Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 24.3

Advertisement

AshrafHameedaT

Administrator
Part 3

“கௌரவ் எழுந்திட்டயா? சாரி கௌரவ். ஐ லவ் யூ. சாரி. இனிமே நான் யாரோட பிரச்சனையிளையும் தலையிட மாட்டேன். ப்ராமிஸ் கௌரவ். நீ மட்டும் என்னை விட்டு போய்டாதே...” அவனது கரத்தில் தன் முகத்தை புதைத்துகொண்டு கதறியவளை பார்த்து அவனது உள்ளம் உருகியது.

ரொம்ப பயந்துட்டா போல என நினைத்தவன், “ஒண்ணுமில்லைடா ஹர்ஷூ, நான் தான் முழிச்சிட்டேனே, இன்னும் எதுக்கு அழற?...” என கடிந்துகொண்டவன்,
“எனக்கு மட்டும் நீ இப்படி ஐ லவ் யூ சொல்லுவன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா கல்யாணம் ஆனா மறுநாளே உன்னை கார்ல கூட்டிட்டு போய் கீழே தள்ளி விட்டிருப்பேன். தெரியுமா?...” என குறும்பாக கேட்க அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இன்னுமின்னும் அழுதுகொண்டே இருந்தாள்.

அவளை எப்படி அமைதிபடுத்த என தெரியாமல் விழிபிதுங்கியவன் பின் கெஞ்சி கொஞ்சு அவளை ஓரளவிற்கு சமாதானம் செய்தான்.
கொஞ்சம் ஹர்ஷூ நார்மலானதும் ப்ருத்வியின் நியாபகம் எழ சேகரை அழைக்குமாறு ஹர்ஷூவிடம் கூறினான். சேகரை அழைத்துவிட்டு அப்போதுதான் கவனித்த குடும்பத்தினரிடம் ஷக்தி கண்விழித்ததை கூறினாள்.

உள்ளே வந்த சேகரிடம் ப்ருத்வியை பற்றி கேட்க அவனையும் இதே ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருப்பதாகவும், அவனை சேர்ந்தவர்களுக்கு தகவல் கூறமுடியாமல் அவனது மொபைல் ஆக்சிடென்ட்டில் நொறுங்கிவிட்டதாகவும் கூறியவன் ப்ருத்வி இன்னும் ஆபத்துக்கட்டதை தாண்டாமல் இருப்பதையும் கூறினான்.

ஷக்தியால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடனே பரமேஷ்வரனை அழைத்து நடந்ததை கூறியவன் திருவேங்கடத்திடம் தனக்கு விபத்து என்று மட்டும் கூறி ப்ருத்வியை பற்றி இங்கு வந்த பின் சொல்லிக்கொள்ளலாம் என கூறினான்.
ப்ருத்வி மேல் கட்டுக்கடங்காமல் ஆத்திரம் பொங்கி எழ அதை தனது மருமகனிற்காக கட்டுப்படுத்திகொண்டவர் திருவேங்கடத்திற்கு அழைத்து ஷக்திக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் சகுந்தலாவையும் உடன் அழைத்துகொண்டு உடனே வருமாறு கூறிவிட்டார்.
அன்று மாலையே திருவேங்கடம் சகுந்தாலாவோடு ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்துவிட்டார். ஷக்தியை பார்த்து திற்றுவேங்கடம் புலம்ப சகுந்தலா ஒரு மூச்சு அழுதுதீர்க்க பரமேஸ்வரனை தவிர்த்து அனைவரும் அவர்களை சமாதானம் செய்தனர்.

ப்ருத்வியின் செயல் ஷக்தி பரமேஷ்வரன், சேகர் தவிர வேறு ஒருவருக்கும் தெரியவில்லை. அப்போதுதான் ஷக்தி திருவேங்கத்திடம் மெல்ல நடந்ததை எடுத்து கூறினான்.
தனது சந்தேகத்தையும் கூறியவன் சேகரிடம் அதற்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்க கூறினான். பரமேஷ்வரன் அதற்கு தேவையான உதவிகளை தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக செய்தார்.

திருவேங்கடமும், சகுந்தலாவும் உறைந்துபோய் நின்றிருந்தனர். அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. தனது மகனா இப்படி ஒரு பாவத்தை செய்தது என எண்ணி தலைகுனிந்தனர். மனதளவில் ப்ருத்வியின் மேல் வைத்திருந்த பாசமும் நம்பிக்கையும் செத்துவிட்டது.

திருவேங்கடத்தை அழைத்த ஷக்தி, “மாமா இது அவனா செய்யலை. நீங்க அவன் மேல கோவப்படாதீங்க. அவன் எப்படி இருக்கான்னு முதல்ல பாருங்க...” என எடுத்துகூற திருவேங்கடம் ஷக்தி கூறியதற்காக மகனை பார்க்க திரும்ப அவரை தடுத்தார் சகுந்தலா.
“நம்ம மகன் இங்க இருக்கும் போது நீங்க யாரை பார்க்க போறீங்க?...” உறுதியான குரலில் சகுந்தலா அழுத்தமாக கேட்க ஷக்தியும், திருவேங்கடமும் பதில் கூறமுடியாமல் மௌனிக்க பரமேஷ்வரனும் சேகரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

“நான் முன்னாடியே சொன்னது தான். ஷக்தியை நம்மோட மூத்த பிள்ளையா நினைச்சோம். இப்போ அவன் மட்டுமே நம்ம பிள்ளையா நினைக்க போறோம்...”
“என்னை பொறுத்தவரையில், இனி நம்மை பொறுத்தவரையில் ஷக்தி மட்டும் தான் நம்ம பிள்ளை. இந்த முடிவிலிருந்து நான் மாறவே மாட்டேன். நீங்களும் மாறமாட்டீங்கன்னு நம்பாறேன்...” என்ற குரலில் இந்த தீர்க்கம் திருவேங்கடத்தை கட்டிப்போட்டது.

ஷக்தியும் பரமேஷ்வரனும் எவ்வளவோ கூறியும் சகுந்தலா பிடிவாதமாக மறுத்துவிட்டார். அவரது பேச்சை திருவேங்கடத்தாலும் மீறமுடியவில்லை.
அடுத்து வந்த நாட்களில் ஒரு நாள் கூட ப்ருத்வியை பார்க்கவேண்டுமென எண்ணமே இல்லாதவர் போல நடந்துகொண்டார். சேகர் மட்டும் அவ்வப்போது சென்று பார்த்துவந்து அங்கிருந்த நிலவரங்களை கூறினான்.

ப்ருத்வியை அங்கு சேர்த்த ஐந்தாவது நாள் அவனுக்கு சுயநினைவு திரும்பி தன்னுடைய பெற்றோர்களுக்கு தகவல் கூற அங்கிருந்தவர்களது உதவியை நாட அவர்களோ திருவேங்கடத்திற்கும், சகுந்தலாவிற்கும் அழைக்க சகுந்தலாவோ அப்படி யாரையும் தங்களுக்கு தெரியாதென கல்மனதொடு கூறிவிட்டார்.

அதற்கு மேலும் பொறுக்காமல் ஷக்தியே சண்டையிட்டு சகுந்தலாவை சேகரோடு ப்ருத்வியை பார்க்க அனுப்பிவைத்தான். உடன் திருவேங்கடமும்.
ப்ருத்வியை பார்த்ததும் அவனிருந்த கோலம் தாயுள்ளத்தை பதறத்தான் வைத்தது. ஆனாலும் தன்னை நொடியில் சமாளித்துகொண்டவர் அவனை ஒட்டாத பார்வை பார்த்துவைத்தார்.

அந்த பார்வையே ப்ருத்விக்கு உள்ளுக்குள் குளிர் பரவியது. ஆனாலும் தைரியமாக “அம்மா...” என அழைக்க,
“அப்படி இன்னொரு தடவை நீ என்னை கூப்பிட்ட நானே உன்னை கொன்னுடுவேன். அம்மாவாம் அம்மா. என்னோட பிள்ளைகளை கொல்ல துணிந்த உன்னை போய் என்னோட வயிற்றில் சுமந்தேனே? நான் பாவிடா. நீ என்னோட பிள்ளையே இல்லை. இனி நீ எனக்கு வேண்டாம். என் முகத்திலேயே முழிக்காதே...”
பொரிந்து தள்ளியவர் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வெளியேற திருவேங்கடமும் அவனை பார்வையால் எரித்துவிட்டு சகுந்தலாவோடு சென்றுவிட்டார். அதன் பின் சேகர் தான் அவனை சமாதானம் செய்து சில உண்மைகளை விளக்க அதிர்ந்துவிட்டான் ப்ருத்வி.

-------------------------------------------------------------

அன்று சிவதாஸ் திருமணம். ஹர்ஷூவோ தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல நடமாடிக்கொண்டிருந்தாள். ஆனாலும் அவளது முகத்தில் நொடிக்கு நொடி தோற்றுப்போன உணர்வு தோன்றவும் அதை முயன்று மறைக்கவும் என தனக்குள்ளேயே போராடிக்கொண்டு வலிய தன்னை சாதாரணமாக காட்டிக்கொள்ள தவித்துகொண்டிருந்தாள்.

அன்று மட்டுமில்லை. ஷக்திக்கு விபத்து ஏற்பட்டதிலிருந்தே அத்திருமணத்தை பற்றி ஷக்தியே பேச்செடுத்தாலும் அதை தவிர்த்துவிடுவாள். அது அத்தனையும் தன் ஒருவனுக்காக என்பதை அறியாதவனா ஷக்தி.
அவளுக்கு எது நிம்மதியளிக்கும் என்பதை கூட உணராதவனா அவன்? அவளது நிம்மதிக்காக அவளுக்கே தெரியாமல் அவளை வெற்றியடைய செய்ய பல முயற்சிகளில் இருந்தவன் அவளை தோற்க விட்டுவிடுவானா?

டாக்டர் உதவியோடு சேகரோடு ஹர்ஷூவையும் நிஷாந்தையும், புருஷோத்தமனையும் திடுதிப்பென அழைத்துக்கொண்டு சரியாக முகூர்த்த நேரத்தில் அந்த திருமண மண்டபத்தில் போய் நின்றான்.
ஏற்கனவே ராமனின் அழைப்பின் பேரில் நண்பர்கள் என்ற முறையில் பரமேஷ்வரன், சுந்தரபரணி, திருவேங்கடம், சகுந்தலா, செல்வம், சரஸ்வதி என அனைவரும் ஏற்கனவே அங்கே திருமணத்திற்கு சென்றிருந்தனர்.

திடீரென சக்கர நாற்காலியில் வந்து சேர்ந்த ஷக்தியையும் அவனுடன் வந்திருந்தவர்களையும் புரியாமல் பார்த்தனர்.
இவர்களுடன் பின்னால் அசிஸ்டன்ட் கமிஷனர் ரஞ்சித்தும் அவரோடு சில காவலர்களும் வந்திருந்தனர்.
நேராக மினிஸ்டரிடம் சென்ற ரஞ்சித்,
“அட்டம் டூ மர்டர் கேஸ்ல உங்க பையன் சிவதாஸை அரஸ்ட் பண்ண வந்திருக்கோம் சார். இதோ அரஸ்ட் வாரன்ட். கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க ப்ளீஸ்...”

“வாட்? என்ன சொல்றீங்க சார்?...” என எம்.பி பதற மண்டபமே அதிர்ந்து எழுந்து சலசலக்க ஆரம்பித்தது.

“மிஸ்டர் கௌரவ் ஷக்திவேலையும் அவரோட மிசஸ் ஹர்ஷிவ்தாவர்ஷினியையும் கொலை செய்ய முயற்சி பண்ணி கார் ஆக்சிடென்ட் பண்ணினதும் இல்லாம, அதுக்கு அவர் ஏற்பாடு பண்ணின ஆளான ப்ருத்வியையும் சாட்சி இல்லாமல் செய்ய அவரையும் அதே இடத்துல கொல்ல முயற்சி செஞ்சிருக்காரு உங்க பையன்...”

“அதுக்கான எல்லா எவிடன்சும் பக்காவா எங்க கிட்ட இருக்கு. இதுல சம்பந்தப்பட்ட ப்ருத்வி அப்ரூவரா மாறி வாக்குமூலமும் குடுத்துட்டாரு...” எனவும் அதிர்ந்தது எம்பி மட்டுமல்ல ஹர்ஷூவின் குடும்பமும் தான்.

எம்பி சங்கர நாராயணன் மணவறையில் அமர்ந்திருந்த மகனை உடனே எழுப்பியவர்,
“என்ன சிவா இதெல்லாம்?...” என்று கர்ஜிக்க,
“அப்பா...” என பயத்தில் வெளிறிப்போய் நின்றான்.

“இவங்க சொல்றதெல்லாம் உண்மையா? உனக்கு அந்தளவிற்கு தைரியம் கிடையாதே? யாரோட தூண்டுதலில் நீ இந்த காரியத்தை செய்த?...” மகனை பற்றி நன்கு அறிந்திருந்தவர் சரியாக கணித்து வைத்து கேட்டார்.
“சதாசிவம் அங்கிள் தான் இந்த ஐடியாவை குடுத்தாருப்பா. அவர் சொல்றதை கேட்டு அவரோட ப்ளான் படி தான் இதை செஞ்சேன்...” என திக்கி திணறி கூற,

“சதாசிவம்?...” சற்றும் குறையாத கோவத்தில் கேள்வியாக உறும எங்கே அடித்துவிடுவரோ என பயந்தவன்,
“என்னோட ப்ரென்ட் ஆகாஷோட அப்பா தான் சதாசிவம்...” சொல்லியே விட்டான்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த ஹர்ஷூ சிவதாஸ் கூறிய பதிலில் கொதித்துவிட்டாள்.
சிவதாஸ் நிலை அடுத்து என்ன?
மீனுக்குட்டியின் திருமணத்தை நின்றுவிட்டால் அவளது எதிர்காலம்?
ஆகாஷை சேர்ந்தவர்களால் தான தங்களுக்கு மீண்டும் ஆபத்து என்பதை அறிந்த ஹர்ஷூவின் மனநிலை?

நதி பாயும்...
 
Top