Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 2 - Diwali Specials

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் friendssss..

Here comes the another episode with our sweet laddu akka...for this Diwali..

Thanks much laddu ka for you courteous response @Latha Baiju :love::love::love:
இந்த தீபாவளி விசேஷத்துலயும் நான் கேட்டேன்னு எனக்காக டைம்...எஸ் உங்களுக்காகவும் தான் friendss.
டைம் ஒதுக்கி பதில் சொன்ன லட்டுக்காகவுக்கு மீண்டும் thankssss
s?

கேள்விகள் எல்லாம் red ல இருக்கும்...அக்கா சொன்னதெல்லாம் ப்ளாக்...no confusion.

Lets Starttttttttttt...!!!


Hi Pavi,
.
Thanks for the lovely chance and advance diwali wishes maa...

எல்லாருக்கும் வணக்கம்... பேட்டி காணும் அளவுக்கு நான் ஒரு எழுத்தாளரா வளரலைன்னாலும் என்னை மதிச்சு பேட்டி கேட்ட நட்புக்கு வேண்டி என்னைப் பற்றிய விஷயங்களை இங்கே பகிர்ந்துக்கறேன்...


1.ஒரு மலையாளியா இருந்துட்டு எப்படிக்கா தமிழ்ல கதை எழுத ஆர்வம் வந்துச்சு...? ஸ்கூல்ல என்ன படிச்சீங்க...?

நான் மலையாளியா இருந்தாலும் பிறந்து வளர்ந்தது, படிச்சது தமிழ் தான்... மலையாளத் தாயின் வயிற்றில் பிறந்து தமிழ்த் தாயின் மடியில் வளர்ந்தவள்... எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே தமிழ் தான் ரொம்ப பிடிக்கும்... அந்த ஆர்வம் தான் பின்னால கவிதை, கதைன்னு உருமாறி இருக்கும்னு நினைக்கறேன்...

2.உங்க முதல் கதை எழுதிய அனுபவம் எங்க கூட ஷேர் பண்றீங்களா...? how it all happened?

முதல் கதை அபூர்வ ராகங்கள்... இணையத்தில் நிறைய கதை படிப்பேன்... எல்லாக் கதைக்கும் ரெகுலர் கமண்ட்ஸ் கொடுப்பேன்... அந்த கமண்ட்ஸ் நிறைய பேருக்கு பிடிச்சிருந்துச்சு... அது கவிதை போல இருக்கு, அழகா கமன்ட் பண்ணறே... நீயே ஏன் ஒரு கதை எழுத முயற்சி பண்ணக் கூடாதுன்னு என் நட்புகள் தான் எனக்குள் ஒரு தூண்டுதலைக் கொடுத்தாங்க... அவங்க வார்த்தையை நம்பி அரைகுறையா யோசிச்சு திக்கித் திணறி எழுதி முடிச்ச கதை தான் முதல் கதை... ஆனா சின்சியரா ஆசையா எழுதுவேன்... கதையும் அதில் வரும் கவிதையும் நிறைய பேருக்கு பிடிச்சுது... நிறைய கமண்ட்ஸ் வந்துச்சு... சந்தோஷமா இருந்துச்சு... சோ கதையில் கவிதையை என் ஸ்டைலா வச்சுகிட்டேன்... இப்பவும் பாலோ பண்ணறேன்...

3.உங்க கதையை வீட்ல யார் படிப்பாங்க...? என்ன சொல்வாங்க...அக்கா..?

என் வீட்டுல என் கதையை யாருமே படிச்சதில்லை... என் கணவருக்கு தமிழ் கொஞ்சம் திக்கித்திணறி தான் படிக்க வரும்... ஆனா ஒரு கதை மனசுல வந்துச்சுன்னா அதை என் கணவர்கிட்டயும், மகள் கிட்டயும் டிஸ்கஸ் பண்ணுவேன்... அவங்களுக்கு தோணின மாற்றங்களை, கருத்துகளை அவங்க சொல்லுவாங்க... அது எனக்கும் பிடிச்சிருந்தா கதைக்குள் கொண்டு வந்திருவேன்... என் தம்பி மனைவி, அவங்க குடும்பத்தில் உள்ளவங்க கதை படிச்சு நல்லாருக்கு, கவிதை படிக்காத எங்களையும் கவிதை படிக்க வச்சுட்டேன்னு சொல்லுவாங்க...

4.எங்களுக்கு நீங்க லட்டு..? வீட்ல எப்படி கூப்பிடுவாங்க...?

என் ஸ்கூல் பிரண்ட்ஸ் தான் என்னை லட்டுன்னு கூப்பிடத் தொடங்கினாங்க... அது இங்கேயும் தொடர்கிறது... என் கணவர் எப்பவாச்சும் லதக்குட்டின்னு கூப்பிடுவார்... பிறந்த வீட்டுல செல்லப் பேர் எதுவும் இல்லை...

5.அப்புறம் உங்க ஸ்மைல் ரொம்ப பிடிக்கும் எனக்கு.... நம்ம சைட் நதியா நீங்க...? எப்படி இப்படி maintain பண்றீங்க..?

புன்னகை எனக்கு கிடைத்த வரம்... எத்தனை வருத்தங்கள், வேதனைகள், பிரச்சனைகள் இருந்தாலும் வெளியே காட்டிக்காம என்னைக் காக்கும் முகமூடின்னே சொல்லலாம்... எந்தப் பிரச்சனை வந்தாலும் அது வழியில விட்டிருவேன்... அதுக்காக ரொம்பவும் அலட்டிக்க மாட்டேன்... சந்தோஷம், துக்கம், பிரச்சனை எல்லாமே கலந்தது தானே வாழ்க்கை... அதன் வழியில போயி அனுபவிச்சு என்ஜாய் பண்ணுவோம்னு நினைச்சுப்பேன்... போட்டி, பொறாமை, வம்பு பேசுறது... தேவையில்லாத பிரச்சனையில் தலையிடறதுன்னு எதுக்கும் நிற்க மாட்டேன்... மனசுல தேவையில்லாத குப்பைகளை சேர்த்துக்காததும் நான் எப்பவும் பிரஷா இருக்க ஒரு காரணமா இருக்கலாம்... (அப்புறம் நதியான்னு சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் மா... பொய்யா இருந்தாலும் கேக்க நல்லாருக்கு... ஹஹா...)

6.நிறைய கவிதை இருக்கும் உங்க கதையில...? முதன் முதல்ல எழுதினது கதையா கவிதையா?

கவிதை தான் முதல்ல எழுதினேன்... எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் ரசனையோட நளினமா சொன்னா அதை கவிதைன்னு நட்புகள் சொன்னாங்க... அதை இன்னும் மெருகேற்றி கவிதையாவே எழுத முயற்சி பண்ணினேன்...

7. கதை கவிதைல எது உங்களுக்குப் பிடித்தம்?

கவிதை எழுதப் பிடிக்கும்... கதை படிக்கப் பிடிக்கும்...

8.கதை தவிர வேற என்ன செய்வீங்க..?any passion..?hobbies?

கதை தவிர புக்ஸ் படிப்பேன் டீவி பார்ப்பேன்... டான்ஸ் பிடிக்கும்... (இப்போ ஆடுறது இல்ல...)

9. உங்க கதையில பிடிச்ச கதை எதுக்கா?

எல்லாக் கதையும் பிடிச்சு தான் எழுதறோம்... இருந்தாலும் இதயமே இதயமே... உயிர் சுமந்த உறவே... நெஞ்சமெல்லாம் காதல், பிரம்மனின் பனித்துளி ரொம்ப பிடிக்கும்...

10.. தீபாவளி இஸ் coming.. லட்டுக்கு லட்டு வருமா..? இல்ல வேற என்ன ஸ்பெஷல் செய்வீங்க..?

ஹாஹா.... லட்டுக்கு லட்டு வராது... ஆனா, மைசூர் பாக், குலோப் ஜாமூன், கார பூந்தி, மைதா பிஸ்கட் செய்வேன்...

11.உங்க கதைக்கு வந்த முதல் கமெண்ட்.... நபர்.. யார்னு நினைவில இருக்கா?

என் தோழி சுமதி சேகர் தான் என் முதல் கதைக்கு கமண்ட் பண்ணது... அவதான் என்னை மேலும் அடுத்தடுத்து கதைகள் எழுத தூண்டுதலா இருந்தா... அடுத்தது சாரதா... மனசுல தோணினதை ரெண்டு பேருமே அப்படியே சொல்லிருவாங்க... இவ்ளோ பெருசா கதைய கொண்டு போகாதே... இப்படி சொல்லிருக்கலாம்னு அபிப்ராயமும் சொல்லுவாங்க...

12.ஸ்பெஷல் moment of your writing career

முதல் கதை புத்தகமா வந்தப்போ வாசகர் உலகம் நடத்தின எழுத்தாளர், வாசகர் சங்கமம் விழாவில் நானும் விருந்தினரா கலந்துகிட்டேன்... அதில் முத்துலட்சுமி ராகவன் மேடம் தான் முக்கிய விருந்தினரா வந்திருந்தாங்க... நிறைய வாசகர்கள் வந்திருந்தாங்க... என்னையும் ஒரு கதாசிரியரா மதிச்சு அவங்க ஆட்டோகிராப் வாங்கி கதை பத்தின அபிப்ராயம் சொன்னாங்க... ஒரு கதை எழுதினதுமே நமக்கு இப்படி ஒரு வாய்ப்பான்னு சந்தோஷமா இருந்துச்சு... மறக்க முடியாத நிகழ்ச்சி...

13.உங்க ஃபேமிலி பத்தி...few words

கணவர் பைஜூ கேரள அரசுப் பணியில் இருக்கிறார்... இரண்டு குழந்தைகள்... மகள் ஆதர்ஷா மூன்றாம் ஆண்டு BSc IT படிக்கிறாள்... மகன் அபிஜெய் பதினொன்றாம் வகுப்பில் படிக்கிறான்...

14. பிடிச்ச கதாசிரியர் யாரு உங்களுக்கு....வேற என்ன மாதிரி கதைகள் படிப்பீங்கக்கா?

பிடிச்ச கதாசிரியர் நிறையப் பேர் இருக்காங்க... வாசிக்கத் தொடங்கிய சமயத்தில் லட்சுமி, தேவி பாலா, அனுராதா ரமணன், ராஜேஷ் குமார், பட்டுக் கோட்டை பிரபாகர் பிடிக்கும்... அடுத்து ரமணிம்மா பிடிக்கும்... இப்ப எழுதிட்டிருக்கிற நிறையப் பேரை பிடிக்கும்... கிரைம் நாவல், வரலாற்றுக் கதைகள் விரும்பிப் படிப்பேன்...

15. எப்ப அப்டேட்டோ கதையோ எழுதினாலும் இவங்க அதை படிக்கலன்னா எனக்கு complete ஆன ஃபீல் இல்லன்னு நீங்க நினைக்கிற ஆள் யாரு..? may be your family or friendss...யார்னாலும்? readers எல்லாரும்னு சொல்லி எஸ் ஆகக் கூடாது.

என் நட்புகள் கலை, கிருத்திகா... இவங்க படிச்சு சொன்னா தான் எனக்கும் திருப்தியா பீல் பண்ணுவேன்....

16.உங்க நட்பு வட்டம் பத்தி

ஸ்கூல்ல பஞ்ச பாண்டவிகளா தொடங்கின நட்பு இப்ப கல்யாணம் குடும்பம் குழந்தைகள் னு வேற சூழ்நிலைக்கு மாறினாலும் நான் ரசிச்ச எப்பவும் நினைத்துப் பார்க்கும் நட்புகள்... முகநூலில் எல்லாருமே பொதுவான நட்புகள் என்றாலும் எல்லாருடனும் என்னால் நெருங்கிப் பழக முடிவதில்லை... என்னைப் புரிந்து கொண்ட, நான் விரும்பும், என்னை விரும்பும் நட்புகள் சிலர் மட்டுமே என் நட்பு வட்டத்தில் உள்ளனர்...

17.மதர் டங்க்ல கதை எழுத ஆசை இருக்கா... சேச்சிக்கு மலையாளம்ல எழுத வருமோ...?

மலையாளம் எழுத படிக்க வரும்... ஆனா யோசிக்க வராது... நம்ம மனசுல தோணும் கற்பனைக்கு வார்த்தை வடிவம் கொடுக்கையில் அது தமிழ்ல தான் வரும்... அதனால அந்த ஆசை இல்லை...

18.வைக்கம் முகமது பஷீர் புக்ஸ் படிச்சிருக்கீங்களா..?

படிச்சது இல்லை...


19.மோகன்லால் பிடிக்குமா...மம்மூட்டி பிடிக்குமா...? இல்ல வேற சாய்ஸ்...?

இரண்டு பேரையும் பிடிக்கும்... இவங்க தான்னு இல்லாம யாரா இருந்தாலும் நல்லா நடிச்சாப் பிடிக்கும்... சினிமாவுல மட்டும்...

20. நான் மலையாளப்பாட்டு நிறைய கேட்பேன்... நீங்கக்கா...? அப்படின்னா எந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்..?

நான் தமிழ் பாட்டு தான் அதிகம் கேட்பேன்... ஆனா, 90s ல வந்த மலையாளப் பாட்டுகள் பிடிக்கும்... இந்த பாட்டுன்னு சொல்ல முடியாத அளவுக்கு நிறையப் பாட்டுகள் பிடிக்கும்...


எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்... என்னையும் ஒரு எழுத்தாளரா அங்கீகரித்து பேட்டி கண்ட பவிக்குட்டிக்கு என் பிரியங்களும் நன்றியும்... தீபாவளி நல்வாழ்த்துகளும்...

thankssssssssssssss for such a lovely response akka...

Hope you enjoy friendsssss....
Advance Diwali wishes to you all..!!
?
 
Last edited:
லதா பைஜூவுடன் பேட்டி ரொம்ப நல்லாயிருக்கு பவித்ரா டியர்
எனக்கு பிடித்த லதா டியரைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்ப்பா
 
Top