Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singapenne--12

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
‘’என்னடா சொல்ற நீ? இது நம்புறாப்புல இல்லியே,,,வைஷாலி வீட்டு ஆட்களும்,இங்க,வர்றதில்ல...நீங்களும் போறதில்ல...பின்ன எப்படி அவளுக்கு பிறந்த வீட்டு பாதிப்பு இருக்கும்னு,சொல்றே?’’என்று வாய் பிளந்தாள் லதா,,,
‘’ஆமா புருஷோத்,,,அம்மா சொல்றாப்புல,,,அவங்க சென்னையில இருக்காங்க,,,நாம,புனேயில,உக்காந்திருக்கோம்’’என்று புருவம் சொறிந்தார் ஜீவன்,,,
‘’நானும் அதைத்தான் டாக்டர் கிட்ட சொன்னேன்,,பட், அந்த பாயிண்ட்ல,அவங்க ஸ்ட்ராங்கா, நிக்கிறாங்க,,’’என்று இழுத்தான் புருஷோத்,,,,
‘’புருஷோத்,,,அப்பா சென்னைனு சொன்னதும்தான் எனக்கு நினைவு வருது,,,கடைசியா,வைஷூ,சென்னைக்கு,கிளாஸ் எடுக்கப் போயிட்டு வந்து தான்,தலைவலி,காய்ச்சல்னு,படுத்தா,,,,அப்புறந்தான் எழுந்திரிக்கவே இல்லையே..’’என்றாள் லதா ஒரு பிடி கிடைத்து விட்ட ஆவலில்.
‘’ஆ,,,,மாம்,,’’என்று விழிகளை ஊர் உருட்டினான்,புருஷோத்,,,இது எப்படி எனக்கு தோணாமல் போயிற்று?
‘’சென்னைனு மொட்டையா சொல்ல முடியுமா?அது கிராமம் இல்ல,,,மெட்ரோ பாலிட்டான் சிட்டி,,இவ எங்க போனாளோ?அவங்க எங்க இருக்காங்களோ?சந்திச்சிருப்பாங்கன்னு உறுதியா சொல்ல முடியாது,,,’’என்றார் ஜீவன்,,,
‘’அப்படியே வைஷூ அவங்க வீட்டு ஆளுகளைப் பார்த்திருந்தாலும்,அதை ஏன் நம்மகிட்ட மறைக்கபோறா ?’’என்றான் புருஷோத் அப்பாவியாய்..
.ஆண்களுக்கு,வேகம் மட்டும் உண்டு,,,பெண்களுக்கு,விவேகமும் உண்டல்லவா?
‘’சரிப்பா ,,எப்பிடியும் இருக்கட்டும்,,,டாக்டர் சொன்னபடி நீ ஏதாவது,விசாரிச்சுத்தான் பாரேன்’’என்று லதா வலியுறுத்தவே,புருஷோத்,அறைக்குப் போய் வைஷாலியின்,கைப்பையை எடுத்து,துழாவினான்,
,,சீப்பு,பவுடர்.கர்சீப்,நாப்கிங்கள்,பேனா,லெட்டர் பேடு,சில்லறை காசுகள்,வந்து விழுந்தன,,ஏமாற்றத்துடன் பையை மூடியவன் ஏதோ ஒரு உள்ளுணர்வு,உந்த,பையின் சைடு ஜிப்பைத்,திறக்க,அதில்,பத்து,விசிட்டிங் கார்டுகள் இருந்தன,,,அதில் ஒன்று,சென்னை அன்னை தெரசா,விடுதி ,நிர்வாகியினுடையது,,,யோசனையுடன் அதை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு,தூங்கும் மனைவியை பார்த்தவாறே,வெளி வந்தான்,,புருஷோத் ,
... அத்தியாயம் 21
‘’ரயிலை சாதாரணமாய் போக்குவரத்து வாகனங்களின் வரிசையில் சேர்த்து விட முடியாது,,அது கடவுளின் வாகனம்,,உறவுகளை சேர்ப்பதும்,,பிரிப்பதுமாய்,முக்கிய வேலைகளை,முக்கல் முனகலின்றி,சந்தோசமாய்,குதித்துக் கொண்டும்,விசிலடித்துக் கொண்டும்,செய்யக் கூடிய,விசித்திரக் கண்டு பிடிப்பு,
,,இன்றும் அப்படியே,,,,வைஷாலியின் பெற்றோர்,சிதம்பரம்,பிரேமாவை,மகாராஷ்ட்ரா மண்ணில் கால் பதிக்க,வைத்திருக்கிறது,,,கூடவே புருஷோத்தும் பயணித்து வருகிறான்,,,மாமியார் மாமனார்,மற்றும் அவர்களது உடமைகளுடன்,ரயிலில் இருந்து இறங்கி,கால் டாக்ஸியில்,ஏறி,மூவரும் அமைதியாகவே பயணித்தனர்,,
,ஆனால் அதை மௌனம் என்று,சொல்ல முடியாது,,,வாய் வழி வார்த்தைகள் வெளிவரவில்லை,,அவ்வளவே! எண்ணங்கள் மூவர் மனதிலும்,அல்லாடிக்கொண்டுதான் இருந்தன,,சென்னை மண்ணில் பிறந்து வளர்ந்தவள்,வைஷூ,,எத்தனையோ மைல் தள்ளியிருக்கும்,இந்த புனே நகரில் வாழ்ந்து வருக்கிறாளே!
சரி !!,அவள் மனதுக்கேற்ற மணாளன் எங்கிருக்கிறானோ,அங்கே போய்த்தானே ஆக வேண்டும் அவள்...அதிலும் புருஷோத் மாதிரியான ஒரு உத்தமனுக்காக,எங்கும் செல்லலாம்,,
,ஆனால் ஓரு சில வருடங்களுக்கு முன்பு, இதே மாப்பிள்ளை அவர்கள் வீடு தேடி வாசல் தேடி சென்னைக்கு வரவே செய்தார்,,,,அப்பொழுது,அவர்கள் ஆனவத்தாலும்,ஆத்திரத்தாலும்,நிரம் பியிருந்ததால்,கண்கள் திறந்த நிலையிலும்,காட்சிகள் தெளிவில்லை...கருத்துகளில் கருணையில்லை,,,நடவடிக்கைகளில்,தர்மம் இல்லை,,,
,’’எரிகிறதைப் பிடுங்கினால்,கொதி அடங்கும்’’என்பதை போல,வாழ்க்கை நடத்திய கட்டாயப் பாடத்தில்,பதப்பட்டு,பக்குவப்பட்டு,நிற்கிறார்கள்,,,இப்பொழுது,கண்கள் நி ஜக் காட்சியை மூளைக்கு.அனுப்பி,சரியான முடிவுகளை,சொல்கின்றன,,,
அத்தியாயம் 22
லதா வூம்ஜீவனும் பிரேமா தம்பதியை வரவேற்று,அமர வைத்து,டிபனும்,டீயும் தந்து உபசரித்தனர்,,,அவர்களுக்கிருந்த,சங்கோஜத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும்,தங்களது உளமார்ந்த பேச்சால்.கரைத்துக் கொண்டிருந்தனர் லதா ஜீவன் தம்பதி....
‘’ஏன் பிரேமா ?என்னாச்சு?இப்பிடி ஆசிரமத்துக்கு வர்ற அளவுக்கு,என்ன நடந்துச்சு?என்று அக்கறையுடன்,ஆரம்பித்தார்லதா
‘’ஆமாங்க...நல்லாதானிருந்தோம்,,பையன் தேவாவுவுக்கு,படிப்பு அவ்வளவாக ஏறவில்லை,,,சரியான வேலையுமில்லை,,கிடைச்ச வேலையில் நிரந்தரமாக தங்கவுமில்லை,,,வீட்டுக் கவலைகளால,இவருக்கு,மைல்ட் அட்டாக் வந்துருச்சி,,,அப்பவே,டாக்டர்ஸ்.இவரை ஸ்ட்ரைன் பண்ணக்கூடாதுன்னுட்டாங்க,,,அதனால,இவரு தான் விலகிட்டு ,தேவாவை காய்கறி,வியாபாரம்,பார்த்துக்க சொன்னார்,,,ஆனால்,அவன் அதிலே ஆர்வம் காட்டலை,,இந்த’’
‘’சரி,,வைஷூவோட தங்கை சத்யா எங்கிருக்கா?’’என்று பொறுமையின்றி இடைமறித்தாள் லதா,,
‘’நல்ல வேளை,,எத்தனையோ கெட்டதிலும்,ஒரு,நல்லதா,வைஷூவுக்காக,சேர்த்து வச்சிருந்த,நகை,நாட்டுகளை ,வச்சி,அவளுக்கு கல்யாணம் பண்ணினோம்,,இருந்த நகையை போட்டாச்சு,,ஆனாலும்,வீட்டுல முதல்,கல்யாணம்கிறதால.கல்யாண செலவுக்காக,வீட்டை அடமானம்,வைக்க வேண்டியதாயிட்டுது,,,சரியான வருமானம் இல்லாததால, அடமானம் வச்ச வீட்டை திருப்ப முடியல,,,வாடகை வீட்டுக்கு வந்தோம்,,,சத்யா கல்யாணமாகி போனப்புறம்,தேவா,வீட்டுக்கு,சரியா,வர்றது கூட இல்ல,,,ப்ரண்ட்ஸ் கூட வெளியே தங்க ஆரம்பிச்சான்,,,வீட்டுக்கு,பணமும்,சரியா தர்றது இல்ல,,,இறக்கம்னு வர ஆரம்பிச்சா,சர்ருன்னு,வந்துரும்,,,அப்பிடியே தெருவுக்கு வந்துட்டோம்,,’’என்று சொல்லவும்,பிரேமா கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் முத்தென விழுந்தது,,,
‘’இவ்ளோ நடந்திருக்கு,,,எங்க நினைவெல்லாம் வரவே இல்லியா உங்களுக்கு/?வைஷூவுக்கு,தகவல் சொல்லலாமில்ல,,,’’என்று தாங்காமல் ஆற்றாமையுடன் கேட்டார் ஜீவன்,,,
‘’வீட்டுக்கு வந்த பிள்ளையை மனசாட்சி இல்லாம,துரத்தி விட்டுட்டோம்,,,எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு அவகிட்ட உதவி கேக்க முடியும்?’’என்று கண்சிவந்தார் சிதம்பரம்,,,பிரேமா தொடர்ந்தாள்,
‘’சத்யா சென்னை புரசை வாக்கத்துலதான் குடியிருக்கா,,,பக்கத்துல இருக்கற,அவளாலேயே,எங்களுக்கு,உதவ முடியல,,,,ஒரு கட்டத்துல,,ஆதரவே இல்லாத நிலையில,அவ வீட்டுக்கும் போனோம்,,ஆனா,அவளோட,மாமனார் மாமியார் உங்களை போல,பரந்த மனசுள்ளவங்களா,இல்ல...எங்களை பாரமா நினைச்சாங்க,,சரி!நம்மளால .நம்ம பொண்ணு வாழ்க்கையும்,கேள்விக்குறி ஆயிடக்கூடாதுன்னுட்டு,அவ வீட்டை விட்டு வெளியேறி,வேற வழியில்லாம,ஆசிரமத்துக்கு,வந்து சேர்ந்தோம்,’’என்று சொல்லி விட்டு குலுங்கி அழுதாள் பிரேமா,
,,மூன்று பிள்ளைகள் முழுதாய் இருந்தும்,அனாதைகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அவமானம் அவளுக்கு
,,கேட்டுக்கொண்டிருந்த லதாவும் அழுது விட்டாள்,,,தன்னைப் போல் பிறரையும் நேசிக்கும் தங்கக் குணம் கொண்டவள் அவள்,,,அழுது முடித்து,பேத்தியை அழைத்து அருகில் அமர்த்தி,உச்சி முகர்ந்தனர் சிதம்பரம் பிரேமா,,,
 

Advertisement

Latest Posts

Top