Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 3

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் 3

"என்ன விளையாடுறீயா..?? என்னால முடியாது போ.."



என்று வேகமாய் மறுத்த ஆஷிக் அங்கே இருந்த மர பெஞ்சில் சென்று அமர்ந்துக் கொள்ள அவனுக்கு இருபுறமும் வந்து அமர்ந்துக் கொண்டனர் உதயாவும் கல்பனாவும்..



அவர்கள் தெரு முனையில் இருக்கும் பூங்காவில் தான் அந்த நண்பர்கள் குழு கூடியிருந்தது.



"இதான் நீ எனக்கு செயுற லாஸ்ட் ஹெல்ப்..இனிமே ஒன்னுமே உன்னிடம் கேட்கமாட்டேன்..ப்ராமிஸ்..வந்து பேசுடா.."



என்ற உதயாவை முறைத்து பார்த்த ஆஷிக்,



"இத்தோட இது நூத்தி எட்டாவது லாஸ்ட்..இந்த வாட்டியும் உன் ப்ராமிஸை நம்பி ஏமாந்து என்னால தர்ம அடி வாங்க முடியாது.."

என்று சட்டமாய் சொல்லிவிட அவனை கூர்ந்து பார்த்த உதயா,



"முடிஞ்சிருச்சுல..அவ்வளவு தான நம்ம ஃப்ரெண்ட்ஷிப்..விரலு சூப்புற காலத்தில் இருந்து நாம கடைப்பிடிச்ச நட்பை உடைச்சிட்டேல.."

என்று தலையசைத்து பாவமாய் சொல்ல அது கொஞ்சம் வேலை செய்தது.



"ஹே இங்க பாரு உதயா..எனக்கு சாரிடம் பேசவே பயம்னு தெரியும் தானே..இதுல உனக்காக நான் பேசனுமா..??அதுவும் நீ போகிற ரூட்டே சரி இல்லை..முதல்ல எதாவது பிரச்சனைனா அடிவாங்க போறது யாரு..??உன்னை அழைச்சுட்டு போன நான் தானே..!!"



"டேய்..நீ ஸ்கூல் முடித்து பல வருஷம் ஆச்சு..இன்னும் எங்க அப்பாக்கு பயப்படுறதே டூ மச்.."



"எத்தனை வருஷம் ஆன என்ன..அவருட்ட வாங்குன அடியெல்லாம் மறக்குமா..கணக்கு வரலேனாலே அந்த அடி அடிப்பாரு..இதுல நீ.."



என்று அரம்பிக்கும்போதே,



"மூடு.." என்றவள் " உன்னை அழைச்சுட்டு வர சொன்னது அண்ணன் தான்..எல்லா விஷயத்தையும் நான் சொல்லி சம்மதம் வாங்கிட்டேன்..ஜெஸ்ட் உன்னுட்ட என்ன ஏதுனு விசாரிக்க தான் கூப்பிட்டாங்க அதுக்கு போய் ஏன் இவ்வளவு பில்டப் கொடுக்கற.."

என்க,



"எல்லா விஷயமும் சொன்னீங்கன்னா எப்படி..உதய் அண்ணா மேல உனக்கு ஒரு கண்ணு..அவரோட இன்ரோ ஆகதான் இந்த ஷார்ட் ஃப்லீம் நடிக்கிறது..இதையுமா..?"

என்றான் நக்கலாக..



"டேய்..வாய்மேலே ஒன்னு போடுவேன்..நான் என்னவோ அவரை லவ் பண்றா மாறி சொல்ற..நான் ஜெஸ்ட் அவரோட ஃபேன் அவ்வளவு தான்..அவரும் ஒரு காரணம் தானே தவிர நான் அவருக்காக எல்லாம் நடிக்க ஆசைப்படல.."

என்று பூசி முழுக அதற்கு,



"ம்ம்ம் அதானே..சிம்பிள்.."

என்று தோளை குலுக்கி கையில் வைத்து இருந்த வேர்கடலையை சாவகாசமாய் சாப்பிட்டபடி ஆமோதித்த கல்பனாவின் தலையில் கொட்டிய ஆஷிக்,



"இந்தா...இது கிளப்பி விடுறது தான் எல்லாம்.."

என்க, "லூசு..நான் என்னடா பண்ணேன்.."

என்றாள் தலையை தேய்த்துக்கொண்டு..



எதுவும் சொல்லாமல் அவளை முறைத்தபடி அங்கிருந்து எழுந்து தள்ளி வந்து நின்றவன்,



'ஹையோ..இவளுட்ட உதய் அண்ணனை பத்தி சொன்னதே மொதோ தப்பு..'

என்று மானசீகமாய் எண்ணிக்கொண்டான்.



உதயாவின் நெருங்கிய நண்பர்கள் என்றால் அது ஆஷிக் மற்றும் கல்பனா தான்.. இவர்கள் மூவரின் வீடும் பக்கம் பக்கம் தான் என்பதால் சிறு வயதில் இருந்தே உருவாகிய நட்பு அவர்களிடம் மட்டும் இன்றி அவர்கள் குடும்பங்கள் இடையிலும் நல்லதொரு உறவாய் இருந்தது.ஆஷிக், உதயா-கல்பனாவை காட்டிலும் ஒரு வயது பெரியவன் என்றாலும் அந்த வித்தியாசம் இன்றி தான் பழகி வந்தனர்.



அப்பொழுது அவனை அணுகிய ஒரு பெண்,



"எக்ஸ்கியூஸ் மீ..நீங்க இன்ஸ்டா ஃபேம் ஆஷிக் தானே.."



என்று கேட்கவும் அவன் முகம் உடனே பிரகாசமாக,



"யா...யா..நானே தான்.." என்றான் சற்று அலட்டலாக..

அப்பெண்ணும்,



"ஆஷிக்..உங்க வீடியோஸ்..சின்ன சின்ன ஸ்கிட் எல்லாமே ஆஸமா இருக்கும்..எனக்கு ரொம்ப பிடிக்கும்..எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..உங்க போஸ்ட் எதையும் மிஸ் பண்ணாம நான் லைக் பண்ணிடுவேன்.."



என்று அப்பெண் பேசிக்கொண்டே போக அதற்கு பதிலாய் அவனும் கடலைப்போட கடுப்பான பெண்கள் ஒருவரையோருவர் பார்க்க சட்டென்று குறும்பாய் சிரித்த கல்பனா உதயாவிடம் 'இப்போ பாரு..'

என்றபடி எழுந்தவள்,



"ஏ...மாமோய்.."

என்று இங்கிருந்தே கத்த,



"இது கல்பனா குரல் மாறி இருக்கே..எந்த மாமாவ கூப்பிடுறா..”

என்று யோசித்தபடி திரும்பிய ஆஷிக் அவள் தன்னை பார்த்து தான் அழைக்கிறாள் என்று புரிந்ததும்,

'ஆஹா..சாத்தான் ஏதோ ப்ளான் பண்ணிருச்சு போலவே..' என்று அபாய மணி அடிக்க அதற்குள் அவள் அவனை நெருங்கியிருந்தாள்.



"ஏனுங்க மாமா..என்னை தனியா வுட்டுபோட்டு இங்க என்ன பண்றீங்க..யாரு இந்த அம்மணி உங்க உறவுகார புள்ளையா..ஜிங்குச்சா ஜிங்குச்சானு ரொம்ப அழகா உடுப்பு உடுத்தி இருக்க தாயி.."

என்று அவளிடம் கூற முகத்தை சுருக்கி,



"யாரு இந்த லேடி..ஆஷிக்.."

என்று அப்பெண் கேட்க அவன் பதில் கூறும் முன்,



"ஐய்ய..என்ர மாமன் பேரு ஆஷிக் இல்லிங்க..அவரு பேரு ஆன்டிப்பட்டி ஷண்முகம்..இல்லீங்க மாமா..."

என்று கூறி,



"சரி..ஊர சுத்தி காட்டறேன்னு தானே இந்த புது உடுப்பு எல்லாம் வாங்கி கொடுத்து கூட்டியாந்தீங்க..பொறவு இங்கேயே நின்னு வெட்டி கதை பேசிட்டு நின்னா எப்படி..புள்ளைங்க எல்லாம் ஸ்கூல் விட்டு வந்திடுங்க மாமா...வாங்க வெரசா நேரத்தோட ஊர பாத்து போவோம்..இல்லேனா உங்க ஆத்தா சாமியாடிடும்.."

என்று இமைக்கொட்டி அப்பாவியாய் அவள் படப்படக்க 'டோட்டலீ டேமேஜ்டு..' என்று கண்ணை மூடி தன்னை கட்டுப்படுத்தியவன் அப்பெண்ணை நோக்கி திரும்ப அதற்குள் அவள் பாதி தூரம் சென்றிருந்தாள்.



"ஹலோ..ஹலோ எக்ஸ்கியூஸ் மீ..உங்க ஐடியாச்சும் சொல்லிட்டு போங்க.."

என்று அவன் கத்தியது காற்றோடு தான் போனது.



"ஹிஹி..அவ போய் அரைமணி நேரம் ஆச்சு..போதும்..வாரும் ஐயா.."

என்று அவள் சொல்ல குபீரென்று சிரித்தபடி எழுந்து வந்த உதயா கல்பனாவிடம் ஹைஃபை கொடுக்க இருவரையும் முடிந்த வரை முறைத்தவன்,



"பிசாசுங்களா..நீங்க இருக்கிற வரை ஒரு பொண்ணை உசாரு பண்ண விட மாடீங்களே.."

என்க,



"ஹோ..ஐயாக்கு பொண்ணு கேட்குதோ..இத போய் அப்படியே உன் வாப்பாட்ட சொன்னேன்னு வையேன்.."

என்று அவள் இழுக்கவும்,



"தெய்வமே..வாயே தொறந்துடாத புண்ணியமா போகும்..மனுஷன் தோளுக்குமேல வளர்ந்த புள்ளேன்னு கூட பார்க்காம தோள உரிச்சிடுவாரு.."

என்று சொல்ல 'அந்த பயம் இருக்கனும்..' என்றவள் "இப்போ முடிவா என்ன சொல்ற.."

என்று கேட்க,



"மாட்டேன்னு சொன்னால் விடவா போற..வந்து தொலையும்.."

என்றான் சலிப்பாக..



ஆஷிக்கின் கனவு,இலட்சியம் எல்லாம் சினிமாவில் பெரிய கதாநாயகன் ஆக வேண்டும் என்பதே..சிறு வயதில் இருந்தே முளைத்த ஆசையை அடைய வீட்டில் போராடி அனுமதி வாங்கி கோடம்பாக்கம் வந்த போது இதே கனவோடு அங்கே குவிந்த பல ஆயிரம் இளைஞர்களில் ஒருவனாய் படாத கஷ்டம் இல்லை.சினிமாவின் கருப்பு முகத்தின் பிடியில் சிக்கி வாய்ப்பிற்காக நாய்ப்படாத பாடாய் அவன் அழைந்த போது சிறு ஒளி என அவனுக்கு கிடைத்த நம்பிக்கை தான் உதய் குமார்.



தவரூபனிடம் வாய்ப்பு கேட்டு சென்ற போது உதய்யின் அறிமுகம் கிடைத்திருத்தது. சினிமாவின் சில நெளிவு சுழிவுகளை கற்று கொடுத்து அவனுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தந்த உதய் மீது ஆஷிக்கிற்கு கடலளவு நன்றி உணர்வு இருந்தது.



தோழிகளிடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் ஆஷிக், உதய் குமார் பற்றியும் கூறி அவனையும் அறியாமல் உதயாவின் மனதில் சிறு ஆர்வத்தை விதைத்திருந்தான்.



உதய் என்ற பெயரில் தொடங்கி நண்பனிடம் அவன் காட்டிய அணுகுமுறை அவளிற்கு சிறு ஆர்வத்தை தோற்றுவிக்க அவனது குறும்படங்களை தேடி எடுத்து பார்த்தாள்.வழக்கமான கதைகளை காட்டிலும் அவன் படங்களில் தெரிந்த ஏதோ ஒரு வித்தியாசமும் அவன் அதனை காட்சி படுத்திருக்கும் விதமும் அவன் திறமையை பறைசாற்ற அவனுடைய விசிறியானாள்.அதன்பின் ஆஷிகிடம் போட்டு வாங்கி அவனை பற்றி தகவல்களை தெரிந்துக்கொள்ள கல்பனா தோழியை கண்டுக்கொண்டாள்.அதனை கொண்டு கிண்டல் செய்தாலும் நல்ல தோழியாய் அறிவுரை கூறவும் மறக்கவில்லை.



இந்நிலையில் தான் உதய் மீண்டும் எடுக்கவிருக்கும் குறும்படத்தில் ஆஷிக்கை நாயகனாக தேர்ந்தெடுத்து இருக்க பேச்சு வாக்கில் ஆஷிக் அப்படம் திருப்பூரில் தான் எடுக்கவிருப்பதாகவும் இன்னும் நாயகி கதாபாத்திரத்திற்கு தகுந்த பெண் தேர்வு செய்யவில்லை என்றும் கூறியிருக்க 'நாம நடித்தால் என்ன..' என்ற யோசனை அவளுள் வந்தது.



இதனை அப்படியே ஆஷிக்கிடம் சொன்ன போது தான் தோழியின் எண்ணப்போக்கை யூகித்தவன் உண்மையில் பயந்து போனான்.



"லூசு மாதிரி எதுவும் கற்பனை பண்ணாதே..நீ நினைக்கிற மாதிரி எல்லாம் உதய் அண்ணா கிடையாது..அத்தோட உன் வீட்டில் தெரிஞ்சுது நான் தான் உன்னை வழிமாத்தி விட்டேன்னு சாவடிச்சிடுவாங்க..வேணாமா தாயே.."



என்று அவன் அலற அதை எல்லாம் பொருட்படுத்தினாள் அது உதயா அல்லவே..!

அவனை எப்படியோ சமாதானம் படுத்தியவள் இறுதியில்,

"முடிவை உதய் சர் கையிலே விட்ருவோம்..என் பிக்சர் காட்டு..அவர் ஓகே சொன்னா ஓகே..இல்லேனா வேணாம்.."

என்று சொல்ல அண்ணன் வேணானு சொல்லிடணும் என்ற வேண்டுதலோடு அவனிடம் விஷயத்தை கொண்டு சென்றான்.



பாவம்..!! விதியின் தீர்மானத்தை ஆஷிக் என்ன முயன்றும் மாற்றி அமைக்க முடியவில்லை.விளைவு இன்று உதயா வீட்டில் அணுமதியும் பெற்றாகிற்று..



துருவி துருவி ஆயிரம் கேள்வி கேட்ட அண்ணன்மார்கள் இறுதியில்,



"உனக்கே தெரியும் ஆஷிக்..உதயா குறும்புகார பொண்ணு..உலக விபரம் பத்தாது..நீ தான் பாத்துக்கணும்..எதாவது பிரச்சனை என்றால் நீ தான் பதில் சொல்லணும்.."

என்று முடித்துவிட 'ஏது உங்க தங்கச்சிக்கு விபரம் தெரியாதா..அடபாவிங்களா..' என்று வாயை பிளந்தவன் 'அடிவாங்குறதுனு முடிவாகிடுச்சு..இனி நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்துறதை தவிர வேற வழியில்லை..!'

என்று பெருமூச்சு விட்டவன் இனி நடப்பது நடக்கட்டும் என்று ஆஷிக்கும் விட்டு விட்டான்.



ஆனால் இவ்வளவையும் செய்துவிட்டு இறுதியில் அவர்களை நேரில் சந்திக்க ஆஷிக் அழைத்து சென்ற போது,



"ஆஷிக்..எனக்கு நடிக்கவெல்லாம் வருமா தெரியல..நர்வஸா இருக்கு..பேசாமல் நான் வீட்டுக்கே போறேன்..நீங்க வேற ஆள பாத்துக்குறீங்களா.."

என்றாளே பார்க்கலாம்..!! உச்சக்கட்ட கடுப்பில் கண்களில் கனலை கக்கியவன் பல்லை கடித்து,



"மவளே பின் வாங்க நினைச்ச..ஃப்ரெண்ட்னு பார்க்க மாட்டேன்..சாவடிச்சிடுவேன்.."

என்று மிரட்ட அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்து,



"ஹிஹி..சும்மா சொன்னேன்..பயந்துட்டியா.." என்று சமாளித்தவள் பின்,



"ஆமா..இது யாரு வீடு..உதய் சர் வீடா.."

என்றாள் தங்கள் முன் இருந்த வீட்டை காட்டி..



"இல்ல..இல்ல..அண்ணா கோயம்புத்தூர்..இது சசி அண்ணா வீடு..வா..எல்லாரும் ஏற்கெனவே வந்துட்டாங்க போல.."

என்றான் அங்கிருந்த இருசக்கர வாகனங்களை பார்த்தவண்ணம்..



பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்த நிமிடங்களிலும் அவளுள் இருந்த இனம் புரியாத படபடப்பு அடங்கவே இல்லை..ஏதோ ஓர் கண்மூடித்தனமான ஆசையில் எல்லாவற்றையும் செய்துவிட்டு இன்று நேரில் பார்க்க வேண்டும் என்றதும் தயக்கமும் பதட்டமும் அழையா விருந்தாளியாய் அவளை தொற்றிக் கொண்டது.



கதவை திறந்த சசி இவர்களை கண்டதும்,



"ஹே..ஆஷிக்..வா..வா..." என்றவன்,



"வாங்க உதயா.." என்றான் அறிமுகப் புன்னகையோடு..



அவளும் பதிலுக்கு புன்னகைத்து அவனை தொடர்ந்து உள்ளே செல்ல கலகலவென பேச்சும் சிரிப்புமாய் அவர்கள் குழுவே இருந்தனர்.கிட்டதட்ட பத்திற்கும் மேற்பட்டோர்.இவர்களை கண்டதும் வரவேற்பாய் பல குரல்கள் எழும்ப எல்லாரையும் பொதுவாய் பார்த்து புன்னகைத்தாலும் யாரையும் அவளுக்கு தெரியவில்லை.ஆஷிக் இயல்புப்போல் அவர்களோடு பேசியபடி நிற்க சங்கடமாய் பார்வையை சுழலவிட்டவளின் கண்ணில் விழுந்தான் உதய் குமார்.ஏற்கெனவே புகைப்படத்தில் பார்த்து இருந்ததால் பார்த்ததும் அடையாளம் தெரிந்தது.



விரிந்த சிரிப்புடன் இவர்களை நோக்கி அவன் வரவும் சட்டென்று இதயம் வேகமாய் துடிக்க விழிகள் அலைப்பாய்ந்தது.ஆஷிகிடம் சப்பை கட்டு கட்டினாலும் உண்மையில் இவனுக்காகவே தான் அவள் இவ்வளவு தூரம் வந்தது.எனவே அது நிகழும் நேரம் சுற்றி உள்ள அனைத்தும் மறந்து அவன் மட்டுமே தெரிய தன் இதய துடிப்பு செவிகளை எட்டியது போல் ஒரு பிரம்மை தோன்றியது.



ஆனால் அவள் எண்ணத்தின் நாயகனிற்கு அதெல்லாம் தெரியவில்லை.அவர்களை நெருங்கியவன் ஆஷிக்கை தோளோடு அணைத்து, "வாடா.." என்றவன்

உதயாவிடம் கையை நீட்டி,



"வெல்கம் டூ அவர் டீம் உதயா..ஐம் உதய் குமார்.."

என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அவன் அறியாவண்ணம் உதயாவை பார்த்து குறும்பாய் ஆஷிக் புருவம் உயர்த்தி சிரிக்க அவனை கண்டுக்கொள்ளாது தன் பதட்டத்தை மறைத்து புன்னகையுடன் அவன் கையை பற்றி குலுக்கியவள் கையில் உணர்ந்த அவனது ஸ்பரிசத்தில் ரோமங்கள் சிலிர்த்தது.



'என்ன பண்ணிட்டு இருக்க உதயா..கடைசியா ஆஷிக் சொன்ன மாதிரி தான் பிஹேவ் பண்ற..உன்னை பத்தி என்ன நினைப்பாங்க..ஏதோ ஜெயில்லேந்து தப்பிச்சு வந்தவ மாதிரி திருதிருன்னு முழிக்காம நார்மலா இரு..'

தனக்கு தானே சொல்லிக் கொள்ள அதற்குள் அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினான் உதய்குமார்.



"ஹே காய்ஸ்..உங்க எல்லாருக்கும் தெரியும்..ஸீ இஸ் உதயா..அண்ட் உதயா..இவங்க தான் நம்ம டீம்..இவர் சசி..நம்ம டீமோட தளபதி..சினிமோட்டோக்ரஃபர்..கேமாரா பிடிப்பதில் இருந்து எடிட்டிங் வரையும் எல்லாம் சர் தான்..அப்புறம் இவர் தருண்..ம்யூசிக் கம்போஸர்..இவன் ம்யூஷிக் அப்படியே நம்மை மெசிமரைஸ் பண்ணிடும்..டெஃபனேட்லீ யூ வில் லவ் இட்..அப்புறம் இவங்க அர்ச்சனா..சசி வொய்ப்..க்ரேட் சிங்கர்.."

என்று தொடங்கி ஒவ்வொருவரையும் அறிமுகம் படுத்த இயல்பு போல் தன்னை அவர்களோடு இணைத்துக் கொண்ட பாங்கில் நீங்கா புன்னகை அவளிடத்தில்..



சிறுக சிறுக தயக்கம் மறைந்து அவள் இயல்பு குணம் ஓங்க எல்லோரிடமும் சகஜமாய் வாயாட தொடங்கினாள்.



'மூவி டிஸ்கஷன்..' என்று தொடங்கி ஊர் உலகத்தையும் அலசி ஆராய்ந்து நண்பர்களின் அரட்டைகள் தொடர ஆங்காங்கே படக்கதை,காட்சி,லோகேஷன் ஆகியவற்றையும் விவாத்தித்தனர்.இவ்வாறாக அன்றைய பொழுது நகர உதயிடன் மட்டும் பேசும்போது உதயாவிடம் ஓர் தடுமாற்றம் வந்தது.மனதில் கள்ளம் இருந்ததாலோ என்னவோ அவனிடம் இயல்பாய் பேசமுடியவில்லை.தன்னை அறியாமல் விழிகள் அவனிடம் செல்வதும் மீள்வதுமாய் இருக்க சில மணி நேரத்திலே அதனை கண்டு கொண்டான் அந்த படைப்பாளன்.



பருவ வயது பெண்களின் மனசில் பட்டாம்பூச்சு பறப்பது போன்றதொரு எஃபக்டில் தன்னை அடிக்கடி நோக்கும் உதயாவை கண்டபோது மெல்லிய புன்னகை அவன் உதடுகளில் நெளிய அதனை விரல் இடுக்கில் மறைத்தவன் சுவாரஸ்யமாய் அவளது செய்கையை கவனித்தான்.



ஏனெனில் உதய் குமாரின் வாலிப வரலாற்றில் எந்த பெண்ணும் அவனை இப்படியெல்லாம் பார்த்தது இல்லை.தோற்றதிலும் அவன் வசீகரமாய் இல்லை.பேசி கடலைப்போட்டு பெண்களை மயக்கும் ஆர்வமும் அவனிடம் இல்லை.எனவே பெண்களால் 'போரிங் கேரக்டர்..' என்று ஒதுக்கி வைக்கப்பட்ட அக்மார்க் முரட்டு சிங்கிள் ரகம் தான் நம் டைரக்டர் சர்.

ஆகையால் முதல் முறை தன்னை ஒரு பெண் ஆர்வமாய் பார்ப்பதைக் கண்டு சுவாரஸ்யம் பிறந்தது.

'எவ்வளவு நேரம் தான் சைட் அடிக்கிறாள் பார்ப்போமே..' என்று விளையாட்டாய் எண்ணினானே தவிர அதற்குமேல் எந்த கற்பனையும் செய்யவில்லை.அவளை தவறாகவும் எண்ணவில்லை.



சிறிது நேரம் பொறுத்தவன் அவள் மீண்டும் ஒருமுறை தன்னை பார்த்தபோது,



"என்னாச்சு உதயா.." என்று பட்டென்று கேட்டு விட அனைவரின் கண்கள் என்ற கேமரா உதயாவை நோக்கவும், 'அடப்பாவி..' உள்ளே அதிர்ந்தவள் வெளியே,



"என்ன.." என்று புரியாதது போல் கேட்க,



"இல்ல..ரொம்ப நேரமா ஏதோ அன்கம்ஃபட்டபுளாவே உட்கார்ந்து இருந்தீங்க..அதான் கேட்டேன்.."

என்று குறும்புன்னகையை மறைத்து சீரியஸாய் கேட்க,



"இல்லை..அதெல்லாம் ஒன்னும் இல்ல.."

என்று அவள் வேகமாய் மறுக்க,



"ஆர் யூ ஸ்யூர்.."

என்று மீண்டும் கேட்கவும் உதடுகளை அழுத்தமாய் மூடி காதுவரை இழுத்துபிடித்து "இல்லவே இல்லை.." என்பது போல் தலையாட்ட, "ஓகே.." என்று அவன் திரும்பவும் தான் மூச்சே வந்தது. (அடப்பாவி..இப்போ தெரியுதுடா நீயேன் சிங்கிளாகவே இருக்கேன்னு..உன்னெல்லாம் கமிட்டட் ஆகுவதற்குள்ள....ஷப்பா...!!! இப்போவே கண்ணக்கட்டுதே..)



அதன்பின் அவனை ஏறெடுத்து பார்க்க நம் உதயா என்ன முட்டாளா..?அவன் இருந்த திசை பக்கம் கூட திரும்பவில்லை..இவ்வாறாக அந்த முதல் சந்திப்பு செல்ல எல்லாம் முடிவு செய்தபின் இறுதியாக சசி,



"எல்லாம் ஓகேடா..பட் படத்திற்கு டைட்டில் மட்டும் சொல்ல மாடுறீயே..இப்போவாவது சொல்லுவியா.."

என்று கேட்டு சிரிக்கவும் தானும் சிரித்தவன் சட்டென்று உட்கார்ந்த நிலைலேயே முன்னால் சற்று குனிந்து வந்து விரல்களை சொடக்கிட்டு,



"நொடிகளில்..."

என்று புருவங்களை ஏற்றி இறக்கி அவன் பாவனையோடு சொன்ன அந்நொடியில் உதயா உணர்ந்துக் கொண்டாள் தான் மீள முடியாதொரு ஆழி சுழலில் சிக்கிவிட்டோம் என்பதை..!!!
 
Last edited:
Top