Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

strawberry kanne Episode - 3

Advertisement

Gayathri Ragavendra

Member
Member
ஸ்ட்ராபெர்ரி கண்ணே


எந்த குரலை , தன் வாழ்வில் இனி கேட்கவே கூடாது என்று நினைத்தாளோ , அதே குரல். அருகில் இருந்த சோபாவில் ,தொப்பென்று அமர்ந்தாள் .கனபொழுதில் தன் வாழ்க்கையில் நடந்தவைகள் அதைத்தும், மனக்கண்ணில் தோன்ற ,தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்துப்பார்த்தாள் அபி .

அபி கோவைக்கு வந்து மூன்று வருடமாகிறது.அதற்க்கு முன் இருந்த அபியின் வாழ்க்கையே வேறு. அபியின் தாத்தா திருமுருகன், ஈரோட்டில் மிக பெரிய ஜவுளித்தொழிற்சாலை வைத்திருந்தார்.

அந்த ஊரிலே , மிகவும் வசதியான பாரம்பரியம் மிக்க குடும்பமும் கூட. திருமுருகன் -சுந்தரவல்லி அம்மாள், இவர்களுக்கு மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் என்று மொத்தம் நான்கு பிள்ளைகள் .

மூத்தவர் சுப்பிரமணியன் அவரது மனைவி ரமாவோடு, சேர்ந்து அவரது பிசினஸ் ஐ பார்த்துக்கொள்கிறார் . அவருக்கு இரண்டு பிள்ளைகள் நந்தினி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் திருமணமாகி இருந்தது .

நடுவுளவர் சிவகுமாரன் அவரது மனைவி கௌசல்யாவும் மருத்துவர்கள் . அவர்களுக்கு சொந்த மருத்துவமனை உள்ளது. அவர்களுக்கும் இரண்டு பிள்ளைகள் அவினாஷ் மற்றும் அவந்திகா . இருவரும் இரட்டை பிள்ளைகள் ,. பெற்றோரைப்போல அவந்தி மருத்துவம் எடுக்க, அவினாஷ் கட்டுமானத்துறையில் கலக்கிக்கொண்டிருந்தான் . அவந்திக்கு நிச்சயம் ஆகி சில நாட்களே ஆகிரியிருந்தது .

இளையவர் செங்கதிர்ச்செல்வன், அவர் தந்தையின் பெயரில் கல்வி அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, அதன் கீழே கல்வி நிறுவனங்களை நடத்திவந்தார் . அவரது மனைவி சுபத்ரா கணவருக்கு உதவியாகவும், வீட்டின் நிர்வாகத்தையும் பார்த்துக்கொள்கிறார் . இவர்களுக்கும் இருப்பிள்ளைகள் கார்த்திகேயன் மற்றும் சௌமியா.

கார்த்திகேயன் , நம் கதையின் கதாநாயகன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வெளிநாட்டில் எம்பிஏ பயில தயாராகிக்கொண்டிருந்தான்.

திருமுருகனின் செல்ல மகளான ஆதிரைச்செல்வி அவருக்கு மட்டுமல்ல மூன்று அண்ணன்களுக்கும் அண்ணிகளுக்கும் கூட ரொம்ப செல்லம் .

மூன்று மகன்களுக்கு பிறகு , ஆறு வருட இடைவெளியில் பிறந்தவர் தான் ஆதிரை. ஆதலால் தான் மூன்று மகன்கள் திருமணம் முடித்த பிறகும் கூட, ஆதிரையை விட்டு பிரிய மனமில்லாமல் , வீட்டோட மாப்பிள்ளையாய் அர்ஜுனனை , திருமணம் செய்துவைத்தார் .

அவர் ரயில்வே துறையில் தலைமை அதிகாரியாக இருந்து வந்தார். இவர்களின் ஒரே மகள் தான் நம் கதையின் நாயகி , அபிநயவர்ஷினி .

அனைவருமே ஒரே வீட்டில் தான் வசித்து வந்தார்கள் . அதற்க்கேற்ப பாரம்பரியமான முற்றம் வைத்த கட்டியிருந்தார் திருமுருகன் . முதல் இரண்டு மருமகள்கள் எப்பொழுதும் வேலையாக வெளியே சென்றுவிடுவார்கள். அணைத்து பிள்ளைகளையும் வீட்டையும் பார்த்துக்கொள்வது சுபத்ரா தான் .

அர்ஜுனன் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அவர் அங்கே செல்ல வேண்டியதாய் இருந்தது .அபி பிறக்கும் வரை ஆதிரை இங்கே தான் இருந்தார். அதற்க்கு மேல், தன் கணவனை பார்த்துக்கொள்ள வேண்டி அவருடனே செல்ல வேண்டியதாய் இருந்தது. உடன் அபியையும் அழைத்து சென்றனர் .

வேறு வேறு ஊர் செல்வதால், ஐந்தாம் வகுப்புவரை அபி ஏழு பள்ளிக்கூடங்கள் மாற வேண்டியதாய் இருந்தது. அதனால் படிப்பு கெட்டுவிடும் என்று அபியை ஈரோட்டிலே சேர்த்தனர் அங்கு தனியாக இருந்ததால், இங்கு வந்து இருப்பது அபிக்கு மிகவும் பிடித்துப்போனது .

நந்தினி , ஐஸ்வர்யா , அவந்திகா என அபிக்கு மூன்று தமக்கைகள் நால்வரும் அபியைவிட பெரியவர்கள். சொல்லப்போனால் அபி அப்பொழுது தான் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள் .

எப்பொழுதும் வீடே கலக்கலப்பாக தான் இருக்கும். ஆதிரைக்கு அடுத்து அந்த வீட்டில் அதிகசெல்லம், நம் அபிநயவர்ஷினிக்கு தான். பொதுவாக எல்லாப்பிள்ளைகளும் , விடுமுறையின் போது தங்கள் வீட்டிலிருந்து தங்கள் பாட்டி வீட்டிற்கு செல்வார்கள் . ஆனால் அபியோ விடுமுறை விட்டால் பாட்டி வீட்டிலிருந்து , அவள் தாய் தந்தையை பார்க்க செல்வாள் .

முன்பெல்லாம் ஆதிரை அடிக்கடி வந்து செல்வார் . சில வருடங்களுக்கு முன் , அர்ஜுனன்க்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக , அவர் உணவு பழக்கங்கள் முற்றிலும் கவனிக்கப்படவேண்டும் என்று சிவகுமாரன், ஆதிரையின் அண்ணன் கூற அன்றிலிருந்து அவர் இங்கே வருவதை குறைத்துக்கொண்டார் .

அதனால் தான் அபிக்கு அங்கு அதிக செல்லம் . மூன்று அத்தைகளுக்குமே அபி என்றால் மிகவும் பிடிக்கும், ஏன் என்றால் அபி தான் வீட்டின் கடைக்குட்டி .

பிள்ளைகள் அனைவருக்குமே வீட்டின் கீழ்தளத்தில் அறைகள் இருந்தது .பெண்பிள்ளைகள் அனைவருமே முதல் தளத்தில் ஒரே அறையில் தான் தங்குவார்கள்.

அவினாஷும் கார்த்திக்கும் அவர்கள் அறைக்கு எதிர்க்கே உள்ள அறையில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் வேலை செய்ய நிறைய ஆட்கள் இருந்தாலும் சில வேலைகளை , பெண்பிள்ளைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது சுந்தரவல்லி பாட்டியின் முதல் ரூல் ஆக இருந்தது . எந்த பெற்றோரும் அதற்க்கு மறுப்பு தெரிவிக்கவில்லை , அதனால் பிள்ளைகளும் அவ்வப்போது பாட்டி சொல்லும் வேலைகளை செவ்வனே செய்வார்கள் .

அபி என்றால் தாத்தாவிற்கு கொள்ளை பிரியம். பார்ப்பதற்கு ஆதிரையை அச்சு வார்த்தது போன்று இருப்பாள் அபி. இரவு உணவு எப்பொழுதும் அனைவரும் சேர்ந்துதான் உண்பார்கள் காலைநேர பரபரப்பில்.

அனைவரும் ஒன்றாக உண்பது முடியாது என்று, இரவு எட்டுமணிக்கெல்லாம் அனைவரும் முதல் தளத்தில் உள்ள பெரிய சிட்அவுட்யில் பெரிய விரிப்பில் அனைவரும் அமர்ந்து உண்பர் அவர்கள் வீட்டை சுற்றி தென்னை, மாம்மரம், புங்கமரம் , வேப்பமரம் என சுற்றி இருந்ததால் காற்று விசு விசு வென அடிக்கும் .

வீட்டில் உள்ள அணைத்து வயதினருக்கும் பிடித்த இடம் என்றால் இது தான். அவந்திக்கு நிச்சயம் ஆகி ஒருமாதம் ஆகி இருந்தது .அடுத்த மாதம் திருமணம் என்பதால் கல்யாண ஏற்ப்பாடுகள் நடந்துக்கொண்டிருந்தது.

அன்றும் இரவு உணவு முடித்துவிட்டு , பெரியவர்கள் கல்யாண வேலையை பற்றி பேசிக்கொண்டிருக்க அவந்தியும் ,அபியும் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்துக்கொண்டு நியாயம் அடித்துக்கொண்டிருந்தனர் .

நந்து அக்காவும், ஐஸு அக்காவும் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாங்க, அடுத்து நீங்களும் போய்ட்டா எனக்கு ரொம்ப போர் அடிக்கும் அவந்தி அக்கா .

நீங்க வேண்ணா ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சிக்கிறீங்களா அக்கா ?

ஏன் அபி , ஒரு வருஷம் கழிச்சு பண்ணா அப்போ மேடம்க்கு போர் அடிக்காத ?

இல்ல, அவந்தி அக்கா அப்போ நான் வேலைக்கு போய்டுவேன் என்று கூற

அது என் கைல இல்லையே மா…… என்று பாசாங்கு பண்ண, இருவரும் சிரித்துவிட்டனர்.

இருவரையும் பார்த்த சுப்பிரமணியன் , பசங்க நம்ம வீட்லே இருந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கும். கண்ணு முன்னாடியே இருந்துட்டா நல்லாருக்கும் இல்ல என்று கூற .

ஆமா அண்ணா அடுத்து அவந்திக்கு கல்யாணம் ,ஒரு வருஷம் போனா அபி குட்டி கூட கல்யாணம் என்றார் செங்கதிர்ச்செல்வன் அப்பறம் வீடே காலியாகிடும் என்று வருந்த.

என்னது அபிக்கு கல்யாணமா???? என்று அவினாஷ் உள்ளே நுழைய

ஆமா கண்ணு , கல்யாண வயசு வந்துடுச்சினா பண்ண வேண்டிதா என்று சுந்தரவல்லி பாட்டி கூற . அபி அவரை முறைத்துக்கொண்டிருந்தாள் இந்த பாட்டிக்கு இதே வேலை என்று மனதில் நினைத்து கொண்டிருக்க .

விடு அபி பாத்துக்கலாம் என்று அவினாஷ், அபியிடம் செய்கை செய்ய அபியும் சிரிக்க தொடங்கினாள்.

அபிக்கும், அவினாஷிற்கும் அதிக வயது இடைவேளை . அவினாஷ் எப்பொழுதும் அபியை பத்திரமாக பார்த்துக்கொள்வான். அவர்கள் நல்ல நண்பர்களும் கூட. முறைப்படி அவினாஷ் அபிக்கு மாமா, ஆனால் இருவரும் அப்படி பழகியதே இல்லை. அவந்தியை போல் தான் அபியும் அவினாஷிர்க்கு.

ஹே அவி கார்த்தி எப்போ வரான் என்ற அவந்தியிடம்,

வீக்கெண்ட் என்று கூற ,

அபி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள், கார்த்திக் என்ற பெயரை கேட்டால் அபி அமையாகிவிடுவாள். அவினாஷும் முறைப்பையன் தான் , ஆனால் கார்த்திக் அவினாஷ் போன்று அவ்வளவாக பேசியதில்லை . அதனால் அபியும் அதிகம் பேசமாட்டாள் . அபி, அவினாஷ் மற்றும் கார்த்திக்கிடம் அதிகம் பேசக்கூடாது என்று அர்ஜுனன் கூறி இருக்க .

யாரவது முறை பையனிடம் எப்படி பேசுகிறாள்? என்று நினைத்துவிடக்கூடாது என்று கூறியிருந்தார் .

அதை இன்றும் பின்பற்றுவாள் அபி. பெரியவர்களும் அதை கண்டுக்கொள்ள மாட்டார்கள். படுக்கையறைக்கு செல்லும் பொழுது ரமா அபியை அழைக்க ,

சொல்லுங்க அத்தை ,,என்ற அபியின் காதை திருகி மதியம் எடுத்துட்டு போன சாப்பாடு சாப்பிடவே இல்ல என்க.

இல்லை அத்தை, ப்ராஜெக்ட் ஒர்க் , நறிய வேலை என்று காரணங்களை அடுக்க .

ஒழுங்கா சாப்பிடு கண்ணா, இளச்சிட்டே போற என்று கூற .

ஓகே அத்தை .. என்று விட்டு ரூமிற்க்கு வர, அங்கு அவந்தி அவளுடைய வருங்கால கணவராகிய ,அஷ்வினிடம் பேசிக்கொண்டிருந்தாள். அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று சிட்அவுட் இல் இருந்த ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு அதிரைக்கு அழைத்தாள்.

நீண்ட நேரம் அழைப்பு மணிக்கு பிறகும் ,அலைபேசி எடுக்கவில்லை .

என்னதான் வீட்டில் அனைவரும் அபியை நன்கு பார்த்துக்கொண்டாலும் , அபிக்கு தன் தாய்தந்தையோடு இருக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும் . எப்பொழுதும் அல்ல அவரவர் பிள்ளைகளுக்கு ஊட்டும் பொழுது, தலை துவட்டும் பொழுது, என பல சமயங்களில் தோன்றும்.

கணவரை பார்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் பிள்ளையை பார்த்துக்கொள்வதும் முக்கியம் தானே என்று நினைத்துக் கொள்வாள் . நாளை வருவதாக ஆதிரை கூறி இருந்ததால் தான் அழைத்தாள் .

ஆதிரைக்கு , பாசம் இல்லாமல் இல்லை. ஆனால் நம்மை விட அவளை அனைவரும் நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்துக்கொள்வார் . நீண்ட நேரமாகியும் , அபி வராததால் வெளியே வந்த அவந்தி , அபியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள் .

அந்த வார இறுதியும் வர, குலதெய்வ கோவிலுக்கு அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். அபி இன்னும் எழவே இல்லை. உள்ளே வந்த கௌசல்யா அபி குட்டி இன்னும் நீ எழவே இல்லையா தடவை என்று எழுப்ப வேகமாக தயாராகி கொண்டிருந்தாள் .

அனைவரும் அபிக்காக முற்றத்தில் காத்திருக்க( கார்த்திக் உற்பட). அழகு பதுமையாக மாடியில் இருந்து இறங்கி வந்தாள் அபி. அன்று தான் முதன்முதலாக அபியின் இதயம் துடிக்கும் ஓசையை அவளே உணர்ந்தாள்.
 
கார்த்திகேயன் ஹீரோவா அப்ப அபிட்ட போன்ல ஹலோ சொன்ன அஜய் யாரு????
 
Top