Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள்- 9

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் 9

‘நொடிகளில்’ குறும்படத்தை பதிவேற்றம் செய்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.உதய்யின் மற்றைய படங்களை காட்டிலும் இப்படத்திற்கு மக்களிடையே அபார வரவேற்பு கிடைத்தது.



யூடியூபை பொறுத்தவரையில் லைக்,கமெண்ட்களை விட பார்வையிட்டவர் பட்டியல் தான் முக்கியமாய் பார்க்கப்படும்.அவ்வகையில் இரண்டு நாட்களில் லட்சத்தை தொட்டது அனைவருக்குமே ஆச்சரியம் தான்.



கதையின் கரு..நாயகனும் நாயகியும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்வின் ஏற்க முடியாத கஷ்டங்களை சந்தித்து அடிப்பட்டு வந்தவர்கள்..ஒருவருக்கொருவர் அறிமுகமும் இல்லை எந்த சம்பந்தமும் இல்லை எனினும் இருவருக்கும் பொதுவான ஒரு விஷயம் வில்லன் தான்.இருவர் வாழ்கையும் மாற காரணமான வில்லன் மீது இருவருக்கும் உள்ள பழி வெறியே இருவரையும் இணைக்கும் பாலமானது.இருவருமே அவனை கொல்வது மட்டுமே லட்சியமாய் வைத்து வாழ தங்களை அறியாமலே வில்லனை கொல்ல எதர்ச்சையாக ஒரே நாளையும் ஒரே இடத்தையும் தேர்வு செய்கின்றனர்.இருவரது திட்டப்படி எல்லாம் சரியாக வந்து இறுதியில் நாயகியை முந்தி நாயகன் அவனை கொல்வதும் நாயகியின் அதிர்ந்த பாவனையில் அவளை சாட்சியாக கருதி மிரட்டி சென்றதும் பின்னர் காவல்துறையில் சந்தேகத்தின் பேரில் மாட்டிய நாயகனை நாயகி வந்து காப்பாற்றுவதும் என்று இருபது நிமடப்படத்தில் நொடிக்கு நொடி மாறும் கட்டங்களும் அடுத்து என்ன என்று பார்வையாளரை ஆர்வம் கொள்ள வைத்தது.மொத்ததில் நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்..



அதற்கு அவர்கள் நினைத்ததை காட்டிலும் நல்ல எதிரொலி கிடைத்தது.

அறிந்த சினிமா பிரபலங்களும் உதய்யை அழைத்து வாழ்த்தினர்.ஆஷிக் - உதயா பேசும் லைஃப் பேக்ட் வசனங்கள் பலரின் ஸ்டெட்டேஸ்களில் இடம்பெற்றது.உதயாவின் சில தோழிகள் தவிர யாருக்கும் அவள் படம் நடித்தது தெரியாது.ஆனால் ரீலீஸ் ஆன பின்பு அவள் கல்லூரியில் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று பலரும் வந்து பாராட்ட உதயாவிற்கே சற்று வெட்கமாய் போய்விட்டது.இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல இரண்டு வாரங்களில் ஐந்து மில்லியன் வியூவர்ஸ் பெற்று டிரெண்டிங் வரிசையில் இடம்பெற திக்குமுக்காடி தான் போயினர் படக்குழுவினர்.



ஆனால் இதற்கெல்லாம் இடையில் ஒருமுறை கூட உதயா உதய்யை சந்திக்க நேரிடவே இல்லை.அதன் பின் இவள் அனுப்பிய குறுந்தகவல்களிற்கும் அவனிடம் பதில் இருக்காது.இவளும் விடாது எதாவது அனுப்பிக் கொண்டு தான் இருப்பாள்.



இப்படியே நாட்கள் ஓட இவர்கள் வெற்றியை கொண்டாட சசி தன் வீட்டில் அனைவருக்கும் விருந்துக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான்.



இதில் உதயாவிற்கு தான் ஏக குஷி..பின்னே இருகாதா..சில வாரங்களுக்கு பின் மீண்டும் அவனை சந்திக்க போகிறாளே..!!



“டைரக்டர் சர்..என்னை இப்போ எப்படி அவாய்ட் பண்ணுவீங்க..”

என்று குறும்பாய் எண்ணிக் கொண்டவள் அவனை காணவே அன்று பிரத்யோகமாய் தயாராகி வந்தாள்.ஆஷிக்கின் கிண்டல்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் தன்னவனை காண ஆர்வமாய் வந்தாள்.

அனைவரும் இளவட்டங்கள் தான் என்பதால் விருந்து சிரிப்பும் விளையாட்டும் கொண்டாட்டமுமாய் கலை கட்டியது.ஆனால் உதய் இன்னும் வந்தபாடில்லை.



“ஹே..உதயா..என்ன ஷார்ட் டைமில் பிரபலமாகிடீங்க..இன்ரோ கொடுக்க சொல்லி என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் நச்சு பண்றானுங்கடா..சமாளிக்க முடியல..”



என்று சசி கூற, “ஆஹான்..நீங்க தான்ண்ணா சொல்லிக்கணும்..நான் தான் கமெண்ட் எல்லாம் படிக்கிறேனே..ஹீரோயின் கொஞ்சம் நடிச்சு இருக்கலாம்னு அப்பட்டமா கலாய்கிறாங்க.. கலைஞனுக்கு இதெல்லாம் சாதரணமப்பா நு சீன் போட்டாலும் நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..”



என்று பெருமூச்சோடு சொன்னவளை கண்டு எல்லோருக்கும் சிரிப்பு தான் வந்தது.



“கமெண்ட்ல நாலும் தான் சொல்லுவானுங்க..நயன்தாராவிற்கே நடிப்பு தெரியலைன்னு சொல்ற கூட்டமும் இருக்க தானே..செய்யுது..”



என்ற தருணை நோக்கி கையெடுத்து கும்பிட்டவள்,



“தெய்வமே..நான் யாரென்று எனக்கே தெரியும்..சமாளிக்கிறேன்னு ரொம்ப டேமேஜ் பண்றீங்க..ப்ளீஜ் நோ..”

என்றாள் பாவமாய்..



“ஹாஹா..நீ இதெல்லாம் பார்த்து கவலை படுவியோன்னு நினைச்சேன்..”



“சில் ப்ரோ..பாராட்டினால் ஏத்துக்கிறோம் தானே..அதே மாதிரி உண்மையாய் நெகேட்டிவ் சொன்னாலும் ஏத்துக்கணும்..நானே இன்னும் கொஞ்சம் நல்லா நடித்து இருக்கலாம்னு நினைச்சேன் தான்..அதை அவங்க சொன்னதில என்ன தப்பு...”



“அது சரி..இனிமே என்ன..சினிமா தானே..ஆக்டிஙை இம்ப்ரூ பண்ணிக்கலாம்..”



“நீங்க வேற..நோ..வே..இது தான் என் முதலும் கடைசியும்..நமக்கு சினிமா எல்லாம் செட்டாகாது ண்ணா..நெக்ஸ்ட் வீக் கேம்பஸ் இண்டெர்வியூ இருக்கு..அதுக்கு ஃப்ரீப்பேர் பண்ணி நல்ல கம்பெனில ப்லேஸ் ஆகணும்..”

என்றவள்,



“பட் இது என் லைஃப்ல மறக்க முடியாத ஒரு எக்ஸ்பீரியன்ஸ்..ஒரு வொர்க் பண்றா மாதிரியே இல்ல..ஜாலியா ஃப்ரெண்ட்ஸோட ஒரு என்ஜாய் பண்ணின ஃபீல் தான்..பெஸ்ட் மெமரீஸ்..”

என்றாள் கண்கள் மின்ன..



“ம்ஹூம்..மறக்க முடியாத மெமரீஸ்..எங்க எல்லார் கூடவுமா..இல்ல டைரக்டர் சர்ரோட ஸ்பெஷல் மெமரீஸா..”



அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சசி குறும்பாய் கேட்டான்.ஓரளவிற்கு அவனால் யூகிக்க முடிந்தது.எனவே அவளை சீண்டுவதற்கு கேட்க,



“அப்படி தான்னு சொல்லிடுவேன்..அப்புறம் உங்க மனசு கஷ்டப்படுமே..எதுக்குனு தான் பொதுவா சொல்றேன்..”

என்று அசராமல் திருப்பி வார ‘அடிப்பாவி..’ என்றான் கையால் வாயை மூடிக்கொண்டு..



அந்நேரம் தான் உதய் வந்து சேர்ந்தான்.பொதுவாய் அனைவரிடமும் ஒரு மன்னிப்பை கேட்டபடி..



இரும்பை கண்டுவிட்ட காந்தமாய் அவள் கண்கள் பஜக் சென்று அவன்மேல் ஒட்டிக் கொள்ள பூவாய் மலர்ந்த முகத்தோடு அவனை பார்த்து புன்னகைத்தாள்.



அவள் அருகில் மட்டும் தான் இடம் காலியாய் இருந்தது.அதனை கண்டும் காணாதது போல் சுற்றி பார்வையை ஓட்ட சற்று தள்ளி ஓரமாய் இருந்த பீன் பேக் இருந்தது.அவனை கவனித்த உதயாவின் முகத்தில் புன்னகை மறைய தீர்க்கமாய் அவனை நோக்கினாள்.



அந்த பார்வையே அவனிற்கு சொல்லியது.இப்பொழுது இங்கே உட்காரவில்லை என்றால் நிச்சயம் அன்று ஸ்டூடியோவில் தனியாய் அழைத்து கேட்டதை இன்று எல்லார் முன்புமும் கேட்பாள் என்று..



அவனும் பதிலுக்கு ஆமா..அப்படி தான் என்று அலட்சியப்படுத்த நிமிடம் கூட ஆகாது தான்.ஆனால் அது மற்றவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கும்..தேவையில்லாமல் சீன் க்ரியேட் செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் அவள் அருகில் சென்று அமர அதன்பின் தான் இயல்பானாள்.



நேரம் செல்ல சாப்பிட்டு முடித்து கை கழுவ சென்ற போது தான் அவனை தனிமையில் சந்திக்க முடிந்தது.



“எங்க வராமலே இருந்திடுவீங்களோன்னு நினைச்சேன்..”



“நான் ஏன் வராமல் இருக்கணும்..”



“இல்ல..என்னை எப்படி வித விதமாய் அவாய்ட் பண்ணலாம்னு தானே பார்க்கிறீங்க..அதான்..”



அவனுக்கு டென்ஷன் மெல்ல ஏற தொடங்க,



“உன்மேல எனக்கு ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது..அதை நீயே கெடுத்துக்காத...”

என்று எச்சரித்தவன் “நீ ஏன் உதயா இப்படி பண்ற..நல்ல பொண்ணா தானே இருந்த..”

என்று பொறுக்க முடியாமல் கேட்க,



“அப்போ லவ் பண்ணினால் கெட்ட பொண்ணா டைரக்டர் சர்..”

என்று அவள் முறைக்கவும் இச்சு கொட்டி,



“அப்படி சொல்லல...ம்ச்..உன் ரேஞ்சுக்கு என்னை விட பெட்டரா ஆயிரம் பையனை உன் வீட்டில் கொண்டு வந்து நிற்பாட்டு வாங்க..வயசு கோளாறு ல இப்படி பெணாத்தாத..”

என்று அறிவுரை கூறியவனை கண்டு அவளுக்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.



மிக நிதானமாய் அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்து,



“உங்களை விட ஒரு நல்ல பையனை என் லைஃப் ல கண்டிப்பா நான் சந்திப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை உதய்..நீங்க அப்படியே எங்க அண்ணியோட குணம்..வைர குணம்..”

என்று அவள் கூறும் போதே வெண்பாவின் பேச்சில் அவன் முகம் மாறியது.அதனை கண்டும் காணாது,



“உங்களுக்கு என் குடும்பம் மீது வெறுப்பு இருக்குனு தெரியும்..அப்படி இருக்கும் போதும் என்னிடம் ஒரு துளி கூட வித்தியாசம் காட்டலை நீங்க..உங்களிடம் நிறையவே கத்துகிட்டேன்..எல்லா ப்ரண்ட்ஸூம் மாதிரி தான் என்னையும் ட்ரீட் பண்ணீங்க...அதையும் மீறி நான் லவ் பண்றேன்னு வந்தபோதும் நீங்க யாருன்னு எனக்கு தெரியாது.என் குடும்பத்தை பழிவாங்க நல்ல வாய்ப்பு..நீங்க நினைத்து இருந்தால் என்னை பொய்யா கூட காதலித்து என் ஃபேமிலீ மேல உள்ள வென்ஜென்ஸை தீர்த்து இருக்கலாம்..ஆனால் அப்பவும் நேர்மையா தான் என்னை கையாண்டீங்க உதய்..எனக்கு நல்லது எதுனு தான் யோசிச்சீங்க..தனக்கு ஆகாதவங்கலே ஆனாலும் அவங்களுக்கும் நல்லது நினைக்கிற மனசு இருக்கே..அதை எந்த பொண்ணு தான் விரும்ப மட்டாள்..யூ ஆர் மை ட்ரெஷர் உதய்..ஐ டோண்ட் வாண்ட் டூ லாஸ் யூ..”



மீண்டும் அவளால் பேசற்று நின்றான்.காதலிப்பதை விட காதலிக்க படுவதில் பெறும் சுகம் அலாதி தானே..!!தன்னை ஒரு பெண் இத்தனை தூரம் ஸ்பெஷலாய் உணர வைக்கும்போது எந்த ஆண்மகன் மனம் தான் நெகிழாது.தகித்த அவன் உள்ளத்தில் பனி காற்றை அவள் வார்த்தைகள் வீச எங்கே தன் மனம் அவள் பால் சாய்ந்துவிடுமோ என்று பயம் வந்தது.



“நீ இப்படி பேசுறதால..ஒன்னும் மாற போறது இல்லை..எனக்கு உன் மேல காதல் இல்ல..வரவும் போறது இல்ல..இனியும் நீ இப்படி இருந்தேனா அது உன் விதி..”



முயன்று வரவைத்த அலட்சிய குரலில் சொல்லி அவன் திரும்ப அவளும்,



“சரி தான் உதய்..பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்க காதலை கெஞ்சி பெற முடியாது இல்லையா..கண்டிப்பா உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்..ஆனால் என் மனசும் மாறாது.என் லவ் உங்களுக்கு மட்டும் தான்..எத்தனை வருஷம் ஆனாலும் சரி உங்களுக்காக காத்திட்டு தான் இருப்பேன்..உங்களை மறந்துடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க..”



என்று அழுத்தமாய் கூற அவனுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. என்ன மிரட்டுறாளா என்று நினைத்தவன் தனக்குள்ளே ஒரு முடிவு எடுத்தவனாய்,



“வா..என்கூட கிளம்பு..”

என்று வேகமாய் அங்கிருந்து நகர எங்கே என்று அவள் கேட்டது காற்றிலே கரைந்தது.



அவசரமாய் அவனை பின் தொடர்ந்து உதயா ஓட அதற்குள் அவன் சசியிடம் சொல்லிக் கொண்டு வெளியேவே சென்றிருந்தான்.



கேள்வியாய் பார்த்த ஆஷிக்கிடம் வந்திடுறேன் டா என்று சொல்லிவிட்டு தானும் வெளியேவர அவன் காரில் ஏறி இவள் வருகைகாக காத்திருந்தான்.அவனுக்கு பைக் பிரயாணம் தான் பிடிக்கும்.இன்று தான் அதிசயமாய் தங்கள் காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.



காரருகே வந்தவள் தயக்கத்தோடே அவன் அருகில் ஏறியமர்ந்தாள்.அவன் முகத்தின் இறுக்கம் அவளுள் அபாய மணி அடித்தது.இருந்தாலும் அவன் மீது இருந்த நம்பிக்கை அவனோடு செல்ல துணிச்சலை தந்தது.



சற்று நேரத்தில் போகும் பாதை தன் வீட்டிற்கு என்பது புரிய,



“உதய்..என்ன செய்ய போறீங்க..”

என்றாள் சற்று பதட்டமாய்..பின்னே அவன் முகத்தின் கடுமையில் நிச்சயம் சம்பந்தம் பேச போகவில்லை என்று தெரிகிறது.என்ன செய்ய போகிறானோ என்று அவள் மனம் அடித்து கொள்ள அவனிடம் பதில் இல்லை.



வருடங்கள் கடந்து இருந்தாலும் அவனுக்கு அவர்கள் வீடு மறக்கவில்லை.சரியாக வந்து வண்டியை நிறுத்தி இறங்கியவன் வீட்டை நோக்கி நடக்க அவன் பின்னோடு அவளும் இறங்கினாள்.



‘இன்னையோட உனக்கும் எங்களுக்கும் உள்ள பந்தம் முடிஞ்சு போச்சு..பொறந்த வீடுனு எங்களை தேடி வந்துடாத..நாங்களும் ஜென்மத்துக்கு உன் வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்..’



அசிரீரியாய் அவன் காதில் ஒலிக்க அதனை ஒதுக்கி உதயாவை பார்த்தவன் ‘போ..’ என்று அவளுக்கு கைகாட்டி முன்னே அனுப்பி அவளை தொடர்ந்து வந்தான்.



“அவ்வளவு பேசினேல..கூப்பிடு உன் வீட்டு ஆளுங்கள..”



என்று உதயாவை அவன் போட்ட சத்ததில் உள்ளே இருந்த வெண்பா வந்துவிட்டாள்.



யார் இப்படி கத்துறது என்று வேகமாய் வந்தவள் உதய்யை கண்டு ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.



‘உதய்..’ என்று அவள் உதடுகள் முணுமுணுக்க கண்கள் கலங்கிவிட்டது.தன் தம்பி தன்னை பார்க்க வந்துவிட்டானா என்ற ஆச்சரியத்தோடு பார்த்தாள்.சிறு பையன் போல் இருந்தவன் இன்று வளர்ந்து முழு ஆண்மகனாய் தன் முன் கம்பீரமாய் நின்ற தம்பியை பாசமாய் பார்த்தவள் அவனை நோக்கி வர பார்வையிலே அவளை நிறுத்தினான்.



அப்பொழுதும் இப்பொழுதும் வெண்பாவிடம் பெரிதாக மாற்றம் இல்லை.அவள் வயதின் முதிர்ச்சி மட்டும் அவள் முகத்தில் தெரிந்தது.அவள் அருகாமையில் நெகிழ தொடங்கிய மனதை இறுக்கி பிடித்து சலனமின்றி நோக்கியவன்,



“உங்க வீட்டு பெரிய மனுஷங்க யாரும் இல்லையா..”

என்றான் தோரணையாக..அந்நேரம் வெண்பாவையும் ஆழிக்கண்ணனையும் தவிர யாரும் இல்லை.ஜெகன் கூட நிலாவை பள்ளி விட்டு அழைத்து வர சென்றிருந்தான்.



இவன் சத்தம் கேட்டு ஆழிக்கண்ணனும் வந்து விட்டார்.ஆனால் அவனை கண்டதும் அடையாளம் தெரியவில்லை.



அவர் யோசனையாய் பார்க்கும்போதே,



“வாங்க சர்..உங்களுட்ட பேச தான் வந்தேன்..என்னை தெரியுதூங்களா..”

என்று அவன் நேரடியாய் அவரிடம் பேச சட்டென்று கண்டுக் கொண்டார்.தெரிந்ததும் திரும்பி வெண்பாவை பார்க்க அவளோ என்னவென்று புரியாமல் தம்பி கோபம் இன்னும் இளகவில்லை என்றுணர்ந்து பதட்டமாய் நின்றாள்.



“நீங்க உங்க மகனுக்கு தான் தராதாரம் பார்த்து ஆசைப்பட தெரியலைன்னு சொன்னீங்க..ஏன் உங்க மகளுக்கும் அதை சொல்லிக் கொடுக்கலையோ..உங்களோட கர்வமும் ஆணவமும் கொஞ்சமாவது உங்க மகளுக்கும் கொடுத்து இருக்க வேண்டாமா..அப்படி கொடுத்து இருந்தால் உங்க கௌரவத்தை தூக்கி பிடிக்க நினைச்சிருக்கும்ல..”

என்று குத்தலாய் பேச தொடங்க திக்திக் மனதோடு நின்றாள் உதயா.



“என்ன புரியலீங்க்ளா..உங்க பொண்ணு என்னை விரும்புதாம்..”



என்று பட்டென்று அவன் சொல்ல அதிர்ந்து நோக்கியவர் எதோ சொல்ல வாயெடுக்கும் போது,



“அவசரப்படாதீங்க..உங்க பொண்ணு தான் என்னை விரும்புறாங்க..நான் இல்ல..எனக்கு அந்த மாதிரி எண்ணம் துளியும் இல்ல..உங்க வீட்ல ஒரு பொண்ணை கட்டி கொடுத்தே நாங்க படக்கூடாத அவமானம் எல்லாம் பட்டாச்சு..மறுபடியும் அதே தப்பை பண்ண நான் கேனையன் இல்ல..இத உங்க பொண்ணுட்டையும் சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணேன்..ஆனா அவங்க புரிஞ்சிக்கிறா மாதிரி தெரியல..

நீங்க தான் நல்லா புத்தி சொல்லுவீங்களே..உங்க மகளுக்கும் எடுத்து சொல்லி புரிய வைங்க..”



என்று பொட்டில் அறைந்தாற்போல் சொன்னவன் வெண்பாவை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்ப அங்கே உதயா அவனையே வெறித்தபடி நின்றாள்.



அவளது அப்பார்வை கூர்மையான அம்பு அவனை துளைத்ததுபோல வலிக்க நிற்க முடியாமல் வேகமாய் வந்து காரை எடுத்து விட்டான்.



கை தன் போக்கில் இயக்க மனமோ எதிர்மறையாய் தள்ளாடியது.அவள் தன்னை நல்லவன் என்று சொல்ல சொல்ல அந்த பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று தோண்ற நினைத்ததை செய்தும் முடித்துவிட்டான்.அவளை கொண்டு ஆழிக்கண்ணனை பேசியது அவருக்கு எவ்வளவு அவமானம் என்று தெரியும்.பெண்ணை பெற்றவர் மனம் கூனிகுறுகி தான் போகும்..இதனை அவளாலும் தாங்க முடியாது தன்னை வெறுத்து விடுவாள் என்று எண்ணி தான் அவன் இவ்வாறு செய்தது.ஆனால் கடைசியாய் அவள் பார்த்த பார்வை அவன் மனதை கூறுப்போட்டது.



உதயாவை விட்டுவிட்டு மீண்டும் வருவதாக தான் கூறியிருந்தான்.ஆனால் தற்போதைய மனநிலையில் அங்கே செல்ல விரும்பாமல் கோயம்புத்தூரிற்கே வண்டியை திருப்பினான்.



தளர்ந்த நடையோடும் சிவந்த கண்களோடும் வந்த மகனை கண்டு பதறி போயினர் செந்தில்நாதனும் சரண்யாவும்..



“உதய்ம்மா..என்னாச்சு டா..”



என்று பதட்டமாய் வந்த அன்னையிடம்,



“இல்லமா..வேல டென்ஷன் தான்..வேற ஒண்ணும் இல்ல..”

என்க,



“உன்னை எங்களுக்கு தெரியாத இராசா..வேலையை டென்ஷனா பார்க்கிற ஆளா நீயி..பாரு..முகமே செத்து போச்சு..என்னானு சொல்லுடா..”

என்று தன் அருகில் அமர்ந்திக் கொண்டு மகனை தணிவாய் கேட்க அதற்கும் மேல் சொல்லாமல் இருக்க முடியவில்லை.அனைத்தையும் கூறிவிட்டான்.அவர் கையை பற்றி தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்,



“நான்..நான் பண்ணினது தப்பா ம்மா..”

என்று கேட்க அவன் கூறிய விசயங்களை கிரகிக்க முடியாமல் அதிர்ந்து அமர்ந்திருந்த சரண்யா தன் கணவரை பார்க்க அவரும் அதே நிலையில் தான் இருந்தார்.



முதலில் தன்னை மீட்டுக் கொண்ட செந்தில்,



“அந்த பொண்ணை நீ விரும்பலை தானே உதய்..”

என்று கேட்க அவனால் சட்டென்று இல்லை என சொல்ல முடியவில்லை.கண்களில் காதலும் உதட்டில் சிரிப்பும் மின்ன ‘யூ ஆர் மை ட்ரெஷர் உதய்..’ என்று அவள் கூறியது மனக்கண்ணில் தோன்ற, “இ..இல்லை ப்பா..எனக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்ல..”

என்றான் தடுமாற்றமாய்..அதிலே அவன் ஒரு நிலையில் இல்லை என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடிந்தது.அதனால் அந்த விஷயத்தை துருவாமல்,



“அப்போ நீ அந்த பொண்ணுக்கு நல்லது தான் கண்ணா பண்ணிருக்க..கண்டிப்பா அந்த பொண்ணு மனசு மாறிடும்..நீ கவலை படாதே..”

என்று ஆறுதலாய் கூற அவன் பதில் ஏதும் கூறவில்லை.மனதில் ஏதோ ஏமாற்றமாய் உணர்ந்தான்.



சில நிமிடங்கள் அமைதிக்குபின்,



“வந்து உதய்..வெண்பா..வெண்பாவை பார்த்தியா..”

என்று தயங்கி தயங்கி சரண்யா கேட்க,



“ஏன் ம்மா..இவ்வளவு தயக்கம்..நான் அப்படியா உங்களை பயப்படுத்தி வைத்திருக்கேன்..உங்க மகளை நீங்க விசாரிக்கிறீங்க..இதிலென்ன தயக்கம்..”

என்றவன்,

“பார்த்தேன்..அவளுக்கென்ன ரொம்ப நல்லா இருக்கா..நிலாவை தான் பார்க்க முடியல..”

என்று பெருமூச்சு விட்டான்.



சரண்யாவின் தயக்கதிற்கு காரணம் இருக்கிறது.ஏனெனில் பெற்றவர்களின் கோபம் எல்லாம் சில மாதங்களிலே கரைந்து மகளின் மேல் பாசம் மேலோங்க அவளுக்காக அவர்கள் பேசியபோது,



“மறுபடியும் அவளோட நமக்கு எந்த உறவும் வேண்டாம்..அப்படி உங்களுக்கு அவ தான் முக்கியம் என்றால் என்னை விட்டுடுங்க..”

என்று உதய் ஸ்திரமாய் சொல்லிவிட அவனது வார்த்தையை அவர்களால் மீற முடியவில்லை.



அதிலும் நாகஜோதி இறப்பை அவர்கள் சொல்லிவிட்டு இருந்தாலும் நிச்சயம் கோபம் மறந்து துக்கம் விசாரிக்க சென்று இருப்பார்கள்.அதில் சண்டைகூட மறைந்திருக்கலாம்.ஆனால் அவர்கள் சொல்லிவிடவில்லை..பெரிதாக இருக்குடும்பத்திற்கும் பொதுவான உறவும் இல்லை.ஆகையால் இவர்களுக்கு விசயம் தெரியவே இல்லை.சில மாதங்கள் கழித்து தான் கேள்விப்பட்டனர்.அதில் அவர்கள் உறவு மொத்தமாய் விட்டுபோனது.அப்படி என்ன தான் நடந்தது..?? என்ற கேள்வி நம் மூளையை குடைக்கிறது அல்லவா..! எனவே கால சக்கரத்தை சற்று பின்னோக்கி சுழற்றி ஒரு குறும்படத்தை போட்டு பார்ப்போம்..!!!
 
Last edited:
Top