Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu Final

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 26

ஷக்தி டெக்டைல்ஸில் இருந்து வெளியேறி கோவை மாநகரின் மாலை நேரத்திற்கே உரித்தான பரபரப்பான போக்குவரத்தில் கலந்தான்.
அரைமணி நேரத்தில் வீட்டிற்கு செல்லவில்லை என்றால் ஹர்ஷூ ஆடிதீர்த்துவிடுவாள் என உதட்டில் உறைந்த புன்னகையோடு காரை லாவகமாக போக்குவரத்தில் செலுத்திகொண்டிருந்தான்.

என்ன வேலையாக இருந்தாலும் மாலை ஆறு மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதையும் விதித்தது ஹர்ஷூவே. இல்லைஎன்றால் பின் விளைவுகளை மிக மோசமாக தந்துவிடுவாள் அவனது சண்டிராணி.

மறுநாள் நிஷாந்திற்கும் மீனுக்குட்டிக்கும் திருமண நாள் வேறு. அனைவரும் வீட்டிற்கு வந்திருக்க தான் மட்டும் தாமதமாக சென்றால் அவ்வளவே தான்.
வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே வீட்டிற்கு வந்துவிட்டவன் ஹர்ஷூவை கண்களால் தேட அவள் சிக்கவே இல்லை. மாடிக்கு சென்றவன் அங்கே உறங்கிக்கொண்டிருந்த தனது மகள் பூர்விதாவை கண்டதும் முகம் மென்மையானது.

மகளை பார்த்துவிட்டு ஹர்ஷூ இல்லாததை உறுதிப்படுத்திக்கொண்டு பூர்வியின் அருகில் முத்தம் கொடுக்க செல்ல,

“யூ கல்ப்ரிட். எத்தனை தடவை சொல்லியிருக்கேன். கடைக்கு போய்ட்டு வந்து குளிக்காம பாப்பாவை தொடக்கூடாதுன்னு...” என இரைய அவளது இரைச்சலில் உறக்கத்தில் இருந்த குழந்தையும் விழிக்க ஹர்ஷூவின் பின்னால் இருந்த மூத்த மகன் நிவின் ப்ரகாஷ் காதை பொத்திகொண்டான்.

“அடங்கவே மாட்டியா ஹர்ஷூ. உன்னோட சத்தத்துல தூங்கின குழந்தை பதறி முழிச்சிடுச்சு. உன்னோட வாய்ஸை கொஞ்சமாச்சும் கற்றோல் பண்ணு. எப்போ பாரு வீச்சு வீச்சுன்னு கத்திட்டே இருக்கிறது...” என்றவன்

“நிவின், அப்பாவுக்கு ஒரு ஜில்லுன்னு ப்ரிட்ஜ் வாட்டர் எடுத்துட்டு வாயேன்...” என அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டு அவன் பின்னால் செல்லப்போன ஹர்ஷூவை இழுத்து நிறுத்தியவன்,

“ஏண்டி நான் என்ன காயலான் கடைக்கா போய்ட்டு வரேன்? இந்த ஊர்லையே பேமஸ் ஷாப் உங்கப்பாவோடது. அதை என்னமோ தகரடப்பா ரேஞ்ச்ல சொல்ற? ஏசில உட்கார்ந்துட்டு வர எனக்கிட்ட என்ன இருக்குன்னு பேபியை தொடக்கூடாதுன்னு சொல்ற?...”
வாய்வார்த்தையாக பேசிக்கொண்டிருந்தாலும் தன் அணைப்பினுள் அவளை இம்சித்துகொண்டுதான் கேட்டான்.

“அழுக்கு இருந்தா உன்மேலையே ஒட்டிக்கட்டும்...” என அவளுள் மூழ்க ஆயத்தமாக ஹர்ஷூவும் அவன் அது அணைப்பில் நெகிழ்ந்துகொண்டிருந்தாள்.
இருவரது மோனநிலையையும் கலைக்கவென உடனடியாக வந்து சேர்ந்தான் நிவின்.

“மகனே ஆனாலும் உனக்கு இவ்வளோ பாஸ்ட் ஆகாது. மெல்ல வரவேண்டியது தானே?...” என கேட்டுகொண்டே தண்ணீரை வாங்கி பருகிவிட்டு,
“ஹர்ஷூம்மா, நீயும் என்னால அழுக்காகிட்ட. வாயே நான் பண்ணிய தப்புக்கு நானே உன்னை குளிச்சு விடறேன்...” என அப்பாவியாக முகத்தை வைத்துகொண்டு கேட்க,

“அப்பா அம்மா காலையிலையே குளிச்சாச்சு...”
“அப்போ நான் மட்டும் குளிச்சு நாலுநாளா ஆச்சு?...” மகனே தனக்கெதிராக பேசுவதை கண்டு பொருமிக்கொண்டே பாத்ரூம் சென்றான் ஷக்தி.

அவன் சென்ற பாவத்தை எண்ணி சிரித்துக்கொண்டே பூர்வியிடம் செல்ல பத்துமாத குழந்தை அழகாய் பொக்கை வாய் காட்டி பூவாய் சிரித்தது. அவளை அள்ளிக்கொண்டு மகனையும் அழைத்துக்கொண்டே கீழே சென்றாள்.
புருஷோத்தமனையும் அழைத்துகொண்டு ஷக்தியும் ஹர்ஷூவும் இங்கே வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. பிரசவத்திற்கு வந்த ஹர்ஷூவை அதன் பின் சென்னை அனுப்பவே இல்லை.

பரமேஷ்வரனோ தனக்கு வயதாகிவிட்டதெனவும் தனக்கு பின்னால் தனது தொழில்களின் பொறுப்புக்களை ஏற்கவேண்டுமென ஷக்தியை வற்புறுத்த ஒருகட்டத்திற்கு மேல் ஷக்தியால் எதுவும் செய்யமுடியாமல் போனது.
திருவேங்கடம், சகுந்தலா ஒரு பக்கமும், செல்வம் சரஸ்வதி ஒரு பக்கமும் அவனை நெருக்க போதா குறைக்கு புருஷோத்தமனும் நண்பனது பக்கமே நின்றார்.
ஹர்ஷூவோ நீ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சரி. உன்னோடு நான் இருந்தால் போதும் என்று கூறிவிட வேறு வழியின்றி அவனது வேலையை விட்டுவிட்டு கோவையில் செட்டிலாகி விட்டான்.
ஆனால் புருஷோத்தமன் திருவேங்கடத்தின் வீட்டில் தான் இருந்தார். அது ப்ருத்வியின் பிடிவாதம். ப்ருத்வியை இரண்டாண்டு காவல் தண்டனைக்கு பிறகு விடுதலையானவன் அதன் பின் அவனது மந்திரம் அனைத்தும் ஷக்தி அண்ணா.

எதற்கெடுத்தாலும் “ஷக்தி அண்ணாவை கேட்டு சொல்கிறேன்” என்னும் அளவிற்கு அவனை மாற்றியிருந்தது அனுபவம். ஆனால் இன்னமும் சகுந்தலா அவனிடம் சகஜமாக பேச ஆரம்பிக்கவில்லை. ஒற்றை வார்த்தை பதில் தான் ப்ருத்விக்கு. அதுவும் அவனது முகம் பார்க்காமலேயே.

ஷக்திதான் அவனை தேற்றுவான். ஹர்ஷூ கூட ப்ருத்விக்காக பரிந்துகொண்டு சகுந்தலாவிடம் பேச ஒரே முறைப்பில் அவளையும் அடக்கிவிட்டார் சகுந்தலா.
இதில் ஆச்சர்யமான ஒன்று ப்ருத்வி மஞ்சரியை திருமணம் செய்ய கேட்டது. ஆம், தற்செயலாக மஞ்சரியை காண கண்பார்வையற்றோர் இல்லத்திற்கு செல்லும் போது ப்ருத்வியும் உடன் வர அங்கு மஞ்சரியை பார்த்துவிட்டு பிடித்திருப்பதாக தயங்கி தயங்கி கூற ஷக்தி திகைத்துவிட்டான்.

அவனறிந்த ப்ருத்வி பேசுவதற்கும், நட்பாக பழகுவதற்கும் கூட அந்தஸ்தை பார்த்து முடிவெடுப்பவன். ஆனால் இப்போது மஞ்சரியை பிடித்திருக்கிறது என்று கூற சந்தோஷத்திற்கு அளவில்லாமல் போனது.

பரமேஷ்வரனின் முயற்சியால் மஞ்சரிக்கு கண்பார்வை வந்தாலும் அவள் அந்த இல்லத்திலேயே தனது வாழ்நாளை களிக்கபோவதாக உறுதியாக கூறிவிட்டாள். ப்ருத்வியின் காதலை உணர்ந்த ஷக்தி அவளிடம் பேச தயவுதாட்சண்யமே இல்லாமல் மறுத்துவிட்டாள்.
“மறுத்து எதிர்த்து பேசறேன்னு தப்பா நினைக்காதீங்க ஷக்தி அண்ணா. உங்க தம்பின்னு இல்லை யாரையுமே என்னால கல்யாணம் பண்ணிக்க முடியடஹு நான் விரும்பவும் இல்லை...”

“எங்க வம்சம் என்னோட போகட்டும். என் மூலமா இந்த பாவப்பட்ட வம்சத்துல இருந்து எந்த உயிரும் இந்த உலகத்துக்கு வரகூடாது. வரவும் விடமாட்டேன்...” மஞ்சரியின் கூற்றில் அதிர்ந்துவிட்டனர் பரமேஷ்வரனும், ஷக்தியும்.

மஞ்சரியிடம் பேசி அவளை சம்மதிக்க வைக்க திருவேங்கடத்தோடு இருவரும் புறப்பட்டு செல்ல அங்கே மஞ்சரி தனது மனதில் இருப்பதை ஒரேடியாக கொட்டிவிட்டாள்.

“நீ எதுக்காகம்மா இப்படியெல்லாம் யோசிக்கிற? எதை வச்சு உங்கப்பாம்மா போல தான் உன் குழந்தையும் இருக்கும்னு நினைக்கிற? இப்போ நீகூட உதாரணத்துக்கு இருக்க. எந்தளவிற்கு நீ நல்ல பொண்ணுன்னு எங்களுக்கு தெரியுமே?...” பரமேஷ்வரன் கூற,
“எங்கம்மாப்பா கூட நல்லவங்களா தான் இருந்தாங்க ஈஷ்வர்ப்பா. ஆனா காசுன்னு வந்ததும் அவங்களோட குணம் தலைதூக்கி எங்கக்காவை வாழ விடாம செஞ்சிடுச்சே. மனசு ஒரு குரங்கு மாதிரி. இப்போ நான் இப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு சூல்நிளையிலனான் மாறிட்டா?...”

“அதுக்கு நான் இடம் கொடுக்கமாட்டேன். இப்போ நாங்க படற கஷ்டம் என்னோட பிள்ளைங்களும் படகூடாது. என் ரத்தத்துல என்னை பெத்தவங்க புத்தியும் கலந்திருக்குமே. ப்ளீஸ் என்னை வற்புறுத்தாதீங்க...”

“காசு பணத்தால்தான் மனசு மாறும்னு நான் சொல்லவரலை. அதையும் தாண்டி எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. என் மேல எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு இந்த வாழ்க்கையே போதும். விட்டுடுங்க...”
அதன் பிறகு யாராலும் மஞ்சரியின் மனதை மாற்ற முடியவில்லை. ஹர்ஷூ கூட ப்ருத்விக்காக மஞ்சரியிடம் பேசுகிறேன் என்று கூறியதற்கு ப்ருத்வியே மறுத்துவிட்டான்.

காதலை யாசகமாக பெற அவன் விரும்பவில்லை. அதே நேரம் அவளது மனம் மாறும் வரை காத்திருப்பேன் என்று அமைதிகாக்க ஆரம்பித்தான். என்றாவது ஒருநாள் அவள் தன்னை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையில்.

மறுவாழ்வு மையத்திலிருந்து மறுபிறப்பு எடுத்துவந்த ஷைலஜாவோ தனது சொந்த ஊருக்கே சென்று அங்கிருக்கும் தனது சொத்துக்களை நிர்வகித்துகொண்டு அதில் வரும் வருமானத்தை ஆதரவற்றோர்களுக்கு செல்லுமாறு பார்த்துகொண்டாள். எதிர்காலத்தில் எந்தவிதமான பிடிப்பும் இல்லாமல் ஒரு விரக்தி மனப்பான்மையிலேயே வாழ ஆரம்பித்தாள். அந்தளவிற்கு ஆகாஷை காதலித்த அவளது இதயம் பற்றின்றி போய்விட்டது.

--------------------------------------------------------
குளித்துவிட்டு வெளியே வந்த ஷக்தி அறையில் எந்த சத்தமும் இல்லாமல் இருக்க வேறுடைக்கு மாறி கீழே சென்றான்.
அவனது வருகைக்காகவே காத்திருந்தது போல பரணி காபியோடு வந்து சேர்ந்தார்.

“அத்தை எங்க இந்த வீட்டு வாலு?...” அவரது கையிலிருந்து காபியை வாங்கிக்கொண்டே கேட்க,
“அதை ஏன் கேட்கறீங்க? வழக்கம் போலதான். பின்னால் போய் பாருங்க. என கூறிவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் புகுந்துகொள்ள ஷக்தி காபியை அருந்திக்கொண்டே பின்பக்கம் சென்றான்.

பக்கவாட்டில் உள்ள தோட்டத்தில் செல்வம் குடும்பத்தினரும், பரமேஷ்வரனும் அமர்ந்திருக்க கூட்டத்தில் தனது தந்தையை காணோம் என தேடியவன் பின்னால சப்தம் கேட்பதை உணர்ந்து அங்கே சென்றான்.

அங்கே புருஷோத்தமன் மடியில் பூர்வியை வைத்திருக்க, அருகில் இன்னொரு சேரில் மீனுக்குட்டி அவளது மகன் ப்ரிதேஷை வைத்திருக்க இருவரது முகமும் பரிதாபமாக இருந்தது.

ஹர்ஷூவோ, “நிவின் உனக்கு எத்தனை நாள் சொல்லி குடுக்க? முதல்ல இந்த காலை இப்படி வை. அப்போதான் வழுக்காது. அடுத்த காலை இது மேல இந்த டிஸ்டன்ஸ்ல வைக்கனும்...” என கூறியவள்,
“மாமா, பூர்வி எங்கையோ பார்த்திட்டு இருக்கா அவளோட கான்சன்ட்ரேஷன் மாறினா எப்படி இதையெல்லாம் கத்துக்குவா? அவளை இங்க காமிங்க...” என கூறவும் மீனுக்குட்டி சுதாரித்துவிட்டாள்.

“இவளோட அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு...” என நினைத்துக்கொண்டே அவளருகில் வந்து கையிலிருந்த குச்சியை வாங்கி அவளை விரட்ட ஹர்ஷூ ஓட ஆரம்பித்தாள்.

“நோ கௌரவ் உஷ்ணபடாதீங்க. என்னால ஓட முடியலை. ப்ளீஸ்...” என அங்குமிங்கும் ஓடியவள் அவனிடம் பிடிபட்டுவிட்டாள்.
“ஹர்ஷூ, எத்தனை தடவை சொல்றது? பசங்களுக்கு இந்த பழக்கத்தை சொல்லிதராதன்னு. கேட்கவே மாட்டியா?...” என குச்சியை ஆட்டி மிரட்ட இதுதான் சாக்கென்று நிவின் உட்பட புருஷோத்தமனும், மீனுக்குட்டியும் இடத்தை காலிசெய்தனர்.

“என்ன கௌரவ் நீங்க, பிள்ளைங்க எல்லாத்தையும் தான் கத்துக்கனும். நீங்க என்னடான்னா இப்படி வந்து அவங்களை எஸ்கேப் பண்ணி விட்டுட்டீங்களே? பாருங்க தப்பிச்சிட்டாங்க...” என சலித்துக்கொள்ள,

“அடங்கமாட்டியாடி நீ. இந்த வீட்ல ஒரு சண்டிராணி அராஜகத்தையே தாங்கமுடியலை. நீ என்னடான்னா அத்தனை வாண்டையும் உன்னை போலவே மாத்த பார்க்க. அத்தை உன்னை கண்டிக்க சொல்லி என்கிட்ட சொன்னாங்க...” கோவமில்லாத குரலில் அவளிடம் கொஞ்ச,

“இதுதான் நீங்க கண்டிக்கிற லட்சணமா கௌரவ்?...” என சிரிக்கும் கண்களோடு கேட்க,
“அதெல்லாம் லவ் கண்டிப்பு செல்லம். அப்டித்தான் இருக்கும்...”
“கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட நீங்க இதை சொல்லாதீங்க. லவ்வாம் லவ்...”

“இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதையே சொல்லுவ நீ?...” மெல்ல அனைவரின் கண்களை விட்டும் அவளை தள்ளிக்கொண்டு போக,
“இன்னும் எத்தனை வருஷங்கள் முடியுமோ அத்தனை வருஷங்களும் சொல்லுவேன். சொல்லிட்டே இருப்பேன் கௌரவ்...” என்றவளின் விழிகளில் காதல் நிரம்பி ததும்பியது.

அதை ஆசையுடன் பார்வையால் பருகியவன் மேலும் முன்னேற அவனது பிடியிலிருந்து விலகி,
“சரியான திருடன். பொண்டாட்டியை தள்ளிக்கிட்டு வந்திருக்கிற திருடன் நீங்க கௌரவ். வாங்க எலோரும் வெய்ட்டிங்...” என அவனை இழுத்துகொண்டு தோட்டத்தில் குழுமி இருந்த குடும்பத்தினரோடு கலந்துவிட்டாள் தன்னவனோடு.

ஹர்ஷூவின் மனதில் பெரும் ஜுவாலையாக கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீட்சண்யாவின் மரணம் ஷக்தியின் அருகாமையில் சிறிது சிறிதாக அதன் அனல் குறைய அதை மொத்தமாக அணைக்காமல் ஷக்தி அவளது மனதில் தீட்சண்யா என்னும் பெரும் தீயை தீபத்தின் வெளிச்சமாக மாற்றிவிட்டான்.

இப்போது ஹர்ஷூ தன் முயற்சியில் ஷக்தியின் ஒத்துழைப்போடு ஆகாஷ்களை வளரவிடாமல் சாய்த்துகொண்டு தான் இருக்கிறாள். அவளது போராட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி அவளோடு சேர்ந்து தானும் போராட ஆரம்பித்துவிட்டான்.
தடையில்லாமல் நதியென அவள் பாய்ந்தோட பரந்துவிரிந்த கடலாகி அவளை தனக்குள் அடங்கி அவளுள் தான் அடங்கினான் ஷக்தி.

முற்றும்
 
அருமையான ரசிக்க வைக்கின்ற கதை. அடுத்த தொடங்கிய எதிர்பார்க்கிறோம்
 
Top