Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai NAthiye Paainthodu 25.1

Advertisement

நதியோட்டம் – 25 (1)

சிவதாஸ் தலைகவிழ்ந்து இருக்க எம்பி சங்கரநாராயணன் பொறுமை இழந்தார்.
ஹர்ஷூ சவால் விட்டதன் பிறகு அவளை ஏதாவது செய்யவேண்டுமென்ற வெறி சிவதாஸை உசுப்பிக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்காக தைரியம் சுத்தமாக இல்லாமல் தனக்குள்ளேயே குமைந்துகொண்டிருந்தான்.

சேகர் வேறு தன்னுடைய வீடியோ ஆதாரம் எதோ அவனிடம் இருப்பதாக பீதியை கிளப்பியிருக்க அதில் வேறு நிமிடத்திற்கு நிமிடம் உதறல் எடுக்க அதன்பின் நிம்மதியே இல்லாமல் போனது சிவதாஸ்க்கு.
அதனால் கொஞ்சநாள் மனமாற்றத்திற்காக நண்பர்களோடு வெளியூர் சென்றால் தேவலாம் என தோன்ற அதன் படியே முதலில் கோவாவிற்கு கிளம்பினான். தந்தையிடம் வேலை விஷயமாக ப்ரெண்டை பார்க்க போவதாக கூறிவிட்டு சென்றுவிட்டான்.
தேவையான அளவிற்கு அங்கு சுற்றிவிட்டு நேராக முபைக்கு சென்றவன் தன் நண்பனுடன் தங்கியிருந்தவனை பற்றி விசாரிக்க அவனும் தன்னுடைய நண்பனுக்கு நண்பன் என்பதையும் அவனது பெயர் ப்ருத்வி எனவும் அறிந்துகொண்டு தன்னையும் அறிமுகப்படுத்திகொண்டான்.

முதலில் பேசும் போது எதார்த்தமாக பேசிக்கொண்டவர்கள் அங்கிருந்த நாளில் கொஞ்சம் நெருக்கமாகி ப்ருத்வி அங்கு வந்திருக்கும் காரணத்தை கூற முதலில் யாரென புரியாமல் பார்த்த சிவதாஸ் அதன் பின் ப்ருத்வி கூறிய இன்னும் சில விஷயங்களை வைத்து அது ஹர்ஷூவை பற்றி தான் என தெரிந்துகொண்டான்.

அப்போதும் கூற ப்ருத்வியை வைத்து பழிவாங்கவேண்டும் என எண்ணவில்லை சிவதாஸ். மும்பையில் இருக்கும் நேரத்தில் ஆகாஷின் தந்தை சதாசிவத்திடமிருந்து அழைப்பு வர கோவை சென்றவன் ஜெயிலிற்கு சென்று அவரை பார்த்தான்.
சிவதாஸிடம் கடைசி முயற்சியாக பேசலாமென அழைத்த சதாசிவம் தங்களை எப்படியாவது எம்பியிடம் சொல்லி காப்பாற்ற கூற சிவதாஸ் முடியாதென மறுக்க ஹர்ஷூவிடம் கொண்ட பிரச்சனையை வெளியில் தனக்கு தெரிந்தவர்களை வைத்து மோப்பம் பிடித்திருந்த சதாசிவம் அவனுக்கு இதில் உதவுவதாக கூறினார்.

முதலில் அதெல்லாம் வேண்டாமென மறுத்தாலும் பின் ஹர்ஷூ மேல் இருந்த வன்மமே ஜெயித்தது. அவரது யோசனையின் பெயரில் தான் இந்த ஆக்சிடன்ட் ப்ளான்.
அவரிடம் ப்ருத்வியை பற்றி கூறவும் உடனடியாக திட்டத்தை செயலாக்க சதாசிவம் திட்டம்போட்டு கொடுத்தார். அதில் ப்ருத்வியை பலிகடாவாக்க முடிவு செய்தார். அதற்கு பதிலாக தன்னை ஜெயில் வாழ்க்கையில் இருந்து விடுவிக்க உதவக்கோரி கேட்டுக்கொண்டார்.

இருவரது திட்டத்திற்கும் தூண்டுகோலாக இருந்தது ப்ருத்வியின் பேச்சு. அவனுக்கு ஹர்ஷூ மேல் இருந்த பழிஉணர்ச்சியும், ஷக்தி தனது பெற்றோரிடம் எடுக்கும் அதிகளவு உரிமை உண்டாக்கி இருந்த கோவமும் ப்ருத்வியை இதற்கு சம்மதிக்க வைத்திருந்தது.
சாட்சி இல்லாமல் இருக்க அதே போல ஒரு விபத்தை ப்ருத்விக்கும் உண்டாக்கிவிடலாம் என சதாசிவம் கூற சிவதாஸ் பேராசையில் ப்ருத்வியின் மனம் எங்கே ஹர்ஷூவின் விபத்திற்கு பிறகு மாறிவிடுமோ என அஞ்சி அன்றே அதே இடத்தில் சதாசிவம் உதவிக்கு வைத்துக்கொள்ள கூறிய ஆளை வைத்து வேலையை முடிக்க திட்டமிட்டு இப்போது வகையாக சிக்கிக்கொண்டான்.

சேகர் மூலமாக சிவதாஸின் திட்டத்தை அறிந்த ப்ருத்வியின் மனம் ஏற்கனவே சகுந்தலாவின் பேச்சில் பலத்த அடிவாங்கி இருந்தது. பெற்றோர்களது மனம் மாறி தன்னை ஏற்கா விட்டாலும் ஓரளவிற்காவது தன மீதான கோவம் குறையுமல்லவா என எண்ணி அப்ரூவராக மாறிவிட்டான் ப்ருத்வி.
அனைவரிடமும் இதை கூறிய சிவதாஸை கன்னம் கன்னமாக அறைந்து தள்ளிவிட்டார் எம்பி சங்கரநாராயணன்.
இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் இப்படி ஒரு தலைகுனிவை, அவமானத்தை சந்தித்ததில்லை. அதுவும் பெற்ற பிள்ளையாலே. அவரது நேர்மையான நெஞ்சம் பரிதவித்தது. கொலைகாரனை மகனாய் பெற்றதற்காக.

மனதை நொடியில் தேற்றிக்கொண்டவர் சமூக பொறுப்புள்ள அமைச்சராக,
“மிஸ்டர் ரஞ்சித், நீங்க உங்க டியூட்டியை பாருங்க. இவனை நீங்க அரஸ்ட் பண்ணி இப்போவே இங்க இருந்து கூட்டிட்டு போய்டுங்க...” மனதை கல்லாக்கிக்கொண்டு கூறியவர் சிவதாஸை பார்க்கவே இல்லை.

அவனோ அவரின் காலில் விழாதகுறையாக கெஞ்சிக்கொண்டிருந்தான். சங்கரநாராயணனின் மனைவி கணவரது நேர்மையை எண்ணி பெருமை கொள்ளவும் முடியாமல் பெற்ற மகன் செய்துவைத்திருக்கும் பாவத்தை எண்ணி அதிலிருந்து அவனை காக்கவும் விரும்பாமல் தனது நிலையை எண்ணி வெறுத்தார்.
சிவதாஸ் நடந்ததை கூறிய நிமிடமே பரமேஷ்வரன் கோவமாக ஏதோ பேச ஆரம்பிக்க அவரின் கையை பிடித்து அழுத்தி நிறுத்திய திருவேங்கடம் மொபைலோடு வெளியேறிவிட்டார்.

பரமேஷ்வரனுக்கு மேல்மட்டத்து ஆட்கள் அத்தனை பேரிடமும் செல்வாக்கு அதிகம் இருந்தாலும் அடியாட்களோடு எந்தவிதமான தொடர்பும் பழக்கமும் வைத்துக்கொள்வது என்பது அவருக்கு பிடிக்காத ஒன்று.
ஆனால் திருவேங்கடம் அப்படியல்ல. அவருக்கு அனைத்துவகை ஆட்களிடமும் பழக்கம் இருந்தது. தான் பெறாத உயிராக நினைக்கும் பிள்ளைகளை தான் பெற்ற பிள்ளையை வைத்தே பலிகொடுக்க முயன்ற அந்த சதாசிவத்தை இனியும் அவர் அப்படியே விட தயாரில்லை.

அதற்கு ஆகவேண்டிய அனைத்தையும் பத்துநிமிட போன்காலில் முடித்துவிட்டார். இனி அந்த சதாசிவத்தை நினைத்த நேரமெல்லாம் வாட்டியெடுக்க திருவேங்கடம் முடிவு செய்துவிட்டார்.
போன் பேசிவிட்டு மண்டபத்திற்குள் வந்தால் ராமனால் பிரச்சனை வேறு விதமாக திரும்பி இருந்தது.

சிவதாஸை கைது செய்யவிடாமல் தன் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டிய பிறகு நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு கூறி பைத்தியக்காரத்தனமாக பேசிக்கொண்டிருந்தார். மீனுக்குட்டியும் அவளது தாயும் அதிர்ந்துபோயினர்.
ராமனின் பேச்சில் கோவமடைந்த ஷக்தி, “கொஞ்சமாவது அறிவிருக்கா சார் உங்களுக்கு? அவன் ஒரு கொலைகாரன்னு ஆதாரத்தோட நிரூபிச்சு இப்போ அவன் ஜெயிலுக்கும் போகபோறான். இப்போ போய் அவனை உங்க பொண்ணை கட்ட சொல்றீங்க?...”

“என்னதான் நீங்க என் மாப்பிள்ளை மேல பொய் கேஸ் போட்டாலும் என்னோட சம்பந்தி ஒரு அமைச்சர். அவர் ஈஸியா என்னோட மாப்பிள்ளையை வெளியில கொண்டு வந்திடுவாரு...” என ராமன் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் பேச,
“சேகர் அந்த போட்டோஸ் எல்லாம் இங்க கொண்டு வா...” என கேட்டவன் சேகர் கொடுக்கவும் அதை தூக்கி ராமனை நோக்கி எறிந்தான் ஷக்தி.

அத்தனை போட்டோக்களும் பறக்க அனைவரும் எடுத்து பார்த்தனர். அதில் அனைத்திலும் விதவிதமான பெண்களோடு சிவதாஸ் முகம் சுளிக்கும் வகையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள்.
சங்கரநாராயணன் மொத்தமாக நொடிந்துபோனார். தன் மகனது லீலைகள் ஒவ்வொன்றும் அவரின் நெஞ்சை பிளந்தது. சிவதாஸை பார்த்த பார்வையிலேயே அத்தனை உக்கிரம்.

அவரது பார்வையில் அஞ்சிய சிவதாஸ் ரஞ்சித்தின் பின்னால் போக இனிமேலும் சிவதாஸ் இங்கே இருந்தான் என்றால் மேலும் பிரச்சனி தான் என் அணினைத்து அவனை கைதுசெய்து அழைத்துகொண்டு செல்ல முற்பட,
“மிஸ்டர் ரஞ்சித். நீங்க இவனை மத்த அக்யூஸ்ட் போலவே ட்ரீட் பண்ணுங்க. எனக்கிட்ட இருந்து எந்தவிதமான ஆட்சேபனையும் வராது. அதுவும் இல்லாமல் இவனை நான் வெளியில் எடுக்க எந்த முயற்சியும் செய்யமாட்டேன். குற்றம் செய்தவன் கண்டிப்பா தண்டிக்க படனும்...”

“அதே நேரம் என்னோட பொண்ணு கல்யாணம் கண்டிப்பா இதே மாப்பிள்ளையோட நடக்கும். அதுல எந்தவிதமான மாற்றமும் இல்லை...”
அவரது பேச்சில் உடனடியாக செயல்பட்ட ரஞ்சித் சிவதாஸை அழைத்துகொண்டு காவலர்கள் சிலரோடு மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

சங்கரநாராயணனின் பதில் தனக்கானது என உணர்ந்த ராமன் அடுத்து என்ன பேச என தெரியாமல் விழிக்க ஹர்ஷூவே ஆரம்பித்தாள்.
Nice
 
Top