Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 21

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 21

பக்கத்து டேபிளில் சம்பதா.
அதிர்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றாள் சம்யுக்தா.
சம்பதா தன் தோழியிடம் 'ஒரு நிமிடம்' என்று சொல்லி விட்டு சேரை இவர்கள் டேபிள் பக்கம் நகர்த்தி உட்கார்ந்து கொண்டு 'இரு சம்யு' என்றாள்.
சம்யுக்தாவின் முகம் வெளிறிப் போயிருந்தது. தலை குனிந்தவாறு மெல்ல அமர்ந்தாள்.
சம்பதா காப்ரியேலைப் பார்க்க அவன் பதட்டம் இல்லாமல் 'ஹாய்' என்றான்.
சம்பதா பதிலுக்கு 'ஹாய்' சொல்லி விட்டு கோபிகாவைப் பார்த்தாள்.
'இந்த லவ்வுக்கு நீயும் உடந்தையா?'
கோபிகா மறுத்தாள்.
'உடந்தைங்கற அளவுக்குல்லாம் இல்ல. இன்னைக்குத் தான் இவன் சம்யு கிட்ட ப்ரோபோஸ் பண்ணான். அத அவ ஏத்துகிட்டா. நான் கூட நின்னுட்டு இருந்தேன்.'
'இதெல்லாம் ஏன் ஏத்துகிட்ட. இது சாத்தியமா அம்மா என்ன சொல்வாங்க அப்படில்லாம் சொல்லலயா?'
'சொன்னேன். அவ கிட்ட கேட்டுப் பாரு.'
சம்யுக்தா தலை உயர்த்தி சம்பதாவைப் பார்த்தாள்.
'இது முழுக்க முழுக்க என் முடிவு சம்பதா. அவள இழுக்காத.'
'அப்போ ஒன் கிட்டயே கேக்கறேன். ஒனக்கு நம்ம அம்மா வளர்த்த விதம் தெரியாதா இல்ல இது தெரிஞ்சா அம்மாவோட இதயத்துக்கு என்ன ஆகும்னு தெரியாதா?'
'தெரியாம இல்ல சம்பதா. இவன் என் பேர நெஞ்சுல பச்ச குத்தி வச்சிருக்கான். என்ன உண்மயாவே லவ் பண்றான். எனக்கும் புடிச்சிருக்கு. நான் என்ன தான் பண்றது?'
'ஸோ காதல் வலைல சிக்கிகிட்ட. ம்ம்ம். இது டைம் பாசுக்குத் தானா இல்ல அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருவீங்களா?'
காப்ரியேல் வாய் திறந்தான்.
'சம்பதா! நான் உங்க அக்காவ உண்மயா லவ் பண்றேன். கல்யாணம் பண்ணிப்பேன்.'
'ஓ! நைஜீரிய அத்தானே! எத்தனயோ பொண்ணுங்க இருக்கறப்ப இவளப் பாத்து மட்டும் எப்படீ லவ் வந்தது?'
'அதான லவ்.'
'எங்க பாமிலி பத்தி தெரியுமா?'
'ஒரு அம்மா, ஒரு தங்கச்சி இருக்காங்கறது மட்டும் தான் தெரியும்.'
'கட்டுன புடவையோட தான் அனுப்புவோம். நக நட்டு எல்லாம் ரொம்ப இல்ல. ஒரே வீடு தான். ஆனா ரெண்டு பாகம். பரவால்லயா?'
'வாட் என்ன பேசற நீ? டவுரி எல்லாம் எங்க நாட்ல கிடையாது. எங்கள்ல சில இனத்தவங்க காசு குடுத்து பொண்ண கட்டிட்டு போவோம். பணம் பாத்து தான் லவ் பண்ணனும்னா அது லவ்வே இல்ல.'
'சரி! நாளைக்கே கல்யாணம் ஆயி கொஞ்ச வருஷம் கழிச்சு இவ அலுத்துப் போயிட்டான்னா.. நான் ஏன் கேக்கறேன்னா நம்ம ஜெனரேஷன்ல சகிப்புத்தன்ம கம்மி. இவளால ஒன் சுதந்திரம் பாதிக்கப்படுதுன்னு நீ நெனக்க எங்க அக்கா நெலம?'
'நீ என்ன சொன்னா நம்புவ? இவ தான் என் வாழ் நாள் முழுக்க என் கூட ட்ராவல் பண்ணப் போற என் வாழ்க்கைல.'
ஒரு நிமிடம் பேசாமல் இருந்த சம்பதா சம்யுக்தாவின் கையைப் பிடித்து குலுக்கினாள்.
'வாழ்த்துக்கள் சம்யு. நல்ல ஆளாத்தான் புடிச்சிருக்க.'
அங்கு இருந்த எல்லோரும் அப்பாடா என்று இறுக்கம் தளர்ந்து நாற்காலியில் சாய்ந்தார்கள்.
கோபிகா கோபித்தாள்.
'என்ன நீ! இண்டெர்வ்யூ எடுக்கற மாதிரி இத்தன கேள்விகள்?'
'பின்ன பொண்ணு குடுக்கறப்பம் சும்மா குடுத்துருவாங்களா? அதுவும் இந்த அழகுப் பதுமைய?'
வெட்கப்பட்ட சம்யுக்தா சம்பதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
'நீ தான் இதுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணனும் சம்பதா.'
'ஷ்யூர். ஆனா ஒண்ணு மட்டும் ரெண்டு பேரும் நியாபகம் வச்சுக்கங்க. மொதல்ல பி.ஏ.முடிக்கலாம். அப்புறம் வேல தேடிக்கலாம். அப்புறம் அம்மாவ கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ண ட்ரை பண்ணலாம். அதுவரைக்கும் ரெண்டு பேரும் லிமிட் தாண்டாம பழகுங்க. என் சப்போர்ட் ஒனக்கு எப்பவும் இருக்கும்.'
'தாங்க்ஸ் சம்பதா.' என்றான் காப்ரியேல்.
'தாங்க்ஸ் மட்டும் போதாது நைஜீரியா அத்தானே! அந்த டேபிள் பில்லயும் சேர்த்து கட்டிருங்க.'
சிரித்தவாறே எழுந்தாள்.
'சரி. நான் என் பிரண்ட் கூட கொஞ்சம் ஷாப்பிங் போக வேண்டி இருக்கு. ரெண்டு வருஷம் அம்மாவுக்குத் தெரியாம உன் காதல வச்சுக்க. சரியா?'
சம்யுக்தா தலை ஆட்ட,காப்ரியேலிடம் சொன்னாள்.
'வரட்டுமா அத்தான்.' சொல்லி விட்டு பிரண்டைக் கூட்டிக் கொண்டு பார்லரை விட்டு வெளியேறினாள் சம்பதா
அவன் 'பை'சொல்லிவிட்டு சம்யுக்தாவிடம் கேட்டான்.
'அதென்ன அத்தான்?'
'அக்கா வீட்டுக்காரர இங்க அப்படித்தான் சொல்வாங்க.'
'பைன்'
வெயிட்டரிடம் பக்கத்து டேபிள் பில்லை கேட்க தந்ததும் மயங்கினான்.
'என்னது ரெண்டு பேர் 1200 ரூபாய்க்கு சாப்பிட்டுருக்கராங்க?'
கோபிகா இடைமறித்தாள்.
'பாரு சம்யு. ஒன் தங்கச்சிக்கு செய்ய கணக்கு பாக்கறாரு.'
காப்ரியேல் உடனே மறுத்தான்.
'ஐயோ அப்படி எல்லாம் இல்ல. வெயிட்டர் இந்த ரெண்டு பில்லுக்கும் சேர்த்து ஜீ பே பண்ணிர்ரேன்.' என்று சொல்லி விட்டு பணம் செலுத்தி விட்டு எழுந்தான்.
எல்லோரும் எழுந்தார்கள். பார்லரை விட்டு வெளியே வந்தார்கள்.
'அப்புறம் ப்ரொபோஸ் பண்ணிருக்கேன். எதுவும் கிடையாதா?'
'எதுவும்னா?' என்றாள் சம்யுக்தா.
'அட்லீஸ்ட் ஒரு கிஸ்.'
சிலிர்த்தாள் சம்யுக்தா.
கோபிகா கேட்டாள்.
'என்னது கிஸ் அட்லீஸ்டா? பாருடி கடைசில அங்க தான் வாரான். இந்த ஆம்பளங்களே இப்படித்தான்.'
'விடுடி. அவங்க கல்ச்சர் அப்படி.'
'ஓகோ. அம்மணிக்கும் ஆச தான. சரி தான். வா டென்சில். அந்தப் பக்கம் போவொம். லவ் பேர்ட்ஸ் மூக்க மூக்க ஒரசிக்கட்டும்.'
மரங்களின் ஓரமாய் அவர்கள் நடந்தார்கள். ஒரு மரத்தின் மறைவு வந்தவுடன் சம்யுக்தா காப்ரியேலின் இடுப்பைப் பற்றிக் கொள்ள புரிந்துகொண்ட காப்ரியேல் அவளை நெஞ்சோடு அணைத்து குனிந்து அவளது மேல் இதழைத் தன் இதழ்களால் பற்றிக் கொண்டான்.
சம்யுக்தாவிற்கு தீப்பற்றியது போல் இருந்தது.
என்ன சத்தத்தைக் காணோம் என்று திரும்பிய கோபிகா டக் என்று ஒரு ஸ்னாப் எடுத்தாள்.
கண்கள் சொருகி ஆனந்தத்தில் மிதந்தாள் சம்யுக்தா.
காப்ரியேல் தன் இதழ்களை விடுவித்தும் விரிந்த இதழ்களோடு கண் மூடி அப்படியே இருந்த அவளைப் பார்த்தான் காப்ரியேல்.
இத்தனை அழகும் எனக்கா. தன் கருத்த கரங்களில் எலுமிச்சை நிறத்தோடு சுருண்டிருந்த சம்யுக்தாவைப் பார்த்து பெருமை தாங்க வில்லை அவனுக்கு. இவளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் வாழ் நாள் முழுவதும் என்று எண்ணிக் கொண்டான்.
மெதுவாகக் கண்களைத் திறந்த சம்யுக்தா வெட்கத்தால் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
முன்னால் சென்ற கோபிகாவும் டென்சிலும் திரும்பி வருவதைப் பார்த்ததும் அவனிடம் இருந்து நீங்கினாள்.
கோபிகா கலாய்த்தாள்.
'இனி நாங்க தேவை இல்ல. அப்படித்தானே!'
சம்யுக்தா சிரித்தாள்.
'ரோட்ல போறவங்க யாராவது பாத்தா என்ன நெனப்பாங்க. ஏதாவது சினிமா தியேட்டர்ல வச்சுக்க வேண்டியது தான.'
'அப்போ சினிமாவுக்கு போலாம சம்யு?' என்றான் காப்ரியேல்.
கோபிகா முறைத்தாள்.
'அது தான் நீ கேட்டது கெடச்சிடிச்சில்ல. இனி ஒரு தடவையா? ஏன் சம்யு? எப்படி இருந்தது முதல் முத்தம்?'
'சீ போடி. இதுக்கெல்லாம் என்ன ரிவ்யூவா தர முடியும்?'
'எனக்கு இது மொதல் முத்தம் இல்ல.' என்றான் காப்ரியேல்.
அதிர்ந்த சம்யுக்தாவிடம் கோபிகா' அவன் அம்மா அக்கா கொடுத்திருப்பாங்கள்ல அத சொல்லுவான்.' என்றாள்.
'நோ. 15 வயசுலேயே என் க்ளாஸ் மேட் ஒருத்தி என்ன லவ் பண்றென்னு சொல்லி என்ன கிஸ் பண்ணா. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். அப்புறம் ப்ரெண்ட்ஸோட விலைமாதுக்கிட்டல்லாம் போய் இருக்கென்.'
'ஏய்.. ஏய்...'கோபிகா அதட்டினாள்.
'இதெல்லாம் சொல்லக் கூடாது. நான் எந்த பொண்ணயுமே பாத்ததில்ல. நீ தான் மொதல்லன்னு சொல்லணும். ஏன் சம்யுக்தா இவ்ளோ வெள்ளந்தியா இருக்கான்? எங்க ஊரு பசங்க அப்படித்தான் சொல்லுவாங்க.'
'இவன் இப்படி உண்மை பேசறது எனக்கு பிடிச்சிருக்கு கோபிகா. அப்புறம் ஒனக்கு சைக்காலஜி தெரியும் தான. ஆண்கள் ஒரு பொண்ணுக்கு தான் தான் மொதல்ல இருக்கணும்னு நெனப்பாங்க. பெண்கள் தான் தான் கடைசியா இருக்கணும்னு நெனப்பாங்க. இதுவரைக்கும் காப்ரியேல் எப்படி இருந்தான்னு தெரியாது. இனி சம்யுக்தா மட்டும் தான் அவனுக்குத் தெரிஞ்ச பொண்ணா இருக்கணும்.' என்று அவனைக் காதலுடன் பார்த்தவாறு சொன்னாள் சம்யுக்தா.
'ட்ரூ மை ஏஞ்சல்.' என்றான் காப்ரியேல்.

(தொடரும்)
 
Top