Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thennankeetrum Thendral katrum - 10

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 10
உன் பார்வையைப் போல் யாரும்
என்னைத் தாக்கிடவில்லை..
உன் வார்த்தைப் போல் யாரும்
என்னோடு பேசியதில்லை…
உன் காதல் போல் யாரும்
எனக்குள் வந்ததுமில்லை..
புனே :

அன்றைய வகுப்பின் கேள்வி பதில்கள் நேரம் தொடங்க, முதலில் இருந்து அனைத்துக் கேள்விகளையும் ஷ்ரவந்தியேக் கேட்க, அவன் அளித்த பதில்களில் இருந்தும் சிலக் கேள்விகளைக் கேட்க, அன்றுதான் அவளை கவனமாக பார்த்தான் கார்த்திக்.

வேண்டும் என்றோ, இல்லை மற்றவர்கள் முன் தான் ஒரு அறிவாளி என நிரூபிக்க வேண்டியோ அவள் செய்யவில்லை. எனக்குத் தேவையானது பதில்கள் தான் என்பது போல் அலட்சியமாக நின்றிருந்தாள்.

அறிவுச்சுடர் ஒளிரும் கண்கள், அதுதான் முதலில் அவனை ஈர்த்தது. ‘கன்னியரின் கடைக்கண் பார்வைப் பட்டால் காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம்’ என்று பாடிய பாடல்தான் நினைவுக்கு வந்தது. இவளது கடைவிழிப் பார்வைத் தன்னை தொடருமா..? என்று எண்ணம் நொடியில் உருவாக, அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாய் இருந்தது.

யார் இவள் தனக்குள்ளும் ரசாயன மாற்றங்களை உருவாக்குபவள் என்று எண்ணியவன், வகுப்பு முடியவும் அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்து வகுப்பை ஆரம்பித்தான். அன்றைய நாள் முழுவதும் அவளைப் பற்றியே யோசிக்க வைத்தவள், ராஜவேலுவோடு கார்த்திக் பேசிக் கொண்டிருக்கும் நேரம் அவர்களுக்கருகே வந்தாள்.

அப்போதும் கார்த்திக்கை கவனியாதது போல், ராஜவேலுவைப் பார்த்து, “டாடி ஆஃப்னவர் வைட் பன்னுங்க, என்னோட ரெகார்ட் பூனம் காபி பன்னிட்டு இருக்கா.. வாங்கிட்டு போயிடலாம்..” எனவும்,

“ஓ.. ஓகே டா…, பூனம் வந்துட்டாளா, அவ ஹெல்த் இப்போ ஒகே தான,..” என்று கேட்கவும்,

“நோ டாட்… ஷீ இஷ் சோ டயர்ட்… லீவ் போட சொன்னாலும், வேண்டாம்னு சொல்ரா..” அழுத்துப் போனக் குரலில் கூற,

“விடும்மா… செமஷ்டர் வேற வருதே, அதான் பயந்துட்டு வந்துருப்பா… நீ டென்ஷன் ஆகாத,” என்று அவளை சமாதானப் படுத்தியவர்.. கார்த்திக்கிடம் திரும்பி, “கார்த்திக் இவ என்னோட பொண்ணு ஷ்ரவந்தி, இங்கே தான் M.Tech 2nd year” என்று அறிமுகப்படுத்த,

“என் க்ளாஷ் ஸ்டூடன்ட், எனக்கே இன்ட்ரோ கொடுக்குறீங்க. ஐ நோ ஷ்ரவந்தி, ஷீ இஷ் வெரி ப்ரில்லியன்ட், ஒரு க்ளாஸ்ல எத்தனை கொஸ்டீன்ஷ், எத்தனை டவுட்ஸ், நம்மளோட ஆன்சர்ல இருந்தே ஒரு கொஸ்டீன் கேட்பாங்க பாருங்க, அதுதான் அவங்க ஹை லைட்டே…” என்றான்.

அவன் கண்களில் குரும்புத் தவழ்ந்ததோ, ஷ்ரவந்தி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ராஜவேலுவைப் பார்க்க, அவரோ தன் மகளின் செயல்களை லிஸ்ட் போட ஆரம்பித்தார்.

“டாடி..” என்று அவள் பலமுறை அழைத்தும் கண்டு கொள்ளாமல் பேசிக்கொண்டே இருக்க, இந்தப் பூனம் வந்தால் போதும் என்பது போல் வழியைப் பார்க்க, பூனமும் வர,

‘ஷப்பா..’ என்று பெருமூச்சு விட்டவள், அவளிடம் இருந்த நோட்டை வாங்கிக் கொண்டு, பை சொல்லி அனுப்பிவிட்டு இவர்களிடம் வந்தவள்.. “டாடி, கிளம்பலாம், எனக்குப் பசிக்குது…” எனக் காதைக் கடிக்க,

“ஓ.. ஓகே டா.. போகலாம்..” என்றவர், கார்த்த்க்கிடம், “நாளைக்குப் பார்ப்போம் கார்த்திக்..” எனக் கைக் குலுக்கி கிளம்பிவிட்டார்.

ராஜவேலுவோடு நடந்தவளையே கண்ணிமைக்காமல், பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். ஸ்கை ப்ளு ஜெக்கின்சும், அதே ஸ்கை ப்ளுவில் எம்ப்ராய்டரிகளும், மணிகளூம், டிசைன் செய்த வைட் கலர் டாப்பும், கழுத்தைச் சுற்றி அனிந்திருந்த ஸ்கை ப்ளு ஸ்டோலும் அணிந்திருந்தாள். இடையைத் தாண்டிய கூந்தல் ஒரு போனி டெயிலில் அடங்கி இருந்தது. அவள் நடக்க, அவளது கார் குழலும் நடைக்கேற்ப லயத்துடன் அசைந்தது.

ஷரவந்தியின் ஒவ்வொரு செயலையும் உண்ணிப்பாய் உள்வாங்கி ரசித்துக் கொண்டிருந்தான், தனக்குள் இப்படி ஒரு மாற்றம் வருமென்று நேற்று யாரெனும் சொல்லியிருந்தால், விழுந்து விழுந்து சிரித்திருப்பான்.

இன்று ஒரு பெண்ணை நினைத்து பைத்தியம் ஆகிக் கொண்டிருக்கிறோம்’ என்று நினைத்தவன் அவளையேப் பார்த்திருக்க, காரில் ஏறப்போனவள், சட்டென்று அவன் புறம் திரும்பி நொடியில் குறும்பு புன்னைகையுடன் கண் சிமிட்டிவிட்டு ஏறி அமர்ந்து விட்டாள். என்ன நடந்தது இப்போது, அவள் பார்த்தாளா..? சிரித்தாளா..? நிஜமா..? என்று அவன் யூகிக்கும் முன்னே கார் பறந்திருந்தது.

நகர்ந்து சென்ற காரையே பிரம்மைப் பிடித்தவன் போல் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். அப்போது காரில் இருந்து தலையை மட்டும் எட்டிப் பார்த்தவள், அவன் அப்படியே நிற்பதை உணர்ந்து, தலையை மட்டும், ‘போய் வருகிறேன்..” என்பது போல் அசைக்க, தன்னைப்போல் கார்த்திக்கின் தலையும் அசைய, மீண்டும் சிறு புன்னகை அவனிடம் உதிர்த்துவிட்டு, தலையை உள்ளிழுத்துக் கொண்டாள் ஷ்ரவந்தி.

இவளுக்கு என்னைப் பிடிக்குமா..? எப்போதிருந்தது..? ஆனால் அப்படி ஒரு அசைவு கூட அவளிடம் இருந்து வந்ததில்லையே, ஒருவேளை நான் காதலிக்க வேண்டும், அதன்பிறகு அவள் காதலை என்னிடம் கூறலாம் என்று நினைத்திருப்பாளோ..? என்றுக் குழம்பியவன், சமயம் வரும் போது அவளிடமேக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், என முடிவு செய்துவிட்டு, அவனும் கிளம்பினான்.

அடுத்து வந்த நாட்கள் வழக்கம் போலவே சென்றது. கார்த்திக்கிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருக்க, ஷ்ரவந்தி குழம்பிப் போனாள்.
‘இவன் இப்போ தான் நம்மளைக் கவனிக்க ஆரம்பிச்சான், அதுக்குள்ள என்னாச்சு… மறுபடியும் சாமியாரா போயிட்டானா…?” என்று மனதுக்குள் புலம்பினாலும், வெளியெ அமைதியாக இருந்தாள்.

வழக்கம் போல நடக்கும் கேள்வி பதில் பகுதியிலும் கூட, அவன் அவளைக் கண்டு கொள்ளவில்லை. அவளது கேள்விகளைக் கொண்டே அவளை மடக்கி, பதில்களை கூறி என சுவாரஷ்யமாகப் போனாலும், அவனது கண்டு கொள்ளாத் தன்மை, ஷ்ரவந்தியை சோர்வடையச் செய்தது.

அதன் காரணமாக, அடுத்த இரண்டு நாட்கள் வகுப்பில் அமைதியாக இருந்தாள். இப்போது கார்த்திக் அவளை விசித்திரமாகப் பார்க்க, அவள் கண்டு கொள்ளவில்லை. ‘என்னடா.. இது நாம ஒதுங்கினா அவளே வந்து பேசுவான்னு பார்த்தா.. அவளும் ஒதுங்கின மாதிரி, அமைதியா இருக்கா.. ரொம்ப ஹர்ட் பன்ற மாதிரி நடந்துக்கிட்டோமோ..’ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

அன்று மாலை வகுப்பு முடிந்து அவன் வெளியேவர, ராஜவேலு ஷ்ரவந்தியைத் தோளில் சாய்த்தவாறு நடத்திக் கூட்டி வந்து காரில் உட்கார வைத்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக சோர்வாகவே அவள் இருப்பதை உணர்ந்தவன், வேக எட்டுக்களில் அவர்களிடம் சென்று, கார்க்கதவை திறந்து விட,

“தேங்க்ஸ் கார்த்திக்..” என்றவரைக் கவனிக்காமல், தன்னவளையே பார்த்தான்.

‘அவள் விழிகளைத் திறப்பேனா..’ என்பது போல, இமைக்கதவுகளை மூடியே வைத்திருந்தாள். கருமணிகள் உருளுவதிலேயே அவன் மேல் ஏதோ கோபமாக இருக்கிராளோ என்று தோன்றியது கார்த்திக்கிற்கு.

“என்னாச்சு சார்..” என்றான் பார்வையை அவளிடம் இருந்து விலக்காமல்.

“த்ரீ டேசா ஃபீவர் கார்த்திக்.. அசைன்மென்ட் சப்மிட் பண்ணனும்னு லீவ் போடல, தூங்காம நோட்ஸ் எடுத்துட்டு இருந்தா.. நான் ஹெல்ப் பண்றேனு சொன்னாலும், வேண்டாம்னு சொல்லி எல்லாத்தையும் இழுத்துப் போட்டு, இப்போ ஃபீவர் வந்துடுச்சு…” என்று பேசிக்கொண்டே இருக்க,

“ டாடி..” என்றவளின் அனத்தல் அவர்களை நிகழ்வுக்கு கொண்டு வர, எதையும் யோசிக்காமல் கார்த்திக்கும் காரில் ஏறினான்.

“ஃப்ர்ஸ்ட் ஹாஸ்பிடல் போயிடலாம் சார், ஹை ஃபீவர் போல, தாங்க முடியாம அனத்துறாங்க பாருங்க, நீங்க அவங்க கூட பின்னாடி உட்காருங்க,” என்றுக் காரை எடுத்தான். மறுக்க நினைத்தவரும், மகளின் நிலையைக் கண்டு அமைதியாகி விட்டார்.

பொறுமையாக பரிசோதித்த டாக்டர், ஃபீவர், டய்ர்டா வேற இருக்காங்க, சோ.. சலைன் ரெண்டு பாட்டில் போட்டுக்கறது பெட்டர். ஷீ இஷ் அனிமிக்..” என்றதும், தயங்கிய ராஜவேலுவை,

“சார் நீங்க போய் ஆன்டியை அழைச்சிட்டு வாங்க, நான் இங்க இருக்கேன், கூட லேடிஸ் இருக்குறது தான் பெட்டர்.” என்றதும்,

“தேங்க்ஸ் கார்த்திக், அவளே வந்துடுவா, பட் டென்சன் ஆகி, அவளுக்கு எதுவும் ஆகிடும், அதான் யோசனை செஞ்சேன், வேற ஒன்னுமில்ல, உங்களூக்கு சிரமம் இல்லையே, நான் போய் பத்மாவைக் கூப்பிட்டு வரேன்..” என்றதும்,

“நோ.. சார், எனக்கு ஒரு பிராப்ளமும் இல்லை. நான் வீட்ல போய் வெட்டியா தான் இருக்கப்போறேன், பிறகென்ன, யோசிக்காம போயிட்டு வாங்க சார்..” என தயங்காமல் கூறவும்,

“ஓகே கார்த்திக், பார்த்துக்கோங்க, நான் சீக்கிரம் வந்துடுறேன்,” என்றுவிட்டு, மகளிடமும் கூறிவிட்டு கிளம்பினார்..

ஒரு மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தி்ற்குப் பிறகு விழித்த ஷ்ரவந்தி, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கைத் தான் பார்த்தாள். அவனும் பார்க்க, அவளும் பார்க்க சில நொடிகள் பார்வையால் வருடிக்கொள்ள, மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் அவள்.

சேரில் அமர்ந்திருந்தவன், எழுந்து அவளுக்கருகில் கட்டிலில் அமர, அவளுக்கு இதயத்துடிப்பு ஒவ்வொன்றும் டம் டம் என்று அடித்துக் கொள்ள, ஊசியில்லாத மற்றொரு கையால் மெத்தையை இறுக்கிப் பிடித்தாள். சட்டென்று முகமெல்லாம் வியர்த்து வலிந்தது. இமைகள் இறுக்கமாய் மூடியிருந்தாலும், படபடப்பில் கண்மணிகள் நாட்டியமாடுவது அவனுக்குத் தெரிந்தது.

அவளது அவஸ்தைகளை ரசித்தவனின் உதடுகளில் குறும்பு புன்னகை ஒட்டிக்கொள்ள, “என்னாசு ஷ்ரவந்தி, ஏன்.. இப்படி ஸ்வெட்டிங் ஆகுது, அப்னார்மலா ரியாக்ட் பன்றீங்க, டாக்டரை வரச் சொல்லட்டுமா..?” உதட்டுக்குள் பூத்த புன்னகையை உள்ளையே மறைத்து, மிகவும் சீரியசாக கேட்க, அவளது உணர்வுகள் எல்லாம் சட்டென்று வடிய, விழிகளைத் திறந்து, அனல் பார்வை ஒன்றை அவனை நோக்கி வீச,

அதுவரைக் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த புன்னகையை வெளியே விட்டவன், “என்னை லவ் பண்றேன்னு எங்கிட்ட வந்து சொல்றதுக்கு உனக்கு என்ன கஷ்டம்..” என்றான் சீரியசாய்.

அவன் சீண்டியிருக்கிறான், தன் அவஸ்தைகளைப் பார்த்து சிரித்திருக்கிறான், அதைவிட, அவனை விரும்புவதை அவன் உணர்ந்திருக்கிறான். இருந்தும் அவனிடம் எந்தப் பிரதிலிப்பும் இல்லை. எல்லாம் செர்ந்து கோபமாக மாற, “என்ன..? நான் உங்களை லவ் பன்றேனா..? சும்மா காமெடி பண்ணாம, இடத்தைக் காலி பண்ணுங்க..” என்றாள் ஷ்ரவந்தி கோபமாய்.

நொடியில் அவளது உனர்வுகளைப் படித்தவன், “ஹேய்… என்ன விளையாடுறியா..? நீ என்னை லவ் பன்ற, எனக்குத் தெரியும். இல்லைன்னுப் பொய் சொல்லாத..” என்றான் கோபமாய் அவனும்.

“உங்கைளைப் போய் நான் லவ் பண்றேனா..? அப்படி ஒரு நினைப்பு, நான் என்ன, இந்த காலேஜ்ல இருக்குற எல்லா பொண்ணுங்களும் தி க்ரேட் கார்த்திகேயனைத் தான் லவ் பன்றாங்க, ஏன்னா அவங்குளுக்கு எல்லாம் வேற வேலை இல்லைல, உங்களுக்கு
கர்வம்...”

“எல்லாப் பொண்ணுங்களும் உங்கப் பின்னாடி அலையுறாங்கன்னு ஒரு ஆணவம். அதான் உண்மையா யார் விரும்புறாங்க, என்ன பன்றாங்க, அவங்க ஃபீலிங்க்ஸ் என்னனு கூட புரிஞ்சுக்க முடியல, இல்ல புரிஞ்சிக்கிட்டாலும் வெளிய சொல்ல உங்க ஈகோ விடல. நாம போய் ஒரு பொண்ணு பின்னாடி சுத்துறதான்னு. ச்சே… இப்படி ஒரு சேடிஸ்ட போய் நான் லவ் பன்னேன்னு நினைக்கும் போது..” என்று அவள் முடிக்கும் முன்னே அவனது கை அவளது கன்னத்தை பதம் பார்த்திருந்தது.

அதுவரைக் கோபமாய் கத்திக் கொண்டிருந்தவள், அவனது அறையில் கை தானாக கன்னத்தைத் தாங்கிப் பிடிக்க, விழிகளில் நீர் பொங்கி வழிந்தது.

அறை விழுந்த அதிர்ச்சியில் அவனைப் பார்க்க, கார்த்திக்கின் முகம் இறுகியிருந்தது. அது மேலும் பயத்தைக் கொடுக்க, கண்களில் கண்ணீரோடு மிரட்சியும் வந்து ஒட்டிக் கொண்டது.

அந்தப் பார்வையில் என்னக் கண்டானோ, அவளை இழுத்து தன்னோடு மிக, இறுக்கமாக அணைத்து, அவன் கை பதம் பார்த்த கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.

காற்று இதமாகும்..

 








Top