Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 17

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 17:

மேலே சென்ற அஜய்..சிறிது நேரத்தில் தயாராகி வர...சக்தியும் தயாராகி வந்தாள்.மனதிற்குள் எண்ணி வந்த எதையும் செயல்படுத்த முடியவில்லை சக்தியாள்.

அந்த வீட்டின் பூஜையறையில்....கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தாள் சக்தி.அவளை அப்படிப் பார்த்த அவளின் பாட்டிக்கும்,அப்பாவிற்கும் மனம் நெகிழ...அஜய்யின் அழைப்பை தட்ட முடியாமல்..வேண்டா வெறுப்பாய் நின்றிருந்தார் சாந்தா.

மீண்டும் ஒருமுறை தாலியைக் கட்டினான் அஜய்.ஆனால் அது அவள் கழட்டி எறிந்த அதே தாலியாக இருக்க...அதைக் கண்ட சக்தி திகைத்தாள்.
அதே அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க...அவனோ அவளை சட்டையே செய்யவில்லை.

“இப்ப உங்களுக்கு திருப்திதான பாட்டி..!” என்றான்.

“ரொம்ப சந்தோசம் தம்பி..!” என்று அவர் சொல்ல...

“ஊருல இருக்குறவங்களைப் பத்தி அக்கரைப் பட்டா போதாது அஜய்.பெத்த தாய்..என்னைப் பத்தின அக்கறை இருக்கா உனக்கு..? நான் சொல்ல சொல்ல கேட்காம..இப்படி ஒரு காரியம் பண்ண எப்படி மனசு வந்தது உனக்கு..

இப்படி யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ற அளவுக்கு இப்ப என்ன வந்தது...?நீ என்ன இவங்களை மாதிரி அன்னாடங் காச்சியா...இப்படி யாருமில்லாம கல்யாணம் பண்ண..?

உன்னைப் பத்தி எவ்வளவு கனவு கண்டிருந்தேன்..? எத்தனை பிரபலம்..உன் கல்யாணத்துக்கு வந்திருக்கணும்...அதை..இந்த மொத்த சினிமாத்துறையே கொண்டாடி இருக்கும்...

ஆனா...இப்போ...நான் என்னன்னு வெளிய தலையைக் காட்டுவேன்..?” என்று அவர் ஆற்றாமையில் பொங்க....

“அப்போ..வெளிய தலையைக் காட்டாதிங்க..!” என்றான் பட்டென்று.

“கண்ணன்..”

“சார்..”

மீடியாவுக்கு சொல்லியாச்சா..?”

“எஸ் சார்....வெளிய வெயிட் பண்றாங்க..!” என்றான்.

சக்தியின் கையைப் பிடித்தபடி அவன் நடக்க..அவளோ..அவன் கையில் இருந்து தன் கையை உருவ முனைய..அவளின் முயற்சி அறிந்தவனாய்...அவனுடைய பிடி இரும்புப் பிடியாய் இறுகியது.

அதே..மீடியா..அதே மனிதர்கள்...

“சார்...இவங்க யாருனே தெரியாதுன்னு சொன்னிங்க..? இப்போ மறுபடியும் கல்யாணம் பண்ணிட்டிங்க..?” என்றனர்.

“சாரி..! நேத்து சக்தி சொன்னது தான் உண்மை..நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம்..இடையில கொஞ்சம் மனஸ்தாபம்..அதான் கோபத்துல யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டேன்..மத்தபடி எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை...!” என்றான் அமைதியாய்.

“இவ்வளவு சீக்கிரம் நீங்க கல்யாணம் பண்ணுனதுக்கு காரணம் துப்னா மேடமா..?” என்றாள் ஒரு பெண்.

அவள் பேரைக் கேட்ட சக்தியின் முகம் இறுக...அவளைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு.

“அவங்களும் ஒரு காரணம்..!” என்றான்.

“உங்கம்மா.....அவங்க கூட தான் திருமணம் நடக்கப் போகுதுன்னு சொன்னாங்களே..!”

“எங்கம்மாவுக்கு அந்த ஆசை இருக்கு..ஆனா என்னோட ஆசையை புருஞ்சுகிட்டு...அவங்க சமாதானம் ஆகிட்டாங்க..!”

“அடப்பாவி எப்படியெல்லாம் புளுகுறான்..?” என்று எண்ணிக் கொண்டிருந்தாள் சக்தி.

“நீங்க...சொசைட்டில..இவ்வளவு பெரிய ஹீரோ..ஆனா நீங்க இப்படி சாதாரணமான ஒரு பெண்ணை திருமணம் செய்ய...வேற காரணம் இருக்கா..?” என்ற கேள்வியில் கோபமடைந்தான் அஜய்.

“அதென்ன..சாதாரண..? இந்த கேள்விக்கு என்னோட பதில் அவசியமில்லாதது.இருந்தாலும் சொல்றேன்...

நாம எல்லாரும் அதே சாதாரண வாழ்க்கையில் இருந்து வந்தவங்க தான்...இந்த சினிமாத்துறையில...பல பேர்..கஷ்ட்டப்பட்டு வந்தவங்க தான்..அடிமட்டத்துல இருந்து வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க..!

அதே மாதிரி..எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை....பொதுவெளியில் விவாதிப்பதை நான் அனுமதிக்க முடியாது.
“உங்களை நல்லவர்ன்னு சொல்லிக்கிறிங்களா..?”

தான் செய்யற தப்பு வெளிய தெரியாத வரைக்கும் தான்..எந்த மனுஷனுமே நல்லவன்...எங்க துறையில் தெரியுது..நிறைய இடத்தில் தெரியலை..அதான் உண்மை.எல்லா மனுஷனுக்குமே ஒரு கருப்பு பக்கம் இருக்கு..எல்லாருக்குள்ளயும் ஒரு மிருகம் இருக்கு.
இது எல்லாம் நமக்கு நல்லா தெரியும்..தெரிஞ்சாலும்...நல்லவன் மாதிரியே வேஷம் போட்டுட்டு..எப்படா..யார் சிக்குவாங்க..அவங்களை வறுப்போம்...யார் பிரச்சனையில் மாட்டுவாங்க..அவங்களுக்கு அறிவுரை சொல்லுவோம்ன்னு திரியறது...
என்னோட பொண்டாட்டியை சாதாரண பொண்ணுன்னு சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..? என்று அவன் கத்த..

“இப்ப எதுக்கு சார் கோபப்படுறிங்க...?” என்று கேள்வி வர..

“நீங்க ஏன் கோபம் வர மாதிரி கேள்வி கேட்குறிங்க..?” என்றான்.

“உங்க கல்யாணம்..உங்க ரசிகர்களுக்கு அதிர்ச்சியா இருக்காதா..?”

“நல்ல விஷயங்களுக்கு அதிர்ச்சி தேவையில்லை..!” என்றான்.

“வாழ்த்துக்கள் சார்..!”

“தேங்க்ஸ்..!” என்றபடி அவன் உள்ளே செல்ல...அங்கு நடந்ததைப் பார்த்த சக்த்திக்கு தலையே வலித்தது.

“என்ன சக்தி..? இதுக்கே தலைவலி வந்தா எப்படி..இது தான ஆரம்பம்..இன்னும் நீ எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கு..!” என்று மனசாட்சி சொல்ல...

இவர்களின் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த துப்னாவிற்கு எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு ஆக்ரோஷம்..அந்த நிமிடம்...அவள் வீட்டின் டிவி..அவள் கையால் மரணத்தை தழுவியிருந்தது.அவளின் முழு கோபமும் சாந்தாவின் மேல் திரும்பியிருந்தது.எல்லாம் அவரால் வந்தது..என்று எண்ணியவள்...அவருக்கான நேரத்தை யோசித்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ..நாங்க கிளம்புறோம் தம்பி..!” என்று மகாலிங்கம் சொல்ல..

“என்ன அதுக்குள்ள கிளம்பிட்டிங்க..? கொஞ்ச நாள் இங்கயே இருக்கலாமே..!” என்றான்.

“அது சரிவராது தம்பி...பொண்ணக் குடுத்த இடத்துல உட்கார்ந்து சாப்பிடறது மரியாதையா இருக்காது..! நாங்க இப்போ கிளம்பினாத்தான்....சரியா இருக்கும்..” என்றார்.

“இல்லை..சக்திக்கு இது புது இடம்...! அவ மட்டும் எப்படி தனியா சமாளிப்பா..எனக்கு ஈவ்னிங் ஷூட்டிங் வேற இருக்கு...நீங்க பாட்டியை இங்க விட்டுட்டு போங்களேன்...கொஞ்ச நாள் அவங்க சக்தி கூட இருந்தா சக்திக்கும் துணையா இருக்கும்..!” என்றான்.

“ஆமா...பாட்டி..!” என்றவளின் கண்கள் குளம் கட்டி நிற்க..

சிறிது நேரம் யோசித்த பாட்டி...”ஆமா லிங்கம்...நீ கிளம்பிப் போயி...ஊர்ல செய்ய வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்..! இங்க நடக்க வேண்டியதை எல்லாம் நான் இருந்து பார்த்துக்கறேன்..!” என்றார்.

“சொல்றேன்னு தப்பா நினைக்க கூடாது தம்பி...சொந்த பந்தமெல்லாம்..கூடி நின்னு நடக்க வேண்டிய கல்யாணம்..இப்படியொரு நிலையில் நடக்க வேண்டியதா போயிட்டது..உங்களுக்கு எப்ப சவுகரியப்படுமோ...அப்போ..சக்தியைக் கூட்டிட்டு ஊருக்கு வந்திங்கன்னா...நாங்க செய்யற சாங்கியம் எல்லாம் செஞ்சு புடுவோம்...” என்றார்.

“சாரி அங்கிள்...அப்படி நினச்ச நேரத்துக்கு என்னால வர முடியாது..என்னோட நிலைமை அப்படி...ஆனா கண்டிப்பா எப்படியாவது சக்தியை கூட்டிட்டு வரேன்..!” என்று வாக்குக் குடுத்தான்.

இத்தனைப் பேச்சுக்கு மத்தியிலும் சக்தி அமைதியாய் இருந்தாள்.இத்தனை நாள் இல்லாமல்...இப்போ என் வீட்டுக்கு நான் போகக் கூட..இவனிடம் கெஞ்சிட்டு இருக்காரே.. அப்பா....என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

சக்தியின் அப்பாவும் கிளம்பிப் போக...வந்த அசதியில் பாட்டியும் உறங்கி விட்டார்.

“இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே நிக்க போற..?” என்றவனின் கேள்வியில் அவனை முறைத்தான்.

“என்ன முறைப்பு..?”

“ஒண்ணுமில்ல..!” என்றாள்.

“அப்ப ஏதோ ஒன்னு இருக்கு..!” என்றான்.

“ஆமா..! இருக்கு.இப்போ அதுக்கு என்ன..?” என்றாள்.

“ஒண்ணுமில்லை...” என்றபடி அவன் அறைக்கு செல்ல..அவளுக்கு தான் அங்கே இருக்க தயக்கமாக இருந்தது.அதுவரை தெரியாத முரண்பாடுகள்..அவளுக்கு அப்போது தெரிய ஆரம்பித்திருந்தது.

“எப்படி வீட்டுக்குள்ளயே இருக்குறது..?” என்று அவள் நொந்து கொள்ள..அவளை அந்த வீட்டின் வேலைக்காரர்கள்...சுவாரஸ்யமுடன் பார்த்துக் கொண்டிருக்க.... அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே அவன் பின்னே சென்றாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல....

ஷூட்டிங் சென்று ஐந்து நாட்களாகியும் அஜய் வீடு திரும்பவில்லை.சக்திக்கு தான் எரிச்சலாய் இருந்தது.பாட்டியும் இல்லையென்றால் அவளுக்கு நிச்சயமாக பைத்தியம் பிடித்திருக்கும்.

“பாட்டி..!”

“சொல்லு சக்தி..!”
 
“நாம..நம்ம ஊருக்கு போகலாமா..?” என்றாள் பாவமாய்.

பாட்டி அவளைத் திரும்பி முறைக்க....அவளோ தலையைக் கீழே குனிந்து கொண்டாள்.

பாட்டியும் தான் என்ன செய்வார் பாவம்..அவளும் தினமும் இதே கேள்வியைக் கேட்பதும்..அதற்கு பாட்டி முறைப்பதும் தான் வாடிக்கையான ஒன்று.

இந்த ஐந்து நாட்களும்..அவளுக்கு ஏதோ நரகத்தில் இருந்ததைப் போல இருந்தது.அந்த வசதி வாய்ப்புகள் அவளை ஈர்க்கவில்லை.தான் பெரிய ஹீரோவின் மனைவி என்ற எண்ணம் அவளுக்கு துளி கூட வரவில்லை.

இதற்கு இடையில் சாந்தாவின் குத்தல் பேச்சுக்கள் வேறு..அதையும் தாங்கிக் கொண்டு...அந்த அளவுக்கு பொறுமையாக இருந்தாள்... என்றால் அது உலக அதிசயமே.

“அவன் வந்த உடனே சொல்லிட்டு ஊருக்கு கிளம்பிடலாம் பாட்டி..” என்று அவள் சொல்ல...

“எத்தனை தடவை சொல்றது...?அவன்,இவன்னு சொல்லாத...மரியாதையா கூப்பிடு சக்தி..!” என்று பாட்டி அதட்ட..

“தராதரம் பார்த்து வந்திருந்தா...மரியாதைன்னா என்னன்னு தெரியும்..? தரங்கெட்டு வந்த கழுதை தான..? உனக்கு எங்க இதெல்லாம் தெரிய போகுது..?” என்று அங்கு வந்த சாந்தா குத்தலாய் பேச...

“தேவையில்லாம பேசாதிங்க..?” என்றாள் கோபமாய்.

“என்ன குரல் உயருது..?” என்றாள் சாந்தா.

“சக்தி..!பொறுமையா இரு,...!” என்று பாட்டி அவளை அடக்க...

“நீ பேசாம இரு பாட்டி..! நானும் பார்த்துட்டே இருக்கேன்..! ரொம்ப ஓவராத்தான் போயிட்டு இருக்காங்க..!” என்று எகிறினாள் சக்தி.

“யாரு நான் ஓவரா போறேனா..?” என்றார் சாந்தா.

“வேற யாரு..?”

“பிச்சக்கார குடும்பத்தை கூட்டிட்டு வந்து உட்கார வச்சா..இதையும் பேசுவ..ஈதுக்கு மேலயும் பேசுவ..!” என்றார் கோபமாய்.
“நிறுத்துங்க..!வீட்ல இருந்து வெட்டியா செலவு பண்ற நீங்க எல்லாம் பிச்சக்காரத்தனத்தைப் பத்தி பேசக் கூடாது.ஊர்ல..என்னோட மாச வருமானம் எவ்வளவு தெரியுமா..? அஞ்சு லட்சம்..!” என்றாள்.

”இதெல்லாம் ஒரு காசா...?” என்றார்.

“உழைச்சு சாப்பிடறவங்களுக்கு இதெல்லாம் கண்டிப்பா காசு தான்..பிறர் உழைப்பை சுரண்டுரவங்களுக்கு இது காசில்லை..” என்றாள் நக்கலாய்.

“என்னடி வாய் கூடுது..!”

“அது எங்க கூடுது..! அப்படியேதான் இருக்கு..!” என்று அவள் பதில் கூற..

“எனக்கு ஒரு காலம் வராமயா போய்டும்..! அப்ப இருக்குடி உனக்கு..!” என்றபடி..செல்ல...

“சக்தி...இனி இப்படி எல்லாம் பேசாத..! என்ன பழக்கம் இது..?” என்று பாட்டி கண்டித்தார்.

“பின்ன என்ன பாட்டி..? நானும் பொறுமையா தான இருந்தேன்..! ரொம்ப கோபம் வர மாதிரி பேசுறாங்க..! எல்லாம் அவனால் வந்தது..!” என்றாள்.

“இப்ப எதுக்கு அந்த தம்பியை இழுக்குற..?”

“அந்த தொம்பி பன்ன வேலைன்னால தான..இவங்ககிட்ட எல்லாம் பேச்சு வாங்கனும்ன்னு இருக்கு...பெரிய இவன் மாதிரி பேசினான்..அன்னைக்கு போனவன் தான்...இன்னும் ஆளையே காணோம்..! இவனும்...இவன் பொண்டாட்டி கட்டின லட்சணமும்..!”என்றபடி கடுப்புடன் திரும்ப...அங்கே ஒய்யாரமாய் கதவோரத்தில் கையைக் கட்டியபடி நின்றிருந்தான் அஜய்.
அவனைப் பார்த்தவுடன்..பேசிக்கொண்டிருந்த வாய்..அப்படியே அந்தரத்தில் நிற்க..அதே தோரணையுடன் நடந்து வந்தான் அஜய்.

“அடக்கடவுளே..! எதுல இருந்து கேட்டான்னு தெரியலையே..? ஒருவேளை அவங்க அம்மாவைத் பேசியதைக் கேட்டிருப்பானோ..?” என்று ஒரு மனம் யோசிக்க..

“கேட்டா..கேட்கட்டும்..எனக்கு என்ன பயமா..? உண்மையைத் தானே பேசுனேன்..? அப்படியாவது அவனே என்னை அனுப்பிடுவான்..!” என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

அவனைப் பார்த்த பாட்டிக்கு தான் பகீர் என்றது.பெண்ணை பெற்றவர்களுக்கு வரும் உள்ளுணர்வு அது.
“வாங்க தம்பி...!” என்றார் பாட்டி சங்கடமாய்.

அவன் அமைதியாய் வந்து அமர...சக்தி வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

“சக்தி பேசுனதை..தப்பா எடுத்துக்காதிங்க தம்பி..!” என்றபடி பாட்டி திரும்ப..அங்கு அஜயோ...அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனின் முகத்தைப் பார்த்த பாட்டிக்கு பாவமாய் போனது.அதெல்லாம் சேர்ந்து சக்தியின் மேல் கோபமாய் மாற...
“நீ..நான் வளர்த்த புள்ளையான்னே எனக்கு சந்தேகமா இருக்கு சக்தி..!”

“பாட்டி..!!!” என்று அதிர்ந்தாள்.

“எவ்வளவு பிரச்சனை இருந்தாலும்...கட்டுன புருஷன் வீட்டுக்குள்ள வந்த உடனே...மூஞ்சியும் முகத்தையும் காட்டுறது நல்லதுக்கு இல்லை..” என்றார்.

“நான் எங்க அப்படி செஞ்சேன்..” என்றாள்.

“நீ சந்தோஷமும் படலையே..!” என்றார்.

“இப்பல்லாம் நான் எது செஞ்சாலும் உங்களுக்கு தப்பாதான் தெரியுது...முன்னாடி.. எங்க சக்தி எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்ன்னு சொன்ன நீங்க..இப்ப என்கிட்ட குறையை மட்டும் தான் சொல்றிங்க..!” என்று சக்தி குறைபட...

சக்தி...தாயில்லாத பொண்ணுன்னு...உனக்கு செல்லம் குடுத்து வளர்க்காம.. பொறுப்பாதான் வளர்த்திருக்கோம்..நீயும் அப்படி தான் வளர்ந்த.இதுவரைக்கும் நீ எப்படி இருந்தன்னு யாரும் பார்க்க மாட்டாங்க..! ஆனா புகுந்த வீட்ல உன்னோட ஒவ்வொரு செயலும்...வளர்த்தவங்களுக்கு பேரு.அது நல்ல பேரா..இல்லையான்றது உன் கைல தான் இருக்கு...!இது தான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு..அதை ஏத்துக்க பழகு.நாம சராசரி பொம்பளைங்க...எதுல வீராப்பு காட்டுறதுன்னு வேணாம்...என்னைக்குமே அடிதடியை விட அன்புதான் வாழ்க்கைக்கு உதவும்..இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியலை..” என்றார்.

“அவர் சொல்லிக் கொண்டிருக்க...அஜய்யிடம் எந்த அசைவும் இல்லை..அப்படி அசதித் தூக்கம்.

அப்பொழுது கண்ணன் வர...

“இத்தனை நாள் எங்க போயிருந்தார்..?” என்றார்.

“ஒரு அஞ்சு நாள் விடாத ஷூட்டிங்...சார் கையோட முடுச்சு குடுத்துட்டு தான் போகணும்ன்னு இருந்துட்டார்...” என்றான் கண்ணன்.

அஜய்யின் அசதி புரிந்தது சக்திக்கு.இருந்தாலும் ஒரு மனம்...”ஆமா..! பெரிய இந்த வேலை..கையையும்,காலையும் ஆட்டுறது..ரெண்டு வசனம் பேசுறது..இதுல என்ன அலுப்பு..பெரிய மம்புட்டி பிடிச்சு வெட்டுன மாதிரி..” என்று கிண்டல் அடிக்க...

பாட்டியின் முன்...அதைக் காட்ட முடியாபடி சமாளித்தாள் சக்தி.

“சக்தி..போய் சமையலைப் பாரு..!” என்றார்.

“பாட்டி நானா..?” என்றாள்.

“நீ தான்..! உன் புருஷனுக்கு நீ தான் செய்யணும்...வேலைக்காரங்க இல்ல...போ..போய் சமையலை ஆரம்பி..!” என்று அதட்ட..
“இவனுக்கு சமைச்சு...என் கையால ஊட்டி வேற விடணுமா..?” என்று நொடித்தபடி சென்றாள்.

“சக்திம்மா..!” என்றான் கண்ணன்.

“சொல்லுங்க அண்ணா..!”

“சாருக்கு அசைவம்ன்னா ரொம்ப பிரியம்..!அப்படியே எனக்கும் தான்..!” என்று சொல்ல...அவள் ஒரு மாதிரி பார்க்கவும்..
“இல்லை எனக்கு வேண்டாம்..!” என்று வேகமாய் மறுத்தான் கண்ணன்.

“ஐயோ அண்ணா..! நான் என்ன செய்றதுன்னு யோசிச்சேன்..வேற ஏதும் இல்லை..கண்டிப்பா நீங்க இங்கதான் சாப்பிடனும்..!” என்றபடி செல்ல..மனது நிறைந்தது அவனுக்கு.

“நீங்க அவரை எழுப்பி..அங்க ரூம்ல போய் படுக்க சொல்றிங்களா..?” என்றாள் தயக்கமாய்.

“சார்..ஒருநாள் கூட ஹால்ல தூங்குனது இல்லை..தூங்குறப்போ எழுப்புனா.. அவருக்கு ரொம்ப கோபம் வரும்..அப்பறம் அவ்வளவு தான்...எதிர்ல இருக்குறவங்க செத்தாங்க..!” என்றான் மெதுவாய்.

“அன்னைக்கு நான் போய்..எழுப்புனப்போ..அப்படி ஒன்னும் தெரியலையே.. அமைதியாத்தான இருந்தாரு..!” என்று யோசித்துக் கொண்டே அவள் சமைக்க செல்ல...பாட்டிக்குதான் கவலையாகிப் போனது.சக்தியை எப்படி சரிப்படுத்துவது என்று.

எரிச்சலுடன் தான் சமைக்க சென்றாள்.ஆனால் நேரம் ஆக..ஆக..அவளையும் அறியாமல் சமையலில் ஒன்றினாள்.ஆர்வமாய் சமைத்துக் கொண்டிருந்த சக்தியைப் பார்த்த பாட்டிக்கு கொஞ்சம் மனம் நிறைவாக இருக்க....அவள் வைத்த மீன் குழம்பின் மனம் வீட்டையே நிறைத்தது.

ஹாலில் இருந்த கண்ணனுக்கு...வாசனையே ஆளைத் தூக்க...”யப்பா சாமி...கொள்ள நாள் கழிச்சு...அருமையான வீட்டு சாப்பாடு...இன்னைக்கு ஒரு பிடிபிடிக்கணும்..” என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருக்க...

அவள் சமயலறையில் இருப்பதைப் பார்த்த சாந்தாவிற்கு எரிச்சலாய் வந்தது.

அவள் சமைத்து முடிப்பதற்கும்...அஜய் எழுவதற்கும் சரியாய் இருந்தது.ஏதோ ஒரு வித்யாசம் அவனுக்கு தெரிய...தெளிவாய் தெரியவில்லை.அங்கே இருந்த பாட்டியைப் பார்த்தவன்..

“சாரி..பாட்டி...அப்படியே தூங்கிட்டேன்..!” என்றான்.

“பரவாயில்லை தம்பி..! குளிச்சுட்டு வந்திங்கன்னா சாப்பிடலாம்...!உங்களுக்காக சக்தியே பார்த்து பார்த்து சமைக்கிறா..!”என்று பாட்டி பிட்டைப் போட,...அவன் கண்களில் ஆச்சர்யம் வந்து குடி கொண்டது.

அவர்களின் பேச்சு காதில் விழ....

“இந்த கிழவிக்கு வேற வேலை இல்லை..என்னமோ நான் தான் சமைப்பேன்னு அடம் பிடிச்சு சமைக்கிற மாதிரி பிலடப் குடுக்குது..!” என்று எண்ணிக் கொண்டிருக்க...

“எனக்காக சமைக்கிறாளா...?நம்ப முடியலையே..?இதுல எதுவும் உள்குத்து இருக்குமோ..?” என்று யோசனை செய்தபடி....படியேறிக் கொண்டிருந்தான் அஜய்.
 
Super ud mam
 
Top