Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

The Jury - Indira Soundarajan Sir

Advertisement

Admin

Admin
Member
Dear Friends,

Its our great pleasure to announce our Jury for கனவு பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2020. ஒரு வேலையை செய்ய நினைப்பது மிகவும் எளிது. ஆனால் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பொழுது எத்தனையோ நடை முறை சிக்கல்கள். அதனையும் தாண்டி அதனை சரியாக செய்ய வேண்டும் என்பது அப்படி ஒரு அழுத்தத்தை கொடுக்கும் விஷயம். நான்கு கட்ட வாக்குகளை வாக்கெடுப்பின் மூலம் நடத்தி, நாற்பத்தி எட்டு கதைகளில் வாக்கெடுப்பின் அடிப்படையில் முன்னனிக்கு வந்த பத்து கதைகளை தேர்ந்தெடுத்து விட்டோம். இந்த பத்து கதைகளில் முதல் இரண்டு மூன்றாம் பரிசுக் கதைகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நடுவர் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார். அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

அவரை பற்றிய அறிமுகம் தேவையே இல்லை. அவரின் பெயர் ஒன்றே போதும். எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற எங்களின் அழுத்தங்கள் எல்லாம் அவர் நடுவராய் இருக்க ஒப்புக் கொண்டவுடன் அத்தனையும் மாயமாய் மறைந்து போயின. மூன்று கதைகளை தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல எல்லா கதைகளுக்கும் அதனின் நிறைகுறைகளை இன்னும் எழுத்தாளர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் விமர்சனமும் கொடுக்க உள்ளார். அதற்கு எங்கள் அனைவரின் பணிவான அன்புகள் ஐயா!

சென்ற வார இறுதிக்கு முன் தான் எல்லா எழுத்தாளர்களிடமும் கதைகளை வாங்கினோம். அதனை பிரிண்ட் எடுத்து ஸ்பைரல் பைண்ட் செய்து நடுவருக்கு அனுப்பி வைத்தோம். கதைகள் அவரை அடைந்து அவரும் படிக்கும் பணியை ஆரம்பித்து விட்டார்.

நமக்கு நடுவராய் இருக்க ஒப்புக் கொண்டதற்கு மிக மிக நன்றி ஐயா!

எப்போது முடிவு என்று கேட்பவர்களுக்கு அவரின் அத்தனை பணிகளுக்கும் நடுவில் நமது வேலையை ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் சற்று கால அவகாசம் அவருக்கு தேவை.

அவர் கோட்டைபுரத்து வீட்டிற்கு சொந்தக்காரர், மர்மதேசதின் தலைவர், கிருஷ்ணதாசியின் நாயகர், சிவமயமாகி ருத்ரவீணையை மீட்டியவர், அவர் எழுத்துக்களால் நம்மை மிரள வைத்து, வியக்க வைத்து உருகச் செய்தவர். அவர் நாவல்களின் அரசர் இந்திரா சௌந்தர்ராஜன் ஐயா அவர்கள்.

இந்த போட்டிக்கு நடுவராக இருக்க ஒப்புக் கொண்டமைக்கு, இந்திரா சௌந்தர்ராஜன் ஐயா அவர்களை பணிவோடும் அன்போடும் வணங்கி வரவேற்கிறோம். – எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

Indira Soundarajan sir.jpegbooks.jpg
 
Top