Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thennankeetrum Thendral katrum - 8

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 08

ஆறுதல் சொல்ல
ஆள் இருந்தால்
அழுவதில் கூட
சுகம் தான்

“ரதி…”

“ம்ம்…”

“ரதிம்மா…”

“ம்ம்ம்…”

“ரதிபேபி…”

“ம்ம்ம்…. என்னஅர்வி…”

“தூங்கிட்டியா…”

“தூங்குறவளை எழுப்பித் தூங்கிட்டியான்னு கேட்குற நீ என்ன டிசைன்…”

“ம்ம்ம்… நியூ டிசைன்… அவனவன் தூக்கம் வராம அல்லல்படுறான், இவ என்னடான்னா, படுத்த பத்து செகண்ட்ல குறட்டை விட்டுத் தூங்குறா, கொஞ்சமாச்சும் பீலிங்ஸ் வரனும்டி… அதெல்லாம் இல்லாம, நீ என்ன டிசைன்…” கடுப்பாகிப் போனான்…

“ஹான்… உனக்கே புதுடிசைன் ஒன்னு வரும்போது… எனக்கு வராதா, எரிச்சல் பண்ணாம இடத்தைக் காலிபண்ணு…” வந்துட்டான் பெருசா நியூ டிசைன் ரிசெர்ச் பண்ண…” என முணுமுணுத்தவளின் முகத்தைத் தன்பக்கம் திருப்பியவன்,

“ம்ம்ம்… ரிசெர்ச் பண்ணத்தான் போறேன்… என்னோட நியூ டிசைனை உன்னால என்ன செய்ய முடியும்…” என்றவன் அவள் சுதாரிக்கும் முன்னே இதழ்களைச் சிறை செய்திருந்தான்…

அவன் செய்கையில் முதலின் திமிறி தடுத்தவளை, அடக்கித் தனக்குள்ளேக் கொண்டு வந்து முத்தயுத்தத்தை தொடங்கினான்…

தானும் அனுபவித்து, அனுபவிக்க வைத்து என மிக நீளமாய் போய்கொண்டிருக்க, நிமிடங்கள் கழிந்த நொடியில், ஆரம்பித்தவனே முடிக்கவும் செய்தான்…

அவனது முத்தத்தில் கிறங்கிப் போனவள், அவன் மார்பிலேயே துவண்டிருந்தாள்… முன்னே விழுந்த குழல்களை காதோரம் ஒதுக்கியவன், “ரதி…” எனவும்,

“ம்ம்ம்…” என்றவளிடம், “உனக்கு ஓகேவா… உன்னோட சம்மதம் இல்லாம, அடுத்து எதுவும் நமக்குள்ள நடக்காது… ஐ ப்ராமிஸ் யூ…” என்று உணர்வுப் பூர்வமாக பேசியவன் அடுத்த நொடி கட்டிலில் விழுந்திருந்தான்….

“ஏய் என்னடி பண்ற,” என அவன் கேட்டு முடிக்கும் முன், அவனைத் தள்ளி அவன் மீதேறி அமர்ந்திருந்தாள் அவனின் ராட்சசி…

“ம்ம்.. என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது…” அவனது தலைமுடியைப் பிடித்து உலுக்கியபடியே கத்த,

“அய்யோ… அம்மா…. டாடி… டாடி, என்னைக் காப்பாத்துங்க, இவளுக்கு பேய் பிடிச்சிருக்கு, காப்பாத்துங்க டாடி…” எனக் கத்த,

“டேய்… என்னடா சொன்ன, எனக்கு பேய் பிடிச்சுருக்கா, எனக்கா, ஆமாண்டா, பேய், பிசாசு எல்லாம் மொத்தமா வந்துருக்கு, இப்போ உன் ரத்தத்தைக் குடிக்கப் போறேன்டா…” என அவன் கழுத்தைக் கடிக்கப் போக, அடுத்த நொடி, அவளைக் கீழேத் தள்ளி, இவன் மேலிருந்தான்…

“ஏய்…. லூசு, எருமை மாடு மாதிரி இருந்துக்கிட்டு, என்மேல உட்கார்ந்திருக்க, இறங்குடா, வெயிட்டா இருக்கடா பக்கி…” என்று அவனைக் கீழே தள்ள முயன்றபடியே கத்தியவளை,

“வாயை மூடுடி, என் மானம் மொத்தமும் போச்சு, இதுக்கே இப்படின்னா, இனிமேல் நடக்குறதுக்கு என்ன சொல்லுவ…” என்றபடியே அவளது கைகளை மடக்கி, அதரங்களை அடக்கியிருந்தான் தன் இதழ்களால்…

மீண்டுமொரு முத்தயுத்தம் இதழ்களுக்குக் கிடையே இதழ்களின் போரட்டாங்கள் ஆரம்பித்தால் இடையில் முடியுமா என்ன…? அவர்களே அறியாமல், அவர்களது இல்வாழ்க்கை இனிமையாய் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்தது…

இதழ்களால் ஆரம்பித்த போராட்டம், மெய்யோடு மெய்யாக இணைந்து, ஆதவன் தன் ஒளிக்கரங்களை பூவுலகுக்கு அனுப்பியும் அவர்களது தேடல் தீர்ந்த பாடில்லை…

“ரதி… ரதிம்மா…” என்றவனின் கிசுகிசுப்பான குரலில்,
“அர்வி ப்ளீஸ் கொஞ்ச நேரம் தூங்கலாம்…” என சிணுங்கியபடியே, அவனில் மேலும் ஒன்றிட, அவளை இறுக்கியப்படியே,

“மணி எட்டாச்சு பேபி, நமக்காக டாடி வெயிட் பண்ணிட்டு இருப்பார்… உங்க வீட்டுக்கு வேற போகனுமே… உன் டாடி ஆபிஸ் போறதுக்குள்ள…” என்றான் மீண்டும் அதேகுரலில்…

“டாடி…” என்ற வார்த்தை மந்திரம் போல் வேலை செய்ய, போர்த்திருந்த போர்வையோடு குளியலறைக்குள் ஓட, “ஹேய் அறிவு இருக்கா போர்வையும் எடுத்துட்டு போற,” என்றான் அங்கிருந்த அவளது புடவையை எடுத்துத் தன்மேலே போட்டுக்கொண்டு,

“ச்சீ… உனக்கே மானம் போகும் போது, எனக்குப் போகாதா, இம்சை… இம்சை…” என்று உள்ளேயிருந்து கத்தியவள், “அர்வி எனக்கு சேஞ்சிங் ட்ரெஸ் எடுத்துக் கொடுடா…” என்றாள். தான் மாற்றுடை கூட எடுத்துப்போகாத தன் முட்டாள்தனத்தை எண்ணி…

“ஆஹா… ஸ்ருதிக்கு ஸ்ருதி குறையுதே அரவிந்த் அப்போ உனக்கு இன்னோரு சான்ஸ் இருக்கும் போலயே… ட்ரை பண்ணு ராசா…” என்றபடியே அவளது ஆடைகளை எடுத்துக்கொண்டு, அவளே எதிர்பாராத நேரத்தில் உள்ளே நுழைந்தான்…

“ஏய்… ஏண்டா உள்ளே வந்த, என்ன பண்ற, வெளியே போடா குரங்கு…” அர்வி ப்ளீஸ் என்றவளின் அதட்டல்கள் எல்லாம் கெஞ்சலயாய் மாறி கொஞ்சலாய் முடிய, களித்து, குளித்து அவர்கள் வெளியேவர மதியத்தை தாண்டியிருந்தது பொழுது…

அசதியில் ஆழ்ந்து உறங்கும் மனைவி அருகில் அவளையே உரித்து வைத்தாற் போலொரு அழகுதேவதை… அவன் தொலைத்த அவனது வசந்தம் திரும்பவும் அவனிடமே வந்து விட்டதா…? இன்னுமே அவனால் நம்பமுடியவில்லை…

அவன் வாழ்வில் நடந்த, வாழ்க்கையையே மாற்றிப் போட்ட நிகழ்வுகள், வீட்டைவிட்டு வெளியேறி, உயிரானவளைத் தேடிய தருணங்கள் கொடுமையாய் கழிந்த கொடூர நாட்களை எண்ணியவன் விழிகள் கலங்கிச் சிதறின…

புள்ளிமானாய் தன் பின்னேத் துள்ளித் திறிந்தவளை, இப்படி நிம்மதியில்லாமல் ஆக்கிவிட்டேனே, என்று மனம் நொந்து, அமர்ந்த வாக்கிலேயே அவளது பாதங்களில் தன் கண்ணீர் முகத்தைப் புதைத்துக் கொண்டான்…

அறைக்கு வெளியில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் அனைவரும்… அழுகிறான் என்று கார்த்திக்கின் உடல் குலுங்குவதிலேயே மற்றவர்களுக்குப் புரிந்தது. ராஜவேலு இறந்த சில தினங்களில் தான் பத்மா அழுததை பார்த்திருப்பாள் சஷ்டி…

அதன் பிறகு அவர் அழுது பெண்கள் இருவரும் பார்த்ததே இல்லை… ஆனால் இன்று சஷ்டிகாவின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தார்… அனைத்தும் சரியாகி விட்டது… தன் பெண்களின் வாழ்க்கை சீராகிவிட்டது என்ற மகிழ்ச்சியில் வந்த கண்ணீர்…

அவரை சமாதானம் செய்து கொண்டே சிவாவைப் பார்த்தாள் சஷ்டி… இவை அனைத்திற்கும் காரணம் என் அனைத்துமான இவன்தானே என்ற உணர்வுகள் கண்களில் பொங்க, பெருமிதமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்…

சஷ்டியின் பார்வையை உணர்ந்து, அவளைப் பார்த்து, ‘என்ன’ என்பது போல் புருவத்தை ஏற்றி இறக்க, அவள் அவசரமாய் தலையசைத்து ‘இல்லை’ என்பதுபோல் கூற, அவளது செய்கையில் இளநகை மின்ன மீண்டும் ஒருமுறை கண்ணாடி வழியே உள்ளே ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, மனைவியின் அருகே, ஒரு சேர் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்…

அவளும் பார்வையால் இடைவெளியைச் சுட்டி ‘ஏன்’ என்பது போல் புருவத்தை சுருக்க, அதில் சிவாவின் பார்வை மின்ன, சஷ்டியின் தோளில் சாய்ந்திருந்த பத்மாவைக் கண்ணால் காட்டிவிட்டு, அவளைப் பார்த்து நமுட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான்…

அதை உணர்ந்த அவளும் சட்டென தன் பார்வையை தாயை நோக்கித் திருப்பினாள்… “எங்கே அவர் பார்த்து விட்டாரோ…”? என்பது போல் பதட்டம் வேறு… நல்லவேளை அதையெல்லாம் அவர் கவனிக்கும் நிலையில் இல்லை… அதைப்பார்த்து ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டவள், கணவனைப் பார்த்து முறைத்தாள்…

அவள் முறைக்க, இவன் சிரிக்க என சில நொடி நேர ஊடலில் இருவரும் தாங்கள் இதுவரைப் பட்ட கஷ்டங்களை மறந்து அவர்களது உலகத்தில் லயித்திருந்தனர்…

கார்த்திக்கை எப்படி சமாதானம் செய்து ஊருக்கு அழைத்துச் செல்வது என்ற யோசனை வேறு அவனுக்கு, கார்த்திக் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்ற வேண்டுதலும் வேறு… யார் கூப்பிட்டால் அவன் வருவான் என்று யோசித்தவன், “எஸ்அவளேதான்…” முகத்தில் கீற்றாக புன்னகை தோன்றியது தன்னையும் அறியாமல்….

ICU கதவு திறக்கவும், எழுந்தவனை நோக்கி, வந்தான் கார்த்திக்… சிவாவின் அருகே அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தவன் குற்ற உணர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான்… அவன் சங்கடத்தை உணர்ந்து கார்த்திக்கின் அருகில் சென்ற சிவா, “அண்ணி இப்போ எப்படி இருக்காங்க கார்த்திக்… கண் முழிச்சாங்களா… குட்டிப்பொண்ணு என்ன எழுந்துட்டாளா…”? என்றான் அவன் சங்கடம் தீர்க்கும் பொருட்டு…

சிவாவின் கரங்களைப் பிடித்தவன், பத்மாவைப் பார்த்துக் கொண்டே, “இல்ல… அதுவந்து… வது… எழுந்துக்கல, ஆனா பாப்பா முழிச்சிட்டா… அதான் என்ன செய்யனும்னு என்று மென்று முழுங்கியவனை பார்த்துவிட்டு, அமைதியாக அவனைக் கடந்து ICUவை நோக்கிப் போனார் பத்மா… அதுவே அவர் இன்னும் அவனை
மன்னிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லியது. தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டான் கார்த்திக்…


காற்று இதமாகும்..


 
Advertisement

Advertisement

Top