Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaaro - 3

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 3:

காலை எட்டு மணியானாலும்...நகரங்களில் விடிந்ததற்கான அறிகுறிகள் தெரிவதில்லை.ஆனால் கிராமங்களில் அப்படியில்லை.இருள் விலகாத காலைப் பொழுதில் அவர்கள் விழித்து விடுவது வழக்கம்.

காலை நான்கு மணிக்கே...ஊரின் ஒவ்வொரு வீடும் விழித்துக் கொண்டது.வேகமாக எழுந்த சக்தி....குளித்து முடித்து....வீட்டின் வாசலில் சாணம் தெளித்துக் கொண்டிருந்தாள்.

குப்பாயி...அங்குள்ள மாட்டுக் கொட்டகையில்... கூட்டி அள்ளிக் கொண்டிருக்க...மகாலிங்கம் எழுந்து வெளியே சென்று விட்டார்.ஊரில் இருந்த அந்த ஒரு டீக்கடையில்...இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க....தோட்டங்களுக்கு செல்வோர்...ஒவ்வொரு புறமாய் சென்று கொண்டிருந்தனர்.

ஆனால் இதை எல்லாம் அறியாமல்...கேரவனுக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் அஜய்.

அவர்கள் ஷாட் எடுக்கப் போகும் பகுதியில்....ஷாட் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க...இருள் மறைந்து விடியத் தொடங்கியிருந்தது.

“கண்ணன்..நீங்க சாரை இப்ப எழுப்பி விட்டா சரியா இருக்கும்..” என்று இயக்குனர் சொல்ல...அவரை ஆமோதிப்பதைப் போல்...சென்றான் கண்ணன்.

அஜய்யை எழுப்ப சென்ற கண்ணனுக்கோ...அவன் உறங்கும் நிலை பார்த்து எழுப்ப மனமே வரவில்லை.

அவன் இப்படி அசந்து தூங்குவது இதுவே முதல் முறை.கட்டுக் கடங்காத காளை ஒன்று...சிறிது ஓய்வு எடுப்பதைப் போல் தோன்றியது கண்ணனுக்கு.

“சார்...” என்று மெதுவாக கண்ணன் அழைக்க...அவனிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை.

“சார்..சார்..” என்று கொஞ்சம் குரலை உயர்த்த....அவன் அழைப்பில் லேசாய் புரண்டான் அஜய்.

கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தவனுக்கு..அப்பொழுது தான் நியாபகம் வந்தது..அவன் நன்னியூரில் இருப்பது.

“நீங்க போங்க கண்ணன்...நான் இன்னும் அரைமணி நேரத்தில் ரெடி ஆகிடுவேன்னு போய் சொல்லுங்க..!” என்றபடி..தன் வேலைகளை முடிக்க தயாரானான்.

கண்ணனுக்கு அவனைக் கண்டு ஒரு பக்கம் பிரமிப்பாக இருந்தது. அவனுக்கெல்லாம் அவனை தூக்கத்தில் எழுப்பினால்..ஒரு அரைமணி நேரம் கழித்து தான் எழுவான்...ஆனால் அஜய்யோ...உடனே எழுந்தது மட்டுமல்லாமல்...சிறிதும் தொய்வின்றி....கிளம்புவதைப் பார்க்கும் போது..கண்ணனுக்கு கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.

“அப்படி இருப்பதால் தான் அவன் அவ்வளவு பெரிய ஹீரோ..” என்று கண்ணனின் மனம் நக்கலடிக்க...”அது என்னவோ உண்மைதான்..” என்று எண்ணியபடி சென்றான் கண்ணன்.

குளித்து முடித்து...ரெடியாகிக் கொண்டிருந்த அஜய்....கண்ணாடி முன் நிற்க...ஏனோ அவனை அறியாமல் அவள் நியாபகம்.

புல்லுக் கட்டைத் தூக்கிக் கொண்டு....அவள் சென்ற கோலம்..அவன் கண் முன்னே....ஜன்னலில் தெரிந்த அவள் முகம் அவன் முன்னே... என்று வரிசையாக படமெடுத்து நிற்க...அவள் யோசனையில் நின்றவன்...

“சார்..மேக்கப் மேன் ரெடி..” என்ற குரலில் கலைந்தான்.

இயக்குனர் கையைப் பிசைந்து கொண்டிருக்க...”சார்...இப்ப வந்துடுவார்,...” என்ற கண்ணன்...அவருடைய பதட்டம் பார்த்து....

“என்ன சார்..எனி பிராப்ளம்..?” என்றான்.

“அதை ஏன்ப்பா கேக்குற...ஹீரோயின் இன்னும் வந்த பாடில்லை...வேற பட ஷூட்டிங்கல இருந்து வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சாம்...இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்ன்னு சொல்றாங்க...!” என்று கடுப்புடன் சொல்ல..

“ஐயோ சார்...என்ன இப்படி சொல்றிங்க..? சார்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது..அவ்வளவு தான்...” என்று கண்ணனும் அவன் பங்குக்கு பதற...

இயக்குனருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அஜய்க்கு எப்பொழுதும் நேரம் தவறாமை மிகவும் முக்கியம்...கொஞ்சம் முன்னால் கூட வந்து விடுவான்..ஆனால் தாமதாமாக வர மாட்டான்.

“எந்த காலத்திலும் ஹீரோயிங்களுக்காக காத்திருக்க மாட்டேன்..”. என்று சொல்வது தான் அவன் முதல் கண்டிஷன்.

“இப்ப என்ன பண்றது..?” என்று இயக்குனர் கையைப் பிசைய...

“சார்..பேசாம அஜய் சார் சீன்ஸ் எல்லாம் எடுப்போம்..” என்று கேமரா மேன் சொல்ல...

“யோவ்..நீ வேற ஆத்திரத்தை தூண்டாத..நாம இங்க என்ன முழு படத்தையுமா எடுக்க போறோம்...ஜஸ்ட் ஒரு சாங்...ஒரு பைட்...ஒரு லவ் சீன்....அவ்ளோதான்...இதுல எல்லாத்துலையும் ஹீரோயின் ரோலும் இருக்கு..அப்பறம் எப்படி எடுக்குறது..?” என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர...

கேரவனுக்குள் சென்ற கண்ணன்..மெதுவாக அஜய்யிடம் விஷயத்தை சொல்ல...அவனின் முகமோ உக்கிரமாய் மாறியது...விருட்டென்று அந்த இடத்த விட்டு எழுந்தவன்...

“என்ன நடக்குது இங்க..?” என்றான் இயக்குனரிடம் கோபமாய்.

“சார்...கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க....இப்ப வந்துடுவாங்க..பிளீஸ்..” என்று அவர் கெஞ்ச...

“ஹீராயின் யாரு...?” என்றான் கேள்வியாய்.

“துப்னா சார்..” என்றார்.

அவ்வளவு தான்...அஜய்க்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததென்று தெரியவில்லை.அவன் முகம் கண்டு அந்த இயக்குனருக்கு ஜன்னியே வந்துவிடும் போல் இருந்தது.

“கண்ணா இங்க வா..!” என்றான் ஆக்ரோஷமாய்.

“சார்..!” என்று அவன் வேகமாய் அருகில் வர..

“துப்னா தான் ஹீரோயின்னு உனக்கு தெரியுமா..?” என்றான்.

“தெ..தெரியும் சார்...!” என்று அவன் திக்கித் திணறி சொல்ல...

அஜய் அவனை விட்ட அரையில் அவன் செவி கலங்கியது.அனைவரும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்க...

“இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை...” என்று உக்கிர மூர்த்தியாய் கேட்க....

“சாந்தா மேம் தான் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னாங்க...படத்துக்கு பூஜை போடுறப்ப நீங்க இல்லாததால..எல்லாத்தையும் அவங்க தான் சார் பார்த்துகிட்டாங்க....” என்றான் திக்கித் திணறி.

அவனுக்கும்,துப்னாவிற்கும் எப்பொழுதும் ஆகாது.ஆகாது என்பதைக் காட்டிலும் அவளைக் கண்டால் இவனுக்கு அறவே பிடிக்காது. இவனுடன் நடிக்க...எல்லா ஹீரோயின்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்க... இவளை புக் செய்திருப்பது...அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.

“சார்..துப்னாவும் பேமஸ் ஹீரோயின் தான சார்..!” என்று அந்த இயக்குனர் திக்கித் திணறி சொல்ல..

“அது எனக்குத் தேவையில்லாத ஒன்று..!” என்றவன்...கண்ணனிடம் திரும்பி..

“கால்ஷீட்டை குளோஸ் பண்ணுங்க...அட்வான்சை ரீபே பண்ணிடுங்க..!” என்றவன் அங்கிருந்து செல்ல முற்பட..

“சார்...பிளீஸ்...ஹீரோயின் என்னோட செலக்சன் கிடையாது... தயாரிப்பாளர் அவங்க தான் ஹீரோயின்னு சொல்லிட்டாங்க...சார் எனக்கு இது முதல் படம்...எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு இந்த கதையை ஓகே பண்ணியிருக்கேன்...தயவுசெஞ்சு என் வயித்தில் அடிச்சுடாதிங்க..” என்று மன்றாட...

“நெவர்..கடவுளே வந்து சொன்னாலும்...பிடிக்காத ஒரு விஷயத்தை இந்த அஜய் எப்பவுமே செய்ய மாட்டான்..செய்ய வைக்கவும் முடியாது..” என்றான் திமிராய்.

“சார்...ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க...நான் பேசிப் பார்க்குறேன்..” என்று அவர் நகர...

“சார்...” என்று இழுத்தான் கண்ணன்.

“என்ன..?” என்பதைப் போல் பார்த்தான்.

“சார்..அவரைப் பார்த்தா பாவமா இருக்கு....ஒரு ரெண்டு சீன் தான சார்...அப்பறம் ரெண்டாவது ஹீரோயின் வந்திடுவாங்க சார்...” என்றான் அமைதியாய்.

அஜய் அமைதியாய் இருப்பதைப் பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தான்.

“பாவம் சார்...ரொம்ப திறமையானவர்...நெறைய ஷார்ட் பிலிம்ஸ் பண்ணிருக்கார்..எல்லாமே வித்தியாசமான கதைக் கரு...கஷ்ட்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கார்...இதுல தான் சார் அவர் வாழ்க்கையே இருக்கு...” என்று கண்ணன் சொல்லிக் கொண்டிருக்க...

“அவரை வரச் சொல்..” என்பதோடு முடித்துக் கொண்டான்.

சந்தோஷமாய் அவனைப் பார்த்த கண்ணன்...வேகமாய் இயக்குனரிடம் சென்று..”சார் உங்களைக் கூப்பிடுறார்...” என்றவுடன்..”இதோ கூப்பிடுறேன் சார்..!” என்றபடி போனை வைத்து விட்டு வந்தார் அவர்.

“என்ன சீன்ஸ் இங்க எடுக்க போறீங்க..கதை என்ன..?” என்றான்.

அவனை அதிர்ச்சியாய் பார்த்த இயக்குனர்...கதையே இவருக்குத் தெரியாதா...என்று ஆச்சர்யமாய் பார்த்தவர்...”எப்படி சார்..கதையே தெரியாம..சீன்ஸ் தெரியமா....டேக் எப்படி போவிங்க..?” என்றார்.

“அது என்பாடு...நீங்க இப்ப இந்த லோக்கேஷன்ல என்ன சீன் எடுக்க போறீங்க அதை மட்டும் சொல்லுங்க...” என்றான்.

“சார்...உங்களுக்கு ஒரு இன்ட்ரோ சாங்...வித் ஹீரோயினோட...அப்பறம் ஒரு பைட் சீன்....அப்பறம் துப்னாவோட டெத் சீன்...கதைப்படி உங்களுக்கு இந்த படத்தில் ரெண்டு ஹீரோயின் சார்...துப்னா கதையோட பிளாஸ்பேக் மட்டும் தான் வருவாங்க...இங்க பிளாஷ் பேக் சீன் தான் எடுக்க போறோம்..” என்றார்.
 
“சோ...கதைப்படி துப்னா சாகனும் இல்லையா..?” என்றான்.

“ஆமா சார்..”

“ஓகே..ஷாட் ரெடி பண்ணுங்க..” என்றான் அசால்ட்டாய்.

அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் இயக்குனர் தவிக்க.. கண்ணனுக்கு புரிந்து போனது...துப்னாவிற்கு இந்த படத்தில் சாவு இல்லையென்றால்... அஜய் இதற்கு சரி சொல்லியிருக்க மாட்டான் என்று.

அதற்குள் அங்கே ஒரு கூட்டமே கூடி விட்டது...அனைத்து வேலைகளும் பரபரப்பாய் நடக்க...அஜயோ..சற்று தள்ளி அமர்ந்து அந்த இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தான்.

காவிரி ஆற்றின் கரையின் மேல் அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்க...எப்படியும் படபிடிப்பு தொடங்க..இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால்...அப்படியே மெதுவாக நகர்ந்து கரையோரம் நடந்தான்.

இங்கே படப்பிடிப்பை பார்க்க... சுற்றியுள்ள கிராமத்து மக்கள் குவிந்த வண்ணம் இருக்க....

அங்கே சக்தியோ....அப்படி ஒன்று இந்த ஊரில் நடப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை.கரையோரம் நடந்து சென்றவன...கொஞ்ச தூரம் வந்துவிட்டதை எண்ணி..திரும்பி நடக்க என்னும் போது...அந்த பேச்சுக் குரல் அவனைத் தடுத்தது.

“ஏ சக்தி...இன்னைக்கு ஒரு நாள் வேலையை சீக்கிரம் விட்டா.. நாங்களும் போய் பாப்போம்ல..” என்று ஒருத்தி சொல்ல..

“என்னத்தைக்கா..?” என்றாள் சக்தி புரியாமல்.

“அதான்...நம்ம ஊருல..ஏதோ சினிமா சூட்டிங்கு நடக்குதாம்ல....காலையில பயலுக சொல்லிட்டு இருந்தானுக...அசய் வந்திருக்காரம்ல...” என்று இழுக்க...

“அக்கா..அது அசய் இல்ல...அஜய்...” என்று திருத்தினாள்.

“அட எதுவோ ஒன்னு..நீ விடுவியா மாட்டியா..?” என்றாள் அவள் காரியமே கண்ணாய்.

“என்னக்கா விளையாடுறிங்களா...எவ்வளவு வேலை கிடக்கு....அதை விட்டுட்டு உங்களுக்கு இப்ப ரொம்ப முக்கியமா இது..அந்த அஜய்... இன்னைக்கு நடிச்சுட்டு நாளைக்கு போய்டுவாரு...ஆனா நீங்க அப்படியில்லை..நீங்க வேலை செஞ்சாதான் உங்க வயித்துக்கு கஞ்சி...” என்றாள் புரிய வைக்கும் நோக்குடன்.

“அது என்னவோ உண்மைதான்....ம்ம்ம்...” என்று சலித்துக் கொண்டவள்... ”ஏதோ நம்ம ஊரு வந்திருக்காகளே...பார்க்கலாம்ன்னு நினைச்சேன்...இப்ப விட்டா....நாமல்லாம் இப்படி ஆளுகளை எப்படி பார்க்குறது..?” என்று சொல்ல..

“அக்கா..அவங்களும் மனுஷங்க தான்...எதுக்கு தலையில் தூக்கி வச்சு ஆடுறிங்க....வேலையைப் பாருங்க..” என்றவள்...அடுத்த மடையைத் திறந்து கொண்டிருந்தாள்.

மக்கா சோளத்தை அவர்கள் நட்டுக் கொண்டிருக்க...அவர்கள் நட்டு முடித்த பகுதிகளுக்கு எல்லாம்..சக்தி தண்ணி பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.இழுத்து சொருகிய தாவணியும்,முட்டி வரை தூக்கி சொருகிய பாவாடையும்.... கையில் மம்புட்டி சகிதம் நிற்க...அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்தவனுக்கு மூச்சையடைத்தது.

அந்த சேற்றில் தெரிந்த அவள் பளீர் கால்கள்...அவன் கண்களுக்கு விருந்தாக....அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன்...அவள் பேசிய பேச்சில் கடுப்பானான்.

“ஏதோ அவள் முன் தான் தாழ்ந்து விட்டதாய் எண்ணினான்.என்னை பத்தி என்ன தெரியும் இவளுக்கு...இவ பார்க்குறதுக்கு கூட தகுதியில்லாதவனா நான்..(அவ எங்கடா அப்படி சொன்னா..?)” என்று எண்ணியவன்....வாயத் திறக்க போக...

“சக்தி இந்த ஹீரோ சாரு..நேருல அவ்வளவு அழகா இருக்காரம்ல..உண்மையாவா..?” என்று இன்னொருத்தி கேட்க..

“எனக்கென்ன தெரியும்...எவன் எப்படி இருந்தா எனக்கென்ன...?” என்றவள்..தன் வேலையில் கண்ணாய் இருக்க...

“என்ன சக்தி இப்படி சொல்லிபுட்ட..நம்ம ஊருல வயசு புள்ளைங்க எல்லாம் அங்க தான் இருக்காளுக...அந்த ஹீரோவா பார்க்குறதுக்கு..நீ என்னடான்னா...இங்க தண்ணி கட்டிக்கிட்டு இருக்க..?” என்று குறைபட...

“அக்கா..அவன் வேலையை அவன் பார்க்குறான்..என் வேலையை நான் பார்க்குறேன்...” என்றவள்....

“பார்க்கலைன்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்....நேத்து நம்ம ஆலமரத்துக்கு அடியில ஒரு கார் நின்னுட்டு இருந்தது.அதில தான் அவன் இருந்திருக்கான்.நைட் என்னடா சத்தம் கேட்குதேன்னு எந்திரிச்சு பார்த்தேன்....” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்...

“நீ ஹீரோ சார பார்த்தியா..ஆள் எப்படி..?” என்று எல்லாரும் ஆவலாய் கேட்க..

“ம்க்கும்...எங்க..? பார்க்கலைக்கா...இருட்டுல சரியா தெரியலை..” என்றாள்.

“அப்பறம்..”

“அப்பறம் என்ன அப்பறம்..? பேசாம போய் தூங்கிட்டேன்...” என்றாள் சாவகாசமாய்.

“அடிப்பாவி...நீயெல்லாம் என்ன பொண்ணு...நீ வயசுக்கு வந்துட்டியா இல்லையா..?”என்று இளம் பெண்ணொருத்தி கேட்க...

என்னக்கா நக்கலா..?” என்றாள்.

“இல்லை...அப்படி ஒரு ஆளப் பார்த்துட்டும் போய் தூங்கியிருக்கேன்னா.. எனக்கெனவோ சந்தேகமா இருக்கு..” என்று அவர்கள் வம்பிழுக்க...

ஏனோ அவள் மேல் கோபம் இருந்தாலும் அந்த இடத்தை விட்டு அவனால் செல்ல முடியவில்லை.இதற்கு மேல் இருந்தால்..தன்னைக் காணாமல் அங்கே தேடுவார்கள் என்று எண்ணியவன்....வந்த வழியே திரும்பிப் போக எண்ணி திரும்ப...

முன்பின் அனுபவம் இல்லாத வரப்பு பகுதி..அவனது காலை இடறி விட...அங்கே நெற் பயிர் நடவுக்கு தயாராய் இருந்த சேற்றுக்குள் விழுந்தான்.

சத்தம் கேட்டு சக்தி நிமிர்ந்து பார்க்க...அவனின் முகம் அவளுக்குத் தெரியவில்லை.

“யாரோ விழுந்த மாதிரி இருக்கே...?” என்றவள்...நீங்க வேலையைப் பாருங்க நான் யாருன்னு பார்த்துட்டு வரேன்....என்றபடி செல்ல...

அஜய்யின் நினைப்பில் இருந்த அவர்களோ....தங்கள் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்க....இவள் செல்வதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

அஜய்யோ..வேகமாய் எழுந்து கொள்ள முயற்சி செய்ய..அவனால் முடியவில்லை.அதற்குள் அங்கு வந்த சக்தி..

“யார் சார் நீங்க..இப்படியா சேத்துக்குள்ள விழுந்து வைப்பிங்க... எந்திருங்க..!” என்றாள்.

அவனால் அவளுக்கு பதில் சொல்லவும் முடியவில்லை... எழுந்திருக்கவும் முடியவில்லை.ஆனால் அவள் முன் அதைக் காட்டிக் கொண்டால்..தன் ஆண்மைக்கே இழுக்கு என்று எண்ணிக் கொண்டான்.அதானால் அமைதியாக இருக்க...

“எந்திருங்க..” என்றாள் மறுபடியும்.

அவன் அசையாமல் இருக்க..”ஒருவேளை அடிகிடி பட்டுருச்சோ...” என்று சத்தமாய் முனங்கியவள்...

“கையக் குடுங்க சார்...!” என்றாள்.

சற்று யோசனையுடன் அவன் கையைக் கொடுக்க....அவளால் அவனைத் தூக்க முடியவில்லை.அவன் அசைந்து கொடுத்தா தானே...

“சப்பா..என்னா கணம்... “ என்று அவள் மூச்சு வாங்க....”சார்...என்னால முடியலை..இருங்க ஆம்பிள்ளைங்க யாராவது இருந்தா கூட்டிட்டு வரேன்..” என்று அவள் நகரப் போக...

அவனோ..அவளின் கையை விடவில்லை...அவள் தன் கையைப் பார்த்துக் கொண்டே....”சார்..விடுங்க கையை..” என்று உதற முற்பட..அவன் பிடி இரும்புப் பிடியாக மாறிக் கொண்டே போனது.

கொஞ்ச நேரத்திற்கு முன்பு வரை கூட..அவனுக்கு அவளை எதுவும் செய்யும் நோக்கமில்லை.ஏற்கனவே அவள் பேசியிருந்தது அவனுக்கு கோபத்தை கிளறியிருக்க..இப்போது அவளும் தானாய் வந்து வலையில் சிக்கியிருந்தாள்.

கிராமத்தில் இது சகஜமான ஒன்று.வாய்க்கால் வரப்பில்..தவறி விழுந்தால்..யாராக இருந்தாலும் உதவிக்கு செல்வார்கள்.சக்தியும் எப்பவும் போல் எதார்த்தமாய் நினைத்து கையைக் கொடுக்க....அதுவே அவளுக்கு வினையாகிப் போனது.

சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள்...அப்படி என்ன செய்து விட முடியும் என்று அவள் அசால்ட்டாய் நிற்க..அவள் தைரியம் பார்த்து அவனுக்குள் சிறு ஆனந்தம்.

அவன் முகம் முழுவதும் சேறு அப்பியிருக்க...அவனை அவளால் பார்க்க முடியவில்லை.ஆனால் அவன் உடையைப் பார்த்தவளுக்கு புரிந்து போனது...இவன் ஷூட்டிங்கிற்காக வந்தவன் என்று.அவர்கள் ஊரில் இப்படி நவநாகரிகமான உடையை யாரும் அணிவதில்லை.

அவன் அவள் கையை சுண்டி இழுக்க....தன் மேல் வந்து விழுவாள்..என்பது அவன் எண்ணம்.

ஆனால் அவளோ..நின்ற இடத்தை விட்டு அணுவும் அசையவில்லை.

“இந்த ஜல்சாப்பு வேலையெல்லாம் வேற எங்கையாவது வச்சுக்க.. என்கிட்டே வேண்டாம்..” என்று ஒரே உதறாய் உதறினாள் அவன் கையை.

அவன் எண்ணியது நடக்காமல் போகவே..அது அவனின் தன்மானத்தை சீண்ட...வேகமாய் எழுந்தவன்..பார்த்து அடியை எடுத்து வைத்து...வேகமாய் சென்ற அவள் பின்னால் சென்றவன்....

பின்னால் சத்தம் கேட்டு..அவள் வேகமாய் திரும்ப...அவளே எதிர்பாரா வண்ணம்...அவளை இழுத்தவன்....அவள் வாயைத் திறக்கும் முன்...தன் இதழ் கொண்டு அவள் இதழ் மூடினான்.

“ம்ம்..ம்ம்...” என்று அவள் அவனிடம் இருந்து விலக முற்பட..அவளால் முடியவில்லை.அவன் தோளில் இரண்டு கைகளாலும் அவள் குத்த...அவன் அப்பொழுதும் விட்ட பாடில்லை.

“சக்தி...” என்று தூரத்தில் குரல் கேட்கும் வரை..அவன் இதழ் யுத்தத்தை நடத்த...இவள் திமிர..ஒரு கட்டத்தில் அவளை விட்டான்.அவள் தடுமாறி விழப் போக..அந்த சமயத்தைப் பயன்படுத்தியவன்....வேகமாய் நடந்து....அருகில் இருந்த ஆற்றில் குதித்தான்.

சக்தியோ நடந்த எதையும் நம்ப முடியாமல் பிரம்மை பிடித்தார் போன்று நிற்க...

“சக்தி....” என்று மீண்டும் குரல் வர...தன்னிலைக்கு வந்தவளுக்கு கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.

தேவையில்லாமல் உதவி செய்ய வந்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை உணர்ந்தாள்.

அவனின் இதழ் பட்ட அவள் இதழ் தீயாய் தகிக்க....வாய்க்காலில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீரை எடுத்து வேகமாய் முகத்தைக் கழுவினாள். ஆனால் மீண்டும் எரிவதைப் போல் இருக்க....கோபத்துடன் திரும்பியவள்... அங்கிருந்த பச்சை மிளகாய் செடியில் இருந்த மிளகாயைப் பறித்து தன் இதழ்களில் தானே தடவிக் கொள்ள...அது அதை விட எரிந்தது.

அதற்கு இந்த எரிச்சல் எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணியவள்....மனதிற்குள் அவன் யார் என்ற எண்ணம் வர...யோசனையுடன் நின்றாள்.

ஆனால் அவள் செய்கையை தூரத்தில் தண்ணீருக்குள் இருந்து பார்த்த அஜய்க்கு...பச்சை மிளகாயைத் தன் மேல் தேய்த்ததைப் போன்று எரிந்தது.அவன் பார்வையின் உக்கிரம் கூட...”இருக்குடி உனக்கு..!” என்று மனதிற்குள் கருவிக் கொண்டான்.
 
Top