Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thennankeetrum Thendral katrum - 9

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 09

அன்பு
என்ற வார்த்தைக்கு
ஆயிரம் அர்த்தம் இருப்பினும்
நான் கண்ட மெய் அர்த்தம்
நீதான்…!

“டாடி நீங்க இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் போதும், நாங்க பட்டதெல்லாம் போதும்… இதுக்குமேல நீங்க என்ன செஞ்சாலும் அதைப் பொறுத்துக்க எங்களால முடியாது… நீங்க என்னோட அப்பா, என்ன சொன்னாலும் செய்வேன்… ஆனா, கார்த்திக் அண்ணா என்னோட ஹீரோ, ரோல் மாடல், நான் ஒரு ஒழுக்கமான பொண்ணா உங்க முன்னாடி நிற்க, அவர்தான் காரணம், நீங்களோ, மம்மியோ கிடையாது… அவருக்கு செய்த துரோகத்தை எங்களால் மன்னிக்கவே முடியாது…”

“அந்த பாவத்தைத் தீர்க்கனும்னா, அவரையும், அண்ணியையும், குழந்தையையும் நீங்களேப் போய் கூப்பிட்டு வாங்க, இல்ல.. நாங்க செய்யமாட்டோம்னு சொன்னா உங்களுக்கு நாங்க யாருமே இருக்கமாட்டோம்… நானோ, சிவாவோ இந்த வீட்டுக்கு வரமாட்டோம்… உங்களை மம்மி டாடின்னு கூட சொல்லமாட்டோம்… இட்ஸ் எ ப்ராமிஸ்…” என்ற ஸ்ருதியின் ஆவேசப் பேச்சில் அதிர்ந்து தான் போயிருந்தனர் லிங்கேஸ்வரனும் அவரது மனைவியும்…

“ஹேய் டாடிகிட்ட என்ன பேசுற, அவன் ஒன்னும் உன்னோட சொந்த அண்ணன் கிடையாது… அவனுக்காக நீங்க ரெண்டு பேரும் எங்களையே எதிர்த்துப் பேசுவீங்களா…? அறிவில்லை…? எப்படி டி என் வயத்துல பிறந்தீங்க…”

என்கூட பிறக்கலன்னாலும் கார்த்திக் அண்ணாதான் என்னோட ஃபஸ்ட் அண்ணா… அதுதான் உண்மை, பெத்தவங்க வேறனாலும் ரத்தம் ஒன்னுதான்… இந்தப் பரம்பரை ரத்தம் தான் எங்க மூனுபேர் உடம்புலயும் ஓடுது… அதை இல்லைன்னு உங்களால் சொல்ல முடியுமா…?

ஆச்சி இருந்தவரைக்கும் எந்தப்பிரச்சனையும் வந்ததுல்ல அவங்க இறந்ததும் தான் உங்க நடவடிக்கைகள் மாறிப்போயிடுச்சு… “எப்படி.. டாடி, உங்க அண்ணனுக்கு உங்களால துரோகம் பண்ண முடிஞ்சது… பெரியம்மாவும், பெரியப்பாவும், ஆச்சிக்கிட்ட கூட அண்ணனைக் கொடுக்காம, உங்க கையலதான் கொடுத்தாங்களாமே… எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தா அதை செய்திருப்பாங்க… அந்த நம்பிக்கையைக் கொன்னுட்டீங்களே டாடி… அவங்க ஆன்மா உங்களை மன்னிக்கவே மன்னிக்காது டாடி…” என்ற மகளின் வார்த்தைகள் லிங்கேஸ்வரனை வருத்தியதோ, அமைதியாக எழுந்து சென்றுவிட்டார்…

அமராவதி தான் ஸ்ருதியுடன் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்… அவளும் விடவில்லை, பேசியதையே பேசுவது போல் இருக்க, அரவிந்த் தான் ஸ்ருதியை அடக்கினான்… மாமியாரை முறைக்கவும் தவறவில்லை… அரவிந்த் முறைக்கவும், கோபமாக அந்த இடத்தை விட்டுக் கணவரைக் காண சென்றார் அமராவதி…

“ரதிம்மா… நாமளும் கிளம்பனும், நைட் ப்ளைட்…”

“ம்ம்… போகலாம், நான் டாடிக்கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்…” என்றுக் கிளம்பியவள், அறைக்குள் நுழையும் முன்னே, பெற்றோர் இருவருக்கும் காரசாராமான விவாதங்கள் நடந்துகொண்டிருந்தது…

இறுதியாக லிங்கேஸ்வரன் மனைவியிடம், “நான்போய் அவங்களை அழைச்சுட்டு வரத்தான் போறேன்… அவங்களை ஏத்துக்கிட்டு எந்த பழி உணர்ச்சியும் காட்டாம, பக்குவமா நடந்துக்க உன்னால முடியும்னா என்கூட கிளம்பு, ரெண்டு பேரும் போவோம்…”

”இல்ல, என்னால முடியாது அப்படின்னா, கார்த்திக்கோட சேர்த்து நம்ம ரெண்டு பிள்ளைகளையும் மறந்துடு… இனிமேல் அதுதான் நடக்கும்…
உன் பேச்சைக்கேட்டு கார்த்திக்குக்கு நான் துரோகம் செய்யல, என் அண்ணன் என்மேல வச்ச நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்டேன்… அதுக்கானத் தண்டனையா, இது இருக்கட்டும்… “

“என்னோட அண்ணனும், அண்ணியும் எப்படி கார்த்திக் கூட கடைசி வரைக்கும் இருக்க முடியலயோ, அதேமாதிரி நாமளும் நம்ம பிள்ளைங்க கூட இருக்க முடியாது போகும்…”

“செய்த பாவத்துக்குப் பரிகாரமா அவங்களை அழைச்சுட்டு வந்து இந்த வீட்ல வைப்போம்…” அதேசமயம், நீயும் நானும் இந்த வீட்ல இருக்கமுடியாது…

“ஏத்துக்கிட்டு சந்தோஷமா இருக்குறது வேற, வேண்டா வெறுப்பா முகத்தைத் திருப்பிக்கிட்டு இருக்குறது வேற, அவங்க வந்ததும், நாம் கிளம்பிடனும்…” என்றார் நீளமாக…

“நீங்க என்னை ஏமாத்துறீங்க, அவனுக்காக, அவனுக்காகப் போய் எல்லாத்தையும் விட சொல்றீங்க, உங்கம்மா உயிரோட இருந்த வரைக்கும் என்னை நிம்மதியா இருக்கவிடல, இப்போதான் என் இஷ்டத்துக்கு சந்தோஷமா, நிம்மதியா இருக்கேன் அதுவும் இப்போ பொறுக்கல…”

“எங்க சொந்தத்துல ஒரு கழுததையை அவனுக்கு கட்டிவச்சு ரெண்டு பேரையும் எங்கையாச்சும் துரத்தி விடலாம்னு பிளான் பண்ணா, காதல் கருமாதின்னு வந்து நிற்குறான்…”

“அவளுக்காக வளர்த்த நம்மளையே எடுத்தெரிஞ்சு பேசுறான்… அதையெல்லாம் மறந்துட்டீங்க போல, இதை என்னால ஒத்துக்கவே முடியாது… அவன் இங்கே வரவேக்கூடாது…”

“நீ என்ன கத்தினாலும், நான் சொன்னது சொன்னதுதான்… என்னோட முடிவு மாறாது… தப்பு செய்றது இயற்கைதான், அதை தகுந்த நேரத்துல உணர்ந்து திருந்திக்கனும் அவன்தான் மனுசன்… அதுதான் வாழ்க்கைக்கும் நல்லது…”

“எனக்கும் என் பிள்ளைகளோட சந்தோஷம் தான் முக்கியம்… அதுக்காக நான் இறங்கிப் போறதுல தப்பில்லை… அதோட, தப்பு செய்தது நம்ம ரெண்டு பேரும், தண்டனை என் பிள்ளைங்களுக்கா…?”

“ஸ்ருதி சொன்ன மாதிரி நம்ம பாவத்தை அவங்க தலையில இறக்க வேண்டாம்… அதுதான் பெரியபாவமே…! நான் போய் அந்தப் பொண்ணோட அம்மாக்கிட்ட மன்னிப்புக் கேட்டு, கார்த்திக்கையும் அவன் மனைவியையும் அழைச்சுட்டு வரேன். அதுவரைக்கும் உனக்கு டைம் இருக்கு…. என்னோட கஷ்டமும், நஷ்டமும் உனக்கும் சேரும்னு தோணிச்சுன்னா, அவங்களை ஏத்துக்கிட்டு ஆரத்தி எடுத்து உள்ளேக் கூப்பிடு, இல்லையா… இதோ, பண்ணை வீட்டுசாவி” என்று அவர் முன்னே ஒரு சாவியைப் போட்டுவிட்டு அங்கேப் போய் தங்கிக்கோ… இனிமே நமக்கான வீடு அதுதான்…” என்றவர் அறையை விட்டு வெளியேற, வாயிலில் நின்றிந்த ஸ்ருதி அவரைப் பிடித்து, “சாரி டாடி, வெரி சாரி, நான் கோவத்துல அப்படி பேசிட்டேன்… மன்னிச்சிடுங்க டாடி ப்ளீஸ்…”என்றுஅழவும்,

“இல்லைடா, நீ அப்படி பேசலன்னா, நானும் என்னோட தப்பை உணர்ந்திருக்க மாட்டேன்… தப்பு என்பேர்ல தான்… ம்ம்… சரிவிடு, பர்ஸ்ட் உன் மாமனார் கிட்ட மன்னிப்புக் கேட்கனும், அவனையும் இத்தனை வருஷம் பழகின பழகத்தையும் மறந்து ரொம்பக் கஷ்டப் படுத்திட்டேன்… என்னை மன்னிப்பானான்னு தெரியல…” என்றார் வருத்தமாய்…

“நோ.. டாடி, அங்கிளுக்கு உங்கமேல கோபம் இல்லை வருத்தம் தான் பட்டார்… நீங்க ஏன் இப்படி மாறீட்டீங்கன்னு… இது என் நண்பனோட குணமே இல்லன்னு சொன்னார்… அவன் தப்பை உணர்ந்துட்டா அவனே என்னைத் தேடி வருவான்னு சொன்னார்… அவர் சொன்னது இப்போ நிஜமாயிடுச்சு… ரியல்லி கிரேட் ப்ரண்ட்ஸிப் டாடி… உங்களோடது… வாங்க போகலாம் அங்கிள் வெயிட் பண்ணுவார்…” என்றவள் அறைக்குள்ளே எட்டிப் பார்க்க, அங்கே கார்த்திக், சிவா, ஸ்ருதி, அரவிந்த் நால்வரும் இருந்த போட்டோவை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அமராவதி…

“எல்லாம் சரியாகும், அவளும் சரியாகிடுவா யோசிக்கட்டும்…” என்று மகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்…

“ஏண்டா அரவிந்த் எங்க…? இங்கதானே இருந்தான்…” காரை ஓட்டியபடியே லிங்கேஸ்வரன் கேட்க,

“சிவா போன் பண்ணவும், அவசரமா பேசிகிட்டே கிளம்பிட்டான் டாடி… இருந்த கால் பண்றேன்…” என்றாள்…

“குட்டிமா, என்ன இது, மாப்பிள்ளையை போய் அவன் இவன் சொல்லிட்டு இருக்க, மத்தவங்க முன்னாடியாவது மரியாதையா சொல்லி பழகு சரியா…” என்றார் கண்டிப்பான குரலில்…

“சரிப்பா” என்ற ஸ்ருதியின் குரலில் ஸ்ருதி இறங்கிவிட்டது…

“ஹலோ… என் புருஷனை நான் எப்படி வேணும்னாலும் கூப்பிடுவேன்னு சொல்லுடி ரதிக்குட்டி…” என்ற அரவிந்தின் குரல் காதில் கேட்க,

“ஐயோ… கால் பண்ணதையே மறந்துட்டேன்…” என்று தலையில் அடித்தவள்,
“லூசு… லூசு…” என்று முணுமுணுத்தப் படியே, “அர்வி எங்க போயிட்டீங்க சொல்லவே இல்ல…” எனவும்,

“ஆஹா… என்ன ஒரு இன்பம், என் பொண்டாட்டி மரியாதையா பேசுறதைக் கேட்கும் போது, பாரதி ஏன் ‘தேன் வந்து பாயுது காதினிலேனு…’ பாடினாருன்னு புரியுது… ஆஹா… ஆஹா” என,

“அர்வி…” என்று ஸ்ருதி பல்லைக் கடிக்க, “கூல் பேபி… கூல் நான் வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன்… சண்டைப் போட்ட ரெண்டு ப்ரண்ட்ஸ்ங்க ஒன்னுசேரப் போறாங்க… மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஸ் ஷிப் தான்னு பாடப் போறாங்க… அவங்க அலும்புல வீடு ஏதும் ஆகிட்டா… அதான் வீட்டை ரெஸ்கியூ பண்ண டீம் ரெடி பண்ண போயிட்டு இருக்கேன்…” என்று சிரிக்காமல் சொல்ல, அவனது பேச்சில் இவள் வாய்விட்டு சிரித்து விட்டாள்…

உண்மைக் காரணம், தனஞ்செயனிடம் லிங்கேஸ்வரனின் மாற்றங்களைக் கூறி தயார்படுத்தவும், மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தான் அவன் முன்னமே கிளம்பியது… அவளுக்கும் புரிந்தது…

“ல வ்யூ அர்வி…” என்று முணுமுணுப்பாகக் கூறிவிட்டு, வைத்துவிட்டாள்… தான் பேசியதை தந்தைக் கேட்டுவிட்டாரோ என்று அவரைப் பார்க்க, அவரோ சாலையில் கவனமாக இருக்க “ஷ்ஷ்”…என்ற பெருமூச்சோடு போனை அனைக்க, மகளது செயலில் லிங்கேஸ்வரனுக்கும் புன்னகை மலர்ந்தது…

அடுத்து இருவரும் வீட்டிற்கு வர, தயக்கத்துடன் ஆரம்பித்த அவர்களது நலம் விசாரிப்பு சில பல மன்னிப்புகளில் முடிந்தே போனது…

சில நாட்களாக இருவருக்குள்ளும் இருந்த மனக்கசப்புகள் மறைய, அடுத்து என்ன செய்யலாம், கார்த்திக்கை எப்படி வரவைப்பது, ஷ்ரவந்தியின் அம்மாவிடம் பேசவேண்டியவை எனப் பலவற்றையும் பேசி முடிவுக்கு வந்தனர்…

அதன் பொருட்டு, அரவிந்தையும் ஸ்ருதியையும் முன்னே அனுப்பி, முடிந்தளவு அமராவதியை அழைத்துக்கொண்டு இவர்கள் அடுத்தநாள் கிளம்புவதாக உறுதிசெய்தனர்…

ஆனால் அமராவதியின் மனநிலை தெரிந்தால் இப்படி யோசித்திருப்பார்களா….?
 
Top