிருக்காங்களா?

கூகுள் mamJ. நான்self learning ரொம்ப encourage பண்ணுவேன். spoon feed பண்ண பிடிக்காது.அதனால இந்த பேரு.

18.எப்படி time management பண்றீங்க..கொஞ்சம் சொல்லவும்

ரெண்டு ரீசன்ஸ்:
பிடிச்சதை செய்ய டைம் தானே கிடைக்கும். கதை படிக்கவோ எழுதவோ நானே நேரம் எடுத்துப்பேன். அது என் பர்சனல் டைம்.
இன்னொன்னு எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது. எது செஞ்சாலும் அதை சின்சியரா பண்ணுவாங்க. எங்க கிட்ட சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளத்தது. இப்பவும் அப்படி தான்.
வீட்டு வேலைக்கு ஆள் இல்லாம வருஷ கணக்கா சமாளிச்சிருக்கேன்.

19.பிடிச்ச கவிதை ஒன்னு

நான் ரொம்ப கவிதை நூல்கள் படிச்சதில்ல.பாரதியார் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். நல்லதோர் வீணை செய்தே நிறைய யோசிக்க வைக்கும்.


20.தினசரி வேலை தவிர நீங்க செய்ற ஒரு விசயம் என்ன?

வேற என்ன? கண்டிப்பா கதை படிக்கிறது தான்.

21.உங்க கதைகள்ல ஒரு மென்மை உண்டு....அது எப்படி?

வாழ்க்கைல தான் ஆயிரம் டென்ஷன்.துரோகம்.கவலை சோகம்.நிறைய நெகடிவ் vibes.கதையிலயாவது சந்தோசம் இருக்கட்டுமே. எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். ஆனா எழுத வரலியே. சோ ரோமேன்சோட நிறுத்திக்கறேன். feel good ஸ்டோரி. என்னை மாதிரி எல்லாருக்கும் அதானே பிடிக்குது.


22.உங்களோட ஹிட் கதை இதுவரை என்று வாசகர் பார்வையில் சொல்லவும்.

வேறே எதுவும் வேண்டாமே பெண்ணே. என் கதையில் எல்லோருக்கும் கமலினி ரொம்ப பிடிச்சது.

23.இது எல்லாம் உங்க வாசகிஸ் கேட்ட கேள்விகள்


நீலாக்கா உங்க பால்யம் பத்தி சொல்லுங்க.



அவ்வளவு சுவாரசியமா ஒண்ணும் நடக்கல பா.. எனக்கு ஒரு புக் குடுத்தா போதும். நாள் முழுக்க அம்மாவை படுத்த மாட்டேன்.சமத்து பொண்ணு நானு.


உங்களின் hobbies நிறைய படிப்பீர்களா?


படிக்கிறது தான் என் மெயின் ஹாபி. அதைத் தவிர பாடுவேன், smuleல நிறைய ட்ரை பண்ணுவேன்.கவிதை எழுதுவேன். .படம் வரைய பிடிக்கும். handwork chroche, embroidery எல்லாம் கத்துக்கிட்டேன்.


if possible Share a work ma @Neela mani ...multitalented

mallima,sarayu ka,ipo neenga neraya writers singers ah irukangaa doiiii



உங்களுக்கு தண்ணீ காட்டுற டிஷ் எது?


நான் சமையல்ல ரொம்ப ரிஸ்க் எடுக்கறதில்லை. செய்றத ஒழுங்கா செய்யணும். ரொம்ப கஷ்டமான டிஷ்னா வாங்கி சாப்பிடறது என்னை பொருத்தவரைக்கும் பெட்டெர். வீட்டுல இருக்கறவங்கள பழி வாங்க வேற வழிகள் தான் (J).பாவம் இல்லையா அவங்க?(ஆனா என் பையன் என் சமையலுக்கு பெரிய ரசிகன். ரசிச்சு சாப்பிடுவான். என் கணவர் மாதிரி. அவருக்கு அவங்க அம்மா சமையல் தான் பிடிக்கும்)

;)??

ஸ்கூல்ல படிச்ச பெண் தோழிகளோடு இன்னமும் நட்பு இருக்கலாம்...ஆண் நண்பர்கள் friendship maintain ஆகுதா?


படிச்ச ஸ்கூல் பெண்கள் பள்ளி தான். ஆனா இன்ஜினியரிங் படிக்க சேரும்போதே co-ed தானே? நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவங்கள்ள நிறைய பேர் என் well wishers.இப்ப தான் Reunion நடந்தது. அந்த வயசுல விட இப்ப தான் நட்பு இன்னும் இறுகி இருக்கு. வாழ்க்கைஎன்னன்னு தெரியுது இப்ப. இல்லையா?


நீங்க என்ன படிச்சிருக்கீஙக


Ph.D in Computer Scienceand Engineering. ஆனா ஆன்லைன்ல கதை படிக்கலாம்னு ரெண்டு வருஷமா தான் தெரியும்.Useless Research ஹா...ஹா....

ஹாய் பவி, அண்ட் பிரெண்ட்ஸ், என்னை பத்தி நீங்க கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்லிருக்கேன். உங்க கூட கதை ஷேர் பண்ணும்போதோ, chat பண்ணும்போதோ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஏன்னா நாம எல்லாரும் கதை பிரியர்கள். similar interest group.
 
Last edited:
:love: :love: :love:

பையன் 10th 12th எக்ஸாம் எழுத அம்மா காதலெனும் தேர்வெழுதினீங்களா???
அந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும்.......

என் பசங்க என்னை மாதிரியே இருக்காங்க :p:p:p
அது தான் ட்ரெண்ட் போல........

பெண்களின் சாதனை பல தடைகளை தாண்டி தான் வருது........
வீட்டில் தடை இல்லாமல் இருந்தாலே போதும்........
அதுக்கே வழிய காணோம் பலபேருக்கு.......

ரெமோ நீலா :D:D:D
ClH9xtkWIAAf_n8.jpg
 
Last edited:
நல்லதொரு நேர்காணல் ?
கிடைக்கும் நேரத்தில் எங்களுக்கு அருமையான கதைகள் தரீங்க.‌.பாராட்டுக்கள் நீலா?.... உங்கள் கதைல ரொம்ப பிடித்தது ஆஷிக் ❤️??
 
Thank you பவிகுட்டி....நீலா சிஸ் ,நானும் உங்களை google mam என நினைத்தேன்..(விச்சு-kayu கதை)... :D :D உங்களை பற்றி தெரிந்து கொண்டது.... So happy.... Thanks sis...
 
நான் சமையல்ல ரொம்ப ரிஸ்க் எடுக்கறதில்லை.
ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதி‌ரி... :p
(அப்பிடி சொல்லுவீங்கனு நினைச்சேன்)
 
Last edited:
:love: :love: :love:

பையன் 10th 12th எக்ஸாம் எழுத அம்மா காதலெனும் தேர்வெழுதினீங்களா???
அந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும்.......

என் பசங்க என்னை மாதிரியே இருக்காங்க :p:p:p
அது தான் ட்ரெண்ட் போல........

பெண்களின் சாதனை பல தடைகளை தாண்டி தான் வருது........
வீட்டில் தடை இல்லாமல் இருந்தாலே போதும்........
அதுக்கே வழிய காணோம் பலபேருக்கு.......

ரெமோ நீலா :D:D:D
View attachment 215
unga pasanga ungala maari.....neenga endha maari akka..?
 
Top