முதலில் மதுர காதலில் திளைத்து திகைத்தேன். பின் இளமயிலில் , அதன் தெளிவில், வாழ்வின் ஒரு புனிதமான அங்கமாய் கலவியை கற்று தந்ததை வியந்தேன்... இப்போது தான் தம்பிரான் தோட்டத்தில் உலவ ஆரம்பித்துள்ளேன்... போதும் பொண்ணை ரசித்து விட்டு தான் கள்ளி காட்டுக்கு செல்ல வேண்டும்... கள்ளி காடு பெயரை போலவா? இல்லை முள் குத்தாத காடா என தெரியவில்லை... பார்ப்போம்... Anyways, I admire the way of writing of all the winners and the way in which they dwell with characters is amazing... We easily get related to the characters and mingle with them... Rather we do not read the stories... We live the life of characters when we read... Kudos to the writers... Keep rocking. Krishna bless.ஹாய் பிரண்ட்ஸ்,
இதோ ஆவலுடன் எதிர்பார்த்த முடிவுகள்.
எப்பொழுதும் போல தேர்ந்தெடுக்கப்படாதவை சிறந்தவை அல்ல என்று கொள்ளுதல் கூடாது, தேர்ந்தெடுக்கப்பட்டவை சிறப்பானவை அல்ல என்றும் கொள்ளுதல் கூடாது.
தேர்வு ஒரு கலவையே, வாசகர்களின் வாசிப்பு, கதையின் தரம், போட்டியின் லவ் அண்ட் லவ் ஒன்லி கான்செப்ட், வாசகர்கள் வாக்களிப்பு நடுவரின் தேர்வு எல்லாம் கொண்டே... சிறு பாரபட்சமும் இதில் கிடையாது.
புத்தக பதிப்பிற்கும் பரிசு தொகை மூவாயிரத்திற்கும் தேர்தெடுக்கப்பட்ட கதைகள்
வாணி வெற்றி ( நர்மதா சுப்பிரமணியம் ) - இளமயில் இதயத்திலே..!
ஸ்ரீ - மதுர காதல் மலரே
காதல் கண்ணம்மா ( தனுஜா செந்தில்குமார் ) - தம்பிரான் தோட்டம்
ஆராதனா துரை - கள்ளி காட்டு காதலியே!
இந்த முறை ஐந்து கதைகள் என்று சொன்னோம், ஆனால் ஐந்தாவதிற்கு
மூன்று கதைகள் ஒன்று போல நின்றன.
அதனால் மூன்றிற்கும் ஆறுதல் பரிசுத் தொகை மட்டும் தலா ஆயிரத்து ஐநூறு கொடுக்கப்படும்.
முல்லை (ரித்தி ) - நேசம் கலந்த உறவாய்
kps ( பிரேமா காமேஸ்வரன் )- கனியுமா காயம் தந்த காலம்
மௌன பெண்ணே( ஜீனத் சபிஹா) - மௌனம் களைவாயா பெண்ணே
இதில் பரிசு தொகைகள் நான்கு கதைகளுக்கு தலா மூவாயிரமும், ஆறுதல் பரிசு தலா ஆயிரத்து ஐநூறும் வழங்குபவர், குங்குமம் வார இதழின் முதன்மை ஆசிரியர், மதிப்பிற்குரிய -திரு கே என் சிவராமன்.
கதைகளை தேர்ந்தெடுத்தது முழுக்க முழுக்க தளம், அவர் நம்முடையை முடிவைக் கொண்டே பரிசுத் தொகை வழங்குகிறார்.
அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்....
தளத்தின் சார்பில் வெற்றி பெற்ற நான்கு கதைகளுக்கு புத்தக பதிப்பும்,
கலந்து கொண்ட அனைவருக்கும்... சான்றிதழ் அல்லது ஷீல்ட் உடன் நினைவுப் பரிசும் புது வருடம் பிறந்த பிறகு வழங்கப்படும்.
சென்ற முறை வென்ற கதைகள் வரவிருக்கும் சென்னை புத்தக திருவிழாவில் வெளியாகின்றன என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்த போட்டி வரும் காதலர் தினத்தன்று 14.02.2025 அன்று ஆரம்பமாகிறது. இந்த முறையும் நம்மோடு போட்டியில் இணைந்து பரிசுத் தொகை வழங்கவிருக்கிறார் குங்குமம் வார இதழின் முதன்மை ஆசிரியர் மதிப்பிற்குரிய - திரு கே என் சிவராமன்.
அவர்களுக்கு எங்களின் நன்றி கலந்த வணக்கங்கள்
பங்கு பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.
கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை – A NOVEL WRITING CONTEST – LOVE AND LOVE ONLY – காதலின் கதைகள்.... என்றும் உங்களுக்காக