Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singappenne

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
மனதில் கள்ளமில்லாமல் இருந்த சமயங்களில் எல்லாம் ,தங்களது சந்திப்புகளில் எல்லாம் வம்பிழுத்து வாயாடிக்கொண்டிருந்த புருஷோத் –வைஷாலி ,அதன்பின் அமைதியாகி விட்டனர் .,ஒருவரை ஒருவர் ஓரப்பார்வையுடனும் ,ஓசை யில்லாத ஒரு மந்தகாசப் புன்னகையுடனும் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள் ..காரணம் ,காதல் என்ற கள்ளத்தனம் இருவர் மனதிற்க்குள்ளும் ஓடி வந்து ஒளிந்து கொண்டது தான்...இவர்களது ஓரங்க நாடகத்தை மற்ற மாணவர்களும் கவனிக்கத் தவறவில்லை ...பல சமயங்களில் புருஷோத்தை மையமாக வைத்து கிண்டல் கேலி பறக்கும்.
‘’டேய் ..சாம்பார் இட்லிக்கும் ,சப்பாத்தி குருமாவுக்கும் ஒத்து வரும்னு சொல்றே ?’’
‘’சொல்ல முடியாதுடா ..காலி காலத்துல எது வேணா நடக்கலாம் ..மனசை தைரியமா வச்சிக்கோ ‘’
‘’எனக்கென்னடா வந்துச்சு? இட்லி மாவு ஆட்டப்போற இவன் தான் தைரியமா இருக்கணும் ‘’என்று புருஷோத்தை காட்ட ,அவன் புத்தகங்களை கொண்டே நண்பர்கள் முதுகில் நாலு போட ...ஏக கலாட்டாவாக இருக்கும் வகுப்பு இடை வேளைகள் ...இதே ரோதனைதான் அந்தப்பக்கம் வைஷாலிக்கும் ...’ஏன்ப்பா .. நம்ம வைஷாலிக்கும் புருஷோத்துக்கும் நடுவுல ஒரு மௌனமான காதல் கதை ஓடிட்டிருக்கே ...அது செ ட்டாகும்னு தோனுதா உனக்கு ‘’
‘’ஏன் ,,இவ குள்ளமா இருக்கான்றதால சொல்றியா ‘’
‘’அவன் இவ குள்ளம்னு பார்க்கலை ...வைஷாலியோட உள்ளத்தைப் பார்த்து ஓகே பண்ணிட்டான் ‘’என்று சொல்லி விட்டு ,தனது காமெடியை நினைத்து தானே ஆர்ப்பாட்டமாய் சிரித்தாள் ஒருத்தி …..
‘’எப்படிடி? ..காதலிக்கிறது அவ ...கவிதை வர்றது உனக்கு ..எங்கேயோ இடிக்குதே ....’’ என்று விரல்களால் உதடுகளைத் தட்டிக்கொண்டாள் ஒருத்தி ....’’
‘’ஷிட் ! போயும் போயும் இந்த நெடுமாறனையா லவ் பண்ணப்போறேன் ! எனக்கெல்லாம் மண்ணின் மைந்தந்தான் வேணும் ‘’
‘’மீன்ஸ் ‘’என்று புருவம் நெரித்தாள் ஒருத்தி ...
‘’தமிழ் நாட்டுப் பையன் தான் எனக்கு தாலி கட்டனும் ‘’’’
‘’வைஷாலி யாதும் ஊரே யாவரும் கேளீர்னு நினைக்கறா போல .இல்லடி ‘’
‘’போங்கடி நீங்களும் உங்க கணக்கும் ‘’என்று போய் கோபம் காட்டி அவ்வி விடம் விட்டு அகன்றாள் வைஷாலி ...கேலி செய்யும் மாணவிகளைத் துரத்தி விடலாம் ..அவளை துரத்திக் கொண்டு கூடவே வரும் புருஷோத்தின் நினைவுகளை சுமக்கிறாள் அவனைப் பற்றிய நினைவுகள் அவளைச் சுமக்கிறது சுமையே ஒரு சுகமாய் இறக்கி வைக்க எண்ணமும் இன்றி , இரண்டும் ஒரு சேர ,ஒரே பாதயில்தான் பயணிக்கின்றன எப்படியாயினும் பயணங்கள் சுகம் தானே !
அடுத்த மிலன் கொண்டாட்டத்தில் வைஷாலி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை ...காரணம் இன்னும் சில நாட்களில் படிப்பு முடிந்து புருஷோத் சொந்த ஊரான புனே செல்ல இருக்கிறான் ..மனதில் அது ஒரு தவிப்பாகத் தங்கி விட்டது வைஷாலிக்கு ,,புருஷோத்துக்கும் அப்படியே ...இருவரும் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தால் ,ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொள்வதோடு சரி ...அதிகம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவில்ல.....எனினும் தங்கள் இருவர் மனதிலும் காதல் வளர்ந்து கொண்டிருந்ததை இருவருமே உணர்ந்த்திருந்தனர் ,,புருஷோத்த்துக்கும் கல்லூரி பிரிவு ,முக்கியமாய் வைஷாலியின் பிரிவு கலக்கத்தையே தந்தது ..எனினும் மாணவர் சங்கத்தில் பொறுப்பான பதவியில் இருப்பதால் ,விழாவிற்குத் தேவையான ஏற்பாடுகளைக் குறைவின்றி செய்து கொடுத்தான்.
‘’ஏய் ,,வைஷாலி உனக்கு விஷயம் தெரியுமா ‘’/
‘’சொன்னாத்தான் தெரியும்’’
‘’அடப் பொடி அரை லூசு ...யாரு நமக்கு சீஃப் கேஸ்டாய் வரப்போராங்கன்னு தெரிஞ்சா தாங்க மாட்டே ‘’
‘’நீ தாங்கி கிட்டேயில்ல..சொல்லு எனக்கும் ‘’
‘’ஆக்டர் கார்த்தி ‘’
‘’யாரு நம்ம கார்த்தியா ‘’என்று இரு கைகளாலும் வாய் பொத்தி கத்தினாள் வைஷூ ....’’ஆமா .அதான சொல்றேன் ..’’
‘’ஆனா கார்த்தி நம்ம காலேஜுக்கு வர்றது வைஷாலிக்கு தெரியலங்கறது ஆச்சரியமாத்தான் இருக்கு..’’என்று பிட்டைப் போட்டாள் ஒருத்தி ...
‘’ஹேய் பிராமிசா எனக்கு இப்பதான் தெரியும் ‘’
‘’உனக்கு கார்த்தியைப் பிடிக்கும்ல ...அது புருஷோத்துக்கும் தெரியுமுல்ல ...அதான் சர்ப்ரைஸ் கிஃப்ட் ஆக இருக்கட்டும்னு அவர் ஏற்பாடு பண்ணியிருக்கலாம் ...’’என்று காதல் புனைந்தாள் ஒருத்தி ...’’
‘மே பி ‘’-மற்ற ஒருத்தி ..
‘’வைஷாலி மொத்தமாக எல்லாரையும் பார்த்து முறைத்தாலும் ,அவர்களது பேச்சும் கண் ஜாடையும் இனிக்கவே செய்தது அவளுக்கு ...ஒரு வேளை அப்படியிருக்குமோ !அப்படித்தான் இருக்கவேண்டும் ...என் மனம் கவர்ந்த கார்த்தியைப் பார்ப்பதே இன்பம்தான் ...அதுவும் கார்த்தியை என் காதலரே அழைத்து வருவது டபுள் சந்தோஷம் ...நாங்கள் இருவருமே ஸம்ப்ரதாயமாக காதலைப் பகிர்ந்து கொள்ளவில்லை எனினும் காதல் இருக்கிறது ..ஆமாம் !பல்பு எரிகிறதென்றால் நடுவில் மின்சாரம் ஊடாடுகின்றது என்றுதானே பொருள் ..மேலும் அறிவிப்பு செய்து விட்டுத் துவங்க ,காதல் என்ன என் வீட்டு டேபிள் பேனா என்ன ..பட்டனை தட்டி விட்டு ஓடவிட ....காதல் ஒரு சுனாமியல்லவா!! ...எழுவதும் விழுவதும் நொடிகளில்தான் ...அதுவும் ரகசியமாக ...அதன் பாதிப்புகள் மட்டுமே பார்வைக்கு ...என் வாழ்விலும் காதல் சுனாமி வீசியிருப்பதை விளைவுகளை க் கொண்டு கணிக்கிறேன் நான் ...


அன்று மட்டும் கல்லூரி தனது சட்ட திட்டங்களை தளர்த்தி கொண்டிருந்தது –நடிகர் கார்த்தீயின் வரவை முன்னிட்டு .....இதோ வருகிறார் அதோ வருகிறார் என்ற பில்ட் அப்புகளுக்கு நடுவே நிஜமாக வந்தே விட்டார் கார்த்தி ..ப்ளூ கலர் ஜீன்சும் ,வெள்ளை சட்டையும்,தனது டிரேட் மார்க் ப்ரூ காபி சிரிப்புமாய் அவர் உள்ளே நுழையவும் ,கல்யாணப் பெண் போல அலங்கரித்துக் கொண்ட ,சில மாணவிகள் இருபுறமும் நின்று கொண்டு ,மலர் தூவி வரவேற்க ,அவற்றை நெஞ்சில் கை வைத்து சிரம் தாழ்த்தி ஏற்றுகொண்டார் ....அகற்குள் இங்கே மாணவர் கூட்டம் கார்தீ கார்த்தீ என்று ரிதமாய்க் கை தட்டி கோஷம் போட்டு ஆர்ப்பரித்தது ...அவருக்கான சிறப்பு இருக்கையில் அமர்ந்து மாணவ மாணவிகளை கண் களால் அளந்தார் ....அவரை வரவேற்றுப் நிகழ்ச்சிகளைத் துவங்கினார்கள் இடையிடையே அவருக்கு ஸ்நாக்ஸ் பால் போன்ற உபசரிப்புகளும் நடந்து கொண்டிருந்தன...ஸ்லிம்-கார்ட்டூன் விளையாட்டு துவங்கியது ..துண்டு பேப்பரில் இருக்கும் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து உடனடியாக ஒரு கதை சொல்ல வேண்டுமென்பதே விளையாட்டு ..மாணவர் விருப்பத்திற்கு ஒப்ப முதல் சீட்டை எடுத்தவர் கார்த்தீ ..எழுந்து மைக் பிடித்தார் ..
‘’இந்த சம்மருக்குப் பொருத்தமா ஃப்ரூட் அப்படின்னு ஒரு க்ளூ கிடைச்சிருக்கு எனக்கு ..ஓகே .வெல் ..ஒரு கதை சொல்றேன் ..ஒரு ஊர்ல ஒரு பணக்காரர் ஒரு காரியம் நிறைவேறணும்னு கடவுளை வேண்டிக்கிட்டார் ..கடவுள்னு பொதுவாசொல்றதை விட பழனி முருகன் அப்பிடீனு வச்சிக்குவோம் ....அவரோட வேண்டுதல் நிறைவேறிருச்சி .அதாவது அவர் ஒரு விவசாயப் பண்ணையாரு அவரு தோட்டத்து கிணத்துல தண்ணீர் நல்லா ஊறி நிரம்பணும்னு வேண்டிக்கிடடது நடந்துருச்சு..மற்ற தோட்டங்களை விட அவரோட கிணறும் வாழை தோட்டமும் செழிப்பாயிடுச்சு ..சரி! கடவுள் நாம கேட்டபடி செஞ்சுட்டார் ..நாமும் வேண்டிக்கிட்டாப்புல செஞ்சுடணும்னு ,ஒருவண்டி வாழைத் தாரை பழனி முருகனுக்கு அனுப்பி வச்சார் .ஜாக்கிரதை ,,ஒரு பழம் கூட விடுபட்டுடாம கோவில்ல கொண்டு போயி சேர்த்துடணும்னு வண்டி யோட்டிக்கு கட்டளை ...சரின்னு சொல்லி கிளம்பினார் வண்டிக்காரர். ...ரொம்பதூரம் ப்ரயாணம் பண்ணினதால வண்டி யோட்டிக்கு பசி வந்துருச்சி ..பின்னால திரும்பிப் பார்த்தார். நல்லா பக்குவமாப் பழுத்து அழகா உக்காந்திருந்த பழங்கள் என்னய எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு சொல்றாப்புல இருந்துச்சி அவருக்கு ...!ஆனா பண்ணையார் முகம் கண்ணு முன்னால வந்து பயமுறுத்திச்சு ...தடுமாறினார் ...கடைசியில பசிதான் ஜெயிச்சுது ..பசி வந்தா பறந்து போற பத்து விஷயங்கள்ள பயமும் ஒண்ணுதான் ,,!இரண்டு பழங்களை எடுத்து பசியாற சாப்பிட்டு ,அப்புறம் நல்ல தெம்போட பழங்களை கோயில கொண்டுபோய் சேர்த்துட்டார் ...இதெல்லாம் நடந்து முடிஞ்சது ..ஒரு வாரம் கழிச்சி பண்ணையார் கனவுல முருகபெருமான் வந்தார்,,!கனவுல எப்பிடி கடவுள் வருவார்னு எல்லாம் கேக்கக் கூடாது ,கதைன்னாலே இட்டுக் கட்டினது தான் ,,சரியா!
பண்ணையார் ‘’முருகா ...ஒரு வண்டி நிறைய பழம் தந்து அனுப்பினேனே ,,திருப்தி தானே உனக்கு ‘’அப்பிடின்னார் ..’’ஒரு வண்டிப்பழமா’’என ஆச்சரியமாகக் கேட்டார் முருகன்...’’ஆமாம் முருகா ..சர்வ நிச்சயமாய் வேலையாளிடம் வண்டி நிறைய என் தோட்டத்துப் பழங்களைக் கொடுத்தனுப்பினேன் ..’’என்றார் ..அதற்கு முருகன் இப்படி பதில் சொன்னார் ..’’நீ எவ்வளவு பழம் கொடுத்தாய்னு எனக்குத் தெரியாது ..எனக்கு வந்து சேர்ந்தது ரெண்டே ரெண்டு பழங்கள்தான் ..’’பண்ணையாருக்கு புரியவில்லை ..பட் உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் .டெல் மீ ..எஸ் ..அந்த வேலையாள் பசி தீரச் சாப்பிட்ட ரெண்டு பழங்கள் தான் முருகனுக்குப் போயி சேர்ந்திருக்கு. இந்த கதை இட்டுக் கட்டினதா இருந்த்தாலும் கருத்து நிஜமானது நண்பர்களே !இந்தக் கதைக்குப் பொருத்தமா எங்கப்பா ஒரு பாட்டு சொல்லுவார் ...அதை மட்டும் சொல்லி முடிச்சிறேன் ..
‘’படமாடுங்க் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
‘’நடமாடுங்க் கோயில் நம்பர்க்கு அது ஆகா
நடமாடடுங்க் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடுங்க் கோயில் பகவர்க்கு அது ஆமே !’’

இந்த சித்தர் பாட்டுக்கு பொருள் என்னன்னா நாம கடவுளுக்குத் தருகிறதா நினைச்சிக்கிட்டு ,கோவில்ல குடுக்கறது மனுசனுக்கு வந்து சேராது ..ஆனா நாம சக மனிதர்க்கு செய்யற உதவி இறைவனைச் சென்று சேரும்கிறதுதான்!!! ...சிம்பிள் !!..ஓகே ..ஃபைன் !1..ப்ரூட் அப்பிடீங்கற வார்தையிலேர்ந்து ஒரு ப்ரூட் புல் ஸ்டோரீ சொல்லியிருக்கேன்னு நம்பறேன் ...கண்டிப்பா இது ஊருக்கு உபதேசமில்லை ...இந்த சமுதாயத்துக்கு எங்களோட பங்கா நாங்க அகரம் பவுண்டஷன் நடத்தறோம்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ..படிக்க விருப்பமுடைய ஏழை மாணவர்க்கு ,அகரத்தோட தொலை பேசி நம்பரைக் கொடுத்து உதவுங்க ..ஓகே ,பை ..’’என்று லைட்டாய் துவங்கி கனமாய் முடித்தார் ...மகிழ்ச்சி யைத்தந்து ,மகிழ்ச்சியைப் பெற்று மனநிறைவுடன் விடை பெற்றுக் கிளம்பினார் கார்த்தீ .
 
Top