Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 3- Diwali Specials 2

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Heyyyyyyyyyyyyyyy friendssssssssssss..?

It was such a nice session with @Sarayu akka...thanksssssssssssss much ka.:love::love::love:

Lets Starttttttttt..!!



Red ல இருக்கது என் கேள்வி...Black அக்காவின் பதில்...purple என்னோட comments...italics ல இருக்கும்...ஸ்மைலில்லாம் நான் போட்டது தான்..

1.ஃப்ர்ஸ்ட் கதை எப்போ எழுத ஆரம்பிச்சீங்கக்கா...யார்ட்ட முதல்ல சொன்னீங்க..?

Ans : 2014 ஆகஸ்ட் மாசம்.. யார்கிட்டயும் சொல்லவே இல்லை.. எழுத ஆரம்பிச்சு ஒருவாரம் கழிச்சு தான் வீட்ல சொன்னேன்.. அப்போ யாரும் அதை பெருசா எடுக்கல... அம்மா மட்டும் ஒரு லுக் விட்டாங்க...

2.உங்க வீட்ல எல்லாரும் படிச்சு என்ன சொல்வாங்க...?

Ans: என்னோட பாட்டி தான் எப்பவும் புக் வந்ததுமே படிப்பாங்க.. எங்க வீட்ல எல்லாருமே படிக்கிற பழக்கம் உண்டு.. கதைன்னு இல்லை.. எல்லாமே படிப்பாங்க.. ஆனா என்னோட கதை முதல்ல புத்தகமா வந்தப்போ பாட்டி தான் முதல்ல படிச்சாங்க.. சித்தி பெரிம்மா தங்கச்சிங்க அண்ணி அக்காஸ் எல்லாமே என்னோட கதைகள் படிப்பாங்க.. அம்மா மட்டும் வெரி ரேர்.... அவங்க படிச்சது சோலை மலரே மட்டும் தான்..

பாட்டி எங்கப்பாக்கிட்ட சொன்னது – பரவாயில்ல நல்லா திறமையா இருக்கா..

சித்தி அக்கா அண்ணி இவங்கல்லாம் – இதெல்லாம் எப்படி நீ யோசிப்ப, எப்படி உனக்கு இதெல்லாம் எழுத தோணுது இப்படின்னு கேட்பாங்க..

3. ஆனந்த பூந்தோரணம்.... நான் இனி நீ....இப்படி பாட்டு டைட்டில்ஸ் வைக்கிறீங்க...பாட்டு ரொம்ப பிடிக்குமா..?பாடுவீங்களா..?

Ans : எஸ்.. பாட்டு ரொம்ப பிடிக்கும்.. ஹம் பண்ணிட்டே இருப்பேன்.. ஏதாவது.. ஒரு சில வரிகள் பிடிக்கும் அப்படிங்கறதுக்காகவே, சில பாடல்கள் தேடி தேடி கேட்டிருக்கேன்..

பாட்டு கிளாஸ் போனேன்.. கொஞ்ச நாள்.. என்னோட PG அப்போ.. ஆனா என்னோட முதல் குரு என் அம்மா பாட்டி.. அவங்க செமைய பாடுவாங்க.. ஆர்மோனியம் வாசிப்பாங்க.. முதல்ல ஸ்வரம் சொல்லிக்கொடுத்தது அவங்க தான்..??

Wowiieee super akka..

“நீ பாடினா லேசா நெஞ்சு வலிக்கிறவனுக்கு கூட நெறைய நெஞ்சு வலி வந்திடும்...” இப்படி சொல்லி அம்மா அடிக்கடி கிண்டல் செய்வாங்க என்னை.. ஆனாலும் நான் பாடுவேன்..???

4.சரயு பத்தி சில வார்த்தைகள்...


Ans : ம்ம்.... சரயு.... ரொம்ப இயல்பான பொண்ணு தான் நான்.. கோபம் வந்தா கத்துவேன்.. சந்தோசமா இருந்தா பாடுவேன்.. சிரிப்பேன் எல்லாம்.. வீட்ல ஐம் free bird.. but i know my limits.. அதனாலேயே பொதுவா என்னை கேள்வி கேட்கமாட்டாங்க வீட்ல.. i love peoples.. எல்லாரோடவும் கலந்து பழகனும்னு எப்பவும் நினைப்பேன்.. இதுக்கு மேல சரயு பத்தி என்ன சொல்றது தெரியலை.. மே பீ இந்த கேள்வி என் பிரண்ட்ஸ் கிட்ட கேட்டா பக்கம் பக்கமா சொல்வாங்க... ஹா ஹா...

5.you own a coffee brand right..?உங்களுக்கு காஃபி பிடிக்குமா..?இதை ஏன் கேட்கிறேன்னா பிஸீனஸ் செஞ்சா அது சாப்பிடனும்னு need இல்லை இல்லையா..?அதான்..?காபி போடுவீங்களா..?

Ans : எஸ் சரயு’ஸ் காபி... பேர்ல மட்டும் தான் என் பேர்.. ஆனா முழுக்க முழுக்க இது என் அப்பாவோடது.. நான் ஜஸ்ட் என் பிரண்ட்ஸ் சர்கிள்ள ப்ரொமோட் பண்ணேன் அவ்வளோதான்.. கிட்டத்தட்ட 80 வருசத்துக்கும் மேலா சொந்தமா காபி தோட்டம்.. இது மட்டும் தான் எங்களுக்குத் தெரிந்த விவசாயம்.

காலைல எழுந்ததும் காபி குடிச்சிட்டு தான் வேற எந்த வேலைன்னாலும்.. சின்ன பிள்ளைல இட்லிக்கு தோசைக்கு காபி ஊத்தி சாப்பிட ஆளு நானு.. ஹி.. ஹி..

வெறித்தனம்...?( நானே பரவாயில்ல....)

6.எழுத்துன்ற விஷயம் எப்போ தொடங்கிச்சு....கதைன்னு இல்ல.any form...?

Ans : எழுத்து... ஹ்ம்ம்.. பொதுவா எனக்கு மனப்பாடம் செஞ்சு எழுத வராது.. அப்போ தன்னப்போல என்ன எழுத வரும் சொந்தமா தானே.. புரிஞ்சு படிச்சு நானா எழுதிப்பேன்.. அது தான் ஆரம்பம்.. அப்புறம் கவிதைகள்.. லேசா கிறுக்க ஆரம்பிச்சேன்.. இப்பவும் அந்த கிறுக்கல்கள் எப்போவாது நடக்கும்..

7.'அப்புறம் உங்க கதா நாயகன்ல யார் உங்க favorite


Ans : என்னோட ஹீரோஸ்ல favo அப்படின்னு சொல்லனும்னா கண்டிப்பா கதிரவன் – மீண்டும் மீண்டும் உன் நினைவுகள் கதை நாயகன்.. முதல் கதை இல்லையா.. சோ எப்பவும் கதிர் சொஞ்சம் ஸ்பெசல் தான்..

ஆனாலும் மத்த எல்லா ஹீரோசும் என்னோட படைப்பு தானே எல்லாருமே favo தான்..

8.உங்க கனவு நாயகனோட பிம்பம்ல இருக்க உங்க கதா நாயகன் யாராவது உண்டா?

Ans: கனவு நாயகன்... ம்ம்ம்.. ஒரு ஹீரோவ மட்டும் பர்ட்டிகுலரா சொல்லிட முடியாது.. எல்லா ஹீரோஸ் குள்ளேயும் என்னோட கனவு நாயகன் பிம்பம் இருக்கும்..

மனம் நிறைவாய் வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள் க்கா...

9.பெஸ்ட் ஆஃப் சரயுன்னு நீங்க நினைக்கிற கதை எது..?

Ans : சோலை மலரே... ஏன்னா இந்த ஒரு கதை மட்டும் தான் நான் என்ன நினைச்சு எழுத ஆரம்பிச்சேனோ அதுபடி இருந்தது..

10.உங்களோட favorite past memories?

Ans : ஸ்கூல் டேஸ்.. ஸ்கூல் பிரண்ட்ஸ்.. lkgல ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் ஒரே கேங்..

11.உங்க பொழுது போக்கு என்னக்கா?

Ans : ஹா ஹா பொழுது போக்கா... நான் கொஞ்சம் யோசிக்கிறேன்.. என்ன சொல்லலாம்னு...

இதுல கொஞ்சம் நானே என்னை பைத்தியம்னு சொல்லிப்பேன்.. ஒரே ஒரு விசயம்னு குறிப்பிட்டு இதுதான்னு சொல்லவே முடியாது.. அப்படி..

12.நீங்க சமீபத்தில் வாசித்த காதல் அல்லாத வேற ஜானர் கதையோ இல்ல....புத்தகமோ எது.?

Ans : சமீபம்னு இல்லை.. எனக்கு மனசுல பதிஞ்ச வேறு ஜானர் சொல்றேன்.. மதன் அவர்களோட மனிதனுக்குள் மிருகம், மனிதனும் மர்மங்களும்.. அப்புறம் வந்தார்கள் வென்றார்கள்.. அப்புறம் இப்போ படிச்சிட்டு இருக்கிறது வேள்பாரி..


13.உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கவிதைல இருந்து இரண்டு வரி

கவிதைன்னு சொல்ல முடியாது பட் எப்பவும் என் மனசுல இருக்க quote –

Better life is not because of luck, but because of Hard work..

14.ஸுஃபி சாங்க்ஸ் கேட்பீங்கன்னு தெரியும்..ரொம்ப பிடிச்ச ஒரு பாட்டு...சொல்லுங்க...

Ans : yes i love to hear sufi songs... அது என்னவோ தெரியலை.. அதுல ஒரு நாட்டம் எப்பவும் உண்டு.. கர்நாடிக் எப்படி விரும்பி கேட்பேனோ அதுபோல சூபி சாங்க்ஸ்.. always favo “Maula Mere” song from Chakde india..




நீங்க சொல்லி லிங்க் இங்க போடும்போது தான் கேட்டேன்...ரொம்ப soothing akka..thanksss
 
15.கதை எழுத ஆரம்பிச்ச பின்னாடி நீங்க செய்ய ஆரம்பிச்ச எப்படி சொல்ல...any funny moments...கதை யோசிச்சுட்டு எதாவது வீட்ல சொதப்புறது அப்படி

Ans : சொதப்பினதுன்னு இல்லை.. ஆனா நிறைய escapism பண்ணிருக்கேன்.. வேலை செய்ய பிடிக்கலன்னா.. நான் எழுதணும்.. யோசிக்கணும்னு ஓடி வந்து ரூம்ல உக்காந்துப்பேன்..

16.உங்க ஃபேவரைட் ஆக்டர் யாரு..?

Ans : Teen age ஜெயம் ரவி.. சூர்யா.. இப்படின்னு ஆனா இப்போ கதை நல்லா இருந்தா யார் படம்னாலும் பார்ப்பேன். ஹிந்தி மலையாளம் தெலுகு கொரியன் இங்கிலிஸ் எல்லா மொழியும் பார்ப்பேன்.. நிவின் புடிக்கும்.. ப்ரேமம் பார்த்து..

ஒருசில படங்கள்ல ஒரு சிலரை பிடிக்கும்.. அப்படி பிடிச்சதுல hum dil de chuke sanam - கொஞ்சம் பழைய படம்தான்.. அஜய் தேவ்கன் அதுல ரொம்ப பிடிச்சது..

17.சக்தி நான் உன்னை விரும்பல...உன் மேல ஆசைப்படல....நீ அழகா இருக்கன்னு நினைக்கல...
இந்த வசனம் உங்ககிட்ட யாராச்சும் சொன்னதுண்டா..?


Ans : ஹா ஹா... நிறைய... என்னை கடுப்பேத்த என் பிரண்ட்ஸ் சொல்வாங்க.. அப்புறம் ஒரு சிலர் சொல்லிருக்காங்க.. இதே போல ஹா ஹா தான் அப்பவும் என்னோட ரியாக்சன்..

18.க்ர்ஷ் எதாவது உண்டா..?

Ans : அஜய் தாக்கூர் (indian kabbadi captain )
153

19.உங்க ஊர் ரொம்ப அழகு....உங்களுக்கு போக நினைக்கிற ஊர் எது..?

ans : எஸ் எங்க ஊர் ரொம்பவே அழகு... south india la almost முக்கால்வாசி ட்ராவல் பண்ணிருக்கேன்.. ஆனாலும் எங்க ஊர் போல ஒரு ஊர் அப்படின்னு ஒன்னு இருந்தா அங்க போகணும்..

20.உங்க ப்ரண்ட்ஸ் பத்தி

Ans : பிரண்ட்ஸ்....... ஹப்பா... நிறைய பேர் இருக்காங்க.. ஒவ்வொரு கால கட்டங்கள் வர்றப்போவும் பிரண்ட்ஸ் கூடிட்டே தான் போறாங்க.. சரயுவ தெரிஞ்சவங்க சிலர்... ஆதிசக்திய தெரிஞ்சவங்க சிலர்.. ரெண்டுமே வித்தியாசம் இல்லை ஒண்ணுதான் புரிஞ்சவங்க சிலர் என்னோட க்ளோஸ்..

21.யார் உங்க அப்டேட் படிச்சு உங்க கிட்ட எதுவும் சொல்லனா ஃபீல் செய்வீங்க..?

Ans: முன்னாடி..... முதல்ல எழுத வந்தப்போ ஒவ்வொரு கம்மென்ட் வர்றப்போவும் ஓடி போய் பார்ப்பேன்.. இப்போவும் எல்லா கம்மென்ட்டும் படிப்பேன்.. பீல் செய்வேனா சொல்ல தெரியலை.. பட் பாராட்டோ, இல்லை விமர்சனோ எதுவோ ஒன்னு வந்தா கண்டிப்பா சந்தோசம் தான்..

22.the best and cherishing தருணம் எழுத்தாளரா?

ans : நிறைய உண்டு..

என்னோட இரண்டு கதைகள் “நேசமில்லா நெஞ்சமேது...” Mphil ஸ்டுடென்ட் ஒருத்தவங்க அவங்களோட ஆராய்ச்சிக்காக எடுத்தாங்க.. “ஆனந்த பூந்தோரணம்..” phd ஸ்டுடென் ஒருத்தவங்க அவங்களோட ஆராய்ச்சி கட்டுரைக்காக எடுத்தாங்க..

இது இரண்டுமே எனக்கு எப்பவும் மறக்க முடியாத ஒன்று.

23.உங்க ஆசிரியர்களுக்கு நீங்க எழுத்தாளர்னு தெரியுமா?என்ன சொன்னாங்க..?அப்படி இல்லனா சொல்ற ஐடியா இருக்கா?

Ans : எஸ்... தெரியும்.. MCA படிச்சிட்டு கதை எழுத போயிட்டியான்னு ஆச்சர்ய பட்டாங்க.

24.சமைக்க வருமாக்கா..?அப்படின்னா என்ன உங்க மாஸ்டர் பீஸ்?

Ans : சமைக்க பிடிக்கும்.. விதவிதமா இல்லைனாலும் பண்றது நல்லா செய்யனும்னு நினைப்பேன்.. பூண்டு சட்னி நான் பண்றதுபோல யாரும் பண்றது இல்லைன்னு பாட்டி சொல்வாங்க.. ஆனா எனக்கு நான் பண்றதுல பிடிச்சது வெஜ் குருமா தான்.

25.சரயு ரொம்ப அழகான பெயர்..நதியும் கூட...அங்க போயிருக்கீங்களா..?இல்ல போக ஆசை உண்டா?

Ans : தேங்க்ஸ் டா... எஸ் போகணும்.. ஒன்ஸ் நார்த் இந்தியா முழுக்க சுத்தி பார்க்கனும்னு ஆசை இருக்கு..

26.சக்தின்ற பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்(ஹிஹி)ஏன் அந்த பெயர்ல நீங்க கதை எழுதல...

ans : அது என்னவோ தெரியலை.. சரயுன்னு தான் போடணும்னு தோணிடுச்சு...

27.காலேஜ்ல நீங்க செய்த ரொம்ப naughty ஆன விஷயம்

Ans : naughty.... ம்ம்.. நிறைய இருக்கு.. ஜோவியல் டைம் நான்... சோ நிறைய பிரண்ட்ஸ் கூட fun டைம் இருக்கு..

28.எப்ப கஷ்டம்னாலும் சரி...இல்ல சந்தோஷம்னாலும் தேடி போற ஒரு விஷயம்...இசை தவிர....

Ans : பூஜை ரூம்..

29.எந்த ஒரு புத்தகம் எல்லாருக்கும் படிக்க பரிந்துரைப்பீங்க...?

Ans : gandhiyan thought...

30.எந்த சேட்டை செஞ்சு இதுவரைக்கும் எல்லாரும் உங்க ஃபேமில அதைப் பத்தி பேசுவாங்க,.?

ans : ஹி ஹி அது ரொம்ப சீக்ரெட்....

31.ஒரு வார்த்தையில பதில் சொல்லனும்....அதுவும் ஒரு பெயர் தான் சொல்லனும்.
a.இசை - ARR
b.காதல் – தேடிட்டு இருக்கேன்
c.உணவு – வீக்லி ஒன்ஸ் பரோட்டா சாப்பிடலன்னா சக்திக்கு காய்ச்சல் வந்திடும்..:rolleyes:
d.கதை – காதலுடன் மைதிலி..
e.கவிதை – முண்டாசு கவி தான்..

32.இது இல்லாம இருக்கவே முடியாதன்னு நீங்க நினைக்கிற விஷயம்;..தினமும் அது உங்க அத்தியாவசியம்...அப்படி

Ans : தினமும் என்னோட அத்தியாவசியம்.... ம்ம்ம்ம்... நைட்டி....:rolleyes:?

33..ஒரு ரூம்ல உங்களை அடைக்கப் போறாங்க....ஒருத்தர் மட்டும் உங்க கூட வரலாம்..யாரை அழைச்சிட்டுப் போவீங்க..

Ans : அஜய் தாக்கூர்... (ஆனா நான் பேசுற தமிழ் அவருக்கு புரியாது.. அவர் பேசுற ஹிந்தி எனக்கு புரியாதே...)

34.யார்கிட்டையும் சொல்லாம கொள்ளாம....ஒரு ஊருக்குப் போகனும்னா எந்த ஊர் அது?

ans : அட ஊருக்கு என்ன ஊருக்கு... முதல்ல எங்க வீட்டு பக்கத்துல இருக்க பேங்க்கு கூட தனியா போக முடியாது.. கட்டுப்பாடுகள்னு இல்லை.. எனக்கு தேவையானது எதுன்னாலும் வீட்டுக்கே வந்திடும்.. வெளிய போகணும்னா கண்டிப்பா கூட வீட்ல இருந்து யாராவது வருவாங்க..

தேங்க்ஸ் டா பவி... நல்லா என்ஜாய் பண்ணேன் நான்

thanksss very muchhh akka...I was reading it with a smile. @Sarayu :love::love::love:
 
Last edited:
Top