Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai - 7

Advertisement

Krithika Pradeep

Member
Member
மெஹெந்தி நிகழ்ச்சி எல்லாம் நல்ல முறையில் நடந்து முடிந்து விட்டது.

அடுத்த நாள் காலையில் அப்பா , அம்மா வுடன் சீக்கிரமே கோவில் வரவேண்டும் என்ற வேதநாயகி அம்மா-வின் அன்பு வேண்டுகோளுக்கு சரி என்று ஒத்து கொண்டு மது வீட்டுக்கு வந்து விட்டாள் .

வேதநாயகி அம்மா கற்பகாம்பாள்-கோவிலில் வேண்டுதல் வைத்திருந்தார் , யது கல்யாணத்துக்கு ஒத்து கொண்டால் , அவன் கல்யாணம் அங்கே வைப்பேன் என்று . reception தாஜ்-ல் வைத்திருந்தனர் .

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது , யது மாப்பிள்ளையாக பட்டு வேஷ்டியில் வரவும் அவன் அழகையும் கம்பீரத்தையும் பார்த்து அவன் வீட்டில் எல்லாருக்கும் பெருமையாக இருந்தது .

எல்லாரும் கோவில்-கு வந்து விட்டனர் , மது கூட அவள் வீட்டினர் அனைவருடனும் வந்து விட்டாள் .
கீதா வீட்டிலும் அனைவரும் வந்து விட்டனர் .
கீதாவும் அழகுநிலைய பெண் கைவரிசையில் மிகவும் அழகாக இருந்தாள் . அது நல்ல முகுர்த்த நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது . அனாலும் இவர்களுக்கு தனியாக நேரம் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள் .

யது கீதாவுடன் பேசாமல் அவன் நண்பர்களுடனும் , விருந்தாளிகளுடன் பேசி கொண்டு இருந்தான் . கீதாவுக்கு இங்கே மிகவும் கோவமாக இருந்தது .

அவள் கல்யாணத்துக்கு சரி என்று சொன்னதில் இருந்து , யது-வுடன் பேசுவது கம்மி ஆகி விட்டது . அவள் கூப்பிட்டாள் கல்யாண வேலை என்று சீக்கிரம் வைத்து விடுவான்.

கல்யாண செலவுக்கு அவனிடம் லட்ச லட்சமாக கறந்து விட்டாள் . ஒரு தடவை நகை வாங்க போகும் போது கார்டு கொண்டு வர மறந்துவிட்டேன் என்று கிட்டத்தட்ட பதினைந்து லட்சத்துக்கு நகை வாங்கினாள் . இதே போல் இன்னும் செலவு வைத்து கொண்டே இருந்தாள் .
அனாலும் ஏனோ கீதாவிற்கு இந்த கல்யாணத்தில் மனது ஒப்பவே இல்லை . ஏதோ கடமைக்கு பண்ணலாம் என்று நினைத்தாள் ஆனால் இப்பொது ஏதோ தவறான முடிவு போல் தோன்ற ஆரம்பித்து விட்டது .

அவளுடைய lifestyle-கு கல்யாணம் எல்லாம் செட் ஆகாது என்று தோன்றியது , கல்யாணம் fix ஆனதில் இருந்து இவள் எங்கே போனாலும் அவள் அம்மா ஆயிரம் கேள்வி கேட்பார் . இவள் பப் போகிறேன் என்று ஒரு நாள் கிளம்பவும் அவள் அம்மா அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார் . இப்போ வேணாம் அங்கே யாராவது பார்த்தால் கல்யாணத்தில் பிரச்சனை வந்து விடும் . நாம் மும்பை-இல் இருக்கும் போது நீ என்ன செய்தாலும் தெரியாது , அதுவே இங்கே பெரிய பிரச்சனை ஆகி விடும் என்று. கொஞ்ச நாளுக்கே மூச்சு முட்டி விட்டது இதுவே தொடர்ந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை .

தப்பான முடிவு எடுத்து விட்டோமோ என்று ஆயிரம் தடவைக்கு மேல் யோசித்து விட்டாள் . இப்போது கூட ஏதாவது காரணம் கிடைத்தால் தப்பித்து விடலாம் என்று நினைக்கிறாள்.

அவள் அம்மா-விடமும் சொல்லி விட்டாள் , எனக்கு என்னமோ இந்த marriage லைப் செட் ஆகும்-னு தோணல மா என்று . அவள் அம்மா முடிவாக சொல்லிவிட்டார் இனி உனக்கு மார்க்கெட் இருக்குமா இல்லையா என்று தெரியாது. யது நல்ல option . உன் லைப் fulla ஜாலி-ஹ ஷாப்பிங் பண்ணிட்டே இருக்கலாம் . கொஞ்சம் கொஞ்சம் இந்த பப் போறது , பாய் friends ஓட சுத்தறது எல்லாம் கமி பண்ணிக்கோ என்று சொன்னார் .
ஆனால் அவளால் வீட்டுக்குள் ஒரு வாழ்க்கை யோசிக்க முடியவில்லை . யது சொன்னான் தான் அவளுக்கு ஒரு பிசினஸ் செட் பண்ணி கொடுக்கறேன் என்று , ஆனால் அதுவும் அவன் ஆயிரம் கண்டிஷன் போடுவான் என்று கீதாவிற்கு தெரியும் .

அம்மா-வின் பேச்சை கேட்டது தப்பு என்று இப்போது நினைத்தாள் . ஆனால் இப்பொது ஒன்னும் செய்ய முடியாதே .கோவில் வரைக்கும் வந்தாச்சு . கடவுளிடம் வேண்ட ஆரம்பித்து விட்டாள் , ஏதாவது Miracle செய்து கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று .

அவள் வேண்டியது கேட்டு விட்டது போல் கடவுளுக்கு.
அவள் மேனேஜர்-இடம் இருந்து கால் வந்தது , அவள் அம்மா பக்கத்தில் இல்லாததால் உடனே எடுத்துவிட்டால் . அவள் அம்மா பக்கத்தில் இருந்தாள் எடுக்க விட்டிருக்க மாட்டார் .

கால் அட்டென்ட் பண்ண உடனே , எங்க இருக்க கீத் சீக்கிரம் மும்பை வா , அந்த பெரிய சான்ஸ் உனக்கு கிடைத்து விட்டது , பாலிவுட்-ல பெரிய future உனக்கு வந்திருச்சு என்று சொன்னார்.

ஆனால் அதே நேரம் இங்கே பொண்ணு மாப்பிள்ளை-யை கூட்டிட்டு வாங்க என்று ஐயர் சொல்லி கொண்டு இருந்தார்.

கீதாவின் அம்மா , கூப்டுட்டு வரேன் என்று கீதா இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
 
Ithukonjamum gnayamae illa oru padu naal kazhichu supera oru epi koduthu irrukingo, aana athuvum rooooomba kuttya ,suspense vera vitu poona ???v pavam.consider us
 
கீதா escaped எஸ்கேப்புடா?
ஹா ஹா ஹா
அப்போ மதுவந்திதான் யதுவின் மணப்பெண்ணா?
சூப்பர்
 
Last edited:
யதுநந்தனுக்கு கீதா நல்ல மூக்கறுப்பு செய்து விட்டாள்
இவனுக்கு நல்லா நல்லா வேணும்
சும்மா ஒரு டான்ஸை எட்டி பார்த்ததுக்கு மதுவை என்னவெல்லாம் பேசினான்?
யதுவுக்கு லட்ச லட்சமாய் செலவு வைத்த கீதா மட்டும் பெரிய லார்டு லபக்தாஸ்ஸா என்ன?
 
யார் சொன்னாலும் யதுநந்தன் லூசுப் பயலை கல்யாணம் செய்ய நீ ஒத்துக்காதே, மதுக்குட்டி
யார் கேட்டாலும் நோ சொல்லிடு
எவளும் கல்யாணம் பண்ண வராமல் அந்த யதுப் பையன் சாமியாரா போகட்டும்
 
Ithukonjamum gnayamae illa oru padu naal kazhichu supera oru epi koduthu irrukingo, aana athuvum rooooomba kuttya ,suspense vera vitu poona ???v pavam.consider us
Try panrenga but romba work athigama iruku , I would like to give more but situation is not in my favor:( But inaiku oru update kuduthruken konjam perusa , will try to give one more today
 
Top