Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam final chapter 25

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 25

என்னது சித்தியா?
தலை சுற்றியது சம்பதாவுக்கு.
அப்போது உள்ளே நுழைந்தார்கள் பாலு அங்கிளும், பூரணி ஆண்டியும்.
அங்கிள் அருகில் சென்றாள் சம்பதா.
'வாங்க அங்கிள். அம்மா என்னென்னமோ சொல்றாங்க. அவங்க எங்களுக்கு அம்மா இல்லயாம். சித்தியாம். எனக்கு ஒண்ணுமே புரியல அங்கிள். ஏற்கனவே சம்யு இப்படி கிடக்கிறா. இவங்க வேற..'
இடைமறித்தார் பாலு.
'ஆமாம்மா. இவங்க பேரு தேவி இல்ல. வசந்தி. இவ்ளோ நாள் தேவிங்கற பேர்ல உங்க கூட அம்மான்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. போட்டோக்கக்கள்ல வசந்தியும் தேவியும் ட்வின்ஸ்னால உங்களாலயும் கண்டுபிடிக்க முடியல. வசந்தியோட பெரியப்பாவுக்கு குழந்தயே இல்லங்கறதால ட்வின்ஸ்ல ஒண்ண-வசந்திய அவங்க பெரியப்பாவுக்கு குடுத்திட்டாங்க. அந்த காலத்துல அதுல்லாம் சகஜம். வசந்தியும் அவங்க பெரியப்பாவையும் பெரியம்மாவையும் அம்மா அப்பான்னு நெனச்சு வாழ்ந்திட்டு வந்தா. உங்க அம்மா தேவி சரவணன்னு ஒருத்தர விரும்பினாங்க. ஒரு நாள் கோயிலுக்கு போறப்ப சம்யுக்தாவுக்கு நடந்த அதே விஷயம் உங்க அம்மாவுக்கும் நடந்தது. அம்மா மனசளவுல ஒடஞ்சு நடபிணமா ஆயிட்டாங்க. கர்ப்பம் தரிக்கலன்னாலும் சரவணன் கிட்ட அந்த சம்பவத்துக்கு பிறகு மாற்றம் தெரிஞ்சது. அவள சகஜமாக்கறோம்கற பேர்ல அவள பயன்படுத்த ஆரம்பிச்சான். கர்ப்பம் தரிச்சதும் அவள விட்டுட்டு போயிட்டான். அந்த அதிர்ச்சி தாங்க முடியாததால மனதளவுல உங்க அம்மா பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரில அட்மிட் ஆனாங்க. சரவணன் வேற ஒரு கல்யாணம் பண்ணிகிட்டதும் உங்க அம்மா பேசவே இல்ல. வெறிச்னு ஒரு பார்வயே பார்த்திட்டு இருந்தாங்க. உங்கள பிரசவிச்சதும் இறந்துட்டாங்க. அப்போ தான் மக இறந்து போனதால உங்க பெரியப்பாட்ட போய் அழுத உங்க பாட்டி இந்த வசந்திக்கு உண்மைய சொன்னாங்க. அக்கா பெத்த ரெண்டு கைக்குழந்தைகள கண்டதும் வசந்திக்கு மனசு இளக்கமாயி உங்க பாட்டி கூட போய் கல்யாணமே பண்ணாம உங்களுக்காக தன் வாழ்க்கய தியாகம் பண்ணிட்டாங்க. நீங்க நம்பணும்கறதுக்காக உங்க அப்பா அவங்கள விட்டு போன மாதிரி அடிக்கடி பொலம்புவாங்க.'
சம்பதாவிற்கு குடம் குடமாய் கண்ணீர் வந்தது.
பெத்த அம்மா விட்டுப் போன பிறகும் தங்களுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த சித்தியை நினைத்து அவளுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
'இந்த காப்ரியேல் கூட சம்யு பழகறத தெரிஞ்சு உங்க அம்மா ரொம்பவே மன உளைச்சல்ல இருந்தாங்க. காதல்னால உங்க அம்மா தேவி இறந்ததுனால காதல்னாலெ இந்த உங்க அம்மாவுக்கு பிடிக்காது.'
'இப்ப என் மனசு மாறிடிச்சி பாலு.'
'ஙீ' என்று பார்த்தார் பாலு.
'ஆமாம். அந்த சரவணன் மாதிரி இல்ல இந்த கேப்ரியல். உண்மையா என் பொண்ண லவ் பண்றான். இந்த சம்பவத்த கூட மறைக்க ஒரு திட்டம் சொல்றான். இவங்க ரெண்டு பேரும் சினிமா பாத்துட்டு உணர்ச்சி மிகுதியால தனியா இருந்ததாவும் அப்போ செந்நாய் கூட்டம் ஒண்ணு இவங்கள தொரத்தி இப்படி ஆயிட்டதாவும் வாக்குமூலம் குடுக்கலாம்னு சொல்றான். அதோட சம்யுக்தாவ ஒடனே கல்யாணம் பண்ணி பாதிக்கப்படற அவ மனசுக்கு ஆறுதலா இருக்கறேன்னு சொல்றான் பாலு. இந்த மாதிரி அந்த சரவணன் அன்னைக்கு சொல்லி இருந்தா எங்கக்கா உயிரோட இருந்திருப்பாளே பா.லூஊஊஊஊஊ'
அம்மா அரற்ற ஆரம்பித்தாள்.
பாலு அங்கிள் நெகிழ்ந்து காப்ரியேல் பக்கம் வந்தார்.
'நீ சொல்றது உண்மையாப்பா?'
காப்ரியேல் அவரைப் பார்த்தான்.
'சம்யு உங்களப் பத்தி நெறய சொல்லி இருக்கா அங்கிள். ஆண் பெண் நட்புக்கு இலக்கணமா எங்க பாலு அங்கிள தான் சொல்லுவேன்னு சொல்லி இருக்கா. நான் சொன்னது எல்லாம் உண்மை தான் அங்கிள். நான் சம்யுவ கல்யாணம் பண்ண தயாரா இருக்கேன். அவளுக்கு முழிப்பு வந்ததும் அவ கழுத்துல தாலி கட்டுவேன். இப்ப போலீசுக்கு வாக்குமூலம் கொடுக்கணும்..அதான் அம்மாட்ட கேட்டேன்.'
பாலு அங்கிள் அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.
'எங்க இருந்தோ வந்த நீ... எனக்கு வார்த்தையே வரலப்பா. சரி ஒன் இஷ்டப்படியே வாக்கு மூலம் கொடு. அப்படியே சம்யுவயும் சொல்ல வச்சிரலாம். நீ என்ன நெனக்கற வசந்தி?'
அவள் கண்ணீர் ததும்பும் கண்களுடன் தலை அசைத்தாள்.
உடனே அவர்கள் வெளியே சென்று போலீசிடம் சொன்னார்கள் காப்ரியேல் பேசத் தயாராகி விட்டான் என்று.
போலீஸ் உடனே உள்ளே நுழைந்தார்கள்.
காப்ரியேலிடம் விஷயத்தை கேட்டு விட்டு சம்யுக்தா கண் விழித்ததும் வருவதாகச் சொல்லி சென்றார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து மெதுவாகக் கண் திறந்தாள் சம்யுக்தா. கண் திறக்கும் போது முதலில் தென்பட்டது காப்ரியேலின் முகம் தான்.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக முகத்தில் வழிந்தது.
'ஹாய் மை ஏஞ்சல்!'
சம்யுக்தாவின் கை மெதுவாக உயர்ந்து அவன் தலை கட்டை தடவியது.
'நத்திங். ஐம் ஆல்ரைட் நவ். நான் ஒண்ணு கேட்டா சம்யு தருவாளா?'
அவள் மெதுவாகத் தலையை இருபுறமும் திருப்பினாள். அம்மா, பாலு அங்கிள், பூரணி ஆண்டி, சம்பதாவைக் கண்டதும் அவளது முகம் சுருங்கியது.
'எல்லோருக்கும் நம்ம விஷயம் தெரியும் சம்யு. உங்க அம்மா ஓகே சொல்லிட்டாங்க.'
அவள் அம்மாவைப் பார்த்து விட்டு பார்வையை எடுத்துக் கொண்டாள்.பெட்டில் அவள் அருகில் உட்கார்ந்திருந்த அம்மா அவள் கையைத் தனது கையில் வைத்துக் கொண்டாள்.
'சம்மதம் சம்யு. நீ நல்ல பையனா தான் தேர்ந்தெடுத்திருக்க.'
ஆனா இப்ப இந்த நெலமையில...
சம்யுக்தாவிற்கு அந்த இரவில் நடந்த விஷயங்களும் உடல் வலியும் நினைவுக்கு வர கண்களை மூடிக்கொண்டு வேகமாய் தலையை இருபுறமும் அசைத்தாள்.
காப்ரியேல் அவள் முகத்தைத் தொட்டான்.
'சம்யு. கண்ணத் தொறந்து பாரு.'
அவள் மெல்ல கண்களைத் திறந்தாள்.
கண்ணீர் படலத்தின் நடுவே மஞ்சளாக ஏதோ தெளிவற்று தெரிந்து கண்ணீர் கண்களை விட்டு அகன்றதும் மஞ்சள் கயிறு தெரிந்தது.
அதிர்ச்சியில் கண்களை விரித்து 'வேண்டாம்' என்று வாயைத் திறந்து சொன்னாள்.
'சம்யு. நான் காதலிச்சது ஒன்ன. வேற எதயும் இல்ல. ஜெயகாந்தன் கத ஒண்ணு நீ சொல்வேல்ல. தலைக்கு தண்ணி ஊத்தினதும் சரியா போச்சுன்னு. இதுவும் அப்படித்தான். மனசால கெட்டா தான் தப்பு. நாய் வாய்ல தேங்கா கெடச்சது அந்த தேங்கா தப்பில்ல. தவற விட்ட என் மேல தப்பு.'
இல்லை என்பது போல் தலை ஆட்டினாள் சம்யு.
'எனக்கு ஒன்ன கல்யாணம் பண்ண சம்மதம். இங்க இருக்கற எல்லாருக்கும் சம்மதம். நீ என்ன சொல்ற? அங்க பாரு சம்பதா வீடியோ எடுக்க ரெடியா இருக்கறா.'
சம்பதாவை சம்யு பாக்க, 'சம்யு. ம்ம். ஓகே சொல்லு. எனக்கு நைஜீரியாலாம் பாக்கணும்.' என்று சிரித்தாள்.
'நீ நைஜீரியா பாக்க நான் இவன கல்யாணம் பண்ணனுமாடி.' என்று மெல்ல சொன்னாள் சம்யு.
'அக்கா..' என்று செல்லமாய் கோபித்தாள் சம்பதா.
'சரி. என் சம்பதாவுக்காக.'
'ஆகா. இது போங்கு.'
சம்யு அம்மாவைப் பார்க்க அவள் தலை அசைக்க சம்யுக்தா காப்ரியேலை காதலுடன் பார்த்தாள்.
அவள் கண்கள் சம்மதம் தெரிவிக்க, சம்பதா வீடியோ எடுக்க அங்கு ஒரு மாங்கல்யம் தந்துனானே நடந்தது.
பாலு அங்கிள், பூரணி ஆண்டி வாழ்த்து தெரிவித்து 'குணமான பின்னால ஒரு ரிஷப்சன் வச்சுக்கலாம். அதுக்குள்ள காப்ரியேலுக்கு அவசரம். ஒன் பக்கத்துலயே இருந்து ஒன்ன கவனிக்கணுமாம் அதுவும் லைசன்சோட.'
சம்பதா அம்மாவை சீண்டினாள்.
'சரிம்மா. அடுத்து நான் காதலிக்க போட்டுமா? சம்மதம் கெடைக்கும் இல்ல?'
'இந்த தங்கமான பையன் மாதிரி நீனும் ஒன்ன புடிச்சிட்டு வா. நானேகல்யாணம் பண்ணி வைக்கறேன்.'
'இந்த மாதிரி ஒன்ன புடிக்க நான் எங்க போவேன்? என் நைஜீரிய அத்தானே! ஒனக்கு தம்பி உண்டா?'
'ஏன் அந்த டென்சில் இருக்கான் தான. பக்கத்து கன்ட்ரி தான்.'
'அவனா? அவன் அதுக்கு சரிப்பட மாட்டான்.' என்று அவள் வடிவேலு பட ஜோக் பாணியில் சொல்ல அனைவரும் சிரித்தனர்.


கதை முடிய வில்லை.

ஊட்டியை நோக்கி ஒரு பைக் சென்று கொண்டிருந்தது மாலை நேரத்தில்.
அதில் மூவர் சிரித்துப் பேசியபடி.
ஆறாவது ஹேர்பின் வளைவில் திரும்பும்போது தனியாக ரோட்டில் நிற்கும் ஒற்றை யானை கண்ணில் பட பைக் ஓட்டுபவன் அதிர்ந்து நிலைகுலைய வண்டி ரோட்டை விட்டு நகர்ந்து பெண்டின் மரம் ஒன்றில் மோதி மூவரும் தனித்தனியாக அந்தரத்தில் பறந்து கீழே அதல பாதாளம் நோக்கி விழுந்தனர். விழுந்த இடம் சப்பாத்திக் கள்ளிகள் நிறைந்த பகுதி. அவர்களின் இடுப்பு பாகத்திற்கு நேரே கீழே சப்பாத்திக் கள்ளிகளின் கொழுத்த முட்கள் பதம் பார்க்க ஆவலாய் காத்திருக்க நடக்கப் போவதை அறிந்த சிவா, சூரியா, அந்த ட்ரைவர் மூவரும் அந்த கானகம் முழுக்க கேட்குமாறு அலறினர்.


(சுபம்)

 
Nice climax.
Saravanan ah vittuteengale authore, devi ya kodumai paduthiya beasts kum thandanaya illaya?
Devikum gnayam seyungo.
Katha konjam horsh subject, pala idangalil kodurama irrunthathu,yosikave mudiyala.(can't reply as nice epi).
first story pol author active ah illa,battery romba low.
 
Top