Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 1 - With our beloved Mallika Manivannan

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Hi friendsss!!???

நேத்து சசி கேட்ட ஒரு கேள்விக்கு நான் சொன்னேன் நான் எப்போவும் surprise செய்வேன்னு...hope you like this surprise of mine.

மல்லிமாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு நேர்காணல்...(இது நேரில் பாரா காணல்..) எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ..

So lets start.....

:love::love::love::love::love:

1.உங்களுக்கு எப்படி கதை எழுதனுனு ஆர்வம் வந்துச்சு at first?

நான் நிறைய கதைகள் வாசிப்பேன். அப்போ தான் ஆன்லைன் ல வாசிக்க ஆரம்பிச்சு இருந்தேன். என் கிட்ட லேப் டேப் கிடையாது. என் கணவர் யூஸ் பண்ற ஆபிஸ் லேப் டேப் தான். எனக்கு ஒன்னு வாங்கிக் கொடுங்க ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்.
என்னவோ அவருக்கு நல்ல மூட் போல உடனே வாங்கிக் கொடுத்துட்டார்
என்னடா இது கேட்ட உடனே வாங்கிக் கொடுத்திட்டார், அப்போ அதை நானும் பிரயோஜனமா யூஸ் பண்ணனும்னு நினைச்சு ஏன் நானும் எழுதக் கூடாதுன்னு தோணி அப்படி ஆரம்பிச்சது தான் எழுத...


2.அப்போ உங்களுக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் யார்மா?

மனதிற்கு இனிமையான எல்லா நாவல்களும் வாசிப்பேன். தேடி படிச்சது RC mam து , அப்புறம் ரா.கி.ரங்கராஜன் , எண்டமூரி வீரேந்த்ரநாத், யத்தனபூடி சுலோச்சனா ராணி.

3.இப்போ பிடிச்சவங்க?

எழுத்தாளர் மாறி கதைகள் நிறைய இருக்கு..

4.குடும்ப நாவல்கள் தவிர்த்து வேற என்ன படிப்பீங்க…inspire செய்த புத்தகம் என்ன?

எனக்கு இந்த குடும்ப நாவல்கள் ன்ற கேட்டகிரி பண்றது பிடிக்கறதில்லை. ஜஸ்ட் அது கதைகள் அவ்வளவே..
பொன்னியின் செல்வன் ,
பரீட்சைக்கு படிக்கற மாதிரி படிச்சிருக்கேன், மாஸ்டர் பீஸ்..

தென் நான் ரொம்ப சின்ன வயசுலயே படிக்க ஆரம்பிச்சிட்டேன் கதைகள் – ஒரு நாலாவது அஞ்சாவது படிக்கும் போதே
ராணி காமிக்ஸ் மாயாவி என்னோட மோஸ்ட் favourite, அவரோட மோதிர கையாள ஒரு குத்து விடும் போது ஒரு
டிசைன் வரும் அது , அப்புறம் அந்த தங்க கடற்கரை.. STILL I REMEMBER...

தென் 007 காமிக்ஸ்

அப்புறம் அம்புலி மாமா , பால மித்ரா , சிறுவர் மலர் இப்படி தான் என்னோட படிக்கற பழக்கம் ஆரம்ப மாச்சு .

5.பிடித்த இசையமைப்பாளர் யார்?

ஒன் அண்ட் ஒன்லி இளையராஜா ?

6. நாங்க ரொம்ப ஆசையா கவனிக்கிற ஒரு விசயம் நீங்க சூஸ் செய்ற பாடல்கள் அதுவும் சங்கீத ஜாதிமுல்லைக்கு அது ரொம்ப ஷ்பெஷலா இருக்கும்….என்னளவில்..எப்படி அது சரியா தோணுது…பொருந்தியும் போகுது?

அந்த டைம் மனசுக்குள்ள தோன்றது தான்.. எனக்கு பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.. கார்ல போகும்போது தான் நிறைய கேட்பேன்..

7.உங்க குடும்பம் என்ன சொன்னாங்க எழுத ஆரம்பிச்சப்போ..?

ஒன்னுமே சொல்லலை அது ஒரு விஷயமே கிடையாது இவங்களுக்கு

8.ஊரே சொன்னாலும் நம்ம குடும்பம் நமக்கு சொல்றது போல ஆகாது..அப்படி உங்க குடும்பத்தில் உங்கள் புக்ஸ் படிப்பாங்களா..?அப்படின்னா எது அவங்களுக்குப் பிடிச்சது?

என்னோட அம்மா – அவங்க தான் முதல்ல
அண்ட் கதை படிக்கிற என்னோட எல்லா சொந்தங்களும் என்னோட புக்ஸ் படிப்பாங்க .
பட் அம்மா அப்படி சூப்பர் ன்னு எல்லாம் எதுவும் சொன்னது இல்லை.
பட் படிக்க நான் வேற புக்ஸ் குடுக்கும் போது, உன்னோடது மாதிரி இல்லை வேற குடு சொல்வாங்க..
அது மட்டுமே அவங்க எனக்கு குடுக்கற காம்ப்ளிமென்ட்

9.எப்படி கதையின் கருவை சூஸ் பண்றீங்க?

தோன்றது தான் எதுவும் ஸ்பெஷல் ஹோம் வொர்க் கிடையாது. எழுதும் ஆரம்பிக்கும் போது ஒன்னும நினைப்பேன். முடிக்கும் போது வேற மாதிரி வரும்.

10. நீங்க எழுதினதில் எது உங்கள் ஃபேவரைட்?

தலைவியின் நாயகன்.. காதல் கொண்டேனே...
 
11.ரியல் லைஃப் நிகழ்வுகள் ஏதேனும் கதையில் இருக்கா..?இனிமையான மெமரீஸ் அப்படி எதாச்சும்..?

இல்லை ஏன்னா என்னை சுத்தி இருக்குறவங்க நிறைய பேர் படிக்கறதால நான் அதை அவாய்ட் பண்ணிடுவேன். எனக்கு தெரிஞ்சு பர்பசிவா நான் எழுதினது இல்லை , ஆனா ஒன்னு ரெண்டு எனக்கு தெரியாம வந்திருக்கலாம்

12.உங்க கதைக்கு முதன்முதலா கமெண்ட் சொன்னது யார்னு நினைவில் இருக்கா..?

கொஞ்சம் கூட ஞாபகமில்லை.. அமுதாஸ் was a wonderful platform..

13.ரொம்ப பிடிச்ச உங்க கதாபாத்திரம்?

ரொம்ப பிடிச்சது வெங்கட ரமணன் கதா பாத்திரம்

14.பிடிக்காததுன்னு இருக்கா?


அண்ட் பிடிக்காதது அப்படி கிடையாது , அவங்களை ஹீரோ வா காமிச்சிட்டு பிடிக்காது சொல்ல முடியாது இல்லையா,


15.ரியல் லைஃப்ல impress ஆகி எழுதிய பாத்திரம் எதாச்சும் இருக்கா..?

நோ அப்படி யாரும் என்னை இம்ப்ரெஸ் பண்ணினது இல்லை in real whom i have met..

13.எந்த கதையை இன்னும் பெட்டரா எழுதி இருக்கலாமேன்னு நீங்க ஃபீல் பண்ணீங்க?

சங்கீத ஜாதி முல்லை இன்னும் நல்லா எழுதியிருக்கலாம் நினைச்சிருக்கேன்
,
14.எது உங்களோட பெஸ்ட் இப்போ வரை?இனிமே சக்தி தான் பெஸ்ட்(சொல்லி வைப்போம்) ? ;)

வீழ்வேனென்று நினைத்தாயோ என்னோட பெஸ்ட்..


15. writing தவிர hobbies ?

எதுவுமே இல்லை அண்ட் writing நிச்சயம் ஹாபி கிடையாது , இது என்னோட passion..
ஆனா நிறைய பாட்டு தானா ஹம் பண்ணிடே இருப்பேன், என் சின்னவன் நல்லா பாடுவான், கர்னாடிக் கத்துக்கறான், என் கிட்ட எப்பவும் கேட்பான் – உனக்கு பாட்டு கத்துக்க ஆசை அதுக்கு தான் என்னை கத்துக்க சொல்றியான்னு . பாட்டு கேட்பேன்றதை விட நிறைய ஹம் பண்ணுவேன்

16.உங்க க்ளோஸ் சிர்கிள்ல உங்க கதைக்கு வந்த funny கமெண்ட்ஸ்

நீங்க என்ன மாதிரி எழுதுவீங்க நான் இன்னும் உங்க கதைகள் படிச்சது இல்லை ன்னு சில பேர் கேட்டிருக்காங்க , அப்போ சிரிப்பு வரும்..
என்னது நான் writer ஆ அப்படி யார் சொன்னா உங்க கிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்காங்க ன்னு சொல்ல தோணும்..

அண்ட் நான் பேசற தமிழ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும், அப்படி நான் சொல்லுவேன் ஆனா நிறைய பேர் ஸ்டைலிஷ் சொல்லுவாங்க
அதனால என்னை நேர்ல தெரிஞ்சவங்க என்ன நீங்க எழுதறீங்களான்னு ஆச்சரியமா கேட்பாங்க, நான் பேசற தமிழ் அவங்களை நம்ப விடாது

17.வரலாற்று புதினம் எழுத ஆசை இருக்கா..?

எஸ் பாஹுபலி பார்த்துட்டு என் பையன் மா நீ ஏன் இப்படி ஒரு கதை எழுதக் கூடாது கேட்டான், அப்போ யோசிச்சேன் பட் ஷேப் பண்ணலை.. ஆனா அவனுக்கு சொன்னேன் இது visual .. இது கதை கிடையாது .. சோ யோசிக்கணும்..

* ஒரு நாயகன் உதயமாகிறான்..(இப்பவே ராஜாவை reserve செய்கிறேன்)

18.பிடித்த நடிகர்? நடிகை?


பெரிய லிஸ்ட் , அமிதாப் பச்சன் , ரஜினி , கமல் , அஜய் தேவ்கன் இப்படி ஆனா first day first show விஜய் , சஞ்சய் தத் அண்ட் நாகார்ஜுன் தான் ,

ஹீரோயின் நிறைய லிஸ்ட் இருக்கு ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவி காஜோல், அனுஷ்கா, கரீனா, ஷ்ரதா கபூர், கைரா லிஸ்ட் பெருசு ...

19.இப்போ உங்களுக்குப் பிடிச்ச ரைட்டர்ஸ்…

.
நிறைய பேர் படிக்கறேன் , இன்பாக்ட் பெரிய ரகசியம் என்னன்னா நான் படிச்ச நேரம் போக தான் எழுதறேன், ஆனா full கதை படிக்க நேரம் கிடையாது. சோ எபி பை எபி தான்..


20.உங்களுக்கு இவங்களை நம்ம லைஃப்ல மீட் பண்ணனும் அப்படி யாராச்சும் உண்டா..?

அப்படி யாரும் இல்லை, சின்ன வயசுல இருந்தே நீ யாரா வேணா இரு எனக்கென்ன attitude தான்.. மே பி என்னோட பெரிய drawback இது. ரொம்பவுமே தனிமை விரும்பி..
 
21. அஸ்வினுக்கு வாழ்க்கை தர சசி ரெடி..நீங்க ரெடியா..?and anand too?

பாசிபிளிட்டி குறைவு தான்:cry:
@SasiDeera


22. ஒரு எழுத்தாளரா உங்களை ஃபீல் குட் செய்ய வைக்கிற விசயம்?

நைட் ஒரு மணிக்கு மேல அப்டேட் போட்டாலும் நான் பர்ஸ்ட் ன்னு வர்ற என்னோட வாசகர்கள் , அது எப்பவுமே ஸ்பெஷல்...

23.உங்க கூட வேலைப்பார்க்கிறவங்களுக்கு நீங்க ரைட்டர்னு தெரியுமா..? உங்க புக்ஸ் படிப்பாங்களாம்மா?

எஸ் என்னோடது என்னோட ஒரிஜினல் ஐடி , எல்லோருக்கும் நான் எழுதறது தெரியும்.. ஒன்னு ரெண்டு பேர் படிப்பாங்க, கதை பத்தி நான் வொர்கிங் ப்ளேஸ்ல பேசறது கிடையாது.. ஆனா யாரும் என்னை பத்தி இன்ட்ரோ குடுக்கும்போது இவங்க ஒரு writer சொல்லுவாங்க...

24.எந்த கதையோ சீனோ உங்களை அழ வைச்சிருக்கா..?எழுதுறப்போ…? because you have made us cry

நிறைய நிறைய.. especially சக்தி in VEN அந்த கண்ணாடி உடைக்கிற சீன் இப்போதைக்கு அது மட்டும் தான் ஞாபகம் வருது..

25.உங்க கதையில எந்த கதை ரொம்ப டைம்ஸ் படிச்சிருக்கீங்க?

காதல் கொண்டேனே அண்ட் கனவே கை சேருமா
(விக்க்ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்) இப்பதான் நிம்மதியா இருக்கு?????? மீ டூ


26.எதையாவது படிக்காம இருந்திருக்கீங்களா?

அப்படி எதுவுமே இல்லை

27.உங்க கணவருக்குப் பிடிச்ச உங்க கதை

ஹ ஹ ஒரு கதை கூட அவர் படிச்சதில்லை, அவர் கதை படிக்க மாட்டார் என்னோடதுன்னு இல்லை யாரோடதும்..

28.உங்க கதையில ரொம்ப பிடிச்ச ஹீரோ

மோஸ்ட்லி ஆல் மை வொர்க்.. நிறைய ஹீரோ material தான்..

29. நீங்க நாயகிஸ்க்கு ஸ்பெஷல்….அப்படி உங்களுக்கு ஸ்பெஷலானா உங்கள் நாயகி யார்?

எல்லோரும் நான் கிரியேட் பண்ணினவங்க தானே.. சோ ஆல்..

30.அப்பா அம்மா உங்க கதைக்கு சொன்ன கமெண்ட்

அப்பா படிக்க மாட்டாங்க , அம்மா படிப்பாங்க ஆனா எதுவும் சொன்னதில்லை , நான் முன்னமே சொன்னது தான் , நான் வேற படிக்க கொடுத்தா உன்னோடது மாதிரி இல்லை ன்னு சொல்லிடுவாங்க


31. எழுதறப்பா யாராச்சும் டிஸ்டர்ப் பண்ணினா…கோவம் வரும்.உங்களுக்கு…நீங்க யாராச்சும் திட்டுவீங்களா..?

ஹ ஹ நான் திட்ட மாட்டேன் ஆனா அவங்க திட்டுவாங்க என் பசங்க என் கணவர் என் அம்மா என் மாமியார் இப்படி
ஏன்னா யார் என்ன சொன்னாலும் காதிலயே விழாது
அதிகம் திட்டுறது என் பசங்க..
என் சின்னவன் வந்து என் கை பிடிசிக்குவான் நான் டைப் பண்ண முடியாம..
அப்புறம் தான் நான் தலை நிமிர்வேன்
உடனே கேட்பான் நான் என்ன சொன்னேன் உன் கிட்ட இப்போன்னு
சத்தியமா எனக்கு தெரியாது
நான் யோசிக்கும் போது இல்லை டைப் பண்ணும் போது யார் என்ன பேசினாலும் தலையாட்டுவேன் ஆனா அது மனசுலயும் பதியாது மூளைளையும் ஏறாது..
சோ நான் திட்ட மாட்டேன்... திட்டு வாங்க தான் செய்வேன்...

very proud of you jazz??

32. நீங்க தனிமை விரும்பி சொன்னீங்க..அப்போ…உங்க க்ளோஸ் ப்ரண்ட்ஸ் யாரு..?


அது ஒரு பெரிய சர்க்கிள்..பெயர் சொல்லி யாரையும் விட விரும்பல.

33. உங்க கதைக்கு அவங்க ரெஸ்பான்ஸ் எப்படி?


அவங்க அதை பெருசா எடுக்க மாட்டாங்க..இங்க ரீடர்ஸ் ரைட்டர்ஸ் சர்க்கிள் உள்ள ப்ரண்ட்ஸ் தான் கதை பத்தி பேசுறது



34.கதை இப்போ ஒரு பத்து வருஷத்தில எழுதினது..சின்ன வயசுல இந்த கவிதை அப்படி இப்படி

தமிழ்ல எழுதினது இல்ல..ஹிந்தியில எழுதி இருக்கேன்..



35.வாட்..ஹிந்தியா…சூப்பர்..கவிதை எழுதற அளவுக்கா?

எஸ்…ஹிந்தி என்னால உணர முடியும்.

Ok.....happiee birthdayyy
@Admin ???
thanks for cooperating amidst your busy day for me and us.
 
Last edited:
ரொம்ப நாளா இப்படி செய்யனும்னு நான் ஹமீம்மாட்ட சொல்லிட்டு இருந்தேன்..
but yesterday இங்க நான் thread start செய்யவும்... நாளைக்கு மல்லிமா பர்த்டேன்றதாலயேயும் அவங்கட்ட கேட்டேன்.
she readily agreed and it all happened.

hope you all enjoy...

thanksssssssss all..!!
??

என்னோட surprise பிடிச்சதா சொல்லுங்க
 
Last edited:
ரொம்ப நாளா இப்படி செய்யனும்னு நான் ஹமீம்மாட்ட சொல்லிட்டு இருந்தேன்..
but yesterday இங்க நான் thread start செய்யவும்... நாளைக்கு மல்லிமா பர்த்டேன்றதாலயேயும் அவங்கட்ட கேட்டேன்.
she readily agreed and it all happened.

hope you all enjoy...

thanksssssssss all..!!
??

என்னோட surprise பிடிச்சதா சொல்லுங்க
சூப்பர் பவி
 
Top