Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singapenna--4

Advertisement

‘உஸ் அப்பாடா ‘’என்று கட்டிலில் விழுந்தாள் வைஷாலி ..நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே இவ்வளவு களைப்பாக இருக்கிறதே !விழாவை சிறப்பித்து நடத்தியவர்களுக்கு எவ்வளவு களைப்பு இருக்கும் ..?புருஷோத்தின் முகம் கண் முன்னே வந்து போனது ..பாவம் இன்றைய நிக்ழ்ச்சிக்காக ஒரு வாரமாய் அலைகிறார்
..அது சரி ..காலையில் கல்லூரி ஜாவா கிரினில் வைத்து அவசரமாய் என் பைக்குள் எதையோ திணித்தாரே ..!என்னவாகயிருக்கும் ..?பைக்குள் கை விட்டு துழாவினாள்
..ஒரு வாட்ச் ,அவனது தொலைபேசி எண் ,வீட்டு முகவரி ஆகியவை அடங்கிய ஒரு ஸ்லிப் இரண்டும் இருந்தது ...வாட்சை ஆசையுடன் கையில் கட்டிக்கொண்டாள் ..ஓரிரு நாட்களில் ஊருக்குக் கிளம்பி விடுவான் புருஷோத் ..அவளுக்கு அலைபேசி அனுமதி கிடையாது என்பதால் இனி புருஷோத் உடன் பேசமுடியாது ..பார்க்க முடியாது
..மனம் இருக்கிறதே ,,அதை வைத்து கற்பனையில் அவனுடன் உரையாட முடியுமே ,,வைஷாலிக்கு எப்பொழுதுமே ,ஈஷிக் கொண்டு பைக்கில் பறக்கும் அல்லது பீச்சில் உலாவும் காதலாகள் மீது ஒரு அலர்ஜி உண்டு .
.இவர்கள் காதலை உணர்கிறார்களா ,,,அல்லது உலகுக்கு எக்ஸிபிட் பண்ணுகிறார்களா ?மௌனமாய் மென்மையாய் பூக்க வேண்டிய பூ காதல் ..அது சொல்லப்படாமலே புரிந்து கொள்ளவும் பேசாமலே உரையாடவும் தொடாமலே ஸ்பரிசத்தை உணரவும் வல்லது ....அது ஏன் பலருக்கும் புரிவதில்லை என்று யோசிப்பாள்
ஆகவேதான் தன்னுடைய காதலில் அத்தகைய நடைமுறைகளை கவனமாய் தவிர்த்து வந்த்திருக்கிறாள் வைஷாலி ..ஒரு கட்டத்தில் அவள் போட்டுக்கொண்ட பூவேலியில் இருந்து அவளாலேயே விடுபட முடியவில்லை .என்றுதான் சொல்லவேண்டும் எனவே ஐ லவ் யு பொறிக்கப்பட்ட கீ செயினை வாங்கி தந்து விட்டு பேசாமலிருந்து விட்டாள் வைஷாலி.
ஆனால் அதுவே புருஷோத்துக்கு அளவில்லா மகிழ்வைத்தந்தது .அதற்கு மேலாக அவளிடிமிருந்து எதை யும் எதிபார்க்கவுமில்லை அவன் ..

ஓடி விட்டது ..காலம் எதற்க்காக யாருக்காக காத்திருக்கப்போகிறது ....?
புருஷோத் ஊருக்குப் போயி ஆறு மாதத்திற்கு மேலாகிறது ...அவனிடமிருந்து எந்தத் தகவலுமில்லை ,,தகவல் வருவதற்கு வழியுமில்லை

.ஆனாலும் வைஷாலிக்கு அந்த பாதிப் பெல்லாம் எதுவுமில்லை ..அவன் சென்னையில் இருக்கிறானோ அல்லது புனையில் இருக்கிறானோ அது முக்கியமில்லை அவள் மனதின் மூளை மூடுக்கெல்லாம் நிறைந்திருக்கிறான் அந்த சுகத்தில்தான் அவள் நாட்கள் கரைகின்றன

இப்படியான ஒருநாளில்தான் கல்லூரியின் லஞ்ச் பிரேக்கில் ஒரு சீனியர் மாணவன் வந்து வைஷாலியிடம் சொன்னான் –புருஷோத் அவளுக்காக ..ஜாவா க்ரீனில் காத்துக் கொண்டிருப்பதாக ....வைஷாலி ஓடினாள் ..அதைவிட பறந்து போனாள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் ..
‘’ஹேய் ..எப்ப வந்தீங்க’//?

‘புருஷோத் எழுந்து அருகில் வந்து இடுப்பில் கை வைத்தவாறு ஒரு நிமிடம் அவளைப் பார்த்து ரசித்தான்.. கண் மூடித் திறந்தான் ..’’

‘’ஒன் அவர் இருக்கும் ,,லஞ்ச் பிரேக் விடட்டும்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன் ..நல்லாருக்கியா வைஷூ ?’’

‘’ஃபைன் ..பட் சர்ப்ரைஸ்‌ ,ஐ காண்ட் பிலீவ் இட் ...’’ என்று பரவசப்பட்டாள் கை விரித்து .....’

‘’இந்த பிங்க் கலர் சுடிதார் உனக்கு அழகாயிருக்குடா வைஷூ ‘’

‘இதை சொல்லவா இவ்வளவு தூரம் வந்தீங்க .?’’

‘’இல்ல ..இன்னும் நிறைய இருக்கு ...அப்பிடிப்போய் உக்காரு ..நான் கார்நெட்டோ வாஙகிட்டு வரேன் சாப்பிட்டுகிட்டே பேசலாம் ‘’
வைஷாலிக்கு சந்தோசம் தாளவில்லை ..இவரை இன்று எதிர் பார்க்கவேயில்லை ..சிறப்பு மிக சிறப்பு ...ஐஸ் கிரிமை இருவரும் சுவைத்தார்கள் ஓரடி இடைவெளி விட்டமர்ந்து ‘’’

‘’எத்தனை நாளைக்கு வைஷூ இப்பிடி உக்காந்து இருக்கறது ?’’

‘’எப்பிடி?’’

‘’நடுவுல இடம் விட்டு ...பக்கத்துல ..இல்ல ,,மடியில உக்கார வேண்டாமா:?’’

‘’அதுக்கு கழுத்துல ஒரு டாலர் தொங்கணுமே ?’’

‘’தொங்க விட்டாப்போச்சு ‘’

‘’அது அவ்வளவு ஈஸியா புருஷோத் ‘’

‘’வோய் நாட் ...?நாம நினைச்சா இன்னிக்கே கூட கல்யாணம் பன்னிக்கலாம் ‘’

‘’கார்நெட்டோ வாங்குனாபுல கல்யாணம் பண்ணிக்க முடியுமா புருஷோத் ‘’
‘’நமக்கு ஆசையிருக்கு. மேஜராவும் ஆயிட்டோம் ..தென் வாட்ஸ்‌ தி ப்ராப்ளம் ‘’
‘’ரியலி ?’’

‘’விளையாட்டு பண்ற விஷயமில்லையே இது ‘’

‘’நான் ஏதோ நாம பேசப் பேசப் டயலாக் அப்பிடி நேச்சுரலா வந்து விழுதுன்னு நினைச்சேன் ‘’

‘’நோ வைஷூ ..நான் இப்ப நல்ல ஸ்கோப் உள்ள வேலையில ஜாயின் பண்ணிட்டேன் ..ஸோ ..உன்னையக் கூட்டிட்டுப் போலாம்னு வந்தேன் ..வைஷூ யு நோ ..இன்னிக்கு வாலண்டைன்ஸ் டே இல்ல ..””

‘’தெரியும் ,,அதான் காலேஜ் ரெண்டுபடுதே ..’’

‘’காதலர் தினத தன்னிக்கு
உனக்கு கல்யாணப்பரிசு தரலாம்னு வந்தேன் ‘’’

‘’எப்பிடி புருஷோத் திடீர்னு வரமுடியும் ?அதுக்கு நான் மேன்ட்டலி தயாராக வேண்டாமா ..’’என்றாள் குழப்பத்துடன் ..’’ஓகே ..நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு ..டூ யு லவ் மீ ?’’

‘’எஸ் ,,எஸ் ‘’

‘’குட் !.உங்க வீட்டுல என்னை பத்தி சொல்லி ,நம்ம கல்யாணத்துக்கு பர்மிஷன் வாங்க முடியுமா உன்னால ?’’ஒரு நார்த் இண்டியனுக்கு உன்னைக் கட்டி தருவாங்களா ?’’

‘’நிச்சயமா முடியாது .ஒரு பர்ஸெண்ட் கூட சான்ஸே இல்ல ?’’

‘’அப்ப இந்த மாதிரிதான் டிசைடு பண்ணனும் ...அதை எப்ப எடுத்தா என்ன ...எல்லாம் ஒண்ணுதானே ..?
வைஷூவின் மௌனத்தைப் பார்த்துவிட்டு தொடர்ந்தான் ...’’என்னயைப் பொறுத்த அளவுள நான் உன்னைய எண் மனைவியாத்தான் பார்க்கறேன் .நோ டவுட் ‘’

‘’எல்லாம் ஓகே தான் ..இருந்தாலும் ..”’

‘’வைஷூ. இங்கே பாரு ,,மெண்டலி தயாராகி எல்லாம் வீட்டை விட்டு வர முடியாது ..யோசிக்க யோசிக்க ..எப்பிடி எல்லாரையும் விட்டுட்டு போறதுன்னு பயம் தான் வரும் ..இப்பிடி திடீர்னு கிளம்பினாத்தான் உண்டு ..ஆனா இதுல ரிஸ்க்கும் உண்டு ..உங்க வீட்டுல நம்மளை ஏத்துக்கலாம் ,,அல்லது ஏத்துக்காமலும் போகலாம் ..நாம எதுக்கும் தயாராகத்தான் இருக்கணும் ..பட் நான் உன்னைய கட்டாயப்படுத்தலை ..சொல்றதெல்லாம் சொல்லிட்டேன் ..டிசைடு பண்ண வேண்டியது நீதான் ...இன்னிக்கு சாயங்காலம் வரை காலேஜ்லதான் இருப்பேன் ...உனக்கு ஓகே அப்பிடின்னா நாலு மணிக்கு இதே இடத்துக்கு வந்துடு ..சீ யு ,,பிரன்ட்சை பார்க்கவேண்டியிருக்கு ‘’என்று எழுந்து போயி விட்டான்

வைஷூ பெருமூச்சு விட்டபடி அவன் சென்ற திசையையே பார்த்தாள் ..சுலபமாகச் சொல்லிவிட்டார் ..எண் மனசு கிடந்து அல்லாடுகிறதே ..ஆனால் அவர் பேச்சிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது ...ஏதோ என் வீட்டில் பேசிப்பார்க்கலாம் என்ற வாய்ப்பு இருந்த்தாலாவது காத்திருக்கலாம் ..அதற்கு வாய்ப்பில்லை .
.ஆனாலும் அதற்க்காக இன்றே இவருடன் கிளம்புவதும் சாத்தியப்படுமா ?ஏண்டா காதலித்தோம் என்றிருந்தது வைஷாலிக்கு ..அவர் தெளிவாகவே இருக்கிறார் ..குழப்பம் எனக்குத்தான் .
..!இன்னும் சில மணித்துளிகளுக்குள் எண் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும் ..என்ன செய்வது ?வகுப்புத் தோழி பிரவீனாவைக் கூப்பிட்டு விஷயத்தை சொல்லிவிட்டு பதிலுக்காக அவள் வாயையே பார்த்தாள் வைஷூ..அவளும் சின்ஸியராக செயின் டாலரைக் கடித்தபடி யோசித்தாள் ...
‘’வைஷூ ..புருஷோதைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல நீ உறுதியா இருக்கியா ?அவர் மேல முழு நம்பிக்கை இருக்கா உனக்கு ?’’—பிரவீனா
‘’இருக்கு ..அவரை நம்பலாமாங்கிற கொஸ்டீனுக்கே இடமில்ல ..இது கண்டதும் காதல் இல்ல ..நல்ல மெச்சூர்ட் லவ்தான் ...ஆனா நாங்க அதை அதிகமா பகிர்ந்துக்கலை ,,,வெளிக்காட்டிக்கலை ...பட் அவர் லவ் இஸ் ட்ரூ ..’’

‘’ம்‌ ..அப்ப புருஷோத் சொல்றபடி அவரோட கிளம்பு வைஷூ ‘’
‘’அப்பா அம்மா தாங்கு வாங்களா என்னோட பிரிவை ..?’’
‘’அப்ப புருஷோத்தோட பிரிவை தாங்கிக்க நீ தயாரா /’’
‘’அது நடக்காது பிரவீனா ..நான் வேற யாரையாவது கட்டிக்கிட்டா ,அது சந்தோசமானதா இருக்காது. பேருக்கு வாழறாப்புல தான் இருக்கும் ...’’
‘’அப்ப நீ நல்ல புள்ளையா இன்னிக்கே அவரோட கிளம்பறதுதான் பெஸ்ட் ..கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாளைக்கு அப்புறம் வந்து பேரண்ட்சை கண்வின்ஸ் பண்ணிடலாம் ..குட்டி வைஷூவைப் பார்த்துட்டாங்கனா அப்புறம் கோபமாவது கொய்யப்பழமாவது ...டைம் ..டைம் சரிபண்ணிடும் எல்லாத்தையும் ,,,யு கெட் ரெடி பேபி ‘’

‘’என்னத்த ரெடியாக ...!போட்டுருக்கற டிரெஸ்ஸோட தான் போகணும்.’’

‘’ஒன் மினிட் ‘’என்று ஓடிய பிரவீனா அரைமணி கழித்து வந்தாள் ஒரு டிராவேல் பேக் உடன்...வைஷூவிடம் திறந்து காண்பித்தாள் ...புது சுடிதார்கள் ,புது டவல் ,பேஸ்ட் ,பிரஷ் ,சீப்பு ,சோப்பு ,நாப்கின் .ஆயில் ,அழகு கிரிம்கள் ........என ஏகப்பட்ட ஐட்டங்கள் ...’

‘’எப்பிடிப்பா?அதுக்குள்ள இதெல்லாம் தேத்தீ கொண்டு வந்தே ?’’என்றாள் விழிகள் விரிய ..’’

‘’எல்லாம் ஹாஸ்டல் ப்ரெண்ட்ஸ் உபயம்தான் ...விஷயத்தை சொல்லிட்டு .ஒருத்தி பேக்கை காலி பண்ணி நீட்டுனேன் ...எல்லாம் தானா வந்து விழுந்துச்சு ..ஜிப்பை மூடி எடுத்துட்டு வந்துட்டேன் ,,டேக் இட் ...ஆல் தி பெஸ்ட் ‘’என்று முத்தமிட்டு அனுப்பி வைத்தாள் பிரவீனா ..கண்களில் நீருடன் ,மனதில் கலக்கத்துடன் ,உடலில் நடுக்கத்துடன் புருஷோத் வரச் சொன்ன இடம் நோக்கிப் புறப்பட்டாள் வைஷாலி ....

திடீரென்று ஓரூ குலுக்களில் ரயில் நிற்கவும் வைஷாலியும் தனது கல்லூரி கால நினைவுகளை உதறி விட்டு சுற்றிப் பார்த்தாள் ..ரயில் விஜயா வாடாவில் நின்றிருந்தது
..எதிர் சீட்டுப் பெண் தூங்கி எழுந்து முகம் கழுவச் சென்றாள் ..மேல் பெர்த்லிருந்து புருஷோத் இறங்கி வந்தான் ...சுஜித்ரா வந்து மடியில் தலை வைத்துப் படுத்து தூங்கியிருந்தாள் /...வைஷாலிக்கு வியப்பாக இருந்த்தது ..அதைக்கூட உணராமல் நினைவலைகளில் நீந்தியிருக்கிறேன் ...
‘’வைஷூ நீ தூங்கலை ‘’என்றான் புருஷோத் சோம்பல் முறித்தபடி ..
‘’இல்ல அப்பிடியே ஏதோ திங்க் பண்ணிட்டே உக்காந்துட்டேன் ‘’
‘வீட்டுல உள்ளவங்க எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்களோனு டென்ஷனா இருக்காடா ‘’
‘’ஆமா ..லைட்டா’’என்றாள் ‘’ ஒளிக்காமல் ..
‘’நோ ப்ராப்ளம் ..உனக்கு அப்பிடி பயமாயிருந்த்தா உங்க வீட்டுக்கு போகவேண்டாம் .ரெண்டு நாள் சென்னையில் ரவுண்டு அடிச்சிட்டு ஊருக்கு கிளம்பிடுவோம் ‘’என்றான் ஆறுதலாக ..
‘’இல்ல ..நான் எங்கம்மாவைப் பார்க்கணும் ‘’சொல்லும்போதே வைசாலிக்கு வாய் கோணி ,குரல் உடைந்து கண்களில் நீர் ..அவள் வாய் உதிர்தத வார்த்தைகளை விட கண்கள் உகுத்த கண்ணீர் அதிகம் சங்கடப்படுத்தியது புருஷோத் மனதை ....
‘’ஓகே ஓகே ,,உங்க வீட்டுக்கு போகலாம் ..இப்ப நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு ....சுஜியை என் மடியில படுக்க வச்சிட்டு போ ...’’’என்றான் ..அதுவும் சரிதான் ,,அசையாமல் அமர்ந்திருந்ததில் இடுப்பில் வலி ..பாவ் பாஜியை எடுத்து புருஷோத் எதிர் சீட்டுக்குடும்பம் எல்லோருக்கும் தந்து விட்டு ,தானும் இரண்டை வாயில் போட்டு ,தண்ணீர் குடித்து விட்டு மேலேறிப் படுத்துக் கொண்டாள் ...கணவன் பேசியது நினைவில் வந்து மோதியது ..அன்றும் இன்றும் குழம்பியது நான்தான் ...அவர் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர் கொள்கிறார் ...நான் மட்டும்தான் அங்கும் விட முடியாமல் இங்கும் விடமுடியாமல் தவிக்கிறேன் ..இல்லை பெண்கள் எல்லோரும் இப்படித்தான் இருப்பார்களோ ..!எப்படியோ ..அம்மா வீட்டுக்கு போகவேண்டுமென கிளம்பி வந்த்தாயிற்று ,,துணிந்த பின் எண்ணுவது இழுக்கு ...!இப்பொழுதுபாதி வழியில் என்ன பரிதவிப்பு வேண்டிக்கிடக்கிறது ...நடக்கின்றபடி நடக்கட்டும் என்று கண்களை மூடினாள் ...
ஊர் நெருங்க நெருங்க வயிறைப் பிசைந்தது வைஷாலிக்கு.. ..வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டாலும் பிறந்த வீட்டாருடன் தொடர்பில் இல்லையே என்ற ஒன்றை தவிர ,இனிமையாகவே சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை ..அதைக் கெடுத்துக் கொண்டாற்போல ஆகிவிடுமோ ? தெரியவில்லை .
.மனதில் தோன்றுவதை செய்கிறோம் ..விளைவுகள் சாதகமாக இருந்து விட்டால் சந்தோஷம்தான் ..பாதகமாகி விட்டால் ...?வேதனைதான் ..வேறென்ன ....!வெளியில் எட்டிப்பார்த்தாள் ..கூடூர் தாண்டி நெல்லூரை தொட்டிருந்தது ரயில்.அடுத்தது சென்னைதான் ..இங்கேயே இட்லி வடை பொங்கல் விற்பனை தொடங்கி விட்டதால் சென்னை வாசம் வந்து விட்டது ..வீட்டில் பொங்கல் போட்ட அன்று கண்டிப்பாய் வடை வேண்டும் வைஷாலிக்கு ..இல்லாத பட்சத்தில் அவள் ஆர்ப்பாட்டம் தாங்காது

..மீண்டும் பின்னோக்கி நினைவுகள் ...
அம்மா பிரேமா இல்லத்தரசி ...அந்தக்கால பட்டப்படிப்பாம் ,,,சமயத்தி பீற்றிக்கொள்வாள் ...
‘’பெத்த படிப்பு பி,யே ,,படிச்சுட்டு ,இந்த காய்கறி கடைக்காரரைத்தான் கல்யாணம் பண்ணனுமாக்கும் ..’’என்பாள் வைஷூ
‘ஏண்டி ..அவருக்கென்ன குறைச்சல் ...?உங்களுக்கெல்லாம் பார்த்து பார்த்து செய்யராரு .அவரைபோயி இளக்காரமாப்பேசறே ...!’’
‘’ஆமா......செய்யராரூ ..ஊரு உலகத்துல எந்த அப்பாவும் செய்யல...உம் புருஷந்தான் அதிசயம் ..’’என்று இணை சேர்வான் அண்ணன் தேவா ..
‘’அதான’’’ என்று இடிப்பாள் வைஷூ ...
‘’அம்மா ,இதுங்க ரெண்டும் வேஸ்டும்மா ,,நீயும் வேலையத்து பதில் சொல்லிட்டு இருக்கரே ,,’’என்று எதிர் கோல் போடுவாள் தங்கை சத்யா. ,,இவையெல்லாம் சிதம்பரம் தலையைக் காணும் வரையில் தான் ..அவரது ஸ்ப்லேண்டார் வண்டி கேட்டுக்குள் நுழையவும் ,இங்கே பேச்சின் திசையே மாறிவிடும் ,,
‘’அப்பா இன்னிக்கு ரொம்ப லேட்டானாப்புல இருக்கு ‘’என்ற ரீதியில் ஓடும் உரையாடல்.....
‘’பேய்ப் பிள்ளைங்க ..என்னைய சீண்டறதுக்குன்னே இருக்குதுங்க ...அவர் கிட்ட நாய்க்குட்டி யாட்டம் குழையடிக்கறதைப் பாரு ‘’என்று பொறுமுவாள் ..சரி !அந்த மட்டும் மரியாதையாவது மிச்சமிருக்கட்டும் ..என்று நினைத்து ஆறுதல் அடைவாள் பிரேமா ..பெரியவன் தேவா விற்க்கு படிப்பு அவ்வளவாக ஏறவில்லை ..பிளஸ் டூ பாஸாவதற்குள் எட்டு குட்டிக் கரணம் போட்டு விட்டான் .ஆகவே உணவுப்பொருள் நிறுவனத்தில் சந்தை படுத்துநராக இருக்கிறான் ..வைஷூ படிப்பில் மட்டுமின்றி சகல கலைகளிலும் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்றவள் ..கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப இருப்பாள் ...சின்னவள் சத்யா பிளஸ் டூ. விளையாட்டுத்தனம் நிறைந்தவள் ...கடைக்குட்டி என்பதால் செல்லம். .தாம்பரத்தில் சொந்த வீடு ..சிதம்பரத்திற்கு மொத்த காய்கறி வியாபாரம் ..வருமானம் வளம்தான் என்றாலும் ,விலைவாசி ஏற்ற இறக்கம ,பொருட்களை பதப்படுத்தி பாத்காப்பதில் உள்ள பிரச்சினைகள் ,போட்டிகள் ,மழை ,வெயில் ,போன்ற பருவ கால இடர்ப்பாடுகள் ,கண்முன்னே பூதாகாரமாய் தோன்றியதால் மகனை தன் தொழிலில் இறக்க விரும்ப வில்லை அவர்.என் கஷ்டங்கள் என்னோடு போகட்டும் என்ற எண்ணம் ..கஷ்டங்கள் சவால்கள் இல்லாத தொழில் இல்லை என்ற உண்மையை அப்பாக்கள் மறந்து விடுகின்றனர் –பிள்ளைகள் விஷ்யத்தில் ...

இருபத்தி நான்கு மணி நேரம் தன்னுடன் பயணம் செய்த எதிர் சீட்டுக் குடும்பத்தை பிரிவதே மனதுக்கு சங்கடமாக இருக்கிறதே ….! நான் எப்படி உயிரையும் உடலையும் தந்து ,ஆளாக்கி அழகு பார்த்த அம்மா அப்பாவை உதறி விட்டு வந்தேன் .....!எல்லாம் காதல் படுத்தும் பாடு ..நிச்சயம் ,சந்தேகத்திற்கிடமின்றி ,புருஷோத் ஒரு மதிப்புமிக்க உறவுதான் ...ஆனால் ,அதற்கு நான் ,விலை மதிப்பு இல்லாத என் பிறந்த வீட்டு உறவுகளை அல்லவா ,விலையாகத் தந்திருக்கிறேன் ...ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும் என்ற சாக்குப்போக்கெல்லாம் இந்த விஷயத்தில் சரியாகவா இருக்கும் ?புருஷோத் உடமைகளை எண்ணி இறக்கிக் கொண்டிருந்தான் ..எதிர் சீட்டுப் பெண்ணிடம் விடை பெற்று விட்டு ,மகளைக் கையில் பிடித்துக்கொண்டு ரயிலை வீட்டிறங்கி சென்னை மண்ணில் கால் வைத்தாள் ...!திரைப்பட கதாநாயகிகள் மாட்டு வண்டியை விட்டு இறங்கி ,ஊர் மண்ணை மிதிக்கும் போது ,மிரட்டும் பின்னணி இசையில் காலை மட்டும் காட்டுவார்களே ,அது போல் உணர்ந்து வைஷாலி மாறி மாறி தான் கால்களைப் பார்த்தாள் ...பின் இயல்புக்குத் திரும்பியவளாய் ,மனதுக்குள் சிரித்தபடி ,கணவன் பின்னால் நடந்தாள் ..மாலை வெயில் இதமாக இருந்தது உடம்புக்கு.. ...’’வடேய்...வடேய்.’’ஸம்ஸா ,,ஸம்ஸா ‘’என்ற சத்தங்களை ரசித்துக் கொண்டே ,ரயில் நிலயத்தைக் கடந்து வந்து கால் டாக்ஸீயில் ஏறினார்கள் மூவரும் ,,,
‘’உங்க வீட்டு அட்ரஸ் நினைவிருக்குதா வைஷூ’’என்றான் புருஷோத் கேலியாக..
‘’மறக்கறதுக்கு அது என்ன அடுத்த வீடா ?எங்க அம்மா வீடுப்பா ‘’
‘’ம் ...பார்க்கலாம் ...அது அம்மா வீடா இருக்கா ..இல்ல ..அடுத்த வீடா இருக்கான்னு ‘’
‘’ஏதோ நடக்கணும்னு எதிர் பார்த்து காத்துருக்கீங்க போல ‘’
‘’இல்லப்பா வைஷூ ...உங்க வீட்டுல உன்னைய மனசார ஏத்துகிட்டாங்கன்னா ,அதிகமா சந்தோசப்படப் போறது நான்தான் ...உன்னைய உங்க வீட்டுலே யிருந்து பிரிச்சிட்டேனோ அப்பிடிங்கற குற்ற உணர்வு எனக்கு இல்லாமப் போகும் ...பட், அது நடக்குமாங்கிற டவுட் இருக்கு எனக்கு ...நீங்க ஒரு டவுட் தனபால் ...எனக்கெல்லாம் அந்த சந்தேகமே கிடையாது ‘’என்று கைகளை ஆட்டி சொன்னாள் வைஷூ ....
‘’ம் ...வாய்தான் சொல்லுது ,,மூஞ்சி அப்பிடி இல்லியே ..கலவரமாயில்ல இருக்கு ..’’என்று புருஷோத் சொல்லவும் இருவரும் சேர்ந்து சிரித்தனர் ...’’அம்மா ,நாம இப்ப யார் வீட்டுக்கு போறோம் ‘’—சுஜி கேட்டது ..’’எங்க அம்மா வீட்டுக்கு ‘’என்றாள் வைஷூ ..’’
‘’உனக்கு அம்மான்னா எனக்கு என்ன வேணும் ?’’
‘’பாட்டிடா செல்லம் ..அம்மா பாட்டி ‘’
‘’அப்பா பாட்டி மாதிரி அம்மா பாட்டியும் ஸிவீட்டா பேசுவாங்கலாம்மா ??’’

‘’யா ,,ஷ்யுர் ,’’அவசரமாய் சொன்னான் புருஷோத்,,,

வைஷாலிக்கு டாக்ஸீக்குள் இருப்பு கொள்ளவில்லை ..பரபரத்தாள் ...என் ஊர் வந்தது ..என் எரியா ,என் தெரு ,இதோ என் வீடே வந்து விட்டது ...-
சி-5இல் அவளது வீடு ..பெயிண்ட் அடிக்கப்பட்டு புது வீடு போலிருந்தது ..தரைத்தளத்தில் கரும் பலகையில் சி-5 க்கு நேரே போட்டிருந்த சிதம்பரம் என்ற பெயரை கைகளால் தடவிக்கொடுத்தாள் ...லிப்டில் போய் வீட்டின் முன்னே இறங்கினார்கள் ..என் வேலை முடிந்தது .இனி மகளே உன் சமர்த்து என்பது போல் கையைக் கட்டிக்கொண்டு நின்று விட்டான் புருஷோத்..வைஷாலி மனதை திடப்படுத்தி கொண்டு அழைப்பு மணியை அழுத்தவும் ,தங்கை சத்யா வந்து கதவைத் திறந்தாள்...
Nice
 
Top