Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu Part 25.2

Advertisement

AshrafHameedaT

Administrator
Part 2

“ராமன் அங்கிள் உங்களுக்கு எம்பிக்கு சம்பந்தி ஆகனும். உங்க பையனுக்கு தான் காதலிச்ச பொண்ணோட வாழனும். உங்க ரெண்டு பேரோட ஆசைக்கும் மீனுதான் பலிகடாவா? அவளோட வாழ்க்கையை பாலாக்க நினைக்கிறீங்களே?...”
உண்மையை கூறவும் ராமனுக்கும், அவரது மகனிற்கும் முகம் விழுந்துவிட்டது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு தங்கையை பார்க்க என எண்ணி வெட்கினான் மீனுக்குட்டியின் தமையன்.

ஆனால் ராமனோ ஹர்ஷூவிடம் தோற்பதா? என எண்ணி, “ நல்லா பேசறம்மா. அப்டியே இப்போ என்னோட பொண்ணு எதிர்காலத்துக்கு ஒரு முடிவையும் சொல்லிடு...” என கிடுக்கிபிடி போட கொஞ்சமும் அசராத ஹர்ஷூ,
“உங்க பொண்ணை பத்தி நான் எதுக்கு சார் முடிவெடுக்கனும். பெத்தவங்க நீங்க இருக்கீங்களே?...”
“பெத்தவன் நான் இருக்கும் பொது என்க்கிட்டையா வந்து இந்த விஷயத்தை பத்தி சொன்ன? ஊரை கூட்டி மணமேடை ஏறின பொண்ணை இனிமே யாரு கல்யாணம் செய்துப்பா?...”

“ஈஸியா கல்யாணத்தை நிப்பாட்டிய நீ இந்த நிமிஷம் உன்னால இந்த மேடையிலேயே கல்யாணத்தை நடத்தி வைக்க முடியுமா?. முடியாதுல. ஒரு விஷயத்தை நடத்தறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா?...”
“ஏன் முடியாது? நீங்க பார்த்ததை விட ஒரு அருமையான நல்லவனை என்னால உங்க பொண்ணுக்கு கட்டிவைக்க முடியும். அவனை போல ஒருத்தனை நீங்க தேடினாலும் கிடைக்கமாட்டான்...” புரியாமல் விழித்தனர் அனைவருமே.

“என்ன புரியலையா? என்னோட நிஷாந்த் அண்ணாவை தான் சொல்றேன். உங்க பொண்ணை என்னோட நிஷூ கட்டிப்பான். இதுல உங்க யாரோட முடிவும் தேவையில்லை. மீனுக்குட்டி மட்டும் சம்மதம் சொன்னால் போதும்...”
அவளை கேள்வி கேட்டு குற்றவாளி கூட்டில் நிறுத்த நினைத்த ராமனுக்கு ஹர்ஷூ தான் யாரென காட்டிவிட்டாள். அனைவரும் திகைத்துபோய் பார்க்க ஹர்ஷூ மீனுக்குட்டியை மட்டுமே பார்த்தாள்.

முதலில் குழப்பமான மீனுக்குட்டி பின் நிஷாந்தை பார்த்துவிட்டு தலையை மெல்ல சம்மதத்திற்கு அறிகுறியாக அசைத்துவிட்டு குனிந்துகொண்டாள்.
அவளது அண்ணனுக்கும், தாய்க்கும் இதில் சம்மதமே. நிஷாந்தை பற்றி நன்கு அறிந்தவர்கள் ஆகிற்றே. அதனால் மறுப்பு சொல்ல எது வார்த்தை.
ராமன் தான் குதித்தார். இதற்கு சம்மதிக்க முடியாதென. ஆனால் மீனுவின் அண்ணன் இப்போதாவது தான் ஒரு உண்மையான உடன் பிறந்தவனாக நடந்து தங்கையின் வாழ்வை சீர்படுத்த வேண்டும் என நினைத்து இதில் ராமனை தலையிடகூடாதென உறுதியாக கூறிவிட்டான். அதனால் அமைதியாகிவிட்டார். ஆனால் ஹர்ஷூமேல் கோவம் மட்டும் குறையவே இல்லை.

ஹர்ஷூ குடும்பத்தினருக்கும் நிஷாந்த் குடும்பத்தினருக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்பது அவர்களது முகத்திலேயே தெரிந்தது. ஹர்ஷூ ஷக்தியை பார்க்க அவனோ நீ நடத்து செல்லம் என்பது போல கண்களாலேயே தன் ஆதரவை தெரிவித்துவிட்டான். நிஷாந்த் தான் கொதித்துபோனான்.
சகுந்தலா ஏற்கனவே தீட்சண்யாவை கட்டிகொண்டு கதறிய நிஷாந்தை பற்றி அவ்வப்போது செல்வத்திடம் சொல்லி சொல்லி கலங்கிகொண்டிருந்தார். ஹர்ஷூ திருமணம் முடியவுமே நிஷாந்திடம் திருமணப்பேச்சை எடுக்க அவனோ விடாப்பிடியாக முடியாதென மருத்துவிட்டிருந்தான்.

அதிலேயே செல்வமும், சகுந்தலாவும் மனம் உடைந்துபோய் இருந்தனர். தீட்சண்யாவை நினைத்துக்கொண்டே எங்கே தன் மகன் தனிமரமாக ஆகிவிடுவானோ என எண்ணி எண்ணி தவித்துகொண்டிருந்தனர்.
அவர்களை பொறுத்தவரை நிஷாந்த் இன்னும் தீட்சண்யாவை காதலிப்பதாகவே அப்பாவியாக நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் ஹர்ஷூவிற்கு மட்டுமே தெரியும் நிஷாந்த் திருமண பேச்சை மறுப்பதற்கான காரணம்.

ஏதோ ஒரு சூழ்நிலையில் நிஷாந்திடம் நீ மட்டும் தியாவை கல்யாணம் செய்திருந்தால் அவளுக்கு இந்த நிலையே ஏற்பட்டிருக்காது என பேச்சுவாக்கில் மனதில் இருந்ததை கூற அன்று அவன் கதறிய கதறல் இன்றைக்கும் ஹர்ஷூவால் மறக்கமுடியாது.
அவன் ஏற்கனவே இந்த குற்றவுணர்வில் தவித்துகொண்டிருப்பதை அப்போதுதான் ஹர்ஷூ உணர்ந்தாள். ஆனாலும் அதிலிருந்து விடுவிக்க என்ன முயன்றும் நிஷாந்தை மாற்றமுடியவில்லை. தீட்சண்யாவின் முடிவிற்கு தானும் ஒரு காரணமோ என தன்னையே குற்றம் கூறிகொண்டிருந்தான் நிஷாந்த்.

அப்படி இருக்க திருமணத்தை உறுதியாக தவிர்த்துவந்தான். தன் மனம் என்று முழுதாக மாறுகிறதோ அன்று திருமணத்தை பற்றி பேசலாம் என சொல்லிவிட்டான். அதனால் தான் ஹர்ஷூ இந்த முடிவை எடுத்தது.
இதுவும் திட்டமிட்டு எடுக்கவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்டாள். அவ்வளவே. மீனுக்குட்டியின் மீது நிஷாந்திற்கு ஒரு சாப்ட் கார்னர் இருப்பதை ஹர்ஷூ அறிவாள். மீனு நிச்சயம் நிஷாந்தை மாற்றுவாள் என நம்பினாள் ஹர்ஷூ.

நிஷாந்த் மறுக்க மறுக்க அவனது பேச்சு அந்த சபையில் எடுபடாமாலேயே போனது. மணமேடையில் மீனுக்குட்டி அமர்ந்திருக்க ஒருகட்டத்திற்கு மேல் நிஷாந்தால் அவளது முகத்தை பார்த்துவிட்டு மறுக்கவே முடியாமல் போனது.
ஷக்தி தான் அவனுக்கு அறிவுரைகளை கூறி மணவறைக்கு அனுப்பிவைத்தான். அப்போதும் ஹர்ஷூ அடங்குவாளா?

“நிஷூ உனக்கு பட்டுவேஷ்டி, ஷர்ட் எதுவும் எடுக்கலைடா. பாரேன் இந்த பொண்ணு வீட்டை. கல்யாணத்துக்கு பின்னால நீ இவங்களை இதுக்கெல்லாம சேர்த்துவச்சு ஒரு வலி பண்ணனும். புரியுதா?...” என சீண்ட,
“உன்னையெல்லாம் யாரு நாட்டாமை பண்ண சொன்னா? இரு சிக்காமலா போய்டுவா. உன்னை சும்மா விடமாட்டேன் ஹர்ஷூ. வந்து பேசிக்கறேன்...” என பொரிந்துகொண்டே அமர்ந்தவன் மீனுவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.
இப்படி ஒரு திருமணம் தனக்கு நடக்கும் என அவன் கனவிலும் நினைக்கவில்லை. திருமணத்தை பற்றியே நினைக்காதவன் இப்படி நடுக்கும் என்றா நினைப்பான்?
அனைத்தும் நல்லபடியாக நடக்க அனைவரும் மணமக்களை மனதார ஆசிர்வாதம் செய்தனர் ராமனை தவிர்த்து.

விருந்தினர்கள் கூட்டம் கலைய ஷக்தியை வண்டியில் தள்ளிக்கொண்டு ஒரு ஓரத்தில் நிஷாந்தோடு சேர்ந்து அமர்ந்தனர் ஹர்ஷூவும் சேகரும்.
“அப்புறம் நிஷா நீயும் இஸ்திரி ஆகிட்ட. வெல்கம் அவர் க்ரூப்...” என ஹர்ஷூ ஆகியை நீட்ட அதை தட்டிவிட்டவன்,
“இன்னைக்கு நான் இருந்தேன் என்னை குண்டம்மாவுக்கு கட்டிவச்சிட்ட. அடுத்து இதே போல ஒரு சுட்சுவேஷன் அமைஞ்சா ரெடிமேட் மாப்பிள்ளைக்கு என்ன பண்ணுவ?...” என கடுப்பாக நிஷாந்த் கேட்க,
“நீ ஏண்டா கவலை படற? அதான் சேகர் அண்ணா இருக்காங்களே? அவங்களை கட்டிவச்சிடலாம்...” என கூலாக கூறவும சேகர் எழுந்துவிட்டான்.

“எங்கடா கிளம்பிட்ட?...” ஷக்தி சேகரை தடுக்க,
“எங்கம்மாக்கிட்ட சொல்லி எனக்கொரு பொண்ணை பார்க்கத்தான் போறேன். இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்தா இன்னொரு சமூக சேவை செய்யறேன்னு எதாச்சும் ஒரு பொண்ணை என்தலையில கட்டிடுவா உன் பதிவிரதை. ஆளை விட்டு சாமி...” என கையெடுத்து சேகர் கும்பிட,
இடியென சிரித்த ஷக்தி, “இரு என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு இன்னைக்கு டிஸ்சார்ஜ் பன்றதா டாக்டர் சொல்லிருக்காங்க. அந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சதும் எண்ணிய வீட்ல விட்டுடு. என்னாலையும் இங்க எதுவும் ஹெல்ப் பண்ணமுடியலை...”

அவனை இருக்க வைக்க,
“அதெப்டிடா இவ என்ன செஞ்சாலும் ரசிக்கிற? ஆனாலும் இவ்வளோ காதல் உடம்புக்கு ஆகாதுடா. உன் பொண்டாட்டியை நினச்சு நீ வேணும்னா பெருமை பட்டுக்கோ. என்னை விட்டு. இல்லைனா வீட்ல சேர்க்கமாட்டாங்க...” அழாத குறையாக கெஞ்சினான்.
“சரி சரி போனா போகுதுன்னு உங்களை விட்டுடறேன். கௌரவ்க்கு துணையா இருங்க. ஆனா பொண்ணு எதுவும் பார்க்கணும்னா...” என இழுத்தவளை இடைமறித்தவன்,

“அம்மாடி பரதேவதை, அங்கால பரமேஷ்வரி தாயே. சத்தியமா உன்கிட்ட சொல்லவே மாட்டேன். கடைசி நேரத்துல என்னவேணும்னாலும் பண்ணுவ. தாலியே கட்டவிடாம டைவர்ஸ் வாங்கிகுடுக்குற ஆளு நீ...”
சேகர் கூறிய பாவனையில் அந்த இடத்தில் சிரிப்பலை வெடித்துகிளம்பியது. சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்ப மற்ற சடங்குகள் அனைத்தையும் புருஷோத்தமன் தங்கள் இல்லத்திலேயே வைத்துகொள்ளலாம் என கூறிவிட அனைவரும் மீனுவோடு அங்கே கிளம்பிவிட்டனர்.
 
Top