Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 21.1

Advertisement

நதியோட்டம் – 21

முதலிரவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடந்துகொண்டிருந்தது ஆகாஷ் ரூமில்.
மதியம் வந்த போதும் அடுத்து ஷைலஜா அறையில் வைத்தும் அவனை பார்த்த தீட்சண்யா அதன் பின் டைனிங்ஹாலில் தான் பார்க்கிறாள்.

அவனோ இவளை பார்த்ததும் ஒரு கேவலமான புன்னகையை சிந்திவிட்டு சாப்பிடுவதில் முனைப்பாக தீட்சண்யாவிற்கோ இதுவரை தன்னை பார்த்து சிரித்த அந்த முகம் இதுதானா என்னும் அளவிற்கு வித்தியாசம் தெரிந்தது.
ஒப்புக்கு கூட புன்னகைக்காமல் அமைதியாகவே இருந்தவளை பேச்சில் இழுத்தது விசாலி தான். அப்போதும் தனது மாமனாரை காணவில்லை. தன் குடும்பத்தை தேடவும் இல்லை.

அதை வைத்துக்கொள் இதை சாப்பிடு என கவனித்து தள்ளிவிட்டார். சாப்பிட்டு முடிந்ததும் தனதறைக்கு சென்றான் ஆகாஷ். அதை கண்டுகொண்டாலும் இருக்கையை விட்டு எழுவேனா என்பது போல ஆணியடித்ததை போல அங்கேயே அமர்ந்திருந்தாள்.
அதற்கு மேல் பொறுமை இல்லாத விசாலி, “தீட்சண்யா, சாப்பிட்டாச்சா? நல்ல நேரம் போய்ட்டே இருக்குமா...” எனவும் தான் எழுந்து வந்தாள்.
அவளை அழைத்து பூஜையறையில் நிறுத்தியவர், “இங்க பாரும்மா, உன்னோட கோவம் எனக்கு புரியுது. ஆனா என்ன செய்ய? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இனி என் பிள்ளை மனசு நோகாம நடந்துக்கறதுதான் உன்னோட கடமை. அதை நீ பொறுப்பா செய்யனும்...”

“இரண்டாந்தாரம் என்றாலும் என் பையனோட எங்கயும் சபையில நிக்க போறது நீதானே? எங்க குடும்பத்துக்கு வாரிசை கொடுக்க போறதும் நீ தானே? சீக்கிரமா என் பிள்ளைக்கு ஒரு பிள்ளையை பெத்துக்குடுக்கிற வழியை பாரு. புரிஞ்சு நடந்துக்கோ. அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது...”

முதலில் ஆரம்பிக்கும் போது மென்மையாக பேசியவர், முடிக்கும் இடத்தில் மிரட்டல் கலந்த அதிகாரத்தோடு முடித்தார். தீட்சண்யா பதில் எதுவும் பேசவில்லை. மீண்டும் தெய்வத்தை வணங்கிவிட்டு திரும்ப அங்கே மாமனார் ஒரு இகழ்ச்சியான பார்வையை அவள் மீது வீசியபடி நின்றிருந்தார்.

“சொல்றதெல்லாம் சொல்லிட்டியா விசாலி. ரொம்ப முரண்டு பிடிச்சா நடக்குறதே வேற. தெளிவா புரியவை...” ஏளனம் நிரம்பி வழியும் குரலில் துவேஷமும் சரிபங்கு இருந்தது.
“அதெல்லாம் சொல்லிட்டேன். நீங்க போங்க வரேன்...” என கணவனை அனுப்பினார் விசாலி.
ஆகாஷின் தந்தை பேச்சு மகனின் மனைவியிடம் பேசுவதை போல இல்லை. எதையும் கண்டுகொள்ளாமல் நின்றவளை மங்களத்தை அழைத்து ஆகாஷின் அறையில் விட்டுவர சொல்லியனுப்பினார்.

அறையின் வாயிலை நெருங்கியதும் மங்களம், “சின்னம்மா, நீங்க கேட்டது எல்லாம் வச்சிட்டேன். எனக்கென்னமோ பயமா இருக்குங்கம்மா...” என பதற,
“மங்களம்மா, தேங்க்ஸ். அப்டியே எனக்கு இன்னொரு உதவியும் நீங்க செய்யனும். என்னோட தங்கச்சியை என் தங்கச்சியை மட்டும் பத்திரமா பார்த்துக்கோங்க. அவளை நாளைக்கு என்னோட ப்ரெண்ட்ஸ் வந்து கூட்டிட்டு போய்டுவாங்க. அதுவரைக்கு பார்த்துக்கோங்க...”

அவள் எதற்கு சொல்கிறாள் என புரியவில்லை என்றாலும் உடனே சம்மதம் தெரிவித்தார் மங்களம். அவரை ஆரத்தழுவிய தீட்சண்யா,
“உங்களோட மனசு கூட என்னை பெத்தவங்களுக்கு இல்லாம போச்சே?. உங்க உதவிகளுக்கு எல்லாமே நன்றின்ற ஒரு வார்த்தையால் நிரப்பிட முடியாது. ஆனா நான் இருக்கிற நிலமையில அதை தவிர வேற சொல்லவும் முடியலை...”

இனி தனக்கு எந்த நகையும் தேவையில்லை என நினைத்தவள் நொடியில் கழுத்தில் கிடந்த செயினை கழட்டி அவரிடம் கொடுக்க அதை மறுத்தவர்,
“அசிங்கப்படுத்திடாதீங்க சின்னம்மா, எனக்கு இப்பவும் உங்களை காப்பாத்த முடியலைன்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா?...” என அழுதேவிட்டார் மங்களம்.

“சரி அழாதீங்க. நான் குடுக்கலை போதுமா? விடுங்க. அவன் வந்திட போறான்?...”
“அவரு அந்த பொண்ணை பார்க்க போய்ருக்காரு. நீங்க உள்ள போய் இருங்க. நான் போறேன் சின்னம்மா...” என நகர்ந்தவரை பார்த்துகொண்டிருந்தவள் அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அந்த அறையின் பிரம்மாண்டமும் அழகும், அலங்காரமும் எதுவும் அவளை ஈர்க்கவில்லை.

உள்ளம் முழுவதும் உலைகலனாக கொதித்துக்கொண்டிருந்தது. இந்த நொடி ஆகாஷ் இங்கிருந்தால் பார்வையிலேயே எரித்திருப்பாள். அவனது வருகைக்காக காத்திருந்தவள் மங்களம் கொண்டுவந்த பொருட்களை கவனித்துகொண்டாள்.
கதவு திறக்கும் ஓசை கேட்டதும் சுதாரித்தவள் தான்னுடைய போராட்டத்தை தொடங்கிவைத்தாள்.
“ஹாய் டார்லிங். ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிட்டு இருக்கியா?...” என கேட்டுக்கொண்டே நெருங்கியவனின் நடையில் இருந்த தள்ளாட்டத்தை நன்கு கவனித்தாள்.

கண்கள் போதையில் சிவப்பேறி பார்க்கவே கர்ணகொடூரமாய் காட்சியளித்தது. பார்வையில் கூட இத்தனை வக்கிரம் இருக்குமே அன்றுதான் கண்டாள்.
நேற்று தெரிந்த ஆகாஷிற்கும் இவனுக்கும் நூறு வித்தியாசங்களை கடகடவென கூறிவிடுவாள். எப்படியெல்லாம் என்னை ஏமாற்றிவிட்டான்? தன்னுடைய கம்பீரத்தை மீட்டேடுத்தவள் துணிந்து நின்றாள்.

ஆனாலும் அவனது பார்வையில் உடல் கூச எழுந்து பின்னால் செல்லபோனவள் மீண்டும் நின்ற இடத்திலேயே நிமிர்வாக நின்றாள்.
எதற்கு பின் செல்ல வேணும்? ஏன் பின்வாங்க வேண்டும்? என்ன செய்துவிடுவான் என்னை?
“என்ன குடிச்சிருக்கேன்னு கோவமா? எஸ். நான் குடிப்பேன். அதையெல்லாம் நீ கேட்க கூடாது. பொண்டாட்டியா அடக்கமா எனக்கு அடங்கி போகனும். ஷைலஜா பத்தி தெரிஞ்சிருச்சு போல?...”

அவனது கேள்வியில் ஒரு ஷணம் திகைத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் கல்லாக நின்றாள்.
“தெரிஞ்சதை பத்தி நான் ஒன்னும் கவலைப்படமாட்டேன். என்ன உங்கம்மா அவ்வளோ அட்வைஸ் பண்ணிருக்காங்க உனக்கு. சண்டை போட்டியோ? மஞ்சரி பத்தி ஏதோ சொன்னாங்களாம்?...”
மஞ்சரி பற்றி பேசவும் உள்ளுக்குள் துடித்தவள் எதற்கும் அசைந்துகொடுக்காமல் நின்றவளை ஊடுருவிக்கொண்டே,
“என்ன எனக்கு அவளையும் கட்டி வைக்க உங்கம்மா பிரியப்படறாங்களோ? நோ அப்ஜெக்ஷன். உன்னளவுக்கு இல்லைனாலும் கண்ணு தெரியலைன்ற குறையை தவிர வேற ஒண்ணுமே இல்லை. நான் பார்த்துக்கறேன்...”

அவனது பேச்சில் இன்னமும் தன் முடிவு வலுப்பெற அவனை முறைத்தாள் தீட்சண்யா.
“என்ன முறைப்பு? என்னை என்னடி செய்யமுடியும் உன்னால? ...”
“என்ன அழகுடி நீ? என்னமோ உன்னை பத்தி விசாரிச்சதுல நீ பெரிய அப்படின்னு சொல்லிக்கிட்டாங்க. பார்த்தியா அரைமணி நேர பேச்சுல உன்னை மடக்கிட்டேன். என்ன ஒண்ணு எங்கம்மா உன்னை கட்டிக்கிட்டாளே ஆச்சுன்னு சொல்லிட்டாங்க...”
“ம் குழந்தை வேணுமாம். அவங்களுக்கு ஒரு வாரிசை பெத்துக்கொடுத்துட்டு இந்த வீட்ல ஒரு ஓரமா ஒதுங்கி இரு. அப்பப்போ எனக்கு மனைவியாவும் இரு. புரியுதா?...”

கோணல் சிரிப்போடு நெருங்கி வர அவனது மனைவியாக இருந்தால் போதும் என்ற அன்றைய வார்த்தைக்கான அர்த்தம் இன்று விளங்கியது. அதுவரை அமைதியாக இருந்தவள் எரிமலையாக வெடிக்க ஆரம்பித்தாள்.
“அங்கயே நில்லு. கிட்ட வந்த கொன்னுடுவேன்...” என சீற்றத்தோடு கூற,

“யாரு நீ என்னை கொல்லுவியா?. நீ சொல்லி நான் கேட்டுடுவேனா? என்னை பெத்தவங்களே என்னை அடக்கினதில்லை. உன் கிட்ட நான் அடங்குவேனா?...” என வெடிசிரிப்போடு மீண்டும் முன்னேற,
“நான் தீட்சண்யாடா. தீ மாதிரி. என்னை நெருங்கனும்னு நினச்சாலே சாம்பலாக்கிடுவேன்...”

“என்ன பண்ண முடியும் உன்னால? முடிஞ்சதை பார்த்துக்கோ. நீ என்னதான் கத்தி கதறினாலும் இந்த ரூம் தாண்டி எந்த சத்தமும் வெளியில கேட்காது...” குளறலாக பேசிக்கொண்டே அவளது மணிக்கட்டை பிடிக்க ஆவேசம் வந்தவளை போல தன் கையில் பதிந்திருந்த அவனது கரத்தை பிடித்து முறுக்கியவள் பின்னால் முதுகில் ஓங்கி மிதித்தாள்.

போதையில் இருந்தவனால் அவளது திடீர்தாக்குதலுக்கு பதிலளிக்கமுடியாமால் இரண்டே அடியில் சுருண்டுவிழுந்தான். மறைத்து வைத்திருந்த கயிறாய் எடுத்து அவனது கைகளையும், கால்களையும் பின்னால் கட்டியவள், கட்டிலின் காலோடு அவனை சேர்த்து கட்டினாள்.

“ஏய்? எதுக்காக என்னை கட்டிவச்சிருக்க? இதுக்கெல்லாம் சேர்த்து நீயும் உன் குடும்பமும் அனுபவிப்பீங்க? ஒழுங்கா என்னை கழட்டி விட்டு. இல்லை உன் தங்கையோட போட்டோஸ் எல்லாம் நெட்ல போட்டுடுவேன்...”

அவளை பயம் காட்டவென பொய்யாய் ஒரு விஷயத்தை அவன் கூற அதுவே அவனுக்கு எமனாக போனது.
“ச்சீ பொறுக்கி ராஸ்கல். நீ உயிரோட இருந்தாதான நெட்ல போடுவ. உன்னை விட்டா இன்னும் எத்தனை பேரோட வாழ்க்கையை அழிப்பியோ? யாரோட உயிரை எல்லாம் எடுப்பியோ?. உன்னை விடவே மாட்டேன்டா...”

ஆவேசத்தோடு அங்கிருந்த கத்தியால் அவனின் உடல் முழுவதும் கோடுகிழிக்க ரத்தம் பீறிட்டு கொட்டியது.
வலியால் அலறித்துடித்தவனை பார்த்தவளது வெறி இன்னும் அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்ய மங்களம் கொண்டுவந்து வைத்திருந்த மிளகாய்பொடி, உப்பு என அனைத்தையும் அவனின் உடல் முழுவதும் பூசிவிட்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாக ரத்தமும் வெளியேற உடலில் உள்ள வலியும் சேர்ந்து அவனது உயிரை குறைத்துகொண்டிருந்தது. அவனை பார்த்து அவன் வேதனையை, கண்ணீரை பார்த்து சந்தோஷப்படமுடியாமல் தன்னுடைய ஏமாற்றம் இன்னும் அவளை அலைகழித்தது.
Nice
 
Top