Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 7

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் 7

‘Alex studio..’ என்ற பெயர்பலகை பொருத்தப்பெற்ற கட்டிடத்தின் உள்நுழைந்தனர் உதயாவும் ஆஷிக்கும்..

அந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தபடி,



“இதுவாடா ஸ்டூடியோ..”

என்றாள்.ஏதோ ஹோல் சேல் கடைப்போல் இருந்த அவ்விடத்தை கண்டு அப்படி தான் தோன்றியது.



“இங்க இல்ல..மாடில தான் ஸ்டூடியோ..இப்படி வா..”



என்று அங்கே ஓரத்தில் இருந்த படிக்கட்டை நோக்கி நடந்தான். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரடெக்‌ஷன் வேலைகளை மும்முரமாய் தொடங்கி இருந்தனர்.அதில் ஒரு அங்கமாக தான் இன்று ஒலிசேர்க்கை..!!



“கேட்கணும்னு நினைச்சேன்..ஜெகன் அண்ணா ஊருல இல்லையா...பார்க்கவே முடியல..”



“ஆமா..வேலை விஷயமா பெங்களூர் போயிருக்கான்..”



“ஹே..சொல்லவே இல்ல..என்ன ஜாப்..ஐடி ஆ..”



கண்கள் விரிய அவன் கேட்க மறுத்து தலையசைத்தவள் உதடுகளில் புன்னகை விரிய,

“அது சப்ரைஸ்..அவன் வந்தது சொல்றேன்..”

என்றாள் கண்சிமிட்டி..



அவன் கிளம்பி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.வீட்டில் அனைவருக்கும் இதான் சொல்லப்பட்டது.ஒரு வாரத்தில் அங்கே இருந்து வேலைக்கு பார்க்க வேண்டும் என்று..மேற்கொண்டு வேறெதுவும் யாருக்கும் தெரியாது.ஆனால் அனைத்தும் தெரிந்த உதயாவிற்கோ அவனிடம் இருந்து தகவல் வர ஆவலாய் காத்திருந்தாள்.அவனும் இடையிடையே அங்கே நடப்பவற்றை இவளோடு பகீர்ந்துக் கொண்டிருந்தான்.



அன்று இரவு அவன் சொன்னதை இன்னமும் அவளால் நம்ம முடியவில்லை.



அவன் கொடுத்த கடித்ததை பிரித்த உடன் அவள் கண்ணில் முதலில் பட்டது இண்டியன் ஆர்மி என்பது தான். கடகடவென அனைத்தையும் படித்து முடித்தவள்,



“ஆர்மியாஆஆ..”

ஏறக்குறைய கத்தினாள்.இதனை அவள் துளியும் எதிர்ப்பார்க்கவில்லை.அவன் ஆம் என்பதாய் தலையசைக்க,



“எ..எப்படிடா..எனக்கு ஒன்னும் புரியலையே..நீ எந்த எக்ஸாமும் கூட எழுதலையே..இதெப்படி சாத்தியம்..”



என்று நம்ப முடியாமல் கேட்க சிரித்தவன்,



“TGC..”

என்று சொல்லவும்,

“அப்படின்னா..” என்றாள் புரியாமல்..



“ஒன் அஃப் த வே டூ ஜாயின் இண்டியன் ஆர்மி..இந்த கேட்டகிரி எஞ்னியரிங் படித்தவங்களுக்கு மட்டுமே ஆனா ஸ்பெஷல் கோட்டா..எஞ்னியரிங் பாஸ்ட் அவுட் இல்லேனா கடைசி செமஸ்டரில் உள்ளவங்க அப்லை செய்யலாம்...அவங்க எதிர்பார்கிற கட் ஆஃப் மார்க் உள்ளவங்களை ஷார்ட் லிஸ்ட் செஞ்சு எஸ்.எஸ்.பி இண்டர்வீயூவிற்கு நேரடியாக செலக்ட் செய்வாங்க..”



என்று அவன் கொடுத்த விளக்கங்களை கேட்டாலும் முகம் இன்னும் தெளியாமல்,



“ஆர்மி..??நல்லா யோசித்து தான் முடிவு பண்ணியா ஜெகா..இதுக்கு முன்னாடி இதை பத்தி நீ சொன்னது கூட கிடையாதே..எங்கே இருந்து இப்படி ஒரு யோசனை..”



கேட்க மென்னகை புரிந்தவன் தங்கையின் கையை பிடித்துக் கொண்டு,



“லைஃப்ல எல்லாருக்குமே ஒரு டேனிங் பாயிண்ட் இருக்கும் உதயா..ஏதோ ஒரு இன்ஸிடெண்ட் இல்லேனா நாம மீட் பண்ற ஒரு பர்சனால நம்ம லைஃபையே திருப்பி போட்டுவிடும்..அப்படி நான் ஒருத்தவங்களை மீட் பண்ணேன்..லாஸ்ட் இயர் ப்ரெண்ட்ஸோட டூர் போனப்போ..ஒரு இரயில் ஸ்நேகிதம் தான்..அவர் ரிட்டயர்ட் மிலிட்டரி ஆபிஸர்..ஒரு மணி நேரம் சேர்ந்து ட்ராவல் செஞ்சிருப்போம்..அந்த கொஞ்ச நேரத்திலே அவரோட எக்ஸ்பிரியன்ஸ் சர்வீஸ் எல்லாம் கேட்டபோது எனக்குள்ள என்னையும் அறியாமல் அந்த ஆசை விழுந்திருக்கு..அதோட விளைவு தான் இது..”

என்று அந்த காகிதத்தை காட்டி கூறிவிட்டு,



“நான் டிஜிசி அப்லை செஞ்சதில் இருந்து இந்த இண்டர்வியூக்காக தான் ப்ரீப்பேர் செஞ்சிட்டு இருக்கேன்..உடல்ரீதியாகவும் சரி படிப்பு ரீதியாகவும் சரி.!



இன்னும் டூ டேஸில் அங்கே போகணும்..5 நாள் இண்டெர்வியூ நடக்கும்..லெவல் பை லெவல்..இதில் நான் செலக்ட் ஆகிவிட்டால் போது..ஒன் இயர் ட்ரைனிங்..முடிந்தது ஐயா ஒரு ஆர்மி மேன்..”

என்று அவன் சொல்ல படபடவென,



“இவ்வளவு பெரிய விஷயத்தை சத்தமே இல்லாமல் பண்ணிருக்க..பக்கி..பக்கி.”

என்று அவன் தோளில் அடிக்க அதனை சிரிப்புடன் ஏற்றுக் கொண்டான்.



அடித்து ஓய்ந்தவள், “வீட்டில் எல்லாரிடமும் ஒழுங்கு மரியாதையா சொல்லிடு..”



என்று மிரட்ட,

“ம்ஹூஹூம்..இண்டர்வியூ போயிட்டு வந்து தான் சொல்வேன்..நான் பொறுப்பே இல்லாமல் இருக்கேன்னு தானே நினைக்கிறாங்க..ஒருவேளை செலக்ட் ஆகிவிட்டேனா ஒரு மரியாதைக்கு உரிய வேலையோடு எல்லார் முன்னாடியும் வந்து நிற்பேன்..அதுவரையும் நீ மூச்சு விடக்கூடாது..”



என்று சத்தியம் வாங்காத குறையாக அவளிடம் அழுத்தந்திருந்தமாய் கூறியது தற்போது நினைவு வந்தது.



“என்ன உதயா..ஒரு மார்க்கமா சிரிக்கிறீயே..அப்படி என்ன விஷயம்..நான் சப்ரைஸ் தாங்க மாட்டேன் தெரியும்ல..”

என்று ஆஷிக் எவ்வளோ கேட்டும் சொல்லவில்லை.மாறாக,



“ஆமா..உதய் வந்திருப்பார்ல..ம்ச்..எப்படி அவரை ஃபேஸ் பண்ண போறேனோ தெரியல..”

நெற்றியை நீவியப்படி அசடு வழிய அவள் சொன்னாள்.பேசிக்கொண்டே முதல் தளத்தை அடைந்தனர்.



“ஏன் என்னாச்சு..” என்றவன்,



“அடிப்பாவி அன்னைக்கு சொன்னா மாதிரி கோபத்தில் அண்ணாவை எதாவது பேசிட்டியா..”

என்றான் அதிர்ச்சியாய்..மனதில் நினைப்பதை பட்டென்று கூறிவிடும் ரகம் அவள் என்று நன்கு அறிந்தவன் ஆதலால் இவ்வாறு நடந்திருக்குமோ என்று பதறி கேட்க அவளோ,



“ச்சே..ச்சே..அப்படி நடந்திருந்தால் கூட பரவாயில்லையே..” என்றுவிட்டு அவன் ஹாப்பாடி என்று மூச்சுவிடும்முன்,



“கோபத்தில அவருட்ட ப்ரப்போஸ் செஞ்சிட்டேன்..” என்று சொல்லி அவன் பீபியை எகிற வைத்தாள்.



“எது..ப்ரப்போஸா..”

அவன் வாய் பிளந்து நிற்கும்போதே வரவேற்பு இருக்கைகளை தாண்டி உள்ளே செல்வதற்கான கண்ணாடி கதவை தள்ளிக் கொண்டு அவள் நுழைய, “உதயா..என்னா நடந்துச்சுனு சொல்லு..” என்று பின்னாலே ஓடிவந்தான் ஆஷிக்.



ஒற்றை அறைப்போல் இருந்த அவ்விடம் மங்கிய ஒளியில் சற்று இருளாக காட்சி அளித்தாலும் சுற்றி இருந்த கலைவோவியங்கள் அதற்கு அழகு சேர்த்தது.

அங்கே உதய்குமார்,சசி,மற்றும் ஒருவனும் மட்டுமே அமர்ந்திருந்தனர்.அவன் தான் அந்த ஸ்டூடியோவின் பொறுப்பாளராக இருக்க வேண்டும்..



உள்ளே ஏற்கெனவே ஒருவரின் குரல் பதிவு நடந்துக் கொண்டிருக்க கணினியின் முன் அமர்ந்திருந்த அந்த சவுண்ட் எடிட்டரிடம் ஏதோ சொல்வதும் பின் உள் இருந்தவரிடம் மைக்கில் ஏதோ சொல்வதுமாய் பிஸியாக இருந்த உதய் இவர்களை கவனிக்கவில்லை.ஆனால் உதயா அவனை மட்டுமே தான் கவனித்தாள்.



முழங்கைவரை மடித்து விடப்பட்டிருந்த வெள்ளை கேஸ்வல் சர்ட்டும் நீலநிற டெனிமும் அவனின் தோற்றதிற்கு அம்சமாய் பொருந்த பாரபட்சமின்றி சைட் அடித்தாள்.



அமர்ந்திருந்த நாற்காலியில் ஒருக்கையை ஊன்றி இரண்டு விரல்கள் மட்டும் கொண்டு கன்னத்தை தாங்கி மறுக்கையால் நாற்காலி பிடியில் தாளம் தட்டியப்படி தோரணையாய் அவன் அமர்ந்திருந்த விதம் அவள் மனதை கொள்ளை கொண்டது.



இவர்களை கவனித்த சசி,



“ஹே ஹாய்..”

என்று கையசைக்க அப்பொழுது தான் தானும் திரும்பிய உதய் இவளை சற்றும் கண்டுக் கொள்ளாமல் ஆஷிக் மட்டுமே இருப்பது போல் பாவித்து அவனிடம்,



“ஆஷிக்..இப்போ வேலன் சர் போர்ஷன் போயிட்டு இருக்கு..மத்த கேரக்டரும் முடிச்சிட்டாங்க..இன்னும் 2 பேர் தான் நினைக்கிறேன்..அவங்களும் முடித்ததும் கடைசியா உங்க இதை வைச்சுப்போம்..ஏன்னா உங்களுக்கு வாய்ஸ் ஓவர் வேற இருக்கு..”

என்றான். வேலன் என்பவர் சின்ன திரையில் பிரபலமானவர். ‘நொடிகளில்’ குறும்படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.



‘கண்டுக்காமல் முகத்தை திருப்புறதை பாரேன்..நான் அப்படி என்ன சொல்லிட்டேன்..’

என்று சிந்தித்தவளாய் உதய்யை முறைத்து பார்த்தாள்.



“சரிண்ணா..நாங்க அப்போ வெளியே வெயிட் பண்றோம்..”



என்று ஆஷிக் சொல்லும் போது, “வெளியே எல்லாம் வேணாம் ஆஷிக்..இங்கயே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம்..”

என்று அவன் காதை கடிக்க,



“நீ என்னத்தை பார்ப்பேன்னு தெரியும்..கொய்யால கொன்றுவேன்..வா..”

என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறி வெளியே ஏறக்குறைய இழுத்து வந்திருந்தான்.



“எப்போ இருந்து இந்த லவ் எல்லாம்..அன்னைக்கு பெருசா டயலாக் பேசின..”



“அது போன மாசம்..நான் சொல்றது இந்த மாசம்..ஆனாலும் நீ வேஸ்ட் ஆஷிக்..கல்ப்ஸ் ரெண்டு நாளில் கண்டுபிடிச்சிட்டா..நீயும் இருக்கியே..”



“அட கூட்டுக் களவாணிங்களா..!! அவளை அப்புறம் பார்த்துக்கிறேன்..முதல்ல நீ சொல்லு அன்னைக்கு என்ன சொன்ன..அண்ணா அதுக்கு என்ன பதில் சொன்னாங்க..”



சின்ன ப்ளாஸ்பேக் ஒன்றை ஓட்டிவிட்டு,



“அவர் பதில் பேசும் முன்னாடியே தான் ஓடி வந்துட்டேன்ல..அப்புறம் இன்னைக்கு தான் பார்க்கிறேன்..பெருசா காதல் பார்வை எல்லாம் பார்ப்பார்னு எதிர்பார்க்கல..பட் ஒரு சின்ன பார்வை மாற்றமாச்சும் வரும்னு எதிர்பார்த்தேன்..ஆனால் இப்படி பார்த்தால் கூட முகம் திருப்புகிறார்..ரொம்ப போராடுனும் போலவே..” என்றவளுக்கு தெரியாது.தான் நினைப்பதை விட இது எவ்வளவு சிக்கலான விஷயம் என்றும்..தானே இதனை வேண்டாம் என்று நிற்போம் என்றும்..!!



ஆஷிக் முகம் தெளியவே இல்லை.முதலிலேயே இவனுக்கு சந்தேகம் இருந்தாலும் போக போக இவள் சாதாரணமாய் இருக்கவும் உதய் மீது அவளுக்கு இருந்த பிரம்மிப்பு விலகிவிட்டது என்றே எண்ணினான்.ஆனால் உதயா அவனை ப்ரப்போஸே செய்துவிட்டது பெரிய அதிர்ச்சி தான்.உதய் குமாருக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லாத பட்சத்தில் உதயா தானே காயமடைவாள்.அவனை பற்றி பேசும் போது அவள் கண்களில் வந்துபோகும் பாவணைகளே அவள் எத்தனை தூரம் அவன் மீது ஈடுபாடுக் கொண்டு உள்ளாள் என்பதை காட்ட இவை பொய்த்து போய்விட்டால் நினைக்கவே கவலையாய் இருந்தது.



‘நீ ஏன் நெகட்டிவா யோசிக்கிற ஆஷிக்..உதயா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க அண்ணா கொடுத்து வைச்சிருக்கணும்..எல்லாம் நல்லதாகவே நடக்கணும்..’

என்று தன்னையே சமன்படுத்திக் கொண்டான்.இவர்கள் வந்த சில நிமிடங்களில் வேலன் முடித்து கிளம்பிவிட அடுத்து உள்ள கதாபாத்திரங்களுக்கு வசனம் குறைவு தான் என்பதால் ஒரு மணி நேரத்தில் அவர்களுடையதும் முடிந்தது.



முதலில் ஆஷிக் முடித்ததும் தான் பேசுவதாய் உதயா சொல்லிவிட சவுண்ட் ப்ரூஃப் செய்யப்பட்ட அறைக்குள் ஆஷிக் சென்றதும் சசி அருகிலே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவள் வந்ததில் இருந்து உதய் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாததால் ஏற்பட்ட சுணக்கத்தை வெளியே காட்டாமல் அழகாய் மறைத்துக் கொண்டாள்.



ஆஷிக் உள்ளிருந்து வசனங்களை பேச இங்கே கணினி திரையில் அந்த காட்சிகள் ஓடி உடன் ஒலியும் பதிவாகி கொண்டிருந்தது.



உதயா நடித்ததோடு சரி இன்று தான் அவற்றை திரையில் காண்கிறாள்.படத்தை கண்டு மிகவும் வியந்து தான் போனாள்.நடித்த போது கூட இவ்வளவு எதிர்பார்க்கவில்லை.தாங்கள் தானா இது என்று வியக்கும்படி அவ்வளவு அழகாக இருந்தது.யாரும் பார்த்தால் இது வெறும் குறும்படம் தான் என்று நம்ப மாட்டார்கள் அந்த அளவிற்கு நேர்த்தியாக இருந்தது.



ஒரு படத்தின் கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அப்படத்தின் காட்சி அமைப்பும் முக்கியம் என்பதே உதய்யின் கருத்து..!! இருபது நிமிடமோ அல்லது இரண்டரை மணி நேரமோ காட்சி அமைப்பு சரியாக இல்லாத பட்சத்தில் எத்தகைய உயர்ந்த கருத்தாக இருந்தாலும் மக்கள் திரும்பி பார்க்க மாட்டார்கள்.எனவே உதய் அதற்கு பணத்தாலும் சரி உழைப்பாலும் சரி மிகவும் மெனக்கெட்டு இருக்க அதன் பிரதிபலன் திரையில் தெரிந்தது.தன்னவனை குறித்து பெருமையாக இருக்க இரசித்து பார்த்திருந்தாள்.



ஆஷிக் தன் பகுதியை முடித்ததும் வெளியே வர அவனை பாரட்டிய உதய் உதயாவின் வசனங்களை மொபைலில் எடுத்து அவனிடமே கொடுத்து அவளிடம் கொடுக்க சொன்னான்.



எதார்த்தமாக பேச்சு வாக்கில் அவன் தருவதுப்போல் இருந்தாலும் அவன் வேண்டுமென்றே தான் தன்னை தவிர்க்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு டென்ஷன் ஏற முயன்று தன்னை நிதானித்துக் கொண்டவள் வசனங்கள் அடங்கிய அலைப்பேசியை வாங்கி கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.



சிறிய அறை தான்..நடுவில் ஒற்றை மைக் நின்றிருக்க எதிரே காட்சி ஓடுவதற்கு மானிட்டர் பொருத்த பெற்று இருந்தது.



ஆழ மூச்சை இழுத்து விட்டு மனதை ஒருமுகப்படுத்தியவள் ஹெட்போனை காதில் மாட்டினாள்.



அவளுக்கு ஹெட்போன்வழி அறிவுறுத்தல் கூறியது எல்லாம் சசி தான்.சின்ன சின்ன காட்சிகளாய் நிறுத்தி நிறுத்தி கிட்ட தட்ட அரைமணி நேரத்தில் பேசி முடித்திருந்தாள்.



வந்தவள் நேராய் உதய் முன்னே சென்று நின்று,



“நான் உங்களுட்ட பேசணும்..”

என்று அவன் முகம் பார்த்து கூற கணினியில் இருந்து கண்களை எடுக்காமலே,



“என்ன..சொல்லு..”

என்றான் சாதாரணமாய்..



“இங்க இல்ல..தனியா பேசணும்..வாங்க..”

என்று அவள் சொன்னபோது புருவங்கள் ஏற ‘என்னடா இது..’ என்று சசி பார்த்திருக்க உதய் அவளை தவிர்ப்பதை கவனித்திருந்த ஆஷிக், ‘அதானே..உதயாவாது விடுவதாவது..’ என்று நமட்டு சிரிப்புடன் நினைத்தான்.



கண்டுக் கொள்ளாமல் விட்டால் அவளே புரிந்துக் கொண்டு விலகி விடுவாள் என்று நினைத்திருந்தவன் அவளது நேரடி தாக்குதலில் சற்று தடுமாறினாலும் சுதாரித்து ‘இன்னையோட இதுக்கு ஒரு முடிவு கட்டிடனும்..’

என்று எண்ணியவனாய் வெளியே சென்றவளை தொடர்ந்து வந்தான்.அந்த முதல் தளத்தில் ஸ்டூடியோவிற்கு பின்னால் இருந்த பால்கனியில் அவள் நிற்க அவளெதிரே சென்று நின்றவன்,



“என்ன சொல்லனும்..”

என்றான் உணர்ச்சிகள் இல்லாத குரலில்..!!



“நான் ஏன் கூப்பிட்டேன்னு உங்களுக்கு தெரியாதா உதய்...ஏன் என்னை அவாய்ட் பண்ணுறீங்க..அஃப்கோர்ஸ் நான் உங்களுகான என் ஃபீலீங்ஸை ஷேர் பண்ணேன்..ஆனால் உங்களை பதில் சொல்ல சொல்லி தொந்தரவு செய்யலையே..?? அப்புறம் ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க..”



“நீ இந்த மாதிரி பேசுறதே எனக்கு பிடிக்கல..எனக்கே சினிமா டயலாக்ஸ் அடிக்கிறீயா..??என்ன தெரியும் உனக்கு என்னை பத்தி..?? ஆஷிக் சொன்னதை வைச்சு நான் இப்படி தான்னு ஒரு முடிவுக்கு வந்திடுவியா..அவனுக்கே என்னை பத்தி ஒன்னும் தெரியாது..நல்லா பேசினா நல்லவன் ஆகிடுவேனா..?? நான் யாருன்னு தெரிஞ்சா இப்படி பேசிட்டு..சாரி...உளறிட்டு நிற்கமாட்ட..”



சரமாரியாய் அவன் பொரிய கைகளை கட்டிக்கொண்டு புன்னகையில் இதழ் விரிய,

“ஸீ...உங்களை பத்தி அலசி ஆராய்ந்து பார்த்து எல்லாம் லவ் வந்தால் அது லவ் இல்ல கேல்குலேஷன்..நீங்க யாராக இருந்தாலும் எனக்கு உங்களை தான் பிடிச்சிருக்கு உதய்..உங்களுடைய ஒவ்வொரு அசைவும் கூட என்னை மெசிமரைஸ் பண்ணுது...ஒரு அஞ்சு நாள் பார்த்திருப்போமா..??ஆனால் உங்களோட ஏதோ ரொம்ப வருஷம் பந்தம் இருக்கா மாதிரி ஒரு ஃபீல்..”


என்று காதல் மயக்கத்தில் பேசியவள்மேல் கடுப்பானவன் பார்வையை தூரத்தில் தெரிந்த மரத்தின் மீது பதித்து அமைதியாய் நின்றான்.



சில மௌனமான நிமிடங்களுக்கு பின்,



“ஓகே..லவ் பண்ற..இதை உங்க வீட்டில் சொல்லுவீயா..”

என்று அவன் கேட்க,



“ஹான்...வீட்டில் சொல்லாமல் எப்படி..ஆனால் எங்க வீட்டில் எல்லாருக்குமே என் விருப்பம் தான் முக்கியம்..கண்டிப்பா என் லவ்வை அக்செப்ட் பண்ணுவாங்க..”

கண்களில் கனவுகள் மின்ன ஆசையாய் அவள் சொல்ல,



“அப்படியா..?? நீ லவ் பண்ற பையன்..வெண்பாவோட தம்பியா இருந்தாலும் கூடவா..”

என்றான் பட்டென்று..



முதலில் அவளுக்கு புரியவில்லை..புரிந்த பின்பு திறந்த வாயை மூட மறந்தவளாய் அதிர்ந்து அவனை நோக்கினாள்.



‘அண்ணியோட தம்பியா..??இவரா..’

அந்த இடத்தில் இவனை வைத்து பார்க்கவே அவள் மனம் விரும்பவில்லை.இவனை பார்த்த மாதிரி கூட அவளுக்கு நியாபகம் இல்லை.இவர்கள் வீட்டிற்கு உதய் அதிகம் வந்தது இல்லை.கடைசியாக அந்த சம்பவத்தின் போது பருவ வயசு இளைஞனாய் அவன் முகத்தை நினைவு கூர்ந்தாள்.ஆனால் தெளிவாக நியாபகம் இல்லை. பேசா மடந்தையாய் அவனை நோக்க அவனோ இன்னும் நிமிர்ந்து நின்றவனாய்,



“ஆமா..நான் வெண்பா தம்பி உதய் குமார் தான்...உங்க அப்பாவை கண்டப்படி பேசினவன்..உங்க அண்ணனோட சட்டைய புடிச்சு பெரிய கைகலப்பு ஆகுற மாதிரி சண்டை போட்ட அதே உதய் குமார் தான்..”

என்று தீர்க்கமாய் சொன்னவனுக்கு என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல் அவள் அப்படியே நிற்க ஏளனமாய் ஓர் புன்னகை அவன் உதடுகளில்..



“இப்ப புரியும் நினைக்கிறேன்..இந்த நீ..நான்..நாம என்கிற பேச்சுக்கே இடம் இல்லை...ஸோ இத்தோட இந்த மாதிரி உளறலை நிறுத்திக்கோ..”



என்றவன் அவளை தாண்டி அங்கிருந்து சென்றுவிட்டான்.



முதல் முறை இவள் புகைப்படத்தை பார்த்த பொழுதே எங்கேயோ பார்த்த நியாபகம் தான்.ஆனால் நினைவில் இல்லை.இந்த கதாபாதிரத்திற்கு இவள் பொறுத்தமாய் இருப்பாள் என்று தோன்றியதால் இவளையே தேர்வு செய்தான்.



ஆனால் நேரில் பார்த்தபோதும் அதே போல் தோன்ற ஆஷிகிடம் அவளை பற்றி விசாரித்தான்.அவனும் பேச்சு வாக்கில் மதிவாணன்,ஜெகன் பற்றி குறிப்பிட யாரென்று புரிந்து போனது.



முன்னமே தெரிந்திருந்தால் இவளை வேண்டாம் என்று இருப்பான்.ஆனால் தற்போது அவ்வாறு செய்ய முடியாது.அத்துடன் அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை என்பதால் அவனும் அப்படியே விட்டுவிட்டான்.உதயின் கோபமெல்லாம் மதியின் மீதும் அவள் தந்தையின் மீது மட்டும் தான்..அதில் இவளை கோபித்து என்ன பயன் என்று அவனது நியாயமான மனது எடுத்துரைக்க அவனும் இயல்பாய் அவளோடு பழகினான்.அதை தாண்டி தன்னை அறிமுகப்படுத்திக்க எல்லாம் அவனுக்கு விருப்பம் இல்லை.



ஆனால் அவள் காதல் என்று வந்து நின்ற போது தான் நாம் யாரென்று சொல்லியிருக்க வேண்டுமோ என்று தோன்றியது.தேவை இல்லாமல் இதென்னடா பிரச்சனை என்று எரிச்சல் வந்தது.கொஞ்ச நாள் பழக்கம் என்றாலும் அவள் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் இருக்க தேவை இல்லாமல் ஆசையை வளர்த்துக் கொண்டாளே என்று பாவமாகவும் இருந்தது.



இன்று கூட இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் இவளுக்கு எப்படி புரிய வைப்பது என்ற யோசனை அவனை வண்டாய் குடைய இதோ தற்போது வெட்டு ஒன்று துண்டு ரெண்டாய் பேசிய பின்பு தான் நிம்மதியடைந்தான்.இனி மேல் அவள் புரிந்துக் கொள்வாள் என்று அவன் நினைத்திருந்தான்.ஆனால் உதயா அவ்வளவு எளிதாய் மனமாறக் கூடியவள் அல்ல என்பதை அவன் அறியும் நாளும் வெகு தூரம் இல்லை.
 
Last edited:
ஆஹான்......வெண்பா தம்பி...உதய்....
அடுத்த சிக்கல்......ரொம்ப பெரிய பிரச்சனையா இருக்கும் போல...
ஆர்மியில் சேரப்போகும் ஜெகன்...
அவனோட குரு, இனி வருவரா...?
இல்லை...ரயில் சினேகம் போல மறைந்திடுவரா...?
 
ஜெகன் ஆர்மியில் சேருவது
சந்தோஷம்
வெண்பா தம்பி உதய்
என்ன அந்தளவுக்கு பெரும்
பிரச்சன
காதல விடுவாள் உதயா
 
ஆஹான்......வெண்பா தம்பி...உதய்....
அடுத்த சிக்கல்......ரொம்ப பெரிய பிரச்சனையா இருக்கும் போல...
ஆர்மியில் சேரப்போகும் ஜெகன்...
அவனோட குரு, இனி வருவரா...?
இல்லை...ரயில் சினேகம் போல மறைந்திடுவரா...?
ஜெகனின் குருவை சந்திக்க வாய்ப்பு கம்மி தான் சிஸ்..உதய் உதயாவின் சிக்கலை தீர்ப்போம்???
 
Last edited:

Advertisement

Top