Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Paarvai!!

Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
130

"பார்வை"
----------------
முன்பொரு வருடம்-

இன்டெர்-கல்லூரிகளுக்கான பெண்கள் Volley Ball போட்டியில் எங்களது ஜூனியர் பெண்கள் விளையாடுகையில், தன்னோட ஆள் "சர்வீஸ்" (அவளும் ஜூனியர்தான்) செய்வதை கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்த என் நண்பனிடம் முன்னே கை ஆட்டி வினவினேன்- "சார் அப்படி என்னத்த ரசிக்கிறீங்க?"

"மச்சி... அவ சர்வீஸ் பண்றப்ப...."

"டேய் டேய் டேய் ... அவ உன் ஆளுடா.. வேணாம்.."

அடச்சீ.. ஒவ்வொரு தடவ அவ சர்வீஸ் பண்றப்பவும் அவ வலது கால் பெருவிரலை மட்டும் மூணுதடவ மடக்கி நீட்டுறா பாரேன்.. என்ன அழகு...! என்றவன் ஜொள்ளிக்கொண்டே மெய்மறந்ததை "கிறுக்குபயபுள்ள" என்றப்போது எண்ணினாலும்,

ஐம்பது மீட்டர் தொலைவில் பெருங்கூட்டம், பேரிரைச்சல், Tight Shirt & ஷார்ட்ஸ்-இல் மேலுங்கீழுமாய் விம்மியெழுந்த சாயாக்கொங்கை பெண்களென்று அனைத்தையும் தாண்டி, பிடித்த பெண்ணின் வெகுசிறு விஷயத்தை ரசித்த அவன் "பார்வை", பின்னாளில் நானெழுதிய புத்தகத்தில் ஒரு Chapter ஆகியதை மறுக்கவியலாது. காரணம்,

"A Designer needs to observe beauty among chaos" எனும் "பார்வை" தியரி. இது Architecture-இல்.

நிதர்சனத்தில்..

"பார்வை" என்பது உலக சுழற்சிக்கே அதியற்புத விஷயம். பாறை உருள்வதை பார்த்து சக்கரமும், ஆப்பிள் விழுவதை பார்த்து Gravity-யும் பிறந்தது, "அறிவுப்பார்வை"யின் விளைவே. "கிறக்கப்பார்வை" காட்டிடுங் காதலியின் முலை வடிவு தெரியும் முந்தானை விலகலை ரசிக்கும் காதலன் பார்வை காதலிலுஞ் சேராது காமத்திலும் சேராது திரியும் தவிப்பில் இருப்பதெல்லாம் "இன்பத்துப்பார்வை" என்று வள்ளுவனும், "கடைக்கண் பார்வைதனை கன்னியர்தம் காட்டிவிட்டால்" என்று பாரதிதாசனும் எழுதியது "பார்வை"யின் வீரியமறிந்து என்றுணர்க.

அறிவியலும் இலக்கியமும் தள்ளிவைத்து கொஞ்சம் இதனை நிஜவாழ்வில் பொருத்துகையில், எரிச்சல்சூழ் புறவுலகில் (I Mean Office, Workplace, Society, Day to day Stress..) நாம் அன்றாடங் காண்பதெல்லாம் அழகாயிராது என்பது சர்வ நிச்சயமாதலால், மாற்றிக்கொள்ள வேண்டியது சூழலை அல்ல, நம் பார்வையை என்பதில் கொஞ்சம் நிச்சயமாய் இருங்கள். I Mean, எது வந்தாலும் வரட்டும், Just Look Positively. உங்கள் மீதான மற்றவர்களின் பார்வையை "மயிராப்போச்சு" என்று அமைதியாய் கடந்து விடுவதில் இருக்கும் நிம்மதியை விட, வேறேதும் பெரிதில்லை.

கடவுளின் மீதான பக்தனின் பார்வை..
கருவின் மீதான தாயின் பார்வை-தன்
உருவின் மீதான நடிகையின் பார்வை..
உலகின் மீதான எனதின் பார்வை-

என்று ஒரு குறிப்பின் கீழேழுத "பார்வை" என்பது கடுகல்ல. முடிவும் தொடக்கமுமற்ற பெருங்கடல் என்பதால் இங்கே நிறுத்துவது சரியென்றாலும், Personally எனக்கு பிடித்த “பார்வை” யாதெனில்,

பசியில் மயங்கியதொரு பள்ளி மாணவியை பார்த்ததும், "படிக்கணும்னு நா தொறந்து வச்ச பள்ளிக்கூடத்துக்கு இப்படி பசியோட புள்ளைங்க வந்தா எப்படி படிக்கும்னேன்? என்று சத்துணவு போட்டான் பாரு என் தலைவன் காமராசன்.. அவனது "வெகுளிப்பார்வை" மட்டுமே!!!

-------------------------
 
Joher

Well-known member
Member
பார்வை 😀
அது பார்க்கும் கண் & மனங்களை பொறுத்தது......
வீட்டைவிட்டு வெளியே வந்தால் பார்வைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் தான்......

கடைக்கண் பார்வை
வசீகர பார்வை
காதல் பார்வை
கண்ணிய பார்வை
இன்னும் பல......
இத்தனை இருக்க வக்கிர பார்வையும் பார்ப்பதை என்ன சொல்ல???
 
Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Excellenttt..!!
Beauty lies in the eyes of beholder... 😍 😍 😍 😍
அடச்சீ.. ஒவ்வொரு தடவ அவ சர்வீஸ் பண்றப்பவும் அவ வலது கால் பெருவிரலை மட்டும் மூணுதடவ மடக்கி நீட்டுறா பாரேன்.. என்ன அழகு...! என்றவன் ஜொள்ளிக்கொண்டே மெய்மறந்ததை "கிறுக்குபயபுள்ள" என்றப்போது எண்ணினாலும்,
:love::love::love:
 
Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
பார்வை 😀
அது பார்க்கும் கண் & மனங்களை பொறுத்தது......
வீட்டைவிட்டு வெளியே வந்தால் பார்வைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் தான்......

கடைக்கண் பார்வை
வசீகர பார்வை
காதல் பார்வை
கண்ணிய பார்வை
இன்னும் பல......
இத்தனை இருக்க வக்கிர பார்வையும் பார்ப்பதை என்ன சொல்ல???
Vakra paarvai enbathu iyarkai vidhitha kodum visham.
 
Sasikalasrinivasan

Well-known member
Member
பார்வைகள் பலவிதம்
மனித எண்ணத்தின் செயல்முறையே பார்வையாக விரியும்

நான் பள்ளியில் 9th படிக்கும் போது எனக்கு தமயந்தி என்று ப்ரண்ட் இருந்தால் அவள் அடிக்கடி சொல்லும் ஒன்று சொல்வாள்
கடுகு எங்கிருக்கு டப்பாவில்
டப்பா எங்கிருக்கு செல்ப்பில்
செல்ப் எங்கிருக்கு கிச்சனில்
கிச்சன் எங்கிருக்கு வீட்டில்
வீடு எங்கிருக்கு --------- தெருவில்(அவங்க தெரு பெயர் எனக்கு ஞாபகமில்லை)
தெரு எங்கிருக்கு ஈரோட்டில்
ஈரோடு எங்கிருக்கு பெரியார் மாவட்டத்தில்
பெரியார் மாவட்டம் எங்கிருக்கு தமிழ்நாட்டில்
தமிழ்நாடு எங்கிருக்கு இந்தியாவில்
இந்தியா எங்கிருக்கு உலகத்தில்

எதற்கு இதை சொல்கிறாய் என்று கேட்டால் கடுகும் உருண்டை தான் உலகமும் உருண்டை தான் ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை பாரு என்பாள்
அந்த வயதில் எனக்கு புரியவில்லை
ஆனால் இப்போது சில சமயங்களில் நினைப்பேன் கடுகிலிருந்து உலகம் வரை அவள் பார்வை மட்டுமல்ல சிந்தனையும் விரிந்து தான் இருந்ததோ நமக்கு தான் புரியலையோனு
 
Excellent vision and reply from you
 
Advertisement

Advertisement

Top