Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thennankeetrum Thendralkatrum - 12

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 12

நீ சொல்லி நானும்
நான் சொல்லி நீயும்
கேட்காத ஒன்று...
நீ எனக்காக அழுவதும்
நான் உனக்காக அழுவதும்
..
கார்த்திக் ஷ்ரவந்தியிடம் கூறிவிட்டு, அடுத்த இரண்டு நாளில் ஊருக்கு வந்திருந்தான். திடீரென வந்த மகனை ஆராய்ச்சியாய் பார்த்தாலும் எதுவும் கேட்கவில்லை லிங்கேஷ்வரன். மகன் முன்னே அமைதியாக இருந்தாலும், தனியாக கணவரை நச்சரித்துக்கொண்டுதான் இருந்தார் அமராவதி. எப்போதும் யோசனையோடு அலையும் மகனைப் பர்க்க, அவருக்கு எதுவோ இருப்பது போல் தோன்றியது. அவர் நினைத்ததைப் போல் அடுத்த இரண்டு நாளில் கார்த்திக் தன் காதலைப் பற்றி வீட்டில் சொல்லியிருந்தான்.

“இதெல்லாம் சரிபட்டு வராது, வாக்கு கொடுத்துட்டேன். அது இதுன்னு உளராம போய் வேலையைப் பாரு, இனி நீ அங்க போக வேண்டாம். ஜாப் ரிசைன் பண்ணிடு..!” என்று திட்டவட்டமாய் கூறிவிட்டார் லிங்கேஷ்வரன். அவருக்கு கார்த்திக்கை நன்றாகத் தெரியும், விளையாட்டுத் தனமாய் பேசமாட்டான் என்று. அதனால் தான் முடிவாய் கூறிவிட்டார்.

“இல்லப்பா.. என்னால விடமுடியாது, விட்டுட்டு வரமாதிரியான சூழலை நான் எப்பவோ கடந்து வந்துட்டேன். அவள் எனக்கு மனைவியா வரது மட்டும் தான் இனி நடக்கனும். நீங்க என்னோட முடிவை மறுக்க மாட்டீங்கன்னு நம்பி அவளுக்கு வாக்கு கொடுத்துட்டேன். "

"நீங்க எனக்காக இதை செய்து தான் ஆகனும். ப்ளீஸ் அப்பா... என்னோட நிலைமையும் புரிஞ்சுக்கோங்க...” என்றான் அமைதியாய், அதே சமயம் திடமாய்.

“என்ன பேசுற நீ... அவர் சொல்றது உனக்கு காதுல விழுதா..? இல்லையா..? அவர் என்ன சொல்றாரோ அதை மட்டும் செய்..” இடையில் புகுந்து கத்தினார் அமராவதி.

“அமரா நீ கொஞ்சம் அமைதியா இரு.. நான் பேசுறேன்..” என்று மனைவியை அடக்கியவர்,

“இங்க பாரு கார்த்திக், உன்னோட பேக் கிரவுண்ட் உனக்குத் தெரியுமா... தெரியாத..? உன் பணத்துக்காகவும், இந்த வசதிக்காகவும் கூட பொண்ணூங்க உயிரா இருக்குற மாதிரி நடிப்பாங்க, அந்த நடிப்பை நம்பி ஏமாந்திடக் கூடாது, புரிஞ்சுக்கோ..? நீ சின்ன பையன் கிடையாது..” என்றார் பொருமையாய்.

“எனக்கு எல்லாம் தெரியும்ப்பா, ஆனா நான் யாரு, என்னனு எதுவுமே அவளுக்குத் தெரியாது. தெரியாம தான் என்னை விரும்பினா..? அவளூக்கு என்னாலத் துரோகம் பண்ண முடியாது டாடி, ப்ளீஸ்” என்றான் மன்றாடியபடியே..

‘தான் செய்த தவறை எப்படி வெளியே சொல்லுவது, சொன்னாலும் தன்னை விட்டுவிட்டு அவளைத்தானே அசிங்கமாய் பேசுவார்கள்’ என பயந்தான்.

“நான் சொல்லல, இவன் இப்படித்தான் வந்து நிப்பான்னு, இனம் இனத்தோட தானே சேரும். இவங்கப்பா புத்தி தானே இவனுக்கும் வரும். அந்த மனுசனும் போய் சேத்துல கால் வச்ச மாதிரி, இவனும் போய் வச்சுருக்கான். நான் அன்னைக்கே சொன்னேன். சொந்தத்துல ஒன்ன பார்த்து கட்டி வச்சுட்டு எங்குட்டும் அனுப்புவோம்னு, கேட்டாத்தானே, இப்போ எப்படி வந்து நிக்குறான் பாருங்க, என் புள்ளைங்களுக்கு எமனா..?” என்று ஆங்காரமாய் அமராவதி கத்த,

“அம்மா.. அமரா...” என்று இருவரும் ஒரு சேரக்கத்த,

“எதுக்கு இப்படி கத்துறீங்க, நீங்க என்னவேனும்னாலும் பன்னுங்க, ஆனா இவன் யாரோ ஒருத்திய இந்த வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது.. இல்லை அப்படித்தான்னு நீங்க யோசிச்சா, நான் என்னோட பிள்ளைங்களோட, இந்த வீட்டை விட்டுப் போயிடுவேன். யாரை கொண்டுவந்து என்ன வேணும்னாலும் பண்ணுங்க.. தலை தலையா அடிச்சிக்கிட்டேன், கேட்டாத்தானே, இப்போ என்ன செய்யப் போறீங்க, உங்கம்மா இருந்த வரைக்கும் என்னை கொஞ்சம் கூட நிம்மதியா விட்டதில்ல, நீங்களும் உங்கம்ம பேச்சைக் கேட்டு என்னை மனுசியா கூட மதிச்சதில்ல..”

“அந்த மகராசி போனதும் தான், நான் சொல்றது மாதிரி கேட்டீங்க, இப்போ, இதோ வந்து நின்னுட்டானே, உங்கம்மா விவரமா சொத்துல சரி பாதிய இவன் பேருக்கு வச்சிட்டு போயிடுச்சு, ஒன்னுமே இல்லாம வந்தவளோட புள்ளைக்கும் அதே சொத்து, சொத்து சுகமா வந்த என் புள்ளைங்களுக்கும் அதே சொத்தா... என்ன நியாயம், நான் கேட்கும் போதெல்லாம் பார்த்துக்கலாம்னு வாயை அடைசிட்டு, இன்னைக்கு நீங்க வாயடைச்சுப் போய் நிக்குறீங்க, என்ன செய்யப் போறீங்க, எனக்கு கொடுத்த வாக்கை மறக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இதோ நிக்குறானே இவங்கிட்ட தெளிவா பேசி ஒரு முடிவுக்கு வாங்க..” என்றாள் ஆங்காரம் குறையாமல்.

லிங்கேஸ்வரனுக்கும் கோபம் தான், ஆனால் எடுத்துச் சொல்லி அவனை எப்படி வழிக்கு கொண்டு வரலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். தன்னுடைய நண்பன் தனாவிடம் பேசிப்பார்க்கலாம், என்றும் நினைத்தார். ஆனால் அமராவதி இடையில் பேசி அனைத்தையும் கெடுத்துவிட்டார். இனி கார்த்திக்கையும் சமாளிக்க வேண்டும், மனைவியையும் சமாளிக்க வேண்டும், என்ன செய்வது புரியாமல் நின்றிருந்தார்.

அமரா பேசியதில் கார்த்திக்கின் மூளை நரம்புகள் அனைத்தும் செயலிழந்தது போல் ஆகிவிட்டன. அவர் பேசியது நிஜமா என்று அவனால் நம்பவே முடியவில்லை. “அம்மா... அம்மா..” என்று அவர் பின்னையே அலைந்த நாட்களை நினைத்துப் பார்த்தான்.

தன்னைப் பெற்ற தாயின் நினைவு கூட அவனுக்கு இல்லை. இவர்கள் இருவரையும் தான் பெற்றோர் என்று எண்ணியிருந்தான். அந்த எண்ணங்கள் எல்லாம் தண்ணீரில் எழுதிய கவிதைகள் போல ஒன்றிற்கும் பலன் இல்லாமல் போயிருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் தெரியவில்லை, மூளைதான் மரத்திருந்ததே. யாரையும் பார்க்காமல், வீட்டை விட்டு வெளியேறியிருந்தான். ‘இந்தப் பணத்துக்காகவா என்னிடம் பாசம் காட்டினார்கள்’ இந்த ஒரு எண்ணம் தான் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. கால்கள் தன்னைப் போல் எங்கேயோ சென்றது.

கார்த்திக் வெளியேறியதைக் கூட உணராமல், லிங்கேஸ்வரனும் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அமராவதி, கணவர் தனியே இருப்பதைப் பார்த்து,

“என்ன அவங்கிட்ட எல்லாத்தையும் பேசியாச்சா, அவன் இஷ்டப்படி எல்லாம் நடக்கட்டும், ஆனா அவனுக்கும் இந்தக் குடும்பத்துக்கும், சொத்துக்கும் சம்மந்தம் இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டுப் போகச் சொல்லுங்க. அவன் யாரைக் கட்டி என்ன செஞ்சா நமக்கென்ன..?” என்றதும்,

“இது நாக்கா இல்லை விஷக்கொடுக்கா.? நீயெல்லாம் என்ன ஜென்மம், ச்சே.. நாந்தான் அவங்கிட்ட பேசுறேன்னு சொல்றேன் இல்ல, அப்புறம் என்னத்துக்குப் பேய் மாதிரி கத்துற, இனிமேல் இதைப்பத்தி நீ பேசவேக் கூடாது. கார்த்திக் உன்மேல எப்படி பாசமா இருந்தான். அவங்கிட்ட பாசமா பேசியிருந்தா போதும், அவனே வேண்டாம்னு வந்திருப்பான். இவ்வளவு உறுதியா வேணும்னு சொல்றானா, தவிர்க்க முடியாத பிரச்சினையில இருக்கானோ என்னவோ... இதுவே நம்ம ரெண்டு பேரும் செத்து, நம்ம பிள்ளைங்களுக்கு இந்த நிலமை வந்திருந்தா என்ன பண்ணிருப்ப.. எந்த ஒரு விசயத்தையும் பேசும் போது யோசிச்சுப் பேசனும்..” என்று சத்தம் போட்டவரின் போன் அலற, எடுத்துப் பேசியவருக்கு கிடைத்த செய்தியில் ‘கடவுளே’ அப்படியே தொப்பென்று அமர்ந்து விட்டார்.

கணவர் பேசியதில் கோபமாய் இருந்தவர், அடுத்து அவரது செயலில் பதறிப்போய் , “என்னங்க..? என்னாச்சு..? யார் என்ன சொன்னாங்க..? என்றதும்,

“போச்சு.. எல்லாம் போச்சு.. என்னை நம்பி விட்டுட்டுப் போனாங்க, அவங்களுக்கு நான் உண்மையாவே இல்ல, யாரும் என்னை மன்னிக்க மாட்டாங்க.. கடவுளே..” என்றுத் தலையிலடித்துக் கொண்டு கதறினார்.

என்னங்க... என்னனு சொல்லுங்க..” என மீண்டும் கேட்க,

“உன்னால தான் எல்லாம் உன்னால தான், கார்த்திக் அவனுக்கு ஆக்ஸிடென்டாகிடுச்சாம்..” என்று கோபத்தில் கத்தியவர், அங்கிருந்த சோபாவில் அவரைத் தள்ளிவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தார். அடுத்தடுத்து நடந்த அனைத்தும் அவரது கையை மீறிய செயல்களாகவே மாறியிருந்தன.

தன்னிலை மறந்து போய் கொண்டிருந்த கார்த்திக் ஒரு தெருமுனையில் திரும்ப, உள்ளிருந்து வந்த லாரி ஒன்று அவனைத் தூக்கி எரிந்தது. எரிந்ததில் எதிரே இருந்த கம்பவுன்ட் சுவரில் மோதி விழுந்திருந்தான்.

மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். தலையில் அடி என்றாலும், அவனது இடுப்புக்கு கீழேதான் பலத்த அடி. ரத்தமும் அதிகம் போயிருந்தது. தலையின் பின்பக்கம் அடிப்பட்டிருந்ததால் மயக்கம் தெளியவே இல்லை.

கொடுமையாய் கழிந்தன பலநாட்கள், தனா தான் லிங்கேஸ்வரன் கூடவே இருந்தார். அமரா வந்தலும், கணவர் அவருடன் பேசுவதில்லை என்று வருவதை நிறுத்தியிருந்தார். மாதம் முழுதாய் கழிந்தாலும் சுய உணர்வு பெற்றால் மட்டுமே அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்யலாம்,’ என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதற்கிடையில் தான் ராஜவேலு கார்த்திக்கைத் தேடி போன் செய்ததும், கனவரின் அலட்சியத்தில் உண்டான கோபத்தில் அமராவதி ஊன்மையை மறைத்துக் கூறியதும் நடந்திருந்தது.

தனாவின் அறிவுரைப்படி கார்த்திக்கை மங்கலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு முதலில் MRI ஸ்கேன் எடுத்து குணமாக்கி விடலாம் என்று நம்பிக்கையளிக்க, அப்போது தான் மற்றவர்களுக்கு நிம்மதியே வந்தது.

அடுத்தடுத்து கார்த்திக்கின் உடலில் அனைத்தும் முன்னேற்றம் தான். திடிரென ஒரு நாள் உறக்கத்தில் இருந்து எழுவது போல, எழுந்து ‘வது.. வது..’என்று அரற்றினான். அதன்பிறகு அவனது நினைவும் வந்து உணர்வுகளும் விழித்துக் கொண்டன. அவன் எழுந்து அமரவே மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. அவனது காதலைப்பற்றி சுத்தமாய் மறந்திருந்தார் லிங்கேஸ்வரன்.

கார்த்திக்கும் எதையும் யாரிடமும் பேசவில்லை, “ஸ்ருதியிடமும், பாலாவிடமும் சொன்னீங்களா..” என்றான் ஒரு நாள். இல்லையென்பது போல் தலையாட்ட, “சொல்ல வேண்டாம்... எப்பவுமே..” என்று விட்டான். அவரும் பதில் பேசவில்லை.

இடுப்பில் அடிப்பட்டிருந்ததால், அவனுக்குப் பிசியோதெரபியும் கொடுக்கப் பட்டது. வலியும் அதிகமாய் இருக்க, மீண்டும் ஒரு ஸ்கேன் செய்து விடலாம்’ என்றார் டாகடர். ஸ்கேன் செய்ததுமே ‘கார்த்திக்கிற்கு இனி குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தகுதியே இல்லை’ என்று விட்டார்.

இதைக்கேட்ட லிங்கேஸ்வரன் நொருங்கி விட்டார் என்றால், எதேச்சையாக கேட்ட கார்த்திக்கோ மனதளவில் இறந்தே விட்டான். ‘நான் ஒரு ஆன்மையற்றவனா... என்னால் என் வதுவிற்கு ஒரு குழந்தை கொடுக்க தகுதியில்லாதவனா..? கடவுளே ஏன் இன்னும் என்னை உயிரோடு வைத்திருக்கிறாய்.. நான் வருவேன் என்று நம்பி வாழும் அவளுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்.. இல்லை என்ன செய்யப்போகிறேன்...’ தன் அறைக்கு வந்த கார்த்திக் துவண்டு விட்டான்.

அவளுக்குத் துரோகம் செய்தது போல் எண்ணங்கள் படையெடுக்க, அவள் வாழ்க்கையை சீராக்க ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்று உறுதியாய் நினைத்தான்.

அது அவளை விட்டு விலகியிருந்தால், அவனை மறந்து பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணாந்து கொள்வாள் என்று முட்டாள்தனமாய் நம்பினான், தன் வாரிசை அவள் சுமக்கிறாள் என்றுத் தெரியாமல்... குணமாகும் வரை அங்கையே இருந்தான். இந்த செய்தி தனக்கு தெரியும் என்று துளியும் காட்டிக் கொள்ளவில்லை.

லிங்கேஸ்வரனும் ஓடிக்கொண்டே இருந்தார். அவருக்கு கார்த்திக் இந்தளாவு சரியாகி வந்ததேப் போதும் என்று எண்ணியிருந்தார். அமராவதியின் போக்கை தனா விமர்சிக்க இருவருக்குள்ளும் மனஸ்தாபம் உண்டானது. இப்படியே போக ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் காணாமல் போயிருந்தான்.

கார்த்திக் இப்படி செய்வான் என்று அறியாத லிங்கேஸ்வரனோ நிலை குழைந்துப் போய்விட்டார். எல்லாப்பக்கமும் அவனைத் தேட ஆட்களை வைத்தார். தெரியாமல் தொலைந்து போனால் கண்டுபிடித்து விடலாம். தெரிந்தே கானாமல் போனவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது..

கார்த்திக் நேராக சென்றது புனேவிற்கு தான். அங்கு சென்றதும், அவன் கேட்ட செய்தி கார்த்திக்கை குற்ற உணர்ச்சியில் தள்ள, அவர்களது சொந்த ஊரான தஞ்சாவூருக்கே சென்றான். அங்கும் அவர்கள் இல்லையென்ற செய்தி கிடைக்க, முற்றிலுமாய் ஒடிந்து போனான்.

ஒரு பெரும் பணக்காரன் பிச்சைக் காரனைப் போல் தெரு தெருவாய் அலைந்தான். அவளை விலக்க வேண்டும் என்று எண்ணியவனே, அவள் வேண்டும், வேண்டும் எண்டு அலைந்தான்.

பாலாவும், அரவிந்தும் வந்து விட, கணவரை முந்திக்கொண்டு அமரா “கார்த்திக் ஒரு பெண்ணொடு ஒடிவிட்டான்’ என்று சொல்லிவிட்டார். அவரும் நடந்த எதையும் கூறவில்லை. பிறகு கார்த்திக் எங்கே என்று கேட்பார்களே..? அதனால் மனைவி சொல்வது உண்மை என்பது போல் அமைதியாகி விட்டார்.

இளையவர்களீன் கேள்விக்கு எந்தப்பதிலும் கிடைக்க வில்லை. நண்பனின் நிலையறிந்து தனாவும் எதுவும் சொல்லவில்லை. மாதங்கள் இரண்டான போது, கரூரில் இருக்கும் நண்பன் ஒருவனிடமிருந்து பாலாவிற்கு போன் வர, அடுத்த நாளே அங்கு வந்திருந்தான். தன் உணர்வின்றி பிதற்றியபடியே இருந்த கார்த்திக்கைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டான் பாலா.

கார்த்திக்கின் இந்த நிலைக்கு யார், என்ன காரணம் ஒன்றும் புரியாமல் இருந்தவனுக்கு விடையாக லிங்கேஸ்வரன் வந்து நின்றார் அவன் மனக் கண்ணில். மறுபடியும் அவனை ஒரு பாதுகாப்பான ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு, தன் தந்தையிடம் வந்தான்.

“கார்த்திக் பத்தி எனக்கு எல்லாம் தெரியனும்..?” என்றவனின் இறுகிய குரலில் அவரால் எதையும் மறைக்க முடியவில்லை. அவர் கூறிய அனைத்தையும் கேட்டவன், அடுத்து ஒரு வார்த்தை பேசாமல் கிளம்பிவிட்டான். லிங்கேஸ்வரனுக்கும் மனம் அமைதியாகி விட்டது.

அனைத்தும் தன் கையை மீறி சென்று விட்டதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இனி எது நடந்தாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்றும் புரிந்தது. நடப்பது நடக்கட்டும் என்று இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு மனதை அமைதியாக்கிக் கொண்டார்.

அடுத்து நடந்தது எல்லாம் பாலாவும், அரவிந்தும் சேர்ந்து யோசித்து எடுத்த முடிவுகள் தான். கார்த்திக் குணமாகி வரும் வரை அமைதியாக இருந்தார்கள். அவன் மன நிலையில் முன்னேற்றம் ஆனதும் தான் திருமண ஏற்பாடுகளே நடந்தது.

கார்த்திக் மற்றும் ஸ்ரவந்தியின் விசயத்தைத் தவிர்த்து மற்றதெல்லாம் அரவிந்த் சொல்லிக் கொண்டிருந்தான் எல்லாரிடமும். கார்த்திக்கும் இதே செய்தியைத் தான் ஷ்ரவந்தியிடம் உள்ளே பேசிக்கொண்டிருந்தான்.

காலங்கள் தானே இதற்கு மருந்து.. யார் யாரை குற்றம் சொல்வது.. குறை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லையே, கடைசி வரை யாரும் குறையோடும் இருப்பதில்லையே… அமராவதியும் மாறுவார் என்ற நம்பிக்கையோடு அந்த நொடி சந்தோசங்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர்…

காற்று இதமாகும்..
 
பாவம் கார்த்திக் எத்தனை கஷ்டம்
அமராவதி இத்தனை நடந்தும் திருந்தல
 
Top