Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 5 - Weekend with Writers 1

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Heyyyyyyyyyyyyyyyyy friendsssssssssssssssss..!!:love::love::love::love:

Came with another episode of Pa'We' Talks.Hope you are enjoying it..!Thanks for the response too..!
Will try to make it every weekend..!


ஒரு எழுத்தாளர் என்பதை விட ரொம்ப பொறுப்பான ஒரு குடும்பத்தலைவி மனுஷியா என்னை உணர வைச்ச நேர்காணல்..

மிக்க நன்றி @Sorna Sandhanakumar sornakka



Lets Startttttt..!!


1.சொர்ணா நிறைய கதை எழுதி இருக்கீஙக.சொர்ணாக்கா எழுத வந்த கதை என்ன?

பெரிய கதையெல்லாம் கிடையாது. என்னுடைய தோழி சுமி திடீர்னு ஒருநாள்... என்னுடைய சில நடவடிக்கைகளைச் சொல்லி, நீங்க ஏன்டா எழுதக்கூடாது கேட்டாங்க. சரியா சொல்லணும்னா அக்டோபர் 31-2015. அச்சச்சோன்னு அலறியடிச்சி, எனக்கு எழுத வராது. எழுதணும்னா... வார்த்தைக் கோர்வைல இருந்து, ஒவ்வொரு கேரக்டரையும் சரியா ஸ்க்ரீன் ப்ளே பண்ணி கொண்டு போகணும். எழுதுறவங்கள்லாம் ஜீனியஸ்... என்னமா எழுதுறாங்க எனக்கு வராதுன்னு சொன்னேன். (அந்த டைம் ஆன்லைன் கதைகள் ஒன்றுகூட நான் படித்தது கிடையாது.)
நீங்க பண்ணுங்கடா உங்களால முடியும்னு சொல்லி என்னை தூண்டிவிட்டது அவங்கதான். அவங்க சொன்னதை ஏன் முயற்சிக்கக்கூடாதுன்னு மறுநாள் நவம்பர்-1 ஒரு சீக்ரட் க்ரூப்ல ஆரம்பிச்சேன். ஃப்ரண்ட்ஸ் என்கரேஜ் பண்ணதுல... மனம் சொல்ல, கண் பார்க்க, கை எழுத கதை ஆட்டோமேடிக்கா வந்தது. இப்ப உங்க முன்னாடி ஒரு எழுத்தாளரா!! (இன்னும் நானா இதுன்னு ஆச்சர்யப்படுற விஷயம்)


2.தினசரி வேலை தவிர நீங்க செய்ற ஒரு விசயம் என்ன?regularly but an unusual thing

வேலை முடிஞ்சதும் எழுதாம இருந்தா, வாசல்ல உட்கார்ந்து நேரே உள்ள நாகாத்தம்மன் கோவிலைப் பார்த்து ஓம்சக்தி பராசக்தின்னு சொல்லிட்டேயிருப்பேன். (கோவிலுக்கும் எங்க வீட்டுக்கும் அதிக தொலைவு உண்டு.) அடுத்து சூரியனோட நிஜத்தைப் பார்ப்பேன். கண்ணுக்கு கெடுதலா கண் கெட்டுப்போகுமா எதுவும் யோசிக்கிறதில்லை. இயற்கைன்னு மட்டும் தோணும். நிமிடக்கணக்கா இல்லன்னாலும் நொடிக்கணக்குல, அதனோட ஒரிஜினாலிட்டியை பார்ப்பேன்.

3.சொர்ணாவின் முதல் விசிறி யார்?

என் தோழி முத்து(முத்துலட்சுமி) அவள் அடிக்கடி சொல்ற வார்த்தை, "இங்க பாருல... உன் எழுத்துக்கு முதல் ரசிகை நான்தான்."
அடுத்து சுபலட்சுமி.! என்னோட ப்ளஸ் மைனஸ் எல்லாத்தையும் சொல்லி, திட்டுறதுக்குத் திட்டி, பாராட்டுறதுக்குப் பாராட்டி... போன்லயும், நேர்லயும் என்னைப் பிரிச்சி மேயுற ஆள்.

4.உங்களைப் பற்றி few words.education and family

படிப்பு ரொம்பக் கம்மிதான். தமிழ்வழிக் கல்வி.! கரஸ்ல பி.காம் இரண்டாம் வருஷம் முடிச்சப்போ சூழ்நிலை காரணமா டிஸ்கன்டினியூ பண்ணிட்டேன். English Knowledge கம்மிதான். அதுக்காக ஃபீல் பண்ணி ஒண்ணும் ஆகப்போறதில்லை. சோ, யாராவது கேட்டால் சுத்தத் தமிழச்சி சொல்லிருவேன். அதான் நிஜம்கூட.

கணவர் - சந்தனகுமார்
இரண்டு பொண்ணுங்க. ஒரு பையன். சாதாரண நடுத்தரவர்க்கத்து குடும்பம். நல்ல கணவன்! மனம்போல் பிள்ளைகள்! வேறென்ன வேணும் ஒரு பெண்ணுக்கு.

5.சொர்ணாக்காவை எழுத்தாளரா வீட்ல எப்படி பார்க்குறாங்க?
எங்க அம்மா வீட்டு சைடு... உனக்கு இவ்வளவு மூளையா? எப்படி நம்ம வீட்டுல பிறந்த?
சித்தி ஒருத்தர்... நம்ம பங்காளிகள் குடும்பங்கள்லயே நீ மட்டும்தான் எழுத்தாளர். (நமக்குப் பெருமைப்படுற விஷயம்.)

கணவர் வீட்டு சைடு... எழுத்துன்றது படிப்பளவு மட்டுமே இருக்கு. என்னை நானா மட்டுமே பார்ப்பாங்க. பழகுவாங்க.
பிள்ளைங்க.!!! என் குசும்பு கேரக்டர் பார்த்து...
அம்மா, நீங்கள்லாம் எப்படிதான் எழுத்தாளரானீங்களோ? உங்களை வச்சிட்டு... நான் ஒரு அப்பாவி லுக் கொடுத்து... நம்புங்கடா நானும் எழுத்தாளர்தான் சொல்வேன்.


6.உங்கள் குட்டீஸ் பெரிசான பின் ஒரு புக் உங்களுடையது கொடுத்து படிக்கனும்னா எதை கொடுப்பீங்க?

தவறான கருத்துக்களோ, அதீத ரொமான்ஸோ, வக்கிரமான வார்த்தைகளோ, பாலியல் சம்பந்தப்பட்ட கதைகள் இல்லாததால தைரியமா எல்லா புத்தகமும் கொடுப்பேன்.


7.நீங்க எழுதிய கதைகள் நிறைய..... அதுல ஒரு கதை தோன்றிய சுவாரசியம் சொல்லுங்க

ஒரு நாள் நைட் தூக்கத்துல ஒரு கனவு. ஒரு தாய் இரண்டு பெண் குழந்தைங்களோட தனியா கோவிலுக்கு வந்து திரும்பும்போது, வாய் பேசாத குழந்தையை மிஸ் பண்ணிடறாங்க. குழந்தை அவங்களைப் பார்க்கிறா... அவங்களும் தேடுறாங்க.. அருகருகே இருந்தும் பேச்சு வராததால குழந்தையை மிஸ் பண்றாங்க. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கவும் செய்றாங்க.
பஸ்ஸூக்குள்ளயிருந்த பையனுக்கு அசரீரியா அவள் உன் தங்கை அவளைக் காப்பாத்துன்னு குரல் கேட்டு வரும்போது... தப்பான ஒரு பெண்ணிடமிருந்து, தாய் மூலமா காப்பாத்தி கூட்டிட்டுப் போறான்.

தூக்கத்துலயே இந்தக் கதையை விட்டுறாதன்னு மனசு அடிச்சுக்கிச்சி. சட்டுன்னு முழிச்சி நேரம் பார்த்தா, நள்ளிரவு 2.30. காலையில எழுந்தா கதை மறந்திரும்னு உடனே நோட்டை எடுத்து உட்கார்துட்டேன். கதைக்கருவு ஷார்ட்டா ஒரு மணிநேரம் (3.30) க்கு முடிச்சி படுத்தேன்.

அந்தக் கதைதான் முதன்முதலா நான் இருபாகங்களாக வெளியிட்ட ஓ... பெண்ணே பெண்ணே.!

:rolleyes::love:
எனக்கும் இப்படி நடந்திருக்கே.....

8.ஒரு இடம் உங்களை மட்டும் தனியே அடைத்து உணவு தரப்படும்..எந்த இடமா இருக்கலாம்

அருவி சத்தத்தோட ஜில்லுன்னு ஒரு அசத்தலான இடம். பக்கத்துல கோவில் இருந்தா இன்னும் சூப்பர்.
நைட் மட்டும் இடம் மாத்திருங்க. விதவிதமான சாப்பாட்டுடனான சிறய ஹோட்டலா இருந்தாலும் இன்னும் சிறப்பு. ஏன்னா, இயற்கை எப்பொழுதும் பகலில் கொள்ளை கொள்ளும் அழகோ அழகு. இரவில் ஆளை பயமுறுத்தும் திகிலோ திகில்.

9.கணவருக்கு கொடுத்த முதல் பரிசு என்ன?

அவங்கதான் எனக்குக் கொடுத்திருக்காங்க. முதல்முதலா திருச்செந்தூர்ல வாங்கித் தந்த கண்ணாடி வளையல்... இன்னமும் பத்திரமாக என்னிடம்.
நான் என்ன கொடுத்தேன்னா... ஹாஹா சொல்லமாட்டேனே

சொல்லி இருந்தா ஒன்னோட முடிஞ்சிருக்கும்...இப்ப எங்க கற்பனை எகிறுமே...!


;):love:

10.நீங்க எழுதிய ஒரு கதையை மாத்தி எழுதனும்னா எதை

என் கதையில் சின்னச்சின்ன தவறுகளை எடிட்டிங் பண்ணத் தோணியிருக்கே தவிர, மாற்றி எழுதணும்னு இதுவரை தோன்றியதில்லை.


11.உங்கள் கதாபாத்திரம் ஒன்றிற்கு உயிர் தரும் சக்தி கிடைச்சா எதுக்கு கொடுப்பீங்க?ஏன்??

இதை நான் வாசகர்கள் சாய்ஸ்கு விட்டுடுறேனே

12.உங்கள் பெஸ்ட் என்று நினைக்கும் கதை எது?


நிறைய இருக்கே. எதை சொல்லி, எதை மறுப்பது?


13.பிடிச்ச ஒரு வரி

வாழு! வாழ விடு!

14. பிடிச்ச ஒரு கவிதை

பிடிச்சதா சொல்லத் தெரியல. கேள்வியைப் பார்த்ததும் இந்த ஹைக்கூ கவிதைதான் தோணிச்சி.

காதலில்
முதல் தவறு
முத்தம்.!!!



அட அட ம்ம்ம்ம்..?
15.உங்களின் வேறு பொழுதுபோக்கு passion

பக்கத்து வீட்டு குட்டிக் குழந்தைகள் இருவர். இயற்கை அழகை ரசிப்பது. (வேடிக்கை பார்ப்பதை இப்படியும் சொல்லலாம்

?

16.ஒரு வார்த்தையில் சொர்ணாவை describe செய்யனும்

பாவ புண்ணியத்திற்கு மதிப்பளிப்பவள்.


17.ஒரு பிரபலம் உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க...ஏன்?


செல்வி.ஜெயலலிதா.!!
இவங்ககிட்ட எனக்கு சில மைனஸ் தாட்ஸ் உண்டு.
ஆனால், ஒரு தனி மனிதியா, ஆண்கள் சூழ் அரசியலில், தனக்கென ஒரு சாம்ராஜ்யம் அமைத்து, எதிர் நின்றவர்களை தைரியமாக சமாளித்து எதிர் நீச்சல் போட்ட திறமைசாலி. அந்ய ஆளுமைத்திறனில் ஒரு மயக்கம் உண்டு.

18.favorite movie... ஏன்?

நிறைய இருக்கு இப்போதைய அறம். அப்போதைய எதிர்நீச்சல்.
அறம் சமூகத்துக்கான வழிகாட்டல். அதை சரியான வகையில மக்கள் புரிஞ்சாங்களான்னா.. என்னோட பாய்ண்ட் நோதான்.
எதிர்நீச்சல்.!
ஏன் எதுக்கு சொல்லத் தெரியல. சின்ன வயசிலிருந்து எப்ப டிவியில் ஒளிபரப்பானாலும் உட்கார்ந்து பார்ப்பேன்.

பாலசந்தர் டைர்க்ட் பண்ணினதுப்பா...2k கிட்ஸ்ல்லாம் SK நு நினைச்சுப்பீங்க?

19.favorite fictional character of anyone

சொல்லத் தெரியல.

20. இது எல்லாம் உங்க வாசகிஸ் உங்கள் கிட்ட கேட்ட கேள்விகள்.பெயர் குறிப்பிடவில்லை


1.உங்கள் கதைகளில் ஓவர் குசும்பா ஒரு கதாப்பாத்திரம் இருக்கும்.அது யார்? நீங்களா இல்லை inspired from whom?


நானே! அது நானே! வீட்ல உள்ளவங்களையும் ஜாலியா இருக்க பழக்கியிருக்கேன். கண்டிக்கிற நேரத்தில் கண்டிக்கவும் செய்திருவேன்.


2.இரண்டு மனைவி அல்லது குடும்பத்தில் பழிவாங்கும் கதைக்கரு இது பத்தி உங்கள் கருத்து

இரண்டுமே தேவையில்லாத சமூகச் சீர்கேடுதான். நிறைய பேர் சொல்வாங்க சினிமா, சீரியல், புத்தகம் படிச்சி கெட்டுப் போறதில்லைன்னு. ஆனா அதில் சொன்ன நல்ல கருத்துக்களை யாரும் எடுத்துக்கிறதில்லை. கெட்டது உடனே பரவுது. நல்லது ஒரு சிலரிடம் மட்டுமே தாக்கலை ஏற்படுத்துது.
உதாரணம்:
மெட்டி ஒலி சீரியல் வந்த நேரம். ஒரு மாமியார் அந்த சீரியல் மாமியார் பண்றதைப் பார்த்து தினமும் அதேபோல் தன் மருமகளைக் கொடுமைபடுத்தியிருக்காங்க.
மத்தவங்க திருந்ததான் அந்தக்கதைன்னு நமக்குத் தெரியும். ஆனால், அதிலும் நெகடிவைதான் எடுத்துக்கிட்டாங்க. ஒருத்தரைப் பழிவாங்க திரையிலும் புத்தகத்திலும் நிறைய சொல்லித் தர்றாங்க. அதை தன் தேவைக்குப் பயன்படுத்திக்கிறவங்க அதிகம்.
நல்லதுக்கு எப்பவுமே காலம் கிடையாது.


3.உங்கள் ஸ்கூல் காலேஜ் டேய்ஸ்ல உள்ள ஒரு கலாட்டா

பள்ளிப்படிப்பு முடியும் வரை கோபம்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அவ்வளவு அமைதி. கலாட்டா பேர்வழியும் கிடையாது. இவ்வளவு ஜாலியா இருப்பேன்னு அப்ப சொல்லியிருந்தா நம்பியிருக்கவே மாட்டேன். இதான் நிஜம்.
ப்ளஸ் டூ முடித்ததற்குப் பின்னான வாழ்க்கை கொடுத்த அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கோபம்னா என்னன்னு அறிந்த காலங்கள். இப்பவும் தப்பு நடந்தா தட்டிக் கேட்கத் தூண்டுற அளவு கோபம் வருது. பொதுவா பெண்களை தவறா வழிநடத்துற விஷயங்களைக் கண்டா... ஏன் இப்படின்னு ஒரு கோபம் கண்டிப்பா வரும்.


4.உங்களுக்குனு அதாவது pure personal அஹ் இருக்க கூடிய ஒரு லட்சியம் ஆசை....இப்படி அதை நிறைவேத்திட்டீங்களா?

படிக்கணும்னு ரொம்ப ஆசை. எனக்கு என்ன ஆசைன்னு இதுவரை எங்க வீட்ல உள்ளவங்களுக்குக் கூடத் தெரியாது.
Accounts group எடுத்தப்ப
B.Com, M.Com முடிச்சி பேங்க்ல ஒர்க் பண்ணனும்னு ஆசை. கடைசிவரை நிறைவேறாத ஆசைதான். மூளையில ஒழிச்சி வச்சிட்டேன்.
ஒரு எழுத்தாளரா ஆனது நான் கனவிலும் நினைக்காத ஒண்ணு. கடவுள் கணக்கை யார் அறிவார். ஏன் ஓரிடத்தில் இருக்க ஆசைப்படுற, எல்லாருக்கும் தெரிஞ்ச ஆளாயிரு என்பதுதான் எனக்கானது போல.


5.favorite writer

முதல்முறையா நம்மைக் கவர்ந்தவங்கதான் Favourite இல்லையா? அப்படிப் பார்த்தால் "எல்லா நதிகளும் கங்கை தான்" எழுத்தாளர் சந்திரஜெயன். 2000 வருடத்தில் என் நட்பு வட்டத்தை முழுக்க சுத்தி வந்த கதை. கண்கலங்கிப் படிச்ச கதைன்னும் சொல்லலாம்.

ஏன் உங்களுக்குப் பிடிச்ச மல்லிகா மணிவண்ணன் சொல்லலைன்னு நினைக்கலாம். எழுத்தாளர்ன்றதைத் தாண்டி மல்லிகா அக்காவோட கேரக்டர் எனக்குப் பிடிக்கும். நான் ஒருத்தர்கிட்ட எதிர்பார்க்கிறது அவங்களோட நல்ல குணங்களை மட்டுமே. பாப்புலாரிட்டியைக் கிடையாது.
உங்களுக்குப் பிடித்த பெண் யார்னு கேள்வி கேட்டிருந்தா யோசிக்காம சொல்வேன் மல்லிகா அக்கா பெயரை.

வணக்கம் நட்புகளே எல்லாரும் நலம்தானே? நல்லாயிருக்கணும்னு கடவுளே வேண்டிக்கிறேன். என் படிப்பிலிருந்து ஆரம்பித்து
உங்ககிட்ட சொன்ன எல்லாமே... நடிப்போ, பாசாங்கோ கலக்காத உண்மை. உண்மை மட்டுமே!!
சந்தோஷமா இருங்க. மத்தவங்களையும் சந்தோஷமா வச்சிக்கோங்க.

நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
 
ஒரு நாள் நைட் தூக்கத்துல ஒரு கனவு. ஒரு தாய் இரண்டு பெண் குழந்தைங்களோட தனியா கோவிலுக்கு வந்து திரும்பும்போது, வாய் பேசாத குழந்தையை மிஸ் பண்ணிடறாங்க. குழந்தை அவங்களைப் பார்க்கிறா... அவங்களும் தேடுறாங்க.. அருகருகே இருந்து
O penne penne
 
ஒரு "அதிகாலை சுபவேளை"யில்
அழகு அழகா அருமையான நாவல்ஸ்
எழுத ஆரம்பிச்ச என்னோட சொர்ணா சந்தனகுமார் டியரைப் பற்றி நிறைய விஷயம் தெரிந்து கொண்டது ரொம்பவே சந்தோஷமா இருக்குப்பா
 
Last edited:
வணக்கம் நட்புகளே எல்லாரும் நலம்தானே? நல்லாயிருக்கணும்னு கடவுளே வேண்டிக்கிறேன். என் படிப்பிலிருந்து ஆரம்பித்து
உங்ககிட்ட சொன்ன எல்லாமே... நடிப்போ, பாசாங்கோ கலக்காத உண்மை. உண்மை மட்டுமே!!
சந்தோஷமா இருங்க. மத்தவங்களையும் சந்தோஷமா வச்சிக்கோங்க.

Pavi ketka maranthu..
Neenga ethaachum itha ketta ipdi solliruppen nenaichaaalum sollunga sorna
 
Top