Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 25.3

Advertisement

AshrafHameedaT

Administrator
Part 3

சேகரும், ஹர்ஷூவும் ஷக்தியை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றுவிட்டு வீட்டிற்கு வர மாலை ஆகிவிட்டது. அதற்குள் ராமனும் அவரது மனைவியும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர்.

இரவுக்கான சடங்குகள் ஏற்பாடு செய்தனர் பரணியும் சரஸ்வதியும், உடன் சகுந்தலாவும். திருவேங்கடம் மட்டும் ஹாஸ்பிட்டல் சென்று ப்ருத்வியை பார்த்துவிட்டு வந்தார். அதுவும் அப்ரூவராக மாறியதற்கு நன்றிதெரிவிக்க.
அவரது நன்றியை கேட்ட ப்ருத்வி தனது பெற்றோரை விட்டு வெகு தூரத்தில் தான் சென்றுவிட்டதாக உணர்ந்து மனம் வெதும்பினான். ஆனால் இனி அதை நினைத்து எந்த பிரயோஜனமும் இல்லையே?
இரவு அனைவரும் உணவு உண்டுகொண்டிருக்க அந்த சமயம் திருவேங்கடத்தின் மொபைலில் அழைப்புவந்தது. பேசிவிட்டு சுவாதீனமாக,
“ஒண்ணுமில்லைடா பரமு ஜெயில்ல அந்த சதாசிவத்துக்கும் வேற ஒரு கோஷ்டிக்கும் தகராறு போல. இந்தாளுக்கு சரியான அடி. ஆகியை காலை உடச்சுவிட்டுடானுங்களாம்...” என கூறிவிட்டு உண்ணுவதில் கவனமாக அதிலேயே தெரிந்துபோனது இது திருவேங்கடத்தின் வெளிய என்று.
ஆனால் யாரும் ஏன் எதற்கு என கேட்கவில்லை. புருஷோத்தமனோ இதன் உள்விவகாரம் தெரியாமல் சதாசிவம் ப்ருத்வியையும், தன் மகனையும் கொல்ல திட்டம் போட்ட சதாசிவத்தை திருவேங்கடம் தண்டித்திருக்கிறார் என்றே நினைத்தார்.

ஷக்திக்கும் ஹர்ஷூவிற்கும் கீழே உள்ள அறையை கொடுத்துவிட்டு பெண்கள் அனைவரும் ஒரு அறையிலும், ஆண்கள் நால்வரும் ஒரு அறையிலும் படுத்துக்கொள்ள நிஷாந்திற்கு சாந்திமுகூர்த்தத்திற்கு ஒரு அறையை தயார் செய்து மீனுவை அனுப்பிவிட்டனர்.
நிஷாந்த் வாசலில் நின்றுகொண்டிருக்க ஹர்ஷூ அவனை தேடிக்கொண்டு வர மீனுவும் ஹர்ஷூவிடம் நகைகளை எங்கே வைக்க என கேட்பதற்காக வந்ததாள்.
“நிஷூ தூங்க போகலையா நீ? உள்ள மீனு தனியா இருப்பாளே...” என கேட்க நிஷாந்தின் முகமோ மிதமிஞ்சிய குழப்பத்தில் தத்தளித்தது.
அவனது மனதை அறியாதவளா ஹர்ஷூ, “உன்னைத்தான் கேட்டேன். உன்னோட வொய்ப் உள்ள தனியா இருப்பா. முதல்ல உள்ள கிளம்பு...” உன் வொய்ப் என்று அழுத்தமாக கூறவும் கொஞ்சம் முகம் தெளிந்தான்.
அவனை இயல்பாக்க உற்சாகமான குரலில்,
“நிஷூ செல்லம் நீ என்னதான் பிழிய பிழிய கண்ணீர் விட்டாலும் உன்னோட தலையெழுத்து மீனுக்குட்டி கூடதான்...” நம்பியார் போல கையை பிசைந்தபடி டயலாக் சொல்லிய ஹர்ஷூவை புரியாமல் பார்த்த நிஷாந்த் அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த மனைவி மீனுவை கவனிக்க தவறினான்.
“உன்னோட காதல், கனவு எல்லாத்தையும் மூட்டைகட்டி வச்சிட்டு ஒழுங்கா குடும்பம் நடத்தற வழியை பாரு நிஷூ. புரிஞ்சதா?...” அவளது பேச்சு நிஷாந்திடம் என்றாலும் அந்த பார்வை மீனுவுக்கானது.
“லூசா நீ. உளறிட்டு இருக்க. என்னமோ பண்ணு, அத்தான்க்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்...” என அங்கிருந்து நகர மீனுக்குட்டி அவனது கண்ணில் படாமல் மறைந்துகொண்டாள்.
அவன் சென்றதும் மீனுக்குட்டியை அழைத்து பேசிய ஹர்ஷூ நிஷாந்தின் அறையில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட்டாள். ஆனால் நிஷாந்திற்கு சரியான ஆப்பை வைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறாள்.
தனதறைக்குள் நுழைந்தவள் இன்னமும் ஷக்தியோடு பேசிகொண்டிருந்த நிஷாந்தை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு,
“நீ இன்னுமா கிளம்பலை. முதல்ல இடத்தை காலிபண்ணுடா...” என அவனை விரட்டியடித்தவள் கதவை சாத்திவிட்டு வந்து ஷக்தியின் அருகில் படுத்துவிட்டாள்.

“மேடம் என்ன கூத்து பண்ணிவச்சிருக்கீங்க? கொஞ்சம் சொல்லிட்டா தேவலை...” சரியாக அவளை கண்டுபிடித்துவிட்டான்.
“கௌரவ் யூ ஆர் சான்ஸ்லெஸ் தெரியுமா? எப்டி கண்டுபிடிச்சீங்க?...” என்றவள் தான் செய்ததையும் கூற,
“ஆனாலும் உனக்கு இவ்வளோ வில்லத்தனம் ஆகாது ஹர்ஷூ, பாவம் அந்த பொண்ணு...” என பாவம் பார்த்து ஹர்ஷூவிற்கு அட்வைஸ் மழை பொழிய அதை கண்டுகொள்ளாமல எப்போதோ தூங்கியிருந்தாள் ஹர்ஷூ.
இங்கே நிஷாந்த் அறைக்குள் நுழைந்ததுமே மீனுக்குட்டி படபடப்போடு எழுந்து நிற்க ஏனோ அவளின் பால் அவனது மனமும சென்றது தான் வியப்பிலும் வியப்பு.

“பார்மாலிடீஸ் எல்லாம் வேண்டாம். நீ இயல்பா இரு...” என கூறிக்கொண்டே என்ன உணர்வு இது என புரியாமல் அதை எதிர்க்கொள்ள முடியாமல் கையில் இருந்த வாட்சை கழட்டிவைத்துவிட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்து கண்களை மூடிக்கொள்ள அவனை எப்படி அழைக்கவென தெரியாமல்,
“எக்ஸ்க்யூஸ் மீ...” என பயத்தோடு திக்கி திணறி அவனுக்கு கேட்கும் விதமாகவே அழைத்துவிட்டாள் மீனுக்குட்டி. ஆனால் அதில் கரண்ட் ஷாக் அடித்தது போல அதிர்ந்தது நிஷாந்த் தான்.
அவள் அழைத்தது அவனது காதுகளில், “எக்ஸ் கிஸ் மீ...” என விழுந்து தொலைத்தது. பின்னே அதிராமல் என்ன செய்வான்?
என்னடா இந்த பொண்ணு பயந்த சுபாவம்னு கேள்விப்பட்டா இப்படி பளிச்சுன்னு கிஸ் கேட்குதே? நிஷாந்த் ஒரு பொண்ணே உன்கிட்ட தைரியமா கேட்கும் பொது குடுக்கலைனா நீ ஆம்பளையாடா? இந்த உலகமே உன்னை காறித்துப்பும் போ. என தனக்குள் வீரவசனம் பேசிக்கொண்டே,

“கிஸ் மீ யா?. மீனு...” எனஅவனை அறியாமலேயே கைகளை விரித்துகொண்டு வர அவளும் பயந்துவிட்டாள். அருகில் பழம் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து வைத்துகொண்டவள்,
“கிட்ட வராதீங்க, எனக்கு உங்களோட முதல் காதலை பத்தி தெரிஞ்சுக்கணும். ஹர்ஷூ அக்கா சொல்லிருக்காங்க. அவன் பர்ஸ்ட் லவ் பத்தி சொல்லாம அவனோட பேசாதேன்னு. அதனால இப்போவே எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகனும்...”
இப்படி ஏழரையை இழுத்து எலெக்ட்ரிக் ட்ரெயின்ல அனுப்பிருக்காளே? அப்பாவியை மீனுவுக்கு அல்கொய்தா ரேஞ்ச்க்கு ட்ரெயினிங் குடுத்திருக்காளே? என மனம் குமைந்து போனான் நிஷாந்த்.

மீனுவா இவ்வளவு தைரியமாக பேசுவது என ஆச்சர்யப்பட்டு போனான் நிஷாந்த். ஆனாலும் ஹர்ஷூ செய்துவைத்திருக்கும் வேலைக்கு என்னதான் செய்வது என கடுகடுத்தான். சின்ன பெண்ணிடம் எதை சொல்லிவைத்திருக்கிறாளோ? என எண்ணியவன்,
“மீனு ஹர்ஷூ என்ன சொன்னா?...”

“சொன்னாங்க. நீங்க உங்களோட லவ்வரை எந்தளவுக்கு விரும்பறீங்கன்னு. மாமாவுக்கு பயந்து நைட் தூங்கும் போது கூட அவங்களோட போட்டோஸ் எல்லாம் சுவத்துல மாட்டிவச்சிட்டு தான் தூங்குவீங்களாமே? அந்தளவுக்கு லவ்ன்னு சொன்னாங்க. ஆனா அது பெயிலியர் ஆகிடுச்சுன்னும் சொன்னாங்க...”

லேசாக விசும்பிக்கொண்டே அவள் கூற நொடியும் தாமதிக்காமல் அவளை இழுத்து அணைத்தவன்,
“குண்டம்மா, அவ என்ன சொன்னாலும் அப்டியே நம்பிடுவியா? அந்தளவுக்கு அப்பாவியா நீ?...” என சிரிப்போடு கேட்க,
“அப்போ ஹர்ஷூ அக்கா சொன்னது உண்மை இல்லையா? பொய்யா?...” எதிர்பார்ப்போடு கேட்டவளை ஆழ்ந்து பார்த்த நிஷாந்தின் மனம் முழுவதும் அந்த நொடி மீனுவே நிறைந்துவிட்டாள்.
“அவ பொய் சொல்லலை. உண்மை தான் சொன்னா...” இதை கேட்டதும் அவனிடம் இருந்து விலக நினைத்த மீனுவை விடாமல் இறுக்கியவன்,
“நான் லவ் பண்ண பொண்ணு பேரு நஸ்ரியா. ஆக்டர் நஸ்ரியா. அதைத்தான் அந்த ஹரி லூஸு உன்னை கலாய்க்க அப்டி சொல்லி வச்சிருக்கு. எனக்கு நஸ்ரியா மேல ஒரு க்ரேஸ். இப்போ வரைக்கும். அதுல உனக்கு ஏதாவது அப்ஜெக்ஷனா?...”

தன் கணவன் கூறியதை கேட்டவளது முகம் விகசிக்க ஆட்சேபனை இல்லை என்று தலையசைத்தாள் மீனு. அவனது மனதிற்குள் அடங்கியவளை முழுவதும் அவனுக்கென பெற்றுக்கொள்ள ஆரம்பித்தான் நிஷாந்த் எந்தவிதமான சஞ்சலமும் இன்றி.
விடியலில் வெளியில் பேப்பர் படித்துகொண்டிருந்த நிஷாந்தை அப்போதுதான் எழுந்து வந்த ஹர்ஷூ வம்பிளுக்க,
“என்ன நிஷூ நேத்து இடியுடன் கூடிய பேரு மழையோ? நெஞ்சு குமுறுது, கண்ணு கலங்குது, உதடு துடிக்குது, மூக்கு விடைக்குது, அழுகை வெடிக்குது, இப்டி எந்த ரியாக்ஷனும் இல்லை. அடி வாங்கினதை வெட்கபடாம சொல்லு...”

அவ்வளவுதான் நிஷாந்த் பொறுமை இழந்து அவளை துரத்த ஆரம்பித்துவிட்டான். அந்த வீட்டில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிரம்பி ததும்பியது.
ஆட்டம்பாட்டதிற்கு பஞ்சமின்றி குடும்பம் மொத்தமும் ஆனந்த கூத்தாடியது.

நதி பாயும்...
 
Top