Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 5

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 5:

“வணக்கம்..” என்றனர் அந்த இயக்குனரும்,உதவி இயக்குனரும் மகா லிங்கத்தைப் பார்த்து.

“வணக்கம்..!” உட்காருங்க..!” என்றவர்....

“குப்பாயி..வந்திருக்கவங்களுக்கு குடிக்க கொண்டு வாமா...!” என்று சொல்லிவிட்டு அவர்கள் முகத்தைப் பார்ப்பதற்கும்...சக்தி தன்னுடைய அறையில் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

அரக்கு பச்சை நிற தாவணியில் வந்தவளை விழி எடுக்காமல் பார்த்தான் அந்த உதவி இயக்குனர்.

“வாவ்...வாட் அ பிகர்...இந்த வில்லேஜ்ல இப்படி ஒரு அழகான பொண்ணா..?” என்று அவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க...

அவனின் பார்வையைப் பார்த்த டைரக்டர்...அவனை கையால் இடித்தபடி...”யோவ்..நாம வந்த வேலையென்ன..நீ பார்க்குற வேலையென்ன..?” என்று கடிய...

“சாரி சார்..” என்றபடி தலையைக் கவிழ்ந்தான் அவன்.அவன் தான் மகேஷ்.

“என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கிங்க..?” என்றார் மகாலிங்கம்.

“நாங்க இங்க ஷூட்டிங்க்காக வந்திருக்கோம்..!” என்று டைரக்டர் சொல்ல...

“தெரியும்ப்பா...கேள்விபட்டேன்..எங்க ஊரை நல்லா அழகா காட்டுங்க..!” என்றார் அவரும் அவர் பங்குக்கு.

“கண்டிப்பாங்க...! இப்ப பிரச்சனை என்னன்னா...இங்க சாமிக்கண்ணு வயல்ல ஷூட்டிங் எடுக்குறதா இருந்தது....ஆனா இப்போ அங்க எடுக்க முடியாத சூழ்நிலை....அதான் உங்க வயல்ல எடுக்க அனுமதி கொடுத்திங்கன்னா நல்லா இருக்கும்...” என்று டைரக்டர் சொல்ல வந்ததை சொல்ல...

அவர் சொல்லியதை உள்வாங்கியவர்....”நீங்க கேட்குறது புரியுது...ஆனா இதில் நான் ஒன்னும் செய்ய முடியாது....ஏன்னா அதையெல்லாம் பாத்துக்கறது என் மகள் தான்..அதனால் அவள் தான் சொல்லணும்..” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க...

அவளோ...காலையில் தன்னை வம்பிளுத்தவன்..இவனாக இருக்குமோ என்ற ஆராய்ச்சியில் இறங்கிருந்தாள்..அதனால் அவர்கள் பேசிக் கொண்டது அவள் காதில் விழவில்லை.

“என்னமா சக்தி...நீயென்ன சொல்ற...?” என்று அவர் கேட்க.. ”ஆங்..என்னப்பா...சரிப்பா..” என்று சொல்லிவிட்டு...மீண்டும் தன யோசனையைத் தொடர்ந்தாள்.

“என் மகளே சரின்னு சொல்லிட்டா தம்பி...நீங்க தாராளமா எடுத்துக்கங்க..!” என்று சொல்ல...

வந்தவேலை சுலபமாக முடிந்த திருப்தியுடன் டைரக்டர் கிளம்ப எத்தனிக்க....

“இங்க எல்லாமே உங்களுக்கு சவுகரியமா இருக்கா தம்பி..” என்றார் அவர்.

“கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்யுது அய்யா...சிரமத்தைப் பார்த்தா ஆகுமா..? ஒரு வாரம் தானே..நல்ல படியா முடுஞ்சுடும்..” என்று அவர் சொல்ல..

“சந்தோசம் தம்பி....நீங்க பெரிய ஆளுங்க..யாரோ வேற ஆளை விட்டு அனுமதி கேட்காம..நீங்களே நேரா எங்க வீட்டுக்கு வந்து கேட்டதில் ரொம்ப சந்தோசம்..” என்று அவர் சொல்ல..

“இதில் என்னங்கய்யா இருக்கு...அடிப்படையில் நானும் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் தான்....இன்னொருத்தரை நம்பி வேலையை ஒப்படைச்சுட்டு...காத்திட்டு இருக்குறதை விட..நம்ம வேலையை நாமே பார்க்குறது சரிதானங்க..! என்றார்.

‘சரியா சொன்னிங்க தம்பி...!” என்றவர்..மகேஷைப் பார்த்து...”இந்த தம்பி வந்ததில் இருந்து ஒண்ணுமே பேசாம இருக்கார்..!” என்று கேட்க..

“அவன் கொஞ்சம் அமைதியான டைப்...சட்டுன்னு யார்கிட்டயும் பேச மாட்டான்..” என்று டைரக்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே...குப்பாயி அவர்களுக்கு காபி கொண்டு வர...

“இருக்கட்டுங்க..நாங்க இப்பதான் குடுச்சுட்டு வந்தோம்..” என்றனர்.

“பரவாயில்லை தம்பி...வீட்டுக்கு வந்தவங்களை எப்படி சும்மா அனுப்புறது..? குடிங்க...இப்ப கறந்த பாலில் போட்டது..ரொம்ப அருமையா இருக்கும்..” என்றார்.

அவர்களும் குடிக்க...அவர் சொன்னதைப் போல் அருமையாகத்தான் இருந்தது.அந்த சுத்தமான பசும்பாலின் மனம்....மன அழுத்தத்தையே போக்கும் அளவுக்கு வாசனையுடன் இருக்க...நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு காபியை குடித்த உணர்வு அவர்கள் இருவருக்கும்.

“அப்ப நாங்க கிளம்புறோம்..” என்றபடி இருவரும் எழுந்து நிற்க...

சக்தியோ..வேகமாய் மகேஷின் உயரத்தை எடை போட்டாள்.”இவனைப் பார்த்தால் அப்படித் தெரியலையே..?” என்று எண்ணியவள்...எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஆராய்ச்சிப் பார்வையைப் பார்த்து வைத்தாள்.

அவர்கள் சென்றவுடன்...

“என்னம்மா சக்தி முகம் ஒரு மாதிரி இருக்கு...? உடம்பு ஏதும் சரியில்லையா..?” என்று கேட்க..

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா....கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு..சூடா சுக்கு காபி குடுச்சா சரியாப் போய்டும்...” என்றவள்... குப்பாயிடம் ஒரு சுக்கு காபியை சொல்லிவிட்டு..தன்னுடைய அறைக்கு சென்றாள்.

ஜன்னல் அருகில் நின்றவளுக்கு....காலையில் நடந்த சம்பவம் கண் முன் வர...அவளையும் மீறி ஒரு சிலிர்ப்பு உண்டாகியது.

“என்னதான் பச்சை மிளகாய் கொண்டு தேய்த்தாலும்...அந்த வெங்காரத்தையும் மீறிய ஒரு குளிர்ச்சி..அது எதனால் வந்தது..யாரால் வந்தது.

யாரென்று தெரியாத ஒருவன் தனக்கு முத்தம் கொடுக்கும் வரை நான் ஏன் சும்மா இருந்தேன்..?இதை ஏன் அப்பாவிடம் சொல்லவில்லை. அவரிடம் எதையும் மறைக்கும் பழக்கம் எனக்கு கிடையாதே...?ஒரு பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுக்க..அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..?” என்று அவளாகவே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க....

ஒரு பெண்ணாய் அவளையும் மீறி அவள் கண்கள் கலங்கியது.நடந்து நல்லதிற்கா..இல்லை கெட்டதுக்கா என்று தெரியாமல் இது என்ன புது அவஸ்தை...என்று அவள் பாடாய் பட.

“அவனை கண்டு[பிடிப்பேன்..அதுகக்காகவாது நாளைக்கு அந்த இடத்துக்கு போகணும்...!” என்று எண்ணிக் கொண்டவள்....நடந்த நிகழ்வையே எண்ணிக் கொண்டிருக்க...

இவளின் இதழை சிறை எடுத்து சென்றவனோ....கேரவனுக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

வெளியே துப்னா டைரக்டர் உடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

“இங்க பாருங்க..! என்னால இங்கயே தங்கவெல்லாம் முடியாது..எனக்கு பெரிய ஹோட்டல்ல ரூம் வேணும்...” என்று சொல்லிக் கொண்டிருக்க...அந்த டைரக்டர் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்.

“அஜய் சார்...இந்த பொண்ணை ஏன் வேண்டாம்ன்னு சொன்னார்ன்னு இப்பதான் தெரியுது..” என்று முனுமுனுக்க...

“என்ன சொன்னிங்க..?” என்றாள் ஆங்காரமாய்.
 
“ஒண்ணுமில்லை மேடம்...இங்க இருந்து கொஞ்ச தூரம் போகணும் ..ஒரு ஒன் அவர் ஆவது ட்ராவல் பண்ணனும்...அதான்..” என்று அவர் சொல்ல..

“சோ...வாட்...ஏற்பாடு பண்ணுங்க...!” என்று அவள் அசால்ட்டாய் சொல்ல...

“என்னடா பொண்ணு இது..?” என்று நொந்து கொண்டனர்.

“சரிங்க மேடம்..” என்று சொல்வதைத் தவிர வேறு வழி இருப்பதாய் அவர்களுக்குத் தெரியவில்லை.

“சக்தி..சக்தி...” என்ற குரல் அந்த வீடே ஒலிக்க....

“இதோ வந்துட்டேன்..!” என்றபடி வந்தவள் அங்கே மருதாணியைப் பார்த்தும்...

“ஏய் மருதாணி...எப்படி வந்த ஊருக்கு போயிட்டு..” என்று ஓடி வந்து அவள் கைகளைப் பிடித்துக் கொள்ள...

“நான் சாயந்திரமே வந்துட்டேன்....சரி சரி கிளம்பிட்டியா..?” என்றாள்.

“என்ன கிளம்பிட்டியா..?” என்று அவள் புரியாமல் முழிக்க..

“அடியேய்...இன்னக்கு ஆத்துக் கோவிலுக்கு விளக்கு போட போகணும்...இன்னைக்கு பவுர்ணமி...நியாபகம் இருக்கா இல்லையா..?” என்று அவள் கடுப்புடன் கேட்க..

“ச்ச்ச இதை எப்படி மறந்தேன்...” என்று நொந்து கொண்டவள்...

”மறந்துட்டேன் மருதாணி...இதோ உடனே வந்துடுறேன்..” என்று உள்ளே ஓடியவள்....தலையை மட்டும் பின்னிக் கொண்டு...ஒரு ஸ்டிக்கர் பொட்டை மட்டும் வைத்துக் கொண்டு வர...

“சாமி..கொஞ்சம் பூ வச்சுட்டு போமா..!” என்ற குப்பாயி, அவள் தலையில் மல்லிகை சரத்தை வச்சு விட...

“ஏன் எங்களுக்கு எல்லாம் வச்சு விட மாட்டிங்களோ..?” என்று மருதாணி இடக்காய் கேட்க...

“உனக்கு இல்லாததாடி..வா வச்சு விடுறேன்..” என்று அவளுக்கும் வச்சு விட்டார்.

“அப்ப அப்ப நீ எனக்கு அக்கான்ற விஷயத்தையே மறந்துடுற..?” என்று குப்பாயியை பார்த்து சொல்ல..

“அதுக்கும் சேர்த்து தான் நீ நியாபகப் படுத்திட்டே இருக்கியே...வா..!” என்று சக்தி அவளை அழைத்துக் கொண்டு செல்ல..

“வரும் போது..பார்த்து பத்திரம்..” என்று அவர் சொல்ல...

“ஐயோ அக்கா...இந்த ஊரு அந்த அளவுக்கு கிடையாது..மிஞ்சிப் போனா மூணு தெருவுதான் இருக்கு...எப்படி சுத்துனாலும் இங்க தான் சுத்தணும்..” என்று சொல்ல...

“போடி சேட்டை..” என்று குப்பாயி சொல்ல....அவர்கள் சிட்டாய் பறந்தனர்.

“எப்படி வந்த..? ஊர்ல திருவிழா எல்லாம் நல்லா இருந்துச்சா..?” என்றாள் சக்தி.

“என்னவோ இருந்தது சக்தி...ஒரு இதே இல்ல..” என்றாள்.

“எதே இல்லை..?” என்று சக்தி மறுகேள்வி கேட்க..

“அது தான்...எங்க மாமா இல்ல.. அதான்..” என்று சொல்ல..

“அதான பார்த்தேன்..நீ திருவிழாவுக்கு தவ்விகிட்டு போகும் போதே எனக்குத் தெரியும்டி...இப்படி ஏதாவது பிளான் பண்ணிருப்பன்னு..” என்றாள் சக்தி.

“அடிப் போடி இவளே..அதெல்லாம் உனக்கெங்க தெரியப்போகுது... அப்படியே திருவிழாக்கு போனோமா...ஆடல் பாடல் பார்த்தோமா..அப்படியே அங்க வந்திருக்க முறை பசங்கள சைட் அடிச்சோமா...கிடைச்சதை வாங்கித் தின்னோமா..கலர் கலரா வளையல் வாங்குனமான்னு இருக்கணும்...அதை விட்டுட்டு உன்னை மாதிரி இப்படி வாய்க்கா வரப்புன்னு திரியக் கூடாது..” என்று சொல்ல...

“சரிங்க மேடம்..!” என்றவள்..சற்று நேரத்தில் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டாள்.

“என்னாச்சு சக்தி..?” என்று மருதாணி கேட்க..

“எனக்கும் அந்த ஆசையெல்லாம் இல்லைன்னு நினைக்கிறியா மருதாணி..?” என்று கண்கலங்க கேட்க..அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்த மருதாணி அதிர்ந்தாள்.

“ஏய்..நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...அதுக்காக..நீ ஏன் இப்ப கண் கலங்குற..?” என்றாள்.

“இல்லை..சும்மாதான்..” என்று வந்த அழுகையை உள்ளுக்குள் அடக்க...

“சக்தி..” என்ற மருதானியின் குரல் அதிர்ந்து ஒலித்தது.

“எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்யனும்ன்னு எனக்கு என்ன தலை எழுத்தா...? அப்பாவோட உடம்பைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே...வீட்ல இதையெல்லாம் எடுத்து செய்ய யார் இருக்கா...?

உனக்கே தெரியும்..நம்ம ஊர்ல பையன் இல்லாதவங்களை மதிக்கவே மாட்டாங்கன்னு..வாரிசு இல்லாதவன் அப்படி இப்படின்னு எத்தனை கேட்டிருப்போம் நாம...

ஆனா அப்படி இருந்தும் எங்கப்பாவை யாரும் எதுவும் சொல்லலைன்னா...அதுக்கு காரணம் என்ன..? இவருக்கு பையன் இல்லைன்னாலும்...பொண்ணு பையனை விட நல்லா பார்த்துக்கிடும் அப்படின்ற நம்பிக்கை...அதை வளர்க்க நான் எவ்வளவு பாடு பட்டிருப்பேன்...

அப்பா நினைச்சு இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணி அவருக்கு ஒரு வாரிசை பெத்திருக்கலாம்..ஆனா அவர் அதை செய்யலை..எனக்காகவே இருந்துட்டார்.அவருக்காக நான் என்ன செய்யனும்ன்னு யோசிச்சேன்...

ஒரு பையன் இருந்தாக் கூட இவ்வளவு செஞ்சிருக்க மாட்டான்னு எல்லாரும் ஆச்சர்ய படுற அளவுக்கு வரணும் நினைச்சேன்...அதுவும் நடந்தது...ஆனா...?” என்று நிறுத்த..

“ஆனா..?” என்று மருதாணி எடுத்துக் குடுக்க...

“ஒரு நிலைக்கு வந்து திரும்பிப் பார்த்தா..எல்லாமே வெற்றிடமா இருக்கு..எனக்கான தனிப்பட்ட ஆசைகள்,சின்ன சின்ன சந்தோஷங்கள்..எல்லாமே நான் இழந்திருக்கேன்...அதை நினைக்கும் போது..ஒரு நேரம் என்னைப் பார்த்து எனக்கே வெறுப்பா இருக்கு..” என்றாள்.

“சக்தி நான் ஏதோ விளையாட்டுக்கு..” என்று அவள் இழுக்க...

“இல்லை மருதாணி...எனக்கு எப்படா இந்த பொறுப்பை எல்லாம் இறக்கி வைப்போம்ன்னு இருக்கு....காசு இருந்தாலும் பிரச்சனை..இல்லைன்னாலும் பிரச்சனை...இப்ப என் நிலைமையும் அதான்...” என்றாள்.

“சரி விடு சக்தி..நம்ம ஊர்ல எல்லாரும் உன்னை மாதிரி பிள்ளைய வளர்க்கணும்ன்னு சொல்லிட்டு இருக்காங்க..நீ என்னடான்னா..இதுக்கு போயி...” என்று சமாதானப் படுத்த...

பேசிக் கொண்டே வந்ததில் கோவிலும் வந்து விட்டிருந்தது.அங்கு ஏற்கனவே நிறைய பேர் விளக்குப் போட்டுக் கொண்டிருக்க.... சக்தியும்,மருதாணியும் விளக்கு போட்டு முடித்து விட்டு..மனம் உருகி கடவுளை வேண்ட ஆரம்பித்தனர்.

தொடரும்.....
 
முத்தம் கொடுத்தவன் நிம்மதியா தூங்குறான். :D நாளை ஷூட்டிங் அவ வயல்ல நடக்கும் பொது என்ன மாதிரி பிரச்சினை காத்திருக்கோ:(
 
Last edited:
முத்தம் கொடுத்தவன் நிம்மதியா தூங்குறான்.  நாளை ஷூட்டிங் அவ வயல்ல நடக்கும் பொது என்ன மாதிரி பிரச்சினை காத்திருக்கோ



அதானே அவன் பாட்டுக்கு நிம்மதியாக இருக்கான்.நாளைக்கு சக்தியை கட்டிக்கும் போது சினிமாவை விட்டுடுவானா ?
 
Top