Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 16

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 16:

அவனையே பார்த்துக் கொண்டு அவள் நின்றிருக்க...சற்றே லேசாய் புரண்டான் அஜய்.

“ஹூஹீம்..இந்த எருமை இன்னைக்கு எழுந்திருக்காது போலவே..?” என்று எண்ணியவள்...அங்கு இருந்த பூஜாடியை எடுத்து ஒரே போடாய் போட்டாள்.

பட்டென்று கேட்ட சத்தத்தில்...திடுக்கிட்டு விழித்தான் அஜய்.அவன் கண்கள் எல்லாம் சிவப்பேறி இருக்க...முகத்தில் அசதி தாண்டவமாடியது.அவன் உடல் அங்கு நெருப்பாய் கொதித்துக் கொண்டிருக்க..அதை அறியாத சக்தி...அவனை எரிக்கும் பார்வையுடன் நின்றாள். முதலில் ஒன்றும் புரியாமல் முழித்த அஜய்...சற்று நிதானித்து பார்த்தான். தன் முன்னே சக்தி நின்றிருக்க...நம்ப முடியவில்லை அவனால்.

“கனவோ..?” என்று எண்ணியவன்...மீண்டும் கண்ணை மூடி..பிறகு திறந்து பார்க்க..அப்போதும் அவள் தெரிந்தால் அவன் கண்ணுக்கு.

“ஹேய் பட்டிக்காடு..!” என்றான் தூக்கக் கலக்கத்தில்

ஏற்கனவே...அவனுடைய அம்மா....”பட்டிக்காடு..பட்டிக்காடு..” என்று சொன்னதில் கடுப்பாகி இருந்தவள்....அஜய்யும் அவ்வாறு சொல்லவும் பொங்கி விட்டாள்.

அவன் கட்டிலுக்கு அருகில் இருந்த...மற்றொரு ஜாடியை எடுத்து மீண்டும் பட்டென்று போட...இப்போது தெளிந்தான் அஜய்.
இது நிழல் இல்லை நிஜம் என்று.ஆனால் அறிந்த உண்மையைத்தான் அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

“சக்தி...!” என்று இனிமையாய் அதிர்ந்தான் அஜய்.அவனுள் திடீரென்று புது ரத்தம் பாய்ந்ததைப் போல் உணர்ந்தான்.சும்மாவே அவளைப் பார்த்தால்... பித்தாகி இருப்பவனுக்கு...அவள் சேலையில் இருப்பதைக் கண்டவுடன்.... பறக்கும் மனதைக் கையில் பிடிப்பது என்பது முடியாமல் போனது.

“ஹேய்...! நீ எப்படி இங்க..?” என்றான் ஆச்சர்யமாய்.

“என்னை நீ எதிர்பார்க்கலை இல்ல..?” என்றாள் கோபமாய்.

“என்ன சொல்ற..?” என்றான்.

“வெளியில் பெரிய ஹீரோ...ஆனா உள்ள...மொத்தமா ஜிரோ...!” என்றாள்.

“என்ன சொல்ற..? முதல்ல நீ எப்படி வந்த...? என்னாச்சு..?” என்றான்.

“அதான..? நான் எப்படி உள்ள வந்தேன்னு கேட்குறியா..? இல்லை நீ சொன்ன மாதிரி..வாட்ச்மேன் என்னை விரட்டி விடலைன்னு கவலைப் படுறியா..?” என்றாள்.

“வாட்..? என்ன சொல்ற நீ..?” என்றான்.

“புரியாத மாதிரி நடிக்காத..? நடிப்பு தான் உனக்கு கைவந்த கலையாச்சே..?” என்றாள் எகத்தாளமாய்.

“கொஞ்சம் நிறுத்துறியா..?” என்றான் கோபமாய்.

“நான் ஏன் நிறுத்தனும்...இப்பதான ஆரம்பிச்சுருக்கேன்..! பெரிய இவனாட்டம்... என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லியிருக்க...ஏன் சாருக்கு தூக்கிட்டு போயி தாலி கட்டினது மறந்து போயிடுச்சோ..?” என்றாள்.

அவளை இடுங்க பார்த்தவனுக்கு..ஏதோ புரிவதை போல் இருந்தது. இருந்தாலும்.. இவ்வளவு தூரம் அவள் வந்திருப்பது அவனுக்கும் ஆச்சர்யமே.இந்த அளவுக்கு அவன் கூட எதிர்பார்க்கவில்லை.துணிச்சலான பெண் என்று தெரியும்.ஆனால் இந்த அளவிற்கு அவனே எதிர் பார்த்திருக்கவில்லை.

“எனக்கு மறக்கலை...அதே சமயம்..நீ கழட்டி வீசுனதையும் மறக்கலை..!” என்றான் கோபமாய்.

“கழட்டி எறியாம...உன் பின்னாடியே வருவேன்னு நினைச்சியா..?” என்றாள்.

“அப்படி ஒரு அவசியம் எனக்கு இல்லை.நானா எதையும் தேடி போனதில்லை.அந்த சம்பவத்துக்கு பிறகு.....நான் தான் என் வேலையைப் பார்த்துட்டு வந்துட்டேனே..!” என்றான்.

“அட..அட..ரொம்ப நல்லவன் தான்..அதான் வர மாதிரி வந்து... வீடியோவைக் குடுத்து...என்னை சந்தி சிரிக்க வச்சுட்ட..எப்படியும் உன்னைத் தேடி வர வச்சிட்ட..இப்ப உனக்கு சந்தோசம் தானே..!” என்றாள் ஆற்றாமையுடன். தூக்கத்தில் மறந்திருந்த பிரச்சனைகள் அவன் கண் முன் வர..”இதை எப்படி மறந்தேன்...!” என்று நெற்றியைத் தடவியவன்..

“இங்க பாரு சக்தி...அந்த வீடியோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” என்றான்.

“”நம்பிட்டேன்..! அப்படியே இவரு அரிச்சந்திரரு...உண்மையை மட்டும் தான் பேசுவாரு..!” என்றாள் நக்கலாய்.

“நீ நம்பு..நம்பாம போ..அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை..” என்றான்.

“அதான..? நீ ஏன் கவலைப் பட போற...? உனக்கு தான் என்னை யாருன்னே தெரியாது...சார் செய்றதை எல்லாம் செஞ்சுட்டு...அந்த துப்னாவை கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருப்பிங்க..ஆனா அசிங்கப்பட்ட நான்...என் வாழ்க்கையை இழந்து நிக்கனுமா...?” என்றாள்.

“துப்னா..” என்றவன்..அவளை இடுங்க பார்க்க, “ஆமா ..! துப்னா தான்..பேரைப் பாரு..துப்னா..துப்புனான்னு...” என்று அவள் போங்க...
துப்னாவை..அவள் துப்பிப் போட்ட விதத்தில்...அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டான்.

“சரி...சொல்லு எதுக்கு வந்திருக்க..?” என்றான் அசால்ட்டாய்.

“எதுக்கு வந்திருக்கேனா...?நீ நிம்மதியா இருக்குறது இந்த ஜென்மத்துல நடக்காது..!எனக்கு நடந்த அநியாயத்துக்கு எனக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்..!” என்றாள்.

“என்ன நியாயம் செய்யணும்..?” என்றான்.

“எந்த மீடியா முன்னாடி..என்னை யாருன்னு தெரியாதுன்னு சொன்னியோ...அதே மீடியா முன்னாடி...நான் தான் உன் மனைவின்னு நீ சொல்லணும்..!” என்றாள் அதிகாரமாய்.

“சொல்லாட்டி..?” என்றான்.

“சொல்லாட்டி...?” என்று மனதிற்குள் முழித்தாள் அவள்.அவன் தன்னை விரும்பியதால்..எப்படியும் தான் சொல்வதை செய்வான் என்று முழுக்க நம்பியிருந்தாள் சக்தி.ஆனால் அவள் நம்பிக்கையின் ஆணி வேரே ஆட்டம் கண்டது.

“இல்ல..நீ சொல்லணும்..!” என்றாள்.

“சரி..சொல்றேன்..! அதுக்கு முன்னாடி..நான் கட்டுன தாலி இல்லை... அப்பறம் ரெண்டு பேரும் லவ் பன்னோம்ன்னு வேற நீ சொல்லியிருக்க..? இதுக்கு எல்லாம் என்ன ஆதாரம் இருக்கு..?” என்றான்.

அவனின் கேள்வியில் அவள் அதிர்ந்து நிக்க... “எந்த தைரியத்தில்...நீ என் வீட்டுக்கு வந்த....?” என்றான் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே.

“..” அவளிடம் பதில் இல்லை.

“அன்னைக்கு என்னை பிடிக்காதவளுக்கு..இப்போ என்னைத் தேடி வர வேண்டிய அவசியம் என்ன..? ஏன்னா...உன்னோட கவுரவம் என் கைல இருக்கு இல்லையா..? அதானால் வந்திருக்க...அப்ப கூட..என் மேல உனக்கு காதல் வரலை..காதலே இல்லாமல்..எப்படி நான் உன்னை என் மனைவின்னு சொல்றது..?” என்றான்.

அவனை ஜந்துவைப் பார்ப்பதைப் போல் பார்த்து வைத்தாள் சக்தி.இவன் இந்த அளவிற்கு பேசுவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.

“இப்படியே யோசிச்சுட்டே இரு..!” என்று வேகமாக சென்று பல்துலக்கி..முகம் கழுவி வர...அப்போதும் ஆடாமல்,அசையாமல் நின்றிருந்தாள் அவள்.அவனுக்கு கொஞ்சம் பாவமாகக் கூட தோன்றியது.

“சொல்லு என்ன பண்ணலாம்..?” என்றான் மீண்டும்.

“நான் சொன்னதை...செய்ய முடியுமா..? இல்லை முடியாதா..?” என்றாள் அழுத்தமாக.

“முடியாது..!” என்றான்.

வேகமாய் தன் பையில் இருந்து ஒரு தாலியை எடுக்க..அவள் செய்வதை அசையாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அஜய்.

“கண்டிப்பா நான் கட்ட மாட்டேன்..!” என்றான்.

“நானும் கட்ட சொல்லலையே..?” என்று திமிராக சொன்னவள்..தனக்குத் தானே கட்டிக் கொள்ள போக...

“வேண்டாம்..!” என்றான்.

“ஏன்..?”

“இவ வேற...இப்ப எதுக்கு இப்படி வந்து நிக்குறா..? அப்பவே ஒழுங்கா இருந்திருந்தா இப்ப இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா..?” என்று எண்ணியவன்...

“குடு..!” என்றான்.

அவள் மனதில் ஒரு சின்ன ஆச்சர்யம் தோன்ற..அதை மறைத்துக் கொண்டு அவனிடம் தந்தாள்.

“இப்ப உன் கழுத்துல கட்டனும்...அதானே..!” என்றான்.

“ஆமா...ஆனா இங்க இல்லை...கீழ..எங்கப்பா,பாட்டி,உங்கம்மா முன்னாடி..” என்றாள்.

“வாட்..? அவங்களும் வந்திருக்காங்களா..?” என்றவன்... இதை முன்னாடியே சொல்ல மாட்டியா..? என்றபடி...வேகமாய் செல்ல

“இவன் எதுக்கு இப்ப அங்க போறான்..?” என்று எண்ணியவள்....

“இரு...அங்க வந்து தாலியைக் கட்டனும்...!” என்றாள்.

“நான் இன்னும் குளிக்க கூட இல்லடி..!” என்றான்.

“நான் கூட தான் குளிக்கலை..” என்றாள்.

“பழிவாங்க நல்ல நேரம் பார்த்த போ...இப்ப என்ன தான் பண்ண சொல்ற..?” என்றான்.

“ஏற்கனவே சொன்னதுதான்..!” என்றாள்.

அவளின் அருகில் நெருங்கி நின்றவன்...”ஹேய் பட்டிக்காடு...உனக்கு தைரியம் ஜாஸ்திதான்..என் வீட்டுக்கே வந்து என்னையவே மிரட்டுறியா..? மனைவின்னா அர்த்தம் தெரியும்ல..” என்று பேசிக் கொண்டே அவன் நெருங்க... அவனை அவ்வளவு பக்கத்தில் பார்த்தவளுக்கு மூச்சை அடைத்தது. இத்தனை நாள் இல்லாமல்..இப்ப என்ன திடீர்ன்னு இப்படி தோணுது என்று எண்ணியவள்.... அவனைப் பார்க்க...

“ஒரே ஒரு கிஸ்....நான் நீ சொன்ன மாதிரி செய்றேன்..!” என்றான்.

“அதுக்கு வேற ஆளைப் பாரு..!” என்றாள்.

“வேற ஆளப் பார்க்கலாம்ன்னு தான் இருந்தேன்...நீ வந்து நிக்குற..?” என்றான் உள்ளே சிரித்துக் கொண்டு.

சக்தி அவனை உக்கிரமாய் முறைக்க... “சரி..சீக்கிரம் குடு..!” என்றான்.

“ஏன் ஏற்கனவே அருவாவுல வாங்குன கீறல் பத்தாதா..?” என்றாள்.

“அதுல வாங்கினது போதும்..இனி இந்த அரும்பிதழ் கீறல் போதும்..!” என்றான் சரசமாய்.

“நீ அடி வாங்க ரெடி ஆகிட்ட மாப்பிள்ள..” என்றாள்

“சொன்னாலும் சொல்லாட்டியும்...நான் மாப்பிள்ளை தாண்டி..” என்றான்.

“இப்ப வர முடியுமா..? முடியாதா..?” என்று கத்த..

“வந்து தொலை..!” என்றவன் முன்னே செல்ல.. அவன் சென்ற பிறகு..

“ஆத்தி...இவன் பக்கத்துல வந்தா,...என்ன என்னவோ பண்ணுது...கொஞ்சம் சூதானமா இருக்கணும் இவன்கிட்ட..” என்று எண்ணியபடி அவளும் சென்றாள்.

அவன் வேகமாய் வருவதைப் பார்த்த மகாலிங்கம்..எழுந்து நிற்க...பாட்டியும் அவ்வாறே செய்தார்.

“பரவாயில்லை...உட்காருங்க...பாட்டி நீங்களும் தான்..!” என்றான்.

“அஜய்..இவங்களை முதல்ல வெளிய போகச் சொல்லு..நீ சொன்னாதான் கேட்பாங்க போல..!” என்றார் சாந்தா.

“அம்மா..! உள்ள போங்க..!” என்றான்.

“அவங்களை வெளிய போக சொல்லச் சொன்னா..என்னை உள்ள போக சொல்ற..?” என்றார் கோபமாய்.

“ஒரு தடவை சொன்னா உங்களுக்கு தெரியாது...உங்களை உள்ள போங்கன்னு சொன்னேன்..” என்றான் அந்த வீடே அதிரும்படி.
அங்கு வந்த சக்திக்கு...அவன் கோபம் கண்டு..உடல் சிறிது நடுங்க...கண்ணனோ.. அமைதியாய் நின்றிருந்தான்.அவனுக்கு இதெல்லாம் பழக்கம் தானே..!

“கண்ணன்..நீங்களுமே போங்க..!” என்றான் கட்டளையாய். அவன் அவ்வாறு சொன்னதிலேயே..அவன் மீது பாட்டிக்கு ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது.

“சொல்லுங்க..!” என்றான்.

“அது வந்து தம்பி..நடந்தது நடந்து போய்டுச்சு...அதுக்காக..உங்களுக்கு வேற கல்யாணம் அது இதுன்னு பேச்சு வரவும் தான்..!” என்று மகாலிங்கம் நிறுத்த.. “மேல சொல்லுங்க அங்கிள்.!” என்றான்.

அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.அவன் இப்படி நேரடியாக கேட்பான் என்று அவரும் நினைக்கவில்லை.

“மேல என்ன சொல்ல தம்பி..அதான்..எங்க பொண்ண கொண்டவன்கிட்ட ஒப்படைக்க வந்தோம்..!” என்றார் பட்டென்று.

“பாட்டி..செம்ம பாட்டி..” என்று மனதிற்குள் நினைத்தவன்...

“அது சரி வராது பாட்டி..!” என்றான்.

“ஏன்ப்பா அப்படி சொல்ற..?” என்றார்.

“நான் தாலி கட்டுன முறை வேணா தப்பா இருக்கலாம்..ஆனா..உங்க பொண்ணை விரும்பித்தான் கட்டுனேன்..!ஆனா அந்த நிமிஷம் அவ செஞ்ச அந்த செயல்...இப்ப வரைக்கும் என் கண் முன்னாடி நிக்குது..அதை என்னால மறக்க முடியும்ன்னு தோணலை...அதே சமயம்...அவளுக்கும் என்மேல் எந்த ஈடுபாடும் கிடையாது.. அதானால் இது சரி வராது...” என்றான்.

“சக்தி தான்ப்பா இங்க வரணும்ன்னு சொல்லி வந்தா..!” என்றார்.

“என்னோட கணிப்பு சரிண்ணா..உங்க பேத்தி என்னை பழி வாங்க தான் வந்திருக்கணும்..!” என்றான் சரியாய்.

“அடப்பாவி...எல்லாமே தெரிஞ்ச மாதிரியே பேசுறானே..!” என்று அவள் நினைக்க..

“என் பொண்ணு அப்படி நினைக்க மாட்டா...என் வளர்ப்பு தப்பா போகாது..என்னைக்கும் எந்த சூழ்நிலையிலும்...அவ உங்களை விட்டு வர மாட்டா..!” என்றார் மகாலிங்கம் உறுதியாய்.

“அப்பா..! அப்படி எல்லாம் வாக்கு குடுக்காதிங்க..!” என்றாள் சக்தி.

“பார்த்திங்களா..? நான் சொன்னது தான் உண்மை..!” என்றான்.

“என்ன சக்தி இது..! அப்ப சேர்ந்து வாழணும்ன்னு நினச்சு நீ வரலையா..? உன் வாழ்க்கையை கெடுத்துக்க தான் வந்தியா..?” என்றார் லிங்கம் கோபமாக.

“அப்பா..அது வந்து..” என்று இழுக்க..

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்...இனி நான் சொல்றதை மட்டும் கேளு..!” என்பதோடு முடித்துக் கொண்டார் அவர்.

“இப்ப நான் சொல்றேன் தம்பி....என் பொண்ணுக்கு புகுந்த வீடுன்னா..அது இதுதான்..அப்படி இல்லைன்னா அவ என் பொண்ணா இருக்க மாட்டா..!” என்றார்.

அவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க...அவர்களிடமும் மவுனமே நீடித்தது.

“அன்னைக்கு நான் நடந்துகிட்டது...சுத்த பொறுக்கித் தனம்..அதுக்காக நீங்க என்னை மன்னிக்கணும்...! ஆனா ஒன்னு மட்டும் சொல்ல முடியும் அங்கிள்...நான் முதன் முதலா ஆசைப்பட்டதும் உங்க பொண்ணைத்தான்... கட்டிகிட்டதும் உங்க பொண்ணைத்தான்...” என்றான்.

“மன்னிப்பு எல்லாம் எதுக்கு தம்பி..! நீங்க ரெண்டு பெரும் நல்லா இருந்தா அதுவே எங்களுக்கு போதும்.உங்க அளவுக்கு இல்லைன்னாலும்..நானும் என் பொண்ணுக்கு செய்ய வேண்டிய சீர்,செனத்தியை குறை இல்லாம செய்வேன்..! எனக்கு எல்லாமே அவதான்..” என்றார்.

“எனக்கு கூட எல்லாமே அவ தான் அங்கிள்..” என்றான் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல். அந்த வார்த்தை யாரைத் தாக்கியதோ இல்லையோ...சக்தியை நேரடியாகத் தாக்கியது.

“ரொம்ப சந்தோசம் தம்பி..” என்று லிங்கம் நெகிழ..பாட்டிக்கு மனது நிறைந்தது.

“இப்ப தான் பாட்டிகிட்ட...என்னைக் கூட்டிட்டு போக சொன்னான்.இப்ப என்னவோ...அவனுக்கு எல்லாமே நான் தான் சொல்றான்...உண்மையை சொல்றானா..? இல்லை நடிக்கிறானா..?” என்று சக்தி யோசிக்க...

“எனக்குத் தெரியும்.! எப்படியும் நீ என்னோட வாழ வந்திருக்க மாட்ட... இடையில போக பிளான் பண்ணி தான் வந்திருப்ப..இப்போதைக்கு அதை நிறுத்திட்டேன்..இனி கஷ்ட்டமோ...நஷ்ட்டமோ..என்கூடத்தான் நீ இருந்தாகணும்..” என்றான் மனதிற்குள்.

இவர்களின் யோசனை இவ்வாறாக இருக்க...உள்ளே சாந்தாவின் யோசனையோ..பலமாக இருந்தது.

“அவ இங்கயே இருந்திட்டா...துப்னாவை எப்படி மருமகளாக்குறது...இந்த பட்டிக்காடு என் மருமகளா...இல்லை...நான் விடமாட்டேன்..!” என்று எண்ணிக் கொண்டிருந்தார் அவர்.

“கண்ணன்...” என்ற அஜய்யின் குரலில் அடித்துப் பிடித்து ஓடி வந்தான் அவன்.

“இவங்க குளிச்சுட்டு...சாப்பிட ஏற்பாடு பண்ணுங்க..!” என்றவன்...

“அதெல்லாம் அப்பவே சொல்லிட்டேன் சார்...சக்திம்மா சொன்னாங்க..!” என்றான்.
அதைக் கேட்டு...அவளை விசித்திரமாய் பார்த்து வைத்தான் அஜய். ”என் வீட்டுக்கே வந்து..கொஞ்சம் கூட பயமில்லாம...எல்லாரையும் அதிகாரம் பண்ணியிருக்கா..” என்று எண்ணியவனுக்கு மனதிற்குள் சாரல் அடித்தது.

“நானும் குளிச்சுட்டு வந்துடுறேன் பாட்டி...வந்து ஒரு முக்கியமான வேலை உங்க பேத்தி குடுத்திருக்கா..!” என்றவன் கையில் இருந்த தாலியைக் காட்ட...

“நானே சொல்லனும்ன்னு இருந்தேன் தம்பி...இதை நீங்க மறுபடியும் அவ கழுத்துல கட்டிட்டா..அதை விட எனக்கு என்ன நிம்மதி இருக்க போகுது..?” என்றார் கலங்கியவராய்.

“கண்டிப்பா பாட்டி....!” என்றபடி அவன் செல்ல...மெதுவாக திரும்பியவன்...

“ஏன் நீ குளிக்கலையா....இல்லை இப்படியே தான் இருக்க போறியா...?” என்றான்.

அவள் பதில் பேசாமல்...கீழே இருந்த அந்த அறைக்குள் நுழைந்து கொள்ள...அவனின் புருவம் யோசனையில் நெரிந்தது.
அறைக்கு திரும்பிய அஜய்க்கு..அனைத்தையும் மீறி...முகத்தில் சந்தோசம் ஆட்கொண்டது.

“தேங்க்ஸ்டி....பட்டிக்காடு..!” என்று சிரித்துக் கொள்ள...அஜய் உனக்கு முத்திப் போய்டுச்சு... என்று சிரித்துக் கொண்டான்.
 
ஹா ஹா ஹா
பேரைப் பாரு, துப்னாவாம்?
சக்தி சொல்லுற மாதிரி
அவள் சாந்தாவின் முகத்தில்
காறித் துப்பத்தான் போறாள்,
உமா டியர்
 
Last edited:
Top