Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 23.1

Advertisement

ஹஹ...ஹர்ஷு ...சான்ஸ்ஸே இல்லை. நீயொரு மாஸ்டர் பீஸ் தான் கண்ணம்மா ??
 
நதியோட்டம் – 23 (1)

விடிந்த பின்பும் படுக்கையிலேயே விழித்திருந்த ஷக்தி ஹர்ஷூ எழுவதற்காக காத்திருந்தான். அவளிடம் அசைவு தென்படவும் தான் தூங்குவது போல பாவனை செய்ய ஆரம்பித்தான்.
தூக்கம் விலக்கி எழுந்தமர்ந்தவளுக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த கணவனை பார்த்ததும் முந்தய நாள் இரவு நடந்த அனைத்தும் கண்முன் படமாக விரிந்தது. தன்னை தேடி ஷக்தி வந்ததிலிருந்து தன்னை அடித்துவிட்டு அணைத்தது வரை அனைத்தையுமே உணர ஆரம்பித்தாள்.

அவன் மீது உள்ள கோவம் ஆர்ப்பரித்து அலைமோத தன்னை அடக்கிக்கொண்டவள் அமைதியாக அவனை விட்டு விலகி எழுந்து குளியலறைக்கு சென்றுவிட்டாள்.
தன்னவளிடமிருந்து பெரிதாக சண்டை எதையும் ஷக்தி எதிர்பார்க்கவில்லை என்றாலும் தன்னை கண்டுகொள்ளாமல் அவள் எழுந்து சென்றது கவலையை அளித்தது.

திருவேங்கடமும் சகுந்தலாவும் கூட ஷக்தி அழைத்ததன் பெயரில் காலையிலேயே வந்துவிட்டனர். இரவு நடந்ததையும், தீட்சண்யா விஷயம் ஷக்திக்கு தெரிய வந்ததையும் பரணியின் மூலமாக அறிந்துகொண்ட சகுந்தலா திருவேங்கடத்திடமும் சொல்லிவைத்தார். ஆனால் ஷக்தியிடம் இதைப்பற்றி இப்போதைக்கு பேசவேண்டாம் என விட்டுவிட்டனர்.
அன்றைய விழாவில் கூட அனைவரிடமும் நன்றாக பேசினாலும் ஷக்தியிடம் மட்டும் ஒட்டாத தன்மையை அவன் மட்டும் உணரும் வகையில் வெளிப்படுத்தினாள்.

பொறுமையாக அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அமைதி காத்த ஷக்தி மதியத்திற்கு மேல் கடுப்பாகி அனைவரின் கவனத்தை கவராமல் அவளை தனியாக இழுத்து சென்றான்.
அவனது பிடியில் இருந்து இலகுவாக விலகிவிடலாம் தான். ஆனாலும் ஹர்ஷூ அதை செய்யாமல் அவனின் போக்கில் சென்றாள்.
மாடியில் உள்ள அவளது அறையில் நுழைந்து கதவை தாளிட்டு திரும்பிய ஷணம் ஹர்ஷூவே பேச ஆரம்பித்தாள்.
“நீ எனக்கிட்ட பேசின வார்த்தைகளை என்னால மறக்கவே முடியாதுன்னு தோணுது கௌரவ். ஆயுசுக்கும் அது என் மனசை அரிச்சிட்டு இருக்கும். மீறி உன்னோட நான் வாழ்ந்தா என்னோட மனசாட்சியே உன்னோட வாழ்க்கைய வீணடிச்சிட்டேன்ற குற்ற உணர்வை குடுத்து என்னை என்னோட வழியில போகவிடாம இங்கயே தேங்க வச்சிடும்...”

“ஒரு நொடி இடைவெளி விட்டவள், “ஐ நோ கௌரவ். உனக்கு இப்போ என்னுடைய கடந்தகாலம் தெரிஞ்சிருக்கும். என்னோட தீட்சண்யா பத்தி தெரிஞ்சிருக்கும்...”
இதை சொல்லும் பொழுதே ஹர்ஷூவின் முகத்தில் அப்படி ஒரு வேதனை மண்டியது. ஆனாலும் சமாளித்தவள்,
“எனக்கு ஒரே இடத்துல தேங்கின குட்டையா வாழ இருப்பம் இல்லை. என்னோட தியா விருப்பப்படி நான் ஓடிட்டே இருக்கிற நதியா தான் இருக்க விரும்பறேன். உன்னோட இருந்தா அது சாத்தியமாகாது. சோ உன்னோட லைப் ல இருந்து நான் ரிலீவ் ஆகிக்கறேன். நீ வேற ...”

“ஷட் அப் ஹர்ஷு. இதுக்குமேல ஒரு வார்த்தை பேசின ராஸ்கல் தொலைச்சுக்கட்டிடுவேன். என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ஹர்ஷூ...”
தனது கோவத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போராடியவன் கொந்தளித்த உள்ளத்தோடு பேச ஆரம்பித்தான்.
“வாட் யூ சே? நீ என்ன சொன்னாலும் கேட்டு உன்னோட விருப்பத்துக்கு எல்லாம் வளைஞ்சு குடுப்பேன்னோ, உன்னை என்கிட்டே இருந்து விலக அனுமதிப்பேன்னோ எப்படி நீ எதிர்பார்த்த? கோவத்துல நான் பேசினது தப்புதான். அதுக்காக உன்னை விட்டுடுவேன்னு கனவு காணாத?...”

அவளை இழுத்து தன்னருகில் நிறுத்தியவன், “இந்த ஜென்மத்துல என்னோட காதலும் வாழ்க்கையும் உன்னோட தான். உன்னோட மட்டும் தான். மைன்ட் இட்...”
ஷக்தி பேச பேச அவனையே ஆழ்ந்து பார்த்திருந்தவள் பார்வையில் தன்னிடம் கோவமாக பேசுகிறானே என்ற அச்சம் கொஞ்சமும் இல்லை அவளுக்கு. மெச்சுதலாக அவனை ஒரு பார்வை பார்த்த ஹர்ஷூ,

“வெல். நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சுக்கத்தான் நான் அப்படி பேசினேன் கௌரவ்...” சர்வ சாதாரணமாக கைகளை விரித்து காட்டி சொல்லியவள் அவனை எச்சரிக்கும் பார்வையொன்றை பார்த்து,

“நீ மட்டும் சரின்னு சொல்லிருந்த மவனே கடிச்சு குதறிடுப்பேன். இந்த ஹர்ஷூ உன்னை அவ்வளவு ஈஸியா விட்ருவான்னு கனவுல கூட நினைப்பு கூட வரக்கூடாது உனக்கு...” என்றுவிட்டு அப்போதுதான் நியாபகம் வந்தது போல,
“என்ன சொன்ன? இந்த ஜென்மத்துலையா? அப்போ அடுத்த ஜென்மம், அதுக்கடுத்த ஜென்மம் வேற யாரோடயாச்சும் வாழ்க்கையை நிம்மதியா வாழ்ந்துடலாம்னு இப்போவே ப்ளான் பண்ணிட்டியா? தொலைஞ்ச நீ...”

“எந்த ஜென்மமா இருந்தாலும், எத்தனை ஜென்மமா இருந்தாலும் இந்த ஹரிதான் உனக்குன்னு உன்னோட தலையெழுத்து சொல்லுது. மனசை தேத்திக்கிட்டு வேலையை பாரு. போ போ...” என்றவளை பார்த்து அவன் சிரிக்க அதில் முகத்தை தீவிரமாக்கிக்கொண்டவள்,
“இப்போவும் சொல்றேன் கௌரவ், என்னால நீ பேசினதை மறக்கவே முடியாது. இதுக்காகத்தான் நான் பயந்தேன் கௌரவ். எனக்கு உன்னை பார்த்ததுமே மனசுக்குள்ள ஒரு ப்ளாஷ். கல்யாணம் ஆனதுமே உங்ககிட்ட சொல்லிட்டேன் இதை...”

“என்னோட நடவடிக்கைகளை என்னால மாத்திக்க முடியாது கௌரவ். எல்லாம் தெரிஞ்சும் நீ பேசினதை என்னால தாங்கிக்க முடியலை. இப்போவும் எனக்கு அந்த வார்த்தை காதுல கேட்டுட்டே இருக்கு. அது கேட்கறப்போ எல்லாம் என்னோட மனசை வலிக்க செய்யுது...”

“நேத்து நீ என்னை அடிச்ச பாரு. அது நான் செஞ்ச தப்புக்கான தண்டனை. உன்கிட்ட எதுவும் சொல்லாம நான் கிளம்பியிருக்க கூடாதுதான். ஆனாலும் அப்போ எனக்கு உன்கிட்ட சொல்லிட்டு கிளம்பனும்னு தோணலை...”
“இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட என்னுடைய தியா என்னை விட்டு போன நாள்ல யாரோடையும் ஒரு வார்த்தை கூட பேசினதில்லை. ஆனா நேத்து உன்னை பார்த்ததுமே என்னால என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை கௌரவ்...”

“அப்போ நான் தியாவை விட உன்னை தானே பெருசா நினைக்கிறேன். சொல்லு கௌரவ். உன்னால புரிஞ்சிக்க முடியுதா?...” என்றவள் அவன் ஏதோ சமாதானமாக கூற வர அவனை விலக்கி,
“நீ என்னை கன்வின்ஸ் பண்ணினாலும் என்னால் ஏத்துக்க முடியாது கௌரவ். என்னோட மனசு எப்போ சமாதானம் ஆகுதோ அன்னைக்கு தான் முழுமனசா உன்னோட பேசமுடியும். அதுவரை என்னை கம்பல் செய்யாதே...”

முடிவாக கூறியவளை அறையை வெளியேற விடாமல் அணைத்துக்கொண்டவன் சில நிமிடங்களுக்கு பிறகே விட்டான். அவனின் அணைப்பிற்குள் அடங்கிய ஹர்ஷூ அவனை விலக்கவும் இல்லை. அதே சமயம் அவனின் செயலை ஏற்கவும் இல்லை.
உணர்வுகள் துடைக்கப்பட்ட பாவத்தில் இருந்தது அவளது முகம். அதை பார்த்தவன்,
“நாம ஊருக்கு கிளம்பலாம் ஹர்ஷூ. அப்பா தனியா இருப்பாங்க. இன்னைக்கு நைட் ப்ளைட்க்கு சொல்லிட்டேன். இப்போ கீழே போகலாம்...”

அதற்கு மேல் அங்கே நிற்காமல் கீழே இறங்கி சென்றுவிட்டாள் ஹர்ஷூ. அவளை பின்தொடர்ந்து வந்தவன் அனைவரிடமும் இதை தெரிவித்துவிட்டு மாலையே அவளை அழைத்துக்கொண்டு கிளம்பியும் விட்டான்.
புருஷோத்தமனிடம் வேறு ஏதோ காரணங்களை கூறி ஷக்தி சமாளித்ததால் ஹர்ஷூவிடம் அவர் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் ஹர்ஷூவை பார்த்ததும் அவளது செயலுக்கான பிடித்தமின்மையை அவரது முகம் சிலநொடிகள் பிரதிபலிக்கத்தான் செய்தது.
அதையெல்லாம் கண்டுகொண்டாலும் அவரிடம் எந்த தன்னிலை விளக்கமும் கொடுக்க தோன்றவில்லை ஹர்ஷூவிற்கு.

அடுத்து வந்த நாட்களில் தாமரையிலை தண்ணீரை போல ஒட்டாமலிருக்க ஹர்ஷூ முயல அவளது முயற்சிகளை வெகு சாமர்த்தியமாக முறியடித்தான் ஷக்தி.
அவளிடம் தான் பேசியதற்கு மன்னிப்பை யாசிக்கவும் இல்லை. அதே சமயம் அவளிடம் தனது மனதை, தன் பக்கம் இருந்த நியாயத்தை உணரவைக்கவும் மறக்கவில்லை.

வாழ்க்கை என்றால் ஆயிரம் மாற்றங்கள் வருவது இயல்புதானே? எதிர்காற்றில் பயணப்படும் கைகள் தானாக அதை கையாள சிறகாக தானே மாறியாகவேண்டும்? அதை போல என்னதான் ஹர்ஷிவ்தா முரண்டு பிடித்தாலும் அவளது எண்ணம், பார்வைகள் இதயம் அனைத்தையும் ஷக்தியின் வசமே சுற்றியது.

ஷக்தியின் பொறுமையே ஹர்ஷூவிற்கு அசட்டு துணிச்சலை தந்தது. வேண்டுமென்றே தான் கொடுத்த அத்தனை இன்னல்களையும் உடைத்தெறிந்து நெஞ்சத்தில் தன்னை தாங்கும் தன்னவன் அவளது மனதில் உயர்ந்துநின்றான்.
ஆனால் சக்திக்கோ அவளிடம் தென்பட்ட அசாத்திய அமைதி அவனை என்னவோ செய்தது. மீனுக்குட்டியின் திருமணம் வேறு நெருங்கிக்கொண்டே இருந்தது. அதுவே உள்ளுக்குள் ஹர்ஷூ எந்த நேரம் என்ன செய்வாளோ என்ற ஒரு கலக்கத்தை ஷக்திக்கு கொடுத்து கொண்டிருந்தது.

அந்த சிவதாஸ் அவனுடைய நண்பர்களுடன் உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அதனால் திருமணத்திற்கு பத்துநாட்களுக்கு முன்பு வர இருப்பதாகவும் தகவல் கிடைக்க ஹர்ஷூவிற்கு மேற்கொண்டு என்ன செய்ய என யோசிப்பதிலேயே நாட்கள் நகன்றது.
இது ஷக்திக்கும் தெரியும். அதனால் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தான். அவன் வரும் வரை ஹர்ஷூ ஏடாகூடமாக எதையும் செய்து வைக்கமாட்டாள் என்று. அந்த நிம்மதியையும் அடுத்த இரண்டு நாட்களில் தவிடுபொடியாக்கினாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை டிபன் செய்துகொண்டிருந்த அன்னம்மாவிடம் கிட்சனில் வம்பளந்துகொண்டிருந்தாள் ஹர்ஷூ. புருஷோத்தமன் அப்போதுதான் வாக்கிங் செல்ல கிளம்பிக்கொண்டிருந்தார்.
Nice
 
Top