Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Singapenne episode 1

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 1

எத்தனை வயதானாலும் – ஓடுகிற ரயிலைப் பார்ப்பதோ அதற்குள் பயணிப்பதோ குஷியாகத்தானிருக்கிறது ..அதிலும் வைஷாலி கிட்டத்தட்ட ஐந்து வருடங்க்ள்குப் பின்பாக சொந்த ஊருக்கு ,பிறந்த வீட்டுக்குப் போகிறாள் .மகிழ்ச்சி இருக்காதா பின்னே ..புது மணப்பெண் போல ஒரு சின்ன நாணக்குலுக்களுடன் மும்பை-சென்னை எக்ஸ்ப்ரெஸ் புனே யிலிருந்து கிளம்பியது .திடீரென்று நினைவு வந்தவளாய திடுக்கிட்டு கணவனையும் மகளையும் தேடினாள் .புருஷோத் மகளைத் தூக்கி வைத்துக்கொண்டு படியினருகே நின்றிருந்தான் .வைஷாலி எழூந்து போயி அவர்களை அழைத்து வந்து இருக்கையில் அமரச்சொன்னாள் .
‘’வைஷூ ,ஏன் அவசரமா வந்து கூப்பிட்ட ?சீட்டு போயிடுமோன்னு பயமா ‘’ என்றான் கேலியாகச் சிரித்தபடி ‘
‘’இல்லியே
பின்னே ரிசர்வேஷன் சீட்ல யாரும் வந்து உக்காரமாட்டாங்க ‘’
‘’அது தெரியும் நீங்க படி பக்கத்துல நின்னுக்கிட்டு ‘’இருந்தது எனக்கு சரியயாப்படல.....அதான் வந்து உக்காருங்கணு சொன்னேன் ..’’
ஜாலியா இருந்துச்சும்மா ...ஏன் எங்களை வரச்சொன்னே ‘’என்று தரையில் காலை உதைத்து சிணுங்கினாள் சுஜித்ரா ....’’
‘’ட்ரெயின் இப்ப வேகமெடுத்துப் போகும் ..அப்ப பேலன்ஸ் இல்லாம கீழ விழுந்ததீங்க்ன்னா இன்னும் ஜாலியா இருக்கும் ..ஆளைப்பாரு ..வா ..இங்க உக்காந்து ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துகிட்டு வா ‘’என்று தான் நகர்ந்து கணவனருகில் அமர்ந்து கொண்டு ,மகளுக்கு ஜன்னலோர இருக்கையைத் தந்தாள் வைஷாலி .’’
‘’எப்பிடியோ பிளான் பண்ணி என்னய இடிச்சுக்கிட்டு வந்து உக்காந்துட்ட ‘’
‘’சரி ..அப்பிடியே இருக்கட்டும் ...உங்களுக்கும் ஹேப்பி தானே ‘’என்றாள் வைஷாலி சிரித்தபடி ....’’
‘’யெஸ் ,,பட் உனக்கு ஹேப்பியோ ஹேப்பி ‘’
‘’ஏன் ? எனக்கு மட்டும் தனியா என்ன ?’’
‘’ஆமா ..நீ உங்க அம்மா வீட்டுக்கு போறேயில்ல’’
‘’அம்மா வீட்டுக்கு போறேன்றது உண்மைதான் ....பட், அது ஹேப்பியான எக்ஸபீரியென்சா இருக்குமான்னு தெரியலையே ...’’
‘’நிச்சயம் இருக்கும் ‘’என்றான் கண்களை மூடித் திறந்து .
‘’எதை வச்சி கண்பர்மா சொல்றீங்க என் கணவரே ?’’
‘’காண்பிடன்ஸ பாஸ் காண்பிடன்ஸ் ‘’என்று புருஷோத் சொன்னவுடன் கணவன் மனைவி இருவரும் சிரிக்க ...’’’
‘’அம்மா ,எனக்கும் ஜோக் சொல்லுங்க ..நானும் சிரிக்கிறேன் ‘’-சுஜித்ரா
‘’உனக்குப் புரியாதுடா செல்லம் ‘’
‘’ஏன்மா...?
‘’சில விஷயங்கள் புரியாம இருக்கறதுதான் நல்லது ...நிம்மதி ..நீ வெளியில வர்ற நேம் போர்டை எல்லாம் படிச்ச்கிட்டே வா ‘’ என்றாள் கை காட்டி…..’
‘’மம்மி ...அது மராட்டியில இருக்கு ‘’
‘’கீழ இங்க்லீஷ்லயும் போட்டிருக்கில்ல..அதை வாசி ..நல்லா லாங்குவெஜ் இம்ப்ரூவ் ஆகும் உனக்கு ‘’
எதிர்சீட்டில் அம்மா அப்பா ஒரு குட்டிப் பையன் வந்து அமர்ந்த்தார்கள் ..மராட்டி குடும்பம் போலிருந்தது ..பைக்குள்ளிருந்து வட்ட டப்பாவை எடுத்து அதிலிருந்த டேப்லா வை எடுத்து கடித்து தின்றார்கள் ,,அந்தப் பெண் சுஜித்ராவுக்கும் ஒன்று தர .அவள் கையை நீட்டியெவாறே கண்களால் அனுமதி கேட்டாள் ..வைஷாலியும் கண் சாடையிலேயே ஒகே சொன்னாள் ..புருஷோத் பசிக்கிறதென்றான் .யாராவது சாப்பிடுவதைப் பார்த்தாலே அவனுக்கும் உணவுன்னும் ஆசை வந்துவிடும் ...மனதைப் போலவே வஞ்சனை இல்லாத உடம்பு ...புனே யில் ‘’அசோக் லேலண்ட் ‘’நிறுவனத்தில் மார்க்கெட்டிங் சூபேர்வைசராக இருக்கிறான் ..கை நிறைய சம்பளம் ..மனம் நிறைய மகிழ்ச்சி ..காரணம் காதல் மனைவி வைஷாலி ..காதல் என்ற வார்த்தைக்கு கனம் சேர்ப்பது அவர்களது அன்பு ...இவர்களுடையது கண்களில் துவங்கி கருத்து வேறுபாடுகளில் வளர்ந்து கல்யாணத்தில் முடிவுக்கு வந்து விடும் மலிவான சரக்கல்ல.. இதயத்தில் பிறந்து கண்களில் வளர்ந்து ,கல்யாணத்தில் முதிர்ந்து ,வாழ்வின் ஒவ்வொருநாளும் இன்பத்தை வாரி வழங்கும் கண்ணியக்காதல் .......வைஷாலி டிபன் கேரியரில் இருந்து எடுத்து ,பேப்பர் பிளேட்டில் புல்கா வும் குடமிளகாய் கிரேவியும் பரிமாறினாள் ...ரசித்து உண்டான் ..’’சூபர் டிபன் வைஷாலி’’
‘’புல்கா என்ன புதுசா இன்னிக்கு ‘’
‘’இலல. வழக்கமா செய்யறதுதான் ...ஆனா ,தொட்டில் ஆட்டறாப்புல ,டிரயின் டிராவெல்ல ,நல்லா ஜிலு ஜிலு காத்துல அழகான பொண்டாட்டியோட உக்காந்து புல்காவை ஒரு புல் கட்டு கட்டறது இருக்கே ....பண்டாஸ்டிக் எக்ஸ்பீரியான்ஸே ..’’என்று அனுபவித்துச் சொன்னான் ...’’
அவன் சொன்ன விதம் ,வைஷாலிக்கு பெரிதாக சிரிப்பை வரவழைத்தது .....’’இடத்துக்கு ஏத்தாப்புல டயலாக் டெலிவெரி பண்றதுல உங்களை அடிச்சுக்க ஆளில்லை புருஷோத் ....’’
‘’அதுவா வருது வைஷூ’’ என்று சொல்லி விட்டு ,எண்ணிக்கை யில்லாமல் புல்கவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான் புருஷோத்..எதிர் சீட்டுப் பெண் வாய் திறந்தாள் .
‘’உங்களுக்கு ..எது ஊரு?’’என்றாள் ஒரு மாதிரியான தமிழில் .....’’
‘’எனக்கு சென்னைதான் ...சொந்த ஊரு ...இவருக்குப் புனே ....அங்கதான் இவருக்கு வேலை ...அதனால புனேயில குடித்தனம் .இப்ப அம்மா வீட்டுக்கு சென்னைக்கு போயிட்டிருக்கோம் .ஒரே பொண்ணு சுஜித்ரா ...’’என்று கடகட வென சொல்லி முடித்தாள் வைஷாலி ...மீண்டும் அவளது பலவீனமான தமிழைக கேட்க பிரியமில்லாமல் .....ஆனாலும் அவள் விட்டாள் இல்லை ....’’நல்ல மேட்ச்-அண்ணாவும் நீங்களும் ‘’என்றாள் ..பதிலுக்கு சிரித்து வைத்தாள் வைஷாலி ...அதற்குள் அண்ணா ஆகிவிட்டாரா இவர் உனக்கு ...இதுதான் வட இந்தியப் பெண்களின் சிறப்பு .டக் என்று ஒட்டிக்கொள்வார்கள் ...வேண்டாமென்றால் வெட்டிக்கொள்ளவும் செய்வார்கள் ,,,அது வேறு விஷயம் ....தானும் நாகரீகத்திற்காக ஏதாவது கேட்டாகவேண்டும் என்பது மண்டையில் உறை க்க ....
‘’நீங்க புனே யில எங்க இருக்கீங்க ?’’’ என்றாள் வைஷாலி
‘’கராடியில இருக்காரம் ‘’
‘’சென்னைதான் வர்றீங்களா ?’’
‘’அவங்கம்மாவை பார்க்க வர்ரோம் ‘’
‘’ஓ ...நைஸ் ..பையன் என்ன படிக்கிறான் ?’’
‘’தேர்டு படிக்கிது ‘’
வைசாலிக்கு அந்தப்பெண் பேசும்போது ,அவள் என்ன சொல்கிறாள் என்பதைவிட அவளுடைய கொஞ்சு தமிழில் தான் அதிகமாய் கவனம் சென்றது ...அவள் ஒரு ஆங்கில நாவலை எடுத்துப் படிக்கத் துவங்கவும் ,வைஷாலி மகளுக்கு டிபன் தந்து தானும் உண்டு முடித்து டப்பாக்களை கழுவி ,ஒரு டவளால் துடைத்து உள்ளே வைத்தாள் .இன்னேரம் வீட்டில் இருந்தாலும் ,தொடரக்கூடிய அடுத்தடுத்த வேலைகள் எரிச்சலூட்டவே செய்யும் .இப்படி ரயிலில் வெட்டியாக உட்கார்ந்த்திருப்பதும் போர் ஆகத்தான் இருக்கிறது ...மனம் என்ன தேடுகிறதென்று அதற்கே தெரியவில்லை ....மனதை அரிக்கும் இந்த வெறுமை உண்ர்வு ,அம்மா வீட்டு ஏக்கமாய் இருக்குமோ என்று அவளே யூகித்து கணவனிடம் சொல்ல ,இருவரும் கலந்த்தாலோசனை செய்துதான் இந்த பிரயானத்தை திட்டமிட்டார்கள் ...’
‘’வைஷூ ,,,அந்த பொண்ணு சொன்னதயே நினைச்சிக்கிட்டு இருக்கியா ?’’
‘’என்ன சொன்னா?’’
‘’நாம ரெண்டு பேரும் பொருத்தமான ஜோடின்னாலே அதை ‘’
பதிலாகப் புன்னகைத்தாள் வைஷூ. அதுவும் உண்மைதான் ..மறுக்கமுடியுமா என்ன ?இந்த பொருத்தமான ஜோடி அம்மா வீட்டிற்கு மட்டும் வருத்தமான ஜோடியாக அல்லவா மாறிவிட்டது .இன்று ஒன்றும் தெரியாத பூனை போல் அமர்ந்திருக்கும் புருஷோத் கல்லூரி நாட்களில்தான் என்ன அலப்பறை தந்திருக்கிறான் ....இப்பொழுது அமைதியே உருவாக இருக்கிறான் ...கால் கட்டுப்போட்டதும் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டானே ....அன்னாட்களில் சீறும் ராஜநாகமாய் இவன் ஆடிய ஆட்டமென்ன .....!
 
உங்களுடைய "சிங்கப்
பெண்ணே"-ங்கிற அழகான
அருமையான லவ்லி நாவலை
மீண்டும் படிக்கத் தந்ததற்கு
ரொம்பவே சந்தோஷம்,
கண்ணம்மாள் ஸ்ரீதர் டியர்
 
Last edited:
Top