Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

SINGAPENNE--9

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
புதிய வியாபாரத்தின் துவக்க வேலைகள் மளமளவென்று நடந்தன,,,முதலில் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிப் போட்டாள் வைஷாலி,,,வாரத்தில் சண்டே தவிர்த்து,மற்ற ஆறு நாட்களுக்காய் உணவு மெனு தயாரித்தாள்
,,,சுஜி புட்ஸ் என்று பெயர் சூட்டி,தனது உணவுத் தயாரிப்பின்,சிறப்புத் தன்மைகள் ,உணவுகளின்,கலோரி அளவுகள்,மற்றும் அதில் அடங்கியுள்ள,சத்துக்களின்,விபரங்கள்,உணவு கிடைக்கும் நேரம்,விலைப்பட்டியல்,,ஆர்டர் தரவேண்டியதொலை பேசி எண் ஆகியவற்றை விளக்கி, பிட் நோட்டீஸ் நூறு அச்சடித்தாள்
.பேக்கிங் செய்வதற்க்காக ,சூழலுக்கு ஏற்ற,தேர்மகோல் பிளேட்ஸ் ,பேப்பர் கப்புகள்,பாக்கு மரத்தட்டுகள்.கஞ்சி வகைகளுக்காய் மண்பாத் திரங்கள்,அட்டைப்பெட்டிகள்,என்று ஏற்பாடு செய்தாள்,
,ஆவணி மாதத் திங்களன்று,வியாபாரம் துவங்கப்பட்டது,,,,அன்று முதல் நாளைய மெனுவாக,மல்லிகைப் பூ போன்ற மென்மையான இட்லி,தேங்காய் சட்னி,வெங்காய சட்னி இனிப்பு கொழுக்கட்டை,ஓட்ஸ் கஞ்சி போட்டிருந்தாள்..காலை ஏழூ மணிக்கே பெரிய பெரிய ஹாட்பாக்குகழில் எல்லாம் ரெடி..
..எல்லாவற்றிலும்,சிறிதளவு,எடுத்து ,ஐம்பது,சாம்பிள் பேக் போட்டாள்...ஒவ்வொன்றுடன் விளம்பர நோட்டீசும் வைத்து,ஒரு வீட்டுக்கு, ஒரு பொட்டலம்,என்ற வகையில்,அன்று ஒரு நாள் மட்டும்,ருசி பார்க்க, உணவின் மனமும், சுவையும்,எல்லோரையும்,எட்ட,இலவசமாய் தந்து அனுப்பினாள் -டெலிவரி பையனிடம், ‘..
தாழம்பூவிற்க்கு விளம்பரம் எதற்கு?அதன் மணமே ஊரைக் கூட்டி விடுமே....ஆனால் இன்றைய விளம்பர உலகில்,ஜட்டி முதல் தங்கக் கட்டி வரை,எல்லாமே விளம்பரத்தில்தானே ஓடுகிறது,,,,எனவே,சுஜி புட்ஸின் சுவை அறிய ஒரு நாள் இலவச விநியோகம் செய்தார்கள்,
,,அன்றே காலை பத்து மணி அளவில் ,டெலிவரி பையனுடன்,வைஷாலியும்,அனைத்து வீடுகளுக்கும் சென்று,உணவின் ப்ளஸ் மைனஸ் பற்றி கேட்டறிந்தாள்,,,ஒருவரும் பேசவேயில்லை...பணத்தைக் கொடுத்து மறு நாளைக்கு,உணவுக்கு ஆர்டர் கொடுத்தார்கள்...அதுதான் பதிலாக இருந்தது,
,,ஆர்டர்கள் குவிந்து விட்டது,,அந்த தேவைகளைக் கருத்தில் கொண்டு மறு நாளைய உணவு தயாரிப்பைத் திட்டமிட்டாள்.. ஓவர் நைட்டில் புகழும்,பணமும்,பெற இன்றைய காலகட்டத்தில் ஒரே வழி,மக்களின் நாக்கை சிறை பிடிப்பதுதான்,,,வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற மன நிலை இன்றைய தலை முறை மக்களிடம் இல்லை
..,,,எனக்கு இது,இப்படி,இவ்வளவு,இந்த நேரத்தில் வேண்டுமென,தேடி உண்டு,பசியாறி , ருசியறியும் காலமிது,,,,காலத்தின் நாடித்துடிப்பை சரியாக கணித்து வீட்டால்,அதன் பின் ஒரே ஏறு முகம்தான்,,,நாமாக நினைத்தால் கூட நமது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாத அளவு,நம்மை எங்கோ ஒரு உயரத்தில் கொண்டு போய் விடும்...அதுதான் இப்பொழுது வைஷாலிக்கு நடந்திருக்கிறது....
அத்தியாயம் 14
சுஜிக் குட்டி கூட பொறுப்பாய் வேலை செய்கிறது,,,தாத்தா போட்டு வைத்திருக்கும் உணவுப் பொட்டலங்களை,எண்ணி அடுக்கி வைப்பது தான் அவள் வேலை.
..லதா அதிகாலையிலேயே எழுந்து கொள்வாள்..வெங்காயம் உரிப்பது,தக்காளி நறுக்குவது,மேத்தி பரோட்டாவிற்கு,வெந்தயக் கீரை உருவுவது,என்று அவள்.வரையிலும் வேலை நடந்து கொண்டுதானிருக்கும்,,,காலை பத்து மணிக்கெல்லாம் தயார் செய்த,சிற்றுண்டி காலியாகி விடும்,,,அப்புறம் மதியம் வரை ஓய்வெடுத்து விட்டு,மாலையில் பாக்கி வீட்டு வேலைகள்,மறு நாளைக்கான,ஆயத்த வேலைகள் ஆகியவை நடக்கும்,,
‘’வைஷூ,,ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கு?’’
‘’சூபர்ப்பா,,,இவ்வளவு சீக்கிரம் பிக்-அப் ஆகும்னு நான் எதிர்பார்க்கலை ‘’
‘’நான் எதிர் பார்த்தேன்மா,,,ஏன்னா,நம்ம வீட்டு சாப்பாடு டேஸ்ட் அப்பிடி,,அது எல்லாரையும் கட்டி இழுத்துட்டு வந்துடும்னு தெரியும் எனக்கு,,,’’என்ற ஜீவனின் அதிரடி பேச்சை கேட்டு,லதா உள்பட எல்லோருக்கும் பயங்கர சிரிப்பு...
‘’அப்பா!பிஸினஸ் அமோகமா நடக்கறது ஒருபக்கம் இருக்கட்டும்,,,அம்மாவும் பிசிக்கலி அண்ட் மெண்டலி நல்ல இம்ப்ரூவ் ஆயிட்டு வறாங்களே,,,அது பெரிய ஹெப்பியில்ல ‘’
அவன் கருத்தை ஆமோதித்த,ஜீவனும்,வைஷூவும்,லதாவைப் பார்த்து திருப்திஉடன் புன்னகைத்துக் கொண்டார்கள்...
‘’ஆமாண்டா புருஷோத்,,,காலையில கண் முழிக்கறப்பவே ,இன்னிக்கு என்ன டிபன்,எப்பிடி செயலாம்னு,சிந்தனை வேலையில போயிடறதால .என்னோட கை கால் பிரச்சினை எல்லாம் மறந்தே போயிட்டேன்,’’என்று சிலாகித்து சொன்னாள் லதா,,,,
‘’எஸ் நாம மனசளவுல,நோய்த் தாக்கத்திலேர்ந்து,வெளிய,வந்துட்டாலே,உடலளவுலயும் விடுபட்டுடுவோம்,இது சைக்காலஜிகல் ,ட்ரூத்மா,,,,அதுதான் உனக்கு இப்ப.நடந்திருக்கு,,,’’என்றார் ஜீவன் மனைவியிடம்,,,,
‘’வைஷூ..கடன் இல்லாம,பணம் ஒழுங்கா வசூல் ஆகுதா?’’
‘’அதல்லாம் பிராப்ளமே இல்ல புருஷோத்,,,ஏன்னா,நாங்க ஆர்டர் டெலிவரியின் பொது,பணத்தை வாங்கிக்கிட்டுதான் பாக்கெட்டையே தருவோம்’’
‘’அடப்பாவி ,,அவ்வளவு க்ரூயலா நீ?’’என்றான் விளையாட்டாய்,,,
‘’ஆமா!ஏமாத்த்தறது தப்புங்கறாப்புல,ஏமார்றதும்,தப்பு தானேப்பா ...உழைப்புக்கேத்த ஊதியம் கிடைக்கணுமில்ல...அப்புறம் நாம அடுப்பு வெக்கையில நின்னு சிந்தற வேர்வைக்கு மதிப்பு இருக்கணுமில்லப்பா’’என்று மருமகளுக்குப் பரிந்து வந்தார் ஜீவன்,,,
‘’பார்ட்டி ஆர்டர்ஸ் கூட வருது புருஷோத்’’
‘’குட்!நல்லாப் பண்ணுங்க,,நாலு பேரு வயித்துப் பசியாத்தர தொழில்...பணத்தோட புண்ணியமும் கிடைக்கும்,,,பட்,வைஷூ,ஒன் திங்......குவாலிட்டியை மட்டும் விடாம,மெயின்டய்ன் பண்ணு,’’
‘’ம் ,,,,நானும் அதில தெளிவாத்தான் இருக்கேன்”
வொயிட் காலர் வேலைகள் தொடர்புடைய மனிதரோடு மட்டும் நின்று விடுகையில்,இது போன்ற,சுய தோழிகள் குடும்ப மொத்தத்தையும்,தனக்குள் ஈர்ப்பதாய் அமைந்து விடுகின்றன,,,,
அத்தியாயம் 15
தாவரங்கள் ,மிருகங்கள் மட்டுமின்றி தொழிலும் குட்டி போடும்,,உப தோழீல்களை உருவாக்கித்தரும்,,,கண்ணுக்குத் தெரியாமல் கிளைகளை வளர்த்துத்தரும்,,வைஷாலிக்கும் தந்தது,
,,அவளுடைய சுஜி புட்ஸ் ஆறு மாதத்தில் அடுத்த கட்டத்திற்க்கு முன்னேறியது...கலோரியை கண்டு கதி கலங்கிப் போயிருக்கும் இன்றை ய தலை முறை மக்கள்,எண்ணெய் அதிகமில்லாத,சுஜி புட்ஸுக்கு,பிரம்மாண்ட வரவேற்பு தந்து,பிசினாஸ்சை,எங்கேயோ கொண்டு போய் நிறுத்தினர்,
பள்ளிகளின் உணவு விடுதிகள்,முதியோர் இல்லங்கள்,மருத்துவமனையின்,உணவு விடுதிகள்,ஆகியவற்றில்,வைஷாலியை வந்து, சமையல் வகுப்பு எடுக்க சொல்லி அழைக்கிறார்கள்...வைஷூ,மதிய நேரங்களில் இப்படி வெளி வேலைகளுக்கும் போயி வருகிறாள்,,,பெண்கள் பத்திரிகைகளின் இணைப்புப் புத்தகங்கள்,வைஷாலியின் ரேஸிப்பி களால் நிரம்பி வழிந்து ,வாசகிகளின் ஏகோபிக்த,வரவேற்பை பெற்றுள்ளன,,,இப்பொழுது, அதிக மக்களால் அறிந்து கொள்ளப்பட்ட,நபராக,மாறி விட்டாள் வைஷாலி
,,சிப்பியில் விழுகின்ற மழைத்துளி சேமிக்கப்பட்டு,முதிர்ந்து,முத்தாகிறது,,,அது போல வைஷாலி,பிறந்த வீட்டில் தனக்கு நேர்ந்த அவமானத்தை,உள்ளேயே ஊறப்போ ட்டு..துன்பங்களை தன் வாழ்விற்கு உரமாக்கி விட்டாள்,
,இறைவன் சம்பவங்களை மட்டுமே நிக்ழ்த்துகிறான்...அவற்றை வாழ்வின் சாதனைகளாக ஆக்கி கொள்வதும்,சாபங்களாக மாற்றி கொள்வதும் மனிதர்களின் கைகளில் தான் இருக்கிறது.
..புனை யில் வசிக்கும் தமிழர்கள் மத்தீயில்,சுஜி புட்ஸும்,வைஷாலியும் நெருக்கமானவர்களாக மாறிவிட,புனே வாழ் தமிழ் சகோதரிகள் உதவியால்,வைஷாலிக்கு சென்னையிலிருந்தும்,அழைப்புகள் வருகிறது,,,காலத்தின் அருமை கருதி,சென்னைக்கு,விமானத்தில் வந்து போவாள்...அப்படித்தான்,வருகிற சனிக்கிழமை அன்று,சென்னையில் உள்ள ஒரு ஆதரவ்ற்றோர் விடுதியில்,வைஷாலி இலவச வகுப்பு எடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறாள்...தொழிலும் வருமானமும பெருகி கொண்டிருந்தாலும்,இடை இடையே,இது போன்ற சமுதாய சேவைகளையும் எதிர் பார்ப்பின்றி செய்து வருகிறாள்...வாரத்தில் ஒரு நாள் இத்தகைய இலவச வகுப்புகளுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறாள்,,,ஆனால் இந்த முறை அவளது சென்னை விசிட்,தன்னுடைய வாழ்க்கையை புரட்டிபோடப் போகிறது,புண்ணாக்கப் போகிறது,என்பதை வைஷாலி அறிந்த்தாளில்லை
 
Advertisement

Advertisement

Top