Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 23.2

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 23 (2)

இரண்டு வீடு தள்ளி இருக்கும் சரவணப்பெருமாள் கேட்டை திறக்கும் சப்தம் கேட்டு எட்டிப்பார்த்த புருஷோத்தமன் ஆச்சர்யம் அடைந்தார். என்றைக்கும் யாரிடமும் அளவோடு பேசும் பெருமாள், யாரின் வீட்டிற்கும் தானாக செல்லாதவர் இன்றைக்கு அவரே வீடு தேடி வந்ததில் வியப்பில்லாமல் போகுமா?
“வாங்க பெருமாள், என்ன சப்ரைஸ்?...” என மகிழ்ச்சியாக அவரை வரவேற்று கை நீட்ட அதை ஏற்காத பெருமாள்,
“உங்க டாட்டர்-இன்-லா எங்க மிஸ்டர் புருஷோத்தமன்?...” என விரைப்பாக கேட்கவும் கீழே கேட்ட அரவத்தில் ஷக்தி மாடியில் இருந்து வந்துவிட்டான்.

ஹர்ஷூவும் அதற்குள் கிட்சனை விட்டு வெளியேறி, “ஹாய் அங்கிள், நான் இங்கதான் இருக்கேன். உட்காருங்க அங்கிள்...” என வரை உபசரித்தவள்,
“அன்னம்மா ஜில்லுன்னு ஜூஸ் கொண்டுவாங்க பெருமாள் அங்கிள்க்கு. அப்டியே மாமாவுக்கும்...” என சப்தமாக கூறிவிட்டு புன்னகையோடு அனைவரையும் பார்க்க ஷக்திக்கு தெளிவாக புரிந்துபோனது.

நிச்சயம் ஏதோ வில்லங்கத்தை தன் மனைவியவள் இழுத்திருக்கிறாள் என்று. பூனைக்குட்டி தானே வெளியில் வந்து குதிக்கட்டும் என காத்திருந்தான்.
“ஏன் அங்கிள் இன்னமும் நின்னுட்டே இருக்கீங்க? உட்கார்ந்து பேசலாமே?...” என இன்னமும் அதே இன்முகத்தோடு பேச பெருமாளுக்கு பற்றிக்கொண்டுவந்தது.

“எவ்வளோ தைரியம் உனக்கு? என்னோட பொண்ணுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை வீட்டாரை பத்தி உன்னை விசாரிக்க சொன்னேனா? உன்னால என்னோட மகள் கல்யாணமே நின்னுடும் போல...” என ஹர்ஷூ மேல் எரிந்துவிழ ஷக்தி அதிர்ந்துவிட்டான்.

இவள் எப்போது இந்த வேலையை பார்த்தாள்? சிவதாஸ் வரும் வரை எந்த பிரச்சனையும் இல்லைன்னுதானே நினைத்தோம்? என எண்ணிக்கொண்டே புருஷோத்தமனை பார்த்தான்.
அவரோ நெஞ்சை பிடித்துகொண்டு பேயறைந்தது போல பரிதாபமாக ஹர்ஷூவை பார்த்த பாவனையை பார்க்கவே ஒருபுறம் சிரிப்பாகவும், மறுபுறம் பாவமாக போய்விட்டது ஷக்திக்கு.

அவரும் தான் மருமகள் செய்து வைத்திருக்கும் வேலைக்கு என்ன செய்வார்? ஷக்தியை பார்த்து புருஷோத்தமன் கடுகடுத்த முகத்தோடு முறைக்க அவரது பார்வையை தவிர்த்தான் ஷக்தி. ஆனால் ஹர்ஷூவோ,
“டென்ஷன் ஆகாதீங்க மாமா. பெருசா ஒன்னும் பிரச்சனை இல்லை...” என சமாதானம் செய்ய அவளிடம் பதில் பேசமுடியாமல் மகனது கெஞ்சலான முகம் தடுத்தது அவரை.

அதற்குள் பெருமாள் உடுக்கை இல்லாமல் ஆட ஆரம்பிக்க அவரது மனைவியும் மகளும் வேகமாக உள்ளே நுழைந்தனர்.
“எதுக்குங்க இங்க வந்து பிரச்சனை செஞ்சுட்டு இருக்கீங்க?...” என பெருமாளின் மனைவி லட்சுமி கேட்க,
“இந்த பொண்ணு என்ன காரியம் செஞ்சிருக்கு தெரியுமா லட்சுமி?...”
“எல்லாம் தெரியும்ங்க. நானே உங்களுக்கு போன் பண்ணினேன். லைன் கிடைக்கலை. அதுக்குள்ளே கோவிலுக்கு போய்ட்டு வந்திடலாம்னு நானும் ப்ரீத்தியும் கோவிலுக்கு போய்ட்டு இப்போதான் வந்தோம். இங்க உங்க சத்தம் வெளில வரைக்கும் கேட்கவும் இங்க வந்துட்டோம்...”

“என்னது? கோவிலுக்கா? இங்க உன் பொண்ணோட எதிர்காலமே மூழ்க போகுதுன்னு நான் இங்க போராடிட்டு இருக்கேன். நீ என்னடான்னா அசமந்தமா கோவிலுக்கு போய்ட்டு ஆடி அசஞ்சு வர...”

மாப்பிள்ளை வீட்ல இருந்து போன் பண்ணினாங்க லட்சுமி. இந்த பொண்ணு அவங்களை பத்தி விசாரிக்கிறேன்னு அவங்களை அவமானப்படுத்திருக்கு. அது நம்மால தான்னு அவங்க கோவமா பேசி இந்த சம்பந்தமே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு வருத்தப்பட்டு பேசிட்டாங்க தெரியுமா?...” அப்பாவியாக கூறிய பெருமாளிடம்,
“நானும் அதைத்தான் சொல்றேன். இந்த சம்பந்தமே வேண்டாம் நமக்கு. ஹர்ஷூ நமக்கு நல்லதுதான் செஞ்சிருக்கா...” என்ற லட்சுமியை புரியாமல் பார்த்தார் பெருமாள்.

“ஆமாங்க, நம்ம பொண்ணுக்கு வரன் வந்திருக்கிறதை பத்தி ப்ரீத்தி ஹர்ஷூக்கிட்ட சொல்லிருக்கா. அதை வச்சு ஹர்ஷூ விசாரிச்சா வரைக்கும் அந்த பையன் குடும்பம் கொஞ்சம் காசு, பணத்துல ஆசைவைக்கிறவங்க போல...”

“ஏற்கனவே அந்த பையன் வேற பொண்ணை விரும்பி, அந்த பொண்ணோட நிச்சயம் வரைக்கும் போய், நிச்சயதார்த்தம் நடக்கும் பொது ஆரம்பிச்ச வரதட்சனை பிரச்சனையால அந்த கல்யாணத்தை பையனோட அம்மா நிறுத்தியிருக்கு. அந்த பொண்ணோட குடும்பம் கொஞ்சம் ஏழைப்பட்டது போல...”

“அதனால அவங்களால இந்தம்மா கேட்ட வரதட்சணையை குடுக்கமுடியாம போச்சுன்னு விரும்பின பொண்ணை கூட அம்மா சொன்னதுக்காக மறந்துடுச்சு அந்த பையன். இப்படி அந்த அம்மாவோட பேராசைக்காக மனசால நினச்ச பொண்ணுக்கு துரோகம் பண்ணினவன் எப்படி நம்ம பொண்ணை வச்சு கடைசிவரைக்கும் காப்பாத்துவா?...”
“ஹர்ஷூ செஞ்சதுல என்ன தப்பு?... இப்போ சொல்லுங்க இந்த கல்யாணம் நின்னது நல்லதுக்குதானே?...” என அனைத்தையும் சொல்லி முடிக்க பெருமாளுக்கு தலை சுற்றியது.

“நீங்க பத்திரிக்கை அடிக்க ஆடர் குடுக்க போன கொஞ்ச நேரத்துல தான் ஹர்ஷூ வந்து எல்லா விஷயத்தையும் ஆதாரத்தோடு சொன்னா. எங்களுக்கும் அதிர்ச்சிதான்...”
“அதை சொல்ல உங்களுக்கு போன் செஞ்சா உங்க லைன் கிடைக்கலை. எனக்கு என் பொண்ணு தப்பிச்சிட்டான்ற நிம்மதி. அதான் கோவிலுக்கு போய் அர்ச்சனை செஞ்சிட்டு வந்தேன்...” என லட்சுமி விளக்கி முடிக்க ப்ரீத்தி ஹர்ஷூவின் கையை நட்போடு பற்றிகொண்டாள்.

பெருமாள் வந்து ஹர்ஷூவிடம் கை கூப்ப, “அங்கிள் தயவு செஞ்சு மன்னிப்பெல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்திடாதீங்க. ப்ளீஸ்...” என்றவளை பெருமையாக பார்த்தான் ஷக்தி.
“ஓகே ஓகே இப்போவாச்சும் உட்காரலாமே அங்கிள். கோவமெல்லாம் போய்டுச்சா?...” என இலகுவாக கேட்டவளிடம் சங்கோஜமான புன்னகையை சிந்திக்கொண்டே புருஷோத்தமனின் அருகில் அமர்ந்தார் பெருமாள்.

அனைவருக்கும் மாலை சிற்றுண்டியை எடுத்துகொடுத்து உபசரித்து அனுப்பியதும் புருஷோத்தமனின் பார்வையிலிருந்து தப்ப மாடிக்கு ஓடிவிட்டாள் ஹர்ஷூ.
இனி எங்கே வாக்கிங் செல்ல என அப்படியே அமர்ந்துவிட்டார் புருஷோத்தமன். செல்லும் வரை ஹர்ஷூவை பற்றி புகழ்ந்து தள்ளினார்கள் பெருமாளின் குடும்பத்தினர். அதில் அதிகமாக உஷ்ணம் ஏறியது புருஷோத்தமனுக்கு. அதை உணர்ந்தவன் போல ஷக்தியும் நைஸாக அங்கிருந்து நழுவ பார்க்க,

“ஷக்தி...” என்ற அவரது அழுத்தமான அழைப்பே அவனை கட்டிப்போட்டது. மீண்டும் அவனருகில் அமர்ந்தவனை தீர்க்கமாக பார்த்தார் அவனது தந்தை.
“என்ன ஷக்தி இதெல்லாம்? யாருகேட்டா இந்த சமூக சேவையை? இதெல்லாம் சரியில்லை. எனக்கு பிடிக்கவும் இல்லை. உனக்காக தான் நாம் பொறுமையாக இருக்கேன்...”

“அப்பா ப்ளீஸ்...” என இறைஞ்சுதலாக பார்த்தவனின் பார்வையில் கொஞ்சமும் இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
“ஹர்ஷூ அந்த பொண்ணோட ப்யூச்சரை சேவ் பண்ணிருக்காப்பா. இது எவ்வளோ பெரிய விஷயம். அதை நீங்க அப்ரிஷியேட் பண்ணனும். இப்படி அவள் செஞ்சதை தப்பு சொல்லிட்டு இருக்கீங்களே?...”

தான் இந்த விஷயத்தில் நிச்சயம் தன் மனைவியின் புறம் என்பதை தகப்பனாருக்கு கோடிக்காட்டிவிட்டான் ஷக்தி.
தீட்சண்யாவை பற்றி எப்போது அறிந்தானோ அப்போதே ஹர்ஷூவின் செயல்களுக்கும், முயற்சிகளுக்கும் தன்னால் முடிந்தவரைக்கும் உறுதுணையாக நின்று எந்த துன்பத்திலும் தன்னவளை சிக்கவிடாமல் அரணாக நின்று காப்பதென முடிவெடுத்துவிட்டான்.

இப்போது ஹர்ஷூ செய்ததிலும் அவனுக்கு முழு திருப்தி தான். எந்தவிதமான வருத்தமும் இல்லை.
என்ன ஒன்று. அவள் எந்தவிதமான பிரச்சனைகளையும் இழுத்து வந்துவிட கூடாது என்று மட்டும் ப்ராத்தித்துகொண்டான். ஆனால் அதற்கான ஆயுள் கம்மி என அப்போது அவன் உணரவில்லை.

பிரச்சனையை பெரிதாகவே இழுத்துவிட்டாள். அதுவும் ஷக்தியின் எச்சரிக்கையும் மீறி அவனது உயிருக்கு உலை வைத்தாள்.
சிவதாஸ் ஊருக்கு திரும்பிய அன்று ஷக்தியை சென்னையை விட்டு ஆள் அரவமற்ற ஒரு புறநகர் பகுதியில் ரத்தசகதியாக கண்டு உயிர்துடித்து போனாள் ஹர்ஷூ.

தன் கண்முன்னே தன் கணவனுக்கு நடந்த கோரவிபத்தில் நிலைகுலைந்து போய் அவனை காப்பாற்றும் வகையறியாமல் கதறி துடித்தாள் ஹர்ஷூ.
ஷக்தியின் இந்த நிலைக்கு காரணமான ஹர்ஷூவை புருஷோத்தமன் மன்னிப்பாரா?

தோழி தீட்சண்யாவின் மரணத்தை கண்டு தன் நிலைமறந்து பித்துபிடித்து பின் தெளிந்து திரும்பியவள்,
தன் உயிருக்கும் மேலான ஷக்தியின் நிலையை கண்கூடாக கண்டவளுக்கு மீண்டும் பழையபடி சுயம் மறக்கும் நிலை ஏற்படுமோ?


நதி பாயும்...
 
Top