Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 1

Advertisement

SatyaSriram

Well-known member
Member
பூக்கள் பூக்கும் தருணம்

அத்தியாயம் - 1
னி படர்ந்த மார்கழி மாத காலை பொழுதை தன்னுடைய அறையின் ஜன்னல் வழியாக ரசித்து கொண்டிருந்தாள் சாஹித்யா. வட்டவடிவான முகத்தில் சிறிய பொட்டும், காதுகளில் மீன் வடிவிலான தோடும், சிறிய கல் வைத்த மூக்குத்தியும் அவளது நிறத்திற்கு ஏற்றார் போல் அணிந்திருந்த உடையும் அவளை நல்ல அழகி என்று பறைசாற்றின.
“சஹி, இங்க கொஞ்சம் வாம்மா" என்று அம்மா பங்கஜம் அழைத்தாள். அருகில் உள்ள கோவிலில் இருந்து வந்த M.L.வசந்த குமாரியின் குரலில் ஒலித்த திருப்பாவையுடன் தானும் சொல்லிக்கொண்டிருந்த சஹி, அம்மாவின் குரல் கேட்டு, "அம்மா எதுக்கு கூப்டீங்க?" என்று கேட்டுகொண்டே தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தாள்.

"இன்னிக்கு உனக்கு காலேஜ் லீவ் தானே என்னோட கோவிலுக்கு வரியா?" என்றாள் பங்கஜம்.

“சரிம்மா நான் வரேன்.”

“இன்னிக்கு நல்ல புடவை கட்டிகிட்டு வாம்மா.”

“என்னமா இன்னிக்கு என்ன விசேஷம்?"

“ஒண்ணுமில்லை மா சும்மா தான்" என்று மழுப்பினாள் பங்கஜம்.

தன் அம்மாவின் முகத்தில் எப்பொழுதும் இருக்கும் மலர்ச்சி இன்று இல்லை, மாறாக இன்று புதிதாகப்பதட்டமும், சிறு குழப்பமும் இருப்பதை கவனித்து விட்டாள் சாஹித்யா. ஒரே ஒரு நொடி அம்மாவிடம் "என்ன மா என்ன பிரச்சினை?" என்று கேட்க நினைத்தாள், உடனே தன் முடிவை மாற்றிக் கொண்டு, "உனக்கு இப்போ என்ன நான் புடவை கட்டணும் அவ்வளவு தானே? சரி மா நான் போய் புடவை மாத்திட்டு வரேன். என்று சொல்லி விட்டு தன்னுடைய அறையை நோக்கி சென்றாள்.

அறையின் வாயிலில் நின்று கொண்டு "அம்மா அப்பா எங்கே மா?" என்று கேட்டாள்.

அம்மாவின் முகத்தில் பதட்டம் அதிகரித்தது.

“அவ்யுக்த் கொஞ்சம் எழுந்திரிப்பா” என்று அவன் அம்மா கௌசல்யா எழுப்பிக்கொண்டிருந்தாள்.

அங்கே வந்த வேணுகோபால், "என்ன கௌசி உன் பையனை எழுப்பிக்கிட்டு இருக்கியா?" என்று கேட்டார்.

“நானே அவனை எழுப்பி கோவிலுக்கு கிளப்பணும்னு இருக்கேன். இதுல நீங்க வேற?" என்று சலித்து கொண்டாள் கௌசி.

“என்ன கௌசி அவன் கிட்ட சொன்னியா இல்லையா?"

“இல்லங்க நேத்து அவன் ரொம்ப லேட்டா தான் வந்தான், அதான் நான் ஒண்ணும் சொல்லல.”

“இல்ல கௌசி நீ பண்றது ரொம்ப தப்பு, அவன் ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை, ஒரு கம்பனிக்கு முதலாளி, அவன ஏமாத்தி கோவிலுக்கு கூட்டிப்போக நினைப்பது நல்லாவே இல்ல.”

"இக்ம்ம்" என்று கழுத்தை தோள்பட்டையில் இடித்து கொண்டே, "நானும் ஒரு வாரமா அவன் கூட இதை பத்தி பேசுங்கன்னு சொல்லிட்டே இருக்கேன் நீங்களும் பேசல என்னாலும் பேச முடியல, இப்போ வந்து எனக்கு அட்வைஸ் பண்றீங்களா? “ப்ளீஸ் பா இப்போ ஒண்ணும் சொல்லாதீங்க இப்படி தான் அவனுக்கு அமையணுமோ என்னமோ?” என்று சொல்லி கொண்டே தன் செல்ல மகனை எழுப்ப சென்றார்.

“அவ்யுக்த் கொஞ்சம் எழுந்திரிப்பா.” என்று கௌசியும், “அவ்யுக்த் எழுந்திரிப்பா" என்று வேணுகோபாலும் தங்களின் தவப்புதல்வனை எழுப்பினார்கள்.

அவ்யுக்த் சிறிது அசைந்து கொடுத்து, “ஹாய் டாட், ஹாய் மாம் குட் மார்னிங்", இன்னும் ஒன் ஹவர் தூங்கறேனே ப்ளீஸ்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் தூங்கி விட்டான்.

“என்னங்க இப்படி தூங்கறானே, எழுப்ப மனசே வரலியே, இப்போ என்ன பண்றது?"

“இல்ல வேற வழி இல்ல நீ உன் பிரண்டு கிட்ட போன் பண்ணி அடுத்த வாரம் வீட்டுக்கே வரோம்னு சொல்லு" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார் .

கௌசல்யா அவள் தோழிக்கு போன் செய்தார். "விஜி இல்லடி நான் இன்னிக்கு வரலடி அடுத்த வாரம் வீட்டுக்கே வரோம்டி.” என்றதும்

அந்த பக்கத்தில் விஜி சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்தார் கௌசல்யா.
சிறிய ஜரிகை வைத்த அடர் சிகப்பு நிறத்தில் புடவை கட்டி அதற்கு தகுந்தாற்போல் நகைகளை அணிந்து வந்த தன் மகளை பெருமையுடன் பார்த்தாள் பங்கஜம்.

“என்ன மா இப்படி பார்க்கறீங்க?”

“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு அவ்ளோ அழகா இருக்க.”

“அம்மா போதும் நான் ரெடி ஆயிட்டேன் கிளம்பலாமா? எனக்கு வந்து சில நோட்ஸ் எடுக்கணும் சீக்கிரம் வாங்க.”

“இதோ நானும் ரெடி சஹி.”

“அப்பா எங்க? ன்னு கேட்டேன் மா இன்னும் நீ சொல்லல, அப்பா எங்க மா?”

“உங்க அப்பா முன்னாடியே கோவிலுக்கு கிளம்பிட்டார்.” என்று சொன்னார் பங்கஜம். மனதினுள், "ஆமாம் உங்க அப்பா இருந்தா நீ இவ்ளோ சீக்கிரம் ரெடி ஆகி இருப்பியா?, தானும் குழம்பி உன்னையும் போட்டு குழப்பி என்னை ஒரு வழி பண்ணி இருப்பார்.” என்று சொல்லிக்கொண்டாள் பங்கஜம்.

சஹிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, “அப்பா எப்படி என் கிட்ட பேசாம கோவிலுக்கு போவார்? இந்த அம்மா தான் அப்பாவ கிளப்பிவிட்டிருக்கணும், வரட்டும் இருக்கு அப்பாக்கு...” என்று நினைத்து கொண்டிருக்கும் போதே சஹியின் செல்போன் அடித்தது.
சஹி சென்று தன் போனை எடுத்தாள் அதில் வந்த நம்பரை பார்த்து, “அம்மா அப்பா தான் கால் பண்றாங்க' என்று சொன்னாள் .

“இவர் எதுக்கு இப்போ சஹிக்கு கால் பண்றார்.. இவரை..” என்று மனதினுள் நினைத்துகொண்டே “குடு சஹி நானே பேசறேன்.” என்று போனை வாங்கி கொண்டார். (சஹி கையில் இருந்து பிடுங்காத குறை தான்).

“என்னங்க இப்போ எதுக்கு கால் பண்ணிங்க?”

“ஹாய் பங்கு நீயே போனை எடுத்திட்டியா?”

பங்கஜம் செம கடுப்பாகி, “ஏங்க என் பேரை கொலைப் பண்ண தான் கால் பண்ணீங்களா?”

“இல்ல கஜம், உன் பேரை சுருக்கி கூப்பிடனும்னு ரொம்ப நாளா ஆசை, அதான் இப்போ கூப்பிட்டேன்.”

“இப்போ ரொம்ப தேவை போய் துணி கடையிலும், ஷேர் மார்கேட்லேயும் வேலை பாருங்க என்னை ஆளை விடுங்க” என்று சலித்து கொண்டார்.

“சரி பங்கஜம் இனிமே உன் பேரை கொலை பண்ணலை.”

“அய்யோஓஓஓஓஒ! ஏங்க இப்போ எதுக்கு கால் பண்ணீங்க? அதை விட்டு இப்படி என்னைப் பேசியே படுத்தறீங்க, சீக்கிரம் விஷயத்தை சொல்லுங்க.”

“அதுவா இப்போ தான் உன் பிரண்டு இங்க வந்தாங்க.”

“அவள் வர இன்னும் டைம் இருக்கே, இப்போ தான நாங்களே ரெடி ஆகியிருக்கோம்.”

“பங்கஜம் இப்படி கூட கூட பேசிட்டே இருந்தா என்னால விஷயத்தை சொல்ல முடியாது.”

“இல்லங்க நீங்க சொல்லுங்க” என்று தலையில் அடித்துக்கொண்டே. “வாங்க நீங்க வீட்டுக்குத்தானே வரணும்” என்று மனதினுள் சொல்லிக்கொண்டார்.

இதை அறியாத ராகவன், “விமலா இங்க வந்து என் கிட்ட பேசினாங்க, அவங்க பையன் ஸ்ரீதர் யாரையோ லவ் பண்றானாம் அதனால என் கிட்ட சாரி சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.”

“என்னங்க நீங்க சொல்றது நிஜமா?”

“என்ன பங்கஜம் எதுல விளையாடறதுன்னு எனக்கு தெரியாதா, நான் உன் கிட்ட முன்னாடியே சொன்னேன்... இப்படி ரெண்டு பேருக்குமே தெரியாம ஏற்பாடு பண்ணாதன்னு... நீ கேட்கலை, இப்போ பாரு.”

“நான் ரொம்ப ஆசை பட்டு செஞ்சேங்க.”

“இதுல நீ ஆசைப்பட்டது தப்பில்லை மா, அதை உன் பொண்ணு கிட்ட சொல்லாம செஞ்சபாரு அதுதான் தப்பு, இப்போ இங்க நீங்க வரவேண்டாம் நான் கிளம்பி வீட்டுக்கு வரேன்” என்று ராகவன் சொன்னார்.

“இல்லங்க நாங்க கிளம்பிட்டோம், நீங்க அங்கேயே இருங்க நாங்க வரோம்.”

“நான் சொல்றதை நீ என்னிக்கு செஞ்சிருக்க?” என்று மனதினுள் நினைத்துகொண்டே “நீங்க கிளம்பி வாங்க நான் வெயிட் பண்றேன்.” என்று சொன்னார்.
சாஹித்யா மனதினுள் “ஹப்பா இப்போதைக்கு என்னை தொந்தரவு செய்யமாட்டங்க.” என்று சொல்லிக்கொண்டாள்.
“என்ன கௌசி என்ன ஆச்சு என் இப்படி நிக்கற?” என்று வேணுகோபால் கேட்டார்.

“இல்லங்க விஜிக்கு இப்போ தான் கால் பண்ணினேன் அவ பொண்ணு வைஷ்ணவி யாரையோ லவ் பண்றாளாம், அதுனால நாம இனிமே எப்பவும் போல பிரண்ட்ஸாவே இருப்போம்ன்னு சொல்றாங்க.”

“கௌசி நடப்பது எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சிக்கோம்மா, நாமளும் கல்யாணத்தை பத்தி அவ்யுக்த் கிட்ட பேசிடலாம். சரியாம்மா?”
“சரீங்க ஆனா?” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கே அவ்யுக்த் வந்தான்.
பார்ப்பவர்கள் கண்ணை கவரும் ஆணழகன். நல்ல உயரம், மாநிறம் இப்படி நிறைய நிறைய சொல்லலாம். மொத்தத்தில் சஹிக்கு ஏற்ற துணை.

“என்ன மா காலையிலேயே அப்பாக்கூட என்ன சண்டை?”

“அவ்யுக்த் உனக்கு அம்மா பொண்ணு பார்க்கலாம்னு சொல்றாப்பா.”

“அம்மா என்ன இது அப்பா சொல்றது நிஜம்மா?”

“ஆமாம்டா இன்னிக்கே உன்னை கூட்டிட்டு போகணும்னு நினைச்சேன், பட் அந்த பொண்ணு வேற யாரையோ லவ் பண்றாள்ன்னு அவ அம்மா சொல்லிட்டாங்க.”

அவ்யுக்த் கடுப்பாகி, “அம்மா நான் என்ன சின்ன குழந்தையா?, உங்க முகத்துக்காக அங்க வந்தாலும் என் மனதுக்கு பிடிக்காத எந்த பெண்ணையும் நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்.”

“ஆமாம்டா இப்படியே எதையாவது சொல்லு. எப்போ தாண்டா உன் மனசுக்கு பிடிச்சப்பொண்ண பார்ப்ப?”

“இப்போதைக்கு இல்லமா, இன்னும் நான் நம்ம கம்பெனிய நல்ல நிலைக்கு கொண்டு வரணும் இதுல கல்யாணம் ஆச்சுன்னா அவளுக்கு என்னால கூஜா தூக்கமுடியாது.”

“இப்போ கல்யாணம் பண்ற எல்லாருமேவா கூஜா தூக்கறாங்க?, என்னங்க நீங்களே சொல்லுங்க.”

“அம்மா, அப்பாவ தினமும் பார்க்கறதுனால தான் மா நான் சொல்றேன்.”

“அவ்யுக்த் அம்மா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. அப்புறம் எங்க கூட வார்த்தையாடலாம், சொல்லு எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?”

அப்பாவின் முகத்தில் தெரிந்த கவலையை கவனித்துவிட்டான் அவ்யுக்த் உடனே, அப்பா ப்ளீஸ் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், பட் இப்போ இல்ல இன்னும் ஒரு வருஷம் ஆகட்டும் பா ப்ளீஸ்.”

“என்னது இன்னும் ஒரு வருஷம்மா? என்னால முடியாது, உனக்கு இன்னும் த்ரீ மந்த்ஸ் டைம் தரேன் அவ்ளோதான் அதுக்குள்ள உன் மனசுக்கு பிடிச்சவளை தேடு, இல்லன்னா, என் மனசுக்கு பிடிச்சவளை கல்யாணம் பண்ணனும்.” என்றாள் கௌசி.

“ஆமாம் அவ்யுக்த் அம்மா சொன்ன மாதிரி சீக்கிரம் அவளை தேடு, கௌசி என்னிக்கு இருந்தாலும் அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ண தான் நாம அவனுக்கு கல்யாணம் பண்ணனும். இதுல நான் தெளிவா இருக்கேன்.”

“அப்பா தேங்க்ஸ் பா, சீக்கிரம் அவளை தேடறேன். அம்மா ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லலே, இப்போ வேண்டாம்னு தான் சொல்றேன்.”
 
உங்களுடைய "பூக்கள்
பூக்கும் தருணம்"-ங்கிற
அழகான அருமையான
லவ்லி நாவலை மீண்டும்
படிக்க ரீரன் தந்ததற்கு
ரொம்பவே சந்தோஷம்,
சத்யா ஸ்ரீராம் டியர்
 
Top