Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 18

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 18:

சக்தியோ எந்த உள்குத்தும் வைக்காமல் நன்றாக சமைத்திருந்தாள். அனைத்தையும் எடுத்து வைத்தவள்....கண்ணனையும் அழைக்க...அவளின் முகம் பார்த்த கண்ணனோ...

“வேண்டாம் சக்திம்மா..! இது மேடம்க்கு பிடிக்காது..! நீங்க எனக்கு தனியா எடுத்து குடுத்துடுங்க..!

“அதெல்லாம் பரவாயில்லை..நீங்க இங்கயே சாப்பிடுங்க..!” என்றால் பிடிவாதமாய்.

“அது வந்து..!” என்று அவன் இழுக்க..

“ஏன் அவர் ஏதும் சொல்லுவாரா..?” என்றாள்.

“ஐயோ..! அப்படியில்லம்மா..சார் ஒருநாள் கூட அப்படி சொன்னது இல்லை..” என்றான் வேகமாய்.

“அப்பறம் என்ன..? நீங்க உட்காருங்க..நான் அவரைக் கூட்டிட்டு வரேன்..!” என்றபடி மேலே சென்றாள்.
அஜய் குளித்துவிட்டு வர.... “சாப்பாடு ரெடி..!” என்றாள்.

அவன் சட்டையே செய்யாமல்...கண்ணாடி முன் நிற்க....”

காதுல விழுந்ததா இல்லையா..?” என்று யோசித்தாள் சக்தி. அவளின் யோசனையை கண்ணாடி வழியே பார்த்த அஜய்க்கு சிரிப்பு வர அடக்கிக் கொண்டான்.

“சாப்பாடு ரெடின்னு சொன்னேன்..!” என்றாள் சத்தமாய்.அப்போதும் அவன் அப்படியே நிற்க..

“இவன் வீம்புக்கு நிக்குறானோ..?” என்று எண்ணினாள்.அவனோ அவளை சட்டை செய்யாமல் விலகி செல்ல...அவனின் கையைப் பிடித்தாள் சக்தி.

தன் கையைப் பிடிப்பாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏதோ மின்சாரம் தாக்கப்பட்டதைப் போல் உணர்ந்தான்.எத்தனை ஹீரோயினை தொட்டு நடித்திருப்பான்.. அப்போதெல்லாம் தோன்றாத ஒரு உணர்வு..அவளை அப்படியே அள்ளிக் கொள்ள..கைகள் துடிக்க....தன்னை கட்டுபடுத்த முடியாமல் தவித்தான் அஜய்.

“கையை விடு..!” என்றான்.

“இங்க எல்லாமே தலைகீழா...நடக்குது..அவன் செய்ய வேண்டியதை எல்லாம் நான் செய்யறேன்...நான் செய்ய வேண்டியதை அவன்
செய்யறான்...காலக் கொடுமைடா சாமி..!” என்று எண்ணிய சக்தி...

“இதென்ன நீங்க நடிக்கிற படம்ன்னு நினைச்சிங்களா..?நீங்க அமைதியா இருக்குறதும்.. அதைப் பார்த்து நான் குற்ற உணர்ச்சியில் தவித்து.. உங்களுக்காக ஏங்குவேண்ணும் நினைச்சா...அது உங்க முட்டாள் தனம்..” என்றாள்.

“நான் அப்படி ஏங்குறேன்னு உனக்கு சொன்னனா..?” என்றவன்.. வெடுகென்று கையைப் பிரித்துக் கொண்டு செல்ல..அவளுக்கு என்னவோ போல் ஆகியது.

அவளும் அமைதியாக சென்று பரிமாற...அஜய்யின் கவனம் சாப்பிடுவதில் மட்டுமே இருந்தது.அவளுடைய கைப்பக்குவம்..அவனை நிமிர விடாமல் சாப்பிட வைக்க... அவளோ..அதை தன் மேல் கொண்ட கோபம் என்று எடுத்துக் கொண்டாள்.
கண்ணனோ...வெகுநாள் கழித்து...ஒரு நிம்மதியான..சுவையான உணவை உண்டான்.

“செம்மையா சமைச்சு இருக்காளே..! நல்லா இருக்குன்னு சொல்லுவோமா..?” என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அஜய்.

“கண்ணன்...அஜய்க்கு முன் சாப்பிட சங்கடப்பட்டு..வேகமாய் சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்ல..அஜய்யோ...நிறுத்தி நிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அருகில் நின்றிருந்தவளின் வெற்றிடை அவன் கண்ணிபட்டு இம்சை செய்ய...அதைத் தவிர்க்க முடியாமல்..ரசித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“சாப்பாடு நல்லா இருக்கா..?” என்றாள்.

“அருமையா இருக்கு..!” என்றான் மனம் முழுதும் மகிச்சியுடன்.

“இப்போ..நீங்க என் கையைப் பிடிச்சு முத்தம் குடுக்கணும்...நீங்க நடிச்ச... ஒரு படத்துல வர சீன்ல..இப்படிதானே நடந்தது....” என்று அவள் கூற.. அஜய்யின் முகம் மாறியது.கோபம் வர...பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டான்.
சரியான நேரத்திற்கு அங்கு சாந்தாவும் வந்து சேர....ஆரம்பமாகியது பிரச்சனை. யாரையும் சட்டை செய்யாமல் வந்து அமர்ந்தவர்...அங்கிருந்த பாத்திரங்களைத் திறந்து பார்க்க...அதில் மீன் குழம்பு..இன்ன பிற வகையறாக்களைப் பார்த்தவர்.....

யாரைகேட்டு நான்வெஜ் சமைச்ச...? சமையல்காரர் எங்க..?” என்று கத்த..

“இவருக்கு நான்வெஜ் தான பிடிக்கும்..அதான் சமைச்சேன்..!” என்றாள்.

“உன்னைய யார் சமைக்க சொன்னது...அதுமில்லாம...அவன் பெரிய ஹீரோ..கண்ட நேரத்துக்கு நான் வெஜ் சாப்பிட கூடாது....புட் கான்சியஸ் அதிகம் தேவை...உனக்கு இதெல்லாம் எங்க தெரிய போகுது....கண்ட்ரி புரூட்..” என்று கத்த..

“அதெல்லாம் எனக்கு தெரியாது தான்..ஆனா இவ்வளவு உழைக்கிறதே... அந்த வயித்துக்குதான்..பிடிச்சதை சாப்பிடக் கூட முடியாம..அதென்ன பொழப்பு...அப்படி ஒன்னு தேவையில்லை..” என்றாள் சக்தி.

“அதை விட்டுட்டு...சோத்துக்கு பிச்சை எடுப்பமா..? இல்ல உங்கப்பன் கோடி கோடியா கொட்டிக் கொடுத்திருக்காரா..” என்றார் சாந்தா.

“தேவையில்லாம எங்கப்பாவைப் பத்தி பேசாதிங்க..!” என்றாள் சக்தி.

“அப்படித்தான் பேசுவேன்..!” என்று சாந்தா எகிற..

“கொஞ்ச நேரம் பேசாம இருக்கிங்களா..?” என்று கத்தினான் அஜய்.

“இதோ பார் அஜய்...முதல்ல இவளை டைவர்ஸ் பண்ற வழியைப் பாரு...இவளை வச்சு உன்னால ஒரு குப்பையும் கொட்ட முடியாது..!” என்று சாந்தா சொல்லிக் கூட முடிக்கவில்லை...

அவன் கையில் இருந்த தட்டு...கீழே விழுந்து சில்லு சில்லாக உடைந்திருந்தது.கோபத்தில் விட்டு எறிந்தவன்...கையை உதறிவிட்டு எழுந்து செல்ல....அதைப் பார்த்த சக்திக்கு ‘திக்’ என்று இருந்தது.

“இதே மாதிரி உன்னையும் ஒரு நாள் உதறிட்டு போவாண்டி..!” என்று அவரும் எழுந்து செல்ல...சக்திக்கு தான் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

அமைதியாக அவன் சாப்பிடும் போதே தெரிந்தது...அவன் எவ்வளவு பசியில் இருந்தான் என்பது.அதிலும் அவன் மீன் குழம்பை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.காணாததைப் போல..சக்தி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் போகும் அவனை நிறுத்த வழி தெரியாது முழித்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்த பாட்டிக்கு சக்தியின் மேல் தான் கோபமாக வந்தது.

“உன்னோட பொறுமை எல்லாம் எங்க போச்சு சக்தி..? சாப்பிடுறப்போ.. இப்படி சண்டை போட்டா..எப்படி அந்த தம்பியால நிம்மதியா சாப்பிட முடியும்....!” என்று அவளைக் கடிந்து கொள்ள...தலையைக் குனிந்து கொண்டாள்.அவளுக்குமே தான் செய்தது தவறு என புரிந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் அவள் நிற்க... “உன் புருஷன் தான...போ..போய் சமாதானப் படுத்து..!” என்றார்.

“ம்க்கும்...நான் போய் சமாதனம் வேற பண்ணனுமா..? கடவுளே...இந்த பாட்டி தொல்லை தாங்க முடியலை..” என்று ஒரு மனம் புலம்பினாலும்...”

“இப்படி பாதி சாப்பாட்டுல எழுந்து போயிட்டாரே..!” என்று இயற்கையான மனைவியின் குணம் தலை தூக்கியது.

கொஞ்சம் தயக்கத்துடன் அவனைப் பார்க்க செல்ல..அவனோ விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான்.
மெதுவாக அவன் அருகில் சென்றவள்....”மன்னுச்சுக்கோங்க ..!” என்றாள்.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க...”உங்களைத்தான்...” என்றாள்.

அவளைத் திரும்பி பார்த்தவன்...பேசாமல் திரும்பிக் கொள்ள...அவளுக்கு முகத்தில் அடித்ததைப் போல் இருந்தது.
“இப்ப என்ன நான் உங்களைக் கெஞ்சனுமா..?” என்றாள் எரிச்சலுடன்.

அதற்கும் அவன் அமைதியாக இருக்க.... “சார்க்கு...அந்த துப்னாவை கட்டியிருந்தா..இப்போ இவ்வளவு பஞ்சாயத்து இல்லை..!” என்றாள்.

அதுவரை அமைதியாக இருந்தவன்..அவள் அந்த வார்த்தையை சொல்லவும்....அவள் அருகில் அவள் கழுத்தை நெறித்திருந்தான்.அவனின் முகம் கோபத்தில் சிவந்திருக்க... நரம்புகள் புடைத்திருக்க..அவனைப் பார்க்கவே பயங்கரமாய் இருந்தது.அவளின் முகம் சிவக்க...அதைப் பார்த்தவன் கைகளை எடுத்தான்.

“இதோ பார்...! தயவு செஞ்சு இங்க இருந்து போய்டு...நான் கோபத்துல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..!” என்றான் திரும்பி நின்றவனாய்.

“இங்க இருந்து போகவா..?இல்லை இந்த வீட்ல இருந்து போகவா..?” என்றாள்.

கோபத்துடன் திரும்பியவன்...”ஏண்டி..ஏன்..! என்னை இப்படி பேசியே கொல்லணும்ன்னு தான் அங்க இருந்து கிளம்பி வந்தியா..?
என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது..? கேனைப் பய மாதிரி...இல்லை கிறுக்கு பய மாதிரி..உன்னைப் பிடிச்சிருந்த ஒரே காரணத்துக்காக...என் உயரத்தில் இருந்து கீழ வந்து உன்னைக் கட்டினேன் பாரு..அது தான் நான் செஞ்ச பெரிய முட்டாள் தனம்..!” என்றான்.

“அதைத்தான் நானும் சொன்னேன்..! உங்களுக்கு இப்ப தான் புரியுது...அவ்வளவு உசரத்துல இருக்குறவர நானா இறங்க சொன்னேன்..! என்னோட வட்டம் ரொம்ப சின்னது.அதுக்குள்ள தான் எனக்கு வாழத் தெரியும்..” என்றாள் கலங்கிய கண்களுடன்.
“தப்புதான்..நான் பண்ணது பெரிய தப்புதான்...நீ தான் செருப்பால அடிக்கனும்ன்னு சொன்னியே..! முதல்ல அதை செய்..அப்பவாவது எனக்கு புத்தி வருதான்னு பார்க்கிறேன்..!”என்றான் எரிச்சலாய்.

அவள் அதிர்ந்து பார்க்க... “எதுக்கு இப்படி பார்க்குற...இப்படி பார்த்து பார்த்து தான்...என் உசுர வாங்குற...நீ சொன்னப்ப கூட..எனக்கு தெரியலை...ஆனா இப்போ தெரியுது...உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது...பேசாம உங்கப்பாவை வர சொல்லு...பேசி முடுச்சுக்கலாம்..” என்று அவன் சொல்லிக் கூட முடிக்க...

“உனக்கு எவ்வளவு தைரியம்..ஏழு தடவை தாலியக் கட்டுவ..இப்ப எங்கப்பாவை வர சொல்லனுமா...ஏன் அவர்கிட்ட இருக்குற மிச்ச உயிரையும் வாங்கவா..?” என்று கத்தியவள்...அவனை சராமரியாக அடிக்க...அவனோ கைகளைக் கட்டி அமைதியாகவே நின்றான்.
ஒரு கட்டத்தில் அவளுக்கு தான் கைகள் ஓய்ந்து போனது.அதற்கு மேல் அவளுக்கு கண்கள் உடைப்பெடுக்க...மடங்கி அமர்ந்து அழத் தொடங்கினாள்.

அவளுடைய கோபத்தை எதிர்கொண்டவனுக்கு அழுகையை எதிர்கொள்ள முடியவில்லை.

“சக்தி..பிளீஸ்..அழாத..” என்றான் கொஞ்சம் கோபம் குறைந்தவனாய்.
அப்போதும் அவள் அழுகையை நிறுத்தாமல் இருக்க..

“இங்க பார் சக்தி..! பொதுவாவே எனக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம்..யாரையும் நான் அதிகம் மதிக்கவும் மாட்டேன்..தாங்கவும் மாட்டேன்..அதுக்கு எனக்கு அவசியமும் இருந்ததில்லை இதுவரைக்கும்... ஆனா உன் விஷயத்தில் மட்டும் தான் எல்லாமே தலை கீழா போய்டுச்சு...” என்றான்.

அவள் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்க...கொஞ்சம் தயங்கியவன்..மெதுவாய் அவள் கண்ணீரை துடைத்து விட...அவனை ஆழமாய்ப் பார்த்தாள்.

“எதுக்கு அப்படி சொன்ன..?” என்றான்.

“நான்..நான் என்ன சொன்னேன்..!” என்றாள்.

“நான் சாப்பிடும் போது...சினிமால இப்படிதான் பண்ணுவிங்கன்னு..” என்றான்.
கொஞ்சம் புரியாமல் இருந்தவள்...”நான் பார்த்ததை தான சொன்னேன்..!” என்றவள்.

“நீ பார்த்தது..நிழல்...! பார்த்துட்டு இருக்குறது நிஜம்...! இது உனக்கு புரியவரைக்கும்...இந்த வாழ்க்கை நிம்மதியா இருக்காது...!” என்றான்.

அவள் புரியாமல் பார்க்க....

“நான் ஆத்மார்த்தமா ஏதாவது சொல்லுவேன்..! ஆனா நீ சரியா அந்த நேரத்துல..அந்த சினிமால அப்படி சொன்ன..இந்த சினிமால அப்படி சொன்னன்னு...சொல்றப்போ....சத்தியமா நான் எப்படி உணர்றேன்னு தெரியுமா...?என் நிஜ வாழ்க்கையும் நடிப்பா போயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு..உனக்கு எப்படி புரிய வைக்குறதுன்னு எனக்குத் தெரியலை..!” என்றான்.

“எனக்கு எதுக்கு புரியவைக்கணும்..!” என்றாள்.

“நீ என் மனைவி..!” என்றான்.

“எத்தனை நாளைக்கு..?” என்றாள் பட்டென்று.

அவ்வளவு தான்..அவ்வளவு நேரம் இழுத்து வைத்திருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் பறக்க...ரௌத்திரமானான் அஜய்.
“என்னடி..? நானும் கிளிப் பிள்ளைக்கு சொன்ன மாதிரி சொல்லிட்டு இருக்கேன்..! ஆனா நீ உன் இஷ்ட்டத்துக்கு தான் பேசிட்டு இருக்க...? என்னையப் பார்த்தா நாளுக்கு ஒரு பொண்டாட்டி கட்டுற மாதிரியா தெரியுது..?” என்றான் சிவந்த கண்களுடன்.
அவள்...அவன் தோற்றத்தைப் பயந்தபடி பார்க்க...

“உன்னைப் பார்த்தது முதல் தப்புனா...! ஆர்வக் கோளாறுல தாலிக் கட்டினேன் பாரு..அது தான் நான் செஞ்ச பெரிய தப்பு..அப்படி என்ன நீ பேரழகியா..?எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்...ஆனா ஏன் தான் உன் காலடியில் விழுந்து கிடக்குறேன்னு தெரியலை...
ஆனா..அடுத்த ஜென்மத்துல...நீ ஆம்பிள்ளையா தாண்டி பிறக்கணும்..அப்ப தெரியும் எங்க கஷ்ட்டம்...!” என்றான்.

அவள் முறைத்துக் கொண்டு நிற்க....

“இந்த முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..!” என்று முனங்கினான்.

ஒரு முடிவுக்கு வந்தவனாய்... “நிஜமா சொல்லு..! என்னை உனக்கு பிடிக்கவே இல்லையா..?” என்றான் ஆழ்ந்த குரலில்.

அந்த குரலில் தெரிந்த ஏதோ ஒரு பாவத்தில் அவள் அவன் முகம் பார்க்க...அவன் கண்களில் தோன்றிய உணர்விற்கு அர்த்தம் விளங்கவில்லை அவளுக்கு,.அந்த தீர்க்கமான..தீவிரமான முகத்தை.. எத்தனை தடவை படத்தில் ரசித்திருக்கிறாள்.இன்று அருகிலேயே இருக்கிறான்..! அதுவும் அவள் கணவனாக..அதையே இன்னும் அவளால் சில சமயம் நம்ப முடியவில்லை.இப்போது இப்படி பார்த்து வைத்தால் அவளும் என்ன செய்வாள்.

“எனக்கு உங்களைப் பிடிக்கும்..ஆனா அது சினிமா...” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க..

“அந்த சினிமாவை விட்டுத் தொலை...அதுல எல்லாருக்கும் தான் என்னைய பிடிக்கும்..நான் கேட்டது...ஒரு புருஷனா..மனுஷனா..என்னைப் பிடிச்சிருக்கான்னு..?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“அதெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு..!” என்று மனசாட்சி தாவிக் குதிக்க...

“தெரியலை..!” என்றாள் வீம்பாய்.

“அவள் கண்களின் செய்தியை அறிந்து கொண்டவன்...”நிஜமா..உனக்கு தெரியலை...!” என்றான்.

“ஆமா..!” என்றாள் வீம்பாய்.

“அப்ப நான் தெரிய வைக்கவா..?” என்றான்.

“எப்படி..?” என்றாள் வேகமாய்.

அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்....”இப்ப என் முகத்தைப் பாரு..! அதில் என்ன தெரியுது..?” என்றான் ரகசிய குரலில்.
ம்ம்...என்று கூர்ந்து பார்த்தவள்....”கொஞ்சம் கோபமா இருக்குற மாதிரி தெரியுது..!” என்றாள்.
“அப்பறம்..” என்றான்.

“அப்பறம் ஒன்னும் தெரியலை..!” என்றாள்.

அவ்வளவு தான் அவனுக்கு வந்ததே கோபம்...”அவன் இதழ்கள்..தேன் குடிக்கும் வண்டாய் அவள் இதழ்களில் தஞ்சம் அடைய....அந்த மகுடிக்கு மயங்கியவளின் விழிகள்...பெரிதாய் விரிய...அந்த கண்களை இமைக்காமல் பார்த்தான் அஜய்.நான்கு விழிகளும் ஒரே நேர்கோட்டில் பார்க்க...இதழ் யுத்தம் முடிவுக்கு வரும் வழி தெரியாமல்...அந்த நிலை நீடிக்க....

முதலில் மீண்டது அஜய் தான்.அப்போதும் அவள் முத்தை பற்றிய கைகளை விடாமல் இருக்க...”இப்ப சொல்லு..என்ன தெரியுது..!” என்றான்.

“ம்ம்ம்....இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தா....பசியில நான் மயக்கம் போட்டு விழுந்திடுவேன்னு தெரியுது..!” என்றாள் சிரிக்காமல்.

அவள் சொன்னதே சிறிது நேரம் கழித்து தான் புரிந்தது அவனுக்கு.புரிந்த நிமிடம்...

“ஹேய்...நீ இன்னும் சாப்பிடலையா..?” என்றான்.

அவனின் கேள்விக்கு அவனை முறைத்தவள்..”எங்க...? என்னைப் பார்த்தா சாப்பிட்ட மாதிரியா தெரியுது..?” என்றாள் கண்களை சுருக்கி.

“சாரிமா...வா..வந்து முதல்ல சாப்பிடு..!” என்று அவனும் உடன் வர...

“இல்லை நானே போய்க்குவேன்...நீங்க அசதியா தெரியறிங்க...தூங்குங்க..!” என்றாள்.

“என் மேல கோபம் போயிடுச்சா..?” என்றான்.

“இல்லை..”

“அப்பறம் எனக்காக சமைச்சிருக்க...எனக்கு கூட இருந்து பரிமாறி இருக்க...இதை நான் எப்படி எடுத்துக்கறது..?” என்றான்.

“எப்படி வேணும்ன்னாலும் எடுத்துக்கங்க..! அது உங்க விருப்பம்..! ஆனா கடைசி வரைக்கும் உங்களுக்கு வேற வழி
கிடையாது..எனக்கு மட்டும் தான் நீங்க புருஷனா இருந்தாகணும்..!” என்றாள்.

“நானும் அதைத்தான சொன்னேன்..!” என்றான் புரியமால்.

“ஆனா நான் மனைவியா இருக்க மாட்டேன்..!” என்றபடி அவள் செல்ல..

“வாடி வழிக்கு...உன்னைய வச்சே உன்னை மடக்குறேன்..!” என்று எண்ணியவனின் மனதில்..சற்று முன் அவள் இதழில் தேன் குடித்த சம்பவம் நியாபகம் வர..பித்தாகிப் போனான் அவள் மேல்.

“எப்பேர்பட்ட மனிதனையும் ஆட்டிப்படைக்கும் சக்தி..அவன் மனைவிக்கு உண்டு..!” என்று சும்மாவா சொன்னார்கள்.அது அஜய்யையும் விட்டு வைக்கவில்லை.பழிவாங்க வேண்டும் என்று நினைத்தவளிடம் வாழ்க்கையை கொடுத்து..பலியாடு ஆகிக் கொண்டிருந்தான் அஜய்.
 
Top