Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thennankeetrum Thendral katrum - 7

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 07

உன்னை புரிந்து கொண்டேன்
என்று நினைக்கும் பொழுது....
நீயோ
புரியாத புதிராய் உள்ளாய்....
புதிராய் இருந்தாலும்
உன் காதலை மட்டும்
நான் புரிந்து கொள்ளும்
மாயம் என்னவோ!!!

“வாம்மா ஸ்ருதி… வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா… இந்த நாளுக்காக நான் ஏங்கிப் போயிருந்தேன்மா… நீ இந்த வீட்டுக்கு மருமக மட்டும் இல்ல, எங்க எல்லாருக்கும் மகாராணி, என் செல்லப்பொண்ணு… உங்களை இப்படி பார்க்க உன் அத்தைக்குத்தான் கொடுத்து வைக்கல…” என்று கரகரத்த குரலில் பேசியவர், “விளக்கேத்துமா…” என்றதும், அருகில் நின்ற அரவிந்தை ஒரு பார்வைப் பார்த்தாள்…

என்ன புரிந்ததோ, தந்தையின் ஒரு பக்கம் வந்து நிற்க, மறுபுறம் ஸ்ருதி அவரது கையைப் பிடித்துக்கொண்டு, “மாமா எல்லாம்… எல்லாமே சீக்கிரம் சரியாகும்… நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரப்போற காலம் நெருங்கிடுச்சு… அப்பா உங்களுக்கு செய்தது நம்பிக்கைத் துரோகம், அதை மன்னிச்சு அவரை ஏத்துக்கோங்கன்னு சொல்லமாட்டேன்… அவரே திருந்தி வரும்போது மாட்டேன்னு மட்டும் சொல்லாதீங்க… மன்னிப்பு கொடுக்கறதை விட பெரிய தண்டனை அவருக்கு கிடையாது… இனி எதுக்கும் கவலைப்படாதீங்க… நான் இருக்கேன் உங்ககூட, மகளா… மருமகளா.. மகாராணியா.. இந்த இம்சைக்கு இம்சை கொடுக்குற இம்சையா எப்பவும் உங்களோடவே இருப்பேன்… வருத்தப்படாதீங்க மாமா ப்ளீஸ்…” என சோகமாய் ஆரம்பித்து குறும்பாய் முடிக்க,
“ஏய்… நான் உனக்கு இம்சையா, டாடி பாருங்க நீங்க இவளுக்கு சப்போர்ட் பண்ணவேக் கூடாது… நான்தான் உங்க செல்லப் பையன்… இவ இல்ல…” என்று சிறுபிள்ளைப் போல் சினுங்கவும்,

“ஆமாண்டா கண்ணா, நீதான் என் செல்லப்பையன், என் மருமக என்னோட தங்கப்பொண்ணு…” என ஸ்ருதியின் தலையைத் தடவ,

“வெவ்வெவ்வே…” என கணவனுக்குப் பழிப்புக் காட்டியபடியே தனஞ்செயனின் தோளில் சாய்ந்துக் கொள்ள, கோபமாய் இருப்பதுபோல் காட்டினாலும், அவன் முகமும் நிறைவான மகிழ்ச்சியையேக் காட்டியது…
*****************

“சிவா…. கார்த்திக் அத்தான் வந்திருப்பாரா…? ஷ்ரவ் எப்படி ரியாக்ட் பண்ணுவாளோத் தெரியல, அம்மா மேனேஜ் பண்ண முடியாம கஷ்டப்படப் போறாங்க…” அவன் தோளில் சாய்ந்தப்படியே புலம்பியவளை, சிறுபுன்னகையுடன் பார்த்தான்…

பதிலேதும் வராமல் போக, திரும்பி அவனைப் பார்த்தவள், சிரிப்பதைக் கண்டதும், “ம்ப்ச் சிவா… நான் என்ன சொல்லிட்டேன்னுஇப்படி சிரிக்கிறீங்க…” என சிணுங்கியபடியே அவன் புஜத்தில் குத்த,
வாய்விட்டுச் சிரித்தவன்… “ப்ளைட்ல ஏறினதுல இருந்து, இதோ இப்போ லேண்டாகப் போகுது, இதுவரைக்கும் ஒரே கேள்வியை டிசைன் டிசைனா மாத்திக்கேட்டா, நானும் மாத்தி மாத்தியா பதில் சொல்லுவேன் என் அழகுப்பொண்டாடி, ரோசம் மட்டும் வரும்… ஆனா, காரணமே இருக்காது…” என்றதும்,

“உங்களுக்கென்ன, என் கவலை எனக்கு… ஷ்ரவ் நினைச்சாலே பயமா இருக்கு சிவா…” என்றாள்…

“ம்ம்… புரியுதுடா, நானும் யோசிச்சேன், அதான் ஒரு பிளான் பண்ணியிருக்கேன்… டாக்டர் வெஸ்லின்கிட்ட அண்ணியைப் பார்க்க, கார்த்திக்கை அலோவ் பண்ண வேண்டாம்னு சொல்லிருக்கேன்… நாம போனதும் விடுங்க, அதுவரைக்கும் அண்ணியைப் பத்தி அவங்க மனநிலையைப் பத்தி எடுத்துச் சொல்லுங்கன்னு சொல்லிருக்கேன்… அவங்களும் செய்றேன்னுதான் சொல்லி இருக்காங்க… வெயிட் பண்ணுவோம்…” என்றான் அமைதியாக…

“பிளான் பக்காதான் சிவா… ஆனா, மாமா ஒத்துக்கனுமே…” என்று மறுபடியும் பாவமாய் சொல்ல,

“ஏண்டி, என்னைத் தவிர மத்தவங்க எல்லாம் உனக்கு பாவமாதான் தெரிவாங்களா… இன்னைக்குத்தான் நம்ம கல்யாணம் ஆச்சு… ஒரு கிஸ், ஒரு ஹக், எதுவும் இல்ல, அந்த அரவிந்த் ஜாலியா பர்ஸ்ட்நைட் கொண்டாடுவான்… ஸ்ருதி பார்க்கத்தான் அப்படி, ஆனா, அரவிந்த்காக என்ன வேணும்னாலும் செய்வா, நீயும் இருக்கியே, நீயெல்லாம் அவ ப்ரண்ட்… போடி” என எரிச்சலாய் கத்த…

விழிகளிரண்டும் விரிந்து பார்வை அவனையே மொய்க்க, திகைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள்… அவளின் திகைத்த பார்வை அவனை என்னமோ செய்ய, ஒருகை இடையை வளைக்க மறுகை அவள் முகத்தை மார்போடு இறுக்கிக்கொண்டது…

“ரிலாக்ஸ் பேபி, ரிலாக்ஸ் ஒரு குட்டி டென்சன் அவ்ளோதான்… நம்மளைப் பத்தி யோசிக்காம அடுத்தவங்களையே யோசிக்கவும் அதுல வந்த டென்ஷன்… இப்போ இல்ல… இங்கப் பாரு…” என சமாதானப் படுத்த,

“போயா நீ ஒன்னும் என்னைக் கொஞ்சாத நீ என்னை திட்டுற, போ… போடா…” என அவனைத் தள்ளி விட, என சிலநிமிட ஊடல் அவர்களிடம்…

“சிவா தனாப்பாவை நீங்க தான் அப்படி பேச சொன்னீங்களா…”

“இல்லடா… எனக்கும் ஷாக்தான்… ஆனா, அவர் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டவும் தான் புரிஞ்சது… ஏதோ பிளான்ல தான் இப்படி பேசுறாங்கன்னு… அதான், நானும் அவர்கூட சண்டை பண்ற மாதிரி சப்போர்ட் செய்து டாடியை பேசவே விடாம பண்ணிட்டேன்… டாடி பேசியிருந்தா, நிச்சயம் ஸ்ருதி ஹர்ட் ஆகியிருப்பா… முதல்நாளே வேண்டாம்னுதான் இப்படி ஒரு நாடகம்…”

“ம்ம்.. எனக்கும் கூட பயம் வந்துருச்சு சிவா… ஆனா, நீங்க ஆப்போசிட்டா பேசவும் புரிஞ்சது ஏதோ பிளான்னு… ஆனா, அரவிந்த் அண்ணா இதெல்லாம் உண்மைன்னு நினைச்சு.. ஹா…ஹா… ரியல்லா பைட் பண்றார் தனாப்பாக்கூட…”

“இந்த ஸீனை யாருமே எதிர்பார்க்கலயே, அதோட டாடியோட வீக்னஸ் இத்தனை வருஷமா ப்ரண்டா இருந்த அங்கிளுக்குத் தெரியாம இருக்குமா…? மம்மி டாடியோட வீக்னஸ் ஷ்ருதிதான்.. அதான் எங்களையும் அவளை மேரேஜுக்கு கம்பல் செய்யவச்சது… டாடி கூப்பிட்டு அவ மட்டும் போயிருந்தா டோட்டல் பிளானும் சொதப்பிருக்கும்…”

“ம்ம்ம்… ஆனா எல்லாம் முடிஞ்ச பிறகு நீ என்னமோ ஸ்ருதி காதுல சொன்னியே, வெட்கம்னா என்னன்னு கேட்பா, அவளே வெட்கப்படுற அவளவுக்கு என்ன சொன்ன இந்த அரவிந்தும் மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி அவ பின்னாடியே போறான்….”

“ஹா… ஹா… அதெல்லாம் ரகசியம் சொல்லக்கூடாது…”

“ம்ம்ம்… ரகசியம் ரகசியமாவே இருக்கட்டும்… நமக்கு எதுவும் ரகசியம் இருக்கா என்ன…?”

“ரகசியம் எல்லாருக்குமே இருக்கும் சிவா… உங்களுக்கும் இருக்கும்தானே…? அதேமாதிரி தான் ஸ்ருதிக்கும்…”

“ஸ்ருதிக்கு இருக்குற ரகசியம் அரவிந்த்க்கு தெரியாம இருக்கக்கூடாது… உன்னோட ரகசியங்களை என்கிட்ட சொல்லாம இருக்கக்கூடாது சரியா…”

“ம்ம்ம்… ஆசை தோசை… இதெல்லாம் நீங்கதான் கண்டுபிடிக்கனும் சார்… கண்டுபிடிங்க அதுதான் லைப்பை எண்டர்டைன்மெண்டா கொண்டுபோகும்…”

நீ சொன்னா சரிதான்… இப்பவே பாதி கண்டுப்பிடிச்சுட்டேன்னு நினைக்கிறேன்…” என்று கண்சிமிட்டி சிரிக்க…

அன்று அருவியில் நடந்ததை கூறுகிறான் என்பது புரிய, “ச்சு… சிவா, போங்க நீங்க. நான் பிஸிக்கலி சொல்லல மென்டலா சொன்னேன்…” என்றாள்…

அவள் சொல்வதை ரசனையாகப் பார்த்தவன் வாய்விட்டு சிரிக்க, “அச்சோ ஏன் இப்படி எல்லாரும் நம்ளையேப் பார்க்குறாங்க… ப்ளீஸ் சிவா…” என்றபடியே அவன் வாயை தன்கையால் மூட, மூடிய உள்ளங்கையில் அழுத்தமாய் தன் முத்தத்தைப் பதித்தான் சிவா…

சிறுஊடலும், அழுகையும், சிரிப்பும். சீண்டலும், சினுங்களுமாய் முடிவுக்கு வந்த போது, அவர்களது விமானம் தரையிறங்கி இருந்தது…

பார்மாலிடிஸ் முடிந்து வெளியில்வர, இவர்களை அழைத்துச் செல்ல சிவாவின் நண்பன் விபின் வந்திருந்தான்… நண்பர்கள் அளவளாவி முடித்ததும், சிவா தன் மனைவியை விபினுக்கு அறிமுகப்படுத்தினான்… பிறகு, மனைவியிடம், “என்னோட ப்ரண்ட் விபின்… நம்ம ஊர்தான் மார்த்தாண்டம்… டாக்டர் வெஸ்லினோட ஹஸ்பண்ட்… லவ்மேரேஜ்…” என்றுஅறிமுகப்படுத்த…

வணக்கம் சொல்ல வேண்டும் என்பதுகூட உணராமல் சிவாவையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்…

‘விபின் சிவாவோட ப்ரண்ட், வெஸ்லின் விபினோட வைப், அப்போ… ஷ்ரவ் கேசை வெஸ்லின் அட்டெண்ட் செய்தது, மலேசியாக்கு சிப்ட் பண்ணது எல்லாம் சிவாவோட வேலையா…?’ என்று யோசித்தவளின் முகத்தில் உணர்வுகள் சுற்றிப் பறந்தன…

மனைவியின் முகத்தில் தெரிந்த உணர்வுப் போராட்டத்தில், அவள் கையைப்பிடித்து அழுத்தியவன், நண்பனைக் கண்ணால் காட்ட, சட்டென்று நிகழ்வுக்கு வந்தவள், விபினைப் பார்த்து, “சாரிண்ணா, வெரிசாரி, அண்ட் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… உங்க உதவிக்கெல்லாம் காலம் முழுக்க நன்றி சொன்னாலும் பத்தாது… தேங்க்யூ சோ மச் அண்ணா…” என்றாள்அழுகையோடு…

“ஐயோ என்ன சிஸ்டர் இப்படி எமோஷனல் ஆகறீங்க, நான் இந்த ஹெல்ப் உங்களுக்காக செய்யல, கார்த்திக் அண்ணாக்காக மட்டும்தான்… கார்த்திக் அண்ணா இவனுக்கு மட்டும் ரோல்மாடல் இல்ல… எங்க ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் தான்… நான் அவருக்காத்தான் செய்றேன்… இது ஒருவகையில என்னோட கடமையும் கூட… அதனால இனி தேங்க்ஸோ சாரியோ எதுவும் வேண்டாம்…” என்றவன் சிவாவிடம் திரும்பி, “போகலாம்டா கார்த்திக் அண்ணா வந்து 2ஹவர்ஸ் ஆச்சு… இனியும் லேட் பண்ணமுடியாதுன்னு வெஸ்லின் கால் பண்ணிட்டே இருக்கா…” எனவும்,

“ம்ம்… கிளம்பலாம் மச்சான்…” என்று சிவாவும் நடக்க ஆரம்பித்தான்…

“ஆனாலும் அர்வியோட நிலமையை நினைச்சுப் பார்த்தாதான் கவலையா இருக்கு… ஹாஹா… ஏண்டா இன்னும் அப்படியேதான் இருக்கான் ஸ்ருதி விசயத்துல… எனக்கே ஆச்சரியம் தான்…” விபின்…
“ம்ம்… எனக்கும் ஆச்சரியம் தான்… அப்போ கார்த்திக் போட்டபோடுல திரும்பிக்கூட பார்க்க மாட்டான்னு நினைச்சேன்… கடைசில இப்படி வந்து நிக்கறான்…”- சிவா

“அவனோட கேரட்டருக்கு நம்ம ஸ்ருதிதான் சரியான ஆளு… ரெண்டுவாலும் சேர்ந்து அங்கிள ஒருவழி பண்ணட்டும்…” என்றான் விபின்…

“இவங்க ரெண்டு பேரால அங்கிளுக்கு நல்ல பொழுதுபோக்குதான்… அவரும் இதுங்களோடு சேர்ந்து ஜாலியா எஞ்ஜாய் பண்ணுவார் லைப்பை… அங்கிளும் வாலுதான்…” என்று சிவா கூற, காரில் இருந்த மூவருமே சிரித்து விட்டனர்…

காற்று இதமாகும்...
 
எல்லாம் சிவா நினைத்த மாதிரி நடக்குமா...nice ud sis...
 
Top