Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 6

Advertisement

Sameera?

Well-known member
Member
Nethiku update seirenu solli irunthen..but konjam busy aagiten makkale?? athan late..

Read and give ur valuable comments ?

அத்தியாயம் - 6

"நிலா...ரொம்ப பேசுற..வாய மூடு..எழுந்து ஸ்கூல் கிளம்பு.."



கடினமான குரலில் வெண்பா மிரட்ட அதை எல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை.தான் ஆசைப்பட்டது கிடைக்காத ஆதங்கத்தில் தாய் மீது கோபமாய் வர அவள் சொல்வதை செய்ய கூடாது என்ற முடிவோடு வாயிக்கு வந்ததைப் பேசினாள்.



"நான் அப்படி தான் பேசுவேன்...நீங்க எப்போவும் அப்பாவை ஹர்ட் பண்ணிட்டே இருக்கீங்க ம்மா..என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அம்மா - அப்பா பத்தி சொல்லும் போது எனக்கும் எவ்வளவு ஆசையா இருக்கும் தெரியுமா..!!உங்களையும் அப்படி பார்க்க..!!!ஆனால் உங்களுக்கு எதுவுமே பிடிக்காது..எனக்கு வேற அம்மா இருந்திருக்கலாம்.."

என்று அவள் கூறிய மறுநிமிடம் பளீரென்று மகளின் கன்னத்தில் அறைந்து இருந்தாள் வெண்பா.



நிலாவின் பேச்சிலே திகைத்து நின்ற மதி அவள் கைநீட்டவும்,



"லூசாடி நீ..அவ தான் புரியாமல் பேசுறானா..நீயும் கை நீட்டுற.."



என்று நிலாவை இழுத்து தன் புறம் வைத்துக் கொள்ள நிலைமை கைமீறுவதை கண்டும் தடுக்க முடியாமல் தவித்தனர்.



நிலாவை இதுவரை அடித்தது எல்லாம் இல்லை.ஆனால் இன்று அவள் பேச்சு வெண்பாவை மிகவும் ஆத்திரப்படுத்தி விட்டது.அதிலும் அவள் பேசியதை கண்டிக்காமல் மகள் முன்பே தன்னை கடியும் மதியின் மீதும் ஆத்திரம் பொங்க,



"ஆமா..லூசு தான்..இவளுக்காக வேற எதுவுமே வேணாம்னு உதறிட்டு வந்தும் இவ வாயாலே இந்த பேச்சு வாங்குறேனே...நான் லூசு தான்.."

என்று இரைந்தாள்.



"எதுக்கு எதை பேசுற வெண்பா..உனக்கு என் மேல கோபம்னா அதை என்னுட்ட காட்டு..ஏன் பிள்ளையிட்ட காட்டுற.."



"தோ..இப்ப புரியுது..இவ எங்கேந்து இப்படி பேச கத்துகிட்டானு..நீங்க இப்படி சொல்லும் போது இவளுக்கு இப்படி தான் தோணும்..நான் தான் உங்களை கொடுமை படுத்துற மாதிரி..நீங்க எல்லாம் நல்லவங்க..நான் மட்டும் கெட்டவ..அப்படி ஒரு பிம்பத்தை தானே நீங்க உருவாக்கி வைச்சுருக்கிங்க..”



என்று கோபமாய் கத்தி,



"ஆமா..உங்க மேல நான் ஏன் கோபப்படணும்..கோப படக்கூட உரிமை வேணும்...உங்களை பத்தி கோபமாய் நினைக்க கூட எனக்கு ஒண்ணும்..இல்ல..போதுமா..."



என்று அழுத்தமாய் கூறி யாரையும் ஏறெடுத்தும் பார்க்காது தன் அறையில் சென்று முடங்கிவிட எல்லோர் முன்பும் அவள் இவ்வாறு சொன்னது மதியை மிகவும் காயப்படுத்திவிட அங்கே நிற்க முடியாமல் விடுவிடுவென வீட்டை விட்டு வெளியேறினான்.



சண்டையில்லாமல் அமைதியாகவாவது இருந்தார்கள்.சேர்த்து வைப்பதாக நாம் தான் பிரச்சனையை உருவாக்கி விட்டோமோ என்று ஜெகன் வருந்தமாய் எண்ணினான்.கழகம் பிறந்தால் தானே வழி பிறக்கும்..!!விதி அவனை பார்த்து சிரித்தது.



தயாவிடம்,



"இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல தயா..”

என்று வருந்த,



"நாம ஒன்னு நினைக்க..இங்க எல்லாம் வேற மாதிரி போயிடுச்சு..சரிடா..அண்ணா கோபமா போனாங்க..நான் என்னானு பார்க்கிறேன்..நீ நிலாவை கவனி.."

என்று கூறி வெளியேற அன்னையின் அடியில் அதிர்ந்து நின்ற நிலாவை அப்பொழுது தான் பார்த்தவன், "நிலாம்மா..இங்க பாரு..என் செல்லம்ல.."

என்று பேசியபடி அவளை தனியே மாடிக்கு அழைத்து சென்றான்.



வாழ்த்தி நிமிடங்கள் கூட கடக்காத நிலையில் சிறிதாய் இருந்த சந்தோஷம் கூட இல்லாமல் போனதை எண்ணி மனம் கலங்கி போனவராய் எதுவும் செய்ய இயலாது தளர்ந்துப் போய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட,



"அப்பா.."



"மாமா.."



என்று பதறி அருகில் வந்தனர் உதயாவும் லாவண்யாவும்..



"என்னால தாங்க முடியலம்மா..என் வார்த்தை எல்லாம் தான் இவங்களை பாடாய் படுத்துது..ஜோதிக்கு பதில் நான் போய் சேர்ந்திருக்க கூடாதா.."



பிதற்றிய தந்தையை கண்டு,



“ஏன்ப்பா இப்படி எல்லாம் பேசறீங்க..இப்ப என்னாகி போச்சு..இத்தனை நாள் பேசாமலே இருந்தாங்க..இப்போ சண்டை போட்டாவது பேசினாங்கல்ல..கொஞ்ச நாளில் பாருங்க...எல்லாம் சரியா போயிடும்.."

என்று ஆறுதலாய் அவர் தோளை பற்றி,



"சரி நீங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கப்பா.." என்று அவரை அறைக்கு அனுப்பி வைத்து,



"இன்னும் யாரும் எதுவுமே சாப்பிடலல..வாங்க அண்ணி..நேரம் ஆகுது..எதாவது நாம செய்யலாம்.."

என்று லாவண்யாவோடு அடுத்தடுத்து ஆக வேண்டியதை கவனித்தாள்.



தங்களுக்கு தெரிந்த வகையில் அன்றைய சமையலை செய்தபின் உதயா வெண்பாவை தேடி வந்தாள்.



கட்டில் தலைமாட்டில் கையை முட்டுக் கொடுத்து அதில் முகம் புதைத்து அமர்ந்திருந்த வெண்பாவை நெருங்கி,



"அண்ணி.." என்று கூப்பிட அப்பொழுது தான் அவளை கவனித்தவள் கையை விலக்கி கன்னத்தில் கோடாய் வழிந்திருந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தாள்.



"சாரி அண்ணி..உங்களை ஹர்ட் பண்ணனும்னு இதெல்லாம் செய்யல..தப்பா எடுத்துக்காதீங்க.."



என்ற உதயாவிடம் மறுத்து தலையசைத்த வெண்பா, "இல்ல..நீ ஏன் சாரி கேட்கிற உதயா..நீங்க ஆசைப்பட்டு செஞ்சது எதுவுமே தப்பில்லை.நான் தான்..நான் தான் சரிக்கிடையாது.." என்று சொல்லவும் அவள் ஏதோ சொல்ல அவளை விடாது தானே பேசினாள்.



"உண்மையை சொல்லு..இந்த அண்ணி பழசையே ஏன் புடிச்சுட்டு தொங்குறாங்க..அதை மறந்து அண்ணனோட அவங்க வாழ்க்கையை யோசிக்க மாட்டாங்களானு நீயே யோசித்து இருப்ப..ஏன் எல்லாருக்குமே அப்படி தான் தோணும்..ஆனால் என்னால அதான் முடியல உதயா..



ஒரு கல்யாணமான பொண்ணுனா எப்படி இருக்கணும்..எந்த சூழ்நிலையிலும் அவ புகுந்த வீட்டுக்கு தானே முன்னுரிமை தரணும்..அவ புருஷனுக்கு அப்புறம் தானே அவள் வாழ்க்கையில் எல்லாமே..!! பெத்தவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுற வரையும் தான் பொண்ணுட்ட உரிமை..அதுக்கு அப்புறம் மூணாவது மனுஷி தான் இல்லையா..?? அவங்க அந்த பொண்ணுக்காக என்ன பாடுப்பட்டிருந்தாலும் சரி..அதையெல்லாம் அவங்க கடமைனு ஒதுக்கிட்டு தன் புருஷன்..தன் குடும்பம்னு தான் யோசிக்கணும்..புருஷனுக்கு பிடிக்கலைனா பெத்தவங்க கூடப்பொறந்தவங்க எல்லாரையும் தள்ளி வைச்சிடணும் இல்லையா..!!



ஆனால் என்னால அப்படி இருக்க முடியல உதயா..எல்லாருக்கும் சாதாரண விஷயமா இது இருக்கலாம்..எனக்கு துரோகமா தான் தெரியுது.ஒரு இக்கட்டான சூழ்நிலைல அவங்களை விட்டுட்டு என் வாழ்க்கை என் குடும்பம் தான் எனக்கு முக்கியம்னு வந்தது பச்ச துரோகமா தான் என் மனசு யோசிக்குது..அப்படி வந்த இந்த வாழ்க்கையும் பிடிக்காமல் போயிடுச்சு..அந்த குற்றவுணர்ச்சியே உங்க அண்ணனை விட்டும் விலக வைச்சிடுச்சு..இத்தனை வருஷம் ஆனாலும் அதை என்னால கடந்து வர முடியல..நான் இன்னும் அதே இடத்தில் தான் இருக்கேன்..நான்..நான் தான் சரியில்லை உதயா..நல்ல மகளாகவும் இல்ல..நல்ல மனைவியாகவும் இல்ல..இப்போ என் பொண்ணுக்கு நல்ல அம்மாவும் இல்லை.."

என்னும்போதே அவள் கண்களும் கலங்கிவிட்டது.



வெண்பாவை இப்படி பார்த்ததே இல்லை.இத்தனை நாள் இதனை பற்றி பேசியதும் இல்லை.தன் மனதில் நினைப்பவற்றை அவ்வளவு சுலபத்தில் வெளியே சொல்லிவிட மாட்டாள்.இன்று அவள் மனப்போக்கை கேட்டு சற்று திகைத்து தான் போனாள் உதயா.



"இவ்ளோவையும் மனசுல போட்டு தன்னையே வருத்திக்கிறாங்களே..என்னவென்று இவரை சமாதானம் செய்வது.."



என்று கவலை கொண்டவள் ஆறுதலாய் அவள் கையை மட்டும் பற்றிக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள்.



யாரோ வரும் அரவம் கேட்டு உதயா திரும்ப அங்கே ஜெகனும் உடன் நிலாவும் நின்றனர்.



ஜெகன் என்ன பேசினானோ தன் தவறை உணர்ந்து அன்னையிடம் மன்னிப்பு கேட்க வந்த நிலா வெண்பாவின் கலங்கிய கண்களை பார்த்து பதறியவளாய் ஓடி வந்து அவளை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.



"ம்மா..சாரி ம்மா..இனிமே இப்படி பேச மாட்டேன்..ப்ளீஸ்..ப்ளீஸ் அழாத.."



தன்னால் தான் அழுகிறாரோ என்று பயந்து போய் அவள் கெஞ்ச மனதின் காயங்களில் உழன்று கொண்டிருந்தவளுக்கு மகளவளின் ஸ்பரிசம் மருந்தாக தன்னோடு மேலும் பிணைத்துக் கொண்டாள்.





சில நிமடங்கள் தான் வெண்பா கலங்கி நின்றது அதன்பின் தன்னை மீட்டுக் கொண்டு எதுவும் நடவாதது போல் அன்றாட வேலைகளை கவனிக்க தொடங்கினாள்.வெளியே சென்ற மதியும் தயாவோடு வீடு திரும்பிவிட்டவன் எதுவும் பேசாமல் அலுவலகம் கிளம்பி சென்றுவிட்டான்.



ஆனால் மாலை மதி வழக்கமாக வரும் நேரத்தில் வீடு திரும்பவில்லை.பெரும்பாலும் சரியான நேரத்தில் வீடு வந்துவிடுவான்.எப்பொழுதாவது அலுவலக வேலை இருந்தால் வர தாமதமாகும்.அப்பொழுது ஆழிக்கண்ணனிடமோ இல்லை தம்பியிடமோ தகவல் சொல்லிவிடுவான்.

மத்த நேரமாக இருந்திருந்தால் கண்டுக்காமல் விட்டிருப்பாள்.ஆனால் இன்று காலையில் நடந்த நிகழ்வினால் அவனது தாமதம் மனதை நெருடியது.



யாரிடமாவது கேட்போமா..??கேட்கணுமா..?? என்று அவள் தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருக்கும் போதே,



"ம்மா..மொபைல் கூடும்மா..அப்பாவை காணும்..நான் பேசணும்.."

என்று நிலா வந்து நிற்க 'ஹப்பாடி..' என்று மொபைலை மகளிடம் கொடுக்க தன் தந்தை எண்ணிற்கு அழைத்தாள்.



"ஹலோ..ப்பா..?"



என்றது தான் தெரிந்தது.மறுமுனையில் என்ன பேசினானோ ம்ம் கொட்டியவள் வரும்போது தனக்கு வேண்டிய ஸ்னெக்ஸை சொல்லிவிட்டு வைத்துவிட்டு வெண்பா கேட்காமலே,



"ம்ம்ம்..அப்பா ஃப்ரெண்டை பார்க்க போறாங்களாம்..நைட் தான் வருவாங்களாம்.."



என்று தானே கூறி, "ம்மா..நான் கேம் விளையாட போறேன்.." என்று சொல்லிக் கொண்டே அவள் பதில் பேசும்முன் மொபைலோடு ஓடிவிட்டாள்.



"எந்த ஃப்ரெண்ட்.." தோன்றினாலும் "தெரிஞ்சு மட்டும் இப்ப என்ன பண்ண போற..." என்ற உள்குரலின் அதட்டலில் யோசிப்பதை விட்டு விட்டாள்.



நேரம் ஆக ஆக மீண்டும் அதே நெருடல்.!! எல்லோரும் உறங்க சென்றுவிட்டனர்.மதியிடம் சாவி இருப்பதால் அவன் திறந்து வந்துவிடுவான்.காத்திருக்க அவசியம் இல்லை.ஆனால் வெண்பாவிற்கு தான் உறக்கம் வரவில்லை.



'இரவு சாப்பிட்டாரா..இல்லையா..?? எங்க இவ்வளவு நேரம் இருப்பாரு..' என்ற சிந்தனைகளோடு கட்டிலில் படுத்திருந்தாள்.பார்வை கடிகாரத்தையே வட்டமடித்தது.



கடிகார முள் பத்தரையை தாண்டும் போது அறை கதவு திறக்கும் சத்தம் கேட்க எழுந்து அமர்ந்தாள்.



கதவை திறந்துக் கொண்டு வந்த மதி தன் அலுவலக பேக்கை மேசைமீது வைக்க அடியெடுத்து வைக்கும் போதே தடுமாற அப்பொழுது தான் அவனிடம் வித்தியாசத்தை உணர்ந்தாள்.



உடை கசங்கி அவளை தவிர எல்லா திக்கிலும் பயணித்த கண்கள் சிவந்துபோய் இருந்தது.



“குடிச்சிருக்கீங்களா..”



அவள் நம்பமுடியாத அதிர்ச்சியில் வினவ விழிகளை விரித்து இல்லை என்பது போலவும் ஆமாம் என்பது போலவும் மாற்றி மாற்றி தலையசைத்தான்.



காலை சம்பவம் அன்று முழுவதும் அவனை எதிலும் ஈடுபட விடாமல் துரத்த வேலை அனைத்திலும் கவன சிதறுதலுடன் இருந்த மதியை அலுவலக நண்பன் ஒருவன் கவனித்து என்ன பிரச்சனை என்று தோண்டி துருவியதில் ‘பொண்டாட்டியுடன் சண்டை..’ என்ற அளவில் மட்டும் சொல்ல பாவம் அவன் மதிக்கும் மேல் தன் மனைவி மீது காண்டில் இருந்திருப்பானாக்கும்..!!



ஆறுதல் சொல்வதாய் தன் சொந்தக் கதை சோகக் கதையை அளந்துவிட்டு இறுதியில்,



“இந்த டார்ச்சர் எல்லாம் மறக்கவே நமக்குன்னு கண்டுபிடித்த அருமருந்து ஒன்னு இருக்கு பாஸ்..என்னோட இன்னைக்கு வாங்க..”

என்று அழைப்பு விடுக்க அவன் எதுக்கு கூப்பிடுகிறான் என்று தெரிந்து மறுத்த மதியை அவன் விடாது வற்புறுத்த அவன் இருந்த மன உளைச்சலில் முயற்சித்தான் செய்து பார்ப்போமே என்று முடிவெத்தான்.

ஆம்!! குடிகாரர்கள் உருவாகுவது இல்லை இம்மாதிரியான நல்வுள்ளங்களால் உருவாக்க படுகிறார்கள்.



எல்லாவற்றையும் மறக்க வேண்டி மதி குடிக்க செல்ல ஆனால் தன்னிலை மறக்கவும் இல்லை..மாறவும் இல்லை.யாரோ தலைகீழாய் கட்டி தொங்க விட்டது போல் தலை தான் கிர்ரென்று சுற்றியது.



தட்டி தடுமாறி வீடு வந்து சேர்ந்த பின்பு கதவை திறக்கும் போது தான் தன் செயலின் வீரியம் புரிந்தது. யார் கண்ணிலும் படாமல் சென்று படுத்துவிட வேண்டும் என்ற வேண்டுதலோடு வந்தவன் சரியாய் வெண்பா கண்ணில் மாட்டிக் கொண்டான்.



அவளது அதிர்ச்சி கோபமாய் பதவி உயர்வு பெற்று அவள் மேல் சிம்மசணமிட்டு அமர்ந்துக் கொள்ள கண்களாலே எரித்து விடுபவள் போல் முறைத்து,



“வயசு ஆக ஆக எல்லாருக்கும் பொறுப்பு கூடும்னு சொல்லுவாங்க..ஆனா உங்க புத்தி ஏங்க இப்படி போவுது..அதுவும் மொடா குடிகாரன் மாதிரி நிற்க கூட முடியா..கர்மம்..கர்மம்..”



அவள் தலையிலே அடித்துக் கொள்ள அவளது உதாசீனப் பேச்சில் குற்றவுணர்வு போய் கோபம் ஆட்கொண்டது.



“நான் அப்படி தான் குடிப்பேன்..உனக்கு என்னடி வந்துச்சு..நீ தான் எனக்கும் உனக்கும் ஒண்ணும் இல்லனு சொல்லிட்டேல..அப்புறம் என்ன இதுல என்னை கேள்வி கேட்கிற..”



போதையில் நா குழற அவன் பேசியதில் அவள் புரிந்துக் கொண்ட சாராம்சம் இது தான்.



அவள் பதில் சொல்லாமல் முறைக்க முறைக்கும் அந்த கண்களையே பார்த்தபடி அவள் அருகில் வந்தவன் அவள் கண்ணுக்கும் கீழ் விரல் வைத்து,



“இந்தா பார்த்து முறைக்கிறியே..இந்த கண்ணுல தெரியுற கோபம் எனக்காக தானே..நான் உனக்கு ஒண்ணுமே இல்லையாடி..ம்ம் சொல்லு..நான் உனக்கு ஒன்னு..மே..இல்..லையாஆஆ..”



நீட்டி முழக்கி சொல்ல அவன் மீது வந்த நாற்றம் தாங்காது முகத்தைச் சுருக்கி,



“தள்ளி போங்க..” என்று அவனை தள்ள தடுமாறி பின்னால் போனாலும் மீண்டும் அருகில் வந்து,



“ஏன்..ஏன் போகணும்..நான் போக மாட்டேன்..இதோ இப்படி தான் நிற்பேன்...என்ன பண்ணுவ..”



என்று மூக்கு நுனியை தொட்டு விடும் அளவு நெருங்கி நின்றவன் மீண்டும்,



“நான் உனக்கு ஒண்ணுமே இல்லையா..??ஏன் இல்ல..உன்னை தொட்டு தாலி..கட்டில் கட்டி..அப்புறம் தொட்டில் கட்டி பிள்ளை கொடுத்த உன் புருஷன்..நான் ஒண்ணுமே இல்லையா..”

என்று அதே பல்லவியை பாடியவனை கண்டு ‘கடவுளே..காப்பது..’ என்று அவரை துணைக்கு அழைத்தாள்.



“நான் என்ன பாவம் பண்ணேன் சொல்லுடி..நான் என்ன பாவம் பண்ணேன்..உன்னை கொடுமை படுத்துனேனா..இல்ல நீ இருக்கும்போது இன்னோருத்தியை நினைச்சேனா..இல்ல உன்னை மரியாதை குறைவா தான் நடத்தினேனா..என்ன பண்ணேன்னு என்னை இப்படி தண்டிக்கிற..சொல்லுடி...”



போதையில் இருப்பவனிடம் என்ன நியாயம் கேட்க முடியும்..கோபத்தை உள்ளடக்கி அமைதியாகவே நிற்க,



“பேச மாட்டியே..நீ பேச மாட்டடி..பேசவே மாட்ட..”



என்று கொஞ்ச கொஞ்சமாய் சுருதி குறைய கண்கள் சொருக அப்படியே அவள் மேல் சாய அவனை தாங்க முடியாமல் கட்டிலில் விழுந்தாள்.உடன் மதியும் அவள் மேல் பாதி கட்டில் பாதி என்று விழுக தம்கட்டி அவனை தன்மீது இருந்து தள்ளி விட்டவளுக்கு கோபமாய் வர,



“விடியட்டும்..இருய்யா..உன்னை ஒரு வழி ஆக்கல..” என்று கறுவியபடி உறங்கும் அவனை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தவள் தன்னையும் அறியாமல் உறங்கி போனாள்.



மறுநாள் பொழிது விடிந்து மதிவாணன் எழுந்து அமர்ந்தது தான் தெரியும் அதன் பின் வெண்பா திட்டினாள் திட்டினாள் அவன் காதில் இரத்தம் வரும் அளவு திட்டி தீர்த்து விட்டாள்.



இரவில் அவன் பேசியது எல்லாம் அவனுக்கு நினைவில் தான் இருந்தது.தான் குடித்து வந்ததை இப்பொழுது நினைத்து பார்த்தாலும் வெட்கி போனான்.அப்பாவோ தம்பியோ பார்த்திருந்தால் என்ன நினைத்து இருப்பார்கள்..தேவையா இது.. என்று அவனுக்கு அவனே கொட்டு வைத்துக் கொண்டு வெண்பா திட்ட தொடங்கவும் தலை குனிந்தவன் தான் பின் நிமிரவே இல்லை.





“அதென்ன... எதாவது பிரச்சனை என்றால் குடிக்கணும்னு எந்த ஞானி சொன்னாங்க..குடிச்சால் உங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்திடுமா..?? முதல்ல ரியாலிட்டிய நேரா ஃபேஸ் பண்ண கத்துக்கோங்க..இப்படி போதை பின்னாடி ஒழிஞ்சிக்க பார்க்காதீங்க..”

என்றவள் “இன்னோர் தடவை குடிச்சிட்டு வாங்க..அப்படியே உங்க பொண்ணு முன்னாடி போய் நிறுத்திடுவேன்..பாரு உங்கப்பா லட்சணத்தைனு..”

என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறிவிட ஒருபக்கம் மட்டும் லேசாய் தலையை உயர்த்தி அவள் போய்விட்டாள் என்பதனை உறுதி செய்துக் கொண்டவன் அடுத்த நொடி,



“ஹேய்..என் பொண்டாட்டி என்னுட்ட பேசிட்டாடோய்..”



சத்தமாய் சந்தோஷக் கூச்சலிட்டான்.நேற்று காலையிலும் சரி குடிபோதையிலும் சரி அதனை அவன் உணரவில்லை.இப்பொழுது தான் வருடங்கள் கழித்து வெண்பா அவனிடம் நேரடியாய் பேசியிருக்க அதில் குதூகலம் அடைந்தவனாய் குத்தாட்டம் போட்டான்.



அந்நேரம் கதவை திறந்து வந்த நிலா தந்தையின் கோலத்தை கண்டு,



“என்னப்பா பண்றீங்க..”

என்று சிரித்தவளை தூக்கி சுற்றியவன் தன் கைபிடியில் வைத்துக் கொண்டு,



“உங்கம்மா..மை ஏஞ்சல் என்னுட்ட பேசிட்டா தெரியுமா..அப்பா செம்ம ஹாப்பி நிலா..”

துள்ளலோடு அவன் சொல்ல களுகென்று சிரித்து,



“அம்மா உங்களுக்கு ஏஞ்சல் ஆ ப்பா..”

என்று வினவ ஆம் என்பது போல் தலையசைத்து,



“ஆமா..ஏஞ்சல் தான்..எனக்கு மட்டும் இல்ல..உனக்கும் தான்..நமக்காக காட் அனுப்பி வைச்ச ஏஞ்சல்..ஸோ..அம்மாட்ட எப்பவுமே ஹார்ஷா பேசக்கூடாது..” என்றவன்,



“எனக்கு ப்ராமிஸ் பண்ணு..நேத்து மாதிரி எப்பவும் இனிமே அம்மாட்ட பேச மாட்டேன்னு..” என்று கை நீட்ட அதன் மீது தன் கையை வைத்து, “காட் ப்ராமிஸ்..” என்று அழகாய் சிரித்த நிலாவை வாரியணைத்துக் கொண்டான்.



“அய்யோ..ப்பா..உங்க மேலே ஏதோ ஸ்மெல் வருது..”



நேற்று வெண்பா முகத்தை சுருக்கிய அதே பாவணையில் மகள் சொல்ல அசடு வழிய,



“ஹிஹி..அப்பா இன்னும் குளிக்கலல..அதான்...”

என்று நழுவி குளியலறையில் புகுந்துக் கொண்டான்.
 
Last edited:
திருமணநாள் கொண்டாட்டம்......சோகமாய் மாறினாலும்
அதன் நோக்கம் நிறைவேறியது....
என்ன உரிமை இருக்கு என்று கேட்டவள்....
உரிமையோடு சண்டை போடுகிறாள்....
 
திருமணநாள் கொண்டாட்டம்......சோகமாய் மாறினாலும்
அதன் நோக்கம் நிறைவேறியது....
என்ன உரிமை இருக்கு என்று கேட்டவள்....
உரிமையோடு சண்டை போடுகிறாள்....
உண்மை சிஸ்? நன்றி ☺️
 
Top