Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Singa penne-8

Advertisement

அப்பல்லோ மருத்துவமனையில் ,வராண்டாவில் ஆவேன வாய் பிளந்து,கண்களில் கவலையுடன் அமர்ந்திருந்தார்கள்,,,ஜீவன் புருஷோத், வைஷாலி,மூவரும்,,,உள்ளே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தது லதா,,,உயர் ரத்த அழுத்த பாதிபினால் ,பக்க வாதம் ஏற்பட்டு,ஒரு பக்கமாக ,கை கால் வாய் எல்லாம் செயலிழந்து ,முதல் நாள் இரவோடிரவாக இங்கே கொண்டு வந்து.அனுமதிக்கப்பட்டிருந்தாள்
..மூவரும்,ஒருவருக்கொருவர் கண்களாலேயே,தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டு,படபடப்புடன் இருந்தார்கள்...மருத்துவமனைகள் தானே பல நேரங்களில்.உறவுகளின்,மகத்துவத்தை,மனிதர்க்குப் புரிய வைக்கிறது.. ,லதா விஷயத்தில் அப்படியேதும் உறவு சிக்கல் எதும் இல்லைதான்,,,அவளும் மகன் மருமகளை தள்ளி நில் என்று சொன்னவளி ல்லை ...புருஷோத்தும் தாய் தகப்பனை வித்தியாசப்படுத்திப் பார்த்தவனில்லை...அவன் எண்ணத்திற்க்கு ஒத்தும் ,உதவியும் இருந்தவள் வைஷூ..ஆனால் இதையெல்லாம் பற்றி கவலை கொள்வதோ ,கவனத்தில் கொள்வதோ,இயற்கையின் வேலையில்லை...அது தன் பாட்டுக்கு நடத்துகிற பாடத்தை நடத்திக்கொண்டு தான் இருக்கிறது,,,
‘’அம்மாவுக்கு சரியாயிடுமா கண்ணா?’’-ஜீவன்..’’
‘’டோன்ட் வோரீப்பா ,,,நார்மலுக்கு வந்துடுவாங்க அம்மா,,’’
‘’அத்தைக்கு வில் பவர் ஜாஸ்தி மாமா,,,கண்டிப்பா பழைய நிலைமைக்கு திரும்பிடுவாங்க ‘’என்று உறுதியான குரலில் சொன்னாள் வைஷூ..நர்ஸ் இரண்டு பேர் வெளியில் வர புருஷோத் அம்மாவின் நிலையறிய அவர்களை நெருங்கினான்,,வாயைதிறக்குமுன் முந்திக்கொண்டாள் நர்ஸ்,
‘’பேஷண்ட் பொசிஷன் தெரியனும்னா,,டாக்டர் உள்ளே இருக்காரு,,,,பேசிக்கோங்க’’என்று மராத்தியில் சொல்லிவிட்டு,போனாள்...ஜீவன் ,புருஷோத் இருவரும் மருத்துவரின் அறைக்குப் போனார்கள்,,,டாக்டர் அதித் நாயக் ஆங்கிலத்தில் பேசினார்...லதாவின் மெடிக்கல் ஹிஸ்டரியைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்,,,,,சரி செய்யக்கூடியத்தான் என்று நம்பிக்கை தெரிவித்தார்..
‘’டாக்டர்...லதா ரொம்ப ஆக்டிவ் ஆன ,பாசிடிவ் காரக்டர் ,,அவ இப்பிடி பேச்சு மூச்சு இல்லாம,படுத்து இருக்கறதை பார்க்க முடியல,எங்களால,,,’’என்று உணர்வுகளை அடக்கிக் கொண்டு அமைதியாகச் சொன்னார் ஜீவன்...
‘’இல்ல சார்...நீங்க இந்த அளவுக்கு கவலைப் படறதுக்கு,அவசியமில்ல....பிரஷர் அதிகமாகி,பிரையினை,பாதிச்சாதால,பாடி பார்ட்ஸ் கண்ட்ரோலை இழந்திருக்கு,,,,பட்.நோ.ப்ராப்ளம்...சீக்கிரமாகவே.நார்மலுக்கு வந்துடுவாங்க,,;;’’
‘’ஆமா டாக்டர்,,,முதல் நாள் நைட்டு,அவ பையனை பத்திக் கவலைப்பட்டு என் கிட்டப் பேசிக்கிட்டு இருந்தா,,,,காலையில எப்பவும் அஞ்சு மணிக்கு எழுந்துடறவ,அன்னிக்கு ஆறு மணிக்கு மேலாகியும்.எழுந்திரிக்காததால,நான் கிட்டப் பொயி என்னம்மாங்கவும்,கை கால் அசைக்க வரலைன்னு குழறியபடி சொல்றா,,’’என்றுசம்பவத்தை விளக்க,,,
‘’எஸ்,,,வோரீயில பிரஷர் கூடியிருக்கு..பட்,நார்மலுக்கு,கொண்டு வந்துடலாம்’’என்று சொன்னார்...சாதாரண வார்த்தைகள்தான்,,,அதையே ஒரு மருத்துவர் சொல்லும்போது, வார்த்தைகளுக்கு கூட உயிர் வடிவம் கிடைத்து விடுகிறது,,,,
அத்தியாயம் 11
ஆற்றைக் கடந்தாகி விட்டது,,,ஆனால் கரையேறி வந்துவிட்டோம் என்ற நிம்மதிக்கு வரமுடியவில்லை,--புருஷோத் குடும்பத்திற்க்கு,,,காரணம் லதாவின் சுகவீனம்தான்,,,லதாவிற்க்கு பேச்சு நல்லபடியாகத் திரும்பிவிட்டது....கால்கள் கூட ஓரளவு பரவாயில்லை...சாய்ந்த படி,இழு த்தாற்போல் நடக்கிறாள்,,,கைகளைத்தான் அவளால் சிறிதும் அசைக்க முடிய வில்லை,,ஒரு பொருளை எடுக்கவோ,பிடிக்கவோ,விரல்கள் ஒருங்கிணைந்து ஒதுழைப்பதில்லை..அதுதான் வீட்டினருக்கு துயரமாக இரூ க்கிறது,
,,,இனி தனியாக ஒரு வீட்டை மேலாண்மை செய்வது லதாவிற்க்கு சாத்தியமில்லை என்பதால் ,அவர்கள் குடியிருந்த விமான் நகர் வீடு,காலி செய்யப்பட்டு,மகனுடன் வந்து விட,இரு வீடு இணைந்து ஒரு வீடானது,,,வைஷூவும் அலுப்பு சலிப்பில்லாமல்தான்,,அத்தைக்கு பணிவிடை செய்தாள்...அதிலொன்றும் குறைவில்லைதான்,,,இருந்தும் இத்தகைய,சார்ந்திருத்தல்,சங்கடமாய் இருந்தது,லதாவிற்க்கு...
‘’நான் எண்ணவுமில்லை..எதிர் பார்க்கவுமில்லை,,இப்பிடி முடமாப் போவேன்னு,’’
‘’அத்தை,,,அதல்லாம் பெரிய வார்த்தை,....நீங்க ஃபார் பெட்டர் ..என்ன..கை சரி யாகனும்,,,அது ஒண்ணுதான்,,’’—வைஷூ
‘’ஒண்ணு இல்லம்மா..இப்பிடி ரெண்டு கையும் எனக்கு பிரயோஜனமில்லாம இருக்கே’’
‘’லதா இப்பிடியெல்லாம்,நீ மனசை விட்டு பொலம்பாதே...எங்க கைகள் எல்லாம் உன்னோடதா..நினைச்சுக்கோ’’—ஜீவன்...
‘’நினைக்கத்தான் முடியுது,,,,நடைமுறையில் அது சாத்தியமில்லையே...என் கைகள் தானே எனக்கு வசதி,,’’
கையில் தொலைபேசியுடன் காட்சிக்குள் நுழைந்தான் புருஷோத்,,,,
‘’ஓகே,,ஓகே,,,கூல்,,,எல்லாப்ரச்சினைக்கும் தீர்வுண்டு,,,தேடணும் தெரிஞ்சுக்கணும்,,,,அதை ஃபாலோ பண்ணனும்,,,அதுதான் வேண்டியது,,,’’
‘’எங்கே போயி தேட;;’’-என்றாள் லதா சுரத்தில்லாமல்...’’
‘’ஆச்சும்மா...தேடியாச்சு,,தீர்வும் கிடைச்சாச்சு...’’
மூவரும் புருஷோத் பேசுவதையே கூர்மையாகக் கேட்டார்கள்’.
“”...என் ஃபிரண்ட் ஒருத்தர் பிஸியோ தெரபிஸ்ட் ஆக இருக்காரு.....அவருக்கிட்டே அம்மாவோட ரிப்போர்ட் பத்தி,சொல்லி கேட்டேன்,,,’’
‘’என்ன சொல்றாரு’’என்றார் ஜீவன் அவசரமாக.
...நமக்குப் பிரச்சினை இருக்கும் பட்சத்தில்,கடுகு கூட கடவுளாய்த்தான் தெரியும்....அறிவுரை சொல்வோரெல்லாம் ஆபத் பாந்தவனாகத் தான் தெரிவர்....
‘’இங்க பாருங்க...உங்க அம்மாவோட நோய்க்கு,சிகிச்சை எடுத்துகிட்டாச்சு....நார்மல்தான் ,பட் கைகள் மட்டும் இயக்கத்துக்கு வரணும்னு சொல்றீங்க...அவ்வளவு தானே...!சிம்பிள்...கைவிரல்களுக்கும்,கை மூட்டுகளுக்கும்,வேலை குடுத்துகிட்டேயிருங்க....தொடர்ந்த பயிற் சியில்.தான் கைகள் இயக்கத்துக்கு வரும்,,,,அப்படீங்கறார்’’ என்றான் புருஷோத்,,,,,
‘’கரெக்டுதான் புருஷோத் நீங்க சொல்றது,,,எதிர் வீட்டு சடகாபன் தாத்தா,,,பாத்ரூம்ல வழுக்கி விழுந்து நடக்க முடியாம இருந்தார்ல,டெய்லி பிராக்டீஸ்ல இப்ப நல்ல நடக்கறாரே...பார்க்ல வாக்கிங் கூட போறாரே’’-என்றாள் ஆர்வத்துடன் வைஷூ...
‘’எஸ் வைஷூ..யு காட் இட் ...யோசிச்சு என்ன செய்யனுமோ செய்”” ..’’என்றான் மனைவியின் மீதுள்ள நம்பிக்கையால்...லதாவும் ஜீவனும் ஒரு வித சோர்வுடன் சோபாவில் சாய்ந்து கொண்டனர்...எண்ணம் செயலானால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தான் என்று நினைத்துக் கொண்டாள் வைஷூ.....
அத்தியாயம் 12 ’கரையில் நின்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வரயே பிரச்சினை...ஆனது ஆகட்டும் என்று துணிந்து தண்ணீரில் இறங்கி விட்டால்,பிறகு தன்னால் நடக்கும் எல்லாம்,,,வைஷாலியும் அப்படித்தான் தொடங்கி விட்டாள்.—சிற்றுண்டி வியாபாரத்தை வீட்டிலேயே வைத்து
....சென்னையில் அம்மா வீட்டில் இருக்கையிலேயே,வைஷூ சமையலில் படு கெட்டி,,,சகலத்திலும் சுட்டி...அன்று வீட்டில் வைஷூ கை சமையல் என்றால்,அரிசி ஒரு கைப்பிடி கூடுதலாகவே போட வேண்டி வரும்,,,,அது போல, விடுமுறை நாட்களில் மாலை நேர சிறு தீனி தயாரிப்பு அவள் பொறுப்புதான்..
..தினம் ஒரு ஐட்டமாக செய்து அசத்துவாள்....அதிகம் செய்து போட்டு பொருட்களை வீணாக்கவும் மாட்டாள்.....தேவைக்கு ஏற்ப அளவாகவும் இருக்கும்,,,,அதுதான் இன்று சிறு தொழிலாய் கை கொடுக்கிறது...அவள் மாமியாருக்கு கையையும்,கொடுக்கப்போகிறது,,,,
வலிந்து வளர்த்துக்கொண்ட திறமை எதுவென்றாலும்,நிச்சயம் என்றேனும் நமக்கு ஏற்றம் தரும்,,,,
‘’வைஷூ...உன் பிளான் என்ன,,,தெளிவா சொல்லு,,’’—புருஷோத்...
‘’உங்களுக்கு சொல்லாமலா,,,கேட்டுக்கங்க,, ஆவியில் வேக வைத்த உணவுகள் தயாரிச்சு,பேக் பண்ணி, ஆர்டரின் பேர்ல,டெலிவரி,பண்றோம்..’’
‘’மெனு என்னனு சொல்லு’’’’
‘’இட்லி,இடியாப்பம்,ஆப்பம்,பணியாரம்,கொழுக்கட்டை,களி வகைகள்,வரகு உப்புமா, குதிரைவாலி பொங்கல்,கஞ்சி வகைகள்,……’’
‘’என்ன லிஸ்ட் பெரிசாயிருக்கு’’
‘’வாரத்துல ஆறு நாளும்,இந்த லிஸ்ட்லேயிருந்து,ரெண்டு மூணு ஐட்டங்கள் தயாராகும்,,,அதுக்குப் பொருத்தமா, சைட்-டிஷ் வகைகள்,சட்னி,சாம்பார்,குருமா,துவையல்,அவியல், கிச்சடி அப்பிடின்னு,அதுவுமொரு லிஸ்ட் இருக்கு,,,காம்பினேஷன்ல ரெடி பண்ணனும்’’
‘’தூள் பண்ணு,,பட்,நிறைய பேருக்கு செய்யும்போது,அதுக்கான அளவெல்லாம் தெரியுமா உனக்கு?’’
‘’ஓ ,,வீட்டுல நாலு பேருக்குசெய்யறோம் இல்ல ,அதையே மல்டிப்ளை பண்ணிப் போட வேண்டியதுதான்,,,அத்தையோட பாத்திரங்கல்லாம் பெரிசு பெரிசா இருக்கில்ல....அதுவே போதும்,,,பேக்கிங்க் மேட்டெரியல்ஸ் மட்டும் வாங்கணும்’’
‘’உதவிக்கு ஆள் வேண்டாமா உனக்கு?’’
‘’வேண்டாம்,,,இப்போதைக்கு,அத்தை மாமா ,நான் மூணு பேரும்தான் களத்துல இறங்கப்போறோம்’ பின்னாடி தேவையைப் பொறுத்து பார்த்துக்கலாம்னு விட்டாச்சு...டோர் டெலிவரி பண்றதுக்கு மட்டும் ஒரு பையன் வேணும்னு, மிஸஸ்,கமலா குப்தா,கிட்ட சொல்லியிருக்கேன்...’’
‘’சரி!இந்த பிளான் அம்மாவை எப்பிடி ரெகவர் பண்ணும்?
‘’உரிக்கறது,நறுக்கறது, பேக்கிங்க் பண்றதுன்னு,சின்ன சின்ன வேலைகளை,அத்தைக்கு தரப்போறோம்,,,தொடர்ந்து இயக்கத்துல இருக்கற ப்ப,,கைகள் நார்மலுக்கு ,வர வாய்ப்பிருக்கு,,,பயிற்சியும் ஆச்சு,,,பணமும் ஆச்சு,,,அத்தை மாமாவுக்கு,பொழுது போக்கும் ஆச்சு..’’
‘’ஆமா புருஷோத்...வைஷூ எங்ககிட்டையும் கண்சல்ட் பண்ணினா,,நல்ல யோசனையாத் தெரிஞ்சதால,சரினுட்டோம்,,,’’—லதா,,,
‘’ஏதாவது ஒரு புது வேலையில கான்சண்ட்ரேட் பண்ணினா,,அம்மாவுக்கு ஒரு மைண்ட் டைவர்ஷன் கிடைக்கும்,,எப்பவும் தன்னோட இயலாமையை நினைச்சே ,கவலைப்பட்டுகிட்டு இருக்காளேண்ணு ,இப்பிடி ஒரு முடிவு பண்ணினோம்’’---ஜீவன்,
‘’ஓகே...ஃபைன் ,,ப்ரோசீட் ..பட்,ரொம்ப ஸ்ட்ரேயின் பன்னிக்காதீங்க,,,ரிலாக்ஸா செய்யுங்க,,,ஏதாவது ஹெல்ப் வேணுமானா,என்கிட்ட சொல்லுங்க,,,’’’என்று சொன்னான் புருஷோத்,,
,,ஏனெனில்.அப்பா,அம்மா,மனைவி,மகள்,என்று எல்லோரையும்,அவரவருக்கு,வசதியான மனப்போக்கில்,வாழ அனுமதிப்பவன்,,அதை அங்கீகரிப்பவனும் கூட,,அதுதான் வாழ்வை சீராக்கி செம்மைப்படுத்தும்,உறவுகளை சிதையாமல் பாதுகாக்கும்,என்ற எண்ணமுடையவன்,
,,நம்மை சார்ந்தோருக்கு நாம் படிக்கல்லாக,இருந்து பயணித்தலே சிறந்தது,தடைக்கல்லாக குறுக்கே அமர்வதில் ஒருவருக்கும் புண்ணியமில்லை என்ற பெருந்தன்மையான குணமுடையவன் புருஷோத்,,,,,
So Lovely purushot, I like his character...Leave some space between lines dear
 
இப்படி ஒரு மகன் மருமகள் இருக்கும் போது லதா கவலைப்படலாமா
 
Top