Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singapenne---13

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
‘’எல்லா விபரமும் மாப்ள சொன்னாரு,,,இப்ப வைஷூ எப்பிடியிருக்கா?’’என்று அடுத்த கவலைக்கு தயாரானாள் பிரேமா,,,
‘’இருக்கா,,,மான் மாதிரி,துள்ளிகிட்டு திரிஞ்சவ,கசங்கின பூவா படுத்து கிடக்கா.---ஒன்றரை மாசமா, அவளோட சேர்ந்து வீடும் படுத்துருச்சி,,,,அவ எழுந்து,முன்னை போல நடமாடற நாள்தான் திருநாள் எங்களுக்கு...நான் என்னிக்குமே அவளை மருமகளா நினைச்சதில்ல,,,அவ எனக்கு பொண்ணு மாதிரிதான்,,,அவளும் அப்படித்தான் இருந்தா,,,உங்க இடத்துலதான் என்னைய வச்சுப் பார்த்தா,,,அவளுக்கு சீக்கிரம் குணமாயிரும்னு நம்பறோம்,,இதோ நீங்க வந்துட்டீங்க,,,இனி,அவளுக்கு யானை பலம் வந்துடும்,,,நிச்சயம் குணமாயிடுவா,,,’’என்று சம்பந்திகள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய்ப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில்,அறைக்குள் புருஷோத் கட்டிலில் அமர்ந்து,மனைவியை மடியில் படுக்கப்போட்டு,,அவள் தலை யை தடவி,அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்,புரியும் என்ற நம்பிக்கையில் சொன்னான்,
‘”’,டார்லிங் ,,வைஷூ,உங்க அம்மாவும் அப்பாவும் நம்ம வீட்டுக்கு,வந்து,இருக்காங்க,,,உன் கூடவே இருக்க்ப் போறாங்க,,நோ ப்ராப்ளம் நீ சீக்கிரம் குணமாயிடுவே!,,ஷியுர் ,,ஐ ஆம் ஆல் வேஸ் வித் யு,,’’என்றவன்,அவளை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்,,,மருத்துவ சிகிச்சையைவிட மகத்தானதல்லவா இந்த கட்டிபுடி வைக்தியம்,,,,,இதை மறுப்போர் இல்லை,,,,மறப்போர் உண்டு,,,
மறுநாள் புருஷோத்-வைஷாலி,சிதம்பரம்,பிரேமா நால்வரும்,சேர்ந்தே மருத்துவ மனைக்கு சென்றனர்,,,,,முதலில்,,புருஷோத் மட்டும் உள்ளே சென்று.மருத்துவர் ஆஸ்தாவிடம்,தனது காதல் கல்யாணத்தில் துவங்கி,வைஷூவின் ஆசிரம விசிட்,,மற்றும்,சிதம்பரம் பிரேமாவின் புனே வருகை வரை,ஒளிவு மறைவின்றி சொல்லி முடித்தான்,,,பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவள்,தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு வாய் மலர்ந்தாள்,
‘’’லுக் மிஸ்டர் புருஷோத்,,,பெண்களுடய,பிறந்த வீட்டுப் பாசம், லேசானதில்ல,,மனசுக்குள்ள,,,மறைஞ்சிருக்கும்,,,,ஒளிஞ்சிருக்கும்,,,
ஆனா,ஒருநாளும், காணாமப் போகாது,,,நீரால் அழியாது,,,,நெருப்பால் உருகாதும்பாங்களே ,,,அப்பிடி,,,ஆனா நடக்கற சம்பவங்கள்,அவங்க,மன உணர்வுகளுக்கு,நேர் மாறாய் இருக்கும் பொது,நினைப்பிற் க்கும்,நடப்புக்கும், பொருந்திப் போகாத போதூ,வெளிப்படுத்த முடியாத உணர்வுகள்,மன அழுத்தத்தை ஏற்படுத்துது,,,பட்,இட்ஸ் கியூரபுல் ,,இப்போ வைஷாலி மேட்டர்ல,என்ன ஏதுன்னு நூல் பிடிச்சிட்டீங்க,,,ஸோ ,,,நோ ப்ராப்ளம்,,,என்னோட மெடிசின்ஸ்,கவுன்சிலிங்க்,பிளஸ் அவங்க பேரண்ட்ஸ் சப்போர்ட்,,,,,இதெல்லாமே நிச்சயம் சீக்கிரம் அவளை,நார்மலுக்கு,கொண்டு வந்துடும்,,,’’என்று உறுதியளித்தார் ஆஸ்தா... ,,,பேசவோ,கேட்கவோ,வாதிடவோ,ஒன்றுமில்லை,,,புருஷோத்,மருத்துவருக்கு,நன்றி,சொல்லி விட்டு வெளி வந்து,வைஷூவை அறைக்குள்,அனுப்பி வைத்தான்,,அவளுக்கு, முதல் அமர்வு ஆற்றுப் படுத்துதல்,(பர்ஸ்ட் சிட்டிங் கவுன்சிலிங்க் )சுமார் இரண்டு மணி நேரம் நடந்தது,,,முடிந்ததும்,மருந்துகளுடனும்,மகிழ்ச்சியுடனும்,வீடு வந்து சேர்ந்தார்கள்,,நால்வரும்,,,
அத்தியாயம் 23
மன அழுத்ததிற்கான மருந்துகள்,முதலில்,தனது வேலையை உடலில் இருந்தே துவங்குகின்றன,,,இரவு-பகலை பொருட் படுத்தாது,பெரும்பாலான நேரங்களில்,ஆழ்ந்த.நித்திரையில் தான் இருக்கிறாள்,வைஷாலி ,,தூக்கம்தான்,மன துக்கங்களுக்கு முதல் மற்றும் முக்கிய மருந்து என்று நம்புகிறார்கள் மருத்துவர்கள்,,,சிகிச்சை துவங்கி,இரண்டு மாதங்கள்,கழிந்த நிலையில்,மூன்று அமர்வு ஆற்றுப்படுத்தல்கள் முடிவடைந்தன
,மருத்துவருக்கு நன்கு ஒத்துழைத்தாள் வைஷாலி,,,உள்ளேபோன மருந்துகளும்,,மருத்துவரின் வார்த்தைகளும்,வைஷூவின் பார்வையை இயல்புக்கு கொண்டு வந்தன,,,தன்னை சுற்றிலும்,நடப்பனவ்ற்றை கவனிக்க ஆரம்பித்தாள்..
..முக்கியமாக,அவளுடைய மாயத்திரை விலகி,அம்மாவை அடையாளம் கண்டுகொண்டாள்..ஆசை தீர அம்மாவை கட்டிபிடித்து மூத்தமிட்டாள்,அப்பாவின் கால்களில் விழுந்தாள்....அவர் கண்ணீரால் ஆசீர்வதித்தார்,,,
‘’வைஷூ கண்ணா, எப்பிடிடா இருக்கை?’’---பிரேமா,
‘’நல்லாயிருக்கேன்மா,,நீ எப்பிடிம்மா,எப்பம்மா,இங்க வந்தே?’’
நடந்தவை எல்லாவற்றையும் கதை போல சொல்லி முடித்தால் பிரேமா,,,வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த, வைஷாலிக்கு,வியப்பு,மகிழ்ச்சி,நிம்மதி,மன அமைதி,கணவன் மீது,கூடுதல் காதல் எல்லாம் ஒரு சேர உண்டானது,,,’’எனக்காக,என்ன சுற்றி,இத்தனை அன்புள்ளங்கள்,இருக்கிறதே?அது தெரியாமல் நான் நித்திரையில் கிடந்திருக்கிறேனே,,,,என்று மனம் புழுங்கினாள்,,
‘’அம்மா,நான் இப்ப சுஜி புட்ஷ்ணு ஒரு பிஸினஸ் பண்றேன்,,’’ தன்னுடைய பள்ளி மதிப்பெண்களை தாயிடம் பகிர்ந்து கொள்ளும்,குழந்தையின் குதூகலத்துடன் சொன்னாள் வைஷாலி,,
‘’அத்தை சொன்னாங்கம்மா,,,நானும் தினம் பார்த்துட்டுதான் இருக்கேன்,,,உங்க எல்லார் மனஸுக்கும் ஒரு குறையும் வராது,,,நல்லா நடக்கும்’’என்று வாஞ்சையோடு வாழ்த்தினாள் பிரேமா,,,ஆறவில்லை,வைஷாலிக்கு,,,இன்னும்,ஆறவில்லை...இன்னும்,,எவ்வளவோ,,செய்திகளை அம்மாவிடம்,சொல்லாதது போலவும், மறைத்தது போலவும்,தோன்றியது,,,,
‘’அம்மா,,,சின்னப்புள்ளையில,நீ எனக்கு மோதக கொழுக்கட்டை தரு வேயில்ல,,,கொழுக்கட்டை உடையாம,உள்ளே எப்பிடிம்மா ஸ்வீட் வச்சேன்னு ,நான் சண்டை போடுவேன்ல உன்கிட்ட,,’’
‘’ஆமாம்மா ,கண்ணு,,’’என்று அழுதாள் பிரேமா,,,,சிரித்தாள் வைஷாலி,,
‘’அம்மா ,நான் டென்த் படிக்கும்போது,ராத்திரியெல்லாம் நீயும் என்கூட கண் முழிக்கணும்னு கத்துவேன்..சரினுட்டு நீயும் உக்காந்துகிட்டே தூங்குவே ......பாதி ராத்திரியில நான் போயி மெத்தையில படுத்து தூங்கிடுவேன்.,..நீ பாவம்....விடியிற வரை உக்காந்துகிட்டே தூங்குவே!!!நினைவிருக்குதாம்மா “”
‘’ஆமாண்டா ...என் கண்ணம்மா ....”” என்று வாய் விட்டு அழுதாள் பிரேமா.கூடவே சிதம்பரமும்.....சுற்றிலும் பார்த்தாள் வைஷூ..லதா,ஜீவன்,புருஷோத்,சுஜி வரை கண் கலங்கியிருந்தார்கள் ...
‘’ஒரு அம்மாவா அதெல்லாம் என் கடமை தானேம்மா ...அதைப் போயி பெரிசா சொல்றே “’----பிரேமா.
‘’ஆனா ,ஒரு பொண்ணா ,பெத்த மகளா நான் என் கடமையை செய்யலியேம்மா ,,,ஒண்ணுமே செய்யலியே !!! ஒரு நாளும் நான் உங்களை பெருமைப்படுத்தலையே ...ஆசிரமத்துல,உங்க ரெண்டு பேரை பார்த்தும் பார்க்காதது போல,மனசைக் கல்லாக்கிட்டு வந்துட்டேனே””என்று திளையில் அடித்துக் கொண்டு ஆதங்கம் தீரும் வரை அழுதாள் வைஷூ ..வேண்டுமட்டும் அழட்டும்.அதுவே அவளுக்கு சிறந்த மன விடுதலை என்று அனைவரும் விட்டு விட்டனர் அவளை..
வைஷூ தனது மன அழுத்தம் முழுவதும் கரைந்து வெளியேறும் வரை அழுது முடித்தாள்...உடலை அரித்துக்கொண்டிருக்கும் புற்று நோய்க் கிருமியை ,கத்தியால் கீறி வெளித்தள்ளுவது போல,வைஷாலி தனது,உள்ளத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்த,குற்ற உணர்வுக் கிருமியை,கண்ணீர் என்ற கடப்பாறையால் கழித்துக் கட்டினாள் ....சொத்துக்களைப் பாதுகாக்கலாம்-பரம்பரைக்கு பாதுகாப்பென்று ......ஆனால்,சோகங்களை.சேர்த்தும்,கோர்த்தும்,வைப்பது உடலுக்கும்,மனதுக்கும்,சேதமாக,பாதகமாக அல்லவா முடியும்.....
அத்தியாயம்—24
ஆறு மாத சிகிச்சைக்குப்பின்னர் ,ஆற்றுப்படுத்தல்களோ ,மருந்து மாத்திரைகளோ, வைஷாலிக்கு தேவையில்லை..அவள் எழுபத்தைந்து விழுக்காடு குணம் பெற்று விட்டாள்..இனி, வீட்டாரின்,அன்பில்,அரவணைப்பில்,முழுமையாக நலம் பெற்று விடுவாள்.என்று மருத்துவர் ஆஷ்தா சொல்லிவிட்டாள்..இப்படி ஒரு நோயில்,விழ வேண்டிய விதியும்,அதிலிருந்து,மீண்டு எழக்கூடிய விதியமைப்பும்,வைஷாலிக்கு,இருந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்...புருஷோத் அன்று இரவு மனைவியின் முன்பாக உட்கார்ந்தான் பேசுவதற்க்கு,,,,வாயை முந்திக்கொண்டு,காண்கள் பேசின...
“”நீ கணவன் அல்ல..காலம் முழுவதற்குமாய் என் காதலன்,,,”’—வைஷூ...
“”உன்னை எமனுக்கோ,எவருக்கோ,நான் விட்டு தரமாட்டேன்”—புருஷோத்..
வாய் விட்டுப் பகிரவில்லைஎனினும்,இருவ்ரும் எண்ணங்களால் எழுதிக்கொண்டார்கள்...சில மதிப்பீடுகள் உள்ளிருப்பதே உத்தமம்,,,ஆனந்தம்,,,வாய் திறந்தான் புருஷோத்..இல்லறத்தில்,பேசியாக வேண்டிய விஷயங்களும் இருக்கிறதே....
“”வைஷூ...ஆர் யு ஆல்ரைட் ? ..
பதிலாகப் புன்னகைத்தாள் வைஷூ.இந்தப் புன்னகையை சிரிப்பைப் பார்த்துத்தான் எத்தனை நாளாயிற்று !!ஆறு மாதம் வன வாசம் போயி வந்த வைஷாலியின் வசீகரப்புன்னகையை கண் மூடாமல் ரசித்தான் ரசித்தான் புருஷோத்..
“”வைஷூ..நீ சென்னை ஆசிரமத்துல,உங்க அம்மா அப்பாவை பார்த்ததை,ஏன் என்கிட்ட சொல்லலை..””என்று பிரச்சினயின் ஆனி வேரை அசைத்தான் புருஷோத்..பார்வையைத் தாழ்த்தி ,யோசனையுடன்.கை மோதிரத்தை கழற்றி மாட்டினாள் வைஷூ..
“”உங்க அப்பா அம்மாவை,நம்ம வீட்டுக்கு,அழச்சிட்டு வர்றதுக்கு ,நான் சம்மதிக்க மாட்டேன்னு நினைச்சியா?.....ஏம்மா ! உனக்கு என் மேல “”நம்பிக்கை இல்லியா”” என்றான் அவள் கைகளை ஆதரவாய்த் தொட்டு...
“”நம்பிக்கை இருந்துச்சு ,,பட்,அவங்களை இங்கே அழைச்சிட்டு வர்றது ,நியாயமா இருக்காது,நீங்க அப்செட் ஆயிடுவீங்க,அத்தை மாமா வருத்தப்படுவாங்கன்னு நானே முடிவு பண்ணிட்டேன் “” என்றாள் வைஷூ சிறுமி போல உதடு குவித்து...
“”ஏன் ?எதை வச்சி அப்படி சொல்றே?””
“”நாம சென்னை போனப்போ ,நம்மளை,வீட்டுல சேர்த்துக்காம சண்டை போட்டாங்கள்ல ...நடுராத்திரி வெளியே அனுப்பினாங்களே ,ஒரு மகளா நான் அதயெல்லாம் தாங்கிக்கலாம் ...பொறுத்துக்கலாம் ..ஆனா ,ஒரு மருமகனா,உங்களுக்கு இன்சல்ட் ஆகி,....””
தான் கைகளால் அவள் வாய் பொத்தி இடைமறித்தான் புருஷோத்...
“”ஸ்டாப்..அதையெல்லாம் இன்னுமா நீ மைண்ட்ல வச்சிட்டுருக்கறே ....நான் எப்பவோ மறந்துட்டேன் ..தேவையில்லாததை எல்லாம் சுமந்துகிட்டே திரியக்கூடாதும்மா .டாய்லெட்ல ப்ளஷ் பண்றாப்புல,அப்பப்ப,கிளீயர் பண்ணிடனும்...வைஷூ,இங்க கேளு ...உனக்கு ஒண்ணு சொல்றேன்.பேத்து வளர்த்த பொண்ணு,ஒரு நார்த் இந்தியனைக்கட்டிக்கிட்டு, கையில,புள்ளையோட வந்தா,எந்த பேரண்ட்ஸ் தான் பொறுத்துக்குவாங்க?கோபப்படத்தான் செய்வாங்க...இட்ஸ் நேச்சுரல் ...அவங்களோட கோபத்தை அவங்களுக்கு தெரிஞ்ச வீதத்துல,வெளிப்படுத்துனாங்க....அதுக்காக,நாம இப்ப சமயம்,பார்த்து,பழி வாங்க முடியுமா?பிள்ளைங்களா நமக்கும் பொறுப்பு இருக்குதில்ல....””
“”அந்த இடத்துலதான் ,பகைக்கும் பாசத்துக்கும் நடுவுல கொஞ்சம் குழம்பிட்டேன் புருஷோத்...உங்களுக்கும் சேர்த்து நானே முடிவு பண்ணிட்டேன்...”” என்று வருந்தினாள் உண்மையாக...
“”வைஷூ...எங்க அப்பாம்மா தனி வீட்டுல இருக்க முடியாம தடுமாறு ,,னப்போ, தாங்கிப் பிடிச்சு நான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்...நீயும் சந்தோஷமா அவங்களை அக்செப்ட் பண்ணிக்கிட்டே....உன்னோட ரோலை நீ கரெக்டாப் பண்ணினே ...அதே கடமை எனக்கும் இருக்குதில்ல... உன்னோட பேரண்ட்ஸ் நிர்கதியா நிக்கும்போது,நீயும் அவங்களை நம்ம வீட்டுக்கு அழச்சிட்டு வர்றதும்,நான் அவங்களை முழு மனசோட ஏத்துக்கறதும் தானே நியாயம்..””என்று தனது நிலையை உருக்கமாகச் சொல்லி முடித்தான் புருஷோத்...
அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் வைஷாலிக்குள் பூப்பந்தாய் விழுந்தது...பதிலேதும் சொல்லாமல்,வேகமாய் அருகில் வந்து கட்டிக்கொண்டாள் கணவனை...அன்பு என்பது வெளிப்படுத்து வதற்க்குத்தானே ....உள்ளேயே ஊற வைத்து ஊறுகாய் போடுவதால்,யாருக்கு என்ன லாபம்.
 
Nice update. Purusodh mathiri husband iruntha wives will be happy and comfort in their life.
 
Top