Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singapenne--6

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
சென்னையில் இருந்து ஏதோதோ ரயில் மாறி புனே வந்து சேர்ந்தார்கள்...வைஷாலியின் மூளைக்குள் எதுவும் பதியவில்லை..கணவன் ஏறிய இடங்களில் ஏறி அவன் இறங்கிய இடங்களில் இறங்கி வீடு வந்தாள்...உடமைகள் அனைத்தையும் புருஷோத் ஒருவனே கைகளிலும் தோள்களிலும்,தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைய, வைஷாலி ரோபோ போல அவன் பின்னால் நடந்தாள் ..அவள் உடம்பே அவளுக்கு சுமையாக இருக்கையில் அவள் எங்கிருந்து பெட்டி படுக்கையைத்,தூக்க?பதட்டமும் பரவசமுமாய் புனேயை விட்டுக் கிளம்பிப்போன ஜோர் எங்கே?காற்று போன பலூனாய் ,பம்மி,பதுங்கி,வந்து விழுந்திருப்பது எங்கே?நாம் எதிபார்க்கும் இடத்தில்,எதிபார்ப்ப்தை வைத்து விட்டால்,அப்புறம்,இறைவனின் மவுசு என்னாவது?
ஒளித்து வைப்பதும்,மறைத்து ,விளையாடுவதும், கலங்கி நிற்கையில் கை கொடுப்பதும்,மயங்கி நிற்கையில் மாயம் செய்வதும் தானே அவனது வேடிக்கையும்,வாடிக்கையும்..
....வைஷாலி உடை மாற்றி விட்டு ,சமயலறைக்குப் போக மனமில்லாமல் சுருண்டு படுக்துக் கொண்டாள்...ஆனால்,வீடு படுத்து விடவில்லை...எப்பொழுதும் போல் இயங்கியது..அதுதான் வட இந்தியக் கணவர்களின் ஸ்பெஷாலிட்டி,
,,புருஷோத் டீ போட்டுத்தந்தான்..சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்து விட்டு ,உர்ளைக்கிழங்குகளை,வேகப் போட்டான் --சப்ஜிக்கு.....வீட்டில் நடப்பது எல்லாம் ,,தூங்குவது போன்ற பாவனயில்,படுத்திருக்கும், வைஷாலியின்மூளை சுவர்களில் பதியத்தான் செய்கிறது.. எனினும் படுத்தே கிடந்தாள்....தானும் குளித்து,மகளையும் கிளப்பிய புருஷோத்,மனைவி யின் அருகில் வந்தான்...
‘’வைஷூ....ரொட்டி பண்ணியிருக்கேன் ,,குளிச்சி சாப்பிடு...ஓகே..’’
‘’சரி,,நீங்க கிளம்புங்க’’
‘உடம்புக்கு முடியலையா?
‘’இல்ல புருஷோத்...நாலு நாளா,தொடர்ந்து டிராவல் பண்ணினதால,டயர்டா இருக்கு...ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்’’
‘’தட்ஸ் குட் ,,நான் பாப்பாவை ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு ஆபீஸ் கிளம்பறேன்....பை ‘’என்றபடி கிளம்பிப் போனான்..சுஜி அம்மாவை முத்தமீட்டுப் போனாள்.
..தனித்து விடப்பட்ட வைஷாலிக்கு ,பிறந்த வீட்டில் நடந்த சம்பவம் ,முழுமையாக மனதை ஆக்கிரமித்துக் கொண்டது...வேலை கேட்ட வேலையாய்,ரயிலேறிப்போய்,அடியும் அவமானமும் நான் வாங்கிக் கட்டிக்கொண்டதோடு அல்லாமல்,இவரையும் சேர்த்தல்லவா,அசிங்கப்படுத்தியிருக்கிறேன்...வாழ்க்கைத் துணையை பெருமைப்படுத்த வேண்டும்,,,முடியாத பட்சத்தில் ,சிறுமைப் படுத்தாமலாவது இருக்க வேண்டும்,
,,நான் செய்து வைத்திருக்கும் வேலைக்குப் பெயரென்ன?அடிப்படையில் முடிவுகள் எடுக்கத்தெரியாத முட்டாளா நான்? கழிவிரக்கத்திலேயே கண் மூடித் தூங்கினாள் வைஷாலி...
அத்தியாயம் 7
கண்ணுக்குத் தெரியாத காலம்தான் ,எத்தனை மனக்காயங்களுக்கு மருந்தாகிறது.....சென்னைக்கு ,போய் வந்து ஒரு வாரமாகி,விட்ட நிலையில்,ஓரளவு இயல்புக்குத் திரும்பியிருந்தாள் வைஷாலி..
.வாழ்க்கயில் ,நடந்து முடிந்த சம்பவங்களுக்குள்,நமக்குப் பிடிக்காதவற்றையெல்லாம் ,அழித்து விடக்கூடிய,ஒரு அழிரப்பர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,என்று நினைத்துக் கொண்டாள் வைஷூ.
..ஆனால் கடவுள் அப்படி ஒரு அழிரப்பரைத் தந்துதான் இருக்கிறான் மறதி என்ற பெயரில்.,,அது நம்மிடமே இருக்கிறது...நாம்தான்,மறதியை , மறந்துவிட்டு,திரும்ப திரும்பக் குப்பைகளைத் தூக்கி ,மனதில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்,,
,,யோசனையிலேயே காய்ந்த துணிகளை மடித்து வைத்து விட்டு,கணவனுக்கும்,மகளுக்கும் ,பாலக் பகோடா செய்து வைத்தாள் ,,தலைக்கு கிளிப் மாட்டி,முகம் கழுவி பவுடர் அடிக்கையில்,வந்து விட்டனர் இருவரும்...
‘’வைஷூ...ஸ்நாக்ஸ் ஏதாவது செஞ்சிருக்கியா?செம பசி’’----புருஷோத்.பதில் பேசாமல் இருவருக்கும்,பகோடாவையும்,ஏலக்காய் டீ யையும் கொண்டு வந்து வைத்தாள்....
‘’அம்மா,,,டீயில என்ன போட்டிருக்க?’’
‘’ஏலக்காய்...கார்டமாம்..போட்டுருக்கேன்’’
‘’அது எதுக்கும்மா போடணும்?’’
‘’நல்ல ஸிமேல் இருக்கும்,,,,அதோட நெஞ்சு சளியைக் கரைச்சிடுண்டா ...’’
‘’இது போல ,உயிரில்லாத பொருட்கள்ல என்ன இருக்குதுன்னு தெரிஞ்சு வச்சிக்கிட்டா உன்னால,உங்க வீட்டு ஆளுங்க மனசுல,என்ன இருக்குனு,தெரிஞ்சுக்க முடியலையே,,,,வொய்’’----புருஷோத்’’
‘’ஏன் இப்ப திரும்ப ஆரம்பிக்கிறீங்க?’’என்று முறைத்தாள் வைஷூ..
‘’அப்பிடி இல்லம்மா..அன்னிக்கே கேக்க நினைச்சதுதான்..நீ ரொம்ப அப்செட் ஆகியிருக்கியே..நாமளும் போட்டுக் கிளற வேண்டாம்னு கம்முனு இருந்துட்டேன்,,,பட்,என்னிகிருந்தாலும்,பேசியாக வேண்டிய விஷயம்ல இது,,’’..........அவனது விளக்கம் ஒப்புக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது...
‘’இல்ல ,,புருஷோத்,,,நான் எங்கப்பாவை நம்பித்தான் வீட்டுக்குப் போனேன்...பட்,அவங்களுக்கு,சத்யாவோட மாரேஜ் லைஃபே முக்கியமாய் தெரியுது....என்னய வீட்டுல சேர்த்துக்கிட்டா,வரன் அமையறதுல,பிரச்சினை வந்துடுமோன்னு பயப்படறாங்க....’’
‘’அது மட்டும் இல்ல வைஷூ..உங்க அண்ணன் அப்பர்ஹே ண்ட்எடுத்துட்டான்,,,அம்மா அப்பாவை டம்மியாக்கி விட்டான்..அவங்களாள மனசு திறந்து பேச முடியலை’’
‘’ஆமா..நான் வீட்டை விட்டு வந்த அன்னிக்கு,எல்லாரும் ரொம்ப அழுதிருக்காங்க...ஒரு வாரம் வீட்டுல சமைக்கவே இல்லையாம்,,,,ஒரு ஸ்டேஜ்ல மனசு வெறுத்து,குடும்பத்தோட மருந்து குடிச்சு சாக்கணும்னு முடிவுக்கு வந்துட்டாங்களாம்/......நல்ல வேளை,அன்னிக்கு பார்த்து,எங்க மாமா விஷயத்தைக் கேள்விப்பட்டு,என்னணு பார்த்துட்டுப் போலாம்னு வந்திருக்காரு,,,,வந்தவரு,ரெண்டு நாளு ,ஸ்டே பண்ணினதால.எல்லாரும் மனசு மாறினாங்களாம்...அம்மா கதையாச் சொல்லி அழுதாங்க’’
‘’ஸோ சேட் ,,,,என்ன செய்யறது?நம்ம தாம்பத்தியத்துக்குப் பின்னால,பல பேரோட கண்நீறு இருக்குதுன்னு நினைக்கறப்ப,கஷ்ட்டமாத்தான் இருக்கு...அது சரி,,,சண்டை நடந்தப்போ உங்க அம்மாவும்,தங்கச்சியும்,ஏன் ரூமுக்குள்ள இருந்தாங்க?’’
‘’தேவா எண்ணயஅடிக்கும்போது ,அம்மா அவனைத் திட்டினாங்க,,,--பொம்பளைபுள்ள மேலா கை வைக்காதடான்னு.....அதுக்காக அவன்தான்,அம்மாவையும் சத்யாவையும் ரூமுக்குள்ளார தள்ளிக் கதவைச் சாத்திட்டான்...’’என்று சொன்னால் வைஷாலி..
‘’உங்க வீட்டுல நமக்கு,எதிரப்பு இருக்கும்கிறது தெரிஞ்சதுதான்....உன்னயப் பெத்து வளர்த்தவங்க,உன் கல்யாணத்தைப்பத்தீ எத்தனையோ கனவு கற்பனைகள் வச்சிருந்திருப்பாங்க...அதெல்லாம் சிதைஞ்சு போன வலி அவங்க வார்த்தைகள்ள எதிரொலிக்கும்னு நான் எதிபார்த்தேன்....ஆனா ,நாம வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாதபடி,உங்க அண்ணன்,இப்பிடி லோக்கலா,அடிதடின்னு இறங்குவான்னு நினைக்கலை’’என்றபடி பக்கோடா தின்ற கைகளைத் தட்டி விட்டான்...
‘’இல்ல புருஷோத்..தேவா இயல்பிலேயே,கொஞ்சம் முரடந்தான்,,,,ஆனா,பாசக்காரன்..அவன் கோபத்தை.தங்கச்சி பாசம் ஜெயிச்சிடும்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்...’’
‘’சரி வீடு!எது எப்பிடியோ.,,நம்ம காதல் ,கல்யாணம் ரெண்டுமே பொய்யில்லை.....அவன் பாட்டுக்கு கத்திட்டிருக்கட்டும்,,,,அவன் தன்னோட கோபத்தை வேணா காமிக்கலாமே தவிர,கொலை வெறியை காட்டறதுக்கு ரைட்ஸ் இல்ல..’’என்றான் முடிவாக...
‘’அதனால,போற்றுவோர் போற்ற,தூற்றுவோர் தூற்ற,நம்ம,லைஃஃப் தொடரட்டும்னு,சொல்றீங்களா?’’
‘’யெஸ்,,,டார்லிங்,,,உன்னயப்போல,இவ்வளவு அழகான தமிழ் வார்த்தைகள் சிக்கலை எனக்கு,,,பட்,தட் இஸ் ட்ரூ,,லெட் ஆஸ் லிவ் அவர் லைஃப் ‘’
‘’அது சரிதான் ,,அப்படித்தான் நடக்கப்போகுது...இருந்தாலும்,இப்ப சென்னை ட்ரிப் போனதால,பழய புண்களைகீறிப் படம் பார்த்தாப்புல இருக்குப்பா’’
‘’அப்பிடி இல்ல வைஷூ...கொஞ்ச நாளாகவே ,உனக்கு உங்க வீட்டைப் பத்தின திங்கிங் இருந்தது,,,,,அதோட,அவங்க ஒரு வேளை நம்மளை ஏத்துகிட்டாங்கன்னா,ஊரு உலகத்தைப் போல,நமக்கும்,பிறந்த வீட்டு சப்போர்ட், கிடைக்குமேன்கிற,ஒரு ஆசை உனக்கு இருந்திச்சுல்ல...மறைக்காம சொல்லு...’’
‘’மறைக்கலா புருஷோத்,,,நான் மறுக்கவுமில்ல ,,,அந்த எண்ணந்தான் என்ன ய அம்மா வீட்டுக்கு டிரைவ் பண்ணுச்சு..ஆனா நமக்கு நம்ம வீட்டுல ஒரு இம்பார்டண்ட் பிளேஸ் இருக்கும்னு,நம்ம மனசுல ஒரு,தாட்,இருக்குமிலையா ,,,அது அடியோட சரிஞ்சு போனது அதிர்ச்சியாயிருக்கு,,,’’ என்று கண்களில் அரும்பிய நீரைக் கஷ்டப்பட்டு விழுங்கினாள்....
‘’லீவ் இட் வைஷூ...இட் ஹப்பென்ஸ் ...’’என்று எழுந்து கொண்டான்...வைஷாலிக்கு ஆற்றாமை அடங்கவில்லை..வாழ வைக்க வேண்டிய அண்ணன்காரன்,இப்பிடி அழ வைக்கிறானே...அப்படி என்ன பெரிய தவறை அல்லது குறையை கண்டுவிட்டான் என் மணவாழ்வில் ....சொல்லப்போனால்,என்னால் அவர்களுக்கு எல்லா வகையிலும் லாபம்தான்,
,,மாப்பிள்ளை தேடி அலைய வில்லை...நகை போடும் டென்சனில்லை...சீர் செனத்தி செய்ய வேண்டாம்,,,கல்யாண வேலைகள் தரும் அலுப்பில்லை ..சலிப்பில்லை...இருந்தும்‌ அப்பாவுக்கும்,தேவாவுக்கும் மகிழ்ச்சியுமில்லை..சந்தோஷப்பட மனமில்லாவிட்டாலும்,என்னை சங்கடப் படுத்தாமலாவது,இருந்திருக்கலாம்..அதுவுமில்லை...இதுவுமில்லை..எதுவுமில்லை ,,என்றாகி விட்டது,,,,
 
Top