அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 







வாழ்த்துக்கள்டியர் பிரண்ட்ஸ்,
இதோ நீங்கள் ஆவலாக எதிர்பார்த்த முடிவுகள், கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2023
சிறந்த கதைகள் பல கடைசி கட்டத்திற்கு வரவில்லை, ஆனால் தேர்வான கதைகள் சிறந்தவைகள் அல்லாமல் இல்லை, இரண்டுமே நிஜங்கள்...
எந்த பாரபட்சமுமின்றி அறிந்தவர் தெரிந்தவர் பழகியவர் நமது தள எழுத்தாளர் அடுத்த தள எழுத்தாளர் என்ற எந்த பாகுபாடுமன்றி கதைகளை கொண்டு மட்டுமே தேர்வுகள், எழுதியவர் கொண்டு அல்ல.
வாசகர் வாசிப்பு, வாசகர்களை கதைகள் பிடித்த வைத்த விதம், வாசகர்களின் வாக்குகள், கதைகளின் ஆரோக்கியம், காதலின் கதைகள், ஒரு சிறு பொறி, ஒரு வித்தியாசம், இல்லை எப்பொழுதும் எழுதும் பாங்கே ஆனால் அதில் ஏதோ ஒரு கோர்வை இப்படி எண்ணிலடங்கா கலவைகள் கொண்டு, இவைகளின் பங்களிப்பை கொண்டு, இந்த முடிவுகள்...
எழுதப்பட்ட முப்பத்தியாறு கதைகளும் சிறந்தவையே, அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஏழு கதைகள் என்ற எண்ணிக்கையில் முடிவுகள் இருப்பதினால் இந்த முடிவுகள்.
ஏழு கதைகள், இதில் முதல் இரண்டு என்பது போல வரிசை இல்லை, கதைகளின் எண் கொண்டு வரிசைகள்.
005' கதிர் நிலவு பிரியதர்ஷினி 024' தினையோடு தேனாய் நந்தினி சுகுமாரன் 042' உன் சுவாசம் என் மூச்சில் நிரஞ்சனா சுப்பிரமணி 047' அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!" கோமதி அருண் 062' வடக்கு வீதி வணங்காமுடி தனுஜா செந்தில்குமார் 068' மனம் வேண்டிநிற்கும் வரம் நீயே" ஹனி 088' காதல் மழலை அவள் மணவாளன் சங்கீதா ராஜா
இரு கதைகள் மிக மிக அதிக வார்த்தைகளை கொண்டு விட்டதினால் வாசகர்களின் பெரு ஆதரவை, வாசிப்பை பெற்ற போதும் தேர்வு கட்டத்திற்குள் கொண்டு வர இயலவில்லை, ஐநூறு அல்லது ஆயிரம் வார்த்தைகள் அதிகம் என்றால் உள்ளே கொண்டு வந்து இருக்கலாம் ஆனால் இவை பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று அதிகம் கொண்டு விட்டது...
003' மனவீணையின் புதுராகமே !!' – ருத்ர பிரார்த்தனா
028' மாசறு கண்ணே வருக – மோகனா சக்தி
இதற்கு வருந்துகிறோம்.
எங்கேயும் விதிமீறல் எனக்குத் தென்படவில்லை, தெரியாமல் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு, ஆனால் வாசகர்கள் அப்படி எழுத்தாளரைக் கொண்டு கதைகளை ஊக்குவித்தது போலத் தெரியவில்லை...
சிலருக்கு வோட்டிங் முறைகளில் அதிருப்தி இருந்திருக்கலாம் எப்படி ஐந்து கதைகள் படித்தவர்கள் இருபத்தி ஐந்திற்கு வோட் செய்வோம் என..
ஆனால் அது தான் ஆட்டத்தின் விதி, கதைகளை படிக்காததற்கு நாம் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். பங்கு பெற்ற அனைவரின் கதைகளையும் அனைவரும் படிக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம்.
போட்டி குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் எதுவும் கொடுக்கவில்லை. தனிப்பட்ட பதில்கள் தவிர்க்க, யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதுவரையும் கொடுக்கவில்லை, இனியும் கொடுக்கும் எண்ணமில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.
எங்கேயும் எங்களை அறியாமல் எதோ ஒன்றில் சறுக்கி யாருக்கும் மனக் கசப்பைக் கொடுத்திருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏழு கதைகள் தேர்வானதில் புத்தகம் பதிப்பிப்பதற்கு யாருக்கும் விருப்பமில்லையெனில், இல்லை அவர்கள் எப்போதும் பதிப்பிக்கும் பதிப்பகத்திற்கு கொடுக்க விருப்பமெனில் சொல்லிவிடலாம்.
புத்தகங்கள் புக் fair ( சென்னை புத்தக திருவிழா – ஜனவரி 2024) பொழுது வெளிவரும்... புத்தகம் வந்து மூன்று மாதங்கள் கழித்து கிண்டிலில் பிரியப்பட்டால் போட்டுக் கொள்ளலாம் ஆனால் அதுவரை போடக் கூடாது. தளத்திலும் அதுவரை கதைகள் இருக்கும்.
இதில் ஒப்புதல் இல்லாதவர்கள் தெரியப்படுத்தி புத்தக பதிப்பில் இருந்து விலகிக் கொள்ளலாம்.
பங்கு பெற்ற அனைவருக்கும் எங்களின் சார்பாக சக எழுத்தாளர்களின் சார்பாக வாசகர்களின் சார்பாக நன்றிகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும்..
இரண்டு எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்கள் சமீபமாய் சம்மதம் கொடுத்ததினால் இப்போது சொல்கிறோம்....
097' காதல் விதை ப்ரியா ரதீஸ் 098' காதல் வண்ணங்கள் கீதா பூபேஷ்
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....
மீண்டும் அடுத்த போட்டி அறிவிப்புடன்.... வரும் ஞாயிறு அன்று....