Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 24 2

Advertisement

Admin

Admin
Member


அப்போது பரினிதா தன் அண்ணனின் சட்டையில் படிந்து இருந்த அழுக்கை துடைத்துக் கொண்டே சித்தார்த்திடம் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. சித்தார்த் அவள் தலையில் கொட்டி விட்டு அவளிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள்.

ஆருண்யா தான் சொன்னதுக்கு எதுவும் சொல்லாமல் யோசித்து விட்டு பின் பரினிதாவை பார்த்ததில் இருந்தே அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது என்று தெரிந்துக் கொண்ட ஆஷிக்

“என்ன ஆருண்யா என்ன யோசனை.” என்று கேட்டதற்க்கு.

நேரிடையாகவே “இது சரியா வருமா ஆஷிக்.” என்ற அவளின் கேள்வியில் எப்போதும் நினைப்பது போல் தன் சகோதரியை பெருமையாக நினைத்தான். ஆருண்யாவின் புத்திசாலி தனத்தை பார்த்து நிறைய தடவை ஆஷிக் வியந்து போய் பார்த்திருக்கிறான்.

அவள் மட்டும் தங்கள் தொழிலை பார்த்துக் கொண்டாள்.இன்னும் நாம் நம் தொழிலை விரிவு படுத்தலாம் என்று நினைத்து அவளிடம் கேட்டும் இருக்கிறான். ஆனால் என்னால் முடியாது என்று திட்டவட்டமாக மறுத்த போது அவனாலும் ஒன்றும் செய்ய முடியாமல் விட்டு விட்டான். அவளின் அந்த புத்திசாலி தனத்தை மனதில் பாராட்டியவாரே…

“எது சரி வராது என்று சொல்றே….”

“ஆஷிக் நான் எது சொல்றேன் என்று உனக்கு நல்லா தெரியும். உனக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும் என்பதால் நேரிடையாகவே பேசு.” என்ற ஆருண்யாவிடம் அவன் ஏதோ சொல்ல வரும் போது பரினிதா ஆஷிக்கிடம்

“நீங்களே அண்ணிக்கிட்டே பேசிட்டே இருந்தா...நான் எப்போ பேசுவது.” என்றவளிடம்.

“அது ஒன்றும் இல்லை பேபிம்மா… ஆரு என்னிடம் பரினிதா ஏன் உங்களை வாங்க போங்க என்று கூப்பிடுகிறாள் மாமா, அத்தான், என்று தானே கூப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்.” என்று அவன் மேலே எதோ சொல்வதற்க்குள்.

“சாரி அண்ணி இனி நான் மாமா என்றே கூப்பிடுகிறேன். சரியா….?” என்று கேட்டு விட்டு ஆருண்யாவின் முகம் பார்த்தாள். பரினிதாவுக்கு எங்கே அண்ணி கோச்சிக் கொண்டார்களோ என்ற பயம்.

ஆருண்யா பரினிதா கேட்டதற்க்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தாள்.

ஆஷிக் சொல்வதை சித்தார்த்தும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். ஆனாலும் சித்தார்த் ஆஷிக்கை தவறாக நினைக்கவில்லை. ஏன் ஆஷிக் பேபிம்மா என்ற அழைப்புக்கும் அவன் தவறாக நினைக்க வில்லை.

எப்போது ஆருண்யாவின் சகோதரன் தான் ஆஷிக் என்று தெரிய வந்ததோ அப்போதே அவனை பற்றி சித்தார்த் விசாரிக்க ஆராம்பித்து விட்டான். அதில் ஆஷிக் தொழில் முன்னேற்றத்துக்கு அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்று அவன் விசாரித்த வரை தெரிந்துக் கொண்டான்.

மற்றப்படி பெண்கள் விஷயத்தில் அவனை பற்றி தவறாக ஒருவரும் சொல்ல வில்லை. அதனாலோ என்னவோ ஆஷிக் பரினிதாவிடம் சகஜமாக பேசுவதை தவறாக எண்ணாமல் ஆருண்யாவிடம் “என்ன ஆரு அவள் தான் இனி மாமா என்று கூப்பிடுகிறேன் என்று சொல்கிறாளே...பிறகு என்ன.” என்று கேட்டு வைத்தான்.

அப்போது மட்டும் ஆருண்யா சித்தார்த்திடம் “நான் வேறு நினைவாக இருந்தேன் சித்து.பரினிதா மேல் எனக்கு எந்த ஒரு கோபமும் இல்லை.” என்று சித்தார்த்திடம் சொல்லி விட்டு பரினிதாவிடம்.

ஆஷிக்கை பார்த்துக் கொண்டே “உனக்கு என்ன விருப்பமோ அப்படியே கூப்பிடு பரி.” என்று சொன்னதர்க்கு சித்தார்த் “அய்யோ அவள் விருப்ப படி கூப்பிடு என்று சொன்னால் அவள் அங்கிள் என்று தான் கூப்பிடுவாள். ஏன் என்றால் அவள் முதன் முதலில் ஆஷிக்கை பார்த்து அப்படி தான் கூப்பிட்டாள்.” என்று சொன்னதை கேட்ட ஆஷிக்கின் முகம் மாறுவதை பார்த்த பரினிதா சட்டென்று.

“நான் அப்போது மாமாவை சரியாக பார்க்க வில்லை. அதுவும் அவ்வளவு பெரிய சொர்க்க பூமியின் சொந்தக்காரர் பெரிய வயதுடையவராக தான் இருப்பார்கள் என்று நான் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தால் சட்டென்று அப்படி கூப்பிட்டு விட்டேன்.” என்று சொல்லி விட்டு ஆஷிக்கை பார்த்தாள்.

ஆஷிக் அப்போது பரினிதாவையே ஒரு புன்னைகையோடு பார்த்துக் கொண்டு இருந்தான்.அவன் தன்னை பார்ப்பதை பார்த்த பரினிதா சிரித்து விட்டு என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்டதற்க்கு ஒன்றும் இல்லை என்ற வகையில் தலையாட்டி விட்டு மணமக்களை வாழ்த்த வந்தவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் அவன் நினைவு முழுவதும் பரினிதா பேசியதே…. அசைப் போட்டுக் கொண்டு இருந்தது.

பரினிதாவின் பேச்சை ஆஷிக் மட்டும் அல்லாமல் ஆருண்யாவுமே யோசித்துக் கொண்டு இருந்தாள். சித்தார்த் சொன்ன அங்கிள் என்ற வார்த்தையில் சட்டென்று அவள் சொன்ன விதமும் சொல்லும் போது அவள் முகத்தில் வந்து போன பாவமும் அவளுக்கு குழப்பதையே ஏற்படுத்தியது.

இந்த பத்து நாட்களில் ஆருண்யா பரினிதாவை குறைந்தது ஆறு ,ஏழு தடவையாக பார்த்து இருப்பாள். அப்படி பார்த்த வரையில் அவள் அறிந்துக் கொண்டது இவள் வளர்ந்த ஒரு குழந்தை என்று தான். அதனால் தான் ஆஷிக்கின் கவனம் பரினிதாவின் மேல் உள்ளது என்று அறிந்ததும் இது சரி பட்டு வருமா என்று ஆஷிக்கிடம் கேட்டாள்.

இப்போதும் பரினிதாவின் இந்த பேச்சால் ஆஷிக்கை விரும்புகிறாளா என்று சிறிதும் யோசிக்க வில்லை.மாறாக இவள் இப்படி பேச பேச ஆஷிக் மனதில் ஆசை தானே அதிகரிக்கும் என்று தான் நினைக்க தோன்றியது.

அதற்க்கு ஏற்றார் போல் தான் பரினிதாவின் பேச்சால் ஆஷிக்கின் முகம் பிராகசம் ஆவாதை பார்த்து அவள் மனதில் ஒரு பயபந்தே சுழன்றது. ஆஷிக்கின் விருப்பதை ஏற்று அவர்கள் பரினிதாவை திருமணம் செய்து கொடுத்தால் பரவாயில்லை.

அப்படி இல்லாத பட்சத்தில் என்ன ஆகுமோ என்று பயந்தாள். ஏன் என்றால் தன் சகோதரனை பற்றியும் அவளுக்கு நன்கு தெரியுமே ஒன்றை நினைத்தால் அவன் அடையாமல் விடமாட்டான் என்று. அவனின் அந்த குணம் தானே...இந்த குறுகிய காலத்திலேயே இந்த உயரத்திற்க்கு அவனை ஏற்றி இருக்கிறது.

அவளின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்து விட்டு ஆஷிக் “ஆரு இன்று உன் நாள். இந்நாளில் உன்னை பற்றியும் சித்தார்த்தை பற்றி மட்டுமே நீ யோசிக்க வேண்டும் புரிகிறதா… உன்னை பாதிக்காத வகையில் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்வேன்.” என்று சொல்லி விட்டு தான் அழைத்த வி.ஐ.பி வருவதை பார்த்து அவரை வரவேற்க்க சென்று விட்டான்.

இப்படியாக சித்தார்த் ஆருண்யா திருமணம் இனிதாக முடிந்திருக்க இன்னும் பத்து நாட்களில் நடைபெறும் ரிசப்ஷன் வேலையில் ஆஷிக் பிஸியாக இருந்த காரணத்துக்காக அவனால் பரினிதாவை பார்க்கவோ, பேசவோ, முடியாமல் இருந்தது.

அதுவும் திருமணம் முடிந்த இரண்டாம் நாளே சித்தார்த் ஆருண்யாவை அழைத்துக் கொண்டு ஏற்காட்டில் இருக்கும் அவன் கெஸ்ட் ஆவுஸ்சுக்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டதால், ஆருவை பார்க்கும் சாக்கில் கூட பரினிதா வீட்டுக்கு செல்ல முடியாமல் ஆஷிக் தான் தவித்து போய் விட்டான்.

நம் பரினிதா எப்போதும் போல் பாட்டிம்மாவின் திட்டோடும், பக்கத்தில் இருக்கும் குழந்தைகளின் சிரிப்போடும் அவளின் முக்கால்வாசி நேரம் சென்றது என்றால். மீதி இருந்த நேரம் மட்டும் படிக்க வேண்டுமே என்று புக்கோடு நாட்கள் சென்றது.

இரு குடும்பமும் ஆவாளோடு எதிர் பார்த்த ரிசப்ஷன் நாளும் இனிதே விடிந்தது. அன்று சித்தார்த் ஆருண்யாவோடு பரினிதா தான் காலையிலேயே எழுந்து ரெடியாகி விட்டு ஹாலுக்கு வந்தாள். அதனை பார்த்த பாட்டிம்மா “என்னடி அதிசயமா நீயே எழுந்துட்டே…” என்று கேட்டதற்க்கு.

பரினிதா மனதுக்குள் எழுந்தாலும் குத்தம், எழவில்லை என்றாலும் குத்தம். இந்த பாட்டிம்மாவிடம் நாம் காலம் தள்ளுவதற்க்கு பதில் நம் அண்ணாவிடம் சொல்லி சீக்கிரம் திருமணம் செய்துக் கொண்டு போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே பாட்டியிடம் “நான் ஆஸ்ரமத்துக்கு குழந்தைகளுக்கு ஸ்வீட் கொடுக்க செல்ல வேண்டும் பாட்டிம்மா…” என்றதற்க்கு பாட்டிம்மா எந்த எதிர்ப்பும் காட்டாமல் .”சரி சாப்பிட்டு கூட நம் டிரைவரையும் அழைத்துக் கொண்டு போ …” என்று சொல்லி விட்டு வேலை நிறைய இருப்பதால் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

எப்போதும் தன் பாட்டி பேச்சை கேட்காத பரினிதா அன்று என்னவோ பாட்டி சொல் படியே சாப்பிட்டு விட்டு தன் வீட்டு கார் டிரைவரோடு ஆஸ்ரமத்துக்கு சென்றாள்.

ஆஷக்கும் அன்று தன் வீட்டில் எழுந்தவுடன் செய்யும் உடல்பயிற்ச்சியையும் மறந்தவனாக குளித்து விட்டு தன் அன்னையிடம் சென்று “வாம்மா ஆரு வீட்டுக்கு போய் நாம் எடுத்த டிரஸை கொடுத்து விட்டு வந்து விடலாம்.” என்று கேட்பவனை அதிசயமாக பார்த்தார்.

ஏன் என்றால் அவன் போகலாம் என்று கேட்ட போது மணி ஆறு. இந்த டைமில் அவன் இடியே விழுந்தாலும் தன் உடற்பயிர்ச்சி கூடத்தில் இருக்கும் நேரம். எதை மறந்தாலும் அதை மறக்காதவன். மேலும் தான் வற்புறுத்தி அழைத்தாலும் எங்கும் வராதவன் இப்போது அவனே வந்து கூப்பிடவும் கலையரசிக்கு ஒன்றும் புரியவில்லை.

புரிந்துக் கொள்ள அவள் ஒன்றும் ஆருண்யா இல்லையே...சரி இப்போதாவது நம் பிள்ளைக்கு உறவோடு அருமை தெரிந்ததே என்று நினைத்துக் கொண்டே “இப்போது தான் மணி ஆறு ஆஷிக். இன்னும் ஒரு மணி நேரம் கழித்து போகலாம். என்று சொல்லி விட்டு ஆருண்யாவின் வீட்டுக்கு எடுத்து போகும் பொருட்களை எடுக்க ஆராம்பித்தார்.

அந்த ஒரு மணி நேரமும் ஆஷிக்குக்கு ஒரு யுகமாக கழிந்தது. அதற்க்கு காரணம் ஆரு வீட்டுக்கு கொடுக்கும் உடையைய் ஆஷிக் தான் வாங்கினான். கலையரசி வாங்க போக வேண்டும் என்றத்ற்க்கு நானே வாங்குகிறேன் என்று வலிய அந்த வேலையைய் ஏற்றுக் கொண்டான்.

சித்தார்த்துக்கு டார்க் ப்ளுவில் கோட் சூட்டும், ஆருக்கு லைட் ப்ளுவில் டிசைனர் சாரியும், பாட்டிம்மாவுக்கு வெண்பட்டில் மெல்லிய சரிகையிட்ட பட்டு சாரியையும் உடனே எடுத்தவன். தன் மனம் கவந்தவளுக்கு மட்டும் உடனே எடுக்க முடியவில்லை. காரணம் அவன் பரினிதாவுக்கு ரெடிமேட் சாரி எடுக்க நினைத்தான்.

ரிசப்ஷனில் அவனுக்கு நிறைய வேலை காத்திருக்கும். அப்போது இவள் புடவை நழுவுகிறதா...சரிகிறதா….என்று பார்க்கும் நேரம் அவனுக்கு இல்லாததால் முதலிலேயே அவளுக்கு ரெடிமேட் சாரி எடுக்க முடிவு செய்து விட்டான்.

ஆனால் அவன் எதிர் பார்த்த நிறத்திலும் டிசைனிலும் அவனுக்கு கிடைக்காத்தால் அவளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு இந்த நாளிள் எனக்கு வேண்டும் என்று அதற்க்கு அளவுக்கு அதிகமான பணத்தையும் கொடுத்து தானே கலரும் டிசைனும் வரைந்து கொடுத்தான்.

தாமரை கலர் உடல் முழுவதும் பரவி இருக்க, அதில் அடர் பச்சை நிறத்தில் பூக்கள் நிரைந்து இருக்க அவன் ஆர்டர் கொடுத்த சாரி நேற்று தான் வாங்கிக் கொண்டு வந்தான். அதனை அவள் கையில் கொடுத்து அவளின் விருப்பம் அறிய துடித்துக் கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக ஒரு மணி நேரம் சென்ற பின் ஆஷிக் ,கலையரசி சித்தார்த் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் சென்ற போது பாட்டிம்மா சித்தார்த்திடம் ஏதோ கோபமாக பேசிக் கொண்டு இருந்தார். இவர்களை பார்த்ததும் தன் பேச்சை நிறுத்தி விட்டு “வாங்க சம்மந்தி” என்று அழைத்து விட்டு வேலைகாரார்களிடம் ஜூஸ் கொண்டு வர சொன்னவர்.

திரும்பவும் சித்தார்த்திடன் “போன் போடு “ என்று ஒரு வித பதட்டத்துடன் சொன்னார்.

ஆஷிக் “என்ன பாட்டிம்மா ஏதாவது பிரச்சினையா...என் கிட்ட சொல்லனும் என்று நினைத்தால் சொல்லுங்க.” என்றதற்க்கு.

“இதில் என்ன இருக்கு ஆஷிக்.பரினிதா ஆஸ்ரமத்துக்கு போறேன்னு சொல்லிட்டு போய் இரண்டு மணி நேரமாகிடுச்சி இன்னும் காணும். போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கிறா…” என்றதும்.

“தனியாவா போய் இருக்கா…”

“இல்லை கார் டிரைவரோடு தான் அனுப்பினேன்.அவனும் போனை எடுக்கவில்லை.” என்ற வரலட்சுமியின் பேச்சில் அஷிக்குக்கு ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்று அவன் எண்ணம் ஓடும் போதே….

சித்தார்த் வீட்டு கார் டிரைவர் கிழிந்த உடையுடன் அங்கு வந்து அனைவரையும் பார்த்து “நம்ம பாப்பாவை யாரோ கடத்தி விட்டார்கள் என்ற அணு குண்டை அவர்கள் அனைவரின் தலையிலும் போட்டான்.
 
:love: :love: :love:

அச்சச்சோ பேபியைக் கடத்திட்டங்களா???
ஆஷிக் ஓடு ஓடு.......
வினோத் or மினிஸ்டர்??? யாரு பண்ணினது........

இந்த புள்ளையை கல்யாணம் பண்ண நீ தலை கீழா நிக்கணும் போல ஆஷிக்.......
 
Last edited:
வினோத் ஒரு டம்மி பீஸு
தாத்தா சொல்லை மீறி நடக்க
மாட்டான்
மந்திரியின் சிண்டு ஆஷிக்
கையில் இருக்கு
மீறி வாலாட்டினா ஆஷிக் ஒட்ட
நறுக்கிடுவான்ங்கிற பயம்
மந்திரிக்கு நிறையவே இருக்கு
 
Last edited:
Top